O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

O.M. ஹள்ரத் 
அவர்களின் திருமண உரை
==========================


இன்று தென்காசி குற்றாலத்தில் O.M. ஹள்ரத் அவர்களின் பேரனும், மௌலவி தமீமுல் அன்சாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்களின் மகனும்மான முஹம்மது அனஸ் அவர்களுக்கு  திருமணம் நடைபெற்றது. 

அந்தத் திருமணத்தில் எனது ஆன்மீக ஆசான் O.M. ஹள்ரத் கிப்லா அவர்கள் ஆற்றிய உரை :

மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் ஒரு திருமணம் நடைபெற்றது; திருமணத்தின் முடிவில் பாதாம், அக்ரூட் ,காய்ந்த பேரித்தம் பழங்கள், கற்கண்டு ஆகியன விசிறி எறியப்பட்டது. 

அந்தத் திருமணத்தை நடத்தி வைத்த நபிகள் நாயகம் அவர்கள், அருகில் அமர்ந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்களை தள்ளி விட்டுவிட்டு கீழே கிடந்த காய்ந்த பேரித்தம் பழத்தையும், பாதாம் கொட்டையையும் பொறுக்கி எடுத்து சாப்பிட்டார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள், "நாயகமே! இந்த கொட்டைக்காக என்னை தள்ளி விடுவதா! நீங்கள் சொல்லியிருந்தால் நானே எடுத்துக் கொடுத்திருப்பேனே?" என்று கேட்டார்கள்.

அதற்கு நபிகள் நாயகம் அவர்கள், "அபூபக்கரே! இன்று திருமணம் நடைபெறுகிறது; இது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நாள்; எனவே ஒருவர் ஒருவரை தள்ளி பிடித்து விளையாண்டு மகிழ வேண்டும்" எனக் கூறினார்கள்.

இந்த வரலாறு இப்னு குதாமா, அல்முக்னீ போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது.

«هذا يومُ عُرسٍ ولَعِب»
திருமண நாளில் மகிழ்ச்சியாக இருப்பதும் விளையான்டு மகிழ்வதும் ஆகுமானதே!

«لا بأسَ بالنِّثارِ في العُرسِ»
திருமணங்களின் போது உலர்ந்த பழங்களை தூவுவது  தவறில்லை.

«نثروا الجوزَ واللوزَ والسُّكَّرَ»

திருமணங்களில் அக்ரூட், பாதாம், கற்கண்டு போன்றவற்றைத் தூவினர் போன்ற செய்திகள் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளது.

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَنْبَأَنَا الْأَجْلَحُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «أَنْكَحَتْ عَائِشَةُ ذَاتَ قَرَابَةٍ لَهَا مِنَ الْأَنْصَارِ، فَجَاءَ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ: أَهْدَيْتُمُ الْفَتَاةَ؟ قَالُوا: نَعَمْ. قَالَ: أَرْسَلْتُمْ مَعَهَا مَنْ يُغَنِّي؟ قَالَتْ: لَا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ الْأَنْصَارَ قَوْمٌ فِيهِمْ غَزَلٌ، فَلَوْ بَعَثْتُمْ مَعَهَا مَنْ يَقُولُ: أَتَيْنَاكُمْ أَتَيْنَاكُمْ، فَحَيَّانَا وَحَيَّاكُمْ»

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

“ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்குச் சொந்தகாரப்  பெண்ணாக இருந்த ஒருவரை அன்ஸாரிகளில் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்து,
"மணப்பெண்ணை அனுப்பிவிட்டீர்களா?" என்று கேட்டார்கள்.

அதற்கு அங்கிருந்தவர்கள் “ஆம் அனுப்பி விட்டோம்" என்று கூறினார்கள். 

நபி (ஸல்) அவர்கள்,
"மணப்பெண்ணுடன் பாடல் பாடுபவரை அனுப்பினீர்களா?" என்று கேட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள், "அனுப்பவில்லை" என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள்,
"அன்ஸார்கள் பாடல் பாடப்படுவதை விரும்பும் மக்கள் ஆவர்; மணமகளுடன்
'நாங்கள் உங்களிடம் வந்தோம், நாங்கள் உங்களிடம் வந்தோம்; அல்லாஹ் எங்களையும்  உங்களையும் வாழ வைப்பானாக'
என்று பாடுபவரை அனுப்பி இருக்கலாமே" என்று ஒரு கவிதை / பாடல் வரியையும் பாடி காட்டினார்கள். 

நூல்: இப்னுமாஜா

இவ்வாறு ஹள்ரத் அவர்கள் பேசி, திருமண நிகழ்வை கலகலப்பாக வைத்திருந்தார்கள்.

ஹள்ரத் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் இன்னும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கும் வலிமையையும் தருவானாக! ஆமீன்!

Comments

Popular posts from this blog

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்