நாவின் வலிமை மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் ==================================== நேற்றைய தொடர்ச்சி....6 நாவின் வலிமை : ================= குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பொதுமக்களுக்கு அறிவுரை சொல்லி வந்தார்கள். அவர்கள் பேசத் தொடங்கி விட்டால் பல்லாயிரக்கணக்கானோரும் மௌனித்து விடுவார்கள். "அவர்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு பயானிலும் நூற்றுக்கணக்கானோர் உணர்விலந்து விழுந்து விடுவார்கள்; பல்லாயிரக்கணக்கானோர் அழுது துடிதுடிப்பார்கள்; பல நூற்றுக்கணக்கானோர் அழுவதோடு மட்டுமின்றி தம் ஆடைகளை கிழித்துக்கொள்வார்கள். அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் நான்கைந்து பேர் உயிர் இழந்து விடுவார்கள்" என அவர்களின் மூத்த மகனார் ஸைய்யதுனா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இருண்டு போயிருந்த இதயங்களுக்கு ஒளி ஏற்றியதால் அவை புத்துயிர் பெற்றது. பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் முஸ்லிமாக வாழ வழி வகுத்தது. பல்லாயிரக்கணக்கான மாற்று மதத்தினர் இஸ்லாத்தில் இணைந்தனர். அதனால் முஹ்யிதீன் - மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் என்று பொதுமக்கள் பட்டப்பெயர் சூட்...