Posts

Showing posts from October, 2024

முப்பெரும் விழா நேரடி ஒளிபரப்பு

Image
பெரம்பலூர் மாவட்டம் பெரிய வடகரை கிராமத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் live காட்சிகள். https://www.facebook.com/share/v/2th8MGJSoodcij2U/ இந்த ஐடியில் சென்று பார்க்கலாம்.

நபி தாவூத் (அலை) அவர்கள் எப்படி மரணித்தார்கள்?

Image
நபி தாவூத் (அலை) அவர்கள்  எப்படி மரணித்தார்கள்? ========================== தாவூத் நபியின் மரணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதை இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளதாவது;   தாவூத் (அலை) அவர்கள் மிக அதிகமான ரோஷம் உடையவராக இருந்தார்கள். எனவே அவர் வீட்டிலிருந்து வெளியேறினால் கதவுகள் பூட்டப்பட்டுவிடும். அவர் திரும்பி வருகிற வரை யாரும் அவர் குடும்பத்தாரிடம் செல்ல முடியாது. ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்தார் . வீடு பூட்டப்பட்டது. அப்போது அவருடைய மனைவி வீட்டுக்கு வந்து எட்டிப் பார்த்தார்; அப்போது ஒருவர் வீட்டின் நடுவே நின்று கொண்டிருந்தார். வீடு பூட்டப்பட்டிருக்கும்போது இந்த மனிதர் எப்படி நுழைந்தார் என்று வீட்டினுள் இருந்தவர்களிடம் தாவூத் (அலை) அவர்களின் மனைவி  கேட்டார்.  அல்லாஹ் மீது ஆணையாக! இன்று நாம் தாவூத் (அலை) அவர்களால் நிச்சயமாகக் கேவலமடையப்  போகிறோம் (அதாவது அவர் நம்மைத் திட்டப் போகிறார்) என்றும் சொன்னார். தாவூத் (அலை) அவர்கள் வந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்கள். அப்போது திடீரென ஒரு மனிதர் வீ...

தொழுகைக்குப் பிறகு துஆ கேட்கலாமா?

Image
தொழுகைக்குப் பிறகு  துஆ கேட்கலாமா? ===================== உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களின் கணவர் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் நோயுற்று நினைவில்லாமல் இருந்தார்கள். அவர்கள் இறந்துவிட்டார்கள் என்றே அனைவரும் எண்ணினார்கள்.  இந்நிலையில் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள் எழுந்துச் சென்று தொழுது தன் கணவருக்காக துஆ செய்தார்கள்.  அதே நேரம் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுக்கு மயக்கம் தெளிந்து நினைவுத் திரும்பியது. "என்ன! நான் மரணமடைந்தது போல் இருந்தேனா?" என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார்கள். "ஆம்!" என்று அவர்கள் கூறினார்கள்.  அப்பொழுது அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் "இரண்டு மலக்குகள் என்னிடம் வந்து 'புறப்படுவீராக! மாபெரும் நீதியாளனான அல்லாஹ்வின் சமுகத்தில் உம்மைப் பற்றித் தீர்ப்புச் செய்யப்பட வேண்டியதிருக்கிறது' எனக் கூறி என்னை அழைத்துச் சென்றார்கள்.  அப்பொழுது மூன்றாவதொரு மலக்கானவர் வந்து அவ்விருவரையும் நோக்கி, 'நீங்கள் சென்று விடுங்கள், தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே நற்பாக்கியசாலி என்று எழுதப்பட்டவர்களில் இவரும் ஒருவர்; இவருடைய மக்கள் இவர் மூலம் இன்...

புத்தகம் குறித்து அவர்களின் கருத்து :

Image
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். ஹச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வரலாற்று வழியில் பெரிய வடகரை நூலுக்கு  அணிந்துரை வழங்கி இருந்தார்கள்.  அவர்களை சந்தித்து புத்தகத்தை வழங்கிய போது.... புத்தகம் குறித்து  அவர்களின் கருத்து : ==================== பசுமை நிறைந்த நினைவுகளை அசைபோடுவது யாருக்கும் பிடிக்கும். இந்நூலை வாசிக்கும் போது எனக்கு எனது சொந்த ஊர் நினைவுகளும் மனதில் ஊசலாடி மறைகின்றன. நான் அறிந்தே இராத புதியதொரு கிராமத்தையும் சான்றோர் பெருமக்களையும் இந்நூல் எனக்கு அறிமுகம் செய்திருக்கிறது. பொதுவாகவே வரலாற்றைப் பதிவு செய்கிற போது மூன்று படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன.  ஒன்று:  கல் வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, வெளிநாட்டார் குறிப்பு போன்றவற்றிலிருந்து பதிவு செய்யப்படுவது.  இரண்டு: இலக்கியங்களின் வழியாகப் பதிவு செய்யப்படுவது.  மூன்று : வாய்மொழித் தரவுகள் மூலம் பதிவு செய்வது.  இந்நூலில் மேற்கண்ட மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி வரலாற்றைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். முதல் அத்தியாயத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில், பின்னணியில் யார் யாரெல்லா...

பெரிய வடகரையின் முன்னோர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ?:

Image
பெரிய வடகரையின்  முன்னோர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ?: ================================== ஒருநாள் திருச்சி நத்ஹர் வலி (ரஹ்) அவர்கள், பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்களை அருகில் அழைத்து, அவர்களுக்குக் கிலாஃபத் - என்னை போல் நீங்களும் செயல்படுங்கள் என ஆசி நல்கி, தங்களின் பல் துலக்கும் குன்னி மரக்குச்சியையும் அவர்களிடம் கொடுத்து ''இதனை எடுத்துக் கொண்டு பயணம் புறப்படுங்கள் .  இரவு தங்குமிடத்தில் இதனை மண்ணில் ஊன்றி வையுங்கள். வைகறையில் இது எந்த இடத்தில் முளைத்திருக்கிறதோ அதனையே உம்முடைய தங்குமிடமாக ஆக்கி, இஸ்லாத்தைப் பரப்பி வாருங்கள்" என்று கூறினார்கள்.  அவ்வாறே அவர்கள் புறப்பட , அவர்களுடன் இருநூறு ஃபக்கீர்களும் -  சீடர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஊர், ஊராக அவர்கள் தங்கிக் கொண்டே சென்றார்கள். தங்கும் இடமெல்லாம் அக்குச்சியை ஊன்றி வைத்தார்கள். ஒரு இடத்திலும்  அது தளிர்க் கவில்லை.  ஓரிரவு அவர்கள் ஒரூரை அடைந்து, அங்கு இரவுத் தங்கினார்கள், வழக்கம் போல் தம் குருநாதர் தந்த குன்னி மரப் பல்குச்சியை அவ்விடத்தில் நட்டி...

நேற்றைய தினத்தந்தியில் முப்பெரும் விழா குறித்த செய்தி :

Image
நேற்றைய தினத்தந்தியில்  முப்பெரும் விழா குறித்த செய்தி : ================================ பெரிய வடகரை பள்ளிவாசலில் முப்பெரும் விழா வேப்பந்தட்டை, அக்.14- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரிய வடகரை பள்ளிவாசலில் கந்தூரி விழா, மீலாது விழா மற்றும் நூல் வெளியீடு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.  ஜமாத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவர் முஹம்மது முனீர் தலைமை தாங்கினார். பன்னூல் ஆசிரியர் ஷாஹூல் ஹமீது முன்னிலை வகித்தார். ஜமாத்துல் உலமா சபையின் மாநில துணைத்தலைவர் முகமது மீரான் மீலாது விழா சிறப்புரையாற்றினார்.  வரலாற்று ஒளியில் பெரிய வட கரை எனும் நூலை முகமது முனீர் வெளியிட முக்கிய பிரமு கர்கள் பெற்றுக்கொண்டனர்.  சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஹிர் பாட்சாநூல் திறனாய்வு உரையாற்றினார்.  நிறைவாக நூல் ஆசிரியர் கலீல் ரஹ்மான் ஏற்புரையாற்றினார்.  மீலாது விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அப்துல் ஜமீல் வரவேற்றார். முடிவில் மன்சூர் அஹமது நன்றி கூறினார்.

முப்பெரும் விழாவும் நன்றியும்....

https://www.facebook.com/share/p/RnFcrYmrktFuPVZV/ முப்பெரும் விழாவும் நன்றியும்.... ================================ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ  அல்ஹம்துலில்லாஹ்!  நேற்றைய தினம் பெரிய வடகரையில் முப்பெரும் விழா மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.  அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு விருந்தினரும் வருகைத் தந்திருந்தார்கள்.  பெரிய வடகரை பள்ளிவாசலில் லுஹர் தொழுகைக்கான ஜமாஅத் இரண்டு முறை நடைபெற்றது. இரண்டு முறையும்  பள்ளிவாசல் நிரம்ப ஆண்கள் தொழுதார்கள்.  பெரிய வடகரையில் பள்ளிவாசலை மிகப்பெரியதாக கட்டப்பட்டு விட்டதோ என நான்  நினைத்ததுண்டு!  ஆனால் நேற்றுதான் பள்ளிவாசல் மிகச்சிறியது எனத் தெரிந்து கொண்டேன். வெளி ஊர்களில் இருந்து வருகைத் தந்திருந்த M.Y. ஷாகுல் ஹமீது மன்பயீ ஹள்ரத், இ. தாஹிர் பாஷா, ஜெயபால் இரத்தினம் போன்ற அறிஞர் பெருமக்கள் அனைவரும் வலியுறுத்திச் சொன்ன ஒரு கருத்து.  "பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய வடகரை கிராமம் முஸ்லிம் கிராமங்களுக்கான தாய் கிராமம்.  பெரம்பலூரைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களில் இர...