நாகூர் ஹனிபா பாட்டு பாடத் தெரியுமா?
நாகூர் ஹனிபா பாட்டு பாடத் தெரியுமா? ************************** - பாகவி, ஃபாஜில் ஜமாலி ஆலிம் ஒருவர், தம்மிடம் நுழைவுத்தேர்வுக்கு வந்தவரிடம், "உனக்கு நாகூர் ஹனிபா பாடல் தெரியுமா?" எனக் கேட்டதும், அவர் பாடலை பாடினார். "நீ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று விட்டாய்" என்று கூறினார். அரபு மொழியில் ஒரு பழமொழி உண்டு. سل المجرب ولا تسأل الحكيم அறிவாளியிடம் கேட்காதே! அனுபவசாலியிடம் கேள்! "ஆயிரம் அறிவாளிகளின் சொல்லை விட , ஒரு அனுபவசாலியின் சொல் மேலானது" என கிரேக்க பழமொழி ஒன்று உள்ளது. ஒரு மேம்பாலத்தின் அடியில் போகமுடியாமல் கண்டைனர் லாரி சிக்கிக்கொண்டது. டை கட்டிய பல அறிவாளிகள் முயற்சித்தும் லாரியை முன்னும் கொண்டு செல்ல முடியவில்லை. பின்னாலும் கொண்டு வர இயலவில்லை. பாலத்தின் அடியில் வழமையாக அமர்ந்திருக்கும் ஒரு ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி, அவர்களில் மிகப்பெரிய அதிகாரியிடம், "இதற்கு நான் வழி சொல்கிறேன்" எனக் கூறினார். "பல பட்டங்கள் பெற்ற நாங்களே செய்வதறியாது திணறுகிறோம், நீ என்ன சொல்லப் போகிறாய்?" என கேவலமாக ஒரு பார்வை பார்த்து கொண்டே மேற...