22. சிறுகதைகள்
சிறுகதை - 1
=~=~=~=~=~=~
அன்பளிப்பு
-------------------------
என்னங்க......... சொல்லு.
"நாளை காலையில் எப்பவும் போல
ஃபஜருக்கு எழுந்திருச்சிருங்க, ஞாயிற்றுக் கிழமைன்னு தூங்கிடாதீங்க, பஜ்ர தொழுத கையோட வந்து குழிச்சிருங்க. நான் சுடுதண்ணீர்
வச்சிருக்கிறேன். உங்க புள்ளையையும் குளிப்பாட்டிடுங்க. நீங்க வர்ரத்துக்குள்ள நானும் குளிச்சிக்கிறேன்.
ஏன்னா உங்க அக்கா மக கல்யாணம் பத்திரை to பதினொன்னரை நிக்காஹ், நாம ஒரு எட்டுமணிக்கெல்லாம் போயிடனும் புரியிதாங்க" என்று மனைவி ஜமீலா கூறியதும் கணவர் முஹம்மது முஸ்தபா 'ம்' மட்டும் கூறினார்.
என்னங்க.... ம்.... தூங்குங்க மணி 11.00 ஆயிடுச்சி, காலையில் எழுந்தரிக்கனும் என்று மனைவி கூறியதும், முஸ்தபா தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் அடையாளத்தாளை வைத்து விட்டு உரங்க போனார்.
என்னங்க...ம்.. சொல்லு ஜமீலா... நாளைக்கு காலைல ஃபஜருக்கு பள்ளிவாசலுக்கு போனதும் முத்தவல்லி அய்யூப் பாய்கிட்ட மேல இருக்கிற ஸ்பீக்கர் ஒழுங்கா வேல செய்ய மாட்டேங்குதுன்னு சொல்லுங்க, காலைல ஆலிம்சா சொல்ர பயான் ரெண்டுநாள காதுல விழலங்க...
ஜமீலா... நான் நேத்து லுஹர்லயே பார்த்தேன் முத்தவல்லியும் எலக்ரிஷன் அன்ஸாரி பாயும் பேசிக்கிட்டு இருந்தாங்க... சரிசெஞ்சிருப் பாங்கன்னு நினைக்கிறேன்...
"அப்ப சரிங்க... இப்பபோய் நீங்க தூங்குங்க... பாத்திரம் கொஞ்சம் கிடக்கு , அத கழுவி போட்டுட்டு வந்திர்ரன், காலைல கொஞ்சம் சவ்கரியமா இருக்கும்"என்று சொல்லிக்கொண்டே சமையலரைக்கு போனாள். முஸ்தபா பாய் பெட்ரூம் போனார்.
காலை 7.30 மணி, "என்னங்க! உங்க ஏ.டி.எம். கார்ட எடுத்துக்குங்க, ஒரு ஐம்பதாயிரம் எடுக்கணும்" என்றாள் ஏன்? அவ்வளவு பணத்துக்கு என்ன செலவு? என கேட்டார் முஸ்தபா பாய்.
"இல்லங்க! உங்க அக்காமக கல்யாணம், ரெண்டு பவுனு நக கூட மாமா நீங்க போடலனா எப்படி? அப்பா இல்லாத புள்ள அதான்..." என்றாள் ஜமீலா.
"நேத்து வரையிலும் 1001 வச்சா போதும்னு சொல்லிக் கொண்டிருந்திய ஜமீலா இப்ப என்ன ஆச்சி?" என கேட்டார் முஸ்தபா.
ஜமீலா சொன்னாள்; இன்னிக்கு காலையில் நம்ம பள்ளிவாசல்ல நம்ம ஆலிம்சா ஒரு பயான் சொன்னாங்க, உங்களுக்கு நினைவுல இல்லையா?....
முஸ்தபா அந்த பயானை நினைவுறுத்தி பார்த்து தெரிந்துக் கொண்டே “எனக்கு சரியா நினைவுல இல்ல, நைட்டு ரொம்ப லேட்டா தூங்கினதால, ஃபஜருக்குப் பிறகு ஆலிம்சா பயான் செய்ய ஆரம்பித்ததும், கண்ணத்துல முட்டு கொடுத்து தூங்கிட்டேன். இடை யிடையல அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் உபைனு சொன்னாறு ஒன்னும் புறியல அது என்ன பயான்னு சொல்லுவேன்" என கேட்டார்.
ஜமீலா சொன்னாள்; நான் எப்பவும் பஜரு தொழுதுட்டு பயான் கேட்பது போல இன்னிக்கும் அடுப்படியில டீ போட்டுக் கொண்டே கேட்டேன். அப்ப ஆலிம்சா சொன்னாங்க...
முனாஃபிக் நயவஞ்சகர்களுக்காக நபியே! நீங்க என்னிடம் பாவமன்னிப்பு கேட்காதீங்க, எழுபது முறை கேட்டாலும் மன்னிக்க
மாட்டேன்னு (9:80) அல்லாஹ் சொன்ன பிறகு நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்காக மன்னிப்பு கேட்டாங்க
பிறகு அப்துல்லாஹ் பின் உபை இறந்து போனதும் நபிகளார் நேராக அவரின் ஜனாஸாவிற்கு தொழு வைக்க போனாங்க, அப்ப உமர் (ரலி) போன்ற பெரிய நபித் தோழர்களெல்லாம் தடுத்து நயவஞ்சகர் களுக்காக தொழு வைத்து பாவமன்னிப்பு கேட்காதீங்க” என்று சொன்னார்கள்.
ஆனாலும் நபிகளார் அவர்களை மீறிக் கொண்டு கபுர்ஸ்தானுக்கு போயி, தான் அணிந்திருந்த ஆடையை கலட்டி, வேற ஒரு உடையை தான் உடுத்திக் கொண்டு கழட்டின உடையை இறந்து போய் இருக்கிற அப்துல்லாஹ் பின் உபை உடைய கஃபன் சவக்கோடியை அகற்றிவிட்டு, தான் கழட்டி கொடுத்த உடையை அணிவிக்கச் செய்து ஜனாஸா தொழு வைத்து துஆ செய்துவிட்டிருக்கையில் முனாஃபிக்குகளுக்கு தொழு வைக்காதீங்க அவங்களுடைய கப்ருல கூட நிக்காதீங்க (9:84) என்று அல்லாஹ் வசனம் அருளியதும் வேகமாக மஸ்ஜிதுந் நபவி பள்ளிக்கு வந்துட்டாங்க.
அப்ப சிலப் பேர் "ஏங்க ரஸுலுல்லாஹ்! தாங்களும் தொழு வைக்க வேனாம்னு தடுத்தோம். நீங்க தொழுகையை முடிச்ச பிறகு அல்லாஹ்வும் தடுத்துவிட்டான் எங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் பிடிக்காத ஒருவிசயத்த நீங்க ஏன் செஞ்சிங்க... நீங்க அப்படி செய்கிறவரும் இல்லையே! இதுக்கு பின்னனி என்ன?”ன்னு கேட்டாங்க,
ரஸுலுல்லாஹ் சொன்னாங்க; பதுரு போர்ல எழுபது கைதிகள் பிடிக்கப்பட்டு கைகால்கள் கட்டப்பட்டு பணியில் வெற்று வெளியில் கிடந்தாங்க. அப்ப என் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) குளிர்தாளாம அந்த பனியில முனகினார். அத கேட்டு எனக்கு தூக்கம் வரல, என்னைப் பார்த்துவிட்டு
அன்று இரவு அபூபக்கர் (ரலி) அவர்கள் "யா ரஸுலுல்லாஹ்! உங்க பெரியப்பாவை மட்டும் நம்மோட டென்டுல தூக்கி போட்டுக் கொள்வோமே" என்றார். அது தப்புன்னு நான் சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல அவர் முனகல் நின்று விட்டது.
சென்று காலையில் அந்தப்பக்கம் விசாரித்தேன். அப்ப "அப்துல்லாஹ் பின் உபைதான் போர்த்திவிட்டார்" என்று கேல்வி பட்டேன். எனக்கு உதவி செய்த எல்லாருக்கும் நான் உலகத்திலேயே திரும்ப உதவி செஞ்சிட்டேன். இந்த 'அப்துல்லாஹ் பின் உபையைத் தவிர, இப்பவும் இவருக்கு நான் உதவி செயலனா இனி எப்பவுமே எனக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனாலதான் இப்படித் செய்தேன்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னாங்க. அப்படீன்னு நம்ம ஆலிம்சா பயான் சொன்னாங்க.
என் கல்யாணத்துல உங்க அக்கா உங்களுக்குன்னு முக்காபவுன் மோதிரம் போட்டுச்சு. அத நான்தான் போட்டுகொண்டு இருக்கிறேன். அதனால உங்க அக்கா மவலுக்கு இப்ப ரெண்டு பவுனுக்கான காசு ஐம்பது ஆயிரம் கொடுத்துடுவோம். இப்பவிட்டா இன்னொரு முறை செய்ய முடியாது. என் கலியாணத்துல செய்த அவுங்களுக்கு, அவர்கள் கல்யானத்துல செய்றதுதான் முறை, அதுக்குதான் சொன்னேன். ஏ.டீ.எம் கார்டு எடுத்துக் கொள்ளுங்கள் என.
அக்கா மகளின் திருமணத்திற்கு மனைவிக்குத் தெரியாமல் ஐம்பது ஆயிரம் கொடுக்கலாம் என்று நினைத்திருந்ததை. எண்ணியும், இப்போது மனைவியின் விருப்பத்தோடு மனைவியின் கையினாலேயே அக்காவிற்கு கொடுக்கப்பட இருப்பதை எண்ணியும், தன் கையிலிருந்த இரண்டு சக்கர வாகனச் சாவியைத் தூக்கிப்போட்டு பிடித்துக் கொண்டே ஏ.டீ.எம் கார்டு எடுக்கப் போனார் முஸ்தபா பாய்.

Comments
Post a Comment