நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
பகல் வேளைகளில் உண்ணாமல் பருகாமல் உடலாசை கொள்ளாமல் தவ வாழ்க்கை வாழ்ந்தோரே! உங்களுக்கு எமது நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்! வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்! வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்! நம் வாழ்வில் மீண்டும் மீண்டும் ரமலானையும் லைலத்துல் கத்ர் இரவையும் கிடைக்கச் செய்து அதில் அதிகமான அமல்களை செய்யும் வாய்ப்பை அல்லாஹ் அருள்வானாக! ரமலான் காலங்களில் அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்கிற சுய கட்டுப்பாட்டோடு வாழ்ந்தது போல் எதிர்காலத்தில் நம்மை வாழ செய்வானாக! ரமழான் வசந்தம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதியையும், வளத்தையும் வழங்கட்டுமாக! அன்புடன் மவ்லவீ B. M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ & மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் பள்ளிவாசல் நிர்வாகம்