Posts

Showing posts from August, 2025

குர்ஆன் விஷயத்தில் நாம் என்ன சொல்வது?

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 8 தொடர் : 57 குர்ஆன் விஷயத்தில்  நாம் என்ன சொல்வது? ==============================   ஹிஜ்ரி 250 களுக்கு முன்பு பக்தாதில் வாழ்ந்த முஹம்மது பின் மன்சூர் அத்தவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நபி (ஸல் ) அவர்களை நான் கனவில் கண்டேன்; அவர்களோடு இரண்டு மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவருடைய முகத்தையும் நான் அறிவேன். நான் : அல்லாஹ்வின் தூதரே! குர்ஆன் விஷயத்தில் நான் என்ன சொல்வது? "குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம்; படைக்கப்படவில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும்தான் இதற்கு சாட்சி" என்று கூறினேன்; அப்பொழுது அவ்விருவரும் விழிப்பு நிலையில் இருப்பது போன்று நான் உணர்ந்தேன். நூல்: இஃதிகாத் அஹ்லுஸ் ஸுன்னா ஹிஜ்ரி 250 காலகட்டத்தில் குர்ஆன் படைக்கப்பட்டதா? இறைவேதமா எனும் விவாதம் விண்ணை முட்டிக்கொண்டு இருந்தது.  அந்த நேரத்தில் நபிகள் நாயகம் அவர்களின் இந்த தீர்ப்பு, முஹம்மது பின் ...

திருமண உரை

Image
திருமணம் =°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=° 14 - عن أبي هند قال: حمل تميم الداري معه من الشام إلى المدينة قناديل وزيتا ومقطا، فلما انتهى إلى المدينة وافق ذلك يوم الجمعة فأمر غلاما له يقال له أبو البراد فقام فشد المقط وهو الحبل وعلق القناديل وصب فيها الماء والزيت وجعل فيها الفتل، فلما غربت الشمس أسرجها، فخرج رسول الله صلى الله عليه وآله وسلم إلى المسجد فإذا هو يزهر، فقال: من فعل هذا؟ قالوا تميم يا رسول الله قال: نورت الإسلام نور الله عليك في الدنيا والآخرة، أما إنه لو كانت لي ابنة لزوجتكها. فقال نوفل بن الحرث بن عبد المطلب: لي ابنة يا رسول الله تسمى أم المغيرة بنت نوفل، فافعل فيها ما أردت، فأنكحه إياها على المكان الراوي: أبو هند الداري المحدث: ابن حجر العسقلاني - المصدر: الإصابة - الصفحة أو الرقم: 4/ 18 தமீமுத்தாரி (ரலி) அவர்கள் சிரியாவில் இருந்து மதீனாவிற்கு வந்தபோது, விளக்குகளையும் ஜைத்தூன் எண்ணெயையும் கொண்டு வந்திருந்தார்கள். அன்று  வெள்ளிக்கிழமை இரவாக இருந்தது.  தமீமுத்தாரி (ரலி) அவர்கள் அபுல்பரா என்ற தம் அடிமையிடம் விளக்குகளை கொடுத்து, "ஜைத்தூன் எண்ணையை அந்த விளக்குக...

ஓதுவோர் உம்மைக் கண்டு பெருமைப் படுகின்றனர்

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 8 தொடர் : 59 ஓதுவோர் உம்மைக் கண்டு பெருமைப் படுகின்றனர்: ============================== அஹ்மத் பின் ஸஹல் அத்தமீமீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; அலீ பின் ஹம்ஸா அல் கஸாயீ (ரஹ்) அவர்கள் சொல்ல நான் கேள்வி பட்டுள்ளேன். மக்களிடையே குர்ஆன் ஷரீஃபை நான் ஓதி முடித்த அந்த இரவில் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன்.  நபி ஸல் : நீங்கள் தான் கஸாயியா?  நான் : ஆமாம்! அல்லாஹ்வின் தூதரே.... நபி ஸல் : அலீ பின் ஹம்ஸாவும் நீர்தானோ?.... நான் : ஆமாம்! அல்லாஹ்வின் தூதரே....! நபி ஸல் : எனது உம்மத்தினரிடம் நேற்று குர்ஆன் ஓதியது நீங்கள் தானே.....? நான் : ஆமாம்! அல்லாஹ்வின்  தூதரே....! நபி ஸல் : என்னிடமும் கொஞ்சம் ஓதி காட்டுங்கள்.... நான் :  وَالصَّافَّاتِ صَفًّا (1) فَالزَّاجِرَاتِ زَجْرًا (2) فَالتَّالِيَاتِ ذِكْرًا (3) إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ (4) رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِق...

அரசியல் ஆளுமை:

Image
1500 வது மீலாது விழா ஜும்ஆ உரை ==================================== தாஹா நபியின்  தலைமைத்துவ பண்புகள் ================================== முழுமையான கட்டுரையைக் காண... அரசியல் ஆளுமை:  ==================== நபிகள் நாயகம் அவர்களுடைய அணியில் பெரும்பாலும் ஏழைகளே இருந்தார்கள்; பொருளாதாரத்தில் வலிமை குன்றியவர்களாகவே இருந்தார்கள்; ஆனாலும் வழியென திணிக்கப்பட்ட அனைத்து போர்களிலும் வெற்றி வாகைச் சூடினார்கள். ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்கா வெற்றிக்குப் பின்னர் மக்காவிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் ஜிஃரானா எனும் இடத்தில் வாழ்ந்து வந்த 'பனீ ஹவாஜீன்' கோத்திரத்தார் நபிகளாரை எதிர்த்து போரிட்டுத் தோல்வியடைந்தார்கள். இந்தப் போரில் 24,000 ஒட்டகங்கள், 40,000 ஆடுகள், 4000 அவுன்ஸ் வெள்ளி, 6000 கைதிகள் ஆகியவை முஸ்லிம்களுக்குக் கிடைத்தன. இஸ்லாமியச் சட்டப்படி போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதி அரசுக்கு சென்று விடும். மற்றவை போரில் ஈடுபட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் (போர் வீரர்களுக்கு ஊதியம் கொடுப்பது என்ற நடைமுறை அன்று கிடையாது) எனவே, முஸ்லிம் வீரர்கள் தமக்குக் கிடைக்க இருக்கும் ப...

தாஹா நபியின் தலைமைத்துவப் பண்புகள்

Image
தாஹா நபியின் தலைமைத்துவப் பண்புகள் ========================== திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், மவ்லவீ, B. M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ இமாம் : மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால்  சாந்தோம் சென்னை. நல்ல சிந்தனைகளும் நல்ல ஆளுமை பண்புகளும் ஒரு சேர ஒருவரிடம் அமைந்துவிட்டால் அவர் சிறந்த தலைவராக, தன் நேரத்தை திட்டமிடுகிறவராக, பேச்சிலும் மொழியிலும் கவனம் செலுத்துகிறவராக, பணியாற்றும் உடல் வலிமை பெற்றவராக, போரிடும் ஆற்றல் பெற்றவராக, தளபதியாக தலைமை ஏற்கும் துணிவு உடையவராக, நாட்டை ஆளுகிற திறனுடையவராக, வணிகராக, நல்ல குடும்பத் தலைவராக ஆன்மீகத் தலைவராக ஆகிவிட முடியும். அனைத்து ஆற்றல்களும், குண நலன்களும், மனிதநேய மாண்புகளும், ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் இன்றும் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளி வீசி வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுத படிக்கத் தெரியாத ஒரு உம்மி நபி என்று, வரலாற்றில் அழைக்கப்பட்டவர்; அவர் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.  அதுவும் எப்படிப்பட்ட ஒரு சூழல் என்று பார்த்தால் உலகில் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியங்கள் - கிறிஸ்தவ சாம்ராஜ்ஜியம், எகிப்திய...

எனக்கும் நபிகளாருக்கும் இடையே ஏன் நேரம் ஒதுக்கவில்லை

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 8 தொடர் : 59 எனக்கும் நபிகளாருக்கும்  இடையே ஏன் நேரம் ஒதுக்கவில்லை  ====================================================================== அபூ உபைதுல்லாஹ் அல் காசிம் பின் ஸலாம் (ரஹ்) அவர்கள் தமது ஹஜ்ஜை முடித்துக் கொண்டு இராக்கிற்கு திரும்ப வாடகைக்கு வாகனத்தைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பொருத்தமான வாடகைக்கு மதினாவில் இருந்து வாகனம் அமையாததால் நாட்கள் சென்று கொண்டிருந்தன; பின்னர் ஒரு நாள் ஒரு வாகனத்தை பேசி முடிவு செய்து விட்டார்கள். இந்நிலையில் ஊருக்கு புறப்பட வேண்டிய நாளின்  இரவில் கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். அந்த வீட்டின் வாசலில் ஒரு கூட்டத்தினர் மக்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தி, சிறுக சிறுக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். மக்கள் உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லுகிறார்கள்; முஸாஃபஹா செய்கிறார்கள். இந்நிலையில் நா...

நீங்கள் உயர்தரமான கல்வியாளர்

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 8 தொடர் : 58 நீங்கள் உயர்தரமான கல்வியாளர்  ================================ இப்னு முஜாஹித் அல் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; அரபு மொழி இலக்கண இலக்கிய ஆய்வாளர் ஸஃலப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;  குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹு சார்ந்த ஆய்வாளர்கள் அனைவரும்  زيد ، عمرو ஜைது,  அம்ரு எனும் சொல்லை பயன்படுத்தி வருகிறார்கள்; இதை நான்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினேன்; அதனால் எனது ஈடுபாடுகள் எதுவும் மறுமைக்கு பயனளிக்காமல் போய்விட்டதோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் ஒரு நாள் இப்னு முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள் என்னிடத்தில், "அபுல் அப்பாஸ் ஸஃலப் (ரஹ்) அவர்களுக்கு எனது ஸலாத்தினை சொல்லுங்கள்; மேலும் அவருக்கு " நீங்கள் உயர்தரமான, காலம் கடந்த கல்வியாளர்" என்றும் சொல்லுங்கள்" எனக் கூறினார்கள். அபூ அப்துல்லாஹ் அர் ரவ்தபாரீ (ரஹ்) அவர்க...

பைபிள் எப்படி இறை வேதமாக இருக்க முடியும்?

Image
பைபிள் எப்படி  இறை வேதமாக இருக்க முடியும்?  ================================ ஆதியாகமம் 12, அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். 16.  நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; பைபிளில் உள்ள மேற்கண்ட இரண்டு வசனங்களும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அல்லாஹ்விற்காக குர்பானி கொடுக்க முனைந்த போது நடந்த நிகழ்வை  கூறுகிறது. கனவில் கண்டபடி மகனை அல்லாஹ்விற்காக அறுக்க முனைந்ததால் "நீர் அல்லாஹ்வை அஞ்சுவோரில் ஒருவராக நான் கண்டு கொண்டேன்" என அல்லாஹ் கூறுவது போல் இந்த வசனம் அமைந்துள்ளது.  இந்த வசனத்தின் கருத்தில் பிழை ஏதும் இல்லை. இந்த இரண்டு வசனத்திலும் "ஏகசுதன்" எனும் ஒரு சொல் இருக்கின்றது.  "ஏகசுதன்" என...

நூல் வெளியீட்டு விழா அறிவமுதம் பருக! அனைவரும் வருக!!

Image
நூல் வெளியீட்டு விழா  அறிவமுதம் பருக! அனைவரும் வருக!!  ==================================== பைபிள் கூறும்  தேற்றவாளன்-  (முஹம்மது) யார்? ================================ யோவான் 14:16 . நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17, உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். இந்த இரண்டு வசனத்திலும் உள்ள 'தேற்றவாளன்' எனும் சொல் முஹம்மது நபி  (ஸல்) அவர்களைக் குறிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது இயேசு தம் மக்களுக்கு முஹம்மது நபி அவர்கள் குறித்து இந்த இரண்டு வசனங்களில் "தேற்றவாளன்" எனச் சொல்லி முன்னறிவிப்பு செய்திருக்கிறார். "தேற்றவாளன்" எனும் சொல்லை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். தேற்றம் / வாளன் : தேற்றம் என்றால் நம்பிக்கை, உறுதி, ஆறுதல், மன உற்சாகம் எனப் பொருள். வாளன் என்றால் உடையவன், கொண்டவன், ...

பவுலின் ஆவியின் பிரமாணம் நூல் வெளியீட்டு விழா

Image
பவுலின் ஆவியின் பிரமாணம்  நூல் வெளியீட்டு விழா  ============÷÷÷÷÷÷÷÷============= இந்நூலாசிரியர் இந்த நூலில் கூறுகிறார்;  இறைவனுக்கு பல பெயர்கள் இருக்கின்றன; அந்த பெயர்களை விளக்கிச் சொல்கிறேன் என்கிற போர்வையில் தன் சுயநலத்திற்காக சொந்த கருத்துகளால் இறைவன் குறித்து தவறாகப் போதித்ததால், மனிதர்களிடையே பிரிவினைகளும், மதங்களும் அதிகமாக உருவாகி இருக்கின்றது. (இஸ்லாத்தில் இறைவன் குறித்து யாரும் சுயமாகச் சொன்னால், அரபு நாடுகளில் தலை வெட்டப்படுவார். அதனால்தான் இஸ்லாத்திற்குள் இன்று வரை யாரும் குழப்பத்தை ஏற்படுத்த இயலவில்லை.)  கிறிஸ்தவ மதத்தில்  1. கத்தோலிக்கம் (Roman Catholic ) 2.  ஆர்த்தடாக்ஸ் (Eastern Orthodox / Oriental Orthodox) 3.  பிரொட்டஸ்டண்ட் (Protestant)  4, பெந்தகோஸ்தே என  முக்கியமான பிரிவுகள் இருக்கின்றன.  இவை ஒவ்வொன்றுக்குள்ளும் என மொத்தத்தில் 40000/ நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவுகள் (Denominations) இருக்கின்றன. பைபிள் என்பது பல நூல்களின் தொகுப்பு. அதில் பலவகையான பைபிள்கள் இருக்கின்றன. சிரியா...

நபிகள் நாயகத்தை கனவில் கண்ட திப்பு சுல்தான் (ரஹ்)

Image
நபிகள் நாயகத்தை  கனவில் கண்ட திப்பு சுல்தான் (ரஹ்) ================================= திப்பு சுல்தான் அவர்கள் கி.பி. 1750 களில் பிறந்து 1799 களில் 49 வது வயதில் காலமானார். இவர் தனது 19-வது வயதில் இருந்து தந்தையோடு யுத்தத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.  தந்தை ஹைதர் அலி அவர்கள் இறந்த பிறகு 1782 டிசம்பர் 29 அன்று மைசூர் நிலப்பரப்பின் அரசராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1785 ஆம் ஆண்டுகளில் இருந்து தான் கண்ட கனவுகளை அப்படியே தன்  டைரி -  நாட்குறிப்பில் எழுதத் தொடங்கினார். சில கனவுகளுக்கு தான் கண்ட விளக்கங்களையும் எழுதி வைத்தார்; அவர் இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு வரை எழுதியிருந்தார்.  அவர் இறந்த பிறகு ஸ்ரீரங்கப்பட்டினத்தின் கோட்டைக்குள் இருந்த பொருட்களை கொள்ளையடிப்பதற்காக கர்னல் கிர்க்பாட்ரிக் என்பவர் திப்பு சுல்தானின் படுக்கை அறைக்குள் நுழைந்தார்.  அங்கிருந்த 2000-க்கும் மேற்பட்ட நூல்கள், ஆய்வுகள் அனைத்தையும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். அப்பொழுது மறைவான ஒரு இடத்தில் இருந்த டைரியை - பதிவேட்டைக் கண்டுபிட...

இந்தியாவின் அணைகளில் ஒன்றான கிருஷ்ண ராஜ சாகர் அணையை கட்டியது திப்புசுல்தான் ?

Image
இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான கிருஷ்ண ராஜ சாகர் அணையை கட்டியது திப்புசுல்தான் ?  ==================================== 1794 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் அவர்கள் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை கட்டினார். இந்த அணையை கட்டுவதன் மூலம் மாண்டியா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல மாவட்டங்களுக்கும் பயனாக இருக்கும் என திட்டமிட்டு அதனை கட்டுவதற்கு ஏற்பாடு செய்து அடித்தளமிட்டார்; ஆனால் போர்கள், ஆங்கிலேயரின் அத்துமீறல்கள் குறுக்கிட்டு கொண்டே இருந்ததால் அந்த வேலையை செய்ய இயலவில்லை. இந்த இடத்தில் இப்படி ஒரு அணையை கட்ட வேண்டும் என தீர்மானித்து பணிகளைத் தொடங்கி கல்வெட்டுகள் எல்லாம் வைத்து ஆரம்பித்திருந்தார்;  ஆனால் காலப்போக்கில் பணிகள் நின்று விட்டது. அந்த அணைக்கு 'மொஹி'  - Mohyi Dam புத்துயிர் அளிக்கும்' என பாரசீக மொழியில் பெயர் சூட்டியிருந்தார்.  கிருஷ்ணராஜ உடையார் அவர்கள் பிறந்தது 1884 ஆம் ஆண்டு. 1875 ஆம் ஆண்டு மாண்டியாவில் ஏற்பட்ட பஞ்சத்தை விரட்ட கிருஷ்ணராஜ உடையார் திட்டமிட்டார் என வரலாற்றில் கூறப்பட்டுள்...

சுதந்திரப் போர் நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன?

Image
இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள்  =================================== தொடர் :..........8 படையெடுப்புகள் ஏன்?  சுதந்திரப் போர்  நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன?  ==================================== ஒரு நாட்டின் மீது  படை எடுப்பது பல்வேறு காரணங்களால் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. பொதுவாக அரசியல், பொருளாதாரம், மதம், அல்லது பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காகதான்  படையெடுப்புகள் நடந்துள்ளன.  அரசியல் காரணங்களுக்காக : ஒரு நாட்டின் மன்னரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவது, தன் நாட்டின் எல்லையை பெரிதாக்கி வலிமையான பேரரசை அமைப்பதற்காக படை எடுத்தல், அதிகாரப் போட்டி / அதாவது அடுத்தடுத்த நாடுகளுடன் தன் செல்வாக்கை நிரூபணம் செய்வதற்காக போர் தொடுத்தல்  பொருளாதார காரணங்களை முன்னிட்டு துறைமுகங்கள், கடல் மார்க்கங்கள், வணிகப்பாதைகள் ஆகியவற்றை கைப்பற்றுவதற்காக போரிடுதல், ஒரு நாட்டில் உள்ள வளங்களான தங்கம், வெள்ளி, மசாலா, எண்ணெய் போன்ற வளங்களை அடைய போர் செய்தல், மதங்களைப் பரப்ப அல்லது மத அடக்குமுறைகளை ஏற்படுத்த அல்லது நாகரீகம் என்கிற ப...

இந்தியாவை எத்தனை நாட்டு ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள்?

Image
இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள்  ==================================== தொடர் ........7 இந்தியாவை எத்தனை நாட்டு ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள்?  ==================================== இந்தியாவை “ஆங்கிலேயர்கள்” (British) மட்டுமல்லாமல், பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்களும், வர்த்தகர்களும் வந்து ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல் வழியாகவே வந்தனர். 1.  போர்த்துக்கீசியர் (Portuguese) 1498 மே 20 அன்று முதன் முதலில் வாஸ்கோட காமா கேரளாவின் கோழிக்கோட்டிற்கு (Calicut) வந்தார். மசாலா சாமான்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு  போன்றவற்றை ஐரோப்பியர்கள் அரபியர்களிடமிருந்து மட்டுமே வாங்க முடிந்தது.  அதனால் அதன் விலை அதிகமாக இருந்தது; இந்த மசாலா சாமான்கள் விளையும் இடத்திலேயே கொள்முதல் செய்யலாம் என்று எண்ணி வாஸ்கோடா காமா இந்தியாவிற்கு வந்தார்; ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான முதல் கடல் வழி மார்க்கத்தை கண்டறிந்தவர் இவர்தான். முதன் முதலில் கி.பி. 1510-ல் கோவா (Goa) வை கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினர்.  பின...

ஆங்கிலேயர் மீது முதல் தாக்குதல் 23 ஜூன் 1757 பிளாசிசிப் போர்

Image
இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள்  ==================================== தொடர் : .....6 ஆங்கிலேயர் மீது முதல் தாக்குதல்  23 ஜூன் 1757 பிளாசிசிப் போர்  ==================================== பங்களாதேஷ், பீகார், ஒரிசா, கல்கத்தா ஆகிய இன்றைய நகரங்களை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பரப்புக்கு பெயர் பெங்கால் என்று அன்று சொல்லுவார்கள்;  இந்த நிலப்பரப்பின் ஆட்சியாளராக நவாப் சிராஜுத் தவ்லா அவர்கள் இருந்தார்கள். இந்த நிலப்பரப்பு மிகவும் வளமான, வருவாய்கள் நிறைந்த ஒரு பகுதி;  மக்கள் செழிப்பாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த நிலப்பரப்பும் கூட. மிர்ஸா முஹம்மது ஹைதர் ஜாங், ஆமினா பேகம் தம்பதியருக்கு மகனாக மிர்ஸா முஹம்மது சிராஜ் தவ்லா அவர்கள் 1733 ஆம் ஆண்டு பிறந்தார்கள்.  பிறந்தது முதலே தனது தாயின் தந்தையான /  தாத்தா /  நவாப் அலி வர்தி கான் அவர்களிடம் வளர்ந்தார்கள். 1756 ஆம் ஆண்டு தாத்தா அலி வர்தி கான் அவர்கள் இறந்ததும் பேரன் சிராஜுத் தவ்லா அவர்கள் அந்த நிலப்பரப்பின் அரசராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்...

இந்தியாவின் முதல் பிரதமர் ஒரு முஸ்லிம் & மவ்லவீ

Image
இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள் : ================================== தொடர்  :.......4 இந்தியாவின் முதல் பிரதமர்  ஒரு முஸ்லிம்  & மவ்லவீ ======================== 1915 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியாவின் புரட்சியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆயுதம் தாங்கிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு அரசை நிறுவினார்கள்; அதன் பெயர் Provisional Government of India (நாடுகடந்த இந்திய அரசு - government-in-exile)  அதன் முதல் பிரதமராக மௌலானா பரக்கத்துல்லாஹ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கட்சித் தலைவராக ராஜா மகேந்திர பிரதாப் சிங் என்பவரும், உள்துறை அமைச்சராக உபைதுல்லாஹ் சிந்தி என்பவரும், வெளியுறவுத்துறை அமைச்சராக சைபுதீன் கிச்சலுவ் என்பவரும் தேர்வு செய்யப்பட்டு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.  பிரிட்டிஷ் அரசு இந்த அரசையும் அமைப்பையும்  “அபாயகரமான சதி” என்று கருதி உளவுத்துறையை அனுப்பி அடக்க முயற்சி செய்தது. ஆனாலும் அதன் அமைப்பாளர்கள் வீரியமாக செயல்பட்டர்கள். மௌலானா பரக்கத்துல்ல...

இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்கள் ஏன் அதிகம் ஈடுபட்டார்கள்?

Image
இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகம்  ==================================== தொடர் :......3 இந்திய சுதந்திரப் போரில்  முஸ்லிம்கள் ஏன் அதிகம் ஈடுபட்டார்கள்? ==================================== 'வீக்லி ஆஃப் இந்தியா' எனும் பத்திரிக்கையில் குஷ்வந்த் சிங் என்பவர், "முஸ்லிம்கள் தமது சதவிகிதத்தை விட அதிகமாக இந்திய சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்" என்று கூறுகிறார். முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்திற்காக அதிகம் தம்மை அர்ப்பணித்துக் கொண்டது ஏன் தெரியுமா? இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.  ஒன்று :  وَمَا لَكُمْ لَا تُقَٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلْوِلْدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ ٱلْقَرْيَةِ ٱلظَّالِمِ أَهْلُهَا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் (எதிரிகளிடம் சிக்கி இருக்கிறார்கள்;)  அவர்களோ "எங்களைப் படைத்தாள்பவனே! அநியாயக்காரர்கள் நிறைந்த இந்த ஊரிலிருந...