சூரா தபாரக் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சி

சூரா தபாரக் 
தொடர்புடைய ஒரு நிகழ்ச்சி
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 13

தொடர்: 81

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
|•
|•
|•
|•
|•

ஒரு ஷைகு அவர்கள் காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள்.

அனுமதிக்கப்பட்டதும் அவர் உள்ளே வந்தார்; அவர் வயதான தோற்றத்தில், அழகான உருவ அமைப்பில், கம்பீரமாக காணப்பட்ட முதியவராக இருந்தார்.

"ஷைகு அவர்களே! தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். 

"நான் வெளிநாட்டில் இருந்து வருகிறேன்! இந்த ஊர் காரர் அல்ல!" என்று பதில் அளித்தார். 

காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்கள், "உங்களுக்கு ஏதேனும் தேவைகள் இருக்கின்றதா?" என்று கேட்டார். 

அதற்கு அவர், "நான் நபி (ஸல்) அவர்களின் தூதராக மன்னர் ஷா அவர்களிடம் வந்திருக்கிறேன்" என்று கூறினார். 

இதனைக் கேட்ட காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்கள் ஆச்சரியப்பட்டு, "என்ன செய்தியை கொண்டு வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார். 

அதற்கு அவர், "என்னை நீங்கள் அரசரிடம் அழைத்துச் சென்றால் அவரிடம்தான் செய்தியை சொல்வேன்; இல்லையென்றால் அவரை சந்திக்கும் வரை நான் திரும்பி செல்ல மாட்டேன்" என்று கூறினார்.

பின்னர் காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்கள் மன்னரை சந்தித்து ஷேகு அவர்கள் கூறிய விபரங்கள் அனைத்தையும் எடுத்துச் சொன்னார். 

உடனே மன்னர் அவர்கள், "அவரை உடனே அழைத்து வாருங்கள்" என்று கூறினார். 

ஷைகு அவர்கள் அரசவைக்கு வந்ததும் மன்னருக்கு பரிசாக ஒரு மிஸ்வாக் குச்சியையும், ஒரு சீப்பையும் வழங்கினார். 

"எனக்கு பல பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்; நான் மிகவும் ஏழ்மையாக இருக்கின்றேன்; அவர்களுக்கு திருமணம் செய்வதற்குத் தேவையான பொருட்கள் என்னிடம் இல்லை. 

அதற்காக ஒவ்வொரு நாள் இரவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தேன்;

இந்நிலையில் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நான் மிகவும் வருத்தத்தோடு அல்லாஹ்விடம் என் மகள்களின் திருமணம் குறித்து சொல்லி உதவி கேட்டுக் கொண்டிருந்தேன். 

அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் என் கனவில் காட்சியளித்தார்கள்; அப்பொழுது அவர்கள், "நீ தொடர்ந்து அல்லாஹ்விடம் உன் மகள்களின் திருமணத்திற்காக உதவிகளை கேட்டுக் கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள் .

"ஆம்" என்று நான் பதில் சொன்னேன்; அதற்கு நபி ஸல் அவர்கள், "அப்படியானால் நீங்கள் மன்னர் ஷாவிடம் செல்லுங்கள்; நபி (ஸல்) அவர்கள் என் மகள்களின் திருமண  செலவினங்களுக்கு உதவி செய்யுமாறு உங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள். 

உடனே நான் நபி  (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! மன்னர் ஏதேனும் அடையாளங்களை கேட்டால் நான் என்ன சொல்வேன்?" என்று கேட்டேன். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவரிடம் செல்லுங்கள்! நீங்கள் ஒவ்வொரு நாள் இரவும் உறங்குவதற்கு முன் சூரா தபாரக் முழுமையாக ஓதுவீர்கள் என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள். 

இந்த செய்தியை மன்னர் கேட்டதும் அதிர்ச்சிக்குள்ளானார்; உடனே அவர், "நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது; இதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது; 

ஏனென்றால் சூரத்துல் முல்க் அத்தியாயத்தை ஒவ்வொரு இரவும் ஓதி வரும்படி எனது ஆசிரியர் எனக்கு சொன்னார்; அதை நான் இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகிறேன்" என்று சொன்னார். 

பின்னர் மன்னர் அவர்கள் அந்த ஏழை மனிதரின் மகள்கள் திருமண செயலவினங்களுக்கு தேவையான முழுமையான பொருளாதார உதவிகளை செய்தார்.

மேலும் அவருக்கு தேவையான அளவு உதவிகளை மனமுவந்து தாராளமாக செய்து மரியாதையோடு வழியனுப்பி வைத்தார்.

நூல் : அல் இஃதிபார்

ஈரான் குராசான் பகுதியில் 11 ஆம் நூற்றாண்டில் நக்ஸபந்தீ ஸில்ஸிலா தரீக்காவைச் சேர்ந்த  காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்களைத்தான் அந்த ஷைகு சந்தித்து இருக்கிறார். 

பின்னர் காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்கள் ஸல்ஜுக் பேரரசின் புகழ்பெற்ற அரசர்  ஜலாலுதீன் மலிக் ஷா (ரஹ்) (1055-1092)  அவர்களிடம் அழைத்துச் சென்று சந்திக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்