பைபிள் எப்படி இறை வேதமாக இருக்க முடியும்?
பைபிள் எப்படி
இறை வேதமாக இருக்க முடியும்?
ஆதியாகமம் 12, அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
16. நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்;
பைபிளில் உள்ள மேற்கண்ட இரண்டு வசனங்களும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அல்லாஹ்விற்காக குர்பானி கொடுக்க முனைந்த போது நடந்த நிகழ்வை கூறுகிறது.
கனவில் கண்டபடி மகனை அல்லாஹ்விற்காக அறுக்க முனைந்ததால் "நீர் அல்லாஹ்வை அஞ்சுவோரில் ஒருவராக நான் கண்டு கொண்டேன்" என அல்லாஹ் கூறுவது போல் இந்த வசனம் அமைந்துள்ளது.
இந்த வசனத்தின் கருத்தில் பிழை ஏதும் இல்லை. இந்த இரண்டு வசனத்திலும் "ஏகசுதன்" எனும் ஒரு சொல் இருக்கின்றது.
"ஏகசுதன்" என்றால் ஒரே மகன் என்று பொருள்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு ஹாஜரா அம்மையார் மூலம் இஸ்மாயில் (அலை) என்ற ஒரு மகனும், ஸாரா அம்மையார் மூலம் (அலை) என்ற ஒரு மகனும் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்று இதே பைபிள் வேறு இடங்களில் சொல்லுகிறது.
அப்படி இருக்க இவ்விரு வசனங்களில் "ஏகசுதன்" என்று சொல்லி இருப்பது தவறு தானே!
இவ்வாறு பைபிளில் அனேக முரண்பாடுகள் இருக்கின்றது அது இறைவேதம் என்று சொல்வதற்கு நிலையான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
தம் மதத்தின் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகள் எதையும் கிறிஸ்தவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
அதே நேரம் எது குறித்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறதோ அதை ஒதுக்கி வைத்து விட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத மற்றவற்றை ஏற்று பின்பற்றி நடக்கும் மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டார்கள்.
அல்லது அந்த மன நிலைக்கு வந்து விடும்படி போதகர்கள் போதித்து வருகிறார்கள் என்பதே உண்மை!
நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Comments
Post a Comment