27. கட்டுரைகள்
•••••••••••••••••••••••••••••••••♥•••••••••••♥•••••••♥••••••••••••♪••••♥•••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 26
சூஃபிகளின் ஹஜ்
====================
தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற இஸ்லாமிய இறை வழிபாடுகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது தான்! ஆனால் ஹஜ் அப்படி அல்ல!
இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை தொடர்ந்து மூழ்கடித்துக் கொண்டவர்களுக்குத்தான் அல்லாஹ் ஹஜ்ஜை நசீபாக ஆக்குகிறான். அல்லது அவன் தேர்வு செய்தவர்களுக்கு தான் ஹஜ்ஜை நசீபாக ஆக்குகிறான்.
சூஃபிகள் தங்களுடைய ஹஜ்ஜில், ஹஜ்ஜினுடைய ஃபர்லுகள், வாஜிபுகள், சுன்னத்கள், முஸ்தஹப் போன்ற இஸ்லாமிய மார்க்கத்தின் வரையறைகள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என பார்த்துப் பார்த்துச் செய்வார்கள் .
மேலும் சூஃபிகள் ஹஜ் செய்கிற போது உள்ளமும், அறிவும் ஒருங்கிணைந்து அந்த அமலின் மீது ஒன்றி விடுவார்கள். மேலும் அந்த அமலை மிகவும் விருப்பப்பட்டு செய்வார்கள்.
அல்லாஹ்வுக்காக அந்த அமலை செய்கிறோம் என என்னி அல்லாஹ்வின் மீது பேரன்பை தமக்குள் உற்பத்தி செய்து கொள்வார்கள். ஹஜ் செய்கிற போது மிக மிக அதிகபட்சமான பேணுதலோடும், இறைவனுக்கு இணைவைத்திடாத வகையிலும் ஓரிறைக் கோட்பாட்டில் உறுதியாக இருந்து செய்வார்கள்.
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَن لَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
மேற்கண்ட கருத்தை வலியுறுத்தும் விதமாக அல்லாஹ் கூறுகிறான்; நாம் அப்போது இப்ராஹீமை நமது ஆலயத்தின் அருகில் தங்க வைத்திருந்தோம்; *நீர் எனக்கு எதையும் இணை வைக்கக் கூடாது,* வளம் வருவோருக்காகவும், அங்கு தங்கியிருப்போருக்காகவும், தொழுவோருக்காகவும் எனது ஆலயத்தை தூய்மைப்படுத்த வேண்டும்" என்று நாம் அவரிடம் கூறினோம். 22 : 26
நூல் : முஃஜமு இஸ்திலாஹாத்துஸ் ஸூஃபியா
ஹஜ் குறித்து சில சூஃபிகளின் கருத்து : ============================
சூஃபி முஹம்மது பின் ஃபஸல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் ஏன் இறைவனை தேடி இறையில்லமாம் கஅபாவை நாடிச் செல்கிறார்கள்?
இருந்த இடத்தில் முறையாக இறைவழிபாடுகள் செய்வதின் மூலம் தமக்குள் இறைவனைக் கண்டு கொள்ள மாட்டார்களா?
அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஹஜ்ஜுடைய அமல்களை முறையாக செய்து விட்ட ஒவ்வொருவராலும் அரஃபாவில் அவனை எளிதாக அடைந்து கொள்ள முடியுமே! எனவே ஹஜ்ஜுடைய அமலை முறையாக செய்ய எவரும் முன்வர மாட்டார்களா?
ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். ஹஜருல் அஸ்வதும் கஅபாவும் கல்தான்! அதனால் எப்பயனும் இல்லை. அதனால் நான் கஅபாவை நாடிச் செல்வதில்லை. அதன் உரிமையாளனையே தேடிச் செல்கிறேன்.
அபுல்ஹஸன் ஷாதுலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
குர்ஆன், ஹதீஸ், நபி, ரசூல், ஷைஹு போன்ற வேதங்களும் மனிதர்களும் வழிகாட்டிய வழியில் தான் நாம் இறைவனைத் தேடி வருகிறோம்.
வேதங்களும், மனிதர்களும் வழிகாட்டிய வழியில் நாம் இறைவனை அடைந்து கொண்ட தலம் தான் ஹஜ். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஹஜ்ஜில் இறைவனை அடைந்திருக்கிறோம்?
ஹஜ்ஜின் உண்மையான பொருள். மனிதனை தூய்மைப்படுத்துவதும், பெருமை, அகங்காரம் போன்றவற்றை அழிப்பதும், 'நான்' என்ற சுயத்தை அளித்துவிட்டு இறை சிந்தனையிலும் இறை கட்டளைகளை செய்வதிலும் ஒன்றிணைந்து அதன் மூலம் அவனது தெய்வீக ஒளியில் இணைந்திருப்பது தான் ஹஜ்ஜின் உண்மையான நோக்கம்.
ஹஜ் வசனங்களின் விளக்கம் :
========================≠==≠========
மர்யம் (அலை) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றிருக்கும் போது பேசக்கூடாது என்றும் சட்டம் இருந்தது. அந்த நடைமுறையை அல்லாஹ் நம் சமுதாயத்தினரில் ஹஜ்ஜுடைய அமலின் போது கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்.
ولا جدال في الحج
ஹஜ்ஜின் போது வீண் விவாதங்களில் ஈடுபடக்கூடாது. 2 197
اليوم اكملت لكم دينكم
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமை பெறச் செய்து விட்டேன் 5:4
இஸ்லாத்தின் கடமைகளின் வரிசை, ஹஜ்ஜில் முடிவடைகிறது. இஸ்லாம் மார்க்கம் இத்துடன் முற்றுப் பெறுகிறது.
இவற்றை வலு சேர்க்கும் விதமாக இறைவன் மேற்கண்ட வசனத்தின் மூலம் இஸ்லாம் மார்க்கம் இன்றோடு முடிவுற்று விட்டது என்று சொல்லிக் காட்டுகிறான்.
இஸ்லாம் மார்க்கம் முழுமை பெற்றதாக அறிவித்த நாளை, உலக முஸ்லிம்கள் அனைவரும் அதே நாளில், அதே இடத்தில் ஒன்றுகூடி இன்றும் கொண்டாடி வருகிறார்கள். அதுதான் அரஃபா உடைய நாள்.
காதலன் காதலியை சந்திப்பது போல் ஹஜ்......:=======================≠==≠========
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا
ஹஜ் செய்வதற்காக மக்களுக்கு அறிவியுங்கள்; அவர்கள் நடந்து வருவார்கள். 22: 27
ஹஜ் பயணம் என்பது தன் முழு அன்பையும் வெளிப்படுத்தி காட்டும் ஓர் உன்னத, உயரிய பயணமாகும். ஒரு காதலன் தன் காதலியை சந்திப்பதற்கு எவ்வளவு ஆவலோடும், ஆர்வத்தோடும், ஆசையோடும் பயணிப்பானோ அது போன்று ஹஜ்ஜுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு தன் குடும்பத்தினரை பார்க்க வருகிற ஒருவனுடைய உள்ளத்தில் எவ்வளவு அன்பும், ஆசையும் இருக்குமோ அவ்வளவு அன்பும் ஆசையும் ஹஜ்ஜுடைய பயணத்தை மேற்கொள்வோரின் உள்ளத்தில் இருக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து குடும்பத்தினரை பார்க்க வருகிற ஒருவனுக்கு வழியில் ஏற்படுகிற துன்பங்கள், கஷ்டங்கள் அனைத்தையும் அவன் எந்த வகையிலும் பொருட்படுத்தாமல், குறை சொல்லாமல் பயணிப்பானோ அதுபோல் ஹஜ்ஜுடைய பயணத்தை அவன் மேற்கொள்ள வேண்டும்.
காழி இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். முகைரா பின் ஹகீம் (ரஹ்) எனும் இறை நேசர் தமது ஹஜ்ஜை நடந்தே வந்து நிறைவேற்றினார்கள். இதனை அறிந்தவர்களும் கேள்விப்பட்டவர்களும் அந்த இறைநேசரை பாராட்டினார்கள்.
அதற்கு அவர், "தன் எஜமானனை விட்டு ஓடிப்போன ஒர் அடிமை வாகனத்தில் வந்தா சந்திப்பான்? . நான் மட்டும் தலைகீழாக நடந்து வர சக்தி பெற்றிருந்தால் அவ்வாறே நடந்து வந்து ஹஜ்ஜை முடித்து இருப்பேன்" என்று கூறினார்கள்.
நூல் : துர்ருல் மன்சூர்
லப்பைக்
=======================≠==≠========
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ
"ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு நீர் அழைப்பு விடுப்பீராக! (உமது அழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தும், தொலைதூரப் பகுதிகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின்மீது (பயணித்தும்) வருவார்கள்" (என்று நாம் கூறினோம்.) 22:27
இறைவன் ஹஜ்ஜுக்கு அழைப்பு விடுக்கச் சொன்னதும் இப்ராஹிம் (அலை) அவர்கள், "இறைவா! எனது சப்தம் அனைத்து மக்களையும் எப்படி சென்றடையும்?" என்று கேட்டார்கள்.
அதற்கு இறைவன், "உமது அழைப்பை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பது என் கடமை" எனக் கூறினான்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் அறிவிப்பு செய்ததும் அந்த அறிவிப்பை வானம் பூமியில் வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் இன்னும் பிற வஸ்துகளும் கூட கேட்டன.
இப்ராகிம் (அலை) அவர்களின் அழைப்பை செவியேற்ற அனைவரும் 'லப்பைக்' எனக் கூறினார்கள்.
யாருக்கு ஹஜ்ஜை அல்லாஹ் நசீபாக்கினானோ அவர்கள் இந்த அழைப்பிற்கு 'லப்பைக்' என பதில் கூறினார்கள்.
இந்த அழைப்பை கேட்டு ஒரு முறை 'லப்பைக்' எனக் கூறியவர் ஒரு முறையும், இரண்டு முறை 'லப்பைக்' எனக் கூறியவர் இரண்டு முறையும், அளவின்றி லப்பைக், லப்பைக் என சொல்லிக் கொண்டே இருந்தவருக்கு பல ஹஜ், உம்ரா செய்கின்ற பாக்கியத்தையும் அல்லாஹ் வழங்கினான்.
அந்த வகையில் நாம் எத்தனை ஹஜ் , உம்ரா செய்து இருக்கிறோம் என்பதை கருத்தில் கொண்டு நாம் அத்தனை முறை ஆலமுல் அர்வாஹில் இருக்கும்போது 'லப்பைக்' சொல்லி இருக்கின்றோம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
நூல்: துர்ருல் மன்சூர், அல் இத்திஹாஃப்.
ஏன் எதற்கு என கேட்காதே!
=======================≠==≠========
அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஈரானின் வடபகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து 2500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்காவிற்கு ஹஜ் செய்ய புறப்பட்டார்.
நகரங்கள், கிராமங்கள், ஆங்காங்கே அமைந்துள்ள தனி வீடுகள் என செல்லும் வழி நெடுகிலும் தனக்கான ஷைகை தேடிக்கொண்டே சென்றார்.
இறுதியில் ஓர் நகரத்தில் கண் தெரியாத, வயதான ஒரு ஷைகை கண்டறிந்தார்.
அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் அந்த ஷைஹிடம் , "நான் ஹஜ்ஜுக்கு செல்கிறேன்; அந்த அமல் சார்ந்த நுட்பமான தகவல்களை எனக்கு சொல்லித் தாருங்கள்" எனக் கேட்டார்.
ஷைஹு அவர்கள், "நீங்கள் என்னை ஏழு முறை தவாஃப் - சுற்றி வாருங்கள்; இது ஹஜ்ஜை விட சிறந்தது. உங்கள் கடமை நிறைவேறிவிட்டது. உங்கள் பயணத்தின் நோக்கம் முழுமை பெற்று விட்டது. நீங்கள் தூய்மை அடைந்து விட்டீர்கள்" என்று கூறினார்கள்.
அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ஏன் எதற்கு என்று கேட்காமல் அவர்களை சுற்றி வர எத்தனைதார்கள். ஷைஹு அவர்கள் "நில்!" என்று சொல்லிவிட்டு,
"நான் சொன்னதும் ஏன்? எதற்கு? என்று கேட்காமல் என்னை சுற்றி வர எத்தனைதது போல், நீங்கள் ஹஜ்ஜுடைய அனைத்து வகை வகையான செயல்களையும் செய்து வர வேண்டும். இப்படி செய்ய வேண்டும் என்பது இறைவனின் உத்தரவும், இறைத்தூதரின் வழிகாட்டுதலும் ஆகும்.
அல்லாஹ் மற்றும் ரசூலின் வழிகாட்டுதலுக்கு இதாஅத் - கட்டுப்படுவது மட்டுமே இங்கே உயர்ந்த அமலாக கருதப்படுகிறது.
கஃபாவிற்குள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. அவ்வாறுதான் ஒவ்வொரு மனிதனின் உள்ளமும்.
கஃபாவிற்குள் நபிமார்கள் மற்றும் உலகின் ஆக சிறந்தவர்கள் மட்டுமே நுழைவது போல், நமது உள்ளத்திற்குள்ளும் அல்லாஹ் மற்றும் அவருடைய கடமைகள் மட்டுமே நுழைந்து பதிந்திருக்க வேண்டும்" என்று கூறினார்கள்.
அபா யஜீதுல் பிஸ்தாமீ (ரஹ்) அவர்கள் தம் ஹஜ் பயணத்தைத் தொடங்கினார்கள்.
நூல் : மஷ்னவீ ஷரீஃப்
ஹஜ் எதற்கு செய்கிறார்கள்?
=======================≠==≠========
"ஒரு மனிதன் செய்த பாவங்கள் அவன் செய்த ஹஜ்ஜின் காரணமாக அழிக்கப்படுகிறது" என நாம் நம்புகிறோம்.
உண்மையில் ஒவ்வொரு மனிதனும் செய்த பாவங்கள் அழிக்கப்படுவதற்கு தான் ஹஜ் மேற்கொள்ளப்படுகிறதா? என்றால் இங்கே சில கேள்விகள் எழுகிறது.
பாவங்கள் செய்த வசதியானவர்கள் ஹஜ் செய்து தம் பாவங்களை அழித்துக் கொள்வார்கள். வசதி இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள்?
மேலும் ஒரு மனிதனின் பாவங்கள் அழிக்கப்படுவதற்கும் ஒரு மனிதனின் நிதி நிலைமையும் காரணமாக இருக்கிறது என தெரிய வருகிறது. இது எப்படி சமத்துவமாக ஆகும்?
செல்வந்தர்கள் உடனே ஹஜ் செய்து தம் பாவங்களை அழித்து விடுவார்கள். ஏழைகள் தம் பாவங்களை சுமந்து கொண்டே சாக வேண்டுமா?
ஹஜ்ஜின் நோக்கம் பாவம் அழிக்கப்படுவது தான் என்றால் இதில் இறை நீதி எங்கே இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
உண்மையான ஹஜ்ஜி நோக்கம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போலும், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போலும், ஹாஜரா அம்மையாரை போலும் தன்னையே இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்து விடுவது தான் நோக்கம்.
ஹரம் எனும் புனிதத் தளத்தில் அவனைத் தேடி அலைந்து அவனை அடைவது தான் ஹஜ்ஜின் உண்மையான நோக்கம்.
பாவங்கள் அழிக்கப்படுவது, நன்மைகள் அதிகமாகக் கிடைப்பது போன்றவை யாவும் இரண்டாம் தரமான வெகுமதிகள்தாம்.
அன்று முதல் இன்று வரை இஸ்லாம் மார்க்கத்தின் பல கருத்துகளின் உண்மையான நோக்கம் மழுங்கடிக்கப்பட்டு மறைந்தே கிடக்கின்றது. அவை நம்மிடம் இரகசியமாக ஒரு காலத்தில் ஒப்படைக்கப்பட்ட உண்மைகள். ஆனால் இன்று அவை அனாயசமாக விடப்பட்டு விட்டது. அப்படி ஒரு கருத்து தான் ஹஜ்ஜின் மூலம் இறைவனை அடைவது.
நூல் : The Heart of Islam
ஹஜ் ஓர் அழைப்பு மையம் :
=======================≠==≠========
ஹஜ்ஜில் இரண்டு வகை தஃவா - அழைப்பு பணி இருக்கின்றது.
1. நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் உலக மக்கள் அனைவரையும் ஹஜ்ஜுக்கு வரும்படி அழைப்பு கொடுத்தார்கள்.
அந்த வகையில் தான் முதல் அகபா உடன்படிக்கையின் போது ஹஜ்ஜுக்கு வந்திருந்த ஆயிரமாயிரம் நபர்களில் ஆறு பேர் மட்டும் நபிகளாரின் தஃவா - அழைப்பை ஏற்று இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது 124000 பேர் கலந்து கொண்டார்கள்.
2. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்திருந்த லட்சோப லட்ச மக்களை பார்த்து "பல்லிஙூ அன்னீ வலவ் கான ஆயா' - இன்றைய தினம் நான் இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக உங்களிடம் அறிவித்து விட்டேன்; நீங்கள் அனைவரும் உலக மக்கள் அனைவருக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சென்று சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டார்கள்.
அதனால் ஸஹாபாக்கள் அனைவரும் உலகம் முழுவதும் பரவிச் சென்று இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடையே பரப்பினார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹஜ்ஜுக்கு வரச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் இருந்து போகச் சொன்னார்கள்.
எனவே ஹஜ்ஜின் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் இஸ்லாம் சென்றடைய வேண்டும் என்பதே இந்த ஹஜ் எனும் இபாதத்தின் நோக்கம்.
இன்று ஹஜ் செய்கிற ஒவ்வொருவர் மூலமாகவும் இஸ்லாம் மற்றவர்களை சென்றடைய வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படியும் சில இறைநேசர்கள் :
=======================≠==≠========
சில இறை நேசர்கள் துல்ஹஜ் மாதத்தின் ஹஜ்ஜுடைய ஐந்து நாட்கள் தொடங்கிய பிறகு தல்பியாவை அடிக்கடி சொல்லிக் கொண்டு மிகவும் பேணுதலாக தமது ஊரில் வாழ்ந்திருப்பதாக சில நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
மவ்லானா சையத் ஹுசைன் அஹமத் மதனீ (ரஹ்) அவர்களிடம் அவர்களின் முரீதீன்களில் ஒருவர் துல்ஹஜ் பிறை எட்டு அன்று அத்தர் சீசாவை கொடுத்து, "தாங்கள் அத்தர் பூசிக் கொள்ளுங்கள்" என்று சொன்னார்.
அதனை பெற்றுக்கொண்ட மவ்லானா அவர்கள் தம்மீது அத்தரை பூசிக்கொண்டே நீண்ட பெருமூச்சை விட்டு, "இன்றைய தினம்தான் ஹாஜிகளும், ஹஜ்ஜில் உள்ள இறைநேசர்களும் நறுமணம் பூசுவதிலிருந்து விலக்கப்பட்ட தினம்" என்று கூறினார்கள்.
எவருடைய உள்ளத்தில் இறையன்பு இருக்குமோ அவர் மக்காவிலிருந்து தொலைவில் வாழ்ந்தாலும் அங்கிருப்பது போன்ற கற்பனையில் மூழ்கி இருப்பார்.
ஒரு சில இறைநேசர்கள் துல்ஹஜ் மாதத்தின் தொடக்கத்திலிருந்து பிறை பத்து வரை அவ்வப்பொழுது தல்பியா சொன்ன வண்ணம் இருந்திருக்கிறார்கள்.
இவர்கள் ஹஜ்ஜுடைய தளங்களில் இல்லாவிட்டாலும் தாம் இருக்கின்ற இடத்தில் ஹஜ்ஜுடைய காலங்களில், பேண வேண்டிய நடைமுறைகளை பேணி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை காணும் போது அவர்களுடைய இறையச்சத்தின் உயர்ந்த நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
நூல் : மஜாலிசே ஹகீமுல் இஸ்லாம்
ஹஜ்ஜில் பேணுதல் அவசியம் :
=======================≠==≠========
இஸ்லாமிய மார்க்கத்தின் அனைத்து வகை அமல்களையும் பின்பற்றி நடப்பதில் சில ஒழுக்க வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஹஜ்ஜுடைய அமலை நிறைவேற்றுவதற்கு முன்பு அதன் ஒழுக்க முறைகளை தெளிவாகத் தெரிந்து கொண்டு அதனை பேணுதலாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மவ்லானா ஷா அப்துல் அஜீஸ் திஹ்லவீ (ரஹ்) அவர்கள் தஃப்ஸீரே அஜீஜி என்கின்ற தமது நூலில் கூறுகிறார்கள்.
"எந்த ஒரு மனிதன் ஒழுக்க முறைகளைப் பேணுவதில் அலட்சியமாக இருப்பானோ அவன் சுன்னத்தான விஷயங்களைப் பின்பற்றி நடப்பதிலிருந்தும் தூரமாகிவிடுகிறான்.
சுன்னத்துகளை பின்பற்றி நடப்பதில் அலட்சியமாக இருந்தால் அவன் ஃபர்ளுகளை விட்டு விடும் துர்பாக்கியம் உண்டாகும்.
ஃபர்ளுகளை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்தால் அவன் மஃரிபத் எனும் ஞான விஷயங்களை அறிவதில் இருந்து தூரமாக்கப்படுவான்"
அதனால்தான் சில செயல்களைப் பற்றி ஹதீஸ்களில் குஃப்ரு என சொல்லப்பட்டு இருக்கிறது. ஏனெனில் மேற்கூறிய வகையில் அவை குஃப்ரு வரை மனிதனை இழுத்துச் சென்று விடுகின்றது. அதனால்தான் ஷரீஅத்தின் ஒவ்வொரு கட்டளையையும் நடைமுறை படுத்தும்போது பேணுதல் காட்டுவது மிக அவசியமாக இருக்கின்றது.
ஏதேனும் இயலாமை போன்ற காரணங்களால் அவற்றை எடுத்து நடக்க முடியாமல் போனால் அவற்றின் மீதுள்ள கண்ணியமும், மகத்துவமும் உள்ளத்தில் இருந்து கொண்டிருக்க வேண்டும். அலட்சியமாகவோ, வீண் என்றெண்ணியோ அவற்றை ஒருக்காலும் விட்டு விடக்கூடாது.
நூல்: தஃப்ஸீரே அஜீஜி
உலகத்தின் இறுதி ஹஜ்
=======================≠==≠========
நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ்ஜுக்குச் சென்ற சமயம் பெண்களிடம், “இதுவே நீங்கள் செய்யும் ஹஜ்ஜாகும். இதற்குப் பிறகு உங்கள் வீட்டு பாய்களின் மீது நீங்கள் இருக்க வேண்டும்." எனக் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ
இந்த ஹதீஸின் காரணமாக உம்மு ஹாத்துல் முஃமினீன் ஜைனப் (ரலி) அவர்களும், சௌதா (ரலி) அவர்களும் இதற்குப் பிறகு ஒரு ஹஜ்ஜும் செய்யவில்லை.
"நபி (ஸல்) அவர்களின் இந்த அருள் மொழியை நாமே நேரில் கேட்டிருக்க, பிரயாணத்திற்காக வீட்டை விட்டு எப்படி வெளிக் கிளம்புவது?' ' என்று அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லவில்லை.
ஆனால் நபிகள் நாயகத்தின் மற்ற மனைவிமார்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியர் கீழ்காணும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ், உம்ரா செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வயதானவர், பலவீனர், பெண்கள் ஆகியவர்களின் ஜிஹாத் ஹஜ்ஜாகும்." நூல் : திர்மிதீ
சூஃபிகளில் சிலர் தம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்து இருக்கிறார்கள் என்பதே அவர்கள் கூறும் காரணம்.
அதே சமயம் இவர்கள் அடிக்கடி மக்காவிற்கு செல்வார்கள். உம்ரா செய்வார்கள். அதிகமாக தவாஃப் செய்வார்கள். மக்காவில் தங்கி இருப்பார்கள்.
அதே சமயம் வேறு சில சூஃபிகள் பல ஹஜ்ஜுகளை செய்து இருக்கிறார்கள். பல ஹஜ்ஜிகளை செய்த சூஃபிகள், "ஹஜ் செய்வதற்காக மீண்டும் மீண்டும் இஹ்ராம் ஆடையை அணியும் போது உடலிலும் உள்ளத்திலும் உள்ள ஆசைகளையும் அகற்றி விடுகிறோம்; அதனாலேயே மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுகளை செய்கிறோம்"எனக் கூறுகிறார்கள்.
சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளிலும் கஅபாவை ஒரு அப்தால், மற்றும் ஒரு அவ்தாத் தவாஃப் செய்கிறார்கள்.
அப்தால், அவ்தாத் எனும் சொல் இறைநேசர்களின் படித்தரத்தை குறிக்கும். இவ்வாறான இறைநேசர்கள் கஅபாவிற்கு வருவது நின்று போனால், அன்றிலிருந்து ஏழு வருடங்களில் கஅபா வானத்திற்கு உயர்த்தப்பட்டுவிடும்.
பின்னர் குர்ஆன் உயர்த்தப்படும். அதற்குப் பிறகு மனித இதயங்களில் உள்ள திருக்குர்ஆன் வசனங்கள் உயர்த்தப்படும். அதற்கும் பிறகு ஹஜருல் அஸ்வது கல்லும், மகாம இப்ராஹிம் கல்லும் உயர்த்தப்பட்டுவிடும்.
நூல் : அல் மவ்ஸூஅதுஸ் ஸூஃபியா
செல்வந்தர்கள் விரைந்து ஹஜ்ஜு செய்து கொள்ளுங்கள். ஏழைகள் ஹஜ்ஜு செய்ய அதிகமதிகம் தங்களுக்குள் ஆசைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இறைவன், தான் நாடுவோரை தன் இறையில்லத்தை தரிசிக்க அழைத்துச் சென்று விடுவான்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 25
நபிகள் நாயகத்தை
ஜியாரத்து செய்யும் வழிமுறை
====================================
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மூளை முடுக்குகளில் இருந்தும் மக்கள் ஹஜ்ஜுக்கு வருவது போல் நபி (ஸல்) அவர்களையும் ஜியாரத் - சந்திக்க வருவது, உலகின் ஒவ்வொரு பகுதிக்கும், மூளை முடுக்கிற்கும் நபிகளார் குறித்த நற்செய்திகள் சென்றடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
நபிகள் நாயகம் அவர்கள் குறித்த செய்தி, அனைத்து மக்களிடமும் சென்றடைந்தது போல் வேறு எந்த மனிதர் குறித்தும் சென்றடைந்ததாக வரலாறு இல்லை.
நீங்கள் சொல்லலாம். ஜீசஸ் குறித்த செய்தியும் உலகம் முழுவதும் சென்றடைந்து இருக்கிறதே என்று.
நாம் பேசிக் கொண்டிருப்பது மனிதர்கள் குறித்து. ஜீசஸ் தான் கிறிஸ்தவர்களால் கடவுளாக மதிக்கப்படுகிறாரே!
மாரிஸ் புகைல் போன்ற இஸ்லாத்தைப் பின்பற்றாத பல்வேறு மொழி, மற்றும் நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் நபிகள் நாயகத்தை வானளாவப் புகழ்கிறார்கள்.
குற்றப் பின்னணி கொண்ட மக்களையும், நல்லது இன்னது என தெரியாமல் வாழ்ந்த மக்களையும், பகலில் வாழ்ந்தாலும் மனதளவில் இருட்டிலேயே இருந்த அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியவர் நபிகள் நாயகம் அவர்கள்.
"ஆமாம்! இவர்தான் உலகத்தை திருத்தப் போறாரு" என்று நம்மில் சிலர் சிலரைப் பார்த்து கேலியாக கூறுவதை கேட்டிருப்போம்.ர
இந்த வார்த்தை நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது. அருள்மறை குர்ஆன் "ரஹ்மதன் லில் ஆலமீன்' - அவர் அண்டத்தின் அருளாளர்" என்று குறிப்பிடுகிறது.
நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே உரித்தான ஒர் அடைமொழி, இன்னொரு மனிதருக்கு சொல்லப்படும் போது அது கேலியாகவும், கிண்டலாகவும் மட்டுமே பார்க்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.
"இறைவனுக்கு நிகராக எவரும் இல்லை; மனிதரில் நபிகள் நாயகத்திற்கு நிகராக எவரும் இல்லை" என்று ஷிப்லீ நுஃமானீ (ரஹ்) அவர்கள் கூறுவது போல் ஈடு இணையற்ற, இறுதி இறைத்தூதரை எவ்வாறு ஜியாரத் செய்வது என்பது குறித்து பார்ப்போம் வாருங்கள்.
ஜியாரத்தின் ஒழுக்கம் :
=====================================
நபி (ஸல்) அவர்களை ஜியாரத்து செய்வோர் மிகவும் ஒழுக்கத்துடன் ஜியாத்தை மேற்கொள்ள வேண்டும்.
"ஒருவரின் மீது நீ வைத்திருக்கும் அன்பே உனக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும்" என ஓர் கவிஞர் கூறுகிறார்.
நபி (ஸல்) அவர்கள் மீது நாம் அளவின்றி வைத்திருக்கும் அன்பே நாம் அவர்களை ஜியாரத்து செய்யும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்" என்பதை கற்பிக்கும்.
நபி (ஸல்) அவர்களை ஜியாரத்து செய்ய செல்வோர் நபி (ஸல்) அவர்களுக்கு அதிகமாக ஸலவாத்துகளை ஓதிக்கொண்டே செல்ல வேண்டும்.
அப்துல் கைஸ் கூட்டத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களைக் காண வந்திருந்தபோது அவர்கள் நபிகளாரை தூரத்திலிருந்து பார்த்ததும் தம் ஒட்டகங்களிலிருந்து கீழே குதித்தனர் . தமது ஒட்டகங்களை அப்படியே விட்டுவிட்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடி வந்து சபையில் அமர்ந்தனர்.
ஆனால் அவர்களில் முன்திர் பின் ஆயிது (ரலி) ( இவரை ஷேக் அப்துல் கைஸ் (ரலி) என்றும் அழைக்கப்படும்.) அவர்கள் தம் ஒட்டகங்களையும், தம் கூட்டத்தினருடைய ஒட்டகங்களையும் இழுத்துச் சென்று அவற்றை கட்டிப் போட வேண்டிய இடத்தில் கட்டி வைத்தார்கள். பின்னர் தன் சாமான்களையும், உடன் வந்திருந்தவர்களின் சாமான்களையும் இறக்கி ஒன்று சேர்த்து அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் அடுக்கி வைத்தார்கள்.
பிறகு ஒரு தோட்டத்திற்குச் சென்று குளித்தார். புத்தாடை அணிந்தார். பின்னர் மிக மரியாதையுடன் மெதுவாக நடந்து வந்து மஸ்ஜிதுந் நபவியில் இரண்டு ரக்அத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுது துஆச் செய்தார்.
பின்னர் நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்து ஸலாம் கூறினார்கள். அவர்களுடைய செயலைக் கண்டு மிகவும் மகிழ்ந்து, "உங்களில் இரு நற்குண நல் லொழுக்கங்கள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ்வும் பிரியப்படுகின்றான். ஒன்று சகிப்புத்தன்மை, மற்றொன்று கம்பீரம்" என கூறினார்கள்.
நூல் : திர்மிதீ, முஸ்னது அஹ்மத்
பாபு ஸலாம் வழியாக நபிகளாரின் சன்னிதானத்திற்குள் நுழையும்போது, மாபெரும் அரசவைக்குள் செல்லும்போது அச்சமும், மரியாதையும் கலந்து மிகைத்திருப்பது போல் அங்கு நடந்து செல்ல வேண்டும்.
பொதுவாகவே ஜியாரத் செய்ய செல்கிறவர்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பவரின் கால்மாட்டில் நின்று அவர்களை ஜியாரத்து செய்ய வேண்டும் . அப்படி செய்யும் போது அவர்களுக்கு பார்க்கும் சக்தியை அல்லாஹ் வழங்கினால் நம்மை அவர்கள் பார்ப்பார்கள். அதனால் கால்மாட்டில் நின்று ஜியாரத்து செய்வதே சரியான ஒழுங்கு முறையாகும்.
நூல் : ஃபதஹுல் கதிர்
நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும்போது எந்த வகையில் மரியாதை செய்தோமோ அவ்வாறு இன்றும் கண்ணியம் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிரோடுதான் இருக்கிறார்கள்.
நூல் : ஷரஹ் மவாஹிப்
அல்லாமா முல்லா அலீ காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சில அறிவீனர்கள் செய்வது போன்று நாம் செய்யக்கூடாது. வெளித்தோற்றத்தில் பெரும் இறைநேசரை போன்று அவர்கள் காணப்பட்டாலும் அவர்கள் செய்கிற தவறான செயல்களை நாம் செய்யக்கூடாது.
கபுர்களுக்கு முன்னால் தலை வணங்குதல், கபுரை முத்தமிடுதல், அப்பகுதியில் உள்ள தரையை முத்தமிடுதல், சுவர்களை முத்தமிடுதல், கப்ரை முன்னோக்கி தொழுதல் ஆகியன அறவே கூடாது.
எவரேனும் கப்ரை கண்ணியப்படுத்தும் எண்ணத்துடன் அதனை முன்னோக்கி தொழுதால் அவர் காஃபிர் என்றே சொல்ல வேண்டும்.
உலகத்தில் ஒரு கல்லை முத்தமிடுவதற்கு அனுமதி இருக்கிறது என்றால் அது ஹஜருல் அஸ்வத் மட்டும் தான்.
நூல் : ஷரஹ் லுபாப் அல் மனாசிக்
நபி (ஸல்) அவர்களை ஜியாரத்து செய்ய சென்றிருக்கும்போது நாம் கடந்த காலங்களில் செய்த பாவங்களை எண்ணி வெட்கப்பட்டும், வருந்தியும், அல்லாஹ்விடம் தவ்பா செய்த நிலையிலும் செல்ல வேண்டும்.
ஜியாரதுந் நபி ஸல்:
==================================
இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "என்னை ஜியாரத் செய்வதற்கு என்றே யார் வருவாரோ அவர் மறுமை நாளில் எனக்கு அருகில் இருப்பார்.
மேலும் மதீனாவில் தங்கியிருக்கும் போது அங்குள்ள கஷ்டங்களையும், சிரமங்களையும் யார் சகித்துக் கொள்வாரோ அவருக்கு நான் மறுமை நாளில் சாட்சியாகவும், பரிந்துரை செய்யக்கூடியவராகவும் இருப்பேன்.
மேலும் ஒருவர் மக்காவின் ஹரமிலோ அல்லது மதீனாவின் ஹரமிலோ மரணமடைந்து விட்டால், அவர் மறுமை நாளில் பாதுகாப்பு பெற்றவர்களின் கூட்டத்தில் எழுப்பப்படுவார்.
நூல்: பைஹகி, மிஷ்காத்,
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய கப்ரை யார் ஜியாரத் செய்தாரோ அவருக்கு எனது ஷஃபாத் கடமையாகி விட்டது.
நூல் : அபூதாவூத், முஸ்னது அஹ்மத்
நபி (ஸல்) அவர்களின் ஷாபாஅத்தை யார்தான் வேண்டாம் என்று சொல்ல முடியும்?
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது ; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் என் மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்கிறாரோ அவர், என் வாழ்நாளில் என்னை சந்தித்தவர் போல் ஆவார்.
நூல் : தப்ரானீ , தாரகுத்னீ
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "ஹஜ் செய்த பின்னர் யார் என்னை ஜியாரத் செய்ய வரவில்லையோ அவர், எனக்கு அநியாயம் செய்தவர் ஆவார்.
நூல் : பைஹகீ, இப்னு அபீதுன்யா.
"யார் சக்தியும், வசதியும் இருந்தும் நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்யவில்லையோ அவர் பெரும் அநியாயக்கார ஆவார்" என் அல்லாமா கிஸ்தலானி (ரஹ்) அவர்கள் மவாஹிபு லதுன்னியா எனும் நூலில் கூறுகிறார்கள்.
அல்லாமா முல்லா அலீ காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வது வாஜிப் ஆகும். ஜியாரத்து செய்ய சக்தி இருந்தும் யார் ஜியாரத்து செய்யாமல் இருக்கிறாரோ அவர் குற்றவாளியும், நன்றி கெட்டவரும் ஆவார்.
நபி (ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்தினருக்கு செய்த உதவிகளை நினைத்துப் பார்த்தும், நமது மரணத்திற்குப் பிறகு மறுமையில் நபிகளார் நமக்கு செய்யும் ஷபாஅத் - பரிந்துரை மற்றும் ஷஹாதத் - சாட்சி சொல்லும் நிலையை மனதில் கொண்டும் அவர்களை ஜியாரத் செய்வதை நாமாக கடமையாக்கி கொள்ள வேண்டும் என அல்லாமா ஷாமி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
மாலிகி மத்ஹபை சேர்ந்த அல்லாமா காழி இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது அனைத்து மத்ஹபினராலும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட சுன்னத்தான செயல்.
மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு செல்வதாகவும், இஃதிகாப் இருப்பதற்காக செல்வதாகவும், நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வதற்காக செல்வதாகவும் என மூன்று காரணங்களில் எதை நிய்யத் செய்து சென்றாலும் அது ஆகுமானதே!
முதன் முதலில் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலுக்கு செல்கிறவர், நபிகளாரை ஜியாரத் செய்வதற்காகவே செல்வதாக நிய்யத் செய்வது சிறந்தது என இமாம் இப்னு ஹமாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
"முல்லா ஜாமி (ரஹ் ) அவர்கள் ஒரு முறை நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வதற்காக மட்டுமே வெகு தொலைவில் இருந்து பயணத்தை மேற்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் அதில் ஹஜ் மற்றும் வேறு எந்த நோக்கத்தையும் கலக்கவில்லை.
இவ்வாறு ஜியாரத்தை மட்டுமே விரும்பி செய்ததின் மூலம் அவர்களின் அன்பின் ஆழம் என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறது" என ஷாமி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஹஜ்ஜுக்காக செல்கிற ஒருவர் முதலில் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்ய வேண்டுமா?
இரண்டு அமல்களையும் நிதானமாக செய்து முடிக்க வேண்டும். அந்த வகையில் எதை முதலில் செய்ய வேண்டும் என அவருக்கு சூழ்நிலை அமைந்திருக்கிறதோ அதையே அவர் முதலில் செய்ய வேண்டும்.
ஹஜ்ஜுக்கான காலம் நெருங்கி இருக்கும் பொழுது அவர் ஜியாரத் செய்வதை விட ஹஜ்ஜை முதலில் செய்வதுதான் முறையாகும். அதேநேரம் ஹஜ்ஜுக்கான கால இடைவெளி அதிகமாக இருந்தால், அவர் முதலில் ஜியாரத்தை முடித்துக் கொண்டு ஹஜ்ஜு செய்யலாம்.
"ஹஜ்ஜுக்கு செல்கிற ஒருவர் மதீனாவை கடந்துதான் போக வேண்டும் எனும் நிலையில் இருந்தால், அவர் கண்டிப்பாக நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தளத்தை சந்தித்து ஸலாம் சொல்லிவிட்டு உடனே புறப்பட்டு செல்வதுதான் முறையாகும். அதை அவர் செய்யத் தவறினால் குற்றம் பிடிக்கப்படுவார்" என முல்லா அலீ காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
"நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வதற்காக வேண்டி மட்டுமே நான் மதீனாவிற்கு செல்கிறேன்" என ஒருவர் நிய்யத் செய்து செல்லும்போது அவர் நபி (ஸல்) அவர்களை மிகவும் கண்ணியப்படுத்தியதாக கருதப்படும்" என இப்னு ஹுமாம் (ரஹ் ) அவர்கள் ஃபதஹுல் கதிர் எனும் நூலில் கூறுகிறார்கள்.
நபிகளாருக்கு ஸலாம் சொல்லுதல் :
==================================
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனது அடக்கத் தளத்திற்கு அருகில் நின்று எவர் எனக்கு ஸலாம் சொன்னாலும் அவருடைய ஸலாமுக்கு நான் பதில் கூறுகிறேன் .
நூல் : முஸ்னது அஹ்மத்
நபி (ஸல்) அவர்களை ஜியாரத்து செய்வதற்காக பாபுஸ் ஸலாம் வழியாக செல்லும்போது நாம் கடந்த காலங்களில் செய்த பாவங்களை எண்ணி வெட்கப்பட்டும், வருந்தியும், அல்லாஹ்விடம் தவ்பா செய்த நிலையிலும் செல்ல வேண்டும்.
மேலும் இமாம் கஸ்ஸாலீ [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்ய செல்லும் வழியில், நபிகளாரை சுற்றி இருந்து நபிகளாரின் பரக்கத்துகளையும், அவர்களின் இனிய உபதேசங்களையும் கேட்டுக்கொண்டிருந்த ஸஹாபாக்களையும் , அந்த நாட்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தனக்கு நபி (ஸல்) அவர்களையும் ஸஹாபாக்களையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என எண்ணி வருத்தமும், கவலையும், துக்கமும் கொள்ள வேண்டும்.
உலகத்தில்தான் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. மறுமை நாளில் என்னவாகுமோ தெரியாது! நபிகளாரின் தரிசனம் மகிழ்வுடன் கிடைக்குமோ? அல்லது வெறுத்த நிலையில் கிடைக்குமோ? நபிகளாரின் சமூகத்திலிருந்து விரட்டப்படுவோமோ? நம் தீய செயல்கள் நபிகளாரின் தரிசனத்திற்கு திரையாக வந்து தடையாக ஆகிவிடக் கூடாதே என அஞ்ச வேண்டும்.
ஏனெனில், ஹதீஸில், "மறுமை நாளில் சில மனிதர்கள் என்னை விட்டும் தூரமாக்கப்படுவார்கள் , "இவர்கள் என் உம்மத்தினராயிற்றே" என நான் கூறுவேன். "உங்களுக்குப் பின்னால் இவர்கள் என்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என பதிலளிக்கப்படும்.
நூல் :இஹ்யா உலூமிதீன்
நபிகளாரின் சன்னிதானத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை போற்றி புகழ வேண்டும். பிறகு அல்லாஹ் நமக்கு வழங்கிய நர்பாக்கியங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். பின்னர் அன்பு பொங்க நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும்.
நபி (ஸல்) அவர்களுக்கு முறையாக ஸலாம் சொன்ன பிறகு நபிகளாரிடம் வஸீலா - உலகம் மற்றும் மறுமை தேவைக்காக உதவிகள் கேட்க வேண்டும். மேலும் ஷஃபாஅத் - மறுமையில் தமக்காக பரிந்துரை செய்யும்படியும் துஆ செய்ய வேண்டும்.
மறுமை நாளில் பெரும்பாலான நபிமார்கள் நபிகளாரிடம் வந்து வஸீலா - உதவி கேட்பார்கள் என்கிற நபிமொழி ஆதாரபூர்வமான கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பதை தாங்கள் அறிவீர்கள்.
பின்னர் நபிகளாரின் வஸீலாவை அல்லாஹ்விடம் தனக்காகவும், தன் பெற்றோர், பிள்ளைகள், ஆசிரியர்கள், குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், நாம் அறிந்த அனைவருக்காகவும் துஆ செய்ய வேண்டும்.
நம்மிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டவர்களுக்காகவும் நம் குடும்பத்தில் காலம் சென்றவர்களுக்காகவும் அங்கே நின்று துஆ செய்ய வேண்டும்.
மேலும் மதீனாவிற்கு செல்கிறவரிடம் யாரேனும் நபிகளாருக்கு ஸலாம் சொல்லுமாறு சொல்லி அனுப்பினால், அதை அவர் சொல்வதாக ஒப்புக்கொண்டால், அவர் அந்த ஸலாமை எத்தி வைப்பது அவர் மீது வாஜிப் ஆகிறது.
உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மதீனாவிற்கு செல்வோரிடமும், மற்றும் அரசு அலுவல் சார்ந்த பணிகளுக்கு செல்லும் அதிகாரிகளிடமும் நபிகளாருக்கு ஸலாம் சொல்லுமாறு சொல்லி அனுப்பும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.
இவ்வாறே பல இறை நேசர்கள் நபிகளாருக்கு ஸலாம் சொல்லும்படி சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.
ஹிஜ்ரி 555 - இல் நபிகளாரிடம் முஸாஃபஹா செய்தவர் :
==================================
அல்லாமா சையித் அஹ்மத் ரிஃபாயி [ரஹ்] அவர்கள் ஹிஜ்ரீ 555 - இல் ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு ஜியாரத்திற்காக மதீனா வந்திருந்தார்கள்.
கப்ரு ஷரீஃபிற்கு முன்பு நின்று .....
فِي حَالَةِ الْبُعْدِ رُوحِي كَنْتُ ارْسِلُهَا ،
تَقَبَّلُ الْأَرْضَ عَنِي وَهِيَ نَائِبَتِي
وَهَذِهِ دَولَةُ الْأَشْبَاحَ قَدْ حَضَرَتْ ،
قَامُدُ يَمِينَكَ لَيَ تَخْفِي بِهَا شَفَتِي
தூரத்தில் இருக்கும் போது என் ஆன்மாவை தங்களின் சமூகத்திற்கு சேவைக்காக அனுப்பிக் வைத்தேன்.
அது என் தூதராக வந்து, தங்களின் முபாரக்கான கப்ரு ஷரீபை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.
இப்பொழுது உடல்கள் சந்திக்கும் நேரம் வந்திருக்கிறது.
எனவே தங்களின் திருக்கரத்தை நீட்டினால் என் உதடுகள் அதனை முத்தமிடும்."
இவ்வாறு அவர்கள் கூறியதும், கப்ரு ஷரீஃபிலிருந்து நபிகளாரின் பரிசுத்த கரங்கள் வெளிப்பட்டது. அவர்கள் அவற்றை முத்தமிட்டார்கள்.
அச்சமயம் தொண்ணூராயிரம் பேர் மஸ்ஜிதுந் நபவி பள்ளியில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இக்காட்சியைப் பார்த்து நபி [ஸல்] அவர்களுடைய திருக்கரங்களை ஜியாரத்தும் செய்தனர்.
அக்கூட்டத்தில் ஹஜ்ரத் மஹ்பூபே சுப்ஹானி, ஷேக் அப்துல் காதிர் ஜீலானி [ரஹ்] அவர்களும் இருந்தார்கள்.
நூல் : அல் ஹாவி லில் ஃபதாவா, அல் பயானுல் மஷ்ஹத்
மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் :
==================================
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று மஸ்ஜிதுகள் அல்லாமல் வேறு எதற்கும் நீங்கள் பயணம் செய்யாதீர். ஒன்று : மஸ்ஜிதுல் ஹராம். இரண்டு மஸ்ஜிதுல் அக்ஸா மூன்று. என்னுடைய இந்த மஸ்ஜித்.
நூல் ; புகாரி, முஸ்லிம்.
மேலும் மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசலுக்கு சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுதால் ஒரு உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பதால் இந்த நான்கு பள்ளிவாசல்களுக்கு என பயணப்படுவது நன்மையை தரக்கூடியதாகும்.
அதே நேரம் நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வதற்காக வேண்டி மட்டும் வெளியூர்களிலிருந்து மதீனாவிற்கு பயணித்து வருவதும், அதேபோல் நபிமார்களுடைய கப்ரை ஜியாரத் செய்வதற்காக வேண்டி மட்டும் வேறு நகரங்களுக்கு செல்வதும், அதேபோல் வழிமார்களுடைய கப்ருகளை ஜியாரத்து செய்வதற்காக செல்வதும் மார்க்கத்தில் ஆகுமானதே! என மவாஹிபுல் லதுன்னியா எனும் நூலில் அல்லாமா கிஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஷேக் வலியுத்தீன் இராகி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். என் தந்தை ஜைன் இராகீ (ரஹ்] அவர்களும், ஹள்ரத் ஷேக் அப்துர் ரஹ்மான் பின் ரஜப் ஹன்பலி (ரஹ்) ஆகிய இருவரும் சேர்ந்து நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய பாலஸ்தீனில் உள்ள ஜிப்ரான் நகரத்திற்கு சென்றார்கள்.
நகருக்கு அருகில் சென்றதும் இப்னு ரஜப் [ரஹ்] அவர்கள் "நான் ஹள்ரத் நபி இப்ராஹிம் [அலை] அவர்களின் மஸ்ஜிதில் தொழும் நிய்யத் செய்து கொண்டேன். ஏனெனில் ஜியாரத்தினுடைய நிய்யத் இருக்கக்கூடாது என்பதற்காக" எனக் கூறினார்கள்.
உடனே ஹஜ்ரத் ஜைன் இராகீ [ரஹ்] அவர்கள், "தாங்கள் நபி [ஸல்] அவர்களின் சொல்லுக்கு மாற்றம் செய்கிறீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் மூன்று மஸ்ஜிதுகளுக்கு அல்லாமல் வேறு பள்ளிவாசல்களுக்குபயணம் செய்யக்கூடாது என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ நான்காவதாக ஒரு பள்ளிவாசலில் தொழப் போவதாக நிய்யத் செய்திருக்கிறீர்கள்.
நபி ஸல் அவர்கள் கப்ருகளை ஜியாரத்து செய்யுங்கள் என சொல்லி இருப்பதால் அந்த ஹதீஸின் அடிப்படையில் நான் இப்ராஹீம் (அலை) அவர்களின் கப்ரை ஜியாரத்து செய்ய வந்திருக்கிறேன்; எனவே நான் நபி (ஸல்) அவர்களுக்கு மாற்றம் செய்யவில்லை" என்று கூறினார்கள் .
மதீனா நகரமும்
மதீனா வாசிகளும்:
==================================
சையது பின் அஸ்லம் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள், "இறைவா! மதீனாவாசிகள் மீது யார் தவறான எண்ணம் கொள்கிறாரோ அவரை, உலோகம் நெருப்பிலும், உப்பு தண்ணீரிலும், கொழுப்பு வெயிலிலும் உருகுவது போல் உருக்கிடுவாயாக" என துஆ செய்திருக்கிறார்கள்.
நூல் : கன்சுல் உம்மால்
எனவே மதீனாவாசிகளிடம் வியாபாரம் செய்யும் போதும், பேசும்போதும், மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் அவர்களை கண்ணிய குறைவாகவோ, ஏமாற்றும் விதமாகவோ நடத்தி விடக்கூடாது என்பதை ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் மக்காவிலோ மதினாவிலோ தங்கிவிடலாம் என எண்ணுகிறார்கள்.
அவ்வாறு நினைப்பவர்கள் மக்காவில் தங்குவதை விட மதீனாவில் தங்குவது ஆகச்சிறந்தது என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், "மதீனா அல்லாத ஊரைச் சார்ந்தவர்கள் மதீனாவில் அதிகமாக தங்குவதும், அடிக்கடி ரவ்லாவிற்கு செல்வதும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அடிக்கடி ரவ்லாவிற்கு செல்லும்போது கவனக்குறைவும், மனச்சிதரலும் உண்டாகலாம்; அதனால் அது நபி (ஸல்) அவர்களை குறைத்து மதிப்பிட்டதாக ஆகி விடுமோ என நான் அஞ்சுகிறேன்" எனக் கூறுகிறார்கள்.
தவறான சிந்தனைகள் உருவாகாதவர்கள் அங்கே எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கலாம். நபி (ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த இஷ்க் - பேரன்பு வைத்திருப்பவர்கள் விதிவிலக்கானவர்கள் ஆவர்.
நூல் : மனாஸிக் நவவி
ஜன்னத்துல் பகீவு :
==================================
ஜன்னத்துல் பகீவு சென்று கபுர்களை ஜியாரத் செய்வது அவசியமாகும். அங்கே உஸ்மான் ரலி, அப்பாஸ் ரலி, ஹசன் ரலி, இப்ராஹிம் ரலி, மற்றும் நபிகளாரின் துணைவியார், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் அடக்கம் செய்யப்பட்டு. இருக்கிறார்கள் எனவே ஜன்னத்துல் பகீவுவை ஜியாரத்து செய்வது அவசியமாகும்.
நபி (ஸல்) அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையில் உஹது மலைக்குச் சென்று, உஹது ஸஹாபாக்களை ஜியாரத் செய்து வந்தார்கள். அன்றைய தினத்தில்தான் உஹது யுத்தம் நடந்ததாக வரலாறு.
மதீனாவில் தங்கியிருக்கும் காலத்தில் மஸ்ஜித் குபாவிற்கு சென்று இரண்டு ரக்கஅத்துகள் தொழுது வர வேண்டும்.
மேலும் மதீனாவில் ஏழு கிணறுகள், சில தோட்டங்கள், ஸஹாபாக்களின் வீடுகளாக இருந்து பள்ளிவாசல்களாக மாறிய மஸ்ஜிதுகள், மற்றும் சில நினைவுத்தளங்கள் என முப்பதுக்கு மேற்பட்ட இடங்களை ஜியாரத் செய்வது முஸ்தஹப் என இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
வேட்டையாடுதல் :
==================================
ஹனஃபியாக்களிடத்தில் மக்காவில் வேட்டையாடியதற்கும் மதீனாவில் வேட்டையாடியதற்கும் சட்டம் வெவ்வேறு ஆகும்.
மக்கா ஹரம் எல்லையில் வேட்டையாடுவது, செடி கொடிகளை வெட்டுவது போன்ற செயல்களை எவரேனும் தெரிந்தோ தெரியாமலோ செய்து விட்டால் அதற்கான பரிகாரம் செய்வது அவர் மீது வாஜிப் - கடமையாகும்.
ஆனால் மதீனாவின் ஹரம் எல்லைக்குள் அவ்வாறு எவரேனும் குற்றம் செய்துவிட்டால் அது குற்றமாக கருதப்படுமே தவிர பரிகாரம் - நஷ்ட ஈடு ஆகியன செய்ய வேண்டிய வாஜிப் - அவசியம் இல்லை.
மிம்பர் படி :
==================================
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உடைய நாளில் ஒரு மிம்பர் படி மீது ஏறி நின்று உரை நிகழ்த்துவார்கள்.
பின்னர் உயர்தரமான மரத்தில் புதிய மிம்பர் படி தயார் செய்யப்பட்டு வந்ததும் பழைய மிம்பர் படி ஓரம் கட்டப்பட்டது.
இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் புதிய மிம்பர் படி மீது ஏறி உரை நிகழ்த்த தொடங்கியதும் பழைய மிம்பர் படி அழத்தொடங்கியது.
அங்கே கூடியிருந்த அனைத்து நபித்தோழர்களும் அதன் அழுகுரலை கேட்டார்கள். பேரீத்தம் மரத்தினால் செய்யப்பட்ட பழைய மிம்பர் படி தேம்பித் தேம்பி அழுதது.
நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி வந்து அதன் மீது கைகளை வைத்து தடவி கொடுத்த பிறகு அது அழுவதை நிறுத்திக் கொண்டது.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் அதனை பள்ளிவாசலுக்கு உள்புறத்திலேயே புதைத்து விடும்படி கூறினார்கள். அது அங்கேயே புதைக்கப்பட்டது.
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மனிதர்களே! நபி (ஸல்) அவர்கள் மீது ஒரு பேரீத்தம் கட்டை இவ்வளவு அன்பு வைத்திருக்கிறது என்றால், நீங்கள் இதைவிட அதிகமான அன்பு வைத்திருக்க கடமைப்பட்டவர்கள் இல்லையா? என்று கூறுவார்கள்.
நூல் : அஷ்ஷிஃபா
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 24
சொர்க்கத்திற்கு 'நான்'
போனால் போகலாம்
--------------------------------------------------
ஒரு பள்ளிவாசலில் பேசிக்கொண்டிருந்த இருவர் "சொர்க்கத்திற்கு நான் போவேன்" என்று ஒருவர் கூற மற்றவர் "இல்லை யில்லை, நான்தான் போவேன்'' என்று கூறினார்.
இவ்வாறு இருவரும் விவாதம் செய்து கொண்டிருக்கையில், அவ்வழியாக தண்ணீர் எடுத்துச் சென்ற ஒரு பெண்மணி இவர்கள் இருவரும் கேட்கும் வண்ணம் ''சொர்க்கத்திற்கு நான் போனால் போகலாம்" என்று சொல்லிக் கொண்டுச் சென்றார்.
அப்பெண்ணின் பேச்சைக் கேட்ட இருவரும் மிக்க வெட்கமும் வியப்பும் அடைந்து, அப்பெண்ணை பின்தொடர்ந்துச் சென்றனர். அப்பெண் தன் வீட்டிற்குள் சென்றுவிட்டார். வந்திருந்த இருவரும் உரக்க ஸலாம் சொன்னார்கள். "அம்மா ! நாங்கள் இருவரும் பல வருடங்களாக தனிமையில் தியானம் செய்தும் எங்களில் யார் சொர்க்கத்திற்குச் செல்வோமென்று தெரியாமல் இருக்கின்றோம். அப் படியிருக்க, "தாங்கள் போகலாம்" என்று கூறியது எப்படி ? '' என்று கேட்டனர்.
அப்போது அப்பெண் கூறினார்.
"சொர்க்கத்திற்கு நான் போனால் போகலாம்'' என்று நான் கூறிய வார்த்தையில், 'நான்' என்பதற்குப் பொருள் 'தான்' என்பதல்ல. அதாவது "நான் வேண்டுமானால் போகலாம்" என்று கூறவில்லை. மாறாக, "நான் போனால் " என்ற சொற் தொடருக்கு "நான் என்கிற அகங்காரம் ஒழிந்தால்" என்பதே பொருளாகும்."
'நான்' என்ற அகங்காரம் இல்லாத மனிதனே இல்லை. நான் என்ற அகங்காரத்தை அழித்தால் அல்லாஹ்வை அடையவும், அவன் அளிக்கும் இன்பங்களை பெறவும் முடியும்" என்று கூறினாள்.
நான், நான்தான் :
_________________________
உலகில் மனிதன் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது 'நான்' என்ற எண்ணத்தை விடுவதாகும்.
அகந்தை, செருக்கு என்ற சொற்கள் ஆணவத்தைக் குறிக்கும். ஆணவம் கொண்டவர்களை தலைக்கனம் பிடித்தவர்கள் என்றும் கூறுவார்கள். அதாவது "நான்' என்ற எண்ணம் அதிகமாக உள்ளவர்கள்" என்றும் கூறுவார்கள். ஆணவ எண்ணம் கொண்டவர்கள் தங்கள் ஆணவப் போக்கை அகற்றிக் கொள்ளவில்லை என்றால் பல இன்னல்களை அடைய நேரிடும். 'நான் தான்" என்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
'நான்’, 'எனது' என்பது அறியாமை...
'நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை.
தனக்கு எல்லாம் தெரியும் என்பதில் எந்த அகங்காரமும் இல்லை.
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதில்தான் அகங்காரம் இருக்கிறது.
எப்போது ஒருவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று சொல்கிறானோ அப்பொழுது அவன் தன்னைச் சார்ந்தவர்களை எல்லாம் முட்டாளாகவே பார்க்கின்றான்.
இவ்வாறு தன்னை உயர்த்திக்கொண்டு பிறறை தாழ்வாக நினைப்பது தான் அகங்காரம்.
'நான்’ என்பதன் பொருள் என்ன?
--------------------------------------------------------------------
ஒரு அரசன், சூஃபி ஒருவரிடம் ஞானம் அடைய விரும்பி சந்திக்கச் சென்று, அவர் குடிசை கதவை தட்டினார். ஞானி, "யாரது?" எனக் கேட்டார். அரசன் "நான் இந்த தேசத்து அரசன் வந்திருக்கிறேன்" என்றான். அதற்கு ஞானி, "நான் செத்த பிறகு வா" என்றார்.
இப்படியே அரசன் பல முறை வரும் போது அவர் அதே பதிலை கூறினார். ஒரு நாள் அரசன் புரிந்து கொண்டு கதவை தட்டினார். ஞானி "யார்?" என கேட்க, "தங்கள் சீடனாக வந்து இருக்கிறேன்" என கூறினான் மன்னன். அப்போதே ஞானி, "உள்ளே வா" என்றார்
நான் என்ற அகந்தை கர்வம் எப்போது ஒருவனிடத்தில் இல்லாமல் போகிறதோ அப்போதே அவன் ஞானி ஆகிறான்.
அல்லாஹ் படைத்த உயிர் என்றும் அழியாதது. ‘நான் அழியாமல் எப்போதும் இருக்க வேண்டும்’ என்ற ஆசை நம் மனதில் இருப்பதற்கு உண்மையில் 'நான் அழியாதவன்' என்று அறியாமல் இருப்பதுதான். மரணமடைவது வெறும் உடல் மட்டுமே. இறைவன் படைத்த உயிர் மரணத்துக்கு அப்பாற்பட்டது. இந்த உண்மையை மனிதனுக்கு உணர்த்தவே, ஒவ்வொருவரும் வாழும்போதே அல்லாஹ்வை அறிய முயற்சிக்க வேண்டும்.
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் உண்டு. ஆனால், ‘நான்’ என்ற சொல்லுக்கு உண்மையான பொருள், இன்னதுதான் என்று தெளிவாக தெரியவில்லை. இஸ்லாம் மார்க்கத்தைப் முறையாகப் படித்து, இறைவனை அறியும் வரை, இந்த அறியாமை மக்கள் மனதிலிருந்து விலகாது.
உலகிலுள்ள அனைத்தும் கண்டு, கேட்டு, தொட்டு, சுவைத்து, நுகர்ந்து அறியப்படும் பொருள்களாகும். உதாரணமாக, தரையில் கிடக்கும் ‘மாங்கொட்டை’ என்ற பொருள், நமது மனதில் ‘மாங்கொட்டை’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதுபோல் நமது மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களுக்குமான ஒரு பொருள் வெளியே இருக்கிறது.
ஆனால் ‘நான்’ என்ற எண்ணத்தையே ‘நான்’ என்ற சொல்லுக்கான பொருளாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.
‘நான்’ என்ற எண்ணத்தின் உண்மையான பொருள் அல்லாஹ். இதை அறியாமல், உடல், மனம், உடல்-மனம் சேர்ந்த கலவை என்று வெவ்வேறு பொருள்களை வெவ்வேறு சமயங்களில் ‘நான்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
இந்த அறியாமையால் ஏற்படும் விளைவுகளை இப்போது பார்க்கலாம்.
நான் வருகிறேன்’ என்று நமது உடம்பை ‘நான்’ என்ற பொருளில் சில சமயம் குறிப்பிடுகிறோம்.
சில சமயம் ‘என் உடம்பு சரியில்லை’ என உடம்பை நமது உடமையாகக் குறிப்பிடுகிறோம். அதாவது 'நான்' ஆக குறிப்பிடுகிறோம்.
சில சமயம் ‘என்னுடைய மனது சரியில்லை’ என்று கூறும்போது, ‘நான் வேறு, என் மனது வேறு’ என்று முடிவு செய்து கொண்டு, ‘நான்’ என்பது மனதைக் குறிப்பதாகவே நினைத்துச் சொல்கிறோம்.
இதனால் மனதின் துன்பங்களை நமது துன்பம் என்று கருதி வருத்தப்படுகிறோம்.
இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு நண்பருடன் அவர் தோட்டத்துப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, வழியில் தென்பட்ட நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்து இருந்தது.
அது, அவருடைய நிலம் என்பதால், ‘பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறதே…’ என்றேன்.
உடனே அவர், ‘நாசமாப் போக, மூணு மாசத்துக்கு முன்னால தான் இந்த நிலத்த வித்தேன்; இப்ப இது விளைஞ்சா என்ன?, விளையாட்டி என்ன…?’ என்றார் கடுப்புடன்.
அந்த நிலத்தை அவர் நல்ல விலைக்குத் தான் விற்று இருக்கிறார்;
இருந்தாலும், நிலத்து மேல் இருந்த பற்று, கோபமாக வெளிப்பட்டு விட்டது.
ஏனென்றால் எப்பொழுதும்போல் இந்த நிலம் இன்றும் நன்கு விளைந்திருக்கிறது. ஆனால் அன்று இந்த நிலம் அவருடையதாக இருந்தது. இன்று இவருடையதாக இல்லை என்கிற காரணத்தினாலே இவர் சளிப்படைகிறார்.
சொத்து நம்முடையதாக இல்லாததுபோல், 'நான்', 'எனது' என்கிற எண்ணம் நம்மில் உருவாகாமல் இருந்தால், நிம்மதி நிரந்தரமாக இருக்கும்.
சிறுபிராயம் முதல் முதுமைவரை ஒவ்வொருவருக்கும் ‘நான்’ என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வருகிறது.
முதுமையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து ‘நீ கொஞ்சம் கூட மாறவில்லை, அப்படியே இருக்கிறாய்’ என்று சொன்னதும் அவர் சந்தோஷம் அடைகிறார். அவர், 'நான்' என்ற சொல்லுக்கு உடலைப் பொருளாகக் கொண்டு அது மாறாமல் இளமையுடன் இருப்பதாக விளங்கிக் கொண்டதே காரணம்.
அகங்காரம் இல்லாத ஒரு வயது குழந்தை எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கிறது. மேலும் எப்பொழுதெல்லாம் தன்னை மறந்து நாம் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் இன்பமாயிருக்கிறோம்.
வடமொழியில் ‘அஹம்' என்றால் ‘நான்' என்று பொருள்படும். அவ்வாரே ‘மம' என்றால் ‘எனது' என்றாகும். தன்னை வேறு ஒருவர் போல் பாவித்தல் அகங்காரம். தனக்கு இல்லாத ஒன்றை தனக்குரியதைப்போல் பாவித்தல் மமகாரம். ஆங்கிலத்தில் முதற்கு ‘vanity’ என்றும் பின்னர்க்கு ‘envy’ என்றும் கூறுவர்.
அதாவது, தானே வலியவன், சிறந்தவன் என்ற செருக்கும் பிறர் தன்னைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமும் ஏற்படுவதை குறிக்கும்.
என்னால் மட்டும் தான் இதை செய்ய முடியும் என்று எண்ணினால் 'தன்முனைப்பு' வந்துவிட்டது என்று பொருள். தன்முனைப்பு என்பதை ஆங்கிலத்தில் Ego என்று கூறுவார்கள். அதனை தலைக்கனம் என்றும் கூறலாம்.
ஆன்மீக வாழ்வில் "நான்" என்ற எண்ணமே இறைவனை காண்பதற்கு எப்பொழுதும் தடையாக இருக்கிறது. இந்த எண்ணத் திரையை நீக்க வேண்டுமானால் அண்டத்தைப் பற்றியும், நம்மைப் பற்றியும் ஆய்ந்தறியும்போது இறைவனையும் நம்மையும் உணர முடியும்.
இதனால் நான் என்ற அகங்காரத்தை நம்மில் இருந்து அகற்ற முடியும்.
பொதுவாக "நான் அகந்தையை விட்டுவிட்டேன்" என்றும், "என்னிடம் அகந்தை சிறிதளவும் இல்லை” என்று சொன்னாலும் அதிலும் அகந்தை வெளிப்படவே செய்கிறது.
ஒரு முறை, இரண்டு வேடர்கள் சில ஆமைகளை பிடிப்பதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதிகமாகப் பேசும் ஒரு ஆமையின் காதில் இது விழுந்தது. இந்த சதித் திட்டத்தை எப்படியாவது முறியடிப்பதற்காக, இந்த ஆமை இரண்டு கொக்குகளின் உதவியை நாடியது. அந்த இரண்டு கொக்குகளும், ஒரு நீளமான குச்சியின் இரண்டு ஓரங்களை தங்களின் அலகில் பிடித்துக் கொண்டு பறப்பதுதான் திட்டம்.
கொக்குகள் பறக்கும் போது, இந்த ஆமை தன் வாயால் குச்சியை கவ்விப் பிடித்துக் கொண்டு வெகுதூரம் சென்று விடலாம் என்று நினைத்தது.
இந்தத் திட்டத்திற்கு கொக்குகள் ஒப்புக் கொண்டு, ஆமையிடம் குச்சியை கெட்டியாக பிடிக்குமாறு கூறின. ஆமையும் அவ்வாறே செய்தது. இவ்வாறு பறந்து கொண்டிருக்கும் பறவைகளைக் கண்ட மனிதர்கள் இந்த அதிசயத்தைப் பார்த்து வியப்படைந்தனர்.
அவர்கள், “சாமர்த்தியமான பறவைகள்! ஆமையை தூக்கிச் செல்ல பிரமாதமான வழி” என்று சொல்லி வியப்படைந்தனர்.
தன்னைப் பற்றியே பெருமையாக நினைத்த ஆமை “இது என் திட்டம் தான்” என்று கூற, மேலிருந்து கீழே விழுந்தது.
ஆமையிடம் 'நான்' என்ற அகம்பாவம் இருந்ததால் அது கீழே விழுந்து அழிந்தது.
தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ‘தான்’ என்கிற மனம் கொண்டவன் தன்னுடைய அழிவைத் தானே தேடிக் கொள்கிறான்.
மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் போது, வன்மத்தையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது.
ஒரு நாட்டின் அரசன் "நான் தான் பெரியவன்" என்ற அகங்காரத்தோடு இருப்பவன். ஒரு நாள் அந்த அரசன் வேட்டைக்கு காட்டுச் சென்றான். அப்போது அவன் தியானம் செய்து கொண்டிருந்த ஒரு துறவியைப் பார்த்தான். துறவி கண்ணை மூடி தியானம் செய்யும் போது அவரிடம் சென்று "நான் பல நாடுகளை வென்று என் நாட்டோடு இணைத்திருக்கிறேன். நான் வென்று வந்த செல்வத்தால் என் கஜானா நிரம்பி வழிகிறது. மேலும் அந்தபுரம் முழுவதும் நான் கவர்ந்து வந்த அழகிகள் இருக்கின்றனர். இருப்பினும் நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு எப்போது சந்தோஷம் கிடைக்கும்?" என்று கேட்டான்.
தியானம் செய்து கொண்டிருந்த துறவி, தியானம் கலைந்ததால் சற்று கோபமாக "நான் செத்தால் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார். அதைக் கேட்ட அரசன் "நான் எவ்வளவு பெரிய அரசன். என்னையே அவமானப்படுத்துகிறாயா?" என்று சொல்லி, துறவியை கொல்ல, தன் இடுப்பில் இருந்த கத்தியை உருவினான்.
அப்போது அந்த துறவி "அட மூடனே, நான் என்றால் என்னை சொல்லவில்லை, "நான்" என்ற அகங்காரம் செத்தால் தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்" என்று சொல்லி விளக்கினார்.
இக்கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால், "தேங்காயின் கடுமையான ஓடு உடைந்தால் எப்படி சுவையான இளநீர் கிடைக்கிறதோ, அதேப் போல் நம்மிடம் இருக்கும் அகங்காரம் எனப்படும் ஈகோ உடைந்தால் சந்தோஷம் வெளிப்படும்" என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளுவன் கூறுகிறான் :
--------------------------
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.
நான் என்ற ஆணவத்தால் வரும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.
திருக்குறள் 431:
தாயுமானவர் கூறுகிறார் :
-----------------------
நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந் தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ.
எனக்குள் குடி கொண்ட 'நான்' என்ற அகங்காரம், ஆணவம் போன்ற துர் குணங்கள் நான் அறியாமல் என்னை விட்டு அகல வேண்டும். அவ்வாறு நீங்கியவுடன் எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகங்களுக்கும் தனது அருளை நீக்கமற செலுத்தி வரும் பரம் பொருளான அந்த இறைவனை காணும் நாள் எந்நாளோ?
தாயுமானவர் பாடல்கள் 636:7
அருணகிரிநாதர் என்ற துறவி தன் திருப்புகழ்த் தொடரில் கூறுகிறார்.
‘எனது யானும் வேறு ஆசி எவரும் யாதும் யானாமும் இதய பாவனாதீகம் அருள் வாயே!
‘இறைவா! நான், எனது என்ற ஆணவப் போக்கு அடியோடு நீங்கி அனைத்தையும், அனைவரையும் ஒன்றாகக் கருதும் உயர்ந்த மனோ பாவத்தை எனக்கு அருள்க’ என்று இறைவனிடம் வேண்டுகிறார்.
( நட்பு வட்டத்தினின்றும், உறவு வளையத்தினின்றும், ஏன் இந்த உலகத்தினின்றே ஒருவரை தனியாகப் பிரிக்க வல்லது அகந்தை என்ற தீயகுணம்.
ஆணவம், திமிர், செருக்கு, அகந்தை என்றெல்லாம் பேசப்படும் இந்த தீய குணம் மனிதர்களாக வாழ நினைக்கும் ஒவ்வொருவரும் தனக்குள் சற்றும் வளர விடாமல் ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டிய ஒன்று.)
ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(ஒருவன் லட்சாதிபதியாக இருக்கிறான்.
அவனால் பற்றற்ற வாழ்வு வாழ முடியுமா? என இமாம் அஹ்மத் பின் ஹம்பலிடம் கேட்கப்பட்டபோது ”ஆம் முடியும் என்ன அத்துனை கோடிகளும் அழியும் போது அவன் துக்கப்படாவிட்டால், அல்லது அத்துனை கோடியும் பல மடங்காக அதிகரிக்கும் போது, நான் என்ற ஆணவம் கொள்ளாமல் இருந்தால் அவன் பற்றற்ற வாழ்வு வாழும் ஒரு துறவியே” என பதிலளித்தார்கள்.)
(பற்றற்ற வாழ்வு என்பது மறுமையில் பயனளிகாதவைகளை உலகில் துறந்து வாழ்வதாகும்.)
'நான்' என்ற அகங்காரம்
தந்திரமானது
--------------------------------------
ஒருவனுக்கு மார்க்கத்தின் மீது பற்றுதலும் பக்தியும் ஏற்பட்டதாலேயே நான் என்ற அகங்காரம் போய்விட்டது என்று பொருள் அல்ல. காரணம் நான் என்ற அகங்காரம் மிகவும் தந்திரமானது. வஞ்சனையானது. காத்திருந்து காலம் பார்த்து நுழையும் கலைகள் அறிந்தது. "அகங்காரம் அழிதல்' அவ்வளவு எளிய விஷயமல்ல.
அணுகுண்டுகள் வீசப்பட்ட பிரதேசங்களில்கூட 'கரப்பான் பூச்சிகள் மட்டும் அழியவில்லை' என்கிறார்கள். அது எதையோ ஆதாரமாய்ப் பிடித்துக்கொண்டு உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கிறது.
அதேபோன்று அகங்காரமும் எது கிடைக்கிறதோ அதையே ஆதாரமாகக் கொண்டு உயிர் பிழைத்துக் கொள்கிறது.
சிலர் எது கிடைக்கிறதோ அதைக்கொண்டு தம் வயிற்றை நிரப்பிக்கொண்டு விடுவார்கள். அதுபோல செல்வம் கிடைத்தால் "நான் எவ்வளவு செல்வம் சேர்த்திருக்கிறேன் பார்'' என்கிறது அகங்காரம்.
ஞானத்தின் பாதையில் போனாலும் "நான் எவ்வளவு ஞானம் குவித்திருக்கிறேன் பார்'' என்று கொக்கரிக்கிறது.
தியாகமோ, தியானமோ செய்தாலும்கூட "நான் எவ்வளவு பெரிய தியாகி பார், நான் தியானிப்பதுபோல தியானிக்க யாரால் முடியும்?" என்று கேள்வி எழுப்பி எப்போதும் அகங்காரம் எப்படி எப்படியோ புதுப்புது வடிவங்களில் பிழைத்து வருகிறது.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் (ஆசிரமம்) காங்காவில் அதிகாலை நேரத்தில் ஜீலானி (ரஹ்) முன்பு
நின்றபடியே ஒரு முரீத் - மாணவர் கேட்டார். ‘யா ஷைஹ்! ‘மனிதன் மகானாக உயர்வது எப்படி ?’ என்று இன்று பாடம் நடத்துவதாக கூறியிருந்தீர்களே! இன்றைய பாடத்தைக் கேட்க எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. எனவே விடியற் காலையிலேயே விழித்து, என் கடமைகளை எல்லாம் முடித்து விட்டேன். மற்ற மூன்று சக மாணவர்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த காங்காவில் நான்கு சீடர்களில் நன்கு படிப்பவர் என்று அவர் பெயர் எடுத்திருந்தார். அதனால் ஷைஹுவின் அன்பையும் அவர் பெற்றிருந்தார். இதன் காரணமாக ஆணவமும் அடுத்தவர்களை ஒரு பொருட்டாக மதிக்காத போக்கும் அவரிடம் அதிகரித்து வந்தன.
‘காலை ஆறு மணிக்குத்தானே அனைவரையும் பாடம் கேட்கவரச் சொல்லி இருக்கிறேன். நீயும் சிறிது நேரம் கூடுதலாக தூங்கி இருக்கலாமே! என்றார் ஜீலானி (ரஹ்) அவர்கள்.
மாணவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘உதயத்திலேயே உறக்கம் கலைந்து அன்றாட கடமைகளைத் துவக்குவது நல்லது தானே! என்றார் மாணவர்.
‘நான் அதைக் குறிப்பிடவில்லை. நீயும் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களைப் பற்றி அதிகாலையிலேயே குறை கூற மாட்டாய் அல்லவா!’ ஷைஹுவின் பதில் அவரைக் குறுக வைத்தது. ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு தேவையான ஒன்றுதான். ஆனால் அதுவே அடுத்தவர்களை மதிக்காத போக்காக, நான் என்ற ஆணவமாக மாறிவிட அனுமதித்துவிடக் கூடாது. 'நான்', 'எனது' என்னும் தீய குணத்தை ஆரம்பத்திலேயே இனம் கண்டு அதை வேரும், வேரடி மண்ணுமாகக் களைந்தால்தான் மனிதன் மகானாக உயர முடியும்.
நான் என்ற அகங்காரத்தை முற்றிலுமாக இழக்காதவரை முழுமையாக இறைவனை அடைய வாய்ப்பில்லை.
நான் என்ற எண்ணம் நம்மில் எப்படி இருக்கிறது என்று உணர்வது கஷ்டம். எங்கு பணிவு, துணிவு, கண்ணீர், அடக்கம், தொண்டுள்ளம், இரக்கம் இவை எல்லாம் குடியிருக்கின்றனவோ, எங்கு கோபம், ஆத்திரம், பகை இவை இல்லையோ அங்கு நான் என்ற எண்ணம் இருப்பதில்லை என்று ஓரளவு நம்பலாம்.
உங்களில் உள்ள 'நான்'னை அழித்து நீங்கள் வாழ முற்படுங்கள்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 23
சூஃபிகளின் தொழுகை
====================================
இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் இன்பங்களிலேயே மிகப்பெரியது இறைவன் நம்மிடத்தில் உரையாடுவது தான்.
எனவே இறைவனோடு உரையாட வேண்டுமானால், அதிகாலையில் எழுந்து அவனை வணங்கி வழிப்பட வேண்டும். அச்சமயம் அல்லாஹ்வை வணங்கும்போது மிகப்பெரும் சந்தோஷம் உண்டாகும்.
புகழுக்காகத் தொழாதே!
====================================
மனிதன், தான் விரும்புகிற காரியத்தை எளிதாகச் செய்து விடுகிறான். தான் விரும்பாத காரியத்தை பெரும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
கடமையான ஹஜ்ஜை முடித்த பின் இரண்டாம் ஹஜ் செய்ய மனிதன் ஆசைப்படுகிறான். ஆனால், அதற்கான தொகையை தர்மம் செய்ய அவனது மனம் விரும்புவதில்லை.
ஏனெனில் இரண்டாவது ஹஜ் செய்தால், அவனுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். தர்மம் செய்தால் அது யாருக்கும் தெரியாமல் போய்விடும்.
ஒருவன் ஆசிரியராக இருக்க ஆசைப்படுகிறான். அதனால் அவன் அறிவாளி என்றும், நல்ல மனிதன் என்றும் பெயர் பெறுவதை விரும்புகிறான்.
அதே மனிதன் நள்ளிரவில் எழுந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்குச் சிரமப்படுகிறான். ஏனெனில், தொழுகை என்பது இறைவனுக்கும் இவனுக்கும் மட்டுமே தொடர்புள்ள ஒன்று.
புகழும் பெருமையும் தரும் காரியங்களைச் சிரமம் இருந்தாலும் செய்ய முன்வருகிறான். இவ்விரண்டும் இல்லாத காரியங்கள், சிரமமின்றி எளிமையாக இருந்தாலும் அதை செய்ய முன் வருவதில்லை.
தொழாத உடல், காய்ந்த மரம் போன்றது:
====================================
கேளிக்கை மற்றும் பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துபவன் இரவு வணக்கத்தில் கவனம் செலுத்த மாட்டான்.
"பகலில், இறைவன் அல்லாத வேறு பக்கம் ஒருவனின் கவனம் சென்றதால், இரவில் அவன் கவனம் இறைவன் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது" என்று வானவர்களால் மறுமை நாளில் அவனிடம் சொல்லப்படும்.
இரவு நேரத்தில் இரண்டு ரகஅத் தொழுவது, உஹது மலையை விட பாரமாகத் தெரியும்.
காய்ந்த மரம் அடுப்பெரிப்பதற்கு மட்டுமே பயன்படுவது போல், வணக்க வழிபாடு செய்யாத உடல் பாகங்களை, வெட்டி எறிவதைத் தவிர வேறு எதற்கும் உதவாது.
நீங்களெல்லாம் தொழுகையாளிகளா?
====================================
தீய நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளாதவர்களின் தொழுகை, தொழுகையே அல்ல!
அல்லாஹ் கூறுகிறான்; நிச்சயமாகத் தொழுகை அருவருக்கத்தக்க காரியங்களையும், தீய காரியங்களையும் தடுத்து நிறுத்தி விடும். 29 : 45
உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவித் தேடுகிறோம் 1 : 4 என்று தொழுகையில் அல்லாஹ்வோடு பேசியிருந்து விட்டு, இறுதியில் நபி (ஸல்) அவர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு - நபியே உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக" என்று ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் சொல்லிவிட்டு தொழுகையில் இருந்து வெளி வருகிறோம்.
இப்படிப்பட்ட பெரும் பாக்கியத்தைப் பெற்ற நாம் பாவச் செயல்களில் ஈடுபடலாமா?
இமாம் ஷாதுலீ (ரஹ்) அவர்களைச் சந்திக்க அலெக்சாந்தர்யாவைச் சேர்ந்த ஆலிம்களும் காஜி - நீதிபதிகளும் வந்திருந்தார்கள். அவர்களில் சிலர் இமாம் ஷாதுலீ (ரஹ்) அவர்களைச் சோதிக்க விரும்பினார்கள். அதை இமாம் ஷாதுலீ ( ரஹ்) அவர்கள் விளங்கிக் கொண்டு அவர்களிடம், "நீங்கள் தொழுது வருகிறீர்களா? " என கேட்டார்கள். அவர்கள் பதறிப் போய், "எங்களில் எவரேனும் தொழுகையை விடுவாரா?" என எதிர் கேள்விக் கேட்டார்கள்.
அப்பொழுது இமாம் ஷாதுலீ ( ரஹ்) அவர்கள் " நிச்சயமாக மனிதன் பொறுமை இழந்தவனாக படைக்கப்பட்டிருக்கிறான்; ஏழ்மை அவனை வந்தடைந்தால் அவன் கதி கலங்கி போய் விடுகிறான். செல்வம் அவனை வந்தடைந்தால் பதுக்குகிறான். ஆனால், தொழுகையாளிகளைத் தவிர. 70 : 19-21 என்ற இந்த வசனத்தை ஓதி காட்டி , "உங்களை கெட்டது அணுகினால் கலங்க மாட்டீர்களா? செல்வம் உங்களிடம் மிகைத்து காணப்பட்டால் கஞ்சத்தனம் செய்ய மாட்டீர்களா? என்று வினவியதும் அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்கள்.
அப்பொழுது இமாம் ஷாதுலீ (ரஹ்) அவர்கள், "நீங்கள் இவ்வசனம் கூறுவது போல் இறைவனை தொழவே இல்லை; அதனால்தான் என்னை நீங்கள் சோதிக்க வந்திருக்கிறீர்கள், இவ்வசனம் கூறுவது போல் நீங்கள் இருந்திருந்தால், இந்த எண்ணமே உங்களிடம் ஏற்பட்டு இருக்காது" என்று கூறியதும் அவர்கள் நடுநடுங்கிப் போனார்கள்.
கோழி கொத்துவதுப் போல்.....
====================================
மனிதா! உன் பணியாளன் உனக்கு பணிந்து நடக்கும் அளவிற்காகிலும் நீ உன் இறைவனுக்கு பணிந்து நடக்க வேண்டாமா? உன் பணியாளன் உனக்காக பணியாற்றும் போதெல்லாம் நீ அவனை நேசிக்கிறாய்.
அவ்வாறுதான் நீ இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும்போது அவன் உன்னை நேசிக்கிறான். ஆனால் நீ இறைவழிபாட்டில் நீண்ட நெடு நேரம் ஈடுபடுவதில்லை. நீ தொழச் சென்றால் கோழி கொத்துவதுப் போல் அவசர அவசரமாகக் கொத்திவிட்டு வந்து விடுகிறாய்.
அவசர அவசரமாகத் தொழுகையை முடித்துக் கொண்டு நீ எங்கேச் செல்கிறாய்? உலக சுகபோகங்களை அனுபவிக்கவா? அதைப் பற்றியும் அல்லவா மறுமை நாளில் நீ விசாரிக்கப்படுவாய்!
தொழுதும் பயனில்லையா?
====================================
ஓரிறைக் கோட்பாட்டில் உறுதியாக இருந்து கொண்டும், உணவில் கட்டுப்பாடும், காம உணர்ச்சியில் கட்டுப்பாடும், தொழுகையில் அதிகம் ஈடுபடுவதுமே ஒருவருக்கு ஞானக்கண் திறக்க காரணமாக இருக்கும்.
உள்ளத்தை தொழுகையைக் கொண்டும் சரி செய்ய வேண்டும். தொழும்போது எந்த வகையான எண்ணங்களும் உள்ளத்தில் எழாமல் இருந்தால், நீ வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்! அவ்வாறு இல்லாமல் நீ தொழும்போது எண்ணங்கள் உண்டானாலோ, நீ பள்ளிவாசலுக்கு எழுந்துச் செல்ல உனது கால்கள் தயங்கினாலோ அந்த நிலையை எண்ணி வருத்தப்பட வேண்டும்.
அத்தர் விற்பனை செய்யப்படும் கடையில் அமர்ந்திருந்தால், அதன் வாசனையை நுகராமல் இருக்க முடியாது.
அதுபோல தொழுகை என்பது இறைவனிடம் அமர்ந்திருப்பதற்குச் சமமாகும். நீ அவனிடம் அமர்ந்து இருந்து விட்டு, அவனிடமிருந்து எந்த ஒன்றையும் நீ பெற்றுக் கொள்ளவில்லையானால் அது உன் உள்ளத்தில் இருக்கும் ஏதோ ஒரு தவறான எண்ணமோ, ஒழுக்கக் கேடோதான் காரணமாக இருக்கும்.
பள்ளிவாசலில் நீ தொழுது முடித்ததும் உடனே வெளியேறி விடாதே! அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்து, இறைவனிடம், தன் தொழுகையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அவற்றை மன்னிக்கும்படி பிரார்திக்க வேண்டும். இவ்வாறு கேட்பதின் காரணமாக அல்லாஹ் நம் தொழுகையை ஏற்றுக் கொள்வான். நம் தொழுகை ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய பலன் கிடைக்கும்.
கலாத் தொழுகை:
====================================
இமாம் ஜமாஅத்தோடு தொழுதால் இருபத்தேழு மடங்கு அதிகமான நன்மைகள் வழங்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
சில இறைநேசர்கள் எப்பொழுதாகிலும் ஒரு தொழுகை கலாவாக ஆகிவிட்டால் அதனை இருபத்தேழு முறை திரும்பத் திரும்ப தொழுது இருக்கிறார்கள். இப்படி தொழ வேண்டும் என்பது சட்டமில்லை என்று அறிந்திருந்தும் அவர்கள் தமக்கு ஏற்பட்ட சோம்பலுக்கு தண்டனையாக இவ்வாறு செய்திருக்கிறார்கள்.
இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் நண்பரான இமாம் முஜ்னீ (ரஹ் ) அவர்கள் இமாம் ஜமாஅத்தை தவற விட்டால் இருபத்தைந்து முறை திரும்பத் திரும்ப தொழுபவர்களாக இருந்திருக்கிறார்கள்.
நொடி பொழுதில், இருந்த இடத்திலிருந்து இறைவனைத் தொடர்பு கொள்ள...
=====================================
الصلاة معراج المؤمن
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தொழுகை முஃமீன்களின் மிஅராஜ் ஆகும்.
அஸ்ஸலாத் - தொழுகை எனும் சொல் திருக்குர்ஆனில் 85 முறை இடம் பெற்றுள்ளது.
17 × 5 = 85
ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகை. அதில் 17 ரக்அத்துகள் உண்டு. அதைத்தான் மேற்கண்ட கணக்கில் 5 ம், 17 ம் சொல்லிக் காட்டுகிறது.
இவ்வளவு துல்லியமாக ஒரு நேர்கோட்டில் இதை அமைத்தது அல்லாஹ்வைத் தவிர வேறு யாரால் முடியும்?
நபி (ஸல்) அவர்களுக்கு சித்ரத்துல் முன்தஹா அருகே அல்லாஹ் தொழுகையை வழங்கினான்.
உள ஓர்மையோடு மனிதன் தொழும்போது, தன் இருப்பிடங்களை விட்டு, படைப்பினங்களை விட்டு இறைவனோடு ஆத்மார்த்தமாக நெருங்குகிறான்.
மனிதன் தொடர்ந்து உள ஓர்மையோடு தொழுதால் சித்ரத்துல் முன்தஹாவில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சந்தித்தது போல் நாமும் இருந்த இடத்திலிருந்து அல்லாஹ்வை சந்திக்க முடியும் என்பதைத்தான் அந்தச் சொல் கூறுகிறது.
தொழுகை, இறைவனும் மனிதனும் சந்திப்பதற்கான ஓர் இடம். எனவே ரசித்து, சந்தோசமாக, திருப்தியாக, உள ஓர்மையோடு தொழ வேண்டும். அலட்சியமாக, சோம்பலாக தொழுகைக்கு நெருங்காதீர்.
நபி (ஸல்) அவர்கள் மிஅராஜ் பயணத்திற்குச் சென்ற விபரத்தை திருக்குர்ஆனில் அல்லாஹ் 17 வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.
பதினேழாவது அத்தியாயத்தில் 17 ரக்அத்துகள் கடமையானதை அல்லாஹ் அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே சொல்லிக் காட்டுகிறான்.
நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாகவே நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தொழுகை அல்லாஹ்வினால் நேரடியாக வழங்கப்பட்டது.
இறைவனுடைய அனைத்துச் சட்டங்களும் மனிதன் வாழும் இடத்தை நோக்கி வந்தது. ஆனால் தொழுகை அதை வழங்கும் இறைவனை நோக்கிச் சென்று வாங்கி வரப்பட்டது.
ஒரு அடியான் தொழும் போது தன் இறைவன் தன் எதிரே நிற்பது போன்று கருதி
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
நான் உன்னையே வணங்குகிறேன் நான் உன்னிடமே உதவியும் கேட்கிறேன் என்று கூறுகிறான்.
قال نبينا عليه الصلاة والسلام: «إن أحدكم إذا قام في صلاته فإنه يناجي ربَّه، أو إن ربه بينه وبين القبلة»،
உங்களில் ஒருவர் தொழுகைக்கு நின்றால், நிச்சயமாக அவர் தன் இறைவனோடு தொடர்பில் இருக்கிறார். அல்லது அவருக்கு எதிரே கிப்லா புரத்தில் இறைவன் இருக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது போல் ஒவ்வொரு அடியானும் தொழ வேண்டும்.
தொழுகை முஃமீன்களின் மிஅராஜ் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதின் நோக்கம் என்னவென்றால் தாம் மிஅராஜ் பயணத்தில் அனுபவித்த இன்பங்கள் யாவற்றையும் எனது சமுதாயத்தினரும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.
மிஅராஜ் உடைய நிலையை அனைவரும் அனுபவிக்க வேண்டுமானால் தொழுகையின் மூலம் அதை பெறலாம் என வழிகாட்டி இருக்கிறார்கள்.
தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்."
தொழுகைக்காக தக்பீரைக் கட்டிக் கொண்டு ஏழு வசனங்கள் கொண்ட ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதத் தொடங்கியதும் இறைவனோடு தொடர்பு கிடைத்து விடும்.
தொலைபேசியில் சில எண்களை அழுத்தியதும் ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மனிதனை தொடர்பு கொண்டு காணொளி வாயிலாகவே பேச முடிகிறது என்றால் தொழுகை நமக்கு இறைவனோடு தொடர்பை ஏற்படுத்தாதா?
தொழுகை இன்று சடங்காக மாறி வருகிறது. அதைச் சரியாகச் செய்தால் சங்கடங்கள் விலகி சந்தோசங்கள் பெருகும்.
இன்று சிலர் தொழுகையில் நின்றதும் அவர்களுக்கு பல சிந்தனைகள் ஏற்படுகிறது. மறந்தவைகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது.
அல்லாஹ்வை தொழுகையில் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வைத் தவிர அனைத்தையும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்.
கவ்லா என்னும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவர் என்னை அவரது தாய்க்கு ஒப்பிட்டுப் பேசி விட்டார் ; அதனால் நான் தலாக் ஆகி விட்டேன்; என் இளமை சென்று விட்டது; என் அழகு இல்லாமல் போய்விட்டது; என் உடலில் சக்தி குறைந்து விட்டது; குழந்தை பெற முடியாத வயோதிகத்தை அடைந்து விட்டேன்.
இந்நிலையில் அவர் தவறுதலாக என்னை தலாக் விட்டு விட்டார் அது எப்படி தலாக்காக ஆகும்? எனவே இந்த சட்டத்தை மாற்றுங்கள்" என கேட்டுக் கொண்டார்.
நபி (ஸல்) அவர்கள், "சட்டம் அனைவருக்கும் சமமானது; சட்டத்தை என்னால் மாற்ற முடியாது; நான் என்னச் செய்வேன்" என்று வருத்தமாகக் கூறினார்கள்.
ஆனால் கவ்லா அம்மையார் அவர்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கெஞ்சிக் கொண்டே இருந்தார். அழுது கொண்டே இருந்தார்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தர்மச் சங்கடமான நிலையைப் பார்த்து விளங்கிக் கொண்டு "அதுதான் முடியாது என்று சொல்லி விட்டார்களே....... பிறகு ஏன் இங்கே நின்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்..... உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்" என அதட்டினார்கள். அவர்களை இழுத்துச் சென்று வெளியில் விட்டார்கள்.
கவ்லா அம்மையார் அவர்கள் தம் இல்லத்திற்குச் சென்றார்கள்.
சிறிது நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தது. 28 வது ஜுஸுவின் முதல் நான்கு வசனங்கள் அருளப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்து, "கவ்லாவை அழைத்து வா!" என்று அனுப்பினார்கள்.
அன்னை கவ்லா அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி ( ஸல்) அவர்கள், "நீங்கள் இங்கிருந்து சென்றதும் என்னச் செய்தீர்?
கவ்லா : உளூ செய்து கொண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுது இறைவனிடம் என் நிலையை எடுத்துச் சொன்னேன்.
நபி (ஸல் ) அவர்கள், "அல்லாஹ் உங்கள் கோரிக்கையை ஏற்று உங்கள் கணவர் உங்களை தாய்க்கு ஒப்பிட்டுப் பேசியது செல்லாது அதாவது அது தலாக்காக ஆகாது என்று சொல்லிவிட்டான்; எனவே நீங்கள் உங்கள் கணவரோடு சேர்ந்து வாழுங்கள்" என சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
இவ்வளவு பெரிய அண்டத்தில், ஆகச்சிறிய பூமியில், அதில் மதீனா என்னும் சின்ன நிலப்பரப்பில், அதில் கவ்லா அம்மையாரின் சின்ன குடிசை வீட்டில் இருந்து அல்லாஹ்வை தொடர்பு கொண்டு தம் கோரிக்கையை முன் வைத்ததும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ்விற்கு சென்றடைந்து இருக்கிறது என்றால் அது தொழுகையின் மூலம் அல்லவா!
எனவே நாம் தொழுகையில் தக்பீரை கட்டி விட்டால் இறைவனோடு பேசுகிறோம். அப்படி பேசியதால்தான் அந்த அம்மையாருக்கு உடனே பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தி பரவி வந்த நேரத்தில் நபிகளாரின் நடைமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மிகவும் துன்பமாக இருந்தது.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் என் விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான் என்று சொல்லிவிட்டு தொழுது துஆச் செய்தார்கள். மறுகணமே அந்நூர் அத்தியாயத்தில் பத்து வசனங்கள் அருளப்பட்டு அவர்கள் பத்தினி என இறைவன் பறைச் சாற்றினான்.
எனவே தொழுகை மூலம் இறைவனை உடனே தொடர்பு கொள்ள முடியும் என்பதை மனதில் நிறுத்தித் தொழுங்கள்.
பதிவேற்ற நாள் :14/ 04/2026
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 22
சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபியாக்களின் சொற்கள்....
=========================≠===========
ஞானி ஹசன் முதல்முறையாக பக்தாத் வந்தார். அங்கே தங்குவதற்கு அறைகளைத் தேடினார். இவருக்கு அந்த ஊரில் யாரும் அறிமுகம் இல்லாததால் எவரும் அறை வழங்கவில்லை.
இந்நிலையில் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டின் உரிமையாளரிடம் விபரத்தை கூறி "இன்று ஒரு இரவு மட்டும் தங்கிக் கொள்ள அனுமதி தாருங்கள்" என கேட்டார். மேலும் நாளை வேறு அறைகளில் தங்கிக் கொள்வதற்கு தாங்கள் எனக்காக சிபாரிசு செய்ய வேண்டும் எனவும் வேண்டி நின்றார்.
அப்பொழுது அந்த வீட்டின் உரிமையாளர், "நான் ஒரு திருடன், நீங்கள் என் வீட்டில் வேண்டுமானால் இன்று தங்கிக் கொள்ளுங்கள், நான் சிபாரிசு செய்தால் யாரும் உங்களுக்கு வீடு தர மாட்டார்கள், நீங்கள் விரும்புகிறவரை இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை" என கூறினார்.
அந்த திருடன் சொல்லிவிட்டு, "நான் என் வேலையை பார்க்கச் செல்கிறேன் நீங்கள் தங்கி ஓய்வெடுங்கள்" என சொல்லிவிட்டு சென்று விட்டார்.
விடியற்காலையில் திருடன் வீட்டுக்கு வந்தான். ஞானி ஹசன் தஹஜ்ஜத் தொழுது கொண்டிருந்தார். திருடனைப் பார்த்ததும், "போன காரியம் நிறைவேறியதா?" என்று கேட்டார். "இன்று ஒன்றும் கிடைக்கவில்லை நாளை ஏதேனும் கிடைக்கலாம்" என சாதாரணமாக சொல்லிவிட்டு அவர் உறங்கச் சென்று விட்டார்.
இப்படி ஒரு மாத காலம் தொடர்ந்து அந்த திருடனுக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை. தினம் தினம் ஏமாற்றத்தோடு தான் திரும்பினார். ஆனால் ஒரு நாள் கூட அவர் அழுத்துக் கொள்ளவில்லை. வருத்தப்படவில்லை. கை சேதப்படவில்லை. வேதனைப்படவில்லை. நாளை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் அவர் நாட்களை கடத்தினார்.
பிந்நாளில் ஹஸன் ஞானம் பெற்ற பிறகு சொன்னார். "என் ஞானகுரு அந்த திருடன் தான். தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஒரு காரியத்தை செய்வதைப் பார்த்து நானும் கற்றுக் கொண்டேன். எனக்கும் ஞானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து நான் இறைவழிபாட்டில் ஈடுபட்டேன் ஞானம் பெற்று விட்டேன்" என்று சொன்னார்.
எனவே ஞானம் பெறுவதாக இருந்தாலும் எதை அடைய வேண்டுமானாலும் அதற்கான வழியை தொடர்ந்து கடைபிடித்து வரவேண்டும்.
கடப்பாரை பெயர்க்க முடியாத பாறையை மரத்தின் வேர்கள் இரண்டாகப் பிளந்து விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அது போல தான் நமது ஏதோ ஒரு சிறிய செயல் நம்மை ஞான வாசலை திறக்க வைத்து விடும்.
ஒரு வழிபாட்டில் ஊன்றிடுக
========================≠===========
பெரியதில் இருந்து சிறியதை கொண்டு வர மனிதனால் முடியும். பெரிய வேட்டியை சிறு துண்டாக்க அவனால் முடியும். ஆனால் சிறு துண்டை சேலையாக்க அவனால் முடியாது. ஆனால் இயற்கை சிறு விதையிலிருந்து பெரிய மரத்தைப் படைத்துக் காட்டிவிடும்.
ஜலாலுதீன் ரூமி தோட்டத்திற்குச் சென்றார். அங்கு மூன்று பள்ளங்கள் இருந்தன. என்ன இது? என்று மாணவர்களிடம் வினவினார். "முதலாவது இடத்தில் கிணறு தோண்டினோம். அந்த இடத்தில் தண்ணீர் வரவில்லை. உடனே இரண்டாவதாக வேறொரு இடத்தில் தோண்டினோம். அங்கும் தண்ணீர் வரவில்லை. இப்போது மூன்றாவதாக இந்த மூலையில் தோண்டுகிறோம்" என்றனர்.
"பூமியின் அடியில் எல்லா இடத்திலும் நீர் உண்டு. பல இடங்களில் தோண்டுவதைவிட ஒரே இடத்தில் நன்கு ஆழமாகத் தோண்டுங்கள் நீர் பீறிட்டுக் கொண்டு வரும்" என்றார்.
மனிதர்கள் இறைவனை அடைய ஏதாவது ஒரு வழியில் முயற்சிப்பார்கள். பின்னர் அதில் சலித்துப்போய் வேறொரு வழியில் முயற்சி செய்வார்கள். பிறகு அதனை விட்டுவிட்டு இன்னொரு முயற்சி மேற்கொள்வார்கள் இப்படி யோகம், தவம், வழிபாடு, யாத்திரை என்றெல்லாம் மாறி, மாறி முயற்சிப்பதைவிட ஒரே முயற்சியை உறுதியுடன் தொடர்ந்து மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
மூச்சு விட யாரும் மறப்பதில்லை. அதனால் மூச்சு விடுவது பற்றி யாரும் நினைப்பதே இல்லை. மூச்சு எப்படி இறுதிவரை உள்ளதோ மூச்சு விடுதல் எப்படி இயல்பான தொடர் நிகழ்வோ அதுபோல் தொடர்ந்து ஒரே நற்செயலை செய்து வந்தால் ஞானம் பிறக்கும்.
ஞானப்பசி மூள முயற்சிக்கிறேன்
========================≠===========
பசி என்ற ஒன்று எடுக்காவிட்டால் உங்கள் முன் எவ்வளவு உணவு வகைகளை அடுக்கி வைத்தும் பலன் இல்லை. பசியே இல்லாதவனால் அதிலிருந்து ஒரு பிடி கூட சாப்பிட முடியாது. நன்கு ருசித்து சாப்பிடுவதில் உணவின் தேவை இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது. உனக்குள் பசி இருப்பதே இங்கு முக்கியம்.
சிந்திக்கும் திறனற்ற மாணவனுக்கு எத்தனை பேராசிரியர்கள் கூடி அறிவு நூல்களிலிருந்து போதித்தாலும் பலனில்லை. மரமண்டை என்று பள்ளி ஆசிரியர்கள் திட்டுவதுபோல் புத்தியில் எதுவும் ஏறாது. சிந்தனைத் திறன் இருக்கும் மாணவனுக்கு போதிக்க ஆசிரியர்களே இல்லாவிட்டாலும் அந்த நூல்களை அவனே படித்துத் தேர்ந்து விடுவான்.
இதையெல்லாம் தாண்டியது ஞானப்பசி மனத்துள் ஆன்ம வேட்கை மூண்டு விட்டால் அவனே மலர்களைத் தேடி வண்டு பறப்பதுபோல் ஞானத்தைத் தேடிச் சென்று விடுவான். இல்லையேல் மகான்களும், ஞானிகளும் அவனைத் தேடி வந்து போதனை செய்யினும் அதனை ஏற்க மாட்டான்.
வயிற்றுப்பசி, உடற்பசி இவற்றையெல்லாம் தாண்டியது ஞானப் பசி ஞானம் பெறுவது இரண்டாம் பட்சம்தான். முதலில் அந்த ஞான வேட்கை மனத்துள் மூள வேண்டும். இந்த ஞானப்பசி உங்களிடம் மூளத்தான் நான் முயற்சிக்கிறேன்.
ஞானம் சுரக்கும் வழி அன்பு
========================≠===========
ஒருமுறை சூஃபி ஞானி கபீர் தன் மகனிடம், மாடுகளுக்குத் தீனி வைக்க புள் வெட்டிக் கொண்டு வருமாறு சொன்னார். போனவன் நெடு நேரமாகியும் திரும்பி வரவில்லை. பொறுமை இழந்த கபீர் மகனைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்.
புல்வெளி ஒன்றின் நடுவே அவரது மகன் நின்று கொண்டிருந்தார். அங்கே சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருக்க புற்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. அவற்றுடன் கபீரின் மகனும் அழகாக அசைந்தாடிக் கொண்டிருந்தார்.
கோபத்துடன் மகளை உலுக்கிய கபீர், "உனக்கு என்ன பைத்தியமா? என்ன செய்து கொண்டிருக்கிறாய் இங்கே" என்றார். "நான் இங்கே வந்தபோது இந்தப் புற்கள் எல்லாம் ஏகாந்தமாக காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. சட்டென்று ஒரு ஆனந்தம் என்னையும் தொற்றிக் கொண்டது. நானும் அவற்றுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்து விட்டேன். என்னை மறந்து நானும் புல்லோடு புல்லாக ஆகிவிட்டேன்.
ஆஹா! என்ன ஆனந்தம் அது?" என்றார் அவர்.
அதிர்ச்சி அடைந்த கபீர், "உன்னை புற்களை வெட்டி எடுத்து வரும்படியல்லவா சொன்னேன்" என்று தான் அவருக்கு இட்ட வேலையைப் பற்றி நினைவூட்டினார்.
"என்னது? புல்லை வெட்டுவதா? என்னால் அது ஒருபோதும். முடியாது. இவை எனக்கு அளவற்ற ஆனந்தம் அளித்தவை. இவற்றுடன் நெருங்கிய உறவு எனக்கு ஏற்பட்டு விட்டது. ஒரு தனி உலகில் இவற்றுடன் நான் இதுவரை இருந்தேன், ஒருபோதும் இவற்றை என்னால் கிள்ளக்கூட முடியாது" என்றார் அவர் பதைப்புடன்.
பிரமித்துப்போன கபீர் அப்போதே தனது மகனுக்கு கமால் என்று பெயர் சூட்டினார்.
கமால் என்றால் அற்புதம் என்று பொருள். அந்தப் பெயரே அவருக்கு சூஃபி வரலாற்றில் நிலைத்து விட்டது.
புல்லுக்கும் உயிர் உண்டு என்றுணர்ந்து அந்த ஜீவனையும் நேசித்த அன்பு உள்ளம் இது.
உலகில் முதலில் தோன்றியவை தாவரங்களே. பின்னர்தான் அனைத்து உயிர்களும் தோன்றின ஆண்டவன் படைப்பில் தாவரங்களே மூத்தவை. நாம் தான் கடைசியாகப் பிறந்த செல்ல கடைக்குட்டிகள்,
இறைவனுடன், ஆகாயத்துடன் நேரடியான தொடர்பு மனிதனுக்கும், தாவரங்களுக்கும் மட்டுமே உண்டு. இவை இரண்டும்தான் நேராக வானம் நோக்கி வளர்பவை. மற்றபடி புழு, பூச்சி முதல் யானை, திமிங்கிலம், ஒட்டகம், மலைப்பாம்பு எல்லாமே பக்கவாட்டில் நீண்டு வளர்பவைதான்.
எனினும் மனிதனுக்கும் தாவரங்களுக்கும் ஒரு மிகப் பெரிய வேறுபாடு உண்டு. புழு, பூச்சி முதல் திமிங்கலம், ஒட்டகம். மலைப்பாம்பு என அனைத்து உயிர்களும் பக்கவாட்டில் உணவு எடுத்து பக்கவாட்டில் செலுத்தும். மனிதன் மேற்புறமாக உணவெடுத்து கீழ்ப்புறமாக செலுத்துகிறான். தாவரங்கள் மட்டுமே கீழ்ப்புறமாக உணவை எடுத்து மேல் நோக்கி செலுத்தும், அதே சமயம் மேற்புறமாகவே வளரும்.
வேர்கள் பூமியுடனும், உச்சி ஆகாயம் நோக்கியும் செல்வதால் இயற்கையுடன் ஒன்றி வாழும் ஒரே ஜீவன் தாவரம் மட்டுமே.
எனவே நமக்கும் முன்னால் பிறந்த தாவரங்களை கபீர் நேசித்தது போல் நாமும் நேசிக்க வேண்டும். சொல்லுவார்கள் எல்லோரும் நேசியுங்கள் எல்லோரையும் நேசியுங்கள்.
இல்லற வாழ்விற்கும் சூஃபி வழிகாட்டுதல்
========================≠===========
சூஃபி ஞானி கபீரைப் தேடிக் கொண்டு பலரும் வருவார்கள். அவர்களது சந்தேகங்களையெல்லாம் அவரிடம் தெரிவிப்பார்கள். அவரும் பொறுமையுடன் எல்லாவற்றிற்கும் பதிலளிப்பார்.
ஒருநாள் அவரிடம் வந்தவர்கள் எல்லாம் போய் விட்டனர். ஒருவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். மாலைப் பொழுதும் ஆகிவிட்டது. அவர் இருந்த இடத்தை விட்டு அசைவதாக இல்லை.
"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார் கபீர். வந்தவர் தயங்கினார்.
அவரது முகத்தைப் பார்த்து கபீர் சொன்னார். "உங்கள் முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை என்று தெரிகிறது. நான் சொல்வது சரியா?"
வந்தவர் ஆச்சரியப்பட்டார். "என் மனைவியும், நானும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தவில்லை. என் பேச்சை அவள் மதிப்பதே இல்லை. நாள் முழுவதும் எங்களுக்குள் போராட்டம்தான். வாழ்க்கையே நரகமாக இருக்கிறது."
கபீர்தாசர் இதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை. தன் மனைவியை அழைத்து இருவருக்கும் பால் கொண்டு வரும்படி சொன்னார். அவர் மனைவி பால் கொண்டு வந்து வைத்ததும் இருவரும் குடிக்க ஆரம்பித்தனர். வந்தவர் முகம் அஷ்ட கோணலாக சுருங்கியது. காரணம் அந்தப் பாலில் இனிப்பே இல்லை. இனிப்பு போட மறந்துவிட்டார் அவர் மனைவி.
ஆனால் கபீர் முகம் கோணாமல் பாலை அமைதியாகக் குடித்துக் கொண்டிருந்தார். உள்ளிருந்து அவர் மனைவி “போதுமா? எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று கேட்டார்.
"போதும். ருசியாக இருக்கிறது" என்றார் கபீர். வந்தவர் கேட்டார். "என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே?"
கபீர் சொன்னார். குவளையைக் காட்டியபடி, "இதுதான் என் பதில். குறைகளைப் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போவதே இனிய இல்வாழ்க்கைக்கு வழி
எதையும் பெரிது படுத்தாமல், இதுதான் நடக்க வேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டும் என எல்லாவற்றையும் தன் இஷ்டத்துக்கு வளைக்காமல் அதன் இஷ்டப்படி விட்டுக் கொடுத்துப் போவதே சூஃபிகளின் மார்க்கமாக என்றுமே இருந்து வந்துள்ளது.
எனவே நமது இல்லற வாழ்வு எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்க சூஃபியாக்களின் இல்லற வாழ்வும் நமக்கு வழி காட்டுகிறது.
ஞானம் பெறுவதே முதன்மையானது*
========================≠===========
முல்லா நசிருதீன் ஒரு நாள் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு எதிரே பள்ளிக் குழந்தைகளை கூட்டமாக அழைத்துக் கொண்டு ஒரு ஆசிரியர் வந்து கொண்டிருந்தார்.
"பிள்ளைகளை அழைத்துக் கொண்டு எங்கே செல்கிறீர் கள்?" என்று அவரைப் பார்த்து முல்லா கேட்டார்.
"நாட்டில் மழை இல்லை. குழந்தைகள் களங்கமற்ற மனம் கொண்டவர்கள். இந்தக் குழந்தைகளின் தூய இதயங்களின் பிரார்த்தனைக்கு இறைவன் உடனே செவி சாய்ப்பான். ஆகவே அவர்களை அழைத்துச் சென்று மழை வேண்டி பிரார்த்தனை செய்யப் போகிறோம்."
இதைக் கேட்டு சிரித்தார் முல்லா, ஒரு சிறுவனை அழைத்து, "உலகத்தில் உனக்குப் பிடிக்காத இடம் எது?" என்று கேட்டார். "பள்ளிக்கூடம்” என்றான் அந்தச் சிறுவன். வேறொரு பையனிடம் "உலகத்தில் உனக்குப் பிடிக்காத மனிதன் யார்?" என்று கேட்டார்.
“என்னுடைய கணக்கு வாத்தியார்" என்றான் அவன்,
"பார்த்தீர்களா?" என்றார் நசிருதீன். "குழந்தைகள் இஷ்டப்பட்டது எல்லாமே நடக்கும் என்றால் உலகின் எல்லா பள்ளிக் கூடங்களும் தீப்பற்றி எரியும். அதிலுள்ள எல்லா ஆசிரியர்களும் செத்து விடுவார்கள்" என்றபடி தன் வழியே போனார்.
குழந்தைகள் அறியாமையில் இருப்பவர்கள். அதனாலேயே அனைவரது அன்புக்கும் பாத்திரமானவர்கள். ஆனால் அதற்காக அறியாமையை போற்றிக் கொண்டாட முடியாது. அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய பயணமே கல்வி என்பது. அதேபோல் வாழ்விலிருந்து ஞானத்தை நோக்கிய பயணமே உண்மையான உயிரோட்டமுள்ள கவ்வியாகும்.
நடுநிலை சூஃபியாக்களின் நிரந்தர நிலை
========================≠===========
புத்தரிடம் ஒருவன் கேட்டான். "உங்களுக்கு கடவுளிடமிருந்து என்ன கிடைத்தது?" என்று, புத்தர் சிரித்தார், "நான் எதையும் பெறவில்லை.
அனைத்தையும் இழந்தேன். அதனால் என்றும் இருத்தல் என்பதை உணர்ந்தேன்" என்றார்.
பெறுபவன். கொடுப்பவன் இரண்டும் அற்ற நிலை சூஃபி நிலை. சூஃபிகள் எதையும் வேண்டுவது இல்லை. சூஃபியிசத்தின் தத்துவம் இதுதான். "வாழ்வில் பாதிப்பேர் சொர்க்கத்தை அடைவதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மீதிப்பேர் நரகம் பற்றியே சதா சர்வகாலமும் எண்ணிக் கொண்டிருப்பதால் அச்சத்துடனேயே வாழ்க்கையை கழிக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி, அந்த அச்சம் இரண்டும் அற்றவர்கள்தான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இந்த சந்தோசமே வாழ்வின் தெய்வீக அம்சம் ஆகும்.
நாம் இதயத்தின் அடிமைகளா?
========================≠===========
அரசன் ஒருவன் ஞானியிடம், "என் மனம் அமைதியின்றி தவிக்கிறது" என்றான்.
"அப்படியா! உன் மனத்தை என்னிடம் கொடுத்துவிட்டு போ.. நாளை வந்து வாங்கிக் கொள். அதற்குள் சரி செய்து வைக்கிறேன்" என்றார் ஞானி.
"மனத்தை எப்படி எடுத்துத் தருவது? அது எனக்குள் அல்லவா இருக்கிறது?" என்றான் அவன்.
"அப்படியா! சரி. கண்களை மூடிக் கொண்டு உளக்குள்ளே எந்த இடத்தில் அந்த மனம் இருக்கிறது என்று கண்டுபிடி" என்றார் ஞானி.
நமது மனம் எங்குள்ளது என்பதை நாம் உணர முடியாத வரையில் மனம்தான் நமது அரசன். அதன் அடிமைகளாகத்தான் ஆயுள் முழுதும் நாம் செயல்பட்டுக் கொண்டிருப்போம். உள்மனம் எங்கே என்று நீ தேடத் துவங்கும்போதே உள்மனம் பதுங்க ஆரம்பித்து விடும். அதனை நீ தேடிக் கண்டுபிடித்த மறுகணமே அது மறைந்து போய்விடும்.
தன்னை உணர்ந்த ஞானிகள் எல்லோரும் தன்னை மறந்தவர்களாக இருப்பதாக வரலாறு கூறுகிறது. இயற்கையின் எதிர்மறையான விநோதம் இது. தனை இழப்பதன் மூலமே ஒருவன் தன்னை உணர முடியும்.
உணர்வுகளை எழுத முடியாது
========================≠===========
இந்து மன்னர் ஒருவர் தினமும் அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்களிடம் வருவார். வந்து காலில் விழுந்து வணங்குவார்.
"வாழ்வின் ரகசியத்தை எனக்குக் கூறுங்கள்" என்பார்.
இவர் வெறும் புன்னகையுடன் பேசாமலிருப்பார்.
ஒருமுறை அவர் நெடுநேரமாக வற்புறுத்தினார். விடாமல் துளைத்தெடுத்தார். அபா யாஜீத் கேட்டார் அவரிடம், "என்ன வேண்டும் உனக்கு?"
"வாழ்வின் ரகசியத்தை எனக்குத் தாங்கள் கூறவேண்டும் "
"ஒரு விஷயத்தை ரகசியம் என்று கூறிய பின்னர் அதை எப்படி மற்றவரிடம் சொல்ல முடியும்? பிறரிடம் கூறினால் அது எப்படி ரகசியம் ஆகும்?" என்றார் அபாயாஜீத்.
"நான் உங்களிடம் சத்தியம் செய்கிறேன். அதை யாரிடமும் கூற மாட்டேன்."
"நானும் அப்படித்தான். யாரிடமும் கூறமாட்டேன்" என்றார் அபா யஜீத்
அங்கே கூறுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதுதான் நிதரிசனமான உண்மை. உணர்வால் அறியக் கூடியதை, உணர்வால் ஒன்றக் கூடியதை வார்த்தைகளால் விவரிக்க வழியே கிடையாது. அப்படி வார்த்தைகளால் விளக்க முற்படும்போதே மூலத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்து விடுவோம்.
எல்லாம் அடங்கியதே முழுமை. அதில் ஒன்றை எடுத்து இதுதான் முழுமை என்று எப்படிக் கூறுவது?.
மௌனத்தை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும், ஓசை வந்ததுமே மவுனம் அகன்றுவிடும்.
பேதங்கள் போக பற்றற்றிறு :
========================≠===========
ஒரு அரசர் ஞானி சூஃபி காஜா முயீனுத்தின் சிஸ்தி (ரஹ்) அவர்களை சந்தித்தார். “ யா ஷைக்! எனக்காக தாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
"நல்லது'' என்ற ஞானி மண்டியிட்டுப் பிரார்த்தித்தார். "இறைவா! அனைவரும் மகிழ்வுடன் வாழ வேண்டும். எங்கும் அமைதி நிலவ வேண்டும். அனைவரும் சகல நன்மைகளும் பெற்று நிம்மதியாக இருக்கவேண்டும்."
அவரது வழிபாடு மன்னருக்கு ஏமாற்றத்தை அளித்தது.
பிரார்த்தனை முடிந்ததும் அவர் ஞானியிடம் கேட்டார்.
"யா ஷைக்! என்ன இது? எனக்காக பிரார்த்திக்கும்படி கேட்டேன். நீங்கள் உலகத்துக்காக பிரார்த்திக்கிறீர்கள். இதில் என் நாட்டின் பெயரோ, என் பெயரோ வரவில்லையே?"
ஞானி சிரித்தார். ''அனைவருக்குமாக வேண்டும்போது அதன் பலன் உனக்கு மட்டும் இல்லாமலா போகும்?''
"இருந்தாலும்...?" என்று இழுத்தார் மன்னர். ஞானி அவர்கள், வாளி நிறைய தண்ணீரை எடுத்தார்கள். அரசனிடம் கொடுத்து செடிகளுக்கு அதை ஊற்றும்படி சொன்னார்கள். ஊற்றிவிட்டு வந்தவரிடம் "எங்கே ஊற்றினீர்?'' என்று கேட்டார்.
"எல்லா செடிகளுக்கும் ஊற்றினேன்." "செடியின் எந்த பாகத்தில் ஊற்றினீர்?"
"வேர்ப் பகுதியில்தான்.''
"இது என்ன வேடிக்கை? இலைகள்தானே வாடிப் போய் காணப்படுகின்றன? நீங்கள் வேரில்போய் தண்ணீரை ஊற்றியிருக்கிறீரே?"
"வேரில் ஊற்றினால் எல்லா கிளைகளுக்கும், இலைகளுக்கும் அதுவே தானாகப் பரவாதா?"
"அதேதான்" என்றார் ஞானி. ஒட்டு மொத்த மனித குலத்துக்காகவும் வேண்டும் போது அதன் பலன் அனைவருக்கும் தானே வந்து சேரும்.''
நான், நீ என்ற பேதங்களை ஏற்படுத்துவதுதான் மனத்தின் அடிப்படை வேலையே. அந்த பேதங்கள் உள்ளவரை மனம் எல்லாவற்றையும் விரும்பும். எல்லோரையும் வெறுக்கும். மனதில் பேதங்கள் அற்றுப் போகும்போது தனிப்பட்ட எதன் மீதும் பற்று உண்டாவதில்லை. அனைத்தின் மீதுமான அன்பு மட்டுமே அதன் வெளிப்பாடாக இருக்கும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஞானத் தேடலின்போது ஒரு முறை துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் பாலைவனத்தில் நெடுந்தூரம் பயணம் செய்து களைப்புற்றார். கிராமம் ஒன்றை அவர் அணுகியபோது ஒரு வீட்டின் கூரை மீது ஓலைகளை அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்த ஒரு பெண் அவரைப் பார்த்துச் சிரித்தாள்.
குழம்பிப் போன துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள், "எதற்காக என்னைப் பார்த்து சிரித்தீர்கள்?" என்று கேட்டார்.
"நீர் இந்த கிராமத்தை நெருங்கியபோது உமது கம்பளியைக் கண்டு சூஃபி ஞானி என்று எண்ணினேன். பிறகு உமது முகத்தைக் கண்ட பின்பே நீர் குரு அல்ல சீடர்தான் என்றெண்ணினேன். அருகில் நெருங்கிப் பார்த்த பின்புதான் நீர் சீடர்கூட அல்ல, வெறுமனே ஞானம் தேடி அலைபவர் என்று நினைத்தேன்.
பிறகு உமது கண்கள் சொன்னது. நீர் ஞானத்தை தேடி அலைபவர்கூட இல்லை என்று. ஞானத்தை தேடுகிறேன் என்ற எண்ணத்திலேயே பெருமிதம் கொள்ளும் ஒரு சவடால் பேர்வழிதான் நீர் என்று எனக்கு அப்போது நன்றாகத் தெரிந்தது. அதனால்தான் சிரித்தேன்" என்றாள் அவள்.
தன் அங்கிக்கும், தனது ஞானத்துக்கும் தொடர்பே இல்லை என்று உணர்ந்த மறுகணம் துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் தமது அங்கியை தூக்கி எறிந்தார்கள். பிறகு இருபது வருடங்களாக அவர் எங்கிருந்தார் என்பதைக் கூட எவரும். அறியவில்லை.
பிறகு ஒருநாள் எகிப்தில் மீண்டும் காணப்பட்டார் அப்போது அவரது முகம் நிர்மலமாகக் காணப்பட்டது. அவர் கண்கள் அபாரமாக ஜொலித்தன. "இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டனர் பலரும்.
"ஒன்றும் செய்யவில்லை" என்றார் துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் எதைச் செய்தாலும் அங்கே நான் என்பது வந்து விடுகிறது. எதைச் செய்ய முடியும் அதன் பின்பு. அதை அழிக்கத்தான் எனது கடந்த காலம் எனக்கு பயன்பட்டது.
தூரத்தில் தெரிந்த உருவத்தை பார்த்த பெண்மணி அந்தந்தத் தோற்றம் தனக்கு என்ன மனநிலையை உண்டாக்கியதோ அதை அப்படியே சொன்னார் அந்த பெண்மணி. அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள்
அதற்குப் பிறகுதான் தன் குறையை தெரிந்து கொண்டு, அதை சரி செய்ய இருபது ஆண்டுகள் தனிமையில் தவமிருந்து தன்னை அறிந்தார்.
நாம் துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்களையே பெரும் இறை நேசராக கருதுகிறோம். ஆனால் இவர், ஞானம் பெற வழி காட்டியவர் அந்தப் பெண்மணிதான்.
சுயத்தை இழக்காதவர்கள் சூஃபிகள்*
========================≠===========
கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள் அழகான அரபுக் குதிரை ஒன்று வைத்திருந்தார். அம்மார் அதை வாங்க ஆசைப்பட்டான். அதற்கு ஈடாக பல ஒட்டகங்களும், பெரும் பணமும் தருவதாக சொன்னான். எனினும் கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள் அதற்கு இணங்கவில்லை.
எப்படியாவது அந்த குதிரையை அடைய வேண்டும் என்று அம்மார் முடிவு செய்தான். கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள் குதிரையில் தினமும் சவாரி செய்யும் பாதையில் ஒரு நாள் அவன் அழுக்கு உடைகளுடன் குப்புற விழுந்து கிடந்தான்.
அந்த வழியாக வந்த கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள் பாதையோரம் விழுந்து கிடந்தவனைக் கண்டு பரிதாபப்பட்டார். இறங்கி வந்து அவனைத் தூக்கினார். அம்மார் முனகினான். "ஐயா! நான் பல நாட்களாகப் பட்டினியாக இருக்கிறேன். என்னால் நிற்கக் கூட முடியவில்லை" என்று.
இதையடுத்து அவனைத் தூக்கி தமது குதிரையின் மீது அமர்த்தினார் கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள். மறுகணமே குதிரையுடன் ஓட ஆரம்பித்தான் அம்மார்.
திகைத்துப்போன கலீஃபா சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டார். அதற்குள் அம்மார் வெகு தொலைவிற்கு போய்விட்டான். "நில். ஒரு கணம் நில். நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் போ" என்றார் அவர் உரத்தக் குரலில்.
அம்மார் குதிரையிலிருந்தபடியே திரும்பிப் பார்த்து, "என்ன?" என்றான் உரத்த குரலில்.
'உனக்கு இந்த குதிரை எப்படிக் கிடைத்தது என்பதை எவரிடமும் சொல்லாதே. ஒருவேளை உண்மையாகவே உடம்பு முடியாதவனாக சாலையோரம் எவராவது விழுந்து கிடந்தால் கூட மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய அஞ்சுவார்கள்" என்றார் கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள்.
தனது குதிரை களவு போனது பற்றி கூட அவர் கலங்கவில்லை. மக்களிடையே இதுபோன்ற செய்திகள் பரவினால் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களும் செய்யாமல் போய் விடுவார்களே என்றுதான் அவர் வருந்தினார்.
அந்த இக்கட்டான நிலையிலும் அவர், இறைநினைவோடு கூடிய மக்கள் நலன் கருதியே ஒரு கருத்தையே பேசி இருக்கிறார். இப்படி ஒரு கருத்தை அந்த சூழ்நிலையில் எவரும் உடனே பேசி விட முடியாது. அவர் பேசியிருக்கிறார் என்றால் அவர் சூஃபியிசத்தில் மூழ்கி முத்தெடுத்த மாமனிதர் என்பதில் ஐயமில்லை.
••••••••♥••••••••••••♥•••••••••♥••••••••••♥•••••••
கட்டுரை எண்:- 21
ரமலான் ஒரு பொற்புதையல்
==================================
(புகைப்பட விளக்கம் : சாந்தோம் டும்மிங் குப்பம் பள்ளிவாசல் அருகில் உள்ள எட்டாவது மாடியில் இருந்து இரவில் எடுக்கப்பட்ட காட்சி)
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் இறையச்சம் பெறுவதற்காக உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப் போன்று, உங்கள் மீதும் (நோன்பு) கடமையாக்கப்பட்டுள்ளது. 2: 183
இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் ஒரு சொல்லின் பொருளை விரிவாகக் காண்போம்.
كتب குதிப என்பதற்கும் فرض ஃபரள என்பதற்கும் 'கடமை' என்பதே பொருளாகும். ஆனாலும் 'ஃபரள' என்று சொல்வதை விட 'குதிப' என்று சொல்வதில் கனம் அதிகமாக இருக்கிறது.
அதாவது 'ஃபரள' என்பதற்கு கடமை என ஒரு முறை பொருள் செய்தால்,
'குதிப' என்பதற்கு ஐம்பது முறை கடமை கடமை என எழுதி பார்க்கும் பொழுது அதன் கணமும், அதன் உறுதி தன்மையும், அதன் அவசியமும் எப்படி நமக்கு அதிகமாக தெரியுமோ அது போல தான் குதிப என்கிற வாசகத்தின் பொருள்.
அதாவது நோன்பு , இதரக் கடமைகளை விட மிக மிக அவசியமானது என்பதை வலியுறுத்தவே அல்லாஹ் 'குதிப' என்கிற சொல்லை பயன்படுத்தி இருக்கிறான்.
"நோன்பு கடமை" என்கிற ஒரு விஷயத்தை இந்த ஒரு வசனத்தில் இரண்டு முறை அல்லாஹ் சொல்கிறான்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ
இறைநம்பிக்கைகொண்டவர்களே! உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப் போன்று (உங்கள் மீதும் கடமை).
எனவே ஒரு வசனத்தில் நோன்பு கடமை என்கிற சட்டத்தை இரண்டு முறை சொல்லி இறைவன் நோன்பை வலியுறுத்துகிறான்.
தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை இறைவன் உங்களுக்கு முன்னிருந்தோர்கள் மீது கடமையாக்கியது போன்று உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது என எங்கும் குறிப்பிடவில்லை.
ஆனால் நோன்பை மட்டுமே இவ்வாறு குறிப்பிடுகிறான்.
எனவே ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு நபிகள் நாயகம் அவர்கள் வரை இடைப்பட்ட அனைத்து நபிமார்களும் நோன்பு வைத்திருக்கிறார்கள் என இறைவன் இந்த வசனத்தின் மூலம் சொல்கிறான்.
இந்தத் தகவல், நோன்பின் கனத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
மேலும் இந்த வசனம் இன்னொரு கருத்தையும் சொல்கிறது. "நோன்பு நோற்பது கடினமாக இருந்தாலும், எல்லா சமுதாயமும் நோன்பு நோற்று இருக்கிறது. அவர்களெல்லாம் அதைக் கடுமையாகக் கருதவில்லை. எனவே நீங்களும் அவ்வாறு கருதாமல் நோன்பு வையுங்கள்" என சொல்கிறது.
ஆதம் (அலை) அவர்கள் மூன்று நாட்களும், நூஹ் அலை அவர்கள் சில தினங்களும், தாவூத் அலை அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாளும், மூஸா (அலை) அவர்கள் வருடத்தில் நாற்பது நாட்களும், ஜகரியா, எஹ்யா, ஈஸா (அலை) அவர்கள் சில நாட்களும் நோன்பு நோற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நோன்புக்கு முதலிடம் :
==================================
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; பனீ கத்ரா என்கிற யூத கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் மற்றும் அபா ஸலமா ஆகிய இரு சகோதரர்கள் ஒரே நேரத்தில் நபிகளாரின் சபைக்கு வந்து இஸ்லாத்தை ஏற்றார்கள்.
அவ்விருவருக்கும் உணவளிக்க ஆசைப்பட்ட நபிகள் நாயகம் அவர்கள், தம் அனைத்து மனைவியரின் இல்லங்களுக்கும் "ஏதேனும் உணவு இருக்கிறதா?" என்று கேட்டு அனுப்பினார்கள். அனைத்து மனைவியரும், "சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை" என்று சொல்லி அனுப்பினார்கள்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் தம் எதிரே அமர்ந்திருந்த ஸஹாபாக்களை நோக்கி, "இவ்விருவருக்கும் உணவளிக்க உங்களில் எவரேனும் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்கள்.
பொதுவாகவே அந்நாட்களில் புதிதாக எவரேனும் இஸ்லாத்திற்கு வந்தால் அவர்களுக்கு உணவளிக்கிற பொறுப்பை ஸஹாபாக்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள் அந்தந்த ஸஹாபாக்களின் இல்லங்களில் சாப்பிட்டுக் கொண்டு மஸ்ஜிதுந் நபவியில் திண்ணை தோழர்கள் மூலம் நடைபெறும் இஸ்லாமிய வகுப்புகளில் கலந்து கொண்டு மார்க்கம் பயில்வார்கள். பள்ளிவாசலிலேயே தங்கிக் கொள்வார்கள். சில தினங்களோ அல்லது சில மாதமோ மார்க்கத்தைக் கற்றுக்கொண்டு தம் ஊருக்குச் சென்று விடுவார்கள். பெண்களாக இருந்தால் அவர்களை ஸஹாபாக்கள் தம் இல்லங்களிலேயே தங்க வைத்துக்கொண்டு உணவளித்து மார்க்கம் கற்பிப்பார்கள்.
இந்நிலையில் அவ்விருவரும் ஒரு சிறிய படையெடுப்பில் கலந்து கொண்டார்கள். இஸ்லாமான ஒரு வார காலத்திற்குள் அப்துல்லாஹ் என்பவர் ஷஹீத் - வீர மரணம் அடைந்தார்.
மற்றொருவரான அபா ஸலமா அவர்கள் இஸ்லாமிய பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு ஸலமா என்கிற பெண் குழந்தை பிறந்தது. அதன் காரணமாகவே அவருக்கு அபா ஸலமா என பெயர் வந்தது.
இந்நிலையில் அபா ஸலமா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் ஒரு வருடம் கழித்து இயற்கையாக இறந்துப் போனார். தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
"ஒரு நாள் இரவில் சொர்க்கத்தை நான் கனவில் கண்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரே அவர், ஷஹீத் - போரில் வீர மரணம் அடைந்த வரைவிட சொர்க்கத்தில் முந்திச் செல்வதாகக் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. (ஷஹீது ஆகிறவர்கள் கேள்வி கணக்கு இல்லாமல் முதலில் சொர்க்கம் செல்லுவார்கள் என்கிற நபிகளாரின் சொல்லுக்கு எதிராக இங்கே நடைபெறுகிறதே என்று ஆச்சரியப்பட்டு) நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்ததேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவரைவிட , முந்தியவருக்கு ஒரு ரமழான் மாதம் முழுமையாகக் கிடைத்துள்ளது. மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார், மேலும் ஒரு வருட தொழுகைகளை தொழுதுள்ளார், ( மேலும் ரமலான் மாத பகலில் நோன்பு நோற்று இருக்கிறார், ஒரு லைலத்துல் கதர் இரவையும் அடைந்திருக்கிறார்.) அதுதான் அவர் சொர்க்கத்திற்கு முந்தி செல்ல காரணம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்னது அஹ்மத், அல் பஸார். (புகாரி, முஸ்லிம் ஹதீஸ் மற்றும் விளக்க உரைகளில் இருந்து தொகுக்கப்பட்ட நிகழ்ச்சி)
நீங்கள் விரைந்து நோன்பு துறப்பவரா?
==================================
அபூஉமாமா அல்பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருமுறை நான் என் குடும்பத்தினர் இடையே தூங்கிக் கொண்டிருந்தேன்.
இரண்டு மனிதர்கள் என்னிடத்தில் வந்து, என் இரு கைகளையும் அவர்களின் தோள்களின் மீது போட வைத்து கரடுமுரடான , உயரமான மலைக்கு அழைத்துச் சென்று என்னை ஏறச்சொன்னார்கள்.
"என்னால் ஏற இயலாது" என்றேன். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்" என்று கூறி என்னை மேலே அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது மலையின் நடுப்பகுதிக்குச் சென்றவுடன் கடுமையான ஓலம் கேட்டது.
“இது என்ன சப்தம்”? என்றுக் கேட்டேன்? "இது நரகவாசிகளின் கூக்குரல்" என்று சொன்னார்கள்.
பிறகு சிறிது தூரம் என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே சில மனிதர்களைப் பார்த்தேன். அவர்களின் கால்கள் கட்டப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தார்கள். அவர்களின் வாய்கள் கிழிக்கப்பட்டு இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.
"இவர்கள் யார்?” எனக் கேட்டேன். இவர்கள் தம் நோன்பை (சரியான காரணமின்றி வேண்டுமென்றே) முறித்தவர்கள்" என்று கூறினார்கள்.
நூல் : ஹாகிம், இப்னு ஹிப்பான்
قَبْل تَحِلَّةِ صَوْمِهِمْ
இந்த ஹதீஸில் "கப்ல தஹில்லத ஸவ்மிஹிம்" என்கிற வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு பொருள் " நோன்பு துறக்கும் நேரம் வருவதற்கு முன்னரே வேண்டுமென்றே விரைந்து நோன்பை துறப்பது" என்று பொருள் செய்திருக்கிறார்கள்.
நூல் : ஃபதஹுல் பாரி
எனவே மிகச் சரியான நேரத்தில் நோன்பை துறக்க வேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக வேண்டி அவசரப்பட்டு துறந்து மறுமையில் அவதிப் படாதீர்கள்.
ஒரு கூறு கொய்யாப்பழம் போன்றது
==================================
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான். நோன்பு எனக்குறியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து நன்மைகளுக்கு ஒப்பானது.
நூல் : புகாரி
லைலத்துல் கதுர் என்கிற ஒரு இரவு, ஆயிரம் மாதங்களைப் போன்றது என இறைவன் சொல்வது போல, ரமலான் மாதத்தில் செய்யப்படுகிற ஒரு செயலுக்கான "ஒரு நன்மை" என்பது பத்து நன்மை முதல் 700 நன்மை வரை கிடைக்க இருக்கின்ற ஒரு நன்மையான செயலாகும்.
அதாவது ரமலான் மாதத்தில் இறைவன் ஒரு அடியானுடைய ஒரு செயலுக்கான நன்மையாக பத்து நன்மைகளை எழுதி இருந்தால், அது 100 நன்மை முதல் 7000 நன்மை வரை கிடைக்க வாய்ப்புள்ள ஓர் நற்செயலாகக் கருதப்படும்.
மேலும் ரமலான் மாதத்தில் ஒரு நன்மை என்று சொன்னாலே அது குறைந்தது பத்து நன்மையை உள்ளடக்கியதாக இருக்கும்.
ஒரு கூறு கொய்யாப்பழத்தில் பத்து, பதினைந்து பழங்கள் இருப்பது போன்றது ரமலானின் ஒரு நன்மை என்பது.
ரமலானில் ஒரு ஹஜ்
==================================
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவர் நம்பிக்கையோடும், நன்மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கிறாரோ அவருடையது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது"
நூல் : புகாரி (38), முஸ்லிம் (1393)
ஒரு ஹஜ் அல்லது உம்ரா செய்தால் முன் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே!
ஆனாலும் ஒரு ரமலான் மாதத்தின் முப்பது நோன்புகளையும் முறையாக நோற்றாலும் கூட ஒரு மனிதன் முன் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்பது இந்த நபிமொழியின் விளக்கம்.
ஹஜ் செய்யாதவர்களுக்கு, ஹஜ் செய்ய இயலாதவர்களுக்கு, ஹஜ் செய்தால் அதிகபட்சமாக என்ன நன்மை கிடைக்குமோ அது நோன்பு நோற்பதில் கிடைத்து விடுவது பெரும் பாக்கியம் அல்லவா?
உலகம் முழுவதற்கும் ஒரு யூனிபார்ம்
======================================
உலகில் வாழும் சுமார் 200 கோடி இஸ்லாமியர்கள் தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்பது பெரிய அதிசயம் இல்லையா?
உலகில் வாழும் எல்லா முஸ்லிம்களும் ஒரே நேரத்தில் ஒரு தொழுகையை தொழுவதில்லை. ஜகாத் வழங்குவதில்லை. ஆனால் உலகில் வாழும் எல்லா முஸ்லிம்களும் அவரவர் வீட்டில் இருந்தவாறு ஒரு நாள் முன் பின் என தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்பதும், அது ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதும் பேரதிசயம் இல்லையா?
நான் ஒன்றை சொன்னால், நீங்கள் "இது அதிசயம் தான்" என்ற முடிவிற்கு வருவீர்கள்.
நீங்கள் நேபாளத்து இந்துக்களிடம், "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், "பசுபதிநாத்" என்று சொல்லுவார்கள்.
மகாராஷ்டிரா இந்துக்களிடம், "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், "கணேஷ்" என்று சொல்லுவார்கள்.
டெல்லியிலுள்ள இந்துக்களிடம், "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், "ராம்" என்று சொல்லுவார்கள்.
பீகார் இந்துக்களிடம், "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், "சங்கர்" என்று சொல்லுவார்கள்.
பெங்கால் இந்துக்களிடம் "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், "மா துர்காதேவி" என்று சொல்லுவார்கள்.
குஜராத் இந்துக்களிடம் "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால் , "கிருஷ்ணர்” என்று சொல்லுவார்கள்.
தென்னிந்திய இந்துக்களிடம் "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், எங்கள் இறைவன் "முருகன் - விநாயகர் - திருப்பதி பெருமாள்" என்று சொல்லுவார்கள்.
சத்தியமாக சொல்கிறேன். இந்த உலகில் எந்த இடத்திலும், எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் உள்ள எந்த முஸ்லிமிடமும், "உன் இறைவன் யார்" என்று கேட்டால், அவர்கள் அனைவரும் ஒரே ஒரு பதிலைத் தான் சொல்லுவார்கள்.
எங்கள் இறைவன் "அல்லாஹ் ஒருவனே" என்று!!!!
அது போலத்தான் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள், ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிற்கு நோன்பு நோற்பது பேரதிசெய்யும் இல்லையா? பேரதிசயம் தான்!
பேசும் நோன்பு :
عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: « الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ ، رواه مسند احمد
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு சொல்லும், "இறைவா! நான் இவ்வடியான் உணவு சாப்பிடுவதை விட்டும், பகலில் இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் . இவன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்பாயாக! அல் குர்ஆன் சொல்லும். "நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன்.
எனவே, இவன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்பாயாக!
நூல் : முஸ்னது அஹ்மத்
இந்த அண்டத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துச் செல்லும் அனைத்து ஜீவராசிகளும் பேசும் ஆற்றல் பெற்றது. ஒரே இடத்தில் உள்ள கல், மண், கண்ணாடி குடுவை, கள்ளிமரம் போன்ற எதுவும் பேசாது.
அதைப்போல் உலகத்தில் உள்ள ஒரே இனத்தைச் சேர்ந்த அனைத்து நாட்டு ஜீவராசிகளும் ஒரே மொழியைத் தான் பேசும். உதாரணமாக தமிழ்நாட்டு கோழியும், அசாம் மாநில கோழியும், அமெரிக்கா கோழியும் ஒரே மொழியில் தான் பேசும்.
இவ்வாறே உலகில் உள்ள ஒரே இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உயிரினமும் ஒரே மொழியைத்தான் பேசும்.
அதேநேரம் ஒரு கோழியை சுற்றி உள்ள ஆடு, மாடு, குரங்கு, பறவைகள் என அவை ஒவ்வொன்றும் பேசுகிற மொழியவும் அந்தக் கோழி அறிந்திருக்கும்.
உலகத்தில் பேசுகிற ஆற்றல் பெற்ற எந்த உயிரினமும் மறுமை நாளில் பேசும் சக்தியைப் பெறாது. மனிதனின் நாவு இப்பொழுது பேசுகிறது. மனிதனின் கை, கால்கள் பேசுவதில்லை. ஆனால் மறுமை நாளில் மனிதனின் கை, கால்கள், நகம் உட்பட அனைத்தும் பேசும் ஆற்றல் பெற்றதாக இருக்கும்.
மேலும் புத்தகம், கல், மண், பேனா போன்றவை இந்த உலகத்தில் பேசும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை. ஆனால் மறுமை நாளில் இவற்றுக்கு பேசும் ஆற்றலை அல்லாஹ் வழங்குவான்.
அந்த வரிசையில் உள்ளதுதான் நோன்பும். குர்ஆனும் மறுமை நாளில் இவற்றுக்கு, அவற்றுக்கே உரிய உருவ அமைப்பை கொடுத்து அல்லாஹ் பேசும் ஆற்றலையும் கொடுப்பான். அப்பொழுதுதான் அவை மேற்கண்டவாறு பேசும்.
எனவே இவ்வுலகத்தில் பேசாத நோன்பு மறுமை நாளில் பேச இருப்பதால், உங்கள் வாய்கள் எதையும் உண்ணாமல் இருக்க பூட்டு போட்டு வையுங்கள். உங்களுக்காக நோன்பு வாய் திறந்துப் பேசும்.
மறுமை நாளில், பேசாதவைகள் வாய் திறந்து பேசும்போது நாம் வாய் திறந்து பார்த்திருப்போம்.
•••••••••♥•••••••••••♥•••••••••••♥••••••••••♥•••••
கட்டுரை எண் :- 20
ஹஜ் செய்யாமலே
ஹஜ் செய்த நன்மை
========================
எல்லாம் வல்ல இறைவன் இந்த உம்மத்தினருக்கு பேரருள் செய்திருக்கிறான். அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காரணமாக இந்த இஸ்லாமிய சமூகத்தினருக்கு பெரும் வெற்றிகளையும் பாக்கியங்களையும் நன்மைகளையும் அல்லாஹ் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறான்.
இஸ்லாத்தில் உள்ள சில வகை அமல்கள் எல்லோராலும் செய்ய இயலாது. செய்வதற்கான உடல் ஆரோக்கியமும், பொருளாதார வசதியும் சூழ்நிலைகளும் அமையப்பெற்று இருக்காது. அதே நேரம் அதை செய்ய இயலாதவர்களும் அதன் நன்மையை பெறுவதற்காக அல்லாஹ், எல்லோராலும் செய்ய சாத்தியப்படும் அமலை இந்த சமூகத்தினருக்கு வழங்கி இருக்கிறான்.
இந்த வகையான அமல்களை இந்த சமூகம் செய்யும் போது, மிகப்பெரும் நன்மையும் மறுமையில் உயர்வும் பெறும்.
அந்த வகையில் உள்ள ஒரு அமல்தான் ஹஜ். இது ஆரோக்கியமும் பொருள் வசதியும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஓர் அமல். இது அனைவருக்கும் சாத்தியமான ஓர் அமல் அல்ல!
ஆனாலும் ஏழைகளும் ஹஜ் செய்த நன்மையை, உம்ரா செய்த நன்மையை பெற வேண்டுமானால் அவர்கள் தாம் இருக்கிற இடத்திலேயே இருந்தவாறு கீழ்காணும் அமல்களை செய்யும் போது அவர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மை முழுமையாக கிடைத்து விடும் என இஸ்லாம் வழிகாட்டி இருக்கிறது.
வாருங்கள் அவை எவை என விரிவாகக் காண்போம்.
========================
1. அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்களிடம் சில தோழர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! செல்வந்தர்கள் நன்மைகளை அள்ளிச் செல்கிறார்கள்; அவர்கள் நாங்கள் தொழுவது போன்றே தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பு நோற்பது போன்று அவர்களும் நோன்பு நோற்கிறார்கள்; அவர்களிடம் உள்ள மேல்மிச்சமான செல்வங்களில் தாராளமாக தர்மம் செய்கிறார்கள். (இதனால் அவர்கள் அதிகமான நன்மைகளை சம்பாதிக்கிறார்கள் அவ்வாறு எங்களால் இயலவில்லையே! என்று வினவியதற்கு) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ் உங்களுக்கு இஷா தொழுகையை வழங்கவில்லையா? அதை நீங்கள் ஜமாஅத்தோடு தொழுதால், ஒரு ஹஜ் செய்த நன்மை கிடைக்கும். ஃபஜ்ருடைய தொழுகையை ஜமாஅத்தோடு தொழுதால், ஒரு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்.
நூல் : முஸ்லிம்,முஸ்னது அஹமத்
2. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நான் யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால், அதற்கான ஆற்றல் என்னிடம் இல்லை (நான் என்ன செய்வது?)" எனக் கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உனது பெற்றோரில் எவரேனும் உயிரோடு இருக்கிறார்களா?
அவர் : ஆம்! எனது தாய் என்னோடு இருக்கிறார்.
நபி (ஸல்) அவர்கள், "உமது தாயாருக்கு பணிவிடைகளை செய்வீராக! பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் கேட்பீராக ! அப்படி நீங்கள் செய்தால், ஒரு ஹஜ், ஒரு உம்ரா, மற்றும் ஒரு போர்க்களத்தில் கலந்து கொண்ட நன்மை கிடைக்கும்" என்று கூறினார்கள்.
நூல் : தப்ரானீ, பைஹகி, அபூ யஅலா.
3. கலீப் என்கிற கிராமப்புற நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருமுறை நான் ஹஜ்ஜுக்காக இவ்வாறு இவ்வாறு எல்லாம் தயாராக இருந்தேன். ஆனால், (சில காரணங்களால்) என்னால் போக இயலவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "கலீப் ! ஜும்ஆவை விடாமல் தொழுது வாருங்கள்; நிச்சயமாக அது ஏழைகளின் ஹஜ் ஆகும்.
நூல்: வஸாயிலுஷ் ஷீஆ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜும்ஆ தொழுகை ஏழைகளின் ஹஜ் ஆகும்.
நூல் : பைஹகி இப்னு அஸாகிர், ஃபைலுல் கதீர்
4. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் இமாம் ஜமாஅத்தோடு ஃபஜ்ருடைய தொழுகையை தொழுதுவிட்டு அதே இடத்தில் அமர்ந்திருந்து சூரியன் உதயமாகிற வரை திக்ருகள் செய்து கொண்டிருந்து விட்டு இரண்டு ரகஅத்துகள் தொழுகிறாரோ அவருக்கு, ஒரு ஹஜ் மற்றும் ஒரு உம்ரா செய்த முழுமையான கூலி கிடைக்கும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அவருக்கு முழுமையான முழுமையான முழுமையான கூலி கிடைக்கும்" என்று மூன்று முறை கூறினார்கள்.
நூல் : திர்மிதீ
5. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸாரிப் பெண் உம்மு ஸினான் (ரலி) அவர்களிடம், "நீ ஏன் எங்களுடன் ஹஜ்ஜு செய்ய வரவில்லை" எனக் கேட்டார்கள்.
அதற்கு அப்பெண், “எங்களிடம் இருந்த தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் எனது கணவரும் எனது மகனும் உங்களுடன் வந்துவிட்டனர். இன்னொரு ஒட்டகத்தை விட்டுச் சென்றுள்ளனர். அதன் மூலம் நாங்கள் கிணற்றிலிருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறோம். (அதனால் என்னால் வர இயலவில்லை)" என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் வந்து விட்டால் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு நிகராகும் எனக் கூறினார்கள். அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள். நூல்: புகாரி 1782.
ரமளானில் நிறைவேற்றும் உம்ரா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் செய்த ஹஜ்ஜுக்குச் சமமானது என மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
உம்மு மஅசில் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவு செய்ய செல்வதாக ஒரு நாள் ஒரு தொழுகைக்குப் பின்னர் அறிவித்ததும் நானும் வருவதாக வாக்களித்தேன். இதை என் மனைவி உம்மு மஅசிலிடம் சென்று, "நான் நபிகளாருடன் ஹஜ் செய்யப் போகிறேன்" என்று கூறினேன்.
உடனே எனது மனைவி, "நானும்தான் நபிகளாருடன் ஹஜ் செய்ய வேண்டும்" என்று கூறினார். அதனை சொல்வதற்காக நாங்கள் இருவரும் நபிகளாரிடம் சென்றோம்.
என் மனைவி : அல்லாஹ்வின் தூதரே! உங்களுடன் நானும் ஹஜ் செய்ய விரும்புகிறேன். ஆனால் அபு மஅகிலிடம் ஒரு ஒட்டகம்தான் இருக்கிறது. நான் (அபூமஅசில்) ஆம்! அவர் சொல்வது உண்மைதான்?
நான் அதை அல்லாஹ்வின் பாதையில் செலுத்திவிட்டேன்.
நபி (ஸல்) : அதில் அவரே பயணித்து அவர் ஹஜ் செய்யட்டும்.
என் மனைவி : அல்லாஹ்வின் தூதரே! நானும் ஒரு பெண். எனக்கு வயதாகிவிட்டது. நோய்களும் உள்ளது. உங்களோடு செய்யும் இந்த ஹஜ்ஜுக்கு நிகரான அமல் ஏதும் உள்ளதா?
நபி (ஸல்) : ரமளான் மாதத்தில் செய்யும் ஓர் உம்ராவானது. ஒரு ஹஜ்ஜுக்கு நிகரான (பயனுடைய)தாகும். நூல்: திர்மிதீ 861.
6. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;
ஏழை மக்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகின்றார்கள்.
மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்.
ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர். உம்ரா செய்கின்றனர். அறப்போர் செய்கின்றனர். தர்மமும் செய்கின்றனர்” என்று முறையிட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகின்றேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்தி விட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கின்றீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள்.
(அந்தக் காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை இறைவனைத் துதியுங்கள். 33 தடவை இறைவனைப் புகழுங்கள். 33 தடவை இறைவனைப் பெருமைப் படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
இது வஷயத்தில் நாங்கள் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர், சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹு அக்பர் 34 தடவையும் கூறலானோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர் என்று 33 தடவை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையும் 33 தடவைகள் கூறியதாக அமையும்” என்று விளக்கமளித்தார்கள்.
நூல் : புகாரி 843
7. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் ஹஜ் செய்யவோ, உம்ரா செய்யவோ, யுத்தம் செய்யவோ தன் வீட்டிலிருந்து வெளியேறி விட்டாரோ அவர் இறைவழியில் இறந்து போனால் அவருக்கு அல்லாஹ் ஒரு போர்க்களத்தில் கலந்துக் கொண்ட நன்மையும் ஒரு ஹஜ், ஓர் உம்ரா செய்த நன்மையும் வழங்குகிறான். நூல்: பைஹகீ.
ஹுஸைன் பின் அலீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தவருக்கு இரண்டு ஹஜ்ஜும், இரண்டு உம்ராவும் (செய்த நன்மை) கிடைக்கும்.
நூல் : ஷுஃபுல் ஈமான் - பைஹகீ
8. அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "ஒருவர் தனது இல்லத்திலிருந்து உழூச்செய்து கொண்டு ஃபர்லான தொழுகைக்காக (பள்ளிவாசலுக்கு) வெளியேறிச் செல்கிறார் என்றால் அவருடைய கூலி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து வெளியேறிச் செல்பவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றாகும்”.
மேலும், எவர் தன் இல்லத்திலிருந்து லுஹாத் தொழுகைக்காக வெளியேறுகின்றரோ அவருக்கு உம்ரா செய்தவரின் கூலியைப் போன்ற கூலி கிடைக்கும்,
மேலும் எவர் ஒரு தொழுகைக்கும் இன்னொரு தொழுகைக்கும் இடையில் எவ்வித வீணான செயல்களையும் செய்யவில்லையனால் அவரின் பெயர் இல்லிய்யீன் (சொர்க்கவாசி)களில் பதிவு செய்யப்படும்”.
நூல்: அபூதாவுத், முஸ்னது அஹ்மத்
9. ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். உனது முஸ்லிமான சகோதரருடைய தேவையை நிறைவேற்ற நீ செய்யும் உதவிக்கு பகரமாக அல்லாஹ் உனக்கு ஒரு ஹஜ் செய்த நன்மையை வழங்குவான்.
நூல் : லதாஇஃபுல் மஆரிஃப்
10. உஸைத் பின் ஹுழைர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நன்கு உளூ செய்து கொண்டு மஸ்ஜித் குபாஃவில் இரண்டு ரகஅத்துகளில் ஃபாத்திஹா சூராவும் இதர சூராக்களும் ஓதி தொழுதால் ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும்"
நூல் : திர்மிதீ, இப்னுமாஜா
11. இப்னு ராஜப் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது; முக்னிஃப் பின் ஸலீம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். சில நபித்தோழர்கள் சொல்லி இருக்கிறார்கள். நோன்பு பெருநாள் தொழுகைக்காக வீட்டை விட்டு வெளியேறிச் சென்று தொழுதால், ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும். ஹஜ் பெருநாள் தொழுகைக்காக வீட்டை விட்டு வெளியேறிச் சென்று தொழுதால், ஒரு ஹஜ் செய்த நன்மை கிடைக்கும்.
நூல் : லதாஇஃபுல் மஆரிஃப்
12. தொழுகைக்கு ஹஜ் நன்மை :
அபீ உமாமா பின் ஸஹ்ல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
"யார் தூய்மையான நிலையில் என் மஸ்ஜிதில் தொழுவதற்காக மட்டும் தன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறாரோ அவர் அங்கு தொழுது முடிக்கும் வரை ஹஜ்ஜுடைய காலங்களில் இருந்தவர் போலாவார்(ஹஜ் செய்த நன்மை கிடைக்கும்)"
நூல்: தாரிஹுல் கபீர்
ஜைது பின் அஸ்லம் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"யார் என் மஸ்ஜிதில் தொழுவதற்காக, திக்ரு செய்வதற்காக, கல்வி கற்பிப்பதற்காக, அல்லது கல்வி கற்க வருகிறாறோ அவர் (அக்காரியத்தை முடிக்கும் வரை) முழுமையான ஒரு ஹஜ்ஜை நிறைவேற்றியவரைப் போல் ஆவார்."
மற்றொரு அறிவிப்பில் முழுமையான ஒரு உம்ராவை நிறைவேற்றியவரை போல் ஆவார் என காணப்படுகிறது.
நூல் : தப்ரானீ , ஹாகிம்.
மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் ஹஜ் மற்றும் உம்ரா செய்யாமலே அதன் நற்கூலியை பெறுவதற்கான வழிகளை கண்டோம்.
நேற்று வரை ஹஜ் மற்றும் உம்ரா செய்வது ஏக்க பெருமூச்சாக இருந்தது. மேலும் நமக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா? என்று ஏங்கி இருந்த, இவ்வாண்டு ஹஜ் செய்யக் கூடியவர்களுக்கு இன்று இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது இறைவன் நமக்கு அளித்த பெரும் பாக்கியமே!
நேற்று வரை ஹஜ் மற்றும் உம்ரா செய்யாமலே ஹஜ் மற்றும் உம்ரா செய்ததற்கான நன்மையை பெறும் வழிகளை பின்பற்றி செயல்பட்டு வந்தோம்.
இன்று அல்லாஹ் அதை உண்மையாக, தத்ரூபமாக செய்து முடிக்கும் வாய்ப்புகளை வழங்கி இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்!
இந்தக் கட்டுரையை வாசிக்கும் அனைவரும் எனக்காகவும், என் குடும்பத்தினருக்காகவும் ஆரோக்கியம் மற்றும் ஈமானோடு வாழ பிரார்த்திக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.
மேலும் இதயக் குரல் ஆசிரியர், அவர் குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியத்தோடும் சீரோடும் சிறப்பு வாழ்வதற்கும், ஹஜ் மற்றும் உம்ரா பல செய்வதற்கும் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்.
•••••••♥••••••••••♥••••••••••••♥••••••••••♥••••••
கட்டுரை எண் : 19
அலைப்பாயும் மனம் அடிபணியாதோ?
=====================================
கொந்தளிக்கும் கடலைப் போல, ஓயாத அலைகளைப் போல, குமுறிக் கொண்டே இருக்கும் எரி மலையைப் போல, கொதிக்கும் தண்ணீரை போல, அடக்க முடியாத காட்டு குதிரையைப் போல மனதில் எப்பொழுதும் ஏதேனும் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது.
'வெள்ளை யானையை கற்பனை செய்யாதே' என்று நான் சொன்னதும் நீங்கள் கற்பனை செய்து விட்டீர்கள் அல்லவா? அதுதான் நமது இதயத்தின் எதார்த்த நிலை!
உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் ஏதேனும் ஒரு நேரத்தில் ஓய்வு எடுக்கின்றது; ஆனால் ஓய்வெடுக்காத ஒரே உறுப்பு உள்ளம் மட்டும்தான்!
உறங்கினாலும் கூட கனவுகளின் மூலம் உள்ளம் உலாவிக் கொண்டிருக்கின்றது.
அலை அலையாக எழுந்து கொண்டே இருக்கும் எண்ணங்களை முழுமையாக கட்டுப்படுத்தவோ, அடக்கவோ இயலாது.
ஆனால் உள்ளத்தில் எழும் எண்ணங்களை திசை திருப்பி, நல்லதை மட்டுமே நினைக்க வைக்க இயலும்.
ஏனென்றால் எப்பொழுதும் எதையேனும் நினைத்துக் கொண்டே இருக்கும் இதயத்தை நல்லதை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் இதயமாக மாற்ற இயலாதா என்ன?
கண்டிப்பாக மாற்ற இயலும்; அல்லாஹ்வையும், ரசூலையும் மட்டுமே நிரந்தரமாக நினைக்கும் இதயத்தை நம்மால் உருவாக்கிட இயலும்.
அப்படிப்பட்ட இதயத்தை செம்மைப்படுத்தி தருகிறவர்கள் ஆன்மீகவாதிகள் ஆவர்.
ஒரு ஆன்மீகவாதி, ஒருவரின் இதயத்தை கட்டுக்கோப்பாக கொண்டு வர சொன்ன வழியைப் பாருங்கள்.
ஞான நிலையை அடைய வேண்டும் எனும் நோக்கத்தில் ஞானக் கல்வியை கற்றுக் கொடுங்கள் என கேட்டு ஒரு இறைநேசரிடம் ஒரு பண்டிதர் - பல வகையான அறிவுகள் பெற்றவர் வந்தார்.
இறைநேசரை சந்தித்ததும், "ஞானம் பெறும் வழியை எனக்குக் கற்றுக் கொடுங்கள்" என்று கேட்டார்.
அந்த இறைநேசர் "இங்கே அமருங்கள் ; இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று குடிப்பதற்கு சூடான பாலை ஒரு சொம்பில் எடுத்துக் கொண்டு, மற்றொரு கையில் சிறிய டம்ளரையும் எடுத்துக்கொண்டு வந்தார்.
அவர் எதிரில் இருந்த டேபிளில் டம்ளரை வைத்து, டம்ளரில் பாலை ஊற்றினார். பாலை ஊற்றிக் கொண்டே இருந்தார்.
டம்ளர் வடிந்து ஓடிக்கொண்டே இருந்தது; ஞானம் பெறுவதற்கான வழியை கேட்டு வந்தவர், "சரி நான் பிறகு வருகிறேன்" என்று புறப்பட்டார்.
இறைநேசர் அவர்கள், "பரவாயில்லை பாலை குடித்துவிட்டு செல்லுங்கள்" என்று கூறினார்; அவர் அமர்ந்து பாலை அருந்திவிட்டு சென்றுவிட்டார்.
பாலை ஊற்றுவது மூலமாக இறைநேசர் ஒரு கருத்தை சொன்னார்; ஊற்றப்பட்ட டம்ளர் நிறைந்து வலிந்ததில் இருந்து அதற்கான அற்தத்தை புரிந்து கொண்டு பண்டிதர் திரும்பி சென்று விட்டார்.
அதாவது நான் ஞானம் கற்றுத்தர தயாராகத்தான் இருக்கின்றேன்; ஆனால் ஏற்கெனவே உங்கள் இதயத்தில் பல்வேறு வகையான கல்வி சார்ந்த விளக்கங்கள் நிரம்பி இருக்கின்றன; பலவகை கருத்துகளாலும் நினைவுகளாலும் நிரப்பி இருக்கின்ற இதயத்தை காலி செய்து கொண்டு வாருங்கள்; ஞானத்தைக் கொண்டு நிரப்புகிறேன்" என்று கேட்கும் விதமாக இறைநேசர் பாலை ஊற்றினார்.
அதை அவர் புரிந்து கொண்டு "சரி! என் இதயத்தை காலி செய்து வெற்றிடம் உள்ள இதயத்தோடு உங்களிடம் மீண்டும் வருகின்றேன்" என்று பண்டிதர் சொன்னதாக இறைநேசர் புரிந்து கொண்டார். இப்படித்தான் இதற்கு பொருள் கொள்ள வேண்டும்.
உங்கள் மனம் அலைகள் போல் ஓடுகிறதா? ஆன்மீக ரகசியங்களை தெரிந்து, உங்கள் மனதை அமைதிப்படுத்தும் நுட்பங்களை இன்று இந்தக் கட்டுரை மூலம் கற்றுக் கொள்ளுங்கள்.
பொதுவாகவே மனதை ஓர் நிலைப்படுத்துவதற்கான வழிமுறைகளை கற்பிப்பவர்கள் தரீகா எனும் ஞான மார்க்கத்தில் அதிகம் கவனம் செலுத்தக்கூடிய ஷைகுமார்கள் ஆவர்.
தரீகாக்களை குறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
தரீகாக்களில் ஜின்கள்
========================
وَأَنَّا مِنَّا الصَّالِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَ ۖ كُنَّا طَرَائِقَ قِدَدًا
நிச்சயமாக எங்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; அவ்வாறு இல்லாத (கெட்ட ) வர்களும் எங்களில் இருக்கின்றனர்; நாங்கள் வெவ்வேறு தரீக்கா (வழி) களில் இருக்கின்றோம். 72 : 11
இந்த வசனம் சூரத்துல் ஜின் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது; ஜின்கள் தமக்குள் பேசிக்கொண்டதை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்த வஹிதான் இந்த வசனம்.
ஒரு ஜின் சொல்கிறது; எங்களில் நல்லவரும் இருக்கிறார்; கெட்டவரும் இருக்கிறார்; நாங்கள் பல தரீகாக்களை உடையவர்களாக இருக்கிறோம்.
சூஃபியாக்களும், ஞானவான்களும், இறைநேசர்களும் இந்த வசனத்தில் உள்ள தரீகா எனும் சொல்லுக்கு ஜின்களிலும் பல தரீகா - ஆன்மீக பாதைகள் இருந்தன என்று சொல்லுகிறார்கள்.
அதுபோலவே இன்று மனிதர்களிலும் பல தரீக்காக்கள் இருக்கின்றன.
தரீக்கா எத்தனை வகை?
=========================
இஸ்லாமிய ஆன்மீக மரபில், அல்லாஹ்வை அடையும் நோக்கில் ஒரே குழுவினராக செயல்படக்கூடியவர்கள் நிறைந்துள்ள சபை தான் தரீக்கா.
இவர்களை சூஃபிகள் என்றும் தஸவ்வுஃப்வாதிகள் என்றும் சொல்லுவார்கள்.
இஸ்லாமிய ஷரீஅத் என்பது, தொழுகை நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளை வலியுறுத்துகிறது.
தரீக்கா என்பது இதயத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வை நெருங்க வழி வகுக்க வழிகாட்டுகிறது.
அல்லாஹ்வை நெருங்க அநேக வழிகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருந்தாலும், இறைநேசர்கள் இறைவனை நெருங்க ஒரு வழியை கண்டுபிடித்து, அதில் பயணித்து அல்லாஹ்வையும் அடைந்து வெற்றி கண்டார்கள்; அந்த வழிகளை காட்டும் ஆன்மீக மரபுகள் நிறைந்தவைதாம் தரிக்கா.
மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் பல தரீக்கா - ஆன்மீக மரபுகள் தோன்றியிருந்தாலும் ஐந்தாம் நூற்றாண்டில் தான் தரீகாக்கள் செல்வாக்கு பெற தொடங்கியது.
1. அந்த வகையில் மாபெரும் மரபுகளை கொண்டு உருவான முதல் தரீக்கா இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தோற்றுவித்த القادرية - காதரிய்யா தரீக்கா ஆகும். இது ஹிஜ்ரி 550 கல்லுக்குப் பிறகு (கி.பி. 1155 ) உருவானது.
2. அர் ரிஃபாயிய்யா الرفاعية / அஹமது அல் ரிஃபாயி (ரஹ்) அவர்கள் ஈராக்கில் ஹிஜ்ரி 555 களுக்கு பிறகு (கி.பி. 1160) தோற்றுவித்தார்கள்.
3. சுஹ்ரவர்திய்யா - السهرورتية / அபூ ஹபீப் அல் சுஹ்ரவர்தீ (ரஹ்) பக்தாத் நகரில் ஹிஜ்ரி 600 ( கி.பி. 1203) காலகட்டத்தில் தோற்றுவித்தார்கள்.
4. ஷிஷ்திய்யா الششتية / காஜா அபு இஸ்ஹாக் ஷிஷ்தீ ( ரஹ்) அவர்கள் ஆப்கானிஸ்தானில் சுமார் ஹிஜ்ரி 530 ( கி.பி. 1135) இல் உருவானது.
5. நக்ஷ்பந்திய்யா - النقشبندية / Naqshbandiyya / பஹாவுத்தீன் நக்ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் மத்திய ஆசியாவின் புகாரா நகரில் ஹிஜ்ரி 750 (கி. பி. 1349) களில் உருவானது.
6. ஷாதிலிய்யா الشاذلية / Shādhiliyya / அபுல் ஹஸன் அஷ் ஷாதிலி (ரஹ்) அவர்கள் எகிப்து மொராக்கோ நகரில் ஹிஜ்ரி 650 (கி.பி. 1250 ) களில் உருவானது.
7. மவ்லவிய்யா المولوية / Mawlawiyya / மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) துருக்கி கொன்யா நகரில் ஹிஜ்ரி 670 ( கி.பி. 1270) களில் உருவானது.
8. பதவிய்யா / البَدَويّة / Badawiyya அஹ்மத் அல் பதவி (ரஹ்) அவர்கள் எகிப்து டன்டா பகுதியில் ஹிஜ்ரி 630 (கி.பி. 1230 ) களில் தோன்றியது.
9. ஹல்வதிய்யா الخلوَتية / Khalwatiyya உமர் அல் கலூதீ (ரஹ்) அவர்கள் துருக்கி அனடோலியா நகரில் ஹிஜ்ரி 800 (கி.பி. 1400 ) களில் உருவானது.
10. தீஜானிய்யா / التيجانية / Tijaniyya அஹ்மத் அல் தீஜானி (ரஹ்) அவர்கள் அல்ஜீரியா மொராக்கோ நகரில் ஹிஜ்ரி 1200 கி.பி . 1785 ) களில் உருவாகி மேற்கு ஆப்பிரிக்காவில் பரவியது.
பத்து தரீக்காக்களின் பெயர்களை நாம் கண்டோம்; இவைகளில் முதன்மையானது காதரிய்யயா தரிக்கா ஆகும்; இந்த தரீக்காவின் வழிமுறைகளில் சில வேறுபாடுகளோடு உருவானது தான் மற்ற தரீக்காகள்.
ஒவ்வொரு தரீக்காவிற்கும் ஆன்மீக வம்சாவளி தொடர் (ஸில்ஸிலா) வெவ்வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களை சென்றடைகிறது.
தரீக்காவில் ஷைகு / ஆன்மீக வழிகாட்டி என்று ஒருவர் இருப்பார். அவருடைய சொற்களையும் செயல்களையும் பின்பற்றி வாழ்வோர் முரீத் என்றும் பீர் என்றும் சீடர் என்றும் அழைக்கப்படுவார்கள்.
இந்த ஷைகுமார்கள் அல்லாஹ்வை திக்ரு செய்யும் வழிமுறையையும் திக்ரில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளையும் கற்றுத் தருவார்.
அதைக் கொண்டு அவர்கள் முராக்கபா எனும் ஆழ் தியானத்தில் திளைத்து மனதை ஓர் நிலைப்படுத்தி அல்லாஹுவை காணும் பாக்கியத்தை உலகத்திலேயே பெறுவார்கள்.
மேலும் அன்பு, கருணை , ஒற்றுமை ஆகியவற்றையே முதன்மையான செயல்பாடாகக் கொண்டு மக்களிடம் நடந்து கொள்வார்கள்.
அதனால் மதவெறி, சாதிய ஏற்றத்தாழ்வு, மொழி அடிப்படையிலான பிரிவுகள் இல்லாமல் ஒன்றுபட்டு வாழும் வழியை வடிவமைத்தார்கள். இதன் காரணமாக இஸ்லாம் மிகப்பெரிய அளவில் உலகெங்கிலும் பரவியது.
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் சொல்லி வந்த சட்டங்களை பின்பற்றுவோரை 'ஹனஃபி' என்றும், இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் சொல்லி வந்த சட்டங்களை பின்பற்றுவோரை 'ஷாஃபி' என்றும் சொல்லப்படுவது போலவே,
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வை எவ்வாறு வணங்க வேண்டும்? எவ்வாறு திக்ருகள் செய்ய வேண்டும்? எந்தெந்த நேரங்களில் என்னென்ன மாதிரியான அமல்களை செய்ய வேண்டும்? என ஞான விஷயங்களை சொல்லி இருக்கிறார்களோ அவற்றை பின்பற்றி வருவோர் 'காதிரி' என்று சமூகத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
காதிரியா தரீகாவைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் இருந்தாலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகமாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு இறைநேசரும் இறைவனை நெருங்குவதற்கு சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வரும் ஒவ்வொருவரும் நக்சபந்தி, சுஹ்ரவர்தீ,என அந்தந்த ஷைகுமார்களின் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
பத்து வகை தரீகா உடைய ஷைகுமார்களும் மனதை ஓர் நிலைப்படுத்துவதற்கும் மனதை அல்லாஹ்வின் பால் வழி நடத்துவதற்கும் பல வழிமுறைகளை சொல்லித் தருகிறார்கள்.
நினைவுகளே இல்லாத இதயம் சாத்தியமா?
==============================
இமாம் ஸதுருத்தீன் பூர்னவி (ரஹ்) அவர்கள் அல்லாமா ஜலாலுதீன் ரூமி (ரஹ்) அவர்களைக் காண அவர்களின் காங்காவிற்கு வந்திருந்தார்கள்.
அங்கே பல நூற்றுக்கணக்கான சீடர்கள் அமைதியாக தியானத்தில் அமர்திருந்தார்கள்.
சீடர்களை எல்லாம் கடந்து அல்லாமா ரூமி (ரஹ்) அவர்களிடம் வந்து, "எனக்கு மிக முக்கியமான மூன்று கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிக்க வேண்டும்" என கேட்டார்.
ஏற்கனவே இமாம் ஸத்ருத்தீன் பூர்ணவி (ரஹ் ) அவர்களை தெரிந்திருந்ததால் மென்மையாக சிரித்தார்கள். அதாவது "கேளுங்கள்" எனபது போல் அமைதி காத்தார்கள்.
இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வை எப்படி அடைவது?" என்று கேட்டார்கள்.
அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள் பதில் சொல்லவில்லை; தம் கண்களை மூடி மௌனமாக அமர்ந்திருந்தார்கள்; அந்த சபை முழுவதும் அமைதி பரவியது.
இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், "இவர் பேசவே இல்லை; ஆனால் பேசி இருந்தால் என்ன மாற்றம் இந்த சபையில் நிகழ்ந்திருக்குமோ அப்படி ஒரு மாற்றம் அங்கே நிகழ்ந்திருப்பதை உணர்ந்தார்.
இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வை அடைந்தவர்களின் அடையாளம் என்ன?" என்று இரண்டாவது கேள்வியை கேட்டார்கள்.
அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள் மௌனத்தை தொடர்ந்தார்கள்; அவர்களின் உடல் அசையவே இல்லை; இந்த நிலையை பார்த்த இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், அல்லாமா ரூமி (ரஹ்) அவர்களின் மௌனம் ஆயிரக்கணக்கான சொற்களை விட ஆழமானது என உணர்ந்தார்; ஆனால் என்னவென்று புரிந்து கொள்ள வில்லை.
"அல்லாஹ்வை அடைந்தவர் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?" என மூன்றாவது கேள்வியை இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்.
அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள் பதில் சொல்லவே இல்லை; ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து, முகத்தின் உள்புறம் அந்த மூச்சுக்காற்று பரவும் விதமாக, மெதுவாக மூச்சை விட்டார்கள்; அவர்களின் முகத்தில் பேரொளி படர்ந்தது.
மூன்று கேள்விகளுக்கும் அமைதியாக இருந்ததின் மூலம் ஏதோ ஒரு பதிலை சொல்லி விட்டார்கள் என்பதை மட்டும் இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள் உணர்ந்தாலும் அது என்ன பதில் என அறியவில்லை.
உடனே இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், "ஷைகு அவர்களே! தங்களிடம் மூன்று கேள்விகள் கேட்டேன்; தாங்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லையே?" என்று கேட்டார்கள்.
அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள்,
يا صَدْرَ الدين! لقد أجبتك، ولكنك جءت بآذان تَسْمَعُ الألفاظ، ولم تَجِى بِقَلْبِ يُبْصِرُ الحقيقة."
"ஸத்ருத்தீன் அவர்களே! நான் உங்களுக்கு பதில் சொன்னேன்; ஆனால் நீங்கள் சொற்களைக் கேட்கும் காதுகளைக் கொண்டு வந்துள்ளீர்; உண்மையை பார்க்கும் உள்ளத்தை கொண்டு வரவில்லை" என்று கூறினார்கள். பின்னர் மூன்று கேள்விகளுக்கான விளக்கங்களை கூறினார்கள்.
முதல் கேள்விக்கான பதில்: சிரித்துப் பேசி கலகலப்பாக இருக்கும் மனம் உடையவர் தன்னை அறிய மாட்டார்; அமைதியான மனம் உடையவரே இறைவனை அடையவும், காணவும் பாக்கியம் பெறுவார்.
இரண்டாவது கேள்விக்கான பதில்: அல்லாஹ்வை அடைந்தவர் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்.
அதே நேரம் அமைதியாக இருப்பதின் மூலம், தாம் சொல்ல முடியாத கருத்துக்களை தன் முகத்தில் பிரகாசத்தை வெளிப்படுத்தி காட்டுவார்.
மூன்றாவது கேள்விக்கான பதில்: அல்லாஹ்வை அடைந்தவர் மக்களிடையே இருப்பதோடு அவர்களுடன் தவறானவற்றை பேசாமல், அமைதியாக நன்மையை செய்து கொண்டு இருப்பார்.
அவர் மக்களுக்கு பேசுவதின் மூலம் கிடைக்கும் நன்மையை விட அமைதியாக இருப்பதின் மூலம் கிடைக்கும் நன்மை மக்களுக்கு அதிகமானதாக இருக்கும்" என்று கூறினார்கள்.
இமாம் ஸத்ருத்தீன் பூர்ணவி (ரஹ்) அவர்கள் அழுதபடியே, "மௌனம் தான் மிகப்பெரிய பதில்" எனக் கூறினார்கள்.
நூல்: ஸியரு அஃலாமு நுபலா
மனதை ஓர் நிலைப்படுத்துவதற்கும் இறைவனை நெருங்குவதற்கும் மௌனம் சிறந்த வழிகளில் ஒன்றாக முன்னோர்கள், ஞான மார்க்கத்தில் ஈடுபட்ட அனுபவசாலிகள் கூறுகிறார்கள்.
கேள்வி, அறிவு முதிர்ச்சியின் வெளிப்பாடா?
=============================
மூஸா (அலை) அவர்கள் கிளிர் (அலை) அவர்களிடம் ஞானம் பெற சென்றிருந்தபோது கிளிர் (அலை) அவர்கள், فَلَا تَسْأَلْنِي عَن شَيْءٍ (என்னோடு இருக்கும் காலத்தில்) நீங்கள் என்னிடத்தில் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது" என்று நிபதனை விதித்தார்கள்.
இந்த நிபதனைக்கு கட்டுப்பட்டு தான் மூஸா (அலை) அவர்கள் கிளிர் (அலை) அவர்களோடு பயணித்தார்கள்.
ஆனாலும் மூஸா (அலை) அவர்கள் பொறுமை இழந்து மூன்று கேள்விகளை கேட்டதால் கிளிர் (அலை) அவர்கள் திருப்பி அனுப்பி வைத்து விட்டார்கள்.
எனவே ஞானம் பெற வேண்டும் என ஆசைப்படுகிறவர்கள் தனது குருவிடம் அதிகம் கேள்விகள் கேட்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "இந்த நாள் எதுவென்று தெரியுமா? இந்த மாதம் எதுவென்று தெரியுமா? முஸ்லிம்களுக்கு உவமையாக உள்ள மரம் எதுவென்று தெரியுமா?" என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டு இருக்கிறார்கள்.
இவற்றுக்கு பதிலை தெரிந்து வைத்திருந்த நபி தோழர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொல்லிவிட்டு மௌனமாக இருந்தார்கள். அந்த மௌனம்தான் அவர்களுக்கு ஞானத்தை கற்பித்தது.
ஞானப்பாட்டையில் மிக நீண்ட தூரம் பயணித்து வந்துவிட்டதால் தான் இந்த பதிலையே நபித்தோழர்கள் சொன்னார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாகவே ஒரு கேள்வி மற்றொரு கேள்வியை தான் தோற்றுவிக்கும்; ஒரு கேள்வி முடிவான பதிலை கொடுத்து விடாது.
ஞானம் பெறுவோருக்கு கேள்வி உகந்ததல்ல!
====================================
ஞான கல்வியை கற்க வேண்டும் என்கிற ஆசையில் ஒரு மனிதர் புத்தரிடம் வந்திருந்தார்.
வந்தவர் தன் நோக்கத்தை சொன்னதும் புத்தர், "உனக்கு நான் ஞான கல்வியை கற்றுத்தர சம்மதிக்கிறேன்; ஆனால் ஒரு நிபந்தனை! இரண்டு வருடங்களுக்கு என்னிடம் நீ எந்த கேள்வியையும் கேட்கக் கூடாது; இதற்கு சம்மதித்தால் இரு; இல்லை என்றால் செல்" என்று கூறினார்.
புத்த மடத்தில் நடந்த உரையாடலின் போது மடத்தின் ஒரு பகுதியில் படுத்திருந்த ஒரு துறவி, "அவர் பேச்சைக் கேட்காதே! அவர் உனக்கு எதையுமே சொல்லித் தர மாட்டார்; நானும் உன்னை போல தான் வந்திருந்தேன்; 'கேள்வி கேட்கக் கூடாது' என்று சொன்னார்; சரி என்று நான் இருந்து விட்டேன்; இப்பொழுது அந்தக் கேள்வியே என்னவென்று தெரியவில்லை; எல்லாம் மறந்துவிட்டது
இதுவரை எனக்கு எந்த ஞானமும் கிடைத்ததாக தெரியவில்லை; எனவே இப்பொழுதே நீ இங்கிருந்து ஓடி விடு" என்று கூச்சலிட்டார்.
பொதுவாகவே ஞானம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் குருவை தேடி வருகிறவர்கள் குருவிடம் கேள்விகள் அதிகம் கேட்கக் கூடாது என்பதுதான் முதல் நிபந்தனையாக இருந்ததாக வரலாறு சொல்கிறது.
ஆன்மிக மார்க்கத்தில்
அபூ ஹனிஃபா (ரஹ்)
============================
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்களை சந்தித்து ஆன்மீக போதனைகளை கேட்டு வந்த பிறகு சொன்ன வார்த்தைதான்
> لَوْلَا السَّنَتَانِ لَهَلَكَ النُّعْمَانُ
"இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்களோடு இரண்டு வருட தொடர்பு மட்டும் எனக்கு இல்லாமல் போயிருந்தால் நுஃமான் ஆகிய நான் அழிந்திருப்பேன்" என்ற சொல்.
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் மஸாயில் - சட்டம், குர்ஆன், ஹதீஸ் ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஆக உயர்ந்த உன்னத நிலையை அடைந்திருந்தாலும் ஆன்மீகத் துறையில் இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்களை சந்தித்த பிறகுதான் ஞானம் பெற தொடங்கினார்கள்.
ஷைகுவின் கரம் பிடித்து பைஅத் பெற்று ஆன்மீக வாழ்வு வாழ விரும்புவோர் அந்த ஷைகு اتصال سند - இத்திஸால் ஸனது / ஷைகிடமிருந்து நபிகள் நாயகம் வரை ஷைகுகளின் பாரம்பரிய தொடர் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.
இத்திஸால் ஸனது - ஷைகுமார்களின் இடை முறிவு இல்லாத ஸனது உடையவர்களை பின்பற்றினால் மட்டுமே நமக்கான ஞானம் முழுமையாகக் கிடைக்கும்.
முன்கதிவு - இடை முறிவு ஸனதுள்ள ஷைகுவாக உங்கள் ஷைகு இருந்தால் முழுமையான பயன் கிடைக்காது.
ஹதீஸ் தொடர் முழுமையாக இருந்தால் தான் அது ஸஹீஹான ஹதீஸ் என்று சொல்லப்படும்.
ஹதீஸில் ஒரு இடத்தில் ஒரு அறிவிப்பாளருடைய பெயர் விடுபட்டிருந்தால் அது இடை முறிவு உள்ள ஹதீஸ் - முழுமையாக நம்பத் தகுந்தது அல்லாத நபிமொழி என்று கூறுவர்.
எனவே இடை முறிவு இல்லாத ஒரு ஷைகுவை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு கரண்டு ஷாக் அடித்து இருக்கிறது; அவரை காப்பாற்ற சென்ற ஒவ்வொருவரையும் கரண்டு ஷாக் பிடித்துக் கொள்கிறது.
இவர்களில் இடையில் நிற்கும் ஒருவர் கரண்ட் ஷாக் அடித்துக் கொண்டிருக்கும் நபரை தொடாமல் நிற்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில் இவரை 20 பேர் வரிசையாக தொட்டுக் கொண்டிருந்தால் 20 பேருக்கும் கரண்ட் ஷாக் அடிக்குமா?
அடிக்காது தானே? அதாவது கரண்ட் கம்பத்திலிருந்து பத்தாவது ஆள் வரை கரண்ட் ஷாக் அடிக்கிறது; 11வது ஆள் பத்தாவது ஆளை தொடவில்லை.
ஆனால் பதினொன்னாவது ஆளுக்கு பின்னால் மேலும் 10 ஆட்கள் தொட்டுக் கொண்டிருந்தால் எப்படி ஷாக் அடிக்காதோ அது போலதான் உங்கள் ஷைகிடமிருந்து நபிகள் நாயகம் வரை ஷைகுமார்களின் சரியான தொடர்ச்சி இல்லாதவரால் உங்களுக்கு எந்த பயனும் இருக்காது.
ஆன்மா இல்லாத அழகிய வாழ்வு :
===============================
இமாம் ஜீலானி ரஹ் அவர்கள் கூறுவதாவது;
> كُنْ مَعَ الْخَالِقِ بِلا خَلْقٍ،
وَكُنْ مَعَ الْخَلْقِ بِلا نَفْسٍ
"படைப்புகளின் நினைவும், தொடர்பும் இல்லாமல் படைப்பாளனுடன் நீ இரு; 'நான்' என்ற உணர்வும், அகங்காரமும் இல்லாமல் படைப்புகளுடன் நீ இரு" என்று இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அதாவது, அல்லாஹ்வுடன் உன் இதயத்தை தொடர்பு படுத்தி வைத்திரு;
ஆனால் உலக படைப்புகள், ஆசைகள், விருப்பங்கள், பொருள்கள் ஆகியவற்றின்பால் மனம் சென்று விடாமல் விலகி இருக்க வேண்டும்.
நாம் தொழுவதை பிறர் பார்க்க வேண்டும்; நாம் தர்மம் வழங்குவதை பிறர் பார்க்க வேண்டும் என விரும்புகிறோம்.
அதே சமயம் நாம் ஃபோனில் தவறானவற்றை பார்ப்பதை பிறர் பார்த்துவிடக் கூடாது என ஆசைப்படுகிறோம்.
அதாவது எந்த வகை படைப்புகளோடும் தொடர்பில் இல்லாமல் படைத்தவனோடு மட்டும் தொடர்பில் இருக்கும் போது நமக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமே மிஞ்சி இருக்கும்.
“كُنْ مَعَ الْخَلْقِ بِلا نَفْسٍ”
'நான்' என்ற உணர்வும், அகங்காரமும் இல்லாமல் படைப்புகளுடன் ஒன்றி வாழ்!" என்பது “இக்லாஸ்” என்ற பண்பை குறிக்கின்றது.
மக்கள் மத்தியில் வாழும் ஒருவருக்கு நஃப்ஸ் - ஆன்மா இல்லாமல் இருக்க வேண்டும்; அதாவது பிறர் மீது வருத்தம், வன்மம், கோபம், புகழுக்கு மயங்குதல் போன்ற எந்த குணங்களுக்கும் ஆட்படாமல் சலனமே இல்லாமல் வாழ வேண்டும்.
பிறர் நமக்கு ஏற்படுத்தும் கோபம் நமக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது; நம்மை ஒருவர் புகழும் பொழுது அந்தப் புகழ் மொழியால் நம்மில் சந்தோஷம் வெளிப்பட்டு விடக்கூடாது. எல்லா நிலைகளையும் சமமாக பாவிக்கும் ஒரு மனநிலையை பெற வேண்டும்; அதுவே உயர்ந்த நிலை.
நூல்: அல் ஃபதஹுர் ரப்பானி வல் ஃபைழுர் ரஹ்மானி
ஏமாந்து விடாதீர் :
=================
ஒரு விஞ்ஞானி கல்யாணம் என்றால் என்ன என்று அனுபவபூர்வமாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு திருமணம் செய்தார்.
திருமண வாழ்க்கைக்குள் சென்று மனைவி, பிள்ளைகள், வேலை என அதில் உலன்றதால் தாம் ஒரு விஞ்ஞானி என்பதும், திருமணத்தை ஆய்வு செய்யத்தான் வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து முழுமையாக இல்லற வாழ்வில் ஈடுபட்டு விட்டார்.
உலகத்தில் எந்த ஒன்றையும் எளிதாக கற்றுக் கொள்ள இயலும்; அதற்குள் மூழ்கி விடவும் முடியும்.
ஆனால் ஞானம் பெறுவதற்கான வழிகளில் உள்ளே சென்று, வெற்று இதயத்தை பெற்றிடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல!
படிப்பதாலோ கேட்பதாலோ மட்டும் ஞானத்தை பெற்று விட முடியாது; மனதை ஓர் நிலைப்படுத்தி விடவும் முடியாது; ஞானம் பெற வேண்டுமானால் அதற்கான அமல் - பயிற்சிகளில் முழுமையாக நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த பயிற்சிதான் (அமல்தான்) நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.
அதே நேரம் இவரிடம் சென்றால் இவர் நம்மை ஞானியாகி விடுவார், சூஃபியாக்கி விடுவார் என்று யாரையும் நம்பி சென்று விடாதீர்.
யாராலும் நம்மை மாற்றவே இயலாது; நபிகள் நாயகம் அவர்கள் "ஒரு மலை நகர்ந்து வந்து விட்டது என்று சொன்னால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்று சொன்னால் நம்பி விடாதீர்கள்" என்று சொல்லி இருக்கிறார்கள்.
எனவே யாராலும் யாரையும் மாற்றவே இயலாது ஆனால் நம்மை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள இயலும்.
அதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை என்னவென்றால் நம்மிடத்தில் உள்ள கெட்ட செயல்கள், கெட்ட பேச்சுகள், கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடமிருந்து வெளியேற்ற வேண்டும்.
அதேநேரம் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விஷயங்கள், நல்ல செயல்கள், நல்ல சிந்தனைகள், நல்ல பேச்சுகள், நல்ல பார்வைகள், நமக்குள் வரும்போது ஒரு கட்டத்தில் நாம் முழுமையாக கெட்டவற்ற வெளியேற்றி முழுமையாக நல்லவற்றை உள்ளே கொண்டு வந்த நல்ல மனிதர்களாக ஆகி விடுவோம்.
இவ்வாறு செய்தால் மட்டுமே நாம் ஞானம் பெற முடியும்; மனதை ஓர் நிலைப்படுத்த இயலும்.
ஆடு மேய்ப்பவனின் தொழுகை :
============================
நல்வழியில் மற்றும் தனிமையில் அதிக நேரங்களை செலவழிப்போர் விரைவாக ஞானம் பெறுவர்.
ஆடு மேய்க்கிறவர் ஆட்டு மந்தையிலும், மாடு மேய்கிறவர் மாட்டு மந்தையிலும், ஒட்டகம் மேய்ப்பவர் ஒட்டக மந்தையிலும், விவசாயி தன் தோட்டத்திலும், வழிப்போக்கன் நடை பாதையிலும் தொழுவது மிகச்சிறந்தது.
ஏனென்றால் இவர்கள் பிறர் பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காக தொழுவது இல்லை; அல்லாஹுவை உண்மையாகவே வழிபடுகிறவர்கள் ஆவர்.
வீட்டிலும் பள்ளிவாசலிலும் தொழுவோரின் உள்ளத்தில் பிறர் பார்ப்பார்கள் ; நம்மை வணக்கசாலி என எண்ணுவார்கள்; பாராட்டுவார்கள் என்கிற எண்ணம் வந்து போக வாய்ப்பு உண்டு.
ஆனால் ஆட்டு மந்தையில் தொழுகிறவன் உள்ளத்தில் ஆடுகள் நம்மை பார்க்கும், பாராட்டும் என்று எனவே மாட்டான். எனவே தான் அவர்களின் தொழுகை சிறந்ததாக ஞானவண்கள் கருதுகிறார்கள்.
பிறர் பார்க்காத நேரங்களில், இடங்களில் எப்படி எல்லாம் இறைவனை வணங்க இயலுமோ அவ்வாறெல்லாம் வணங்க உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்; இறைவனை அன்மையை பெறுவீர்.
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 118 - 181 காலகட்டத்தில் இன்றைய துருக்கிமெனிஸ்தானில் உள்ள மர்வு என்னும் இடத்தில் பிறந்தார்கள்.
இவர்கள் ஒரு யுத்தத்திற்கு சென்றிருந்த போது ஒரு ஆற்றங்கரையில் தனது குதிரையை கட்டி வைத்துவிட்டு நஃபில் தொழுது கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் தொழுது முடித்துவிட்டு பார்த்தார்கள்; அவர்களுடைய குதிரையை காணவில்லை.
ஆங்காங்கே சென்று தேடிய பொழுது ஒருவரின் வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.
உடனே அந்தக் குதிரையை இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு அந்த வயலுக்கு உரியவரை தேடிச் சென்றார்கள்.
அவர் ஆற்றில் இருந்து வயலுக்கு தேவையான தண்ணீரை ஏற்றம் இறைத்து கொண்டிருந்தார்.
அவரிடம் சென்று, "எனது குதிரை தங்களின் வயலில் மேய்ந்து விட்டது; அந்தக் குதிரையை அதோ அந்த மரத்தில் கட்டி வைத்திருக்கிறேன்; தாங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் சென்று விட்டார்கள்.
இறைவன் கடமையாக்கிய யுத்தத்தை மேற்கொள்ளும் பொழுது பிறரின் வயலில் சாப்பிட்ட / அதாவது ஹராமான பொருளை சாப்பிட்ட ஒரு குதிரையில் ஏறி, இறைகடமையை எப்படி நிறைவேற்ற இயலும்? ஹராமான பொருளை சாப்பிட்ட குதிரையில் ஏறிச் சென்று ஹலாலான கடமையை எப்படி செய்ய இயலும்? என்று எண்ணிதான் அந்த குதிரையை வழங்கி விட்டார்கள்.
மனதை இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.
நூல்: ஸியர் அஃலாமு நுபலா
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் மிகப்பெரும் இறை நேசராக வாழ்ந்ததாக வரலாறு சொல்லிக் காட்டுகிறது; அதற்குக் காரணம் அவர்களின் மனத் தூய்மையும் மன ஓர்மையும்தான்.
மன ஓர்மை, அனைத்துத் துறையிலும் வெற்றி பெறுவதற்கான முதல் பயிற்சி.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரைய எண் : 18
நோன்பு கற்றுத் தரும்
வாழ்க்கை மேலாண்மை
==============================
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கும் ஒருவரின் உடலுக்கும், உள்ளத்துக்கும் முழுமையான ஓய்வு கிடைக்கின்றது.
பலர் வேலை பழுவின் காரணமாக வெளிநாடுகளுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் சென்று ஓய்வு எடுக்கிறார்கள்.
ஆனால் உலகத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களிலும் நோன்பாளிகளாக இருப்பவர்கள் சொந்த ஊரில், சொந்த வீட்டில் இருந்தவாறு ஒரு மாத காலம் முழுமையாக ஓய்வு எடுக்கிறார்கள்.
அவர்களின் உள்ளமும், உடலும் அந்த ஓய்வின் மூலம் மிகப்பெரும் புத்துணர்ச்சியையும், வலிமையையும் பெற்று பிற்காலங்களில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
உலக அளவில் மிக அதிகமாக சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் உலக வாழ்வை அனுபவிப்போர் எந்த மதத்தினர் என்று ஆய்வு செய்தால் அது முஸ்லிம்கள்தாம் என தெரிய வரும். அந்த மகிழ்ச்சியை தருவது நோன்பு.
நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் சாப்பிடாமல், தண்ணீர் பருகாமல், பலவீனமாக இருக்கும் பொழுது அவருக்கு கப்ரின் நிலையை (நீண்ட நெடுங்காலம் சாப்பிடாமல் பருகாமல் கப்ரில் இருக்கும் காலம் குறித்து) நினைவுறுத்துவதால் அவர் மரணத்தை நினைக்கவும் மறுமையை அஞ்சவும் நோன்பு நினைவூட்டுகிறது.
அதனால் அவர் தாம் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்ந்துக் கொண்டே இருப்போம் என்ற எண்ணங்களை உடைத்து, தவ்பாவை அதிகரிக்கச் செய்கிறது நோன்பு.
இன்று வாழும் மனிதர்களிடம் உள்ள பெரிய பிரச்சனை நேர மேலாண்மை இல்லாதது; நோன்பு, நேர மேலாண்மையை (Time Discipline) கற்றுத் தருகிறது.
ஸஹர் நேரத்தில் எழுந்து நேரத்திற்கு உண்ணுவது; இஃப்தார் நேரத்திற்கு செய்வது; ஐங்கால தொழுகைகளை நேரத்திற்கு தொழுவது; ரமலான் அல்லாத காலங்களில் ஃபஜ்ரு தொழுகையைத் தவற விட்டவர் ரமலான் 30 நாட்களும் இமாம் ஜமாஅத் தவறாமல் தொழுவது போன்ற முறைகளால் நேர மேலாண்மையை ரமலான் நோன்பு கற்பிக்கிறது.
பாலியல் ஆசை, உணவின் மீது ஆசை, கோபம் ஆகியவற்றை அடக்குவதற்கு பயிற்சி தருகிறது நோன்பு.
ஒரு மனிதன் தன் மனைவியை, தன் பிள்ளைகளை, தன் ஊழியர்களை கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் ஒருவன் தன்னை தானே கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினமானது என்று உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும்.
உங்களை நீங்களே அசால்டாக கட்டுப்படுத்த கற்றுத் தருகிறது நோன்பு; அதாவது உங்களை நீங்களே வெற்றிக் கொள்கிறீர்கள்.
நோன்பு, கண்ணுக்குத் தெரியாத ஓர் இறைவழிபாடு! தொழுகையை பார்க்கலாம்; ஜகாத்தை கணக்கிடலாம்; ஹஜ்ஜை அறியலாம்; ஆனால் நோன்பு அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் இடையிலான ஒர் ரகசிய ஒப்பந்தம்.
தன் இல்லத்தில் வகை வகையான ஆகாரங்கள் இருந்தும், எவரும் பார்க்காமல் இருந்தும் ஒருவர் நோன்பை காப்பாற்றுகிறார் என்றால் அதுவே உண்மையான ஈமானின் வெளிப்பாடு. நோன்பு ஈமானை உறுதிப்படுத்தும் ஒரு வணக்கம்.
அதிகாரம், அறிவு, பணம் ஆகியன இன்று எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கின்றது; ஒரு லிஃப்டில் மாட்டிக் கொண்டவன், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவன், பாலைவனத்தில் பயணிக்கின்றவனிடம் ஒரு டம்ளர் தண்ணீர் இல்லை என்றால் அவன் பலவீனம் அடைந்து விடுகிறான்.
ஏழையும் பணக்காரனும் ரமலான் நோன்பு நோற்கும் பொழுது மதிய நேரத்திற்கு பிறகு இருவரும் பசியையும் தாகத்தையும் சமமாக உணர்கிறார்கள்; அதனால் பெருமை, ஆணவம் ஆகியன உடைந்து பணிவு பிறக்கின்றது.
நல்ல எண்ணங்களையும், நல்ல சிந்தனைகளையும் உண்டாக்கி, இதுவரை வாழ்ந்த வாழ்வை வேறு ஒரு வகையில் வாழ பழக்கி தருகிறது நோன்பு.
சுதந்திரமாக செயல்பட்டு வரும் மனிதன் அடிமையாக வேண்டுமானால் அவன் பசி, ஆசைகள், அன்றாட பழக்க வழக்கங்கள் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்த வேண்டும்; இதை கட்டுப்படுத்த கற்பிப்பது நோன்பு.
எனவே ஒரு மனிதன் ரமலானுடைய நோன்பையோ அல்லது மற்ற நோன்புகளையோ முறையாக நோற்று வருவானேயானால் அவன் உண்மையான அல்லாஹ்வின் அப்து - அடியானாக ஆகிவிடுவான்.
வலி, முஹ்ஸின், ஸாலிஹ், முஃமின் முஸ்லிம், முத்தகீ ஆகியன ஆன்மீக ராஜபாட்டையில் ஒரு தரஜா - படித்தரம்.
இந்த தரஜாக்களில் ஆக உயர்ந்த நிலை அப்து - அல்லாஹ்வின் அடிமை எனும் நிலையை அடைவது தான்; அந்த நிலையை அடைய இந்த ரமலானுடைய நோன்பு வழி வகுக்கின்றது.
இதயம் இறைஒளியால்
நிரம்புவதே நோன்பு
=============================
நோன்பு உடல் வழிப்பாடு மட்டுமல்ல! இதயத்தை சுத்தம் செய்யும் இனிய மாமருந்து.
நோன்பு, வயிற்றை காலியாக வைத்திருப்பதல்ல! இதயம் இறை ஒளியால் நிரம்பி இருப்பதுதான்!
உணவை தவிர்ப்பது எளிது! பாவங்களை தவிர்ப்பதே உண்மையான நோன்பு!
மனிதன் நோன்பு நோற்கும் பொழுது, அவனுடைய கண், நாவு, காது, ஆகியன கூட நோன்பு நோற்க வேண்டும்.
கப்பலில் இருந்து நங்கூரத்தை கடலில் போட்டு கப்பலை உறுதிப்படுத்துவது போன்றது நோன்பு; மனிதனின் இதயத்தையும், உடலையும் உறுதியாக வைத்திருக்கும்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு ரமலானையும் எதிர்பார்த்து காத்திருந்து நோன்பு நோற்பார்கள்.
நோன்பு நோற்பதற்கு சிறிதளவுதான் உணவை பயன்படுத்துவார்கள்; சில சமயங்களில் ஒரு பேரித்தம் பழத்தை சாப்பிட்டு ஸஹர் செய்வார்கள்.
நஃபில் நோன்பு என்று எதுவெல்லாம் உள்ளனவோ அவை அனைத்தையும் நேமமாக நோற்று வந்தார்கள்.
இளமைக் காலத்தில் ஒரு முறை இரண்டு வருடங்கள் தினமும் நோன்பு நோற்று தன் ஈமானை வலுப்படுத்திக் கொண்டார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் நடத்தி வந்த பாடசாலையில் ஒவ்வொரு நாள் ஸஹர் நேரத்திலும் 400 பேருக்கும் மேற்பட்டோர் உணவு உண்ணுவார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ரமலான் மாதத்தில் பஸராவிலிருந்து பக்தாத் நோக்கி பயணமானார்கள்.
பயணத்திலும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டே இருந்தார்கள்; கடும் வெப்பத்தின் காரணமாக பசி, தாகம் மற்றும் மிகவும் உடல் சோர்ந்து பக்தாத் நகரத்திற்குள் நுழைந்தார்கள்.
அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் வந்த இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இளைப்பாறினார்கள். அப்பொழுது அந்த வீட்டில் வசித்த வயதான பெண்மணி! "மகனே! நீண்ட தூரமாக இருந்து வந்திருக்கிறாய் போல் தெரிகிறது; பசி தாகமாக இருக்கின்றதா?" என்று கேட்டார்.
அதற்கு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "நான் நோன்பு நோற்று இருக்கிறேன்" என்று சொன்னார்கள்.
அந்தப் பெண்மணி, "இன்று பக்தாதில் கடுமையான புயல் வீசியது; என் குழந்தைகளும் கூட நோன்பு நோற்று இருக்கிறார்கள்; நானும் நோன்பு நோற்று இருக்கிறேன்; ஆனால் வீடு இருக்கின்றது இஃப்தாருக்கு என்று எதுவும் இல்லை" என்று நாதழுதழுக்க கூறினார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தன் பையில் வைத்திருந்த உணவையும் சிறிதளவு பணத்தையும் எடுத்துக் கொடுத்து, "இன்றைய இஃப்தாருக்கு இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அந்த வயதான பெண் மன மகிழ்வின் உச்சத்திற்கு சென்று, "மகனே! அல்லாஹ் உன்னை உலகத்திற்கு வழிகாட்டியாக ஆக்கட்டும்" என்று பிரார்த்தித்து அனுப்பி வைத்தார்.
பிற்காலத்தில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அந்தப் பெண்ணின் துஆவுக்கு உரியவராக முழுமையாக ஆகியிருந்ததை நீங்களும் நானும் அறிந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நோன்பாளிக்கு நோன்பு துறக்க உதவுவது உயர்ந்த செயல்! எதிர்வரும் ரமலானில் அதை நாம் செய்வோம்.
சுவையான உணவு என எது தீர்மானிக்கிறது? உடலா? உணவா?
============================
இறைநேசர் ஸயீத் பின் அபீ அருப்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் ஹஜ்ஜுக்குச் சென்று கொண்டிருந்தான்.
வழியில் ஓர் இடத்தில் கூடாரம் அடித்து தங்கியிருந்த போது பணியாளர்களிடம், "காலை உணவை கொண்டு வாருங்கள்" என கூறினான். தனது மெய்காப்பாளரிடம் "இப் பகுதியில் வாழும் எவரேனும் ஒரு மனிதன் இருந்தால் அவரை அழைத்து வந்து என்னுடன் சாப்பிட ஏற்பாடு செய்! அவனிடம் இப்பகுதியின் நிலைகள் குறித்து விசாரித்துக் கொள்வேன்" என கூறினான்.
உடனே மெய்காப்பாளன் மலைகள் காடுகள் என பல மைல் தூரம் சுற்றித்திரிந்து பார்த்தபோது ஒரு கிராமப்புற மனிதர் இரண்டு போர்வைகளைப் போர்த்தியவராக படுத்துறங்கிக் கொண்டிருந்தார்.
அவரைக் காலால் எட்டி உதைத்து தூக்கத்திலிருந்து எழுப்பி, "என்னுடன் வா! உன்னை அமீர் அழைத்து வரச் சொன்னார்" என்றான்.
கிராமப்புற மனிதர் வந்ததும் ஹஜ்ஜாஜ் அவரிடம் "கைகளைக் கழுவிக்கொண்டு என்னுடன் உண்ண வா" என்றான்.
கிராமத்தார் : - உன்னை விட உயர்ந்தவன் எனக்கு விருந்திற்கு அழைத்துள்ளான்.
ஹஜ்ஜாஜ் :- அவன் யார்?
கிராமத்தார் :- அல்லாஹ் என்னை நோன்பு நோற்குமாறு அழைத்து இருக்கின்றான்.
ஹஜ்ஜாஜ் :- இவ்வளவு கடுமையான வெப்பத்தில் நோன்பு நோற்று இருக்கிறாயா?
கிராமத்தார் :-
ஆம்! இன்றைய வெப்பத்தை விட மஹ்ஷர் மைதானத்தில் உண்டாகும் வெப்பத்தை நினைத்தும், நரக நெருப்பின் வெப்பத்தை நினைத்தும் இன்று நோன்பு நோற்றுள்ளேன்!
ஹஜ்ஜாஜ் :- இன்றைக்கு என்னுடன் சாப்பிட்டுக் கொள்! நாளை நோன்பு வைத்துக்கொள்!
கிராமத்தார் :-
நான் நாளை வரை உயிர் வாழ்வேன் என்பதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக இருந்தால் நான் நோன்பை முறித்து உங்களோடு உண்ணுகிறேன்.
ஹஜ்ஜாஜ் :- இந்த விஷயத்தில் யார்தான் பொறுப்பேற்க முடியும்?
கிராமத்தார் :-
அப்படியென்றால் ரொக்கமாகக் கிடைப்பதை கடன்மீதா விட்டு விடுவது? அதுவும் அந்தக் கடனுக்கு நீர் பொறுப்பேற்கவும் தயாரில்லை.
ஹஜ்ஜாஜ் :- இந்த உணவு அறுசுவையுடையது.
கிராமத்தார் :- ஓர் கவிதையைப் படித்துக் கொண்டே சென்றார்.
நீரும் இதனை ருசியானதாக ஆக்கவில்லை!
உன் சமையல்காரனும் ருசியானதாக ஆக்கவில்லை.
உடல் சுகம்தான் ருசியுள்ளதாக ஆக்குகிறது.
எனக்கு உடல் நலமில்லை என்றால் எந்த உணவும் ருசியாக இருக்காது.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த உணவும் சுவையாகவே தெரியும்.
கிராமத்தாரின் கவிதைகளை கேட்டதும் ஹஜ்ஜாஜ் மௌனமானான்.
நூல் : ஹுல்யதுல் அவ்லியா
வித்தியாசமான முறையில் ஆன்மீகத்தை போதித்த அண்ணல் நபி :
==============================
அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது;
(ஒரு பயணத்தில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத் தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது; ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை.
நோன்பு நோற்காமல் விட்டு விட்டவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "இன்று நோன்பை (நோற்காமல்) விட்டவர்கள் மறுமையில் (அதிக) நன்மையைக் கொண்டு சென்றார்கள்" என்று கூறினார்கள். நூல் : புகாரி
ஆன்மீகம் என்றால்
தினமும் நோன்பு நோற்பது,
நீண்ட நேரம் தொழுவது,
தனிமையில் இபாதத் செயவது மட்டும் அல்ல! பொதுமக்களுக்கு சேவை செய்வதும் பெரும் இபாதத்துதான்! அதிலும் நஃபிலான நோன்பை விட பெரிய இபாதத்!
நஃபிலான நோன்பை நோற்பது தவறு என்று நபிகள் நாயகம் அவர்கள் இந்த நபிமொழியில் சொல்லவே இல்லை.
ஆனால் பொதுச் சேவை செய்வது நோன்பு நோற்பதை விட அதிகமான தன்மையைப் பெற்று தரும் என்று சொல்லி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் நோன்பு நோற்று கொண்டு பள்ளிவாசலில் படுத்து உறங்குகிறார்; மற்றொருவர் பிறருக்காக கழிவறைகளையும், உளூ செய்யும் இடங்களையும் சுத்தம் செய்து வைக்கிறார் என்றால், கழிவறைகளை சுத்தம் செய்கிறவர் நோன்பாளியை விட எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல என்பதை இந்த நபிமொழி உணர்த்துகிறது.
எத்தனை வகையான இபாதத்துகளை செய்தோம் என்பதை விட எத்தனை பேருக்கு பயன் உள்ளவராக இருந்தோம் என்பதில்தான் அதிகம் நன்மை உண்டு!
தொழுகை, நோன்பு போன்ற இபாதத்துகள், உள்ளத்தை சுத்தமாக்கும்; சேவைகள் சமூகத்தை சுத்தமாக்கும்.
நஃபிலான வணக்கங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட சமூக சேவைக்கு கிடைக்கும் நன்மை மிக அதிகம் என்பதை மேற்கண்ட நபிமொழி வலியுறுத்துகிறது.
எனவே ரமலான் காலங்களில் பொது மக்களுக்கு சேவையும் செய்து வந்தால் நமக்கு இரட்டிப்பு நன்மை கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்தி இரண்டையும் ஒருசேர செய்ய முயற்சிகளை செய்யுங்கள்.
டிஜிட்டல் பாவங்கள்
=====================
நோன்பு நோற்பதால் இறையச்சம் பெருகக்கூடும் என இறைவன் கூறுகிறான்; ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இறையச்சத்தை பெறுவதற்கு மனிதன் பல வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
அதிவேக இணையத்தை பெற்றுள்ள ஒவ்வொருவரும் எல்லையற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் ஆழமாக ஆன்மீக அம்சங்களில் கவனம் செலுத்த இயழுவதில்லை.
அதிவேக இணையம் வந்த பிறகு ஒவ்வொருவரின் கவனம், மன அமைதி, சமூக உறவுகள், சுய கட்டுப்பாடுகள் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இஃப்தாருடைய நேரத்தில் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்து பள்ளிவாசலில் அமர்ந்து துஆ செய்ய வேண்டும். ஆனால் பலர் பள்ளிவாசலில் அமர்ந்து அந்த நேரத்திலும் ஸ்மார்ட் ஃபோன்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
மார்க்க சட்ட அடிப்படையில் இவை நோன்பை முறிக்காது என்று இருந்தாலும் தக்வாவை அறுவடை செய்ய வேண்டிய அந்த நேரம் இன்று வேண்டுமென்று வீணாக்கப்பட்டு வருகிறது.
ஒருபுறம் டிஜிட்டல் தொழில்நுட்பம் மார்க்க அறிவை ஆழமாக வழங்கினாலும் மற்றொருபுறம் அமைதி, ஆழ்ந்த சிந்தனை, மனவோர்மையை தரக்கூடிய தரமான நோன்பிற்கு இவை தடையாக வந்து நிற்கின்றது.
தவறான செய்திகளை பரப்புவது, ஆபாசங்களை பரப்புவது, ஆபாசங்களை பார்ப்பது, வதந்திகளை பரப்புவது போன்ற செயல்களால் ஆன்மீக அடிப்படையில் நோன்பு முறிந்து விடும் என்று ஞானவான்கள் கூறுவார்கள்; ஆனால் ஃபிக்ஹு மார்க்க அடிப்படையில் நோன்பு முறியாது என்பதே உண்மை.
இவ்வாறான தவறான செயல்களை தொடர்ந்து செய்யும் பொழுது இறையச்சம் பெறுவது முற்றிலும் கேள்விக்குறியாகிவிடும்.
இது போன்ற தவறான செயல்களை தொடர்ந்து செய்வதால் இவை சாதாரணமான செயல் என்று மனம் தொடர்ந்து என்ன தொடங்கிவிட்டது.
இதனால் மிகச் சரியாகவும் முறையாகவும் நோன்பு நிறைவேற்றப்பட்டாலும் ஆன்மீக அடிப்படையில் நோன்பு இன்று முற்றிலும் தோல்வியடைந்து சடங்காக மாறி இருக்கிறது என்பதே உண்மை.
இப்படிப்பட்ட நோன்பை வெறுமையான நோன்பு அதாவது எந்த பயனையும் ஏற்படுத்தாதது என்று சொல்லலாம்.
எனவே இந்த ரமலான் மாதத்தில் இணையங்களில் இணையாமல் இறைவனோடும் பிற மனிதர்களோடும் இணைந்து வாழ முன் வாருங்கள்.
இணையம் செய்யும் கூத்துகளை ஆழமாக சிந்தித்து அறிஞர்களும், ஆலிம்களும் சமூகத்திற்கு சரியான வழி காட்ட நல்ல கருத்துக்களை எழுதுங்கள், பேசுங்கள்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை என் 17
ரமலான் நோன்பும் உடல் நலமும் உலகளாவிய மருத்துவ ஆய்வுகள்
====================================
இஸ்லாம் கிறிஸ்துவம், இந்து மதம், யூத மதம் போன்ற பல்வேறு மதங்களின் மரபுகளில் நோன்பு - உண்ணாவிரதம் இருப்பது பரவலான மரபாகும்.
விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை சுமார் 13 மணி நேரம் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் உண்பதையும் குடிப்பதையும் தவிர்த்து நோன்பு நோற்கிறார்கள்.
நோன்பு நோற்கும் இந்த முறை 1447 வருடங்கள் பழமையானது. உலகத்தில் வாழும் 30% சதவீத முஸ்லிம்களில் 23% சதவீத முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள்.
உலகத்தில் உள்ள 195 நாடுகளில் 50 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
இவர்கள் அந்தந்த நாடுகளின் பல்வேறு சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தாலும், இஸ்லாம் மார்க்கத்தின் ஒரே சட்டத்தை பின்பற்றி உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு நோன்பு நோற்று வாழ்கிறார்கள்.
ரமலான் நோன்பின் நேரங்கள் ஒவ்வொரு நாட்டின் அட்சரேகையை பொறுத்து (பூமியின் 23½° சாய்வு காரணமாக) மாறுபடும்.
நார்வே நாட்டில் அதிகபட்சம் 4 மணி நேரமும், ஸ்வீடன் நாட்டில் அதிகபட்சம் 6 மணி நேரமும், பின்லாந்து நாட்டில் அதிகபட்சம் 5 மணி நேரமும், ஐஸ்லாந்து நாட்டில் அதிகபட்சம் 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரையும், ரஷ்யாவின் வடபகுதியில் 4 மணி நேரமும், கனடாவின் வடபகுதியில் 6 மணி நேரமும், அலாஸ்கா நாட்டில் 4 மணி நேரமும், கிரீன்லாந்து நாட்டில் 4 மணி நேரமும் மட்டுமே இரவு இருக்கும். இதை (Polar Night) இருக்கும் நாடுகள் என்று கூறுவர்.
அதாவது சுமார் 20 மணி நேரம் இங்கெல்லாம் பகல் நேரம் காணப்படும்; எனவே அட்சரேகையை கவனித்து ஒவ்வொரு நாட்டின் இரவு, பகல் கூடுதலாகும் குறைவாகவும் காணப்படும்.
அண்டார்டிகா போன்ற பகுதிகளில் ஆறு மாதங்கள் பகலும், ஆறு மாதங்கள் இரவு மட்டுமே இருக்கும்.
இந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் பகலில் நோன்பு நோற்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக 20 மணி நேரமும் அவர்கள் நோன்பு நோற்றுதான் ஆக வேண்டும்.
அதே நேரம் மேற்கண்ட நாடுகளின் சில நாடுகளில் குளிர்காலத்தின் போது தொடர்ந்து 24 மணி நேரமும் கூட இரவு இருக்கும் அதாவது பகலே இருக்காது. அப்படிப்பட்ட காலங்களில் இடங்களில் வாழ்வோர் நோன்பு நோற்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட அண்டார்டிகா போன்ற நிலப்பரப்பில் யாரும் வாழ்வதில்லை.
எனவே ரமலான் நோன்பு முஸ்லிம்களின் மூன்றாவது கடமையாகும். இதை அவர்கள் கவனமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக குர்ஆனை ஓதவும், தொழவும், நோன்பு நோற்கவும், பிரார்த்தனைகள் செய்யவும் செய்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதால் உணவு நேர மாற்றங்கள், தூக்கத்தின் அளவில் மாற்றங்கள், ஒளி வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்கும் நிலை, உடற்பயிற்சி முற்றிலும் தடை படுகிற நிலை போன்ற காரணங்களால் உடலில் சுரக்கும் 18 வகையான ஹார்மோன்கள் பாதிக்கப்படலாம் என ஒரு ஆய்வு உள்ளது.
'பாதிக்கப்படலாம்' என்கிற விதத்தில் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது; ஆனால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற எந்த ஆய்வு முடிவும் இல்லை.
எனவே உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாக இஸ்லாம் இருப்பதாலும், அந்த மார்க்கத்தில் உள்ள ஒரு கடமையான நோன்பை பெரும்பாலான முஸ்லிம்கள் கண்டிப்பாக பின்பற்றி வருவதாலும், அந்த நோன்பு குறித்து உலக அளவில் முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் பல ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.
முஸ்லிம்கள் நோன்பு நோற்பதால் அவர்களின் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படுகிற மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து முஸ்லிம் மருத்துவராலும், முஸ்லிம் அல்லாத மருத்துவர்களாலும், ஆய்வாளர்களாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
அப்படி ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள பல ஆய்வு அறிக்கைகளை நான் கண்டேன்; அவற்றிலிருந்து நமது தமிழ் சமூகத்திற்கு பயண்மிக்க சில ஆய்வு முடிவுகளை இந்த ரமலானில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இதை வாசிக்கின்ற அனைவரும் எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் காலம் சென்ற எனது மூதாதையர்களுக்காகவும் துஆ செய்யும்படி வேண்டுகோள் வைக்கின்றேன்.
நோன்பு நோற்பதால் உடல் எடை கூடுமா குறையுமா?
============================
முதல் கொரோனாவின் போது வந்த ரமலான் மாதத்தில் துருக்கி நாட்டில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரமலான் மாதத்தில் 13 மணி நேரம் உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்பதாலும், தூக்கத்தின் நேரமும் அளவும் மாறுப்படுவதாலும், கொழுப்பு சத்து சார்ந்த உணவுகள் அதிகமாக உட்கொள்வதாலும், சர்க்கரை அதிகமாக உள்ள குடிபானங்கள் அதிகமாக குடிப்பதாலும் எதிர்பாராத அளவிற்கு உடல் எடை கூடவும் குறையவும் வாய்ப்பு இருக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்களில் 1669 நபர்களிடம் கூகுள் வழியாக படிவங்களை வழங்கி அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த முடிவு காணப்பட்டுள்ளது.
1669 பேரில் 53.6% சதவீதம் பேர் பெண்களும் 49.4% சதவீதம் பேர் ஆண்களும் பங்கேற்றனர். அதாவது 775 ஆண்களும் 894 பெண்களும் பங்கேற்றனர். இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் தமக்கு கூடுகிற குறைகிற எடையை சாதாரணமாக கருதியவர்கள் ஆவர்.
ரமலான் மாதத்தில் உடல் உழைப்பு குறைவதாலும், உடற்பயிற்சி முற்றிலும் நின்று போவதாலும், கொழுப்பு சத்து உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதாலும் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சுறுசுறுப்பு குறைவாக உள்ளவர்கள், அதிக அளவு கொழுப்பு சத்து சார்ந்த உணவுகள், சர்க்கரை அதிகமாக உள்ள பானங்கள் குடித்தவர்களின் எடை அதிகரித்து இருந்தது.
நோன்புக்கு முன்பே அதிக எடை இருந்தவர்களுக்கு 1.67 கிலோ கிராம் எடை நோன்பு நோற்றதால் குறைந்து காணப்பட்டது. அதுபோலவே கொழுப்பின் அளவு 1.47 முதல் 2.57 வரை கொலஸ்ட்ரால் குறைந்தும் காணப்பட்டது.
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கடல் உணவுகள், பருப்பு வகைகள், மிதமான அளவு பால் பொருட்கள், சிவப்பு இறைச்சி வகைகள், இனிப்பு உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றை மிக கவனமாகவும் நடுநிலையாகவும் உட்கொண்டவர்களுக்கு உடல் எடை கூடவும் செய்யாமல் குறைவும் செய்யாமல் கொழுப்பு சத்து மட்டும் குறைந்து காணப்பட்டிருந்தது.
எனவே 13 மணி நேரம் தொடர்ந்து பட்டினியாக இருப்பதால் அதிகம் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் தானாகவே தோன்றும். அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் தருவது தவறு.
சராசரியான எடை குறைவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட சதவிகித ஆண்களுக்கு பெண்களை விட அதிக எடை குறைவு காணப்பட்டது.
இந்த ஆய்வில் கவலைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களில் 70% பேர் அதிக உடல் எடை பருமன் உடையவர்களாக இருந்தார்கள். இது மிகவும் ஆபத்தான போக்காகும்.
இப்படிப்பட்டவர்கள் தம் உடல் எடை விஷயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரும் ஆபத்தைத் தரக்கூடிய இருதய நோய், நீரழிவு நோய், புற்றுநோய் போன்றவற்றை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை இந்த நோய்கள் மிக எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.
நோன்பின் நோக்கம் இறைநெருக்கம் பெறுவதே முக்கிய காரணமாக இருந்தாலும், உலகில் வாழும் மனிதர்களுக்கு உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் அல்லாஹ் நோன்பை கடமையாக்கி இருக்கிறான் என்றே என்ன தோன்றுகிறது.
ஒவ்வொரு தனி நபருக்கும் பாடம் புகட்டும் வகையில் நோன்பு அமையப்பெற்றுள்ளது என்று சொன்னாலும் மிகையல்ல!
அதிகரித்து வரும் உடல் பருமனை நோன்பு உண்மையாகவே கட்டுப்படுத்துகிறது; மேலும் சுகாதார கட்டமைப்பை நோன்பு உருவாக்கித் தருகிறது. மேலும் விவரமாக அறிய
https://onlinelibrary.wiley.com/doi/10.1155/jnme/8851660
ரமலான் நோன்பு நோற்ற பாலூட்டும் பெண்கள்
=====================================
குழந்தைகளுக்கு பால் குடிப்பாட்டும் பெண்கள் நோன்பு நோற்க இஸ்லாம் விலக்கு அளித்திருந்தாலும் சிலர் நோன்பு நோற்று இருக்கின்றனர்; அவ்வாறு நோன்பு நோற்ற பெண்கள் குறித்த ஒர் ஆய்வு.
எகிப்து டக்காலியா கவர்னர்ரேட் பகுதியில் வாழ்ந்த பாலூட்டும் பெண்களிடையே பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் குழந்தைகளுக்கு பாலூட்டும் 1130 பெண்கள் பங்கெடுத்தனர்.
இவர்களில் 53 % சதவீதம் பேர் 27 வயது உடையவர்கள். மற்றவர்கள் பல தர வயது உடையவர்கள் ஆவர்.
இந்த 1130 பெண்களில் 83.7% சதவீதம் பெண்கள் நோன்பு நோற்றனர். கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றதின் மூலமாக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரமலான் காலங்களில் பால் குடிப்பாட்டும் பெண்கள் நோன்பு நோற்பதால் அவர்களின் உடலுக்கோ குழந்தைகளின் உடலுக்கோ சொல்லிக் கொள்ளும்படியான பெரும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிய வந்தது.
ஸஹருடைய உணவிலும், இஃப்தார் உடைய உணவிலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பெண்கள் தாராளமாக நோன்பு நோற்கலாம்.
மேலும் பாலூட்டி கொண்டு நோன்பு நோற்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் எதுவுமே நேராது.
மேலும் விரிவாக காண.
https://www.liebertpub.com/doi/10.1089/bfm.2024.0325
2021 ஆம் ஆண்டு இதே ஆய்வு குழுவினர் நோன்பு போற்ற 21 பெண்களிடமும், நோன்பு நோற்காத 27 பெண்களிடமும் அவர்களின் தாய்ப்பாலை சேகரித்து அதில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், லிப்பிட் அளவுகள் மற்றும் பல்வேறு ஆற்றல்கள் குறித்து ஆய்வு செய்தனர் .
அதில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த மாற்றமும் இரண்டு வகை பெண்களின் பாலிலும் காணப்படவில்லை.
நோன்பு நோற்ற பெண்களுடைய பாலின் தரமும் நோன்பு நோற்காத பெண்களுடைய பாலின் தரமும் ஒரே அளவில் தான் இருந்தது.
நோன்பு நோற்ற பெண்களின் பாலில் லிப்பிட், சோடியம், குளோரைடு, அயோடின், ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் மட்டும் சற்று அதிகரித்து காணப்பட்டது. குழந்தைகளின் எடை விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை; இரண்டு வகை பெண்களிடமும் இருந்த குழந்தைகளிடம் ஒரே மாதிரியான எடை தான் இருந்தது.
https://www.liebertpub.com/doi/full/10.1089/bfm.2023.0144
ரமலான் நோன்பு நோற்ற முஸ்லிம் கர்ப்பினி பெண்கள் :
====================================
வடமேற்கு நைஜீரியாவின் கடுனா எனும் பகுதியில் வாழ்ந்த முஸ்லிமான கர்ப்பிணி பெண்களிடம் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு.
ரமலான் மாத நோன்பை முழுமையாக நோற்ற பெண்களுக்கும் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கும் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படுகின்றதா என்கிற வகையில் 1814 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ரமலான் காலங்களில் இவர்களுக்கு தூக்கமின்மை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
2024 ஆம் ஆண்டு உள்ள ரமலான் மாதத்தில் இந்த பெண்கள் நோன்பு நோற்று இருந்தார்கள்.
இவர்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பெறப்பட்ட பதிலின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
1814 பெண்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் 1370 பெண்கள் முதன் முதலில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் ஆவர்.
இந்த 1814 பெண்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று இருந்தார்கள்; அதாவது 1418 பேர் நோன்பு நோற்று இருந்தார்கள்.
நோன்பு நோற்றிருந்த பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் 90.38 முதல் 173.64 கிராம் அளவு குழந்தைகளின் எடை குறைந்து இருந்தது.
நோன்பு நோற்காத கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகளின் எடை சுமார் 100 கிராம் வரை எடை அதிகமாக காணப்பட்டது.
தூக்கம் குறைந்ததால் கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லும் படியான குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
உலக அளவில் முஸ்லிம்கள் 30% பேர் வாழ்கிறார்கள்; அவர்களில் ரமலான் காலங்களில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கை தான் இது.
உலக நாடுகளில் நோன்பு காலங்களை சந்திக்கும் முஸ்லிம் நோயாளிகள், முஸ்லிம் கர்ப்பினிகள் அந்த காலங்களை எப்படி கடந்து செல்வது என்பது குறித்து உலகம் முழுவதும் ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியே ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது. அந்த ஆய்வு அறிக்கைகளும் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவர்களால் ஒரு மாத உண்ணாவிரதத்தால் உலகத்திற்கு ஏற்படுகிற பயன் என்ன என்பது குறித்து மறைமுகமாக ஆய்வு செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றது.
நாங்கள் கர்ப்பமுற்றிருக்கும் போதுதான் ரமலான் மாதம் முழுவதையும் நோன்பு நோற்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கிறது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவே நோன்பு நோற்கிறோம் என்று பல பெண்கள் கூறினார்கள்.
மேலும் விபரங்களுக்கு
https://link.springer.com/article/10.1186/s12884-025-07158-2
நோன்பாளிகளுக்கு கண்கள் வறண்டு போகுமா?
=============================
2024 ஆம் ஆண்டு ரமலான் நோன்பு நோற்ற 13 ஆண்கள் மற்றும் 27 பெண்களிடம் ஒரு ஆய்வு செய்யப்பட்டது.
சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சராசரி ஆண்களின் வயது 38.17 பெண்கள் சராசரி வயது 38. 07.
12 மணி நேரங்களில் இருந்து 13 அரை மணி நேரம் வரை உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்கும் பொழுது அவர்களுடைய கண்கள் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகுமா? கண்கள் வறண்டு போகுமா? நீர் சத்து குறைவதால் ஏதேனும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஷுடான் வாங் , ஸ்கெபன்ஸ் கண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி, அமெரிக்கா ரோவாய்டா அலீல்டின் , ஷெஃபீல்ட் டீச்சிங் ஹாஸ்பிடல்ஸ் NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட், யுனைடெட் கிங்டம்
அலி லாமின் , மான்செஸ்டர் பல்கலைக்கழக NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (MFT), யுனைடெட் கிங்டம் ஆகிய மருத்துவ ஆய்வு கழகத்தின் உயர்நிலை மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையை 08 ஜனவரி 2025 அன்று Takayoshi Masuoka , கனசாவா மருத்துவ பல்கலைக்கழகம், ஜப்பான் மதிப்பாய்வு செய்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுவதாவது.
ரமலான் மாதத்தில் தொடர்ந்து 12 நாட்கள் நோன்பு நோற்ற 40 பேரிடம் கண் வறட்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ரமலான் நோன்பு முடிந்து ஒரு வார காலம் நோன்பு நோற்காமல் இருந்த பிறகு ஒரு வாரம் மீண்டும் கண் பரிசோதனைகள் செய்வது என்கிற அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது.
அவர்கள் நோன்பு நோற்று இருக்கும் போது கண் சிறிதளவு வறண்டு இருந்தாலும் அதை 0.001 என்று சொல்லப்படுகிற அளவிற்குகூட சிறிதளவு வறட்சியும் வெளியில் தெரியவில்லை.
அதே நேரம் கண் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சொட்டு மருந்துகள் கண்களுக்கு விடாமலே 0.05 என்கிற அளவில் அவர்களின் நோயின் அளவு குறைந்து இருந்தது.
நீண்ட நேரம் திரவ உணவுகள் உட்கொள்ளாததால் குறிப்பிடும்படியான எந்த மாற்றமும் கண்களுக்கு ஏற்படவில்லை என தெரியவந்தது.
அதே நேரம் ரமலான் மாதத்தில் அதிகாலையில் எழுந்து விடுவதாலும், இரவு நீண்ட நேரம் கழித்து உறங்குவதாலும் மொத்தத்தில் ரமலான் மாதத்தில் தூக்கம் குறைவதால் கண் சுரப்பிகளில் சில மாற்றமும், கண் சவ்வு படலம் பரவுதல் போன்ற சில மாற்றங்கள் ஏற்படுகின்றது. இவை நோன்பு நோற்பதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அல்ல!
இந்த ஆய்வின்போது காண்டாக்ட் லென்ஸ் அணிந்தவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கண் பார்வை குறைவுக்காக கண்ணாடி அணிந்து இருப்பவர்கள், கண்ணில் எந்த குறைபாடும் இல்லாமல் இருப்பவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.
நோன்பாளிகளில் சிலருக்கு கண் வறட்சி சற்று இருந்தாலும் நோன்பு காலங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சமநிலைக்கு வந்துவிடுகிறது.
குறைந்த அளவு உள்ள கண் வறட்சியினால் மிகப் பெரும் பாதிப்பு எதுவும் இல்லை; அது போலவே இப்பொழுது ஏற்பட்ட வறட்சியினால் நீண்ட காலத்துக்குப் பிறகு அவை பாதிப்பை ஏற்படுத்தாது.
முதல் வாரத்தை விட மூன்றாவது வாரத்தில் கண்ணீர் சுரப்பிகளில் இருந்து நீர் சுரப்பது 0.0001 % சதவீதம் குறைந்து காணப்பட்டது.
கண்ணை பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யும் போது ஒரு சில நிலைகளில் ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும் மொத்தத்தில் எந்த குறையும் இல்லை என்றே ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளது.
மேலும் விபரமாக அறிய...
https://www.frontiersin.org/journals/medicine/articles/10.3389/fmed.2025.1488765/full
ரமலானில் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்?
===================================
2013 - 2016 காலகட்டத்தில் ஈரான் நாட்டின் வடபகுதியில் கஸ்பியன் கடற்கரை ஓரத்தில் ரஷ்ட் எனும் மாநிலத்தில் குயலான் மாவட்டத்தில் ரமலான் மாதத்தில் நடக்கும் ஆக்சிடென்ட் விபத்துக்கள் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டது.
வெவ்வேறு வானிலை அமைப்புகள் உள்ள சந்தர்ப்பத்திலும், ரமலான் அல்லாத சந்தர்ப்பத்திலும் கூட ஆய்வு செய்யப்பட்டது.
போக்குவரத்து விபத்துகள் 0.040 என்ற அளவிலும், மற்றும் காயங்கள் 0.001 என்ற அளவிலும் கணிசமாக அதிகரித்தன. போக்குவரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்திருந்தது.
அதிலும் நோன்பு துறக்கும் நேரத்தை நெருங்க நெருங்க விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
காரணம் நோன்பு திறப்பதற்காக விரைந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்கள் செயல்படுவதாலும், ட்ராபிக் - வாகன நெருக்கடிகளில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாவதாலும், சர்க்கரை - நீரழிவு நோய் உள்ளவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு மன நெருக்கடிக்குகளுக்கு ஆளாவதாலும் அவசரத்தில் ஏதோ ஒன்று செய்வதால் விபத்துகள் நேருகின்றது.
எனவே இந்த தகவலை முஸ்லிம்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்; அதனால் நமது சக தோழர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
எனவே ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் இடத்திற்கு நோன்பு திறப்பதற்கான அரை மணி நேரத்திற்கு முன்பே விரைந்து சென்று விடுங்கள்.
நோன்பு திறக்கும் நேரங்களில் உங்களுடைய வாகன ஓட்டிகளுக்கு வேலை பலுவை சுமத்தாதீர்கள்.
உங்களுடைய நண்பர்களுக்கு மேற்கண்டவற்றை எடுத்துச் சொல்லி கவனமாக இருக்க அறிவுறுத்துங்கள்.
ஆதாரம் மற்றும் இந்த கட்டுரையை விரிவாக அறிய : https://link.springer.com/article/10.1186/s12889-025-21980-5
இஸ்லாம் எந்த வகையில் தனித்துவமானது தெரியுமா?
================================
2007 ஆம் ஆண்டு கணக்கின்படி ரமலான் மாதத்தில் உலக முஸ்லிம்களில் நோன்பு கடமையானவர்களில் 93 % சதவீதம் பேர் நோன்பு நோற்கிறார்கள்; அமெரிக்கர்கள் 77% பேர் நோன்பு நோற்கிறார்கள்.
உலகத்தில் இரண்டு வகை அறிஞர்களை மட்டும் மதம் சார்ந்தும் சிந்திக்க வைத்திருக்கிறது என்றால் அது இஸ்லாம் மார்க்கம் மட்டும்தான்.
முதலாவது: அந்தந்த நாட்டு சட்டத்துறை அறிஞர்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தமது சொத்துக்களை பிரித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு அவர்கள் மார்க்கச் சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
மற்றொரு துறை அறிஞர்கள் மருத்துவர்கள். ஒரு முஸ்லிமான நோயாளி ரமலான் காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மருத்துவ அறிஞர்கள் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிமும் ரமலான் காலங்களில் நோன்பு நோற்பார்; அவர்களுக்கு இருக்கிற நோய்களுக்கு ஏற்ப நோன்பை எப்படி மேற்கொள்வது என்பது சம்பந்தமான விவரத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
எனவே மருத்துவர்கள் ஒரு நோய் எப்படி எல்லாம் விளைவுகளை வெளிப்படுத்தும் என்பதை தெரிந்து இருப்பதோடு, உண்ணாமல் பருகாமல் நோன்பாளியாக இருப்பவரிடம் அதே நோய் எப்படிப்பட்ட பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டிய நிர்பந்த நிலையில் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
எனவே இந்த இரண்டு துறை சார்ந்த அறிஞர்கள் இஸ்லாம் மார்க்கம் குறித்தும் அதன் கடமைகள் குறித்தும் ஓரளவு முழுமையாக தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த வகையில் தான் இஸ்லாம் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
இவ்வாறு பல ஆய்வுகள் நோன்பு குறித்து செய்யப்பட்டு வருகிறது; இந்த ஆய்வுகள் சொல்லும் பாடம் இதுதான்!
நோன்பு நோற்பதால் மனிதனுக்கும் உடலுக்கும் நல்லதே நடக்குமே தவிர சிறிதளவு கூட தீமை நடக்காது.
ஏனென்றால் நமது உடலை Mona fixture - உற்பத்தி செய்தவன் அல்லாஹ் ஆவான்; அவன் படைத்த உடலுக்கு எது நல்லது? எது கெட்டது என்று தெரியும்; நல்லது என்பதால்தான் நமக்கு ஒரு மாத நோன்பு கடமையாக்கி இருக்கிறான்; அதை முறையாக நேற்று சரியாக உடல் கட்டமைப்பையும், உள்ளத்தின் கட்டமைப்பையும் வைத்துக் கொள்வோம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :16
ஹதீஸ்களை முஸ்லிம்கள் எப்படி பார்க்கின்றனர்?
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், மவ்லவீ B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M.Phil
இமாம் : மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் சாந்தோம் சென்னை.
ஹதீஸ் என்பது நபி (ஸல்) அவர்கள் பேசிய பேச்சுகள், செய்த செயல்கள், நபித்தோழர்கள் பேசியதை நபிகளார் கேட்டு ஆமோதித்தவை, நபிகள் நாயகத்திற்கு எதிரில் ஸஹாபாக்கள் செய்த செயல்களில் அங்கீகரித்தவை ஆகியனவே ஹதீஸ்கள் எனப்படும்.
திருக்குர்ஆன் இஸ்லாமியக் கல்வித் துறைகளுக்கு இதயமாக திகழ்வது போல் ஹதீஸ் கலை, அனைத்து கல்வித் துறைகளுக்கும் இரத்தத்தை பாய்சுகின்ற நாடி நரம்பாகத் திகழ்கிறது.
ஹதீஸ்கள் மூலம் இஸ்லாமியக் கல்வித் துறை உயிர்ப்புடனும், துடிப்புடனும் இன்றும் என்றும் இருந்து வரும்.
கடந்த 1500 ஆண்டுகளாக குர்ஆனுக்கு அடுத்தபடியாக ஹதீஸ்களை முஸ்லிம்கள் ஆதாரமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு முஸ்லிமுடைய அன்றாட வாழ்விலும் ஹதீஸ் இரண்டர கலந்துள்ளது. அதிலும் புகாரி முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களை மிக உயர்வாக கருதுகிறார்கள்.
அன்றாட வாழ்வில் முஸ்லிம்களுடைய ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஹதீஸ்களின் கருத்துகளே வழிகாட்டுகிறது.
இவ்வாறு ஹதீஸ்களை முழுமையாக முஸ்லிம்கள் பின்பற்றுவதால் குர்ஆனும் அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறி நல்வழிப்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு முதல் இரண்டு தலைமுறை மனிதர்களால் ஹதீஸ்கள் அவ்வளவாக சேகரிக்கப்படவில்லை.
அதற்குப் பிறகு சேகரிக்க முனையும் பொழுது யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களில் மாற்றுக்கருத்து உடையவர்கள் என ஒவ்வொரு சாராரும் சில ஹதீஸ்களில் சில இடை செருகல்களை செருகி விட்டார்கள்.
அதனால் அந்த ஹதீஸ்களில் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. மூன்றாம் தலைமுறை மனிதர்கள் அதாவது முதல் நூற்றாண்டின் இறுதி காலங்களில் இவ்வாறான குறைகளை எல்லாம் நீக்கி மிகவும் சரியான நபி மொழிகளை பல ஆய்வாளர்கள் திரட்டினார்கள். அவை இன்று நம்மிடையே வந்து சேர்ந்துள்ளது.
ஹதீஸ்களை திரட்டியவர்கள் நம்பகமான ஹதீஸ் எது? நம்பகம் இல்லாத ஹதீஸ் எது? ஒவ்வொரு ஹதீஸிலும் இடைசெருகளாக சொருகப்பட்டுள்ள வார்த்தைகள் எது என்பது போன்றெல்லாம் பல்லாயிரக்கணக்கான அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டு ஹதீஸ்களின் தரங்களுக்கு ஏற்ப நூல்கள் எழுதப்பட்டுள்ளது.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு புகாரி, முஸ்லிம் இருப்பது போலவே ஆதாரம் இல்லாத ளயீஃப் - ஹதீஸ்களுக்கு அல் மவ்ழூஅது வழ் ழயீஃபது அலா அல்ஸினதில் குதபாயீ வந்துஆதி,
அத்தஹ்ஃபதுல் கரீமா ஃபீ பயானி பஃலுல் அஹாதீஸில் மவ்வூழதி வஸ்ஸகீமா போன்ற நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று முஸ்லிம் சமூகம் ஹதீஸ்கள் குறித்த எந்த சந்தேகத்திற்கும் செல்லத் தேவையில்லை; ஏனென்றால் இது சார்ந்த ஆய்வுகள் அனைத்தும் 1200 வருடங்களுக்கு முன்னதாகவே நமது முன்னோர்கள் செய்து எழுத்து வடிவில் நமக்கு வழங்கிச் சென்று இருக்கிறார்கள்.
உலகில் எந்த சமூகமும் தமது மதம் சார்ந்த செய்திகளை அதன் அறிவிப்பாளர் தொடருடன் நம்பகத்தன்மையோடு பாதுகாப்பதற்கு முயற்சி செய்யவில்லை.
முஸ்லிம்கள் மட்டுமே பெரும் தியாகங்கள் செய்து, தமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களின் வாழ்வையும், வாக்கையும் பாதுகாத்தனர்; இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.
யூத, கிறிஸ்தவ மதங்கள் முழுமையாக வழித்தவறி போனதற்குக் காரணம் அவர்களில் இதுபோன்ற ஒரு குழு இல்லாமல் போனது தான்.
குர்ஆனை உண்மைப்படுத்தும் ஹதீஸ்கள் :
وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ
இந்த வேதத்தை (நபியே) உமக்கு நாம் அருளினோம்; காரணம் இதை நீங்கள் மக்களுக்கு தெளிவாக விளக்கி வைக்க வேண்டும் என்பதற்காக.....16:44
இந்த வசனத்திற்கு இமாம் அவ்ஜாயீ (ரஹ்) அவர்கள் விளக்கம் கூறுவதாவது; குர்ஆனின் கருத்துக்களை தெளிவுபடுத்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களே வந்திருக்கிறது; ஆனால் குர்ஆன், ஹதீஸ்களை தெளிவுபடுத்த வரவில்லை.
நூல்: அல் மதக்கல் இலஸ்ஸுனன்.
மேலும் திருக்குர்ஆன் ஹதீஸ்களின் பக்கம் மிக மிக தேவை உடையதாக இருக்கின்றது; ஆனால் ஹதீஸ்கள் குர்ஆனின் பக்கம் அவ்வளவு தேவை உடையதாக இல்லை எனவும் கூறுகிறார்கள்.
மேலும் நபி மொழிகளே குர்ஆனின் பொருளை தீர்மானிக்கிறது; குர்ஆன் ஹதீஸ்களின் பொருளை தீர்மானிப்பது இல்லை.
நூல்: ஜாமிவு பயானில் இல்ம்.
ஹதீஸ்களை தவிர்த்து விட்டு குர்ஆனை விளங்க முடியாது என்பதே மேற்கூறப்பட்ட கருத்துக்களின் நோக்கம்; திருக்குர்ஆனின் கண்ணியத்தையும் மதிப்பையும் குறைத்து மதிப்பிட்டதாக நினைத்து விடாதீர்.
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
தன் மனம் விரும்பியவாறு அவர் பேசவும் இல்லை. (அவர் பேசும் பேச்சுகள் யாவும்) அறிவிக்கப்படும் வஹியே தவிர வேறு எதுவும் இல்லை. 53: 3,4.
அதாவது ஹதீஸ் என்பது அல்லாஹ்வினால் நபிகளாருக்கு வஹீ வழியாக அறிவிக்கப்பட்ட கருத்துக்கள்; அவை நபிகளாரின் சொந்த வார்த்தைகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது; எனவே ஹதீஸ் என்பது ஓதப்படாத வஹீ ஆகும்.
ஹதீஸ் மறுப்பு தோற்றமும் வரலாறும் :
நபி (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் தோன்றவிருக்கும் குழப்பங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரித்துள்ளார்கள்.
ஹதீஸ்கள் தேவை இல்லை; குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறும் ஒரு கூட்டம் தோன்றும் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறார்கள்.
عن المقدام ابن معد يكرب إن رسول الله صلى الله عليه وسلم قال يوشك الرجل متكنا على أريكته يحدث بحديث من حديثي فيقول بيننا وبينكم كتاب الله عز وجل ما وجدنا فيه من حلال استحللناه وما وجدنا فيه من حرام حرمناه الا ان ما حرم رسول الله مثل ما حرم الله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது சொகுசு இருக்கையில் சாய்ந்திருக்க அவரிடம் நான் கூறிய ஹதீஸ் ஒன்று எடுத்துரைக்கப்படும்.
அப்போது அவர் எனக்கும் உங்களுக்கும் இடையே அல்லாஹ்வின் வேதம் உள்ளது; அதில் அனுமதிக்கப்பட்டதாகக் காண்பதை நாமும் அனுமதிக்கப்பட்டதாகக் கருதுவோம்; அதில் தடை செய்யப்பட்டதாகக் காண்பதை நாமும் தடை செய்யப்பட்டதாகக் கருதுவோம் என்று கூறும் நிலைக்குச் சென்றுவிடுவார்.
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் தடைசெய்துள்ளதும் அல்லாஹ் தடை செய்ததைப் போன்றதே ஆகும்.
நூல்: திர்மிதீ 2666, இப்னுமாஜா, அபூதாவூத்
நபித்தோழர்கள் வாழ்ந்து கொண்டிருந்த முதல் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள்.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து ஒரு கேள்வி கேட்டார்! அதற்கான பதிலாக ஒரு ஹதீஸை அறிவித்தார்கள்.
உடனே அவர், "குர்ஆனிலிருந்து சொல்லுங்கள்; வேறு எதையும் அறிவிக்காதீர்கள்" என்று கூறினார்.
மற்றொரு அறிவிப்பில் அம்மனிதர் நீங்கள் பல செய்திகளை எங்களுக்கு அறிவிக்கிறீர்கள்; "ஆனால் குர்ஆனில் அதற்கு எந்த அடிப்படையும் காண முடியவில்லையே!" என்று சொன்னதாக வருகிறது.
இதன் இன்னொரு அறிவிப்பில் அவர், "குர்ஆனைத் தவிர வேறு எதையும் எங்களிடம் சொல்லாதீர்கள்" என்று கூறியதாக வருகிறது.
அவருக்கு ஹதீஸ்கள் தொடர்பாக ஏதோ சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அவரை அருகில் அழைத்து நீ ஒரு முட்டாள் என கோபமாக கூறியதுடன் அவரிடம் சில கேள்விகள் கேட்டார்கள்.
குர்ஆன் போதும் என்கிறாயே அதில் லுஹர் நான்கு ரக்அத்துக்கள் என்றும், அஸர் நான்கு ரக்அத்துக்கள் என்றும், மஃரிப் மூன்று ரக்அத்துக்கள் என்றும் வந்துள்ளதா?.
குர்ஆன் மட்டும் போதும் என்கிறாயே அதில் இறை இல்லம் கஅபாவை ஏழு சுற்று சுற்ற வேண்டும் என்றோ, ஸஃபா மர்வாவில் ஏழு முறை சுற்றி வர வேண்டும் என்றோ கூறப்பட்டுள்ளதா?
குர்ஆன் போதும் என்கிறாயே! அதில் நாற்பது ஆடுகளுக்கு ஒரு ஆடு ஸகாத்தாக வழங்க வேண்டும் என்றோ; இத்தனை ஒட்டகங்களுக்கு இத்தனை ஒட்டகங்கள் வழங்க வேண்டும் என்றோ கூறப்பட்டுள்ளதா?
இவ்வாறு ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வந்தார்கள். அதற்கெல்லாம் அவர் இல்லை, இல்லை என்றே பதிலளித்து வந்தார்.
அப்படியானால் இந்த நடைமுறைகளை எல்லாம் யாரிடம் இருந்து கற்றுக் கொண்டீர்கள்? எங்களிடமிருந்து தானே! நாங்கள் நபி அவர்களிடம் இருந்து எடுத்துக் கொண்டோம்.
அல்லாஹ் கூறுவதை நீங்கள் கேட்கவில்லையா? "இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதை விட்டு நீங்கள் விலகியிருங்கள்" (59:7)
மேலும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறினார்கள்; மக்களே! நபித்தோழர்களாகிய எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்; இல்லையேல் அல்லாஹ்வின் மீதாணையாக வழிதவறி விடுவீர்கள்.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களின் இந்த விளக்கத்தைக் கேட்டு அம்மனிதர் தமது தவறை உணர்ந்து கொண்டார்.
இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அந்த மனிதர் பின்னாளில் முஸ்லிம்களின் சட்ட மேதைகளில் ஒருவராகத் தான் மரணித்தார்.
நூல் : மிஃப்தாஹுல் ஜன்னா, ஜாமிவுல் பயான்,அல் கிஃபாயா, அல் மதகல்.
அபூபக்ர், உமர், உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் காலங்களில் ஹதீஸ் சார்ந்த குழப்பங்கள் எதுவும் உருவாகவில்லை.
உஸ்மான் (ரலி) அவர்களுடைய இறுதி ஆறு வருடங்களில் அரசியல் சார்ந்த குழப்பங்கள் உருவாகி அதுவே பிற்காலத்தில் அலி (ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஹதீஸ் சார்ந்த குழப்பங்களாகவும் மாறின.
அலீ (ரலி) அவர்களுக்கு பிறகு சமூகத்தில் மூன்று பிரிவுகள் தோன்றின. 1. அஹ்லுஸ் ஸுன்னா 2. காரிஜியாக்கள் 3. ஷியாக்கள். இந்தப் பிரிவினர் உருவானதில் இருந்தே ஹதீஸ்கள் குறித்த கண்ணோட்டங்கள் மாறத் தொடங்கியது.
அஹ்லுஸ்ஸுன்னாவைப் பொறுத்தவரை அவர்களது பெயருக்கு ஏற்ப ஹதீஸ்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். குர்ஆனும் ஹதீஸும் மார்க்கத்தின் இருகண்களாகக் கருதி வருகின்றனர்.
ஹதீஸ்களைக் கண்ணியப்படுத்துவதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை. இவர்களே நேர்வழியில் நடக்கும் கூட்டம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மற்ற பிரிவினர் ஹதீஸ்கள் குறித்து வேறுபடுகின்றனர்.
மூன்று வகை ஹதீஸ் மறுப்பாளர்கள் :
ஹதீஸ் மறுப்பாளர்களை மூன்று வகையினராக மவ்லானா தகி உஸ்மானி அவர்கள் பிரித்துள்ளார்கள்.
1. நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனுடைய வஹீ மட்டுமே அருளப்பட்டது; ஹதீஸ் என்று எதுவும் இல்லை. குர்ஆனை விளங்குவதற்கு ஹதீஸ் தேவையில்லை.
2. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் நபித்தோழர்களுக்கு மட்டுமே ஆதாரமாகும்: நமக்கு அது ஆதாரம் அல்ல.
3. ஹதீஸ்கள் முழு மனித குலத்திற்கும் ஆதாரம் என்றாலும் ஹதீஸ்கள் நமக்கு நம்பகமான முறையில் வந்து சேரவில்லை. குர்ஆன் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நமக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனால் ஹதீஸ்கள் நமக்கு ஆதாரப்பூர்வமாக வந்து சேரவில்லை. உறுதியற்ற தகவல்களைப் பின்பற்றுவதை குர்ஆன் தடைசெய்கிறது. எனவே நாம் அதைப் பின்பற்றத் தேவையில்லை என ஹதீஸ் குறித்த சந்தேகத்தில் மூன்று வகையினர் இருக்கிறார்கள்.
இந்த மூன்று கண்ணோட்டங்களையும் ஆய்வு செய்யும்போது நமக்குத் தெரிவது, "ஒரு பிரிவினர் ஹதீஸ் என்பதே அறவே இல்லை" என்கின்றனர்; இவர்களை 'முன்கிருல் ஹதீஸ்' என்று ஹதீஸ் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு பிரிவினர் ஹதீஸ்கள் உண்டு; ஆனால் அது ஆதாரமற்றவை! அதனால் இவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள்; இவர்களை ஹதீஸ் துறை ஆய்வாளர்கள் 'முன்கிரு ஹுஜ்ஜிய்யதில் ஹதீஸ்' என கூறுகின்றனர்.
மூன்று வகை மறுப்பாளர்களுக்கான பதில்:
முதல் வகை : மலக்கு இல்லாமல் மனிதராக இருக்கக்கூடிய ஒருவரையே நபியாக அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்புவதே வழக்கம். (17:93) ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கிறான்.(14:4) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பி இருக்கின்றான். 34:28
எனவே மனிதர்தான் நபியாக வருவார்கள்; அதில் நபி (ஸல்) அவர்கள் அனைத்து மொழி பேசுவோருக்குமான ஒரே நபியாக இருப்பார் என மேற்கண்ட வசனங்களில் தெரிய வருகிறது.
வஹீ மூன்று வகைகளில் அருளப்பட்டு வந்தது. 1. மலக்குகளின் (ஜிப்ரயீல்) வாயிலாக வஹீ அறிவித்தல், 2. அல்லது திரை மறைவாக (மூஸா நபி உரையாடியது போல) உரையாடுதல், 3. அல்லது நபிமார்களின் உள்ளங்களில் ஏற்படுத்துகிற எண்ணங்கள் ஆகிய (மூன்று முறை அல்லாமல்) வேறு எந்த முறையிலும் அல்லாஹ் எந்த மனிதனிடமும் உரையாடுவது கிடையாது. 43: 51
இந்த மூன்றாவது வகை வஹீ குர்ஆன் அல்ல! அது நபிமார்கள் தெரிந்து கொள்வதற்காக இறைவன் பேசிய ஒரு முறையாகும்.
இதற்கு ஆதாரம் சொல்ல வேண்டுமானால் சில தகவல்களைக் கூறலாம். 2:144,155 ஆகிய வசனங்களில் கஃபத்துல்லாஹ் கிப்லாவாக ஆக்கப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நினைத்ததாகவும் பின்னர் கிப்லாவாக ஆக்கப்பட்டதாகவும் இந்த வசனம் சொல்கிறது.
நமக்கெல்லாம் தெரியும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த முதல் 18 மாதங்கள் பைத்துல் முகத்தஸை முன்னோக்கி தொழுதார்கள்.
பைத்துல் முகத்தஸை முன்னோக்கி தொழுவதற்கு எந்த வஹீ அவர்களுக்கு சட்டமாக்கியது? பைத்துல் முகத்தஸை முன்னோக்கி தொழுங்கள் என்று திருக்குர்ஆனில் எந்த வசனமும் இல்லை.
அதைப்போல் ரமலான் மாத இரவுகளில் உடலுறவு கொள்வது, உறங்கி எழுந்த பிறகு உண்பது, குடிப்பது ஆகியன தடுக்கப்பட்டிருந்தது. இதையும் திருக்குர்ஆனில் எந்த வசனம் சட்டமாக்கி இருந்தது?
பத்ரு போரில் அல்லாஹ் இரண்டு குழுவினரில் ஒரு குழுவினர் உங்களுக்கு கிடைத்து விடுவர் என்று வாக்களித்தான்; இந்த வாக்களிப்பு குறித்து திருக்குர்ஆனில் இல்லை; ஆனால் வாக்களித்தோம் என 8: 7 ஆம் வசனத்தில் கூறுகிறான்.
இதுதான் அந்த மூன்றாவது வகை வஹியைச் சார்ந்தது. மேலும் நபி (ஸல்) அவர்கள் பேசிய அனைத்து பேச்சுகளும் இந்த வகை வஹியைச் சேர்ந்ததாகவே கருதப்படுகிறது.
ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆனை விளங்க முடியாது. 9:36 வது வசனத்தில் அல்லாஹ் 12 மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானது என்று சொல்லுகிறான்; அந்த நான்கு மாதங்கள் எது என்பதை திருக்குர்ஆன் விளக்கவில்லை; நபிகள் நாயகம் அவர்களே கூறி இருக்கிறார்கள்.
2:203 ஆம் வசனம்: குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; இரண்டு நாட்கள் முடிந்ததும் விரைவாக திரும்புபவர் மீது குற்றமில்லை; மேலும் ஒரு நாள் தாமதிப்பவர் மீதும் குற்றமில்லை.
மேற்கண்ட வசனம் என்ன வகையான கருத்தை சொல்ல வருகிறது என்று புரிகிறதா?
மேற்கண்ட வசனம் ஹஜ்ஜுடைய ஆறு நாட்கள் குறித்து பேசுகின்றது. அதை நபி (ஸல்) அவர்கள் தான் விவரித்து சொல்லியிருக்கிறார்கள்.
பல ஆயிரம் வருடங்கள் பல ஆயிரம் முறை திரும்பத் திரும்ப மேற்கண்ட வசனத்தை படித்தாலும் விளங்கிக் கொள்ள இயலாது; மீண்டும் ஒரு முறை நீங்களும் அந்த வசனத்தைப் படித்துப் பாருங்கள்.
இரண்டாம் வகை : நபித்தோழர்களுக்கு மட்டும்தான் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் ஆதாரம்; நமக்கு ஹதீஸ்கள் தேவையில்லை என்பதின் விளக்கம்.
25:1, 34:28, 7:158, ஆகிய வசனங்கள் நபி (ஸல்) அவர்கள் பிறந்ததிலிருந்து உலகம் அழிகிற வரை வாழும் மனிதர்கள் அனைவருக்குமான நபியாகவே அனுப்பப்பட்டுள்ளார் எனக் கூறுகிறது.
நபிகளாரின் விளக்கம் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினருக்கு மட்டுமே தேவை மற்றவர்களுக்கு தேவை இல்லை என்று சொல்வது திருக்குர்ஆனையே மறுப்பதற்கு சமமானது.
குர்ஆன் அருளப்படும் பொழுதே நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு விளக்கம் சொல்ல தேவை என்றால், நபியே இல்லாத இந்த காலகட்டத்தில் நபிகளாரின் விளக்கங்கள் (ஹதீஸ்கள்) எந்த அளவிற்கு தேவை உடையதாக இருக்கிறது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
மூன்றாம் வகை: ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல? அதில் சந்தேகங்கள் இருக்கின்றன என்று கூறுகின்றனர்.
இறை நம்பிக்கை கொண்டவர்களே! பாவி ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியை கூறினால் (அது உண்மையா? பொய்யா என்று) நன்கு ஆய்வு செய்து கொள்ளுங்கள்; (இல்லையானால் அவனுடைய பொய் செய்தியை நம்பி) நீங்கள் அறியாமையினால் ஒரு சமூகத்தாருக்கு தீங்கிழைத்து விட நேரிடும்; பின்னர் நீங்கள் செய்ததற்காக வருத்தப்படுவீர்கள். 49:6
ஒரு தீயவன் ஒரு செய்தியை கூறினால் அதை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என இந்த வசனம் சொல்லவில்லை; மாறாக அந்த செய்தியை விசாரித்து எது உண்மையோ அதை செயல்படுத்துங்கள் என்று இந்த வசனம் கூறுகிறது.
எனவே ஹதீஸ்களில் எது குறையுள்ளதாக காண்கிறோமோ அதை ஒதுக்கி விட்டு, எதை நிறைவாக காணுகிறோமோ அதை கொண்டு அமல் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
தவ்ராத் இஞ்சீல் போன்ற வேதங்களில் பல்வேறு மாற்றங்களை அந்தந்த மதத்தினர் செய்துவிட்டாலும் அதையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் தவ்ராத் என்றும் இஞ்சீல் என்றும் தான் சொல்கிறான்; அதில் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டதால் அதை வேறு வார்த்தைகளில் இறைவன் சொல்லவில்லை. அதுவும் இறைவேதம் தான் என இறைவன் கூறுகிறான்.
எனவே ஹதீஸ்களில் குறைகள் இருந்தாலும் அவை எந்த மாதிரியான குறைகள் என்பதை நமக்கு முன்னோர்கள் வகுத்து தெளிவுபடுத்தி கொடுத்து விட்டார்கள். எனவே ஹதீஸ்களில் சந்தேகம் ஏற்படுவதே மிகப்பெரும் தவறு. ஹதீஸ்களை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தியாவிலும் தமிழகத்திலும் ஹதீஸ்களை மறுப்போர் :
இந்தியாவில் ஹதீஸ்களை மறுப்பவர்கள் கி.பி. 1850 கள் வரை எவரும் இல்லை.
இந்தியாவை முழுமையாக ஆங்கிலேயர் ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகு தமது பிரித்தாலும் சூழ்ச்சியால் முஸ்லிம்களை பிரிப்பதற்காக மிர்ஸா குலாம் அஹமத் காதியானி என்பவனை நபியாக வாதிடச் செய்து குழப்பத்தை உண்டாக்கி மக்களை பிரித்தான்.
மற்றொருபுறம் சர் சையது அஹ்மது கான் அஸ்லம் ஃபதஹ்பூரி, அப்துல்லாஹ் ஜக்டாலவி போன்ற மவ்லவிகளுக்கு பதவிகளையும், பட்டங்களையும் வழங்கி அஹ்லுல் குர்ஆன் - குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ்கள் தேவையில்லை எனும் கொள்கையை மக்களிடையே பரப்பினார்கள்; ஆனால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தமிழகத்தில் 1980 களுக்கு பிறகு நஜாத் பத்திரிக்கை ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் என்பவன் முதன் முதலில் இந்த கொள்கையை பேசவும், எழுதவும் தொடங்கினான்.
1990 களுக்குப் பிறகு இந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட அல்லது விலைப்போன பல மவ்லவிகள் ஹதீஸ் மறுப்பு கொள்கையை பிரச்சாரம் செய்தார்கள். 2000 காலகட்டத்தில் இது உச்சநிலையை அடைத்து 2015 களுக்கு பிறகு ஹதீஸ் மறுப்பு கொள்கை சார்ந்த மவ்லவிகள் பலரும் பெண்கள் விவகாரத்தில் சிக்கி சிதைந்து போனார்கள். அந்தக் கொள்கையும், கொள்கையாளர்களும் இன்று மௌனித்து இருக்கிறார்கள்.
"பொதுவாகவே ஹதீஸ் கலை தொடர்பான ஆய்வுகளை புரிந்து கொள்ளும் அறிவு பொதுமக்களுக்கு இல்லை; எனவே அவர்களுக்கு இதை விவரிக்கக் கூடாது; சில நேரங்களில் இதனால் அவர்கள் ஹதீஸ்களை மொத்தமாக மறுத்து விடும் வாய்ப்பும் ஏற்படும்" என இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்; மக்கள் எதை தெரிந்து வைத்துள்ளார்களோ அதைப்பற்றி மட்டும் அவர்களிடம் பேசுங்கள்; மக்கள் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை விட்டு விடுங்கள்; ஏனெனில் புரிந்து கொள்ள முடியாததை நீங்கள் பேசினால் அவர்கள் மார்க்கத்தையே பொய்யாக்க கூடும்; அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா!
நூல்: புகாரி, முஸ்லிம்.
மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் மௌனமாக இருக்காமல் எதை எதையோ பேசி மக்களை பிரித்து விட்டார்கள்; ஆதரவும் எதிர்ப்பும் மூர்க்கத்தனமாக இருந்தது.
எனது மஹல்லாவில் டாக்டர் சகோதரர்கள் என்ற அடைமொழியோடு வலம் வந்த டாக்டர் பஸ்லுர் ரஹ்மான், டாக்டர் சித்திக் ஜமால் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் அஹ்ல ஹதீஸ் கூட்டத்தினரோடு சேர்ந்து இருந்தார்கள்.
பின்னர் அதில் இருந்து விலகி வந்து குர்ஆன் மட்டும் போதும் எனும் அஹ்லுல் குர்ஆன் கொள்கையை சார்ந்து அதிலும் 19 பிரிவோடு இணைந்து செயல்பட்டார்கள்; அதிலேயே இருவரும் இருந்த நிலையில் மரணித்து விட்டார்கள். (இவர்கள் இருவரும் எழுத்தாளர் M.R.M. அப்துல் ரஹீம் அவர்களுடைய தம்பி M.R.M. அப்துல் கரீம் வழக்கறிஞர் அவர்களுடைய மகன்கள் ஆவார். வழக்கறிஞர் சீதேவியான நல்ல மனிதர் ஆவார்.)
இன்று தமிழகத்தில் வஹாபிகள் பல நூறு பிரிவினராக பிரிந்து சிதைந்துப் போனார்கள்.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் எனும் கொள்கை உடையோர் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறார்கள்.
எனவே ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமைந்து விட்டால் அதை மதிக்க வேண்டும்; போற்ற வேண்டும். நாம் பின்பற்றுகிற இமாமுடைய கருத்துக்கு மாற்றமாக இருந்தாலும் சரி, ஹதீஸை ஏற்க வேண்டும்.
அதை அலட்சியப்படுத்தும் விதமாக எந்த ஒரு சொல்லும் நம்மிடமிருந்து வெளிப்படக் கூடாது. நமது இமாம் ஏன் அதை எடுத்துக்கொள்ள வில்லை அதற்கான விளக்கத்தை தன்னடக்கத்தோடு பணிவோடு நாம் எடுத்துரைக்க வேண்டும். இதுவே ஹதீஸிற்கு நாம் தர வேண்டிய உண்மையான மரியாதையாகும்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர்கள். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ், அதை இன்று நாம் கடைப்பிடிப்பதில்லை . இக்காலத்திற்கு அது ஏற்புடையதுமல்ல! பெண்கள் வீட்டில் தொழுவதை வலியுறுத்தும் ஹதீஸ்களை நாம் முன்வைத்து இந்த கருத்தை வலியுறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்; அதுதான் ஹதீஸிற்கு நாம் வழங்கும் உண்மையான மரியாதை ஆகும்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதி வைத்திருந்த ஹதீஸ்கள் :
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது; என் தந்தை நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களைத் திரட்டி வைத்திருந்தார்கள். அதில் 500 ஹதீஸ்கள் இருந்தது. ஒரு நாள் காலையில் எழுந்ததும் மகளே! உன்னிடம் இருக்கின்ற ஹதீஸ்களின் திரட்டை எடுத்து வா என்றார்கள். நான் அதை அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தேன். நெருப்பைக் கொண்டுவரச் சொல்லி அப்பிரதிகளை நெருப்பிலிட்டு எரித்துவிட்டார்கள்.
1. பிறகு காரணம் கூறினார்கள்; நான் இதில் சில நபிமொழிகளைச் சேகரித்து வைத்துள்ளேன்; ஒருவேளை இது என்னிடம் இருக்கும் நிலையில் நான் மரணித்து விட்டால் அதைப் பார்க்கும் மக்கள் நபித்தோழர்களில் அதிகம் அறிந்தவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்கள் தான். எனவே அவரது இந்த ஏட்டில் பெறப்படுபவை மட்டுமே ஹதீஸ்கள்; இதில் இடம் பெறாதவை நபிமொழிகளே அல்ல.
ஏனெனில் அப்படி இருந்திருந்தால் அபூபக்ர் (ரழி) அவர்கள் பதிவு செய்திருப்பார்களே! என்று கூறி இந்த ஏட்டில் இடம்பெறாத நபிமொழிகளை மறுத்து விடக்கூடும்; எனவே எரித்து விடுவதே சிறந்தது எனக் கருதி எரித்து விட்டார்கள்.
2. இந்த நூல் என்னிடம் இருக்கும் நிலையில் எனக்கு மரணம் வந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்; காரணம் இதில் இடம் பெற்றுள்ள நபிமொழிகள் நபி (ஸல்) அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லியிருக்கலாம். நான் அதை வேறு கருத்தில் விளங்கி எனது வார்த்தைகளில் எழுதியிருக்கலாம்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அதே வார்த்தைகளை நான் எழுதவில்லை. மாறாக அவர்கள் சொன்னதை விளங்கி நான் எழுதி வைத்துள்ளேன்;
ஒருவேளை நான் விளங்கிக்கொண்டது தவறாகவும் இருந்திருக்கலாம்; அப்படியிருக்க அது மக்களிடம் சென்றடைவது சரியல்ல; எனவே எரித்து விட்டேன்.
நூல்: தத்கிரதுல் ஹுஃப்பாள்
நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஹதீஸுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கி இருக்கிறார்கள்.
இவர்கள் நபி மொழிகளை அடுத்த தலைமுறையினரிடம் எவ்வளவு கவனமாகவும், அக்கறையாகவும் எத்தி வைத்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் மீது இவ்வளவு அச்ச உணர்வு இருப்பவர்களா தவறு செய்வார்கள்?
ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட விதம் நான்கு:
1. தஆமல் - நபி அவர்கள் வழங்கிய அத்தனையும் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
2. ஹிஃப்ழு - குர்ஆனைப் போலவே ஹதீஸ்களும் மனனம் செய்யப்பட்டு அதன் மூலமும் பாதுகாக்கப்பட்டது.
3. ரிவாயத் : ஹதீஸ்களை அறிவிப்பதன் வழியாகவும் பாதுகாக்கப்பட்டது.
4. கிதாபத்: எழுத்துப் பூர்வமாகவும் பாதுகாக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் பேசிய பேச்சுகள், செய்த செயல்கள் மேற்கண்ட நான்கு முறைகளில் நம்மிடம் பாதுகாப்பாக வந்து சேர்ந்து இருக்கிறது; இதில் எப்படி நாம் சந்தேகம் கொள்ள முடியும்?
நபிகளார் காலத்தில் எழுதப்பட்ட ஹதீஸ் நூல்கள் :
நபி (ஸல்) அவர்கள் பேசிய பேச்சுகளை சில நபித்தோழர்கள் எழுதி வைத்தார்கள். விவரமான நபி தோழர்கள் எழுதியதை தடுக்கவில்லை.
வேறு சிலர் எழுதியதை நபிகளார் தடுத்து, ஹதீஸும் குர்ஆனும் கலந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன் எனவே ஹதீஸ்களை எழுதாதீர்கள் எனக் கூறினார்கள்.
அதே சமயம் நபி (ஸல்) அவர்கள் தம்மை சுற்றி இருந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களோடு செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்கள் அவை எழுதி பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் 6553 முதல் 6559 வரை ஏழு ஹதீஸ்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.
நபித்தோழர்களில் சிலர் ஹதீஸ்களை தொகுத்து இருக்கிறார்கள்; அந்த விவரங்களைக் காண்போம்.
1. ஸஹீஃபத்து அம்ரு பின் ஹஸ்ம் : அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்கள் எமனுக்கு செல்லும்பொழுது நபி (ஸல் ) அவர்கள் ஜகாத் சட்டங்கள் எழுதிக் கொடுத்து அனுப்பினார்கள்.
2. கிதாப் அஸ்ஸதகாத்: ஜகாத் சம்பந்தமாக நபி (ஸல்) அவர்கள் சொல்ல சொல்ல எழுதப்பட்ட ஒரு நூல்.
3. ஸஹீஃபத்து அலீ (ரலி) / அலீ ரலி அவர்கள் எழுதி வைத்திருந்த ஹதீஸ்கள். 4. அஸ்ஸஹீஃபா அஸ்ஸாதிகா - அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் எழுதி வைத்திருந்த ஹதீஸ்கள். 5. ஸுஹுஃபு அபூ ஹுரைரா (ரலி) 6. ஸஹீஃபத்து ஹம்மாம் - அபூஹுரைரா (ரலி) அவர்களின் மாணவர் ஹம்மாம் பின் முனப்பிஹ் அவர்கள் எழுதி வைத்திருந்த ஹதீஸ் தொகுப்பு.
7. ஸஹீஃபா பஷீர் பின் நஹீக் - பஸராவைச் சேர்ந்த இவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு எழுதிய தொகுப்பு. 8. ஸஹீஃபத்து அனஸ் (ரலி) 9. ஸஹீஃபத்து ஜாபீர் (ரலி)
10. ஸஅத் பின் உபாதா ரலி அவர்கள் எழுதி வைத்திருந்த தொகுப்பு. 11. ஸஹீஃபா ஸமூரா பின் ஜுன்துப் ரலி அவர்கள் எழுதி வைத்திருந்த தொகுப்பு. 12. ஸஹீஃபா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எழுதி வைத்திருந்த தொகுப்பு.
13. ஸஹீஃபா இப்னு மஸ்ஊத் ( ரலி) அவர்கள் எழுதி வைத்திருந்த தொகுப்பு என நபித் தோழர்களால் ஹதீஸ்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்ததாக வரலாறு சொல்கிறது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் அனேக அறிஞர் பெருமக்களால் பல ஹதீஸ் நூல்களும் அது சார்ந்த சட்ட நூல்களும் வரலாற்று நூல்களும் எழுதப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை (ஹிஜ்ரி 450 வரை) ஹதீஸ்கள் நேரடியாக சேகரிக்கும் பணி நடைபெற்று வந்ததாக வரலாறு சொல்கிறது.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நமது முன்னோர்கள் தம் உயிரைக் கொடுத்து ஹதீஸ்களை சேகரித்து, அதன் உண்மை தன்மைகள் குறித்தும் சொல்லிவிட்டு சென்றிருக்க, இன்று இருப்பவர்கள் அவற்றை எப்படி மறுக்கிறார்கள்?
பொதுவாகவே இன்று அரபு மொழி ஹதீஸுகள் அனைத்தும் காலத்திற்கு ஏற்ற முறையில் இன்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல நூல்கள் pdf வடிவில் கிடைக்கின்றது.
எந்த மொழியில் வேண்டுமானாலும் இன்டர்நெட்டிலேயே மொழிபெயர்த்து படித்துக் கொள்ளும் வசதிகளும் இன்று வந்துவிட்டது. எனவே இந்த காலகட்டத்தில் ஹதீஸ்கள் குறித்த சந்தேகம் எழுந்தால் உடனே அதனை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
சரியான முறையில் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப், மொபைல் ஃபோன் ஆகியவற்றை பயன்படுத்தத் தெரிந்தால் ஹதீஸ்கள் குறித்த தெளிவை உடனுக்குடன் பெறலாம்.
தமிழ்நாட்டில் இன்று, முதல் தரமான ஆறு ஹதீஸ் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது; மேலும் சில நூல்களும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. நான்கு தஃப்ஸீர்கள் முழுமையாக வெளிவந்திருக்கிறது; மற்றும் பல தஃப்ஸீர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
எனவே ஹதீஸ்களில் சந்தேகம் உள்ளவர்கள் நபிமொழி நூல்கள், தஃப்ஸீர்கள் உள்ளடக்கிய பத்து நூல்களை முழுமையாக படித்து விட்ட பிறகும் சந்தேகம் இருக்கிறது என்று சொல்வோர் என்னை அணுகுங்கள்; அதற்கான முழுமையான விளக்கங்களை நான் சொல்கிறேன்.
நபியை நேசிப்போம்! நபிமொழிகளை வாசிப்போம்!!
பதிவேற்ற நாள் : 8/4/2026
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :15
வந்தே மாதரம் பாடலை 150 வருடங்களாக முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்?
=====================================
இஸ்லாம் மார்க்கத்தில் இறைவனுக்கு நிகராக எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது முதன்மையான நிபந்தனைகளில் ஒன்று.
ஷிர்க் - இணைவைத்தல் மிகப்பெரும் பாவச் செயல். இணை வைப்போர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகிறார்கள்.
ஷிர்க் - இணை வைத்தல் போன்ற சில சிறு சிறு செயல்கள் இஸ்லாமியர்களால் செய்யப்பட்டு வருகிறது; அதுவும் அவர்களின் செயல்களில் இருந்தும், எண்ணங்களிலிருந்தும் களை எடுக்கப்பட வேண்டும் என நபிகள் நாயகம் அவர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள்.
இஸ்லாத்தில் சிறிய ஷிர்க் என்று சிலவற்றை நபிகள் நாயகம் அவர்கள் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்; அவற்றிலிருந்து விலகி வாழ வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்கள்; அவற்றை விரிவாகக் காண்போம்.
இப்னு ஷகீர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;
ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு தபூக் யுத்தத்திற்குப் பிறகு பனீ ஆமீர் எனும் தூதுக்குழுவினர் நபி (ஸல்) அவர்களை சந்திக்க மதீனாவிற்கு வந்திருந்தார்கள்; நபி (ஸல்) அவர்களை மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் வைத்து சந்தித்தார்கள்.
இவர்கள் தம் தலைவர்களையும் நல்ல மனிதர்களையும் மிகவும் வரம்பு மீறி போற்றி புகழ்ந்து பேசும் வழமை உடையவர்களாக இருந்தார்கள்.
இப்படிப்பட்டவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்டார்கள்; அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் கூறுகிறார்; பனீ ஆமீர் வம்சத்தினரோடு நானும் நபிகளாரை சந்தித்தேன்; அப்பொழுது அவர்கள் அனைவரும் (தமது கலாச்சார முறைப்படி ) انت سيدنا - நீங்கள்தான் எங்கள் தலைவர்" என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "தலைவர் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்"
قولوا بقولكم ولا يستجرينكم الشيطان
“நீங்கள் வழக்கமாகப் பேசும் வார்த்தைகளை கவனமாக பேசுங்கள்; (உங்கள் வாயை) ஷைத்தான் விரும்புவதுபோல் செயல்பட (வாடகைக்கு) விட்டு விடாதீர்கள்.
நூல் :அபூதாவூத் 4806
கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்து வரம்பு மீறி சென்று விட்டது போல தம்மையும் அவ்வாறு ஆக்கி விடக்கூடாது என்பதில் நபிகள் நாயகம் அவர்கள் கவனமாக இருந்த காலம் அது!
لا تُطْروني كما أطرت النصارى ابن مريم، فإنما أنا عبدٌ، فقولوا عبدُ الله ورسولُه
“கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களை மிகைப்படுத்தியது போன்று என்னை மிகைப்படுத்தி விடதீர்;
நான் ஒரு அடிமை; அல்லாஹ்வின் அடிமை என்றும், அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். நூல் : நஸாயீ
முஸ்லிம்களுடைய வார்த்தைகளில் இறைவனுக்கு நிகராக எதையும் அல்லது வேறு யாரையும் நிறுத்திவிடக்கூடாது என்பதில் நபி ஸல் அவர்கள் கவனமாக இருந்து வார்த்தைகளை சரி செய்து கொடுத்தார்கள். இதுபோன்ற வார்த்தைகள் நிறைந்த பாடல் தான் வந்தே மாதரம் அதனால் தான் இஸ்லாம் அந்த பாடலை வன்மையாக எதிர்க்கின்றது.
சிரியா ஷிர்க்:
===============
ஒருமுறை இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது மஹல்லா பள்ளிவாசலில் தனியாக நஃபில் தொழுது கொண்டிருந்தார்கள்.
அவர்களுடன் வந்திருந்த அவருடைய முரீத் - சீடர் வெளியே நின்று இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த சீடரின் மனதில், "எனது ஷைகு அவர்கள் உலகையே அறிந்த ஞானி! அவருடைய தொழுகை பூமியில் தொழுப்படுகிற தொழுகைகளில் ஆகச் சிறந்தது" என்று எண்ணினார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தொழுகையை முடித்த பின் சீடர் அருகே வந்து, "நீ என்ன நினைத்தாயோ அதை நான் உணர்ந்தேன்; அது உண்மை என்றால் என் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது" என்று கூறினார்கள்.
சீடர் அதிர்ச்சி அடைந்து, "ஏன் உங்களுடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது?" என பணிவோடு கேட்டார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "நான் தொழுவதை பிறர் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் - ரியா என் இதயத்தில் கண நேரம் உதித்து மறைந்தது;
தொழுகையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் நினைவு கொள்ளக்கூடாது;
பொதுவாக தொழும் போது உடல் கிப்லாவை நோக்கியும், இதயம் கிப்லாவின் இறைவனை நோக்கியும் கவனமாக இருக்க வேண்டும்;
தொழுகை, குனிவது நிமிர்வது போன்ற செயல்களால் ஆனதல்ல! தொழும்போது அல்லாஹ்வின் நினைவால் இதயம் நிரம்பி இருக்க வேண்டும்" என்று கூறினார்கள்.
முரீத் - சீடர் இதனைக் கேட்டதும், பிற்காலத்தில் நான் தொழுகையை தொடங்குவதற்கு முன் என் இதயத்தை முழுமையாக சுத்தப்படுத்திக் கொண்டு, மனதை ஓர் நிலைப்படுத்திக் கொண்டு தொழுகையில் ஈடுபடுவேன்" என்று கூறினார்.
நூல் : பஹ்ஜத்துல் அஸ்ரார், ஸியர் அல் அஸ்ரார்.
ஒரு செயலை எவ்வளவு அழகாக செய்தாலும், எவ்வளவு நேர்த்தியாக செய்தாலும் அது அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கின்றேன் என்கிற எண்ணம் இல்லாமல் போனால் அனைத்தும் பாழாகிவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மிகப்பெரும் இறைநேசர்களின் இதயத்திலேயே ரியா - பிறர் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் நுழைந்து விடும்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?
இமாம் ஜீலானி ரஹ் அவர்களை நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது; சீடர் நினைத்ததை இமாம் ஜீலானி ரஹ் அவர்கள் தொழும்போது உணர்ந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் தரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் கனநேரம் அந்த நினைவு ஏற்பட்டதும் தவறுதான் என்பதை இமாம் ஜீலானி ரஹ் அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.
إيّاكم والرّياءَ، فإنّه شركٌ خفيّ، لا يطّلع عليه إلّا الله.
أخلِصوا أعمالَكم لله، فإنّ العملَ إذا دخله غيرُ الله كان مردودًا.
“உங்களையும் ரியாவையம் ( பிறர் பார்க்கிறார்களே என்பதற்காக செய்யும் அமலையும்) எச்சரிக்கிறேன்; நிச்சயமாக இது மறைமுகமான ஷிர்க் ஆகும்; (இது சிறிய வகை ஷிர்க்கை சேர்ந்ததாகும்)
உங்களின் செயல்களை அல்லாஹ்விற்காகவே மனத்தூய்மையோடு செய்யுங்கள்; நீங்கள் செய்யும் அமல்களை அல்லாஹ் அல்லாதவற்றுக்காக செய்தால் அவை நிராகரிக்கப்பட்டு விடும்.
நூல்: புகாரி, முஸ்லிம்.
«إذا دخَل الرّياءُ على العبد طرفةَ عينٍ نقصَ من عمله بقدرِ ما دخَل فيه،
والعارفُ يراقبُ قلبَه في كل لحظة.»
ஒரு அடியானின் உள்ளத்தில் ரியா- கண் இமைக்கும் நேரம் சிறிய வகை ஷிர்க் நுழைந்துவிட்டால் அவர் நினைத்த நேரம் அளவிற்கு அவருடைய அமலில் இருந்து நன்மைகள் குறையும்; அறிஞர்கள் ஒவ்வொரு கண நேரமும் தன் உள்ளத்தை கண்காணிப்பவராக இருக்க வேண்டும்.
நூல்: முஸ்னது அஹ்மத்
எனவே மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் உள்ளத்தில் ஏற்பட்ட வெளி சிந்தனைகளின் நேர அளவிற்கு நன்மைகள் குறையுமே தவிர அது மாபெரும் தவறு அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.
அதேநேரம் அவ்வாறான சிந்தனைகள் சிறிது நேரம் கூட ஏற்படக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் அளவுகோல்.
இவ்வாறு சின்ன சின்ன தவறுகள் கூட இஸ்லாமியர்கள் வசம் வெளிப்படக் கூடாது என இஸ்லாம் எதிர்பார்க்கிற போது வந்தே மாதரம் பாடலை இஸ்லாமியர்கள் எப்படி பாடுவார்கள்?
ஆனந்த மடம் நாவலின் கற்பனை கதாபாத்திரம்:
============================
மேற்கு வங்கம், கண்டபுரம் கிராமத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் 1838 - 1894 காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனர்; இவர் வங்க மொழியில் எழுதிய நாவலில் வரும் பாடல்தான் வந்தே மாதரம்.
இவர் ஆனந்தமடம் என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார்; அந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள்; ஒன்று: பவானந்தன், மற்றொன்று மகேந்திரன்.
பவானந்தன், மகேந்திரனிடம் "முஸ்லிம்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும்; அவர்களிடமிருந்து நமது தாய் நாட்டை காப்பாற்ற வேண்டும்; நமது தெய்வங்கள் அனைத்தும் சிறுமைப் பட்டுக் கிடைக்கின்றன; நமது வர்ணாசிரமக் கொள்கை அவர்களால் நீர்த்துப் போய் இருக்கிறது; நமது தெய்வங்கள் ஒளியில் இருந்து கேவலப்பட்டு கிடைக்கின்றன; எனவே அவர்களை நாம் எதிர்க்க வேண்டும்" என கூறுகிறார்.
மகேந்திரன், "அவர்களை நாம் எப்படி எதிர்க்க முடியும்? அவர்கள் வலிமையாக இருக்கிறார்களே? அவர்களிடத்தில் ஆயுதங்கள் இருக்கின்றனவே? நாம் ஒன்றும் இல்லாமல் இருக்கின்றோமே" என்று கேட்கிறார்.
அதற்கு பவானந்தன், "முஸ்லிம்கள் ஒரு கோழைகள்; நாமெல்லாம் ஒன்று திரண்டு சென்றால் புற முதுகு காட்டி ஓடி விடுவார்கள்; நாம் இந்தியாவில் ஏழு கோடி பேர் இருக்கிறோம்; 14 கோடி கைகள் இருக்கின்றன; ஒவ்வொரு கையும் ஒரு வாளையேந்தி நின்றால் அவர்கள் பயந்து நடுங்கி விடுவார்கள்" என்று கூறுகிறான்.
அப்பொழுதுதான் அவன் வந்தே மாதரம் பாடலை பாடி மக்களை தன் பக்கம் ஈர்க்கிறான்.
அந்தப் பாடலில் தாய் மண்ணை வணங்குவதாகவும் தண்ணீர், காற்று, பச்சை வயல்வெளிகள், இரவு, ஒளி, மரக் கூட்டங்கள், மொழிகள், துர்கா, லட்சுமி, சரஸ்வதி, மோகினி, கமலா போன்ற பல தெய்வங்களை வணங்கி வழிபட்டு அவர்களின் துணையோடு முஸ்லிம்களை எதிர்ப்பது போல் இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளது.
இப்படி அமையப்பெற்றுள்ள பாடலை முஸ்லிம்கள் எப்படி பாடுவார்கள்? கடந்த 150 ஆண்டுகளாக இந்த பாடலை முஸ்லிம்கள் வன்மையாக எதிர்த்து வருவதற்கு இதுதான் காரணம்.
இது போன்ற பாடல்களைப் பாடுவது ஷிர்க் - இணை வைத்தல் ஆகும். அதனால்தான் முஸ்லிம்கள் வன்மையாக இதை எதிர்த்து வருகிறார்கள்.
வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணே வணக்கம் என்று பொருள். முஸ்லிம்கள் மண்ணை வணங்க கூடாது மண்ணை வணங்குவது தேச பக்தி அல்ல! ஆனால் நமது மண்ணை அபகரிக்க எவரேனு வந்தால் காப்பாற்ற உயிரையும் கொடுக்க முன்வர வேண்டும்; இதுதான் உண்மையான தேச பக்தி!
தேசபக்தி என்கிற பெயரில் ஒருவரின் மதத்தை மற்றொருவர் மீது திணிக்கக் கூடாது; மண்ணை வணங்குகிறேன் என்று நீ சொல் என்பதும் முஸ்லிம்கள் மீது திணிப்பதாகத்தானே ஆகும்?
சின்ன சின்ன இணை வைத்தலுக்கே இஸ்லாத்தில் இடம் இல்லை என்கிற போது, இது போன்ற மிகப்பெரும் இணை வைத்தலை எப்படி இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?
அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்...
=========================
عَنْ قُتَيْلَةَ، أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ: إِنَّكُمْ تُشْرِكُونَ، تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، وَتَقُولُونَ: وَالْكَعْبَةِ! فَأَمَرَهُمْ النَّبِيُّ ﷺ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا: وَرَبِّ الْكَعْبَةِ، وَأَنْ يَقُولُوا: مَا شَاءَ اللَّهُ ثُمَّ شِئْتَ.
குதைலா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; ஒரு யூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் (உங்களுடைய சொற்களில்) ஷிர்க் செய்கிறீர்கள்;
مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ
"அல்லாஹ் நாடினாலும், நீங்கள் நாடினாலும் நடக்கும்" என்று சொல்கிறீர்கள்;
"மேலும் கஃபாவை முன்னிறுத்தி சத்தியம் செய்கிறோம்" என்றும் சொல்கிறீர்கள்" என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள், இனி உங்களில் எவரேனும் சத்தியம் செய்ய நாடினால் கஃபாவின் இறைவன் மீது ஆணையாக!" என்று சொல்லுங்கள்;
مَا شَاءَ اللَّهُ ثُمَّ شِئْت
"அல்லாஹ் விரும்பினால் பிறகு நீங்களும் விரும்பினால்" என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.
நூல்: நஸாயீ 3773
நபி (ஸல்) அவர்களின் இறுதி காலத்தில் மதீனாவில் நடந்த நிகழ்வு இது!
அரபியர்கள் அன்றாட வாழ்வில் யதார்த்தமாக பயன்படுத்தும் சில சொற்கள் இவ்வாறு ஷிர்க்கை உண்டாக்கும் வார்த்தைகளாக இருந்தது.
அறியாமையால் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தினாலும் கூட அதுவும் மிகப்பெரும் தவறுதான்!
முஸ்லிம்களுடைய பேச்சு வழக்கில் உள்ள சொற்களில் உள்ள தவறுகளை துருவி துருவி ஆராயும் வழக்கமுடையவர்களாக யூதர்கள் இருந்தார்கள்.
“ما شاء الله وشئت”
எனும் சொல்லில் உள்ள வாவ் و எனும் சொல் அல்லாஹ் விரும்பினாலும் நபியே நீங்கள் விரும்பினாலும் நடக்கும் என பொருளாகும்.
இந்தப் பொருள், அல்லாஹ்விற்கு நிகராக நபியையும் கொண்டு வந்து சேர்க்கும் தன்மை உடையது.
அல்லாஹ்வையும் நபிகளாரையும் சமமாக காட்டும் எழுத்து தான் வாவ் و. இது, தவ்ஹீத் ஏக தெய்வ கொள்கைக்கு முரணானது.
அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் و எனும் எழுத்துக்கு பகரமாக ثم எனும் எழுத்தை பயன்படுத்துங்கள் என கூறினார்கள்.
நபியை அல்லாஹ்விற்கு நிகராக ஒப்பிட்டு பேச வேண்டும் என்பதெல்லாம் நபி தோழர்களின் நோக்கம் இல்லை!
கடந்த காலங்களில் மொழி வழக்கில் பயன்படுத்தி வந்த சொல்லை பழக்க தோஷத்தின் அடிப்படையில் பயன்படுத்தியதால் அந்த சொல்லை நபிகள் நாயகம் அவர்கள் சுட்டிக் காட்டி திருத்தி கொடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
இஸ்லாம் மார்க்கத்தில் எந்த ஒரு சிறு குறையும் இல்லை; உங்களில் எவரேனும் குறை கண்டால் அது இஸ்லாமியரிடத்தில் தான் இருக்குமே தவிர இஸ்லாத்தில் இருக்காது.
அந்த வகையில் தான் குறைகள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே வந்தே மாதரம் பாடலை 150 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் வன்மையாக எதிர்த்து வருகிறார்கள்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :14
பதிவிட்ட நாள் 16/11/2025
மாபெரும் ஞான
மஹபூப் சுப்ஹானி
============================
உலக அறிஞர்கள் சொல்வது போல் சாதிமத ஏற்றத் தாழ்வின்றி மனிதர்கள் மத்தியில் அனைவரும் அந்தஸ்த்தில் சமமானவர்கள்தாம். இருப்பினும் அல்லாஹ்விடத்தில் நெருக்கமானவர் முதலில் நபிகளாரும், பிறகு ரசூல்மார்களும், பிறகு நபிமார்களும், பிறகு இம்மூவரின் தோழர்களும் பிறகு ஷுஹதாக்களும் பிறகு வலிமார்களும் ஆவர்; இவர்கள் இறைவனுக்கு நெருக்கமாக இருக்கக் காரணம் இவர்கள் செய்யும் வணக்கங்களாகும்.
யார் வலீ?
===========
இன்று நம்மிடையே நபிமார்களோ அவர்களின் தோழர்களோ இல்லை. ஆனால் அவ்லியாக்கள் இருக்கிறார்கள்; இருப்பினும் அவர்களை அறிவது தன்னை அறிவது போல் சிறமமாகும். அவர்களைப் பற்றிய அடையாளங்களில் சிலவற்றை அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
1) 2:38 வேதத்தைப்பின்பற்றி வாழ்வோர்.
2) 2:62 ஈமானின் ஃபர்ளுகள் ஏழு மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கையை நம்புவோர்.
3) 2:112 குர்ஆன் காட்டும் வழியிலேயே வாழ்ந்தவர்கள்.
4) 2:262, 274 - ஜகாத் மற்றும் தர்மம் செய்வோர்.
5) 2:277 இஸ்லாத்தின் ஐந்து கடமைகளை செய்வோர்.
6) 3:170 தீனுக்காக போர்முனையில் இறந்தவர்கள்.
7) 6:48 நபிகளாரை அப்படியே பின்பற்றி வாழ்வோர்.
8) 7:49 இறைசொற்படி வாழ்ந்த ஏழைகள்.
9) 46:13 இறைவனுக்கு இணை வைக்காதவர்கள்;
மேற்கண்ட ஒன்பது வகை இபாதத்களில் சிலவற்றை தம் வாழ்வில் கடைப்பிடித்து செய்பவர் கப்ரை நினைத்தோ, மறுமைநாளை நினைத்தோ, நரகை நினைத்தோ கவலைப்படவும் வேண்டாம் அச்சப்படவும் வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் மேற்கண்ட ஒன்பது வகையான போதனைகளையும் செய்து வருபவர்கள் வலிமார்கள் ஆவர்; அவர்களைப் பற்றி அல்லாஹ்.
الا ان أولياء الله لأخوفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (10:62)
அறிந்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வுடைய (நேசர்களான) அவ்லியாக்களுக்கு எவ்வித பயமும் இல்லை; இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். 10.62
இந்த வலிமார்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் இப்படி சொல்வான்.
يعباد لا خوف عليكم اليوم ولا أَنتُمْ تَحْزَنُونَ (43:68)
என்னுடைய அடியார்களே! இன்று உங்களின் மீது பயம் இல்லை, நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள் (என்று பயபக்தியாளர்களுக்கு அல்லாஹ் அறிவிப்பான். 43:68
வலிமார்கள் பற்றி நபிகளார் :
================================
عن ابن عباس رضي عنهما قال رجل یا رسول الله من اولياء الله؟ قال: الذين اذار ؤوا ذكر الله (رواه : البزار)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபிகளாரிடம் ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் நேசர்கள் அவ்லியாக்கள் என்பவர்கள் யார்?" என வினவினார். "நீங்கள் சிலரை பார்த்தால் உங்களுக்கு அல்லாஹ்வின் ஞாபகம் வருமே அவர்கள் தாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அல்பஸார்
عن ابي هريرة رضي الله عنه قال رسول الله صلي الله عليه وسلم ان من عباد الله ليغبطهم الانبياء والشهداء قيل من هم يا سول الله لعلنا نحبهم؟ قال: هم قوم تحابوا في الله من غير أموال ولا انساب وجوهم نور على منابر من نور لا يخافون اذا
خاف الناس (رواه : ابوداود, تفسير ابن كثير (۲:۲۰۰
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். நபிமார்களையும், போராளிகளையும் மிகைத்தவர்களாக இருப்பார்கள் என நபிகளார் கூரியதும் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? (தெரிந்தால்) அவர்களை நாங்களும் நேசிப்போமே!" என்றார்கள். "செல்வந்தன், நல்ல பறம்பரை உடையவன் என்பதற்காக அல்லாமல் அல்லாஹ்விற்காக அவர்கள் சிலரை நேசிப்பார்கள்; அவர்களின் முகங்கள் பேரொளியால் இழங்கும், மக்கள் பயந்தாலும் அவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். மக்கள் கவலையடைந்தாலும் அவர்கள் எப்பொழுதும் எதற்கும் கவலைப்பட மாட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் இப்னு கஸீர்
மஹ்பூப் சுப்ஹானி வாழ்வும் வாக்கும்:
======================================
நபி வழி தோன்றலான அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பற்றி அறியாதவர் உலகில் இல்லை என்று கூறும் அளவிற்கு அவர்களைப் பற்றி மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
காடுகளிலும் மலைகளிலும் கடும் தவம் இருந்த வலியவர்கள் ஹாஜி அபூசயித் மக்ரமி (ரஹ்) என்பவரின் பாபுல் அஸ்ஜ் என்ற சிறிய மதரஸாவில் உஸ்தாதாக பொறுப்பேற்றார் கள்.
மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதித்தார்கள்; குர்ஆன் ஹதீஸ்களுக்கு மிக அருமையான விளக்கங்களை கொடுத்தார்கள்; இதனை அறிந்த மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து ஞான உபதேசங்களை கற்று சென்றார்கள்.
மக்களின் வருகை அதிகமாகவே மதரஸாவில் இடம் பற்றாகுறை ஏற்பட்டது. மதரஸாவை இடித்து விட்டு விரிவுப்படுத்தி செல்வந்தர்கள் கட்டிக் கொடுத்தனர். மந்திரிகள் அரசர்கள் பெரும் செல்வந்தர்கள் என பலரும் அவ்வலியின் பேச்சைக் கேட்க கூடினர்; சிலசமயங்களில் இடம் பற்றாக்குறையால் வலியவர்கள் மதரஸா அடுப்பின் மீது சேர்போட்டு அமர்ந்து பயான் செய்வார்கள்.
வறண்டுப்போன பயிர்கள் முளைக்காத தரிசு நிலமாக இருந்த பூமியில் மழைநீர் விழுந்ததும் பூமி எப்படி உயிர் பெறுகின்றனவோ அதுபோல மார்க்க ஞானம், தீன் இன்றி கிடந்த இதயங்களை தன் பயான் மூலம் செழிக்க செய்தார்கள்; அண்ணாரின் பயானுக்கு தினமும் 70 ஆயிரம் பேர்கள் வருவார்கள்.
எனது கரத்தில் ஐந்து ஆயிரம் யூத கிருஸ்தவ போதகர்கள் முஸ்லிமாகி இருப்பார்கள்; ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இஸ்லாமிய பெரும் பாவிகள் என்னிடம் இனி பாவம் செய்யமாட்டோம் என உறுதியளித்துள்ளார்கள்" என வலி அவர்களே கூறியதாக ஜுப்பாயி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தமது 73 ஆண்டுகால முழு வாழ்வையும் இறைவனுக்கும் தனக்கும் நெருக்கமான (தொழுகை, நோன்பு, ஜகாத், திக்ரு, போன்ற) வழியில் மட்டுமின்றி மக்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தொண்டாற்றியே, தம் வாழ்வை அற்பணித்தார்கள்.
பெரும்பாலான வலிமார்கள் மக்களை விட்டும் ஒதுங்கிதான் வாழ்வார்கள்; ஆனால் இவர்கள் மக்களுடன் ஒன்றிதான் வாழ்ந்துள்ளார்கள்; அதனால் இவர்களை எல்லோரும் அறிந்திருக்க முடிகிறது.
நூல் : கலாயிதுல் ஜவாஹிர்
சிறந்த அறிஞர் :
===================
ஷாபி மத்ஹபைச் சேர்ந்த வலியவர்களிடம் ஒரு சிக்கலான வழக்கு ஒன்று கொண்டு வரப்படுகிறது; ஒரு கணவன் சொல்கிறான்; "நான் செய்யும் அதே வணக்கத்தை உலகில் வேறு எவரும் செய்யக்கூடாது அப்படி செய்தால் என் மனைவி தலாக் ஆவாள்" என சத்தியம் செய்தேன்.
பக்தாதில் இவர் தொழும்போது குர்ஆன் ஓதும்போது நோன்பு நோற்றிருக்கும் போது உலகில் வேறு யாரும் இதே வணக்கத்தை செய்யக்கூடாது என எதிர்பார்க்க முடியுமா?
ஜீலானி (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள் : அவன் மக்காவிற்குச் செல்லட்டும் கஃபாவை தவாஃப் வலம் வரும் இடத்தைத் தனக்கென சில நிமிடங்கள் அங்கிருப்போரிடம் கேட்டு அவன் மட்டும் ஏழுமுறை தவாஃப் செய்யட்டும்; அவனது சத்தியம் நிறைவேறி விடும்; இப்பதிலை கேட்டு ஈராக் உலமாக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
நூல் : அத்தபகாதுல் குப்ரா
ஷைகு ஜீலானி (ரஹ்) அவர்களின் கராமத்துகள் :
==========÷÷÷÷=======÷÷÷÷÷÷÷÷=========
பக்தாதில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது அபுல் அப்பாஸ் என்ற ஒருவர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் வந்து பசி பட்டினியிலிருந்து எனக்கு நிரந்தர தீர்வு ஏற்பட தாங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும் எனக் கேட்டார்.
அவ்வாறே ஜீலானி (ரஹ்) அவர்கள் துஆ செய்து சிறிது கோதுமையை தம் பொற்கரத்தால் அள்ளி அவரிடம் கொடுத்து "இதனை ஒரு டப்பாவிற்குள் போட்டு அதன் வாய் பகுதியை துணியால் கட்டிவிடுங்கள்; அதன் நடுவே ஒரு ஓட்டை போட்டு வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்கு உணவு தேவைப்படும் போது அந்த ஓட்டை வழியாக எடுத்துக் கொள்ளுங்கள்; துணியை கழற்றி விடாதீர்கள்" எனக் கூறினார்கள்.
அவரும் குடும்பத்தினரும் ஐந்து வருடங்கள் அந்த பைமூலம் சாப்பிட்டனர்; ஒருமுறை அவரது மனைவி அந்த துணியை அவிழ்த்து விட்டார்; அன்றிலிருந்து ஏழாம் நாள் தானியம் காலியாகி விட்டது பிறகு தானியம் வரவே இல்லை.
நூல் : தாரிக் பக்தாத், நூருல் அப்ஸார்
இதேப் போன்று நபி தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொருமையும் ஏழ்மை நிலையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு பையை கொடுத்து, "இதில் உணவு உள்ளது; உமக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் எடுத்து சாப்பிடுங்கள்; பசித்தவர்களுக்கு கொடுங்கள்; ஆனால் பையை தலைகீழாக கவிழ்க்காதீர்" என்று கூறினார்கள்;
அதை வைத்துக்கொண்டு 30 ஆண்டுகள் அபூஹுரைரா (ரலி) சாப்பிட்டு வந்தார்கள்; உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட அன்று ஏற்பட்ட அமளியில் அபூஹுரைரா ரலி அவர்களின் இடுப்பிலிருந்த பை கீழே விழுந்து காணாமல் போய்விட்டது.
ஹதீஸ் சுருக்கம் : நூல் : ஹயாத்துஸ் ஸஹாபா
அபூ ஹப்ஸ் உமரி ஹத்தாதி என்பவர் ஜிலானீ (ரஹ்) அவர்களிடம் சென்று "நான் ஹஜ் செல்கிறேன்; காலம் குறைவாக உள்ளது என்னிடம் ஒரு ஒட்டகம் உள்ளது அது மெலிந்து கிழடாக இருக்கின்றது; வேகமாக செல்வதில்லை; ஆதலால் தாங்கள் துஆ செய்து தரும்படி வேண்டுகிறேன்” என தனது ஒட்டகையை ஜிலானி (ரஹ்) அவர்கள் அருகே நிறுத்தினார்கள்.
ஷைகு அவர்கள் துஆ செய்த பிறகு அந்த ஒட்டகத்தை தம் பொற்கரத்தால் தடவினார்கள். நான் ஹஜ்ஜுக்கு செல்லும்போது அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களைவிட மிக வேகமாகவும் வலிமைமிக்கதாகவும் ஆகிவிட்டதை அறிந்தேன்.
நூல்: கலாயிதுல் ஜவாஹிர், தாரிக் பக்தாத்
மெலிந்த கிழடான ஒட்டகையில் தாமதமாக மதீனாவிற்கு வந்த ஹலிமா (ரலி) அவர்கள் நபிகளாரை பால் குடிப்பாட்ட பெற்றுக் கொண்டு மீண்டும் தமதூருக்கு திரும்புகையில் குழந்தை நபிகளாரும் செவிளித் தாயும் அமர்ந்திருந்த கிழட்டு ஒட்டகம் இப்பொழுது மற்றவர்களின் ஒட்டகத்தைவிட மிக விரைவாக சென்றது.
நூல் : இப்னு ஹிஷாம், ரஹீக்குல் மக்தூம்.
இவ்வாறு அனேக கராமத்துகளை அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் செய்துள்ளார்கள்; கராமத்துகளை நம்புவது சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையாகும் மறுக்கக் கூடாது.
நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த முஸைலமா என்பவன் தம்மை நபியென கூறி கிராமப்புர மக்களை நம்ப வைத்து தன்னை புகழ்பாட பெரும் கூட்டம் ஒன்றை சேர்த்துக் கொண்டான். மேலும் இவன், "இனியாரும் பஜ்ரு, இஷா ஆகிய தொழுகைகளை தொழ வேண்டாம்; அது உங்கள் மீது கடமையில்லை" எனவும், "விபச்சாரம், மது, குறி பார்க்குதல் போன்றவை இனி உங்களுக்கு ஹலால்" என்றும் கூறி மக்களை திசைத்திருப்பினான்.
நூல் : தாரிஹுல் ஹுலபா
இந்த மனித ஷைத்தானைப் போன்றே உண்மையான ஷைத்தான் ஒரு நாள் ஷைகு ஜீலானி (ரஹ்) அவர்களிடம் மேகத்தைப் போல் காட்சியளித்து "அப்துல் காதிரே! இனி உமக்கு ஹராம்கள் அனைத்தும் ஹலால் ஆக்கப்பட்டுவிட்டது; இனி நீர் தொழ வேண்டியதில்லை; நான் தான் உன் இறைவன் கூறுகிறேன்" என அசரீரியாக கூறினான்.
இவன் ஷைத்தான் என ஜீலானி (ரஹ்) அவர்கள் விளங்கிக் கொண்டு "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" என கூறினார்கள்.
அவன் எதிரே வந்து, "அப்துல் காதிரே! உம் இறைவனின் சட்டங்களை - வரைமுறைகளை நீர் அறிந்து வைத்துள்ள காரணத்தால் என்னிடமிருந்து தப்பித்து கொண்டீர்; ஆனால் தரீக்காவைப் பின்பற்றிய எழுபது நபரை இது போன்று சொன்னதின் மூலம் நான் வழிக் கெடுத்திருக்கிறேன்" என்று கூறினான்.
நம் எதிரே உள்ள கெட்ட மனிதர்களையும் மனித ஷைத்தான்களையும் நம்மால் அறிய முடியவில்லை; ஆனால் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் உண்மையான ஷைத்தானை ஒதுக்கி விட்டார்கள். நாமும் கெட்ட மனிதர்களின் தொடர்பை துண்டித்து வாழ வேண்டும்.
விலைமதிப்பற்ற கல்வி எது?
=========÷÷÷÷÷======÷÷÷÷÷÷÷÷÷÷=====
ஷைஹு அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தம் பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பொழுது ஒரு பிக்ஹு சட்டத்தை கற்பித்துவிட்டு "இது பத்தாயிரம் தங்க காசுக்கு ஈடான கல்வி" என்பார்கள்.
மற்றொரு சமயம் ஒரு ஹதீஸை கற்பித்துவிட்டு "இது ஒரு லட்சம் தங்கக் காசுக்கு நிகரான கல்வி" என்பார்கள்.
இன்னொரு சமயம் அல் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கங்களை கற்பித்துவிட்டு "இது ஒரு கோடி தங்க நாணயத்திற்கு ஈடான விளக்கம்" என்பார்கள்.
ஏன் இப்படி கூறுகிறார்கள் என்றால், மாணவர்கள், தாம் படித்த கல்வியின் மதிப்பை உணர வேண்டும் என்பதற்கே.
ஒரு சமயம் ஒரு மாணவர் தெருவில் நடந்துச் செல்லும் பொழுது செருப்பு வாரு அறுந்து விட்டது. அங்கிருந்த கூலி தொழிளாலியிடம் "இந்த செறுப்பு வாரை தைத்துக் கொடுங்கள்; உமக்கு பத்தாயிரம் பொற்காசு மதிப்புள்ள ஒரு கல்வியை கற்றுத் தருகிறேன்" என்றார்.
அந்த தொழிலாளி "அது வெல்லாம் எனக்கு வேண்டாம்; காசு இருந்தா கொடு தைத்து தருகிறேன்; இல்லையானால் உன் செருப்பை எடுத்துச் செல்" என கூறி விட்டார்.
அம்மாணவர் மிக வருத்தத்துடன் ஆழ்ந்த சிந்தனையோடு மதரஸாவிற்கு வந்தார்.
ஷைஹு அவர்கள் அன்று பாடம் நடத்தும் பொழுது எப்பொழுதும் போல் அது அவ்வளவு பொறுமான கல்வி இது இவ்வளவு பெறுமான கல்வி என்றார்கள்.
அந்த பாதிக்கப்பட்ட மாணவர் எழுந்து "உஸ்தாத் அவர்களே! இந்தக் கல்வியை கொண்டு என் செருப்பு வாரைக்கூட தைக்க முடியவில்லை" என தமக்கு நேர்ந்ததை விவரமாகக் கூறினார்.
உஸ்தாத் அவர்கள் "மாணவரே! இந்தக் கல்வியின் மதிப்பு, அத்துரை சார்ந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தான் அதன் உண்மையான மதிப்பு உமக்குத் தெரியும்" என்றார்கள். ஆனால் அம்மாணவருக்கும் அச்சபையில் கேட்ட சில மாணவர்களுக்கும் திருப்தியாக தெரியவில்லை.
இவ்வேளையில் மிகப்பெரிய வியாபாரியான ஷைஹு ஜீலானி அவர்களிடம் அச்சமயம் ஒரு வைரக்கல் வியாபாரி வந்தார். அவர் கணமான ஒரு வைரக்கல்லை எடுத்து வந்து "ஷேஹ் அவர்களே! இந்த கல்லை விற்பனை செய்ய பக்தாத் முழுவதும் சுற்றி விட்டேன்; இதற்கு ஈடான பணம் கொடுக்க எவரிடமும் வசதி இல்லாத தால் எல்லோரும் என்னை உங்களிடம் போகச் சொன்னார்கள் அதனால் வந்தேன்" என்றார்.
ஷைஹு அவர்கள் அவரை ஒரு ஓரமாக அமரச் செய்து விட்டு அந்த வைரக்கல்லை திருப்தியடையாத மாணவரை அழைத்து “இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று ஊருக்குள் விசாரித்து விட்டுவா" என்றார்கள்.
அம்மானவர் அதனை எடுத்துக் கொண்டு தாம் வழமையாக கீரை வாங்கும் மூதாட்டியிடம் சென்று ''மூதாட்டியே இதனை வைத்துக் கொண்டு ஏதேனும் பணம் கொடு" என்றார். அம்மூதாட்டி அதனை பார்த்து விட்டு, ''தம்பி! இது என்னனு எனக்கு தெரியல, ஆனாலும் பார்க்க நன்றாக இருக்கின்றது; மின்னுகிறது அதுக்காக வேண்டுமானால் ஒரு கீரைக் கட்டுத் தருகிறேன்" என்றாள்.
அம்மாணவர் அதற்கு சம்மதித்திடாமல் அதனை வாங்கிச் சென்று தம் வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் கொடுத்த போது அவர் ஒரு கிலோ கோதுமை, சிறிது ஆலிவ் என்னை தருவதாகக் கூறினார்.
அதற்கும் சம்மதிக்காமல் ஒரு கசாப்பு கடையில் சென்று கொடுத்தார்; அவர் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி தருவதாகக் கூறினார்.
பிறகு அம்மாணவர் ஒரு நகைக் கடைக்குள் சென்று கொடுத்த போது அம் முதலாளி அதன் தரத்தை புறிந்துக் கொண்டார். மேலும் சற்றுமுன் வேறு ஒருவர் இதே கல்லை எடுத்து வந்து பணம் கேட்ட பொழுது பணம் இல்லை, இதற்கு பணம் வைத்திருக்கும் ஒரே நபர் ஷைகு அவர்கள் மட்டும் தான் என அவருக்கு சொல்லி அனுப்பியது நினைவிற்கு வந்தது.
ஆகவே அவர் இது உன்னுடையதல்ல! இது உனக்கு ஏது என மிரட்டும் தோரனையில் கேட்டபொழுது அம் மாணவர் உஸ்தாத் கொடுத்ததாக கூறினார். ஆனாலும் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் மாணவரை அழைத்துக் கொண்டு மதரஸாவிற்கு வந்தார். அங்கே அக்கல்லுக்குறிய வரும் அமர்ந்திருப்பதை கண்டு நிம்மதியானார்.
மேலும் அவர் ஷைகிடம் விசாரித்த போது நேரடியாக அம்மாணவர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன் என கூறிவிட்டு அதற்கு ஈடான பணத்தை ஒரு பை நிறைய ஷெய்கு அவர்கள் அள்ளி தந்ததை அம்மானவரும் கண்கூடாகக் கண்டார்.
அப்பொழுது தான் அக்கல்லின் மதிப்பை உணர்ந்தார். தம் கல்வியின் உண்மையான மதிப்பையும் உணர்ந்தார்.
ஆகவே, இஸ்லாமியர்களாகிய நீங்கள் ஆலிம்களுக்கும், இஸ்லாம் சம்பநதமான போதனைகள் செய்வோருக்கும் மதிப்பளியுங்கள்; அல்லாஹ் அதன் மூலம் மட்டுமே கூட சொர்க்கத்தில் நுழைத்திட முடியும்.
நூல் : கலாயிதுல் ஜவாஹிர், தாரிக் பக்தாத்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :13
ஹதீஸ் அடிப்படையில்
பெண்களின் உரிமைகள்
============================
இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்கியிருப்பது போன்று உலகத்தில் வேறு எந்த மதமும் உரிமைகளை வழங்கவில்லை.
கல்வி பெரும் உரிமை, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை, சொத்துரிமை, மரியாதை பெரும் உரிமை, பாதுகாப்பு உரிமை, சமூக சட்ட உரிமைகள், குடும்ப உரிமைகள் போன்ற அன்றாட வாழ்வில் சுதந்திரமாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட முறையில் இஸ்லாம் வழங்கி இருக்கின்றது.
ஆனால் வேறு மதங்களில் இருந்து இஸ்லாத்தில் இணைந்த சிலர் உலகின் சில பகுதிகளில் பழைய மதத்தின் மரபுகளையே இஸ்லாத்தில் இணைந்த பிறகும் பின்பற்றுகிறார்கள்; இப்படிப்பட்டவர்களால் இஸ்லாத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
பெண்களைப் பற்றி பிற மதங்கள் :
=====================÷=====÷÷÷÷÷÷÷÷==
> يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ
மனிதர்களே! உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். 4:1
மனித இனம் ஆதம் என்ற ஒரே மனிதரிலிருந்து தோன்றியவர்கள் ஆவர். எனவே பெண்ணை விட ஆண் சிறந்தவன், ஆணை விட பெண் சிறந்தவள் என்ற கோட்பாடு இஸ்லாத்தில் இல்லை; இருவரும் சமமான அந்தஸ்து உடையவர்கள் தாம் என இந்த வசனம் கூறுகிறது.
ஆனால் பெண்களைப் பற்றி பிற மதங்கள் கூறும் கருத்து முற்றிலும் வேறுபாடானது; இன்றைய நவ நாகரீக உலகத்தாரால் ஒப்புக்கொள்ளப்படாதது.
பிரஞ்சுக்காரர்கள் கி.பி. 586
================================
ஆம் ஆண்டு பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர்.
அச்சபை, "பெண்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்தான்; ஆனால் அவர்கள் ஆண்களுக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் ஆவர்" என முடிவு செய்தது.
1805-ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது. அதாவது அரை ஷீலிங்கின் இன்றைய மதிப்பு (2025) 54 ரூபாய் ஆகும்.
ஆங்கிலேயர்கள் இப்படித்தான் தங்கள் வீட்டு மகளையும், தாயையும், உடன் பிறந்த சகோதரிகளையும், மனைவியரையும் நடத்தினார்கள்.
04.09.1987 அன்று ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகிறார்.
அவருடைய உடலுக்குச் சிதை மூட்டப்படுகிறது. இறுதிச் சடங்கில் ஊர் பொதுமக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை, அவனது இளம் மனைவியின் மடியில் இருக்க சிதைக்கு தீ மூட்டப்படுகின்றது. பிணம் மட்டும் அந்தக் கோரத் தீயின் பசிக்கு இரையாக வில்லை. கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் 18 வயது இளம் பெண் ரூப் என்பவளும் சேர்ந்தே எரிந்தாள்.
இஸ்லாத்தை குறை கூற முனைவோர் பெண்கள் குறித்து தம் மதத்தின் கருத்து என்ன ? வேதங்கள் சொல்வதென்ன? என்பது குறித்தெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு பிற மதங்களில் உள்ள குறைகளை பேசுவதே நிறைவாக இருக்கும்.
இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாதவர்கள், தங்களுடைய வேதங்கள் கூறும் தரம் தாழ்ந்த கொள்கைகளை தூக்கி எறிய இயலாதவர்கள், இன்றளவும் பெண்களை தம் வேத நூல்கள் இழிவு படுத்துவதை மறைத்து விட்டு, பெண்களை கண்ணியப்படுத்தி கொண்டிருக்கும் இஸ்லாத்தின் மீது அவதூறு கூறுகின்றனர்.
ஆனால் சத்திய இஸ்லாம் மார்க்கம் இவர்களின் பொய் பிரச்சாரங்கள் அனைத்தையும் கடந்து, பெரும்பாண்மையாக வாழும் கிறிஸ்தவ நாடுகளில் வேகமாக, அதுவும் குறிப்பாக பெண்கள் மத்தியிலே அதி வேகமாக பரவி வருகின்றது.
காரணம் இஸ்லாம் மட்டுமே ஆண், பெண் இருபாலாரும் சமமானவர்கள் என்ற கருத்தை ஓங்கி ஒலிப்பதால் சத்திய இஸ்லாத்தை நோக்கி பெண்களின் படையெடுப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
பெண்களை கண்ணியப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம் :
=====================================
சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பெண் இஸ்லாத்தில் இணைந்தார். நீங்கள் ஏன் இஸ்லாத்தில் இணைந்தீர்கள்? இஸ்லாத்தில் உங்களை கவர்ந்த செய்தி எது? என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்.
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில், "ஏவாள் தன் கணவரை இழுத்துச் சென்று தடுக்கப்பட்ட மரத்தின் கனியை சாப்பிட வைத்தாள்" எனக் கூறுகிறது.
ஆணாதிக்கம் மிகுந்த நாட்டில் இந்த வசனம் மேலும் பெண்களை இழிவு படுத்துவதாகவும், கொச்சைப்படுத்துவதாகவும், கேவலப்படுத்துவதாகவும் நான் கருதினேன்.
மேலும் மனித இனம் பூமிக்கு வந்து இவ்வளவு சிரமங்களை அனுபவிப்பதற்கு காரணம் ஏவாள் என்கிற பெண்தான் என சொல்லப்படும் கருத்து என்னை துன்புறுத்தியது.
மேலும் சொர்க்கத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் வெளியே வர காரணம் ஏவாள் மட்டும்தான் காரணம் என பைபிளுடைய வசனம் குறிப்பிடுகிறது; இருவரும் செய்த தவறுக்கு ஒருவர் எப்படி பொறுப்பாளியாக ஆக முடியும்? என எண்ணினேன்.
எனவே பைபிள் சொல்வது சரியா தவறா என பரிசோதிக்க கிறிஸ்துவத்திற்கு முன்பு தோன்றிய யூத மதத்தின் பழைய ஏற்பாட்டில் தேடினேன்; அங்கும் இப்படி தான் காணப்பட்டது.
கிறிஸ்தவத்திற்கு பிறகு தோன்றிய இஸ்லாமிய மார்க்கத்தின் வேத நூலான திருக்குர்ஆனில் தேடினேன் அங்கு,
فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ
ஷைத்தான் அவ்விருவரையும் அ(ம் மரத்)தைக் கொண்டு தவறு செய்ய வைத்தான்; அவர்கள் இருந்த (சுகபோக) நிலையில் இருந்து அவ்விருவரையும் அவன் வெளியேற்றினான் 2:36 என காணப்பட்டது.
அதாவது ஆதாம் ஏவாள் ஆகிய இருவரும் சேர்ந்துதான் தடுக்கப்பட்டு இருந்த மரத்தின் கனியை சாப்பிட்டு தவறு செய்தார்கள் என கூறுவதை கவனித்தேன்.
ஏவாள் என்கிற பெண் மட்டும் தவறு செய்தாள் என்கிற கருத்தை திருக்குர்ஆன் கூறவில்லை; இதன் மூலம் திருக்குர்ஆன் பெண்களை கண்ணியப்படுத்துகிறது எனப் புரிந்து கொண்டு நான் இஸ்லாத்தில் இணைந்தேன் எனக் கூறுகிறார்.
முன்னாள் கணவருக்கு பிறந்த குழந்தை
=================================
நபி (ஸல்) அவர்களின் மனைவியான உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு முன்னாள் கணவர் மூலமாக சில குழந்தைகள் இருந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் குடும்பச் செலவிணங்களுக்காக உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு வழங்கும் தொகையில் தனது முன்னாள் கணவருக்கு பிறந்த பிள்ளைகளுக்குச் செலவு செய்தால் நன்மை கிடைக்குமா? என நபியவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூலி கிடைக்கும் என்று கூறினார்கள்.
கணவரிடமிருந்து மனைவிக்குக் கிடைத்தப் பொருளை முதல் தார குழந்தைகளுக்கு செலவழிக்க தாய்க்கு உரிமையும் மறுமையில் அதிகப்படியான நன்மையும் இருக்கின்றது என்று இந்த வரலாற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.
மஹர் தொகை, பெற்றோரின் சொத்தில் கிடைக்கும் பங்கு, அன்பளிப்புகள், சுயமாக வீட்டில் இருந்தவாறு தொழில் செய்யும் பெண்களின் சம்பாத்தியம் ஆகியன பெண்களுக்கே உரிய சொத்தாகும்; இந்த சொத்தில் வேறு யாருக்கும் பங்கு இல்லை என இஸ்லாம் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "மனைவியருக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?" என்று கேட்டார்;
அதற்கு நபியவர்கள், "நீர் உண்ணும் போது உமது மனைவிக்கும் உண்ணக் கொடு, நீர் ஆடையணியும் போது அவளுக்கும் ஆடை அணியக் கொடு, (மனைவியை) முகத்தில் அடிக்காதே! அவளை ஒரேயடியாக வெறுத்து விடாதே! வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளைக் கண்டிக்காதே! வெறுக்காதே" என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத்
கோணலை நேராக்காதே!
============================
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள்; அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்து விடுவாய்; அவளை அப்படியே செயல்பட விடுவதோடு அவளின் கோணலை அப்படியே ஏற்றுக்கொள்! சகித்துக் கொள்! நூல்: புகாரி
நபியவர்கள் வளைந்த விலா எலும்பை பெண்களுக்கு உதாரணமாக சொல்கிறார்கள். பிளாஸ்டிக் பொருளோ, இரும்போ வளைந்து இருந்தால் நிமிர்த்தி விடலாம். வளைந்தே இருக்கின்ற எலும்பை நிமிர்த்தப் போனால் அது நிச்சயம் உடையத்தான் செய்யும்.
எப்பொழுதும் அவளிடம் கோணல் இருக்கத்தான் செய்யும் என்று நபியவர்கள் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள்.
பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று புரிந்து கொண்டு மனைவியை நிர்வாகம் செய்தால், விட்டுக் கொடுத்துப் போனால், அவளிடம் இன்பத்தை அடையலாம்.
அதே நேரம் மார்க்கத்திற்குப் புறம்பான செயல்கள் இருந்தால், கண்டிக்க வேண்டும் அவ்வளவுதான்!
பெண்களின் குணம் ஆண்களைப் போன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவே கூடாது.
மீண்டும் மீண்டும் ஹஜ் உம்ரா செய்யும் உரிமை
•÷•÷•÷•÷•÷•÷•÷•÷•÷•÷•÷•÷•÷•÷•÷•
நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ்ஜுக்குச் சென்ற சமயம் தம் மனைவியர் மற்றும் பெண்களிடம், “இதுவே நீங்கள் செய்யும் ஹஜ்ஜாகும்; இதற்குப் பிறகு உங்கள் வீட்டு பாய்களின் மீது நீங்கள் இருக்க வேண்டும்" எனக் கூறினார்கள்.
நூல் : முஸ்னது அஹ்மத்
இந்த ஹதீஸின் காரணமாக உம்மு ஹாத்துல் முஃமினீன் ஜைனப் (ரலி) அவர்களும், சௌதா (ரலி) அவர்களும் இதற்குப் பிறகு ஒரு ஹஜ்ஜும் செய்யவில்லை.
"நபி (ஸல்) அவர்களின் கூற்றை நாமே நேரில் கேட்டிருக்க, ஹஜ் செய்யும் பிரயாணத்திற்காக வீட்டை விட்டு எப்படி வெளியே புறப்படுவது?" என்று அவர்கள் கூறுவார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களின் மற்ற மனைவியர் கீழ்காணும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ், உம்ரா செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வயதானவர், பலவீனர், பெண்கள் ஆகியவர்களின் ஜிஹாத் ஹஜ்ஜாகும்." நூல் : திர்மிதீ
அபூதாவூதுடைய மற்றொரு அறிவிப்பில்.... "குழந்தைகள், முதியோர் , பலவீனர், பெண்கள் ஆகியோரின் ஹஜ்ஜும், உம்ராவும்தான் இறை வழியில் செய்த ஜிஹாதாகும்' எனக் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் கூற்றை நபிகளாரின் மனைவியரில் ஒவ்வொருவரும் ஒருவிதமாக புரிந்து கொண்டு அதனை செயல்படுத்தி இருக்கிறார்கள் .
இரண்டு வகைகளில் அவர்கள் செயல்பட்டதும் சரியானதே! மேலும் நபி (ஸல் )அவர்களின் இரண்டு வகையான கருத்துகளும் ஏதோ ஒரு சாரார் மூலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நபி (ஸல்) அவர்களின் எந்த ஒரு சொல்லும் இஸ்லாமிய சமூகத்தினரால் புறக்கணிக்கப்படவில்லை. இதுதான் நபி (ஸல்) அவர்களின் கண்ணியமும் மரியாதையும் ஆகும்.
நபிகளாரின் ஒரு கருத்துக்கு இரண்டு வகையான பொருள் சொல்லும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு கருத்தும் நபிகளாரின் கருத்துக்கு எதிர் கருத்து அல்ல! இணக்கமான கருத்துதான்!
பெண் ஷைகு
================
பெண் ஷைகாக விளங்கிய, மார்க்க சட்ட வல்லுனரான, மிகப்பெரும் பேச்சாளரான பாத்திமா பின்த் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் ஒரு உயரமான இடத்தில் நின்று பெண்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்;
அவரின் உரையைக் கேட்டு அங்கிருந்த பெண்கள் மிகப்பெரும் பயனை அடைந்தார்கள்; மேலும் அந்நிகழ்வுக்குப் பிறகு அங்கிருந்த பெண்கள் அனைவரும் அல்லாஹ் மற்றும் ரசூலுக்குக் கட்டுப்பட்டு தமது இதயத்தை அல்லாஹ்விற்காகவே ஒதுக்கி விட்டார்கள்.
இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் அந்த பெண் ஷைகு உடைய அமலைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள்.
மேலும் அவரின் அறிவாற்றல், சிந்தனைகள், பிறரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பாங்கு, அவரின் இறையச்சம், அவரின் இறை நினைவிலான அழுகை ஆகியவற்றைக் கண்டு புகழ்ந்து பேசினார்கள்.
ஸலாஹுத்தீன் அஸ் ஸஃபதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஷைஹு தகியுத்தீன் பின் தைமியா (ரஹ்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை பலரும் என்னிடத்தில் கூறினார்கள்.
ஷைஹு தகியுத்தீன் பின் தைமியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; என் மனதில் பாத்திமா பின்த் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் குறித்து ஒர் எண்ணம் ( குறைத்து மதிப்பிடுவது போன்ற எண்ணம்) எப்பொழுதும் இருந்து வந்தது; அவர் உயரமான இடத்திற்கு ஏறுவதைக் கண்டு அவரை தடுக்க வேண்டும் என நான் விரும்பினேன்; ஆனால் அதை நான் செய்யவில்லை.
இந்நிலையில் அன்று இரவு நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன்; அந்தப் பெண்மணி குறித்து கேட்டேன்; அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர் ஸாலிஹான நல்ல பெண்" என்று கூறினார்கள்.
நூல் : அஃயானுல் உஸ்ர் வ அஃவானுன் நுஸ்ர்.
ஒருவர் குறித்து நமக்கு தெளிவாக தெரியாத போது அவர் குறித்து யாரிடத்திலும் பேசாமல் இருப்பதே நல்லது!.
அதே நேரம் பெண் என்பதற்காக ஒருவர் இறைநேசராகவோ, வழிகாட்டும் நிலையில் உள்ள ஒரு தலைவராகவோ ஆக முடியாது என கருதக்கூடாது என்பதை மேற்கண்ட நிகழ்வு நமக்கு வழி காட்டுகிறது.
பெண்களுக்கு இஸ்லாம் உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் வழங்குகிறது என்பதில் இரு வேறு கருத்து இல்லை.
திருக்குர்ஆனில் 11 பெண்களின் வரலாறு:
=====================================
திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் இருக்கின்றன; அவற்றில் ஒரு அத்தியாயத்தின் பெயர் ஒரு பெண்ணின் பெயராகும்; அதுதான் மரியம்.
அதுமட்டுமின்றி ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள் வரலாறு 7:19-23 வசனத்திலும், நூஹ் (அலை) அவர்களின் மனைவியின் வரலாறு 66:10 ஆவது வசனத்திலும், லூத் (அலை) அவர்களின் மனைவியின் வரலாறு 66:10 ஆவது வசனத்திலும்,
ஃபிர்அவ்ன் உடைய மனைவி ஆசியா அம்மையாரின் வரலாறு 66:11 ஆவது வசனத்திலும், மரியம் (அலை) அவர்களின் தாய் ஹண்ணா பின்த் யாகூத் அவர்களின் வரலாறு 3: 36 ஆவது வசனத்திலும்,
மூசா (அலை) அவர்களின் தாயார் உடைய வரலாறு 28: 7-13 ஆவது வசனத்திலும், மூசா (அலை) அவர்களின் சகோதரியின் வரலாறு 28:11 ஆவது வசனத்திலும், ஷுஐப் (அலை) அவர்களின் மகள்கள் உடைய வரலாறு 28 : 23-26 ஆவது வசனத்திலும்,
யூசுப் (அலை) அவர்களின் மனைவி ஜுளைகா அவர்களின் வரலாறு 12:23-29 ஆவது வசனத்திலும், சுலைமான் (அலை) அவர்களின் மனைவி பில்கீஸ் அம்மையார் அவர்களுடைய வரலாறு 27: 22-44 ஆவது வசனத்திலும் என பதிணொரு பெண்களுடைய வரலாற்றினை அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் விவரித்துக் கூறுகிறான்.
11 பெண்களுடைய வரலாறும் எதிர்கால உலக மக்கள் அனைவருக்குமான ( ஆண்களுக்குமான) வழிகாட்டியாக திகழ்வதால் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்லி இருக்கின்றான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
புர்கா பெண்களின் உரிமை
=============================
ஆதம் (அலை) அவர்களின் உருவ பொம்மையை பூமியின் 2000 வருடங்களுக்கு மேலாக படைக்கப்பட்டு மழையிலும் வெயிலிலும் கிடந்தது. அந்த தோற்றத்தை தினம் தினம் வானவர்களும், இப்லீஸ் இனத்தைச் சேர்ந்தவர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஹவ்வா (அலை) அவர்களுக்கு உயிர் வழங்கப்பட்ட பிறகு ஆதம் மற்றும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை.
ஆம்! ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருமே இல்லாத சொர்க்கத்திற்குள் தனியாக படைக்கப்பட்டார்கள். அப்பொழுது அவரது கணவர் உடன் இருந்தார்.
அந்நியனான ஷைத்தான் ஒருமுறைதான் ஹவ்வாவை திரையின்றி பார்த்தான். அத்துடன் ஆதம் ஹவ்வா (அலை) இருவரும் சொர்க்கத்தில் இருக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்.
பெண்கள் பர்தா - திரைக்குள் இருக்க வேண்டும் என இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது. அப்படித்தான் அல்லாஹ் திரை மறைவில் அதாவது சொர்க்கத்தில் ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்தான்.
ஒரு கவிஞர் பாடுகிறார்;
ஆதமை அல்லாஹ் திரையின்றி படைத்தான்.
ஹவ்வாவை திரைக்குள் வைத்து படைத்தான்.
அல்லாஹ்வும் கூட திரைக்குள் தான் இருக்கின்றான்.
ஆமாம்! அவனை யாரும் பார்த்ததில்லையே!
அவன் தன்னை யாருக்கும் காட்டியதும் இல்லையே!
அப்படி என்றால் அவனும் திரைக்குள் தானே இருக்கிறான்?.....
புர்கா ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று கூக்குரல் இடுகிறார்கள்; முஸ்லிம் பெண்களைப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் பிதற்றோரின் கருத்து இது.
பொதுவாகவே பெண்களுக்கு தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும், தன் அழகை தானே பார்த்தும் ரசிக்கும் உணர்வும் உண்டு.
இந்நிலையில் பெண்கள் புர்கா அணிந்து செல்லும் பொழுது, தன் உடல் பாகங்களின் மீது கவனத்தை சிதறவிடாமல் வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்ல உந்து சக்தியாக அமைந்திருப்பது தான் புர்கா.
எனவே முஸ்லிம் பெண்களின் உரிமை, ஹதீஸ்களின் வழிகாட்டுதலின்படி நடைபெறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனாலும் நடைமுறையில் சில சவால்கள் உள்ளன.
இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்குகிறது; ஆனால் வரலாற்று ரீதியாகவும், நடைமுறை அடிப்படையிலும் சில சமயங்களில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுகிறார்கள் என்றும், இந்த உரிமைகள் போதுமானதாக இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
இது இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களின் வாதம்.
இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், "உலகத்தில் உள்ள மதங்களில் இஸ்லாத்தைப் போன்று பெண்களுக்கு உரிமைகள் வழங்கிய மார்க்கம் வேறு எதுவும் இல்லை" என்றே கூறுகிறார்கள்; அதுவே உண்மை.
பதிவிட்ட நாள் : 17/11/2025
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இந்தப் பகுதி எண்
கட்டுரை எண் 12.
மனதை
ஓர் நிலைப்படுத்துவது எப்படி?
==================================
கொந்தளிக்கும் கடலைப் போல, ஓயாத அலைகளைப் போல, குமுறிக் கொண்டே இருக்கும் எரி மலையைப் போல, கொதிக்கும் தண்ணீரை போல, அடக்க முடியாத காட்டு குதிரையைப் போல மனதில் எப்பொழுதும் ஏதேனும் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது.
'வெள்ளை யானையை கற்பனை செய்யாதே' என்று நான் சொன்னதும் நீங்கள் கற்பனை செய்து விட்டீர்கள் அல்லவா? அதுதான் நமது இதயத்தின் எதார்த்த நிலை!
உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் ஏதேனும் ஒரு நேரத்தில் ஓய்வு எடுக்கின்றது; ஆனால் ஓய்வெடுக்காத ஒரே உறுப்பு உள்ளம் மட்டும்தான்!
உறங்கினாலும் கூட கனவுகளின் மூலம் உள்ளம் உலாவிக் கொண்டிருக்கின்றது.
அலை அலையாக எழுந்து கொண்டே இருக்கும் எண்ணங்களை முழுமையாக கட்டுப்படுத்தவோ, அடக்கவோ இயலாது.
ஆனால் உள்ளத்தில் எழும் எண்ணங்களை திசை திருப்பி, நல்லதை மட்டுமே நினைக்க வைக்க இயலும்.
ஏனென்றால் எப்பொழுதும் எதையேனும் நினைத்துக் கொண்டே இருக்கும் இதயத்தை நல்லதை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் இதயமாக மாற்ற இயலாதா என்ன?
கண்டிப்பாக மாற்ற இயலும்; அல்லாஹ்வையும், ரசூலையும் மட்டுமே நிரந்தரமாக நினைக்கும் இதயத்தை நம்மால் உருவாக்கிட இயலும்.
அப்படிப்பட்ட இதயத்தை செம்மைப்படுத்தி தருகிறவர்கள் ஆன்மீகவாதிகள் ஆவர்.
ஒரு ஆன்மீகவாதி, ஒருவரின் இதயத்தை கட்டுக்கோப்பாக கொண்டு வர சொன்ன வழியைப் பாருங்கள்.
ஞான நிலையை அடைய வேண்டும் எனும் நோக்கத்தில் ஞானக் கல்வியை கற்றுக் கொடுங்கள் என கேட்டு ஒரு இறைநேசரிடம் ஒரு பண்டிதர் - பல வகையான அறிவுகள் பெற்றவர் வந்தார்.
இறைநேசரை சந்தித்ததும், "ஞானம் பெறும் வழியை எனக்குக் கற்றுக் கொடுங்கள்" என்று கேட்டார்.
அந்த இறைநேசர் "இங்கே அமருங்கள் ; இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று குடிப்பதற்கு சூடான பாலை ஒரு சொம்பில் எடுத்துக் கொண்டு, மற்றொரு கையில் சிறிய டம்ளரையும் எடுத்துக்கொண்டு வந்தார்.
அவர் எதிரில் இருந்த டேபிளில் டம்ளரை வைத்து, டம்ளரில் பாலை ஊற்றினார். பாலை ஊற்றிக் கொண்டே இருந்தார்.
டம்ளர் வடிந்து ஓடிக்கொண்டே இருந்தது; ஞானம் பெறுவதற்கான வழியை கேட்டு வந்தவர், "சரி நான் பிறகு வருகிறேன்" என்று புறப்பட்டார் இறைநேசர் அவர்கள்.
"பரவாயில்லை பாலை குடித்துவிட்டு செல்லுங்கள்" என்று கூறினார்; அவர் அமர்ந்து பாலை அருந்திவிட்டு சென்றுவிட்டார்.
பாலை ஊற்றுவது மூலமாக இறைநேசர் ஒரு கருத்தை சொன்னார்; ஊற்றப்பட்ட டம்ளர் நிறைந்து வலிந்ததில் இருந்து அதற்கான அற்தத்தை புரிந்து கொண்டு பண்டிதர் திரும்பி சென்று விட்டார்.
அதாவது நான் ஞானம் கற்றுத்தர தயாராகத்தான் இருக்கின்றேன்; ஆனால் ஏற்கெனவே உங்கள் இதயத்தில் பல்வேறு வகையான கல்வி சார்ந்த விளக்கங்கள் நிரம்பி இருக்கின்றன; பலவகை கருத்துகளாலும் நினைவுகளாலும் நிரப்பி இருக்கின்ற இதயத்தை காலி செய்து கொண்டு வாருங்கள்; ஞானத்தைக் கொண்டு நிரப்புகிறேன்" என்று கேட்கும் விதமாக இறைநேசர் பாலை ஊற்றினார்.
அதை அவர் புரிந்து கொண்டு "சரி! என் இதயத்தை காலி செய்து வெற்றிடம் உள்ள இதயத்தோடு உங்களிடம் மீண்டும் வருகின்றேன்" என்று பண்டிதர் சொன்னதாக இறைநேசர் புரிந்து கொண்டார். இப்படித்தான் இதற்கு பொருள் கொள்ள வேண்டும்.
உங்கள் மனம் அலைகள் போல் ஓடுகிறதா? ஆன்மீக ரகசியங்களை தெரிந்து, உங்கள் மனதை அமைதிப்படுத்தும் நுட்பங்களை இன்று இந்தக் கட்டுரை மூலம் கற்றுக் கொள்ளுங்கள்.
பொதுவாகவே மனதை ஓர் நிலைப்படுத்துவதற்கான வழிமுறைகளை கற்பிப்பவர்கள் தரீகா எனும் ஞான மார்க்கத்தில் அதிகம் கவனம் செலுத்தக்கூடிய ஷைகுமார்கள் ஆவர்.
தரீகாக்களை குறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
தரீகாக்களில் ஜின்கள்
========================
وَأَنَّا مِنَّا الصَّالِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَ ۖ كُنَّا طَرَائِقَ قِدَدًا
நிச்சயமாக எங்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; அவ்வாறு இல்லாத (கெட்ட ) வர்களும் எங்களில் இருக்கின்றனர்; நாங்கள் வெவ்வேறு தரீக்கா (வழி) களில் இருக்கின்றோம். 72 : 11
இந்த வசனம் சூரத்துல் ஜின் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது; ஜின்கள் தமக்குள் பேசிக்கொண்டதை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்த வஹிதான் இந்த வசனம்.
ஒரு ஜின் சொல்கிறது; எங்களில் நல்லவரும் இருக்கிறார்; கெட்டவரும் இருக்கிறார்; நாங்கள் பல தரீகாக்களை உடையவர்களாக இருக்கிறோம்.
சூஃபியாக்களும், ஞானவான்களும், இறைநேசர்களும் இந்த வசனத்தில் உள்ள தரீகா எனும் சொல்லுக்கு ஜின்களிலும் பல தரீகா - ஆன்மீக பாதைகள் இருந்தன என்று சொல்லுகிறார்கள்.
அதுபோலவே இன்று மனிதர்களிலும் பல தரீக்காக்கள் இருக்கின்றன.
தரீக்கா எத்தனை வகை?
==========================
இஸ்லாமிய ஆன்மீக மரபில், அல்லாஹ்வை அடையும் நோக்கில் ஒரே குழுவினராக செயல்படக்கூடியவர்கள் நிறைந்துள்ள சபை தான் தரீக்கா.
இவர்களை சூஃபிகள் என்றும் தஸவ்வுஃப்வாதிகள் என்றும் சொல்லுவார்கள்.
இஸ்லாமிய ஷரீஅத் என்பது, தொழுகை நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளை வலியுறுத்துகிறது.
தரீக்கா என்பது இதயத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வை நெருங்க வழி வகுக்க வழிகாட்டுகிறது.
அல்லாஹ்வை நெருங்க அநேக வழிகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருந்தாலும், இறைநேசர்கள் இறைவனை நெருங்க ஒரு வழியை கண்டுபிடித்து, அதில் பயணித்து அல்லாஹ்வையும் அடைந்து வெற்றி கண்டார்கள்; அந்த வழிகளை காட்டும் ஆன்மீக மரபுகள் நிறைந்தவைதாம் தரிக்கா.
மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் பல தரீக்கா - ஆன்மீக மரபுகள் தோன்றியிருந்தாலும் ஐந்தாம் நூற்றாண்டில் தான் தரீகாக்கள் செல்வாக்கு பெற தொடங்கியது.
1. அந்த வகையில் மாபெரும் மரபுகளை கொண்டு உருவான முதல் தரீக்கா இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தோற்றுவித்த القادرية - காதரிய்யா தரீக்கா ஆகும். இது ஹிஜ்ரி 550 கல்லுக்குப் பிறகு (கி.பி. 1155 ) உருவானது.
2. அர் ரிஃபாயிய்யா الرفاعية / அஹமது அல் ரிஃபாயி (ரஹ்) அவர்கள் ஈராக்கில் ஹிஜ்ரி 555 களுக்கு பிறகு (கி.பி. 1160) தோற்றுவித்தார்கள்.
3. சுஹ்ரவர்திய்யா - السهرورتية / அபூ ஹபீப் அல் சுஹ்ரவர்தீ (ரஹ்) பக்தாத் நகரில் ஹிஜ்ரி 600 ( கி.பி. 1203) காலகட்டத்தில் தோற்றுவித்தார்கள்.
4. ஷிஷ்திய்யா الششتية / காஜா அபு இஸ்ஹாக் ஷிஷ்தீ ( ரஹ்) அவர்கள் ஆப்கானிஸ்தானில் சுமார் ஹிஜ்ரி 530 ( கி.பி. 1135) இல் உருவானது.
5. நக்ஷ்பந்திய்யா - النقشبندية / Naqshbandiyya / பஹாவுத்தீன் நக்ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் மத்திய ஆசியாவின் புகாரா நகரில் ஹிஜ்ரி 750 (கி. பி. 1349) களில் உருவானது.
6. ஷாதிலிய்யா الشاذلية / Shādhiliyya / அபுல் ஹஸன் அஷ் ஷாதிலி (ரஹ்) அவர்கள் எகிப்து மொராக்கோ நகரில் ஹிஜ்ரி 650 (கி.பி. 1250 ) களில் உருவானது.
7. மவ்லவிய்யா المولوية / Mawlawiyya / மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) துருக்கி கொன்யா நகரில் ஹிஜ்ரி 670 ( கி.பி. 1270) களில் உருவானது.
8. பதவிய்யா / البَدَويّة / Badawiyya அஹ்மத் அல் பதவி (ரஹ்) அவர்கள் எகிப்து டன்டா பகுதியில் ஹிஜ்ரி 630 (கி.பி. 1230 ) களில் தோன்றியது.
9. ஹல்வதிய்யா الخلوَتية / Khalwatiyya உமர் அல் கலூதீ (ரஹ்) அவர்கள் துருக்கி அனடோலியா நகரில் ஹிஜ்ரி 800 (கி.பி. 1400 ) களில் உருவானது.
10. தீஜானிய்யா / التيجانية / Tijaniyya அஹ்மத் அல் தீஜானி (ரஹ்) அவர்கள் அல்ஜீரியா மொராக்கோ நகரில் ஹிஜ்ரி 1200 கி.பி . 1785 ) களில் உருவாகி மேற்கு ஆப்பிரிக்காவில் பரவியது.
பத்து தரீக்காக்களின் பெயர்களை நாம் கண்டோம்; இவைகளில் முதன்மையானது காதரிய்யயா தரிக்கா ஆகும்; இந்த தரீக்காவின் வழிமுறைகளில் சில வேறுபாடுகளோடு உருவானது தான் மற்ற தரீக்காகள்.
ஒவ்வொரு தரீக்காவிற்கும் ஆன்மீக வம்சாவளி தொடர் (ஸில்ஸிலா) வெவ்வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களை சென்றடைகிறது.
தரீக்காவில் ஷைகு / ஆன்மீக வழிகாட்டி என்று ஒருவர் இருப்பார். அவருடைய சொற்களையும் செயல்களையும் பின்பற்றி வாழ்வோர் முரீத் என்றும் பீர் என்றும் சீடர் என்றும் அழைக்கப்படுவார்கள்.
இந்த ஷைகுமார்கள் அல்லாஹ்வை திக்ரு செய்யும் வழிமுறையையும் திக்ரில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளையும் கற்றுத் தருவார்.
அதைக் கொண்டு அவர்கள் முராக்கபா எனும் ஆழ் தியானத்தில் திளைத்து மனதை ஓர் நிலைப்படுத்தி அல்லாஹுவை காணும் பாக்கியத்தை உலகத்திலேயே பெறுவார்கள்.
மேலும் அன்பு, கருணை , ஒற்றுமை ஆகியவற்றையே முதன்மையான செயல்பாடாகக் கொண்டு மக்களிடம் நடந்து கொள்வார்கள்.
அதனால் மதவெறி, சாதிய ஏற்றத்தாழ்வு, மொழி அடிப்படையிலான பிரிவுகள் இல்லாமல் ஒன்றுபட்டு வாழும் வழியை வடிவமைத்தார்கள். இதன் காரணமாக இஸ்லாம் மிகப்பெரிய அளவில் உலகெங்கிலும் பரவியது.
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் சொல்லி வந்த சட்டங்களை பின்பற்றுவோரை 'ஹனஃபி' என்றும், இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் சொல்லி வந்த சட்டங்களை பின்பற்றுவோரை 'ஷாஃபி' என்றும் சொல்லப்படுவது போலவே,
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வை எவ்வாறு வணங்க வேண்டும்? எவ்வாறு திக்ருகள் செய்ய வேண்டும்? எந்தெந்த நேரங்களில் என்னென்ன மாதிரியான அமல்களை செய்ய வேண்டும்? என ஞான விஷயங்களை சொல்லி இருக்கிறார்களோ அவற்றை பின்பற்றி வருவோர் 'காதிரி' என்று சமூகத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
காதிரியா தரீகாவைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் இருந்தாலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகமாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு இறைநேசரும் இறைவனை நெருங்குவதற்கு சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வரும் ஒவ்வொருவரும் நக்சபந்தி, சுஹ்ரவர்தீ,என அந்தந்த ஷைகுமார்களின் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
பத்து வகை தரீகா உடைய ஷைகுமார்களும் மனதை ஓர் நிலைப்படுத்துவதற்கும் மனதை அல்லாஹ்வின் பால் வழி நடத்துவதற்கும் பல வழிமுறைகளை சொல்லித் தருகிறார்கள்.
நினைவுகளே இல்லாத இதயம் சாத்தியமா?
==============================
இமாம் ஸதுருத்தீன் பூர்னவி (ரஹ்) அவர்கள் அல்லாமா ஜலாலுதீன் ரூமி (ரஹ்) அவர்களைக் காண அவர்களின் காங்காவிற்கு வந்திருந்தார்கள்.
அங்கே பல நூற்றுக்கணக்கான சீடர்கள் அமைதியாக தியானத்தில் அமர்திருந்தார்கள்.
சீடர்களை எல்லாம் கடந்து அல்லாமா ரூமி (ரஹ்) அவர்களிடம் வந்து, "எனக்கு மிக முக்கியமான மூன்று கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிக்க வேண்டும்" என கேட்டார்.
ஏற்கனவே இமாம் ஸத்ருத்தீன் பூர்ணவி (ரஹ் ) அவர்களை தெரிந்திருந்ததால் மென்மையாக சிரித்தார்கள். அதாவது "கேளுங்கள்" எனபது போல் அமைதி காத்தார்கள்.
இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வை எப்படி அடைவது?" என்று கேட்டார்கள்.
அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள் பதில் சொல்லவில்லை; தம் கண்களை மூடி மௌனமாக அமர்ந்திருந்தார்கள்; அந்த சபை முழுவதும் அமைதி பரவியது.
இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், "இவர் பேசவே இல்லை; ஆனால் பேசி இருந்தால் என்ன மாற்றம் இந்த சபையில் நிகழ்ந்திருக்குமோ அப்படி ஒரு மாற்றம் அங்கே நிகழ்ந்திருப்பதை உணர்ந்தார்.
இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வை அடைந்தவர்களின் அடையாளம் என்ன?" என்று இரண்டாவது கேள்வியை கேட்டார்கள்.
அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள் மௌனத்தை தொடர்ந்தார்கள்; அவர்களின் உடல் அசையவே இல்லை; இந்த நிலையை பார்த்த இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், அல்லாமா ரூமி (ரஹ்) அவர்களின் மௌனம் ஆயிரக்கணக்கான சொற்களை விட ஆழமானது என உணர்ந்தார்; ஆனால் என்னவென்று புரிந்து கொள்ள வில்லை.
"அல்லாஹ்வை அடைந்தவர் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?" என மூன்றாவது கேள்வியை இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்.
அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள் பதில் சொல்லவே இல்லை; ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து, முகத்தின் உள்புறம் அந்த மூச்சுக்காற்று பரவும் விதமாக, மெதுவாக மூச்சை விட்டார்கள்; அவர்களின் முகத்தில் பேரொளி படர்ந்தது.
மூன்று கேள்விகளுக்கும் அமைதியாக இருந்ததின் மூலம் ஏதோ ஒரு பதிலை சொல்லி விட்டார்கள் என்பதை மட்டும் இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள் உணர்ந்தாலும் அது என்ன பதில் என அறியவில்லை.
உடனே இமாம் பூர்ணவி (ரஹ்) அவர்கள், "ஷைகு அவர்களே! தங்களிடம் மூன்று கேள்விகள் கேட்டேன்; தாங்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லையே?" என்று கேட்டார்கள்.
அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள்,
يا صَدْرَ الدين! لقد أجبتك، ولكنك جءت بآذان تَسْمَعُ الألفاظ، ولم تَجِى بِقَلْبِ يُبْصِرُ الحقيقة."
"ஸத்ருத்தீன் அவர்களே! நான் உங்களுக்கு பதில் சொன்னேன்; ஆனால் நீங்கள் சொற்களைக் கேட்கும் காதுகளைக் கொண்டு வந்துள்ளீர்; உண்மையை பார்க்கும் உள்ளத்தை கொண்டு வரவில்லை" என்று கூறினார்கள். பின்னர் மூன்று கேள்விகளுக்கான விளக்கங்களை கூறினார்கள்.
முதல் கேள்விக்கான பதில்: சிரித்துப் பேசி கலகலப்பாக இருக்கும் மனம் உடையவர் தன்னை அறிய மாட்டார்; அமைதியான மனம் உடையவரே இறைவனை அடையவும், காணவும் பாக்கியம் பெறுவார்.
இரண்டாவது கேள்விக்கான பதில்: அல்லாஹ்வை அடைந்தவர் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்.
அதே நேரம் அமைதியாக இருப்பதின் மூலம், தாம் சொல்ல முடியாத கருத்துக்களை தன் முகத்தில் பிரகாசத்தை வெளிப்படுத்தி காட்டுவார்.
மூன்றாவது கேள்விக்கான பதில்: அல்லாஹ்வை அடைந்தவர் மக்களிடையே இருப்பதோடு அவர்களுடன் தவறானவற்றை பேசாமல், அமைதியாக நன்மையை செய்து கொண்டு இருப்பார்.
அவர் மக்களுக்கு பேசுவதின் மூலம் கிடைக்கும் நன்மையை விட அமைதியாக இருப்பதின் மூலம் கிடைக்கும் நன்மை மக்களுக்கு அதிகமானதாக இருக்கும்" என்று கூறினார்கள்.
இமாம் ஸத்ருத்தீன் பூர்ணவி (ரஹ்) அவர்கள் அழுதபடியே, "மௌனம் தான் மிகப்பெரிய பதில்" எனக் கூறினார்கள்.
நூல்: ஸியரு அஃலாமு நுபலா
மனதை ஓர் நிலைப்படுத்துவதற்கும் இறைவனை நெருங்குவதற்கும் மௌனம் சிறந்த வழிகளில் ஒன்றாக முன்னோர்கள், ஞான மார்க்கத்தில் ஈடுபட்ட அனுபவசாலிகள் கூறுகிறார்கள்.
கேள்வி, அறிவு முதிர்ச்சியின் வெளிப்பாடா?
=============================
மூஸா (அலை) அவர்கள் கிளிர் (அலை) அவர்களிடம் ஞானம் பெற சென்றிருந்தபோது கிளிர் (அலை) அவர்கள்,
فَلَا تَسْأَلْنِي عَن شَيْءٍ
(என்னோடு இருக்கும் காலத்தில்) நீங்கள் என்னிடத்தில் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது" என்று நிபதனை விதித்தார்கள்.
இந்த நிபதனைக்கு கட்டுப்பட்டு தான் மூஸா (அலை) அவர்கள் கிளிர் (அலை) அவர்களோடு பயணித்தார்கள்.
ஆனாலும் மூஸா (அலை) அவர்கள் பொறுமை இழந்து மூன்று கேள்விகளை கேட்டதால் கிளிர் (அலை) அவர்கள் திருப்பி அனுப்பி வைத்து விட்டார்கள்.
எனவே ஞானம் பெற வேண்டும் என ஆசைப்படுகிறவர்கள் தனது குருவிடம் அதிகம் கேள்விகள் கேட்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "இந்த நாள் எதுவென்று தெரியுமா? இந்த மாதம் எதுவென்று தெரியுமா? முஸ்லிம்களுக்கு உவமையாக உள்ள மரம் எதுவென்று தெரியுமா?" என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டு இருக்கிறார்கள்.
இவற்றுக்கு பதிலை தெரிந்து வைத்திருந்த நபி தோழர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொல்லிவிட்டு மௌனமாக இருந்தார்கள். அந்த மௌனம்தான் அவர்களுக்கு ஞானத்தை கற்பித்தது.
ஞானப்பாட்டையில் மிக நீண்ட தூரம் பயணித்து வந்துவிட்டதால் தான் இந்த பதிலையே நபித்தோழர்கள் சொன்னார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாகவே ஒரு கேள்வி மற்றொரு கேள்வியை தான் தோற்றுவிக்கும்; ஒரு கேள்வி முடிவான பதிலை கொடுத்து விடாது.
ஞானம் பெறுவோருக்கு
கேள்வி உகந்ததல்ல!
====================================
ஞான கல்வியை கற்க வேண்டும் என்கிற ஆசையில் ஒரு மனிதர் புத்தரிடம் வந்திருந்தார்.
வந்தவர் தன் நோக்கத்தை சொன்னதும் புத்தர், "உனக்கு நான் ஞான கல்வியை கற்றுத்தர சம்மதிக்கிறேன்; ஆனால் ஒரு நிபந்தனை! இரண்டு வருடங்களுக்கு என்னிடம் நீ எந்த கேள்வியையும் கேட்கக் கூடாது; இதற்கு சம்மதித்தால் இரு; இல்லை என்றால் செல்" என்று கூறினார்.
புத்த மடத்தில் நடந்த உரையாடலின் போது மடத்தின் ஒரு பகுதியில் படுத்திருந்த ஒரு துறவி, "அவர் பேச்சைக் கேட்காதே! அவர் உனக்கு எதையுமே சொல்லித் தர மாட்டார்; நானும் உன்னை போல தான் வந்திருந்தேன்; 'கேள்வி கேட்கக் கூடாது' என்று சொன்னார்; சரி என்று நான் இருந்து விட்டேன்; இப்பொழுது அந்தக் கேள்வியே என்னவென்று தெரியவில்லை; எல்லாம் மறந்துவிட்டது
இதுவரை எனக்கு எந்த ஞானமும் கிடைத்ததாக தெரியவில்லை; எனவே இப்பொழுதே நீ இங்கிருந்து ஓடி விடு" என்று கூச்சலிட்டார்.
பொதுவாகவே ஞானம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் குருவை தேடி வருகிறவர்கள் குருவிடம் கேள்விகள் அதிகம் கேட்கக் கூடாது என்பதுதான் முதல் நிபந்தனையாக இருந்ததாக வரலாறு சொல்கிறது.
ஆன்மிக மார்க்கத்தில்
அபூ ஹனிஃபா (ரஹ்)
============================
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்களை சந்தித்து ஆன்மீக போதனைகளை கேட்டு வந்த பிறகு சொன்ன வார்த்தைதான்
لَوْلَا السَّنَتَانِ لَهَلَكَ النُّعْمَان
"இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்களோடு இரண்டு வருட தொடர்பு மட்டும் எனக்கு இல்லாமல் போயிருந்தால் நுஃமான் ஆகிய நான் அழிந்திருப்பேன்" என்ற சொல்.
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் மஸாயில் - சட்டம், குர்ஆன், ஹதீஸ் ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஆக உயர்ந்த உன்னத நிலையை அடைந்திருந்தாலும் ஆன்மீகத் துறையில் இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்களை சந்தித்த பிறகுதான் ஞானம் பெற தொடங்கினார்கள்.
ஷைகுவின் கரம் பிடித்து பைஅத் பெற்று ஆன்மீக வாழ்வு வாழ விரும்புவோர் அந்த ஷைகு اتصال سند - இத்திஸால் ஸனது / ஷைகிடமிருந்து நபிகள் நாயகம் வரை ஷைகுகளின் பாரம்பரிய தொடர் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.
இத்திஸால் ஸனது - ஷைகுமார்களின் இடை முறிவு இல்லாத ஸனது உடையவர்களை பின்பற்றினால் மட்டுமே நமக்கான ஞானம் முழுமையாகக் கிடைக்கும்.
முன்கதிவு - இடை முறிவு ஸனதுள்ள ஷைகுவாக உங்கள் ஷைகு இருந்தால் முழுமையான பயன் கிடைக்காது.
ஹதீஸ் தொடர் முழுமையாக இருந்தால் தான் அது ஸஹீஹான ஹதீஸ் என்று சொல்லப்படும்.
ஹதீஸில் ஒரு இடத்தில் ஒரு அறிவிப்பாளருடைய பெயர் விடுபட்டிருந்தால் அது இடை முறிவு உள்ள ஹதீஸ் - முழுமையாக நம்பத் தகுந்தது அல்லாத நபிமொழி என்று கூறுவர்.
எனவே இடை முறிவு இல்லாத ஒரு ஷைகுவை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு கரண்டு ஷாக் அடித்து இருக்கிறது; அவரை காப்பாற்ற சென்ற ஒவ்வொருவரையும் கரண்டு ஷாக் பிடித்துக் கொள்கிறது.
இவர்களில் இடையில் நிற்கும் ஒருவர் கரண்ட் ஷாக் அடித்துக் கொண்டிருக்கும் நபரை தொடாமல் நிற்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில் இவரை 20 பேர் வரிசையாக தொட்டுக் கொண்டிருந்தால் 20 பேருக்கும் கரண்ட் ஷாக் அடிக்குமா?
அடிக்காது தானே? அதாவது கரண்ட் கம்பத்திலிருந்து பத்தாவது ஆள் வரை கரண்ட் ஷாக் அடிக்கிறது; 11வது ஆள் பத்தாவது ஆளை தொடவில்லை.
ஆனால் பதினொன்னாவது ஆளுக்கு பின்னால் மேலும் 10 ஆட்கள் தொட்டுக் கொண்டிருந்தால் எப்படி ஷாக் அடிக்காதோ அது போலதான் உங்கள் ஷைகிடமிருந்து நபிகள் நாயகம் வரை ஷைகுமார்களின் சரியான தொடர்ச்சி இல்லாதவரால் உங்களுக்கு எந்த பயனும் இருக்காது.
ஆன்மா இல்லாத அழகிய வாழ்வு :
========================
இமாம் ஜீலானி ரஹ் அவர்கள் கூறுவதாவது;
كُنْ مَعَ الْخَالِقِ بِلا خَلْقٍ،
وَكُنْ مَعَ الْخَلْقِ بِلا نَفْسٍ
"படைப்புகளின் நினைவும், தொடர்பும் இல்லாமல் படைப்பாளனுடன் நீ இரு; 'நான்' என்ற உணர்வும், அகங்காரமும் இல்லாமல் படைப்புகளுடன் நீ இரு" என்று இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அதாவது, அல்லாஹ்வுடன் உன் இதயத்தை தொடர்பு படுத்தி வைத்திரு;
ஆனால் உலக படைப்புகள், ஆசைகள், விருப்பங்கள், பொருள்கள் ஆகியவற்றின்பால் மனம் சென்று விடாமல் விலகி இருக்க வேண்டும்.
நாம் தொழுவதை பிறர் பார்க்க வேண்டும்; நாம் தர்மம் வழங்குவதை பிறர் பார்க்க வேண்டும் என விரும்புகிறோம்.
அதே சமயம் நாம் ஃபோனில் தவறானவற்றை பார்ப்பதை பிறர் பார்த்துவிடக் கூடாது என ஆசைப்படுகிறோம்.
அதாவது எந்த வகை படைப்புகளோடும் தொடர்பில் இல்லாமல் படைத்தவனோடு மட்டும் தொடர்பில் இருக்கும் போது நமக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமே மிஞ்சி இருக்கும்.
“كُنْ مَعَ الْخَلْقِ بِلا نَفْسٍ”
'நான்' என்ற உணர்வும், அகங்காரமும் இல்லாமல் படைப்புகளுடன் ஒன்றி வாழ்!" என்பது “இக்லாஸ்” என்ற பண்பை குறிக்கின்றது.
மக்கள் மத்தியில் வாழும் ஒருவருக்கு நஃப்ஸ் - ஆன்மா இல்லாமல் இருக்க வேண்டும்; அதாவது பிறர் மீது வருத்தம், வன்மம், கோபம், புகழுக்கு மயங்குதல் போன்ற எந்த குணங்களுக்கும் ஆட்படாமல் சலனமே இல்லாமல் வாழ வேண்டும்.
பிறர் நமக்கு ஏற்படுத்தும் கோபம் நமக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது; நம்மை ஒருவர் புகழும் பொழுது அந்தப் புகழ் மொழியால் நம்மில் சந்தோஷம் வெளிப்பட்டு விடக்கூடாது. எல்லா நிலைகளையும் சமமாக பாவிக்கும் ஒரு மனநிலையை பெற வேண்டும்; அதுவே உயர்ந்த நிலை.
நூல்: அல் ஃபதஹுர் ரப்பானி வல் ஃபைழுர் ரஹ்மானி
ஏமாந்து விடாதீர் :
=================
ஒரு விஞ்ஞானி கல்யாணம் என்றால் என்ன என்று அனுபவபூர்வமாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு திருமணம் செய்தார்.
திருமண வாழ்க்கைக்குள் சென்று மனைவி, பிள்ளைகள், வேலை என அதில் உலன்றதால் தாம் ஒரு விஞ்ஞானி என்பதும், திருமணத்தை ஆய்வு செய்யத்தான் வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து முழுமையாக இல்லற வாழ்வில் ஈடுபட்டு விட்டார்.
உலகத்தில் எந்த ஒன்றையும் எளிதாக கற்றுக் கொள்ள இயலும்; அதற்குள் மூழ்கி விடவும் முடியும்.
ஆனால் ஞானம் பெறுவதற்கான வழிகளில் உள்ளே சென்று, வெற்று இதயத்தை பெற்றிடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல!
படிப்பதாலோ கேட்பதாலோ மட்டும் ஞானத்தை பெற்று விட முடியாது; மனதை ஓர் நிலைப்படுத்தி விடவும் முடியாது; ஞானம் பெற வேண்டுமானால் அதற்கான அமல் - பயிற்சிகளில் முழுமையாக நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த பயிற்சிதான் (அமல்தான்) நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.
அதே நேரம் இவரிடம் சென்றால் இவர் நம்மை ஞானியாகி விடுவார், சூஃபியாக்கி விடுவார் என்று யாரையும் நம்பி சென்று விடாதீர்.
யாராலும் நம்மை மாற்றவே இயலாது; நபிகள் நாயகம் அவர்கள் "ஒரு மலை நகர்ந்து வந்து விட்டது என்று சொன்னால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்று சொன்னால் நம்பி விடாதீர்கள்" என்று சொல்லி இருக்கிறார்கள்.
எனவே யாராலும் யாரையும் மாற்றவே இயலாது ஆனால் நம்மை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள இயலும்.
அதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை என்னவென்றால் நம்மிடத்தில் உள்ள கெட்ட செயல்கள், கெட்ட பேச்சுகள், கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடமிருந்து வெளியேற்ற வேண்டும்.
அதேநேரம் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விஷயங்கள், நல்ல செயல்கள், நல்ல சிந்தனைகள், நல்ல பேச்சுகள், நல்ல பார்வைகள், நமக்குள் வரும்போது ஒரு கட்டத்தில் நாம் முழுமையாக கெட்டவற்ற வெளியேற்றி முழுமையாக நல்லவற்றை உள்ளே கொண்டு வந்த நல்ல மனிதர்களாக ஆகி விடுவோம்.
இவ்வாறு செய்தால் மட்டுமே நாம் ஞானம் பெற முடியும்; மனதை ஓர் நிலைப்படுத்த இயலும்.
ஆடு மேய்ப்பவனின் தொழுகை :
============================
நல்வழியில் மற்றும் தனிமையில் அதிக நேரங்களை செலவழிப்போர் விரைவாக ஞானம் பெறுவர்.
ஆடு மேய்க்கிறவர் ஆட்டு மந்தையிலும், மாடு மேய்கிறவர் மாட்டு மந்தையிலும், ஒட்டகம் மேய்ப்பவர் ஒட்டக மந்தையிலும், விவசாயி தன் தோட்டத்திலும், வழிப்போக்கன் நடை பாதையிலும் தொழுவது மிகச்சிறந்தது.
ஏனென்றால் இவர்கள் பிறர் பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காக தொழுவது இல்லை; அல்லாஹுவை உண்மையாகவே வழிபடுகிறவர்கள் ஆவர்.
வீட்டிலும் பள்ளிவாசலிலும் தொழுவோரின் உள்ளத்தில் பிறர் பார்ப்பார்கள் ; நம்மை வணக்கசாலி என எண்ணுவார்கள்; பாராட்டுவார்கள் என்கிற எண்ணம் வந்து போக வாய்ப்பு உண்டு.
ஆனால் ஆட்டு மந்தையில் தொழுகிறவன் உள்ளத்தில் ஆடுகள் நம்மை பார்க்கும், பாராட்டும் என்று எனவே மாட்டான். எனவே தான் அவர்களின் தொழுகை சிறந்ததாக ஞானவண்கள் கருதுகிறார்கள்.
பிறர் பார்க்காத நேரங்களில், இடங்களில் எப்படி எல்லாம் இறைவனை வணங்க இயலுமோ அவ்வாறெல்லாம் வணங்க உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்; இறைவனை அன்மையை பெறுவீர்.
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 118 - 181 காலகட்டத்தில் இன்றைய துருக்கிமெனிஸ்தானில் உள்ள மர்வு என்னும் இடத்தில் பிறந்தார்கள்.
இவர்கள் ஒரு யுத்தத்திற்கு சென்றிருந்த போது ஒரு ஆற்றங்கரையில் தனது குதிரையை கட்டி வைத்துவிட்டு நஃபில் தொழுது கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் தொழுது முடித்துவிட்டு பார்த்தார்கள்; அவர்களுடைய குதிரையை காணவில்லை.
ஆங்காங்கே சென்று தேடிய பொழுது ஒருவரின் வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.
உடனே அந்தக் குதிரையை இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு அந்த வயலுக்கு உரியவரை தேடிச் சென்றார்கள்.
அவர் ஆற்றில் இருந்து வயலுக்கு தேவையான தண்ணீரை ஏற்றம் இறைத்து கொண்டிருந்தார்.
அவரிடம் சென்று, "எனது குதிரை தங்களின் வயலில் மேய்ந்து விட்டது; அந்தக் குதிரையை அதோ அந்த மரத்தில் கட்டி வைத்திருக்கிறேன்; தாங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் சென்று விட்டார்கள்.
இறைவன் கடமையாக்கிய யுத்தத்தை மேற்கொள்ளும் பொழுது பிறரின் வயலில் சாப்பிட்ட / அதாவது ஹராமான பொருளை சாப்பிட்ட ஒரு குதிரையில் ஏறி, இறைகடமையை எப்படி நிறைவேற்ற இயலும்? ஹராமான பொருளை சாப்பிட்ட குதிரையில் ஏறிச் சென்று ஹலாலான கடமையை எப்படி செய்ய இயலும்? என்று எண்ணிதான் அந்த குதிரையை வழங்கி விட்டார்கள்.
மனதை இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.
நூல்: ஸியர் அஃலாமு நுபலா
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் மிகப்பெரும் இறை நேசராக வாழ்ந்ததாக வரலாறு சொல்லிக் காட்டுகிறது; அதற்குக் காரணம் அவர்களின் மனத் தூய்மையும் மன ஓர்மையும்தான்.
மன ஓர்மை, அனைத்துத் துறையிலும் வெற்றி பெறுவதற்கான முதல் பயிற்சி.
பதிவிட்ட நாள் 16/11/2025
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :-
-- 1 --
தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தீ முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹ்) அவர்கள்
=====================================
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்,
மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத்
================================================================
عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: وَمَوْتُهُ (أَيِ الْعَالِمِ۞) مُصِيبَةٌ لاَ تُجْبَرُ وَثُلْمَةٌ لاَ تُسَدُّ وَهُوَ نَجْمٌ طُمِسَ مَوْتُ قَبِيلَةٍ أَيْسَرُ مِنْ مَوْتِ عَالِمٍ
رواه البيهقي
அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
ஓர் ஆலிமின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு! நிறைவு செய்ய முடியாத குறை! அவர் மரணித்ததின் காரணமாக ஒளியிழந்த நட்சத்திரமாக அவர் ஆகுகிறார். ஓர் ஆலிமுடைய மரணத்தைவிட ஒரு கோத்திரத்தார் அனைவரும் மரணிப்பது மிகச் சாதாரணமானது!''
நூல் : பைஹகீ
காஜி அவர்களின் மரணம் இணை இல்லாத இழப்பு! அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தௌசை வழங்கி அவர்களை அமைதிப் பெறச் செய்வானாக! ஆமீன்!!
1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராக ராஜாஜி அவர்கள் இருந்தபோது காஜி பதவிக்கு அரசு இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து ஐந்து நபர்கள் விருப்ப மனு அளித்திருந்தார்கள்.
அவர்களுக்கான நேர்காணல் தேதி அரசு மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த குறிப்பிட்ட நாளில் நேர்காணல் - இண்டர்வியூவிற்கு நான்கு பேர் குறித்த நேரத்தில் ஆஜராகி இருந்தார்கள்.
முதல் அமைச்சர் ராஜாஜி அவர்கள் வந்திருந்த ஆலிம்களிடம் பேசுவதற்காக தயாரான போது, ஐந்தாவது நபர் ஹபீபுல்லாஹ் என்பவர் வராததை அறிந்து "அவர் ஏன் வரவில்லை?" என்று தம் உதவியாளரிடம் கேட்டார்.
"அய்யா! இன்று வெள்ளிக்கிழமை என்பதால் தம்மால் இண்டர்வியூவிற்கு வர இயலவில்லை" என ஹபிபுல்லாஹ் என்பவர் கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவித்தார் .
உடனே ராஜாஜி அவர்கள் "ஷரிஅத் சட்டப்படி தீர்ப்பு வழங்கும் காஜி பதவிக்கு இவர்தான் பொருத்தமானவர்; ஹபீபுல்லாஹ் சாஹிபை தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக தேர்வு செய்து அறிவித்து விடுங்கள்" என முதல்வர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் உத்தரவுப் பிறப்பித்தார்கள்.
அவ்வளவு பேணுதலும், மார்க்க பற்றுதலும் உடைய மௌலானா, ஹபீபுல்லாஹ் (ரஹ்) அவர்களின் மருமகன் தான் தமிழ்நாட்டின் தலைமை காஜி பொறுப்பை அலங்கரித்த அல்லாமா, முஃப்தி, டாக்டர், ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அஸ்ஹரீ அவர்கள்.
பாரம்பரியம் :
=====================================
ஷம்சுல் உலாமா, காஜி, உபைதுல்லாஹ் அவர்கள் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் 1880 - 1927 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முதல் காஜி ஆவார்கள். இவர்களின் அடக்கத்தளம் திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் இருக்கின்றது.
காஜி முஹம்மது ஹபீபுல்லாஹ் அவர்கள் 1928 - 1978 வரை சுமார் 50 ஆண்டு காலம் காஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத் தளமும் திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வாலாஜா மஸ்ஜிதில் உள்ளது.
காஜி ஸைய்யது ஷா முஹம்மது (1978 - 1981 ) அவர்கள் காஜியாக இருந்து செயல்பட்டார்கள். இவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும்போது அங்கேயே வஃபாத் ஆகிவிட்டார்கள். அவர்கள் அடக்கத்தளம் ஜன்னத்துல் முஅல்லாவில் அமைய பெற்றுள்ளது.
காஜி முஹம்மது அஜீஸுத்தீன் அவர்கள் 1982 - 1986 வரை காஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத்தளம் சிட்டி சென்டர் அருகில் உள்ள தஸ்தகீர் ஸாஹிப் தர்கா அடக்கத்தளத்தில் உள்ளது.
இன்றுள்ள டாக்டர், காஜி, முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூபீ அவர்கள் 1986 முதல் 25/05/2025 வரை காஜியாக இருந்து செயல்பட்டு வந்தார்கள்.
பிறப்பும் கல்வியும் :
====================
காஜி முஹம்மத் அஜீசுத்தீன் - உம்முல் ஹைர் தம்பதியருக்கு 12/6/1942 - 27/5/1361 அன்று ஹைதராபாத்தில் நமது தலைமை காஜி அவர்கள் பிறந்தார்கள்.
உலகப் புகழ்பெற்ற ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பிஎஸ்சி ஜென்ரல் (B.Sc. General) 1962 ஆம் ஆன்று படித்து முடித்தார்கள்.
1973 ஆம் ஆண்டு மதராஸ் பல்கலைக்கழகம் சென்னையில் அஃப்ஸலுல் உலமா இளம்கலை கல்வியை கற்றுத் தேரினார்கள்.
1978 இல் "அல் இஜாசத்துல் ஆலியா ஃபீ உஸூலுத்தீன் (ஸஃப்வதுத் தஃப்ஸீர்" என்ற உயர் கல்வியை
ஆயிரம் ஆண்டு பழமையான உலகப்புகழ் பெற்ற, இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான எகிஃப்து 'ஜாமிஉல் அஸ்ஹர்' பல்கலைக்கழகத்தில்
பயின்றார்கள். இங்கு நான்கு வருடங்கள் எகிப்தில் தங்கி இருந்து படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தாயகம் திரும்பி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் M.A., Arabic படித்து 1984 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்கள்.
ஹள்ரத் அவர்கள் அரபி, உருது, ஃபார்சி, தெலுகு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உரையாடும் திறன் பெற்றவர்வர்கள் ஆவர்.
مولانا محمد غوس شرف الملك ومؤلفاتة العربية
Moulana Mohammed Ghouse Sharf Ul Mulk Wa Mu'allafathul Arabiyah - M.Phil - என்ற தலைப்பில் இளம் முனைவருக்கான பட்டயப் படிப்பை மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1988 ஆம் ஆண்டு படித்து முடித்தார்கள்.
இவர்கள் இந்தப் படிப்பை படிக்கும் பொழுது காஜியாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு
العلماء الكبار من أسرة القاضي بدر الدولة ومساهمتهم للعلوم العربية والإسلامية
Al Ulama Al Kibar Min Usrati Al Qazi Badrud Dawla Wa Musahimatihim Lil Uloom Al Arabiyyah Wal Islamiyyah எனும்
தலைப்பில் படித்து 2000 ஆமாவது ஆண்டு பிஎச்.டி (Ph.D) எனும் முனைவர் பட்டம் பெற்றார்கள்.
இவரின் முனைவர் பட்டத்துக்குரிய வழிகாட்டியான சென்னை பல்கலைக்கழக அரபுத் துறை தலைவரும் பலநூறு ஆலிம்களின் வழிகாட்டியும் சிறந்த கல்வியாளருமான மறைந்த நிஜார் அஹ்மது (ரஹ்) அவர்கள் இவரது ஆராய்ச்சி கட்டுரையில் ஒரு புள்ளி ஒரு கமா கூட மாற்றமோ திருத்தமோ செய்யாமல் அப்படியே ஒப்புக்கொண்டார்கள் என்று இப்பொழுதும் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆலிம்களிடையே பேசு பொருளாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
காஜி அவர்களின் பரம்பரை :
=====================================
நமது தலைமை காஜி அவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, முஹம்மது அஜீசுத்தீன் (ரஹ்) அவர்கள் ஹைதராபாத் நிஜாம்களின் தலைமை செயலக அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில் பணியாற்றினார்கள்.
நமது தலைமை காஜி அவர்களின் குடும்பத்தினரை அல் நாயித் / நவாயித் என அழைக்கின்றனர்.
மதீனாவை ஆட்சி செய்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்ற ஆட்சியாளரின் காலத்தில் அவனுடைய கொடுமைகளை தாளாமல் ஒரு கூட்டம் பஸரா (எகிப்து) நகருக்கு குடி பெயர்ந்தது. பின்னர் அவர்கள் இந்தியாவின் வடக்கு பகுதியில் வந்து குடி ஏறினார்கள்.
நாயித் எனும் குடும்பத்தினர் இன்றும் அரபு நாடு மற்றும் ஈரான், ஈராக் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நவாயித் எனும் குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய தோழர்களின் வம்சாவளியினர் என்பது உண்மை.
والنَّائِطي: نسبةً لسُلالةٍ من القبائل العربيَّة، هاجرت من المدينة المنوَّرة خوفًا من الحجَّاج بن يوسف الثَّقفي إلى البصرة، ثم إلى السَّاحل الجنوبي للهند، وسكنت به، ومارست التِّجارة والملاحة، ولها جهدٌ عظيمٌ في الدَّعوة، والإرشاد، والتَّأليف، والتَّحقيق، وقد سُمِّيت بـ ((النَّوَائِتِ)) أو ((النَّوَائِطِ)).
இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தான் நமது தலைமை காஜி என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் தங்களை அவ்வாறு சொல்லிக் கொள்வதில்லை. 'சையது வம்சம்' என்றும் சொல்லிக் கொள்வதில்லை.
காஜி அவர்களின் முன்னோர்கள் :
===============================================================
ஹள்ரத், காஜி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூபீ அவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, முஹம்மது அஜீசுத்தீன் (ரஹ்), இவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, உபைதுல்லாஹ் ஷம்சுல் உலமா (ரஹ்), இவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, ஸிப்கதுல்லாஹ் மதராஸீ பத்ருத்தவ்லா (ரஹ்), இவர்களின் தந்தை ஹள்ரத், திவான், முஹம்மது கவுஸ் ஷரஃபுல் முல்க் (ரஹ்),
இவர்களின் தந்தை ஹள்ரத், மவ்லவீ, நஸிருத்தீன் முஹம்மது (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, நிஜாமுதீன் அஹமது ஸகீர் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், முஹம்மது அப்துல்லாஹ் ஷஹீத் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, நிஜாமுத்தீன் அஹமது கபீர் (ரஹ்),
இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, ஹுசைன் லுத்ஃபுல்லாஹ் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, ரழிவுத்தீன் முர்தழா (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, முஹம்மது கபீர் (ரஹ்),
இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, அஹமது (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், ஃபகீஹ் அபூ முஹம்மத் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், ஃபகீஹ் மக்தூம் இஸ்மாயீல் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், ஃபகீஹ் மக்தூம் இஸ்ஹாக் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், ஃபகீஹ் அதாவு அஹ்மத் (ரஹ் ) ஆவார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்ந்த காலத்தில் மிக பெரும் அறிஞர்களாகவும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில் தோன்றியவர்கள் தான் நமது தமிழ்நாடு தலைமை காஜி அவர்கள்.
தலைமை காஜி அவர்களின்
எளிமை, தூய்மை, வாய்மை :
============================
தலைமை காஜி அவர்கள் தமது அலுவலகத்தில் வெறும் கோரைப்பாயில் அமர்ந்துதான் தம் பணிகளை மேற்கொள்வார்கள்.
பழங்காலத்தில் கணக்குப் பிள்ளைகள் வைத்திருப்பது போன்று மரப்பலகையினால் ஆன சிறியதொரு டேபிள் போட்டு அமர்ந்திருப்பார்கள்.
காலை எட்டு மணிக்குத் தமது பணியைத் தொடங்கி மஃரிப் வரை அலுவலகத்தில் அமர்ந்திருந்து பல பாகங்களிலிருந்து வரும் அனைவருக்கும் கேட்கும் சான்றிதழ்களை வழங்குவார்கள். அதற்காக ஒரு பைசாகூட கட்டணம் பெற மாட்டார்கள்.
தலைமை காஜி அவர்களுக்கு உதவியாளரோ, பியூனோ, டைப்மிஷினோ தொலை பேசியோ எதுவும் கிடையாது.
ஆடம்பரம் இல்லாமல் மிகப்பணிவுடனும், எளிமையாகவும், புன் சிரிப்புத் தவழ அனைவரையும் வரவேற்று அவர்களின் குறைகளை அறிந்து நிறைவு செய்துத் தருவார்கள்.
எவரையும் கடிந்து கொள்ளாமல் பணியாற்றுவதை காணும்போது நாம் படித்த கலீஃபாக்களின் வாழ்வுதான் நம் கண் முன்னே வந்துச் செல்லும்.
பார்க்கவும் பழகவும் அவர்கள் எளிமையாக இருந்தாலும் கொள்கையில் உறுதியானவர். இவர்களைப் போன்று கொள்கையில் உறுதியான வேறு எவரையும் நாம் பார்க்க இயலாது. பார்த்திருக்கவும் இயலாது.
இவர்கள் கலந்து கொள்ளும் திருமணங்கள், மீலாது விழாக்கள் ஆகியவற்றுக்கு தம்மிடமுள்ள இரு சக்கர வாகனத்தில்தான் வருவார்கள். அதற்காக கட்டணம் எதையும் பெறமாட்டார்கள்.
நிகழ்ச்சி நடத்துனர்கள் எதுவும் நன்கொடை கொடுத்தாலும் கண்டிப்பாக மறுத்துவிடுவார்கள்.
மார்க்கப் பற்றிலும் , கொள்கை உறுதியிலும், பேணுதலான வாழ்க்கையிலும் முன்னோர்களை மிஞ்சிய தனையனாகவே நமது தலைமை காஜி அவர்கள் இருந்தார்கள்.
ஆரம்ப காலத்தில் டிவிஎஸ் 50 யோடு வலம் வந்தவர்கள் , பின்பு ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தார்கள். உடல் கொஞ்சம் தளர்வுற்றபோது தான் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
சொந்தமாக கார் வாங்கும் தகுதி இருந்தும் , அரசாங்கம் சைரன் வைத்த கார் கொடுப்பதற்கு முனைந்த போதும் வேண்டாம் என்று மறுத்து கடைசி வரை தன்னை ஒரு சாதாரண சேவகனாகவே காட்டிக் கொண்டு வாழ்ந்தார்கள்.
இறைவணக்கமே தனது வாழ்க்கை! இறையச்சமே தனது உயிர்மூச்சு என வாழ்ந்தவர் நமது அரசு தலைமை காஜி அவர்கள் !
தமிழ் நாட்டில் தொடர்ந்து 40 ஆண்டுகள் அரசு தலைமை காஜியாக பணியாற்றியவர்கள் !
கலைஞர் , எம்ஜிஆர், ஜெயலலிதா , ஓ.பி.எஸ் , ஈ.பி.எஸ்., மு.க. ஸ்டாலின் போன்ற ஆறு முதல்வர்களின் ஆட்சியில் தலைமை காஜியாக இருந்து யாரிடமும் எந்த உதவியும் கோராமல் கோமானாக வாழ்ந்தவர்!
ஒருமுறை ஜெயலலிதா அவர்கள், "உங்களிடம் பேச வேண்டும் நேரம் கிடைக்குமா?" என்று கேட்ட போது சிரித்துக் கொண்டே , "நேரம் இருந்தால் சொல்லுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே நடந்தவர்!
சென்னை புது கல்லூரியில் அரபி பேராசிரியராகப் பணியாற்றிய போது சம்பளம் எதுவும் வாங்காமல் நிறைவாக பணியாற்றியவர்!
அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு முதல்வரையோ , அமைச்சர்களையோ , ஆளுநரையோ கண்டுக் கொள்ளாமல் உடனே அங்கிருந்து புறப்பட்டு விடுபவர் !
தலாக், குலா போன்ற விவாகரத்து விஷயத்தில் யாருடைய பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளாமல் மார்க்க அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய சிறந்த மார்க்க அறிஞர் !
சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள தீவான் சாகிப் பகுதியில் எளிமையாக வாழ்ந்தவர்!
தலைமைக்காஜி எனும் சகாப்தம்
=====================================
தலைமைக் காஜி அவர்கள் தன் வாழ்நாளில் ஆறு முதல்வர்களை சந்தித்துள்ளார்கள். இருந்தும் அவர்களில் யாரோடும் நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால் அவர்கள் தலைமைக் காஜியோடு நெருக்கமாக இருக்க ஆசைப்பட்டார்கள்.
திருமண சபை போன்ற வைபவங்களுக்கு சாதாரணமாக வருவார்கள். கக்கத்தில் ஒரு பையை வைத்திருப்பார்கள். மஜ்லிஸிற்கு வந்தவுடன் அதிலுள்ள வாஸ் கோட்டை எடுத்துப் போடுவார்கள். போட்டவுடன் இராஜ கம்பீரமாக இருக்கும்.
என்னருகில் அமருங்கள்:
=====================================
ஒர் இஃப்தார் நிகழ்ச்சியை அ.தி.மு.க. ஆளும் அரசு ஏற்பாடு செய்திருந்தது. அது ஒரு அரசு விழா ஆகும்.
அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மேடை ஏறி தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார்கள்.
பின்னர் வந்த காஜி சாஹிப் அவர்கள் மேடையில் ஏறியதும் முன்னிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.
அதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு அமைச்சரை அழைத்து, "காஜி அவர்களை என் ஆசனத்திற்கு அருகில் அமரச் செய்யுங்கள்" என்று சொன்னார்கள்.
அவரும் சென்று, "வாருங்கள் முதலமைச்சர் அழைக்கிறார்கள் ; முதல்வருக்கு அருகில் உள்ள இருக்கையில் வந்து அமருங்கள் " என்று கூறினார்.
வழமைப் போல் காஜி சாஹிப் அவர்கள் சிறிய ஒரு புன்னகையுடன் அதை தவிர்த்து விட்டார்கள்.
இதனை சற்றும் அதை எதிர்பார்க்காத முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தானே எழுந்துச் சென்று காஜி சாகிப் அவர்களை சந்தித்து அவர்களின் காதருகில் குனிந்து, "எனக்கு அருகில் வந்து அமருங்கள்" என்று சொல்லி இருக்கையை தம் கைகளை நீட்டி சுட்டி காட்டினார்கள்.
அதன் பின்னர் காஜி ஸாஹிப் அவர்கள் எழுந்துச் சென்று அந்த நாற்காலியில் அமர்ந்தார்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே எழுந்துச் சென்று அழைத்தது காஜி ஸாஹிபைத் தவிர வேறு யாருக்காவது இருக்குமா?
"கேட்டுப் பெறுதல் இறைவனிடம் மட்டுமே.."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~=====================================
மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் காஜி அவர்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார்கள்.
ஒருமுறை அன்வர் ராஜா எம்.எல்.ஏ. அவர்களை அழைத்து, "காஜி அவர்களுக்கு அரசு சார்பில் ஒரு கார் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்; அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்ற போது அன்வர் ராஜா அவர்களும் காஜி அவர்களை சந்தித்து முதலமைச்சர் அவர்களின் ஆசையை தெரிவித்தார்கள்.
அன்பான அந்த கட்டளையை மறுக்க முடியாமல் சரி என்று காஜி அவர்கள் சொல்லிவிட்டார்கள்.
இதை அன்வர் ராஜா அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடம் சொல்ல.. அவர்கள் மகிழ்ச்சியுடன், "இது அரசு சார்பாக வழங்கப்படுவதால் சில ஃபார்மாலிட்டிஸ்காக காஜி அவர்களுடைய லெட்டர் பேடில் இது சம்பந்தமாக வேண்டுகோள் விடுத்து ஒரு கையெழுத்தை மட்டும் போட்டு கொடுக்கச் சொல்லுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று முதலமைச்சர் அவர்கள் கூறினார்கள்.
இந்தத் தகவலை மீண்டும் தலைமை காஜி அவர்களிடத்தில் அன்வர் ராஜா அவர்கள் சொன்னபோது, "என் வாழ்நாளில் நான் ஒருபோதும் யாரிடத்திலும் எதையும் கேட்டு பெற்றதில்லை; ஃபார்மாலிட்டியாக இருந்தாலும் லெட்டர் பேடு மூலமாக அரசு வழங்கும் காரை கேட்டு தான் பெற வேண்டும் என்றால் அது எனக்கு தேவை இல்லை; "கேட்டுப் பெறுதல் என்பது என் இறைவனிடம் மட்டுமே".. என்று அழகாய் கூறி மறுத்துவிட்டார்கள்.
பாக்கியம் நிறைந்த ஜனாஸா தொழுகை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~=====================================
ஒரு ஆலிம் இப்படி கூறினார்;
"ஹழ்ரத்..! நான் காலையிலேயே தலைமை காஜி அவர்களின் ஜனாஸாவை பார்த்துவிட்டு வந்து விட்டேன். அது போதும் என்று தான் நினைத்திருந்தேன். கஃபாவிற்கு ஓர் ஈர்ப்பு இருப்பது போல், இந்த மகத்தான மனிதரின் மீதும் அல்லாஹ் ஒர் ஈர்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறான் போலும்.
என்னால் இருப்புக் கொள்ள முடியவில்லை. பாக்கியமான மனிதரின் ஜனாஸாவில் கலந்து கொள்வதும் ஒரு பாக்கியம் என்று எண்ணி ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்" என்று கூறினார்.
காலையிலேயே தலைமை காஜி அவர்களின் ஜனாஸாவை பார்த்துவிட்டு வந்த பல ஆலிம்கள் ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். அனைவருக்கும் அந்த எண்ணம் தான் மனதில் ஓடி இருக்கும் போல் தெரிகிறது.
அதைப்போல் எவ்வளவு பெரிய பதவிகளை நாம் பெற்றிருந்தாலும் புகழ், பணம், அதிகாரம் என்கின்ற போதைகள் நம் தலையில் ஏறி விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பணிவு என்கின்ற ஆடையை மட்டும் நாம் எப்பொழுதும் அணிந்திருக்க வேண்டும்.
அப்பொழுதான் கஃபன் என்கிற ஆடையை அணிந்து செல்லும் போது நாம் நல்லவிதமாக போய் சேருவோம் என்பதையே காஜி அவர்களின் ஜனாஸா தொழுகைக்கு கூடிய கூட்டம் நமக்கு உணர்த்தும் பாடம்.
தலைமை காஜி அவர்களின்
அறிவும் அனுபவமும் நிகரற்றது
=============================
ஒருவருடைய தங்கைக்கு நான் இரண்டாம் திருமணம் செய்து வைத்தேன்.
அவர்கள் தாய்லாந்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அங்கேயே முறைப்படி அவர்கள் விவாகரத்து பெற்றிருந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் அவருடைய தங்கைக்கும் இங்குள்ள ஒருவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயத்து என்னை திருமணம் செய்து வைக்க அழைத்து இருந்தார்கள்.
அழைத்தவர் எங்களது மஹல்லா வாசி தான். தன்னிடம் எல்லா ஆவணங்களும் இருப்பதாக கூறினார். அதை நம்பி நான் திருமணம் செய்து வைத்து விட்டேன்.
அந்த ஆவணங்களை நான் முன்கூட்டியே பார்வையிடவும் இல்லை. என் பார்வைக்கு அவர் வழங்கவும் இல்லை.
திருமணத்திற்கு பின்னர் எனது தஃப்தரை எடுத்துச் சென்று காஜியிடம் வழங்கினேன். இரண்டாம் திருமணத்திற்கான ஆவணங்களையும் வழங்கினேன்.
அவர் அதை சரி பார்த்து விட்டு, "மௌலானா! எல்லாம் சரியாக இருக்கிறது; ஆனாலும் பெண் தரப்பினருடைய சொந்த ஊரின் அனுமதி கடிதம் வாங்கிக் கொண்டுதான் நீங்கள் இந்த திருமணத்தை செய்து வைத்திருக்க வேண்டும்;
இவர்களுடைய முழுமையான தகவல்கள் அனைத்தும் ஊர்வாசிகளுக்கு மட்டுமே நன்கு தெரியும்; அதனால் இனி இப்படி செய்யாதீர்கள்" என்று சொல்லி அனுப்பினார்கள்.
இந்த அறிவுரை, மற்றொரு இரண்டாம் திருமணத்தின் போது என்னை ஏமாற்ற நினைத்துவரிடம் இருந்து என்னை நான் பாதுகாத்துக் கொண்டேன்.
காஜி அவர்களின் அனுபவம், மக்களை புரிந்து வைத்திருந்த விதமும் நிகரற்ற அறிவு.
காஜி அவர்களை நடமாடும் இறைநேசராகவே இந்த இஸ்லாமிய சமூகம் பார்த்தது.
எளிமையின் அடையாளமாகவும் உருவமாகவும் அனைவராலும் பார்க்கப்பட்ட பண்பாளர்.
பெருமை இல்லாதவர்; அதை நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.
இஸ்லாத்தின் அடையாளமாகவும், இஸ்லாமியர்களின் அடையாளமாகவும் வாழ்ந்த முன்மாதிரி மிக்கவர்!
வருடத்தில் இரண்டு மாதம் இவரின் இறுதி வார்த்தையை எதிர்பார்த்தே இந்த சமூகம் காத்திருந்தது!
இவ்வாண்டு பக்ரீத் பிறையை அறிவிக்க இவரில்லாமல், இவர் குறித்த மரண அறிவிப்பை சமூகம் அடைந்திருக்கிறது.
24.5.2025 இரவு முன்னேறம் 9 மணி அளவில் காலமானார்கள்.
25.5.2025 அஸர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழுகை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலிலும், நல்லடக்கம் தஸ்தகீர் சாஹிப் தர்கா பள்ளிவாசலிலும் நடைபெற்றது.
அல்லாஹ் அவர்களின் மண்ணரையை பிரகாசமாகவும், மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்சையும் நஸீபாக்குவானாக! ஆமீன் !!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
-- 2 --
கட்டுரை எண். 10
சொன்னதை செய்வோம்
செய்வதை சொல்வோம் :
==============================
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلا تَعْقِلُونَ
நீங்கள் வேதம் ஓதுபவர்களாக இருக்க, உங்களை (நேர்வழிப்படுத்த) மறந்து (பிற) மக்களை நன்மை செய்ய ஏவுகிறீர்களா? (இதை) நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா? 2: 44
இந்த வசனம் கூறும் கருத்து இதுதான்! வேதக்காரர்களானா யூதர்களும், கிறிஸ்தவர்களும் நல்லதை செய்யும்படி மற்றவர்களை தூண்டுவார்கள்; ஆனால் அவர்கள் தம் வாழ்வில் எந்த ஒரு நல்லதையும் செய்யவே மாட்டார்கள்; அதைத்தான் இந்த வசனம் சொல்லிக் காட்டுகிறது.
யூத மற்றும் கிறிஸ்தவர்களிடம் ஏதேனும் ஒன்றைக் குறித்து கேட்டால், அதன் மூலம் அவர்களுக்கு ஆதாயமோ, லஞ்சமோ கிடைக்காது என்று அறிந்தால் அப்போது மட்டும் அவர்கள் உண்மையைப் பேசுவார்கள்.
பிறருக்கு நல்லதை சொல்லும்போது தாமும் மக்களுடன் சேர்ந்து அதைச் செயல்படுத்துவதும் பின் வாங்காமல் இருப்பதும் அறிவாளிகளுக்கு அழகு!
தீமைகள் செய்கிற ஒருவர் தீயதை தடுக்கலாமா என்றால் கண்டிப்பாக அவரும் தீயதை தடுக்கலாம்.
ஏனென்றால் அவரை விட தீயவற்றை நன்கு தெரிந்தவர் வேறு யார் இருக்க முடியும்? தீயதை அறிந்த ஒருவர்தானே தீமையை தடுப்பதற்கு முதல் அறுகதையானவர்.
நல்லதை ஏவுவதும் தீயதை தடுப்பதும் ஒரு நற்செயல்! அதைபோல் அதை சொல்லுகிறவரும் பின்பற்றுவது ஒரு நற்செயல் என்பதை புரிந்து கொண்டு இரண்டாம் வகை நற்செயலை செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.
உங்களின் சொல் மதிக்கப்பட வேண்டுமா?
=================================
நமது பேச்சு தமது மனைவியிடத்தில், பிள்ளைகளிடத்தில், பெற்றோரிடத்தில், நம்மிடம் பணி செய்யும் பணியாளர்களிடத்தில், நண்பர்களிடத்தில் என நாம் சந்திக்கும் அனைவரிடமும் நமது சொல் செயலாக்கம் பெற வேண்டுமானால் அதை முதலில் நாம் செய்ய வேண்டும்.
நாம் செய்யாத ஒன்றை பிறரிடம் சொன்னால் அதை அவர்கள் நடைமுறைப்படுத்த மாட்டார்கள்.
ஜுன்தப் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"மக்களுக்கு நல்லவற்றை போதித்து விட்டு அதன்படி செயல்படாத அறிஞர், மக்களுக்கு வெளிச்சம் தந்துவிட்டுத் தன்னைத்தானே எரித்துக்கொள்கின்ற விளக்கைப் போன்றவராவார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : தப்ரானி
விளக்கு தன்னை எரித்துக் கொண்டு பிறருக்கு வெளிச்சம் தருகிறது; அந்த வெளிச்சத்தில் பலரும் பல வகையான பயன்களைப் பெறுகிறார்கள்.
ஆனால் தன்னை வருத்திக் கொண்டு வழங்கும் வெளிச்சத்தால் விளக்கிற்கு எந்த பயனும் இல்லை; அது போல தான் சொல்லுகிறவர் செய்யவில்லை என்றால் அவருக்கு எந்த பயனும் இல்லை.
செய்யாததை சொன்னவருக்கு கிடைத்த தண்டனை :
=================================
அபூ வாயில் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மறுமை நாளில் ஒருவர் அழைத்துவரப்பட்டு நரகத்தில் வீசப்படுவார்; அப்போது அவருடைய குடல்கள் வேகமாக வெளியேறிவிடும்;
கழுதை தனது திருகையைச் சுற்றி வருவதைப் போன்று அவர் நரகத்தில் தம் குடல்களைச் சுற்றிச் சுற்றி வருவார்.
அப்போது நரகவாசிகள் அவரை வட்டமாகச் சூழ்ந்து கொண்டு, “இன்ன மனிதரே! உமக்கு என்ன நேர்ந்தது?(உலகில்) நற்செயல் புரியுமாறு எங்களை நீர் சொல்லிவந்தீர் அல்லவா? தீமையைவிட்டு எங்களைத் தடுத்தீர் அல்லவா?" என்று (அவரிடம்) கேட்பார்கள்.
அதற்கு அவர், “உங்களுக்கு நான் நற்செயலை ஏவினேன்; ஆனால், நான் அதைச் செய்யவில்லை; தீமையைவிட்டு உங்களை நான் தடுத்தேன். ஆனால், நான் அதைக் கைவிடவே இல்லை" என்று கூறுவார்.
நூல்: புகாரீ, முஸ்லிம், முஸ்னது அஹ்மத்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (விண்ணுலகிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட அந்த இரவில் ஒரு கூட்டத்தாரைக் கடந்துச் சென்றேன். அவர்களின் உதடுகள் நெருப்புக் கத்தரிக்கோல்களால் துண்டிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.
'இவர்கள் யார்?' என நான் வினவினேன். "இவர்கள் உலக மக்களில் உம்முடைய சமுதாயப் பிரசாரகர்கள் ஆவர்; இவர்கள் வேதத்தை ஓதிக்கொண்டே, நன்மை புரியுமாறு பிறருக்கு உபதேசித்துவிட்டுத் தங்களை மறந்துவிட்டவர்கள் ஆவர்" என்று வானவர்கள் பதிலளித்தார்கள்.
நூல் : முஸ்னது அஹ்மத்
நாம் சொல்வதை நாமே செய்யவில்லை என்றால் பிறகு வேறு யாரு தான் செய்வார்?
மாற்றம் உங்களில் இருந்து தொடங்கட்டும்! வெளியில் இருந்தோ, எதிரில் இருந்தோ எதிர் பார்க்காதீர்!
கற்றவரும் கல்லாதவரும் சமமா? :
====================================
"பாமர மனிதர் தவறு செய்தால் அவருக்கு எழுபது முறைகள் மன்னிப்பு வழங்கப்படும். ஆனால், கற்றறிந்த அறிஞருக்கோ ஒரே ஒரு முறைதான் மன்னிப்பு வழங்கப்படும். ஏனெனில், கற்றவர், கல்லாதவரைப் போன்றவர் அல்லர்" என்பது சான்றோர் மொழியாகும்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: கற்றோரும் கல்லாதோரும் சமமாவார்களா? என்று (நபியே) நீர் கூறுவீராக! அறிவுடையோர் மட்டுமே அறிவுரை பெறுவர். (39:9)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்க வாசிகளில் சிலர் நரகவாசிகளில் சிலரை எட்டிப் பார்ப்பர்.
அப்போது, அந்தச் சொர்க்க வாசிகள் (நரகவாசிகளிடம்), "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டதன் மூலமாகவே நாங்கள் சொர்க்கத்திற்குச் சென்றுள்ளோம்; (அவ்வாறிருக்க) நீங்கள் நரகத்தில் நுழைந்ததற்குக் காரணம் என்ன?" என்று கேட்பர்.
"நாங்கள் (எல்லாருக்கும்) சொல்லிக்கொண்டு தான் இருந்தோம்; ஆனால், நாங்கள் செயல்படவில்லை" என்று கூறுவர்.
நூல் : இப்னு அஸாகீர்
நாம் சொல்வதை நாமே செயல்படுத்தவில்லை என்றால், நாம் இறந்த பிறகும் அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அறிவுரை சொல்வது ஆகுமானதா?
=====================================
ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, "இப்னு அப்பாஸ் அவர்களே! நான் (மக்களுக்கு) நன்மையை ஏவி, தீமையில் இருந்து (அவர்களைத்) தடுக்க விரும்புகின்றேன்" என்று கூறினார்.
அதற்கு அவர்கள், "நீர் அதற்குத் தகுதி பெற்றுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "தகுதி பெற்றிருப்பதாகக்) கருதுகின்றேன்" என்று கூறினார்.
அதற்கு அவர்கள் அந்த மனிதரிடம், "அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள மூன்று வசனங்களின் மூலம் இழிவடைவதை நீர் அஞ்சவில்லையா யின் அவ்வாறு செய்து கொள்ளலாம்" என்று கூறினார்கள். "அந்த வசனங்கள் யாவை?" என அவர் கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "உங்களை மறந்துவிட்டு, நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறீர்களா?" (2:44) எனும் அல்லாஹ்வின் கூற்று முதலாவது வசனமாகும். இதை (மனத்தில்) நன்கு பதித்துக் கொண்டீரா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், 'இல்லை' என்று பதிலளித்துவிட்டு, 'இரண்டாம் வசனம் என்ன?' என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்? நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் சொல்வது அல்லாஹ்விடம் மிகுந்த கோபத்திற் குரியது ஆகும்" (61:2,3) எனும் அல்லாஹ்வின் கூற்றாகும்.
"இதை (மனத்தில்) நன்கு பதித்துக் கொண்டீரா" என்று கேட்டார்கள். அதற்கும் அவர் 'இல்லை' எனக் கூறிவிட்டு, 'மூன்றாம் வசனம் என்ன?' என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "உங்களுக்கு நான் எதைத் தடை செய்தேனோ அதையே நான் செய்து, உங்களிடமிருந்து வேறுபட நான் விரும்பவில்லை. என்னால் இயன்றவரை சீர்திருத்தம் செய்வதையே நான் விரும்புகிறேன்" என்று நல்லடியார் ஷுஐப் (அலை) அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கும் வசனம் (11:88) ஆகும்.
"இதை (மனத்தில்) நன்கு பதித்துக்கொண்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கும் அவர், 'இல்லை' என்றே கூறினார்.
அப்படியானால், "உன்னிலிருந்தே (சீர்திருத்தப் பணியைத்) துவங்கு" என்று அந்த மனிதரிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : தஃப்ஸீர் இப்னு கஸீர்
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (மேற்கண்ட) மூன்று இறைவசனங்கள் இருக்கின்ற காரணத்தால் (பிறருக்கு) உபதேசம் செய்வதை நான் விரும்பவில்லை.
நூல் : இஹ்யா உலூமித்தீன்
புத்திமதி சொல்வதற்கும் ஒரு அருகதை தேவை என திருக்குர்ஆன் வசனங்கள் நமக்கு புத்திமதி சொல்லுகின்றன. அருகதையை வளர்த்துக்கொண்டு அறிவுரையை பகர்வோம்.
ஷுஐப் நபியின் மூன்று உபதேசம் :
====================================
ஷுஐப் (அலை) அவர்கள் தம் சமூக மக்களுக்கு சொன்ன மூன்று உபதேசங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் இடம்பெறச் செய்து ஒட்டுமொத்த மனித சமூகமும் பயன்பெற வேண்டும் என அமைத்திருக்கிறான்.
இந்த மூன்று கருத்தையும் அறிவுரை சொல்லுகிற இடத்தில் இருக்கிற அனைவரும் பின்பற்ற வேண்டும்.
மேலும் குறிப்பாக தஃவா - இறை அழைப்பு பணியை மேற்கொள்கிறவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
1. وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَا أَنْهَاكُمْ عَنْهُ ۚ
உங்களுக்கு ஒன்றை நான் தடை செய்துவிட்டு; அதை நான் செய்யவில்லை .
ஷுஐப் (அலை) அவர்கள் தம் சமூக மக்களுக்கு ஒன்றை செய்யாதீர்கள் என்று உரக்கச் சொல்லிவிட்டு அதையே ஷுஐப் (அலை) அவர்கள் யாரும் பார்க்காத இடத்திலோ, மக்கள் மத்தியிலோ செய்ய மாட்டேன் என்று உறுதிப்பட கூறுகிறார்கள்.
அதாவது தாம் பேசும் அனைத்தையும் செயல்முறைப்படுத்துவோம்; நாம் பேசாத எதையும் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பதில் ஷுஐப் (அலை) அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
2. إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ۚ
என்னால் இயன்றவரை உங்களிடையே இஸ்லாஹ் - இணக்கமும் ஒற்றுமையும் உண்டாகவே விரும்புகிறேன்.
ஷுஐப் (அலை) அவர்கள் தம் சமூக மக்களிடையே உருவாகும் சண்டை சச்சரவுகளின் போது நேர்மையான முறையில் இரு சாராரிடமும் பேசி இணக்கமும் ஒற்றுமையும் ஏற்பட அரும்பாடு பட்டார்கள்.
மக்களிடம் ஒற்றுமையும் இணக்கமும் ஏற்பட மட்டுமே தன் நாவன்மையை பயன்படுத்தினார்கள். ஏனென்றால் இவர்களின் அடைமொழி பெயர் 'கதீபுல் அன்பியா - நபிமார்களின் நாவலர்' என்பதாகும்.
3. وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
எனக்குரிய உதவிகள் அல்லாஹ்விடம் இருந்தே கிடைக்கின்றது; அவனையே நான் முழுமையாக சார்ந்து இருக்கின்றேன்; அவனிடமே நான் மீள வேண்டியதும் இருக்கின்றது. 11:88
ஏதேனும் நல்லது நடந்திருந்தால் அது அல்லாஹ்வைக் கொண்டு தான் நடந்திருக்கிறது; எனது நாவன்மையாலோ, செயலாலோ அது நடக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஷுஐப் (அலை) அவர்கள் கூறினார்கள்.
நாவன்மை உள்ள ஒவ்வொருவரும் தன் பேச்சினாலோ, தெருமுனை பிரசங்கங்களாலோ, துண்டு பிரசுரங்களை வழங்கியதினாலோ இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்று பெருமைப்படக்கூடாது. அல்லாஹ்வின் அருளால் மட்டுமே அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என நம்ப வேண்டும்; அதுவே உண்மை!
இறை நேச செல்வர் காஜா முயீனுத்தீன் சிஷ்தீ (ரஹ்) அவர்கள் காபூலிலிருந்து பெஷாவர் வரை பயணித்து வந்தார்கள்.
வருகிற வழி நெடுகிலும் கூடி நின்ற மக்களை உற்றுப் பார்த்தார்கள் . மக்களும் இறைநேச செல்வர் காஜா முயீனுத்தீன் சிஷ்தீ (ரஹ்) அவர்களை உற்று நோக்கினார்கள்; அவ்வளவுதான் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
இறைநேச செல்வர் காஜா முயீனுத்தீன் சிஷ்தீ (ரஹ்) அவர்கள் பேசவில்லை; துண்டு பிரசுரங்களை வழங்கவில்லை; தெருமுனைப் பிரச்சாரங்களை செய்யவில்லை;
இவர்கள் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்கிற பேரவா கொண்டு இறைவனிடம் மனதுக்குள் பிரார்த்தித்தார்கள்; அவ்வளவுதான் அல்லாஹ்வின் தவ்ஃபீக் - அருளால் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
செய்வதை மட்டுமே சொன்ன
சொல்லின் செல்வர்:
======================================
ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தாபியீன்களில் ஒருவர்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியரில் ஒருவரான உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வளர்ப்பு மகனைப் போன்று இருந்தவர்.
இவர்கள் தம் வாழ்நாளில் தாம் செய்கின்றவற்றை மட்டுமே பேசும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.
இவர்களின் சொற்பொழிவை கேட்பதற்கு எப்பொழுதும் ஒரு கூட்டத்தினர் அவர்களின் அவையை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள்.
ஒவ்வொரு ரமலானிலும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சிறிது நேரம் உபதேசம் செய்வார்கள்; அவர்களின் சபையில் தொழுவதற்கும், சொற்பொழிவை கேட்பதற்கும் தூரத் தொலைவுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
ஏழை எளியவர்களும், செல்வந்தர்களும், அடிமைகளும் என பலரும் அந்த சபையில் இருப்பார்கள்.
ஒரு அடிமை அன்னை ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து, "தாங்கள் என்ன சொன்னாலும் எனது எஜமானர் கேட்டு செயல்படுகிறார்; தாங்கள் ஒரு முறை அடிமைகளை உரிமை விடுவதின் சிறப்புகள் குறித்து பேசுங்கள்; அடிமையாக இருக்கின்ற என்னை எனது எஜமானர் விடுதலை செய்து விடுவார்; நான் எனது குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ்வேன்" என்று கேட்டுக் கொண்டார்.
தினம் தினம் அந்த அடிமை ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் அவைக்கு வந்தார்; ஆனால் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் அடிமைகள் உரிமை விடுவது குறித்து பேசவே இல்லை; ரமலானும் முடிந்து விட்டது.
அந்த அடிமை மிகவும் வருத்தப்பட்டார்; "ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் பேசினால் நமக்கு விடுதலை கிடைக்கும் என்று தானே எதிர்பார்த்தோம்; இவர்கள் பேசாமல் இருக்கிறார்களே!" என மனதுக்குள் வருத்தப்பட்டார்.
மறு வருடம் ரமலான் முதல் நாள் தராவீஹ் தொழுகைக்கு பிறகு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் அடிமைகள் உரிமை விடுவது குறித்து உரையாற்றினார்கள்;
அதனைக் கேட்ட எஜமானர் மறுநாள் காலையில், 'நான் உன்னை அல்லாஹ்விற்காக விடுதலை செய்து விட்டேன்" என்று கூறி விடுதலை செய்தார்.
விடுதலை பெற்ற சந்தோஷத்தில் அந்த அடிமை ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் வந்து, "ஷைஹுவே! இதைத் தாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே செய்திருந்தால், நான் விடுதலை பெற்று இருப்பேனே!" என்று கேட்டார்.
அதற்கு ஷைஹு அவர்கள், "எந்த ஒன்றையும் நான் செய்யாமல் சொல்வதில்லை; தாங்கள் சொல்லும் பொழுது என்னிடத்தில் அடிமைகள் இல்லை; அடிமையை வைத்துக் கொள்கிற அளவிற்கு எனக்கு வசதியும் இல்லை;
தாங்கள் சொன்ன பிறகு சிறுகச் சிறுக பணம் சேர்த்து வைத்து, சில நாட்களுக்கு முன்புதான் ஒரு அடிமையை விலைக்கு வாங்கி உரிமையை விட்டேன்; அதனால் தான் நேற்று இரவு பேசினேன்;
நான் எதை செய்து முடித்திருக்கின்றேனோ அதை மட்டும்தான் பேசுவேன்; நான் செய்யாததை பிறரை செய்யும்படி தூண்ட மாட்டேன்; இது எனது வளமை; இப்படி நான் நடந்து கொள்வதால் தான் எனது பேச்சை அனைவரும் கேட்கிறார்கள்" என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : ஹுல்யதுல் அவ்லியா
நபிகளார் சொன்ன நபிகளாரே மற்ற செய்யாத இரண்டு செயல் :
=================================
நபிகள் நாயகம் அவர்கள் தம் வாழ்நாளில் உதிர்த்த அத்தனை சொற்களும் உலகின் பல்வேறு பகுதி மக்களால் பல்வேறு இடங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது.
அவர்களின் எந்த ஒரு சொல்லும் வீணானதாக, வெற்று வார்த்தையாக ஆகவில்லை.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் சொல்லியும் தாமே இரண்டு கருத்துகளை தம் வாழ்நாளில் பின்பற்றவில்லை என்பதை காணும் போது அது ஆச்சரியமாக இருக்கிறது; அதைக் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்வதின் சிறப்பு குறித்து அதிகமாக பேசி இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் பங்கு சொன்னதே இல்லை ; ஏனென்றால் நன்மை கிடைக்கும் படியான அனைத்து செயல்களையும் நபிகள் நாயகம் அவர்களே சொல்லி செய்து விட்டார்கள்; அதற்கான நன்மை அவர்களுக்கு கிடைத்தும் விட்டது.
ஒரு நன்மை என் சமுதாயத்தினருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று பேராசைபட்டுதான் நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லவில்லை; அதன் நன்மையை இந்த சமூகம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மற்றொன்று, "அடுத்த வருடம் நான் இருந்தால் ஆஷுரா நோன்பை இரண்டு நாட்களில் நோற்பேன்" என சொல்லி இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் அடுத்த வருடம் உயிருடன் இல்லாததால் இரண்டு நாள் நோன்பு நோற்றதில்லை.
எனவே நபிகள் நாயகம் அவர்கள் மட்டும்தான் தம் வாழ்நாளில் சொன்ன அனைத்தையும் பின்பற்றிய முதலும் இறுதியுமான மாமனிதர் ஆவார்.
சமயோஜித பேச்சு :
======================
ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறி சென்று விட்டது.
அப்பொழுது, அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய், ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றைத் தீட்டியது.
சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு, எலும்பு துண்டுகளை சுவைக்கத் தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறைய வில்லை; இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப்போனது.
இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது.
சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நட்பை பெற்று வாழ்நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம்" என்று நினைத்தது.
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த நாய், எதோ தப்பு நடக்கப் போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்; நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏற்றியப்படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது; இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வர முடியவில்லையா ? வரட்டும்! அந்தக் குரங்கையும் சேர்த்து சுவைக்கிறேன்" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
எனவே மனிதனின் மூலதனம் பேச்சு தான்! அதை முறையாகப் பேச கற்றுக் கொண்டால் உலகத்திலும் மறுமையிலும் சுகவாழ்வு வாழலாம்!
"கடுமையாக உழைப்பதை (Hard Work) விட திறமையாக உழைக்கவும் (Smart Work) கற்று கொள்ள வேண்டும்". நல்லா பேசுவோம்; நல்லதையே பேசுவோம்.
B.M.K. ஆஃபியா சித்தீகா BSc ( Psychology )
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
--- 3 --
கட்டுரை எண் :- 9
தாஹா நபியின்
தலைமைத்துவப் பண்புகள்
==========================
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், மவ்லவீ, B. M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ
இமாம் : மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் சாந்தோம் சென்னை.
நல்ல சிந்தனைகளும் நல்ல ஆளுமை பண்புகளும் ஒரு சேர ஒருவரிடம் அமைந்துவிட்டால் அவர் சிறந்த தலைவராக, தன் நேரத்தை திட்டமிடுகிறவராக, பேச்சிலும் மொழியிலும் கவனம் செலுத்துகிறவராக, பணியாற்றும் உடல் வலிமை பெற்றவராக, போரிடும் ஆற்றல் பெற்றவராக, தளபதியாக தலைமை ஏற்கும் துணிவு உடையவராக, நாட்டை ஆளுகிற திறனுடையவராக, வணிகராக, நல்ல குடும்பத் தலைவராக ஆன்மீகத் தலைவராக ஆகிவிட முடியும்.
அனைத்து ஆற்றல்களும், குண நலன்களும், மனிதநேய மாண்புகளும், ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் இன்றும் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளி வீசி வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எழுத படிக்கத் தெரியாத ஒரு உம்மி நபி என்று, வரலாற்றில் அழைக்கப்பட்டவர்; அவர் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
அதுவும் எப்படிப்பட்ட ஒரு சூழல் என்று பார்த்தால் உலகில் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியங்கள் - கிறிஸ்தவ சாம்ராஜ்ஜியம், எகிப்திய சாம்ராஜ்ஜியம், பாரசீக சாம்ராஜ்யம் ஆகியன ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில், அவர் அரபு மக்களைத் திரட்டி ஒரு மிகப்பெரிய சமுதாயத்தை உருவாக்கினார்.
அதனால் நபிகள் நாயகம் அவர்கள் ஆளுமை மிக்கவராக உலக அறிஞர்களால் பார்க்கப்பட்ட வருகிறார்கள்.
"என் புத்தகத்தை படி ! என்னைப் படிக்காதே!" என்று சொன்ன அறிஞர்களுக்கு மத்தியில் நபிகள் நாயகம் அவர்கள் மட்டும் "என்னை முழுமையாக பின்பற்றுவோர் நேர்வழி பெறுவர்" என்று சொன்ன கருத்திலிருந்து தான் மரணிக்கின்ற வரை பின் வாங்கவில்லை!
நபிகள் நாயகம் அவர்கள் வணங்கப்படுகிறவர்களில் ஒருவராக இல்லாதிருக்கும் நிலையில், அவரின் வாழ்வியலும் வழிகாட்டுதலும் இன்றும் உலகின் பெருவாரியான மக்களால் பின்பற்றப்பட்டு வருவது அந்தந்த கால அறிஞர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நபிகள் நாயகம் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமராக இருக்கவில்லை; எந்த மாற்றமும் அவரிடமிருந்தே துவங்கும் உண்மையாளராக இருந்தார்.
நபிகள் நாயகம் அவர்களிடம் உயர்ந்த பண்புகள் இருந்ததாலே, குறைந்த காலத்தில் சமூகம், அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம் என அனைத்துத் துறையிலும் மிகப் பெரிய மாற்றங்களை அவர்களால் உண்டாக்க முடிந்தது.
உலகம் எத்தனையோ சீர்திருத்தவாதிகளையும், ஆன்மிக போதகர்களையும், தத்துவ ஞானிகளையும், சிந்தனையாளர்களையும், மன்னர்களையும், கவிஞர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்துள்ளது;
மனித சமூகத்திற்கு பணிபுரிந்தவர்களின் வரிசையில் முதல் இடத்தை பெற்றிருப்பவர் நமது நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே!
ஒப்பற்ற தலைவர் :
=====================
நபிகள் நாயகம் அவர்கள் அரபு நாட்டில் பிறந்திருந்தாலும் அவர்களுடைய கொள்கை அரபு நாட்டைத் தாண்டி உலகம் முழுவதும் சென்று சேர்ந்து இருக்கிறது.
அவர்களை பின்பற்றுவோரில் 25 விழுக்காட்டினர் மட்டுமே அரபுகள்; மீதமுள்ள அனைவரும் அரபி அல்லாதவர்கள் என்பதிலிருந்தே அவர்கள் உலக மக்கள் அனைவருக்காகவும் செய்திகளை அருளியவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகத்தை பின்பற்றுவோர் அவர்களை ஓர் இறைத்தூதர் என்று நம்புவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை; அவர் போதித்த விஷயங்களை அவர்களுடைய அழகிய வாழ்வியலையும், அழகிய முன்மாதிரிகளையும் இன்றளவும் குறைவின்றி பின்பற்றி வருகிறார்கள் என்றால் அது அவர்கள் மீதுள்ள நேசத்தை காட்டுவதோடு , அவர்களது கொள்கைகள் எப்போதும் எல்லோராலும் பின்பற்றத்தக்க சிரமம் இல்லாத மனித இயற்கைக்கு உட்பட்டதாகவும் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
உலகில் வாழ்ந்த ஆன்மிகத் தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோருடைய வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை.
ஆனால் நபிகள் நாயகத்தின் வரலாறு இறைவனால் அருளப்பட்ட குர்ஆனில் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பதிவு செய்யப்பட்டு விட்டது. அவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய தோழர்கள் சொன்ன செய்திகள் மூலம் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
எனவேதான் பிலிப் கே. ஹிட்டி "நபிகளார், வரலாற்றின் முழு ஒளியில் பிறந்தவர் - Mohammed was born in full light of history " என்று கூறினார்.
பொதுவாகவே மதங்கள் இறை நம்பிக்கை, மரணத்திற்குப் பிறகு சொர்க்கம், நரகம், விசாரணை போன்ற விஷயங்களைப் பேசும்.
மதம் சாராதவர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்ற அன்றாட மனிதனின் பிரச்சனைகள் குறித்து பேசுவார்கள்.
ஆனால், நபிகள் நாயகம் அவர்கள் மட்டுமே இவ்விரு துறை சார்ந்த விஷயங்களைப் பேசி ஒரு சமநிலையை உருவாக்கினார்கள்;
மனிதர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் வழங்கினார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் அடைந்த வெற்றிகளுக்கு முதன்மைக் காரணம் அவர்களது எளிய, நேரடியாகப் பேசுகின்ற, நடைமுறை சார்ந்த நேர்மையான கோட்பாடுகள்தாம்.
மற்றொன்று அவர்களிடம் காணப்பட்ட வாய்மை, எளிமை, பணிவு, நீதி, அன்பு, கருணை, மன்னித்தல், ஈகை, அடித்தள மக்களை நேசித்தல் போன்ற பண்பு நலன்களும் ஆகும்.
நபிகளார், ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அனைத்துப் பண்புகளும் ஒருசேர அமையப் பெற்றவர்களாக இருந்தார்கள்.
பெருமானார் மீது புனைவுகள் :
==================================
உலக வரலாற்றில் இஸ்லாமியர்களிடம் தோற்றுப்போன ரோம, பைசாந்திய, பாரசீக, ஐரோப்பிய பேரரசுகள் இஸ்லாத்தின் மீது கொண்ட பெரும் கோபத்தின் காரணமாக நபிகள் நாயகத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை;
மாறாக பிறர் தவறாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வரலாறை தவறாக திரித்து எழுதினார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் 2000 முஸ்லிம்களே இருந்தார்கள்; ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மதீனாவிலும் தன்னை சுற்றிலும் 20 ஆயிரத்திற்கும் மேல் இருந்தார்கள்.
சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்கள், பெரும்பான்மையினரையும் உள்ளடக்கி ஆட்சி செய்வது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஆனால், நபிகள் நாயகம் அவர்கள் சிறந்த உத்திகள் மூலம் நேர்மையான முறையில் மதீனாவை சுற்றி வாழ்ந்த இனக் குழுவினரோடு சமாதான உடன்படிக்கையை எழுத்து வடிவில் செய்து கொண்டு சுமூகமாக வாழ்ந்தார்கள்; ஆட்சி செய்தார்கள்.
விரட்டப்பட்டவர் பெற்ற வெற்றி :
==================================
எந்த நாட்டை விட்டு நபிகள் நாயகம் அவர்களும், அவர்களுடைய தோழர்களும் விரட்டப்பட்டு வெளியில் வந்தார்களோ அந்த மக்கா நகரத்து மனிதர்களை பத்ரு, உஹத் போர்கள் மூலம் தோல்வியடையச் செய்து, எதிரிகளை முஸ்லிம்களின் பக்கமும் நியாயம் இருக்கிறது என்பதை உணரச் செய்தார்கள்.
அதே நேரம் மதீனாவை சுற்றி வாழ்ந்த எதிரிகளிடம் போர் செய்து அவர்களையும் முடக்கினார்கள்.
ஹுதைபியா உடன்படிக்கையும், அதற்குப் பிறகு மக்கா வெற்றியையும் பெற்று மாபெரும் வல்லரசாக மக்களுக்கு நல்லறசாக உருவானார்கள்.
செய்த போர்கள் அனைத்திலும் வெற்றி பெற்று வந்த நபிகள் நாயகம் அவர்கள் விரும்பி இருந்தால் முழு அரபு நாட்டையும் வெற்றி கொண்டிருக்க முடியும்.
ஆனால், அவர்களது நோக்கம் முழு அரபு நாட்டையும் இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் இருந்தது.
அதை தன் மரணத்திற்கு முன்பு சாதித்துக் காட்டினார்கள்; ஆம்! மக்கா, மதீனாவில் முஸ்லிம் அல்லாதவர்கள் எவரும் இல்லை!
ஹுதைபியா உடன்படிக்கையில் எதிரிகள் முன்வைத்த அனைத்து ஷரத்துகளும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராகவே இருந்தது.
ஆனாலும் அதை நபிகள் நாயகம் அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கு காரணம் முஸ்லிம்கள் போரை தவிர்த்து சமாதானத்தை விரும்புகின்றனர் என்பதை இதன் மூலம் உணர்த்ததான்!
மேலும் இஸ்லாம் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டுமானால் வாழும் இடத்தில் ஓர் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் அறிந்து இருந்ததால்தான்.
மக்காவில் 13 வருடங்களும், மதீனாவில் 8 வருடங்களும் என 21 வருடங்கள் மக்கா வாழ் மக்களால் பெரும் இன்னல்களை சந்தித்த நபிகள் நாயகம் அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பிறகு நினைத்திருந்தால் மக்காவில் வசித்த அனைவரையும் பழிவாங்கி இருக்கலாம்.
ஆனால் மன்னித்தார்கள்; மன்னித்ததால் எதிரிகளின் இதயங்களை ஈர்த்தார்கள்; எதிரிகள் ஒவ்வொருவரும் இஸ்லாத்தில் இணைந்து முந்தைய தவறுகளுக்கு நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.
பனூ முஸ்தலிக் போரின் போது மதீனாவில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடியது; அந்த சந்தர்ப்பத்தில் அந்தப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரான ஜுவைரியா (ரலி) என்பவரை நபிகள் நாயகம் அவர்கள் மறுமணம் செய்து கொண்டார்கள்.
அதனால் அந்த போரில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பிணைத்தொகை எதுவும் பெறாமல் நபிகளாரின் மனைவியின் உறவினர் என்கிற அடிப்படையில் நபித்தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்தார்கள்.
நபிகளாரோ அல்லது தோழர்களோ நினைத்திருந்தால் பிணை கைதிகள் ஒவ்வொரிடம் இருந்தும் ஒரு தொகையை பெற்றுக்கொண்டு விடுதலை செய்திருந்தால், முஸ்லிம்களின் பொருளாதாரப் பிரச்சனை தீர்ந்திருக்கும்; ஆனால் அதை செய்யவில்லை.
காரணம் எதிரிகளை கவர்வதிலும், இஸ்லாத்தின்பால் ஈர்பதிலுமே நபிகளார் கவனமாக இருந்தார்கள் என்பதையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
அரசியல் ஆளுமை :
========÷==============
நபிகள் நாயகம் அவர்களுடைய அணியில் பெரும்பாலும் ஏழைகளே இருந்தார்கள்; பொருளாதாரத்தில் வலிமை குன்றியவர்களாகவே இருந்தார்கள்; ஆனாலும் வழியென திணிக்கப்பட்ட அனைத்து போர்களிலும் வெற்றி வாகை சூடினார்கள்.
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்கா வெற்றிக்கு பின்னர் மக்காவிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் ஜிஃரானா எனும் இடத்தில் வாழ்ந்து வந்த பனீ ஹவாஜீன் கோத்திரத்தார் நபிகளாரை எதிர்த்து போரிட்டுத் தோல்வியடைந்தார்கள்.
இந்தப் போரில் 24,000 ஒட்டகங்கள், 40,000 ஆடுகள், 4000 அவுன்ஸ் வெள்ளி, 6000 கைதிகள் ஆகியவை முஸ்லிம்களுக்குக் கிடைத்தன.
இஸ்லாமியச் சட்டப்படி போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதி அரசுக்கு சென்று விடும். மற்றவை போரில் ஈடுபட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் (போர் வீரர்களுக்கு ஊதியம் கொடுப்பது என்ற நடைமுறை அன்று கிடையாது)
எனவே, முஸ்லிம் வீரர்கள் தமக்குக் கிடைக்க இருக்கும் பெரும் போர்ப் பரிசுகளுக்காகக் காத்திருந்தனர்.
ஆனால், நபிகளாரின் சிந்தனையோ வேறு விதமாக இருந்தது. ஹவாஜீன்களின் எதிர்ப்பை மழுங்கச் செய்து அவர்களை இஸ்லாத்தில் சேர்த்து விடவேண்டும் என்பதே நபிகளாரின் நோக்கமாக இருந்தது.
கைப்பற்றப்பட்ட பொருட்களைத் திருப்பித்தரவும், கைதிகளை விடுவிக்கவும் நபிகளார் விரும்பினார்கள். அரசுக்கு வரவேண்டிய ஐந்தில் ஒரு பகுதி செல்வத்தைப் பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் நபிகளார் கையில் இருந்தது.
ஆனால், முஸ்லிம் வீரர்களுக்குச் சேர வேண்டிய பொருட்களைத் திருப்பித் தருவது குறித்து அவ்வீரர்கள் தாம் முடிவு எடுக்க வேண்டும்.
இத்தகைய சூழலில் தோல்வியுற்ற ஹவாஜீன்கள் பெருமானாரிடம் தம் மீது கருணை காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
போரில் கிடைத்த பொருட்களில் பெரும் பகுதி வீரர்களுக்கே போய்ச் சேரும் என்பதாக நபிகளார் எடுத்துக் கூறினார்கள்.
அத்தோடு, அவர்களை இஸ்லாத்தில் இணைந்து விடுமாறும் கூறினார்கள். அதனை ஹவாஜீன்கள் ஏற்றுக் கொண்டு, தமது பொருட்களைத் திருப்பித்தருமாறு மீண்டும் வேண்டினார்கள்.
முதலில் நபிகள் நாயகம் தமது பங்கையும் அவர்களது ஹாஷிம் கோத்திரத்தாருக்கு உரிய பங்கையும் திருப்பித்தர முன்வந்தார்கள்.
நபிகளாரின் முன் மாதிரியைப் பின்பற்றி ஒரு சிறு பிரிவினரைத் தவிர பெருவாரியான மக்கத்து முஹாஜிர்களும், அன்சாரிகளும் தமது பங்குகளை ஹவாஜீன்களுக்குத் திருப்பித் தருவதற்கு முன்வந்தனர்.
போர்ப் பொருள்களையும், கைதிகளையும் திருப்பித் தர மறுத்தவர்களுக்கு பெருமானார் கணிசமான ஈட்டுத்தொகை கொடுத்து அவர்களையும் சம்மதிக்க வைத்தனர். இவ்வாறு அனைத்து ஹவாஜீன்களும் விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரம் அனைத்து ஹவாஜீன்களும் இஸ்லாத்திற்கு இணைந்து இன்பமாக வாழ்ந்தார்கள். நிலங்களை வெற்றி கொள்வதை விட உள்ளங்களை வெற்றி கொள்வதே பெருமானாரின் இலக்காக இருந்தது.
நபிகள் நாயகம் அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளுமுறை, இதுவரை எவரும் கையாண்டிறாத முறையாக இருந்தது.
இந்த நிகழ்வுக்கு பிறகு தான் அல்லாஹ்
وما أرسلناك إلا رحمة للعالمين}(الأنبياء:107)
நபியே உம்மை நாம் அகிலத்தாருக்கு அருளாகவே அன்றி அனுப்பி வைக்கவில்லை 21: 107 என் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
புகாரி, முஸ்லிம், நஸாயீ, அபூதாவூத் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் தொகுப்பு தான் மேலுள்ள கருத்து.
தொண்டர்களுக்கு தொண்டு செய்த தொண்டாளர் :
=====================================
நபித்தோழர் அபூ ஹத்ரத் அல் ஸல்மீ (ரலி) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து கடன் வாங்கியிருந்தார்கள். உரிய நேரத்தில் கடனை அவரால் திருப்பிச் செலுத்த இயலவில்லை.
இதனால் சினம்கொண்ட யூதர் அபூ ஹத்ரத் (ரலி) அவர்களை நபிகளாரிடம் அழைந்து வந்து கடனைத் திருப்பிச் செலுத்த அவருக்கு உதவுமாறு கோரினார்.
நபிகளார் அபூ ஹத்ரத்தை நோக்கி ''உரிய நேரத்தில் கடனைச் செலுத்த வேண்டும்!" என்று கூறினார்கள்.
"இறைத்தூதரே! என்னிடத்தில் நான் உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை! இறைவன் எனக்கு உதவினால், நான் பின்னர் கடனைச் செலுத்தி விடுவேன்!" என்று கூறினார்.
கடனைத் திருப்பித் தரும் தவணையை நீட்டித்தருமாறு நபிகளார் யூதரிடம் வேண்டியும் அதனை அவர் மறுத்து விட்டார். நபிகளார் யூதரை நோக்கி, "இப்போது என்னிடத்தில எந்தப் பணமும் இல்லை!. ஆனால் எனது ஆடையின் கீழ்ப்பகுதியை (இஜார்) உமக்குத் தருகிறேன்!" என்று கூறிவிட்டுத் தமது உடலின் கீழ்ப்பகுதியைத் தமது தலைபாகையினால் மறைத்துக்கொண்டு அவர்களது உடையின் கீழ்ப்பகுதியை யூதருக்கு கொடுத்து விட்டார்கள்; அதனால் திருப்தி அடைந்தவராக யூதர் வீடு திரும்பினார்.
நூல் : முஸ்னது அஹ்மத்
இயக்கப் பணிக்காக தொண்டர்களை பயன்படுத்திவிட்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், பொருளாதார சூழ்நிலைகள், அவர்கள் படும் சிரமங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் இருப்பவன் தலைவன் அல்ல! சுயநலமிக்க தலைவர்களால் எந்த இயக்கமும் நிலைத்து நிற்காது என்பது வரலாறு.
நபிகள் நாயகம் அவர்கள் தம் தோழர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி அவர்களின் தேவைகளை நிறைவு செய்தார்கள்; அவர்களின் சிரமங்கள் நீங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்; அவர்கள் சொந்த வாழ்வில் முன்னேற உதவிகளையும், உற்சாகத்தையும் வழங்கி வந்தார்கள்.
தொண்டர்களுக்காக வாழ்ந்த ஒரு தலைவரின் நிகழ்ச்சியை தான் நீங்கள் மேலே கண்டீர்கள்.
கைதிகளை நடத்திய விதம் :
==============================
பனீ அப்துத் தார் கோத்திரத்தைச் சேர்ந்த கலீஃபா பின் கியாத் (ரலி) அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் சகோதரர் அபூ அஜீஸ் என்ற பத்ரில் பிடிக்கப்பட்ட கைதியை கவனிக்கும் பொறுப்பை பெற்றார்கள்.
ஏழையான அந்தத் தோழர் தமது தேவைகளைக் குறைத்துக் கொண்டு, பேரீத்தம் பழங்களை மட்டும் சாப்பிட்டு தனது உணவை முடித்துக் கொண்டார். இவ்வாறு பல நாள் உணவு எதுவும் சாப்பிடாமல் பேரித்தம் பழத்தோடு நிறுத்திக் கொண்டார்.
அன்றைய அரேபியாவில் போர்க் கைதிகளைக் கொல்வதும், அவர்களை அடிமையாக ஆக்குவதும் நடைமுறையில் இருந்த எதார்த்தமான ஒரு பழக்கம் தான்!
ஒரு முறை கைதி அபூ அஜீஸ் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட போது நபித் தோழர் கலீஃபா பின் கியாத் (ரலி) அவர்களை நோக்கி, "நாம் இருவரும் ஏன் இந்த உணவை நமக்குள் பங்கிட்டு உண்ணக்கூடாது?" எனக் கேட்டார். அதற்கு நபித்தோழர், "استوصوا بالأسارى خيرا "
நபி (ஸல்) அவர்கள் கைதிகளைக் கருணையுடன் நடத்துங்கள்" என்று எங்களிடம் கூறியுள்ளார்கள்.
நாங்கள் இறை அன்பைப் பெறவும் நபியின் அன்பை பெறவும் இவ்வாறு செய்கிறோம்" என்று கூறினார்கள்.
கைதி அபூ அஜீஸ் உள்ளம் நெகிழ்ந்தவராக இறை நெறியை ஏற்றார்.
நூல்: இப்னு அஸீர், உஸுதுல் காபா
எதிரிகளையும், மாற்றுக் கருத்து உடையவர்களையும், போரில் பிடிபட்ட கைதிகளையும் நடத்திய விதத்தை வைத்து ஒரு தலைவனின் மனிதாபிமானத்தை எடை போடலாம்.
எதிரிகளுடன் கண்ணியமாகவும், பெருந்தன்மையுடனும் நடந்துகொள்பவரே ஒரு முன் மாதிரித் தலைவராக இருக்க முடியும்.
நபிகள் நாயகத்தின் மீது பல போர்கள் திணிக்கப்பட்டன. அப்போர்களில் பிடிபட்ட கைதிகளை அவர்கள் எவ்வாறு நடத்தினார்கள், எதிரிகளிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது மனித குலத்திற்கு ஒரு சிறந்த படிப்பினையாகும்.
முஸ்லிம் அல்லாதவர்களால் கொண்டாடப்பட்ட நபிகள் நாயகம் :
====================================
ஒருமுறை குறைஷிகளின் முக்கியத் தலைவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் அவர்களிடையே இருந்த மிகவும் அனுபவமிக்க நளுர் பின் ஹாரிஸ் என்பவர் கூறினார்.
"குறைஷிகளே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடரை நீக்க எந்தத் திட்டமும் உங்களிடம் இல்லை; முஹம்மத் சிறுவயது முதல் உங்கள் முன்னிலையிலேயே வளர்ந்துள்ளார்.
அனைவராலும் விரும்பப்படுவராகவும், நேர்மை நம்பிக்கை உடையவராகவும் இருக்கிறார். அவர் இப்போது பெரியவராகி, முதிர்ச்சி அடைந்து உங்களிடம் சில செய்திகளைச் சொன்னால் அவரை மந்திரவாதி, சூனியக்காரர், கவிஞர், பைத்தியக்காரர் என்று சொல்கிறீர்கள்.
இறைவன் மீது ஆணையாக! நான் அவர் வழங்கும் செய்தியைக் கேட்டுள்ளேன்! நீங்கள் சொல்லும் எதுவும் அவரிடத்தில் இல்லை! உங்கள் மீது ஒரு புதிய பேரிடர் விழுந்துள்ளது; அவரை நீங்கள் எதிர்கொள்ள இயலாமல் நிலை குலைந்து போய் இருக்கின்றீர்கள்" என்று கூறினார்.
இந்த நளுர் பின் ஹாரிஸ் சம்பந்தமாக திருக்குர்ஆனில் பத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அருளப்பட்டுள்ளது. இவன் நபிகளாருக்கும் இஸ்லாத்திற்கும் எதிரானவன் தான்! ஆனால் அவன் நபிகள் நாயகம் குறித்து உண்மையவே பேசினான்.
"every saint had a past and every sinner has a future"
''ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு" என்பார்கள்.
எனவே, எல்லாப் புனிதர்களும் தொடக்கத்தில் பல தவறுகளைச் செய்திருப்பர். பின்னர், தங்களைத் திருத்திக் கொண்டு புனிதராக மாறியிருப்பர் என்பதே அதன் கருத்து.
ஆனால், இறைத்தூதர்கள் என்ற பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது பொருந்துவதில்லை - அவர்களின் வாழ்க்கை தொடக்கத்திலிருந்தே தூய்மையானதாக இருக்கும்.
அந்த வகையில் பிறப்பு முதல் இறப்பு வரை தூய்மையாளராக மட்டுமே வாழ்ந்த தூயவர்தான் நபிகள் நாயகம் அவர்கள்.
இதை நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் முஸ்லிமல்லாத அனைவரும் ஒப்புக்கொண்ட ஓர் உண்மை.
நபிகளாரின் பரம எதிரியான அபூஜஹல் ஒரு முறை நபிகளாரை நோக்கி, "முஹம்மதே! நீர் பொய்யர் அல்லர்! நீ கொண்டு வந்துள்ள செய்தி தான் பொய்யானது" என்று கூறினான்.
ஒருவரின் இளமைப் பருவத்திலும் பதவி, புகழ் ஆகியவற்றை அடைந்த நிலையிலும் நிலை தடுமாறாமல் உறுதியாக இருப்பவர்களே மனித குலத்தின் முன்மாதிரியாக திகழ முடியும்; இவை இரண்டுமே நபிகளாரிடம் காணப்படுகின்றது.
அதையே நளுர் பின் ஹாரிஸ் உடைய வாக்கு மூலமும், அபூ ஜஹல் உடைய வாக்கு மூலமும் உறுதிப்படுத்துகிறது.
தன்னிலிருந்து மாற்றம் தொடங்கட்டும் :
============================
"சொன்னதைச் செய்! - அதை நீயே முதலில் செய்! மாற்றம் உன்னிலிருந்தே தொடங்கட்டும்!" இக்கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்! சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும்! ஊருக்கு உபதேசம் செய்யுவோரால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது!'
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளில் அரேபிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டார்கள். அரேபியச் சமூகத்தில் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள்.
அதற்கான காரணங்களில் ஒன்று தாம் சொன்னதைச் செய்வார்கள். எல்லோருக்கும் முன்னதாகச் செய்வார்கள். சமயக் கடமைகள், நற்பண்புகள், சமூக சேவை, அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என எல்லாவற்றிலும் அவர்களே முதல் ஆளாக நிற்பார்கள்.
மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டார்; அதை நபிகள் நாயகம் அவர்களே சுத்தம் செய்தார்கள்; நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியிருந்தால் அதை செய்வதற்கு பல நூறு பேர் முன் வந்திருப்பார்கள்.
இதே மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் கட்டப்படும் போது கல், மண் சுமந்து இருக்கிறார்கள்;
ஒரு பயணத்தின் போது சமையல் வேலை நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தாமும் சென்று விறகு பொறுக்கி வந்து கொடுத்தார்கள்; அடுப்பை தள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
போர்க்களங்களில் முதல் வரிசையில் நின்றார்கள்; அகல் போரின் போது அனைவருக்கும் குளி தோண்டும் அளவை கொடுத்துவிட்டு தாம் குளி தோண்டும் அளவையும் அளவிட்டு முதலில் பணியை தொடங்கி முடித்தும் காட்டினார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதை செய்தார்கள்; அதையும் முதலில் செய்தார்கள்; மக்களுக்கு உத்தரவிட்டதை விட அதிகமாக தாமே முன்வந்து செய்தார்கள் என்பதே வரலாறு.
பணிவான பண்பாளர் நபிகள் நாயகம் :
================================
நபிகள் நாயகம் அவர்கள் தமது தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் மதீனா கடைத்தெருவிற்குக் கால்சட்டை (கீழாடை) வாங்கச் சென்றார்கள்.
நபிகளார் ஒரு கால் சட்டையை எடுத்து அக்கால முறைப்படி கடைக்காரரிடம் கொடுத்து எடைபோடச் சொன்னார்கள்;
அப்போது அவர்கள் அக்கடைக்காரரிடம் "சரியாக எடை போடுங்கள்! எனக்கு எந்தச் சலுகையும் வேண்டாம்!" என்று கூறினார்கள்.
இதனைக் கண்டு ஆச்சரியமுற்ற கடைக்காரர், "எல்லா நுகர்வோரும் விலையைக் குறைக்கும்படியும், எடையை அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்படியும்" கூறுவர்.
ஆனால், இவர் அப்படியில்லையே என்று நபிகளாரை நோக்கி, "என்னிடம் இதுவரை யாரும் இப்படிப் பேசக் கேட்டதில்லை! நீங்கள் யார்?" என்று வினவினார்.
தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கடைக்காரரை, நோக்கி "உங்களுக்கு என்ன ஆனது? நபிகள் நாயகம் அவர்களை அடையாளம் காண முடியவில்லையா?" என்று கேட்டார்கள்.
கடைக்காரர் நபிகளாரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார். ஆனால், அதுவரை நேரில் சந்தித்ததில்லை. நபிகளாரின் முகத்தை உற்றுப் பார்த்தார்.
நேர்மையும், வாய்மையும் உள்ள ஒரு மனிதரின் முகமாக அது இருந்தது. கடைக்காரர் எழுந்து பெருமானாரின் கரத்தில் முத்தமிட்டார்.
பணிவை விரும்பும் நபிகளார் இதனால் திகைப்புற்று தமது கரங்களை அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு "இது நிராகரிப்போரின் வழிமுறை! அவர்கள்தாம், தமது மன்னர்களையும், ஆட்சியாளர்களையும் இவ்வாறு கண்ணியப்படுத்துவார்கள்! ஆனால், நான் உங்களில் ஒருவன்!" என்றார்கள்.
கடைக்காரர் நபிகளாரின் பணிவால் மேலும் கவரப்பட்டார். நபிகளார் துணியைக் கடைக்காரரிடமிருந்து பெற்றுக்கொண்டு கடையைவிட்டுப் புறப்பட்டார்கள்.
நபிதோழர் அபூ ஹுரைரா (ரலி) அந்தத் துணியை தன்னிடம் தருமாறு கூறினார்கள். நபிகளார் அபூ ஹுரைராவின் இந்தச் செயலைப் பாராட்டினார்கள். ஆனால், துணியை அவரிடம் தர மறுத்துத் தாமே சுமந்து வந்தார்கள்.
இதன் மூலம் மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் பணிகளை அவரவரே செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பினார்கள்.
''நான் எனது சுமையை சுமப்பேன்! அவரவர் சுமையை அவரவரே சுமக்க வேண்டும். ஆனால், ஒருவர் பலவீனமான வராகவோ, நோயாளியாகவோ, இயலாதவராகவோ இருந்தால் அவருக்கு மற்றவர்கள் உதவ வேண்டும்" என்று தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை நோக்கி நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
நூல் : ஜாதுல் மஆத், இப்னு ஹிஷாம்
ஒரு மனிதனின் மரியாதையை உயர்த்துவது பணிவுதான். பணிவான மனிதர்கள் எவரையும் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.
ஆனால், பலர் அலட்டிக் கொள்வதும், ஆணவமாக நடப்பதுமே பெருமை என்று எண்ணுகின்றனர்.
பணிவாக நடந்தால் தம்மை எவரும் மதிக்கமாட்டார்கள் என்று எண்ணி ஏமாந்து போகின்றனர்.
ஆணவத்திற்கு முன் அனைவரும் அடங்கிப் போவதைப் பார்த்து அதுவே சரி என்றும் எண்ணுகின்றனர். ஆனால், அது ஒரு பொய்யான மரியாதை என்பது எவருக்கும் புரிவதில்லை.
ஏற்றம் தரும் பணிவு:
=========================
அரேபி நாட்டில் தான தர்மங்களை தாராளமாக வழங்குவதில் புகழ்பெற்றவர் ஹாதிம் தை; இவரின் மகன் அதீ பின் ஹாதிம் என்பவர் நபிகள் நாயகம் அவர்களை சந்திக்க வந்தார்.
அப்போது அவர் கிறித்தவராக இருந்தார். ஒருபுறம் நபிகளாரின் தோழர்கள் நபிகளாருக்குக் காட்டிய பணிவையும் மரியாதையும் கண்டார்.
இன்னொரு புறம் புனிதப் போருக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப் படுவதையும் கண்டார். முஹம்மது ஒரு இறைத்தூதரா?
அல்லது அரசரா? என்று குழம்பிய நிலையில் இருந்தபோது, ஒரு அடிமைப் பெண் பெருமானாரைத் தனிமையில் சந்தித்து ஆலோசனை கேட்க விரும்பினார்.
"நீ விரும்பும் இடத்திற்கு வருகிறேன் வா!" எனக் கூறி அந்த அடிமைப் பெண்ணுடன் புறப்பட்டு சென்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.
எந்த அரசனும் இத்தனை பணிவாகவும், தன்னடக்கம் உடையவராகவும் இருப்பதில்லை. உடனே தனது கழுத்திலிருந்த சிலுவையைக் கழற்றிவிட்டு இஸ்லாத்தில் இணைந்தார் அதீ பின் ஹாதிம்.
ஏற்கெனவே பெருமானாரைச் சந்தித்து இஸ்லாம் பற்றிய உரையாடல்களை அவர் நிகழ்த்தி இருந்தார். நபிகளாரின் அடக்கமும், எளிமையும், பணிவும் அவரை இந்த முடிவு எடுக்கும்படித் தூண்டியது.
நூல் : இப்னு ஹஷாம்
நபிகள் நாயகம் அவர்கள் பணிவின் இலக்கணமாக, அடையாளமாகத் திகழ்ந்தார்கள்; பணிவு தரும் செயல்களையே செய்தார்கள்; புகழ்பாடுவதை வெறுத்தார்கள்; கூட்டங்களில் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதைக் கண்டித்தார்கள்; ஏழைகளின் அழைப்பையும் ஏற்று செயல்பட்டார்கள்; அவர்களது வெற்றிக்குப் பணிவு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.
முடிவுரை :
===============
(நபியே!) நன்மையும் தீமையும் சமமாகாது; ஒருவர் செய்த தீமையை நன்மையைக் கொண்டு நீர் எதிர்கொள்வீராக; அப்போது உமக்கும் அவருக்குமிடையே பகைமை இருந்தாலும் கூட அவர் உற்ற நண்பரைப் போன்று ஆகிவிடுவார்.
41 : 34
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு நற்குணங்களை போதிக்கின்றான்; நற்குணங்களை போதிப்பவர்களில் அல்லாஹுவை விட சிறந்தவர் வேறு யாரும் உண்டா?
சிறந்த ஒருவனிடம் இருந்து பெற்ற அறிவுரையை, செவித்தாழ்த்திக் கேட்டு ஏற்றுக் கொண்ட ஒருவரின் வரலாற்றில் நிகழ்ந்த சில சம்பவங்களைதான் உங்களுக்கு நான் சொல்லி இருக்கின்றேன்.
நபி (ஸல்) அவர்களிடம் இருந்த குணங்கள் அனைத்தும் ஒவ்வொரு தலைவரிடமும் இருக்க வேண்டிய குணங்களாகும்.
தாம் கொண்ட கொள்கையில் நம்பிக்கை கொண்டு, அதில் உறுதியாக இருந்து, தொடர்ந்து நிலையாக நின்று மக்களை அதன் பால் ஈர்த்த பாங்கு அவரைப் போன்று வேறு யாரும் இல்லை என்று வரலாறு சொல்லும் உண்மை!
ஏனென்றால் பல தலைவர்கள் தமது கொள்கைகளை காலத்திற்கு ஏற்றவாறு திருத்திக் கொண்டும், மாற்றிக் கொண்டும் இருந்திருக்கிறார்கள்; தம் வாழ்நாளில் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாத ஒரே தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் மட்டுமே!
எதிராளிகளின் கோபமான பேச்சும் நடவடிக்கையும் தன்னில் எந்த சலனமும் உண்டாகாமல் எதிர்கொண்ட முறை மக்களை நபிகளாரின்பால் நெருங்கி வர காரணமாக அமைந்தது.
எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் உடனுக்குடன் நல்ல முடிவை எடுத்து செயல்படுத்தியும், சொல்லி செயல்பட தூண்டியும் மக்களின் கவனத்தை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள்.
ஒப்பனையற்ற, ஒப்பற்ற தலைவரான நபிகள் நாயகம் அவர்களை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் வாழும்போதும், மரணத்திற்குப் பிறகும் நல்லதையே அறுவடை செய்வார்கள்.
நபிகள் நாயகத்தை நேசியுங்கள்; நபிகள் நாயகத்தை வாசியுங்கள்; நபிகள் நாயகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்; புரிந்ததை நடைமுறைப்படுத்துங்கள்; நலம் பெறுவீர்!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 8
இஸ்லாமிய வரலாற்றோடு ஒத்து போ
கும் பாலஸ்தீனப் போர் :≠≠≠≠≠≠≠≠========≠≠≠≠≠≠≠=============
ஃபாலஸ்தீன் இஸ்ரேல் யுத்தம் கடந்த 640 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கின்றது.
இதற்கிடையே இஸ்ரேல் - ஈரான் யுத்தம் பன்னிரண்டு நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த யுத்தத்தில் நடந்த சில காட்சிகள் நமக்கு நபிகள் நாயகக் கால வரலாற்றை நினைவுபடுத்துகிறது. அவற்றில் மூன்று சம்பவங்களை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
1. நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய முயன்ற கைபர் யூதர்களைப் போன்று பலஸ்தீன் முஸ்லிம்களை கொலை செய்திட முயற்சிக்கும் இஸ்ரேல் யூதர்கள் :
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
பலஸ்தீனில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உலகத் தன்னார்வலர்கள் கொண்டு வந்து தரும் உணவுப் பொருட்களை காசாவிற்குள் இஸ்ரேல் அரசாங்கம் அனுமதிக்காமல் இருந்தது.
இந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து அனுமதித்து வருகிறது. உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் மக்களுக்கு ஐ.நா. வின் பெரும் முயற்சியால் இஸ்ரேல், அமெரிக்கா வழியாக கோதுமை மாவு மூட்டைகளை வழங்கி வருகிறது. அதில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும் ஆக்ஸிகோடன் மாத்திரையை அரைத்து மாவில் இரண்டற கலந்து இருக்கிறார்கள்.
இதை சாப்பிட்டால் போதை ஏறுவது மட்டுமின்றி உயிருக்கு ஆபத்தான நிலைகளும் ஏற்படும்.
சுவாச குழாய் பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, மூளையில் கட்டி உருவாகுதல், கோமா ஏற்படுதல், பேச முடியாத நிலை உண்டாகுதல், 12 மணி நேரத்திற்கு சுயநினைவை இழந்து இருத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பது இந்த மாத்திரையின் தன்மை. குழந்தைகள் சாப்பிட்டால் மரணமே நேரிடலாம்.
இந்த விஷ உணவை வாங்கியாகிலும் வாழலாம் என நினைத்து வருகிற குழந்தைகள், பெண்கள் உட்பட பலரையும் ஈவு இரக்கம் இல்லாமல் குண்டு போட்டும், துப்பாக்கிகளால் சுட்டும் இதுவரை 760 க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து இருக்கிறது இஸ்ரேல் அரசு.
உலகத்தில் திருந்தாத ஒரு இனம் இருக்கிறது என்றால் அது யூத இனம்தான்.
1450 வருடங்களுக்கு முன்பு நபிகள் நாயகம் அவர்களுக்கும் அவருடைய தோழர்களுக்கும் விஷம் வைத்தவர்கள் இவர்கள்தான்.
வாருங்கள் காசாவின் நிகழ்வை கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிகழ்வோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது;
கைபர் யுத்தம் முடிந்த பிறகு ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி ‘ஜைனப் பின்த் ஹாரிஸ்’ எனும் யூதப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட சமைத்த ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டுவந்தாள்.
நபி (ஸல்) அவர்கள், "இதை சாப்பிடுங்கள்!" என்று சொன்னதும் பிஷ்ர் பின் பர்ராவு (ரலி) அவர்கள் விரைந்து ஒரு துண்டு இறைச்சியை எடுத்து சாப்பிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் முன் சப்பையில் இருந்து எடுத்து (சிறிது) உண்டார்கள்.
பின்னர் அதை விழுங்காமல் துப்பிவிட்டார்கள். ஏனென்றால், “இந்த எலும்பு தன்னில் விஷம் ஏற்றப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறுகிறது” என கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், "தமக்கு யார் விருந்தளித்தார்களோ அவர்களை அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். நபிகளாரிடம் அவள் கொண்டுவரப்பட்டாள்.
நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அவள், "ஆம்! (கலந்திருக்கிறோம்)” என்று பதில் சொன்னாள்.
நபி (ஸல்) அவர்கள்,"ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள்.
அவள், "நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்;
நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து எந்த தீங்கு செய்யாது அதுதான் உண்மை” என்று பதிலளித்தாள்.
நபி (ஸல்) அவர்கள், “அதற்காக, அல்லது எனக்கெதிராக ( என்னை சாகடிக்க) அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்க வில்லை” என்று கூறினார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள், "இங்கேயுள்ள யூதர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்.
அவ்வாறே, அவர்கள் அனைவரும் ஒன்று திரட்டி நபி (ஸல்) அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம், "இந்த ஆட்டில் விஷம் வைத்ததில் உங்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது தானே?" என்று கேட்டார்கள்.
அங்கு கூடியிருந்த யூத ஆண்கள், பெண்கள் அனைவரும், "ஆமாம்! நாங்கள் அனைவரும் கூடிப் பேசிதான் இந்தப் பெண்ணை செய்ய வைத்தோம்" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்கள்.
அப்பொழுது முஸ்லிம் மக்கள், “அவளை நாங்கள் கொன்றுவிடலாமா?” என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம், அவளை நான் மன்னித்து விட்டேன்” என்று கூறினார்கள்.
அந்த நேரத்தில், "பிஷ்ரு பின் பர்ராவு (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள்" என்று சொல்லப்பட்டது.
பின்னர் நபி (ஸல்) அவர்கள், "அவளை அவருக்குப் பகரமாக கொன்று விடுங்கள்" என்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்கள்; அவ்வாறே அவளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நபி (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்" என அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள்.
நூல் : முஸ்லிம் 4408
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பில்.....
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது,
“ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தி விஷம் கலந்து தந்த) அந்த உணவை நான் சாப்பிட்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன்; அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழாய் அறுந்து போனதை நான் இப்பொழுது உணருகிறேன்” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 4428
மேற்கண்ட வரலாறு அனைத்தும், பல ஹதீஸ்களில் இருந்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
காசா மக்களுக்கு விஷம் கலந்த உணவை வழங்கும் நெதன்யாகு ஜைனப் பின்த் ஹாரிஸ் உடைய வாரிசை போன்றவன் தான் என்பதற்கு இதைத் தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
2. மக்கா வெற்றி கொள்ளப்பட்ட
இரவை போன்று இஸ்ரேலில்....
=============================
இஸ்ரேல் மீது ஈரான் போட்ட ஒரு வெடிகுண்டு, வானத்தில் வெடித்து சிதறி அது பல ஆயிரம் சிறு குண்டுகளாக வெளிப்பட்டு அவையும் நெருப்புகளை கக்கிக்கொண்டு ஆங்காங்கே விழுந்து வெடித்து சுமார் எட்டு கிலோமீட்டர் பரப்பளவு இடங்களை நாசம் செய்கிறது.
இதை ஈரான் அரசு அழகாக படம் பிடித்து சமூக ஊடகங்களில் பரவ விட்டது. இந்தக் காட்சியை குறித்து ஒரு வரலாற்று நிகழ்ச்சி.
நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்ள சென்றிருந்த போது அதற்கு முதல் நாள் இரவில் மக்காவை சுற்றி இருந்த மலைகளில் நபித்தோழர்கள் தங்கி இருந்தார்கள்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வொருவரும் இரண்டு அடுப்புகளை மூட்டி சமையல் வேலையைப் பாருங்கள் ; இயன்றவரை நள்ளிரவு வரை அடுப்புகள் அனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று உத்தரவிட்டிருந்தார்கள்.
இந்த உத்தரவின் உண்மையான நோக்கத்தை பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்களே என்பதற்காக அனைவரும் அதனைச் செய்தார்கள்.
மக்காவில் வாழ்ந்த இறை மறுப்பாளர்கள், குறைஷிகள் மற்ற அனைவரும் ஒவ்வொரு மலையிலும் அடுப்புகள் எரிவதைப் பார்த்து இலட்சக்கணக்கானவர்கள் வருகை தந்திருக்கிறார்கள் போலும் என்று எண்ணிக் கொண்டார்கள்.
ஏனென்றால் சமையல் செய்கிறவர்கள் ஐந்து பேர், பத்து பேர் சேர்ந்து தான் சமையல் செய்வார்கள்.
ஒரு அடுப்புக்கு ஐந்து பேர் என்றோ பத்து பேர் என்றோ வைத்துக் கொண்டாலும் இங்கே எரிகிற 20000 அடுப்புகளுக்கு எத்தனை ஆயிரம் பேர் இருப்பார்கள் என்று அவர்களாகவே ஒரு கணக்கை போட்டுக்கொண்டு அந்த இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தார்கள்.
அடுப்பு கணக்குகளை பிறரிடம் சொல்லி ஊர் முழுவதும் பயத்தை பற்ற வைத்தார்கள்.
அதனால் தான் மறுநாள் நபி (ஸல்) அவர்கள் மலைகளில் இருந்து இறங்கும்பொழுது எவரும் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை.
நபி (ஸல்) அவர்களின் அந்த சுன்னத்தையும், புத்திசாலித்தனத்தையும் பின்பற்றி ஈரான் ராணுவம் இரவு நேரங்களில் இஸ்ரேலை தாக்கியது.
"கிளாஸ்டர் பாலிஸ்டிக்" எனும் ஏவுகணை தரையில் இருந்து ஏழு கிலோமீட்டர் உயரத்தில் வெடிக்கிறது;
அதிலிருந்து சுமார் 200 சிறிய குண்டுகள் பிரிந்து செல்கின்றன.
பிரிந்த ஒவ்வொரு குண்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான குண்டுகள் தேங்காய், மாங்காய் வடிவத்தில் வானில் சிதறி விழுகின்றன. இது இஸ்ரேலின் எட்டு கிலோமீட்டர் சுற்றளவில் விழுந்து மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த குண்டை உலக நாடுகள் பயன்படுத்தக் கூடாது என ஒப்பந்தங்கள் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஈரானும் இஸ்ரேலும் கையெழுத்து இட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான குண்டுகள் விழுவதைப் பார்க்கின்ற இஸ்ரேலியர்கள் அலறுகிறார்கள்; அச்சப்பட்டே பழக்கப்படாத இவர்கள் அச்சத்தின் உச்சத்திற்கு சென்று பைத்தியம் பிடித்ததுப் போன்று பிதற்றுகிறார்கள்.
இவ்வாறான குண்டுகளை பார்க்கின்ற இஸ்ரேலியர்களின் நிலை, ஃபதஹ் மக்கா இரவில் மக்கா இறை மறுப்பாளர்களும் குரைஷியர்களும் அடுப்பு எரிவதைப் பார்த்தது போன்று இருக்கின்றது.
3. அறிவை நம்பி மோசம் போன
அபூ ஜஹலின் வாரிசுகள்
ட்ரம்பும் நெதன்யாகுவும்
===========================
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட போது, "எங்களுடைய உளவு அமைப்பினரும் மொசாத் உளவு அமைப்பினரும் ஈரான் குறித்து தவறான புள்ளி விபரங்களை சொன்னதால்தான் போரில் இறங்கினோம்" என்று கூறினார்.
அதாவது கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக பொருளாதார தடை இருக்கின்ற இந்த ஈரானில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் இருக்காது, ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இருக்க மாட்டார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை மற்றும் இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையினர் அனைவரும் தனது அறிவால் சிந்தித்தும் யூகித்தும் கணித்ததை ரிப்போர்ட்டாக எழுதி அனுப்பி வைத்து விட்டார்கள்.
அதை, உண்மை என்று நம்பி தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் போரில் குதித்தது; ஆனால் இரண்டு நாடுகளும் புறமுதுகிட்டு ஓடுகிற அளவிற்கு ஈரான் தன் வல்லமையையும், ஆற்றலையும், அறிவையும் நிரூபித்து விட்டது.
இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வை ஒத்திருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது ஸவ்ர் குகையில் தங்கி இருந்தார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பதற்காக அல்லாஹ் சிலந்தி வலையை பின்னச் செய்தும், காட்டுப் புறாவை கூடு கட்டச் செய்தும் வைத்திருந்தான்.
நபி (ஸல்) அவர்களைத் தேடிக் கொண்டு ஸவ்ர் குகை வாசலுக்கு வந்த அபூ ஜஹலும் மற்றொருவனும் அந்தக் குகையை நோட்டமிட்டார்கள்.
அப்பொழுது உடன் வந்திருந்த நபர் அபூ ஜஹலிடம், "ஒரு சமயம் இருவரும் இந்த குகைக்குள் இருப்பார்களோ?" என்று கேட்டு கொண்டே குணிவதற்கு முனைந்தான் .
அப்பொழுது அபூ ஜஹல் அவனுடைய சட்டை காலரை பிடித்து, குனிய விடாமல் தடுத்து, அதன் நுழைவாயிலை சுட்டிக்காட்டி, "சிலந்தி வலை கிழியாமல் இருக்கின்றது; காட்டுப்புறா கூடுகட்டி முட்டையிட்டு வாழ்கிறது; அவர்கள் இருவரும் இதற்குள் செல்ல வேண்டுமானால் இந்த இரண்டு ஜீவன்களையும் அப்புறப்படுத்தி விட்டுதான் சென்று இருக்க வேண்டும்; எனவே அவ்விருவரும் இந்தக் குகைக்குள் இல்லை" என்று அபூ ஜஹல் அறிவாளித்தனமாக பேசினான்.
அதனால்தான் இவனுக்கு அபூ ஜஹல் - பெரிய முட்டாள் என நபிகள் நாயகம் அவர்கள் பெயர் சூட்டினார்கள்.
அந்த வகையறாவில் வந்தவர்கள் தாம் டொனால்ட் ட்ரம்பும், பெஞ்சமின் நெதன்யாகுவும்; மற்றும் அவ்விருவரின் உளவுத்துறையினரும்.
நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஈரானில் பொருளாதார தடை இருப்பதின் காரணமாக மட்டுமே அவர்கள் எந்த பலமும் இல்லாமல் இருப்பார்கள் என்று அறிவாளித்தனமாக யோசித்து முட்டாள்களாகி முச்சந்தியில் நிற்கிறார்கள்.
எல்லாம் வல்ல இறைவன் ஒருவரை சிறுமைப்படுத்தவும் அழிக்கவும் நாடிவிட்டால் அற்பமான காரணங்களை முன்வைத்து அவர்களை இல்லாமல் ஆக்கி விடுவான்; அப்படி ஆக்கப்பட்டவர்கள் தான் இஸ்ரேலில் யூதர்கள்.
=====================================
கட்டுரை எண் :- 7
ஹள்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-
நாளைய ஜும்ஆ உரை
تَبَارَكَ ٱلَّذِى نَزَّلَ ٱلْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِۦ لِيَكُونَ لِلْعَٰلَمِينَ نَذِيرًا
"அகிலத்தாரை எச்சரிக்கை செய்கிரவராக ஆக்கி, தனது அடியாருக்கு ஃபுர்கான் (வேதத்தை) அருளியவன் பேரருளாளன்"
அல்குர்ஆன் (25:1)
உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதரும் தன்னை ஒருவர் பெருமைப்படுத்தும் போது மகிழ்வடைகின்றனர். அவ்வாறு தன்னை உயர்வாக மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். தனக்கு மேலாக ஒருவர் இருப்பது தெரிந்தாலும் அறிமுகப்படுத்துவதில் சிறிது தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே, தன்னை அல்லாஹ்வின் அடிமை என்று அறிமுகப்படுத்தி தன்னைச் சார்ந்த அனைவரையும் அல்லாஹ்விடம் கொண்டு சேர்த்து வெற்றி கண்டவர்.
"அப்து" அடிமை என்ற பணியை அவர்கள் சிறப்பாகச் செய்து முடித்ததை அல்குர்ஆன் வாயிலாக அல்லாஹ் ஒத்துக் கொள்கிறான். முஹம்மது, அஹமது என்ற அவர்களின் பெயரை ஐந்து முறை அல்குர்ஆனில் கூறிய அல்லாஹ் “அப்து" என்ற சிறப்புப் பெயரை பத்து முறை கூறுகிறான்.
மேலும் அவர்களைச் சார்ந்த அனைவரையும், 'ரழியல்லாஹு அன்ஹு - அவர்களை அல்லாஹ் திருப்தி கொண்டான் அவர்கள் அல்லாஹ்வை திருப்தி கொண்டார்கள்' என்று பெருமைப்பட அல்லாஹ் எடுத்துரைக்கிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னைச் சுந்தித்த ஒருவரைக் கூட, தன் மீது அன்பு செலுத்தி அதில் நெகிழ்ந்து கிடக்க விட்டதில்லை.
தன் மீதே நெகிழ்ந்து கிடப்பவர்களை அல்லாஹ்விடம் சரணடையுமாறு செய்து விடுவார்கள்.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிரிவிற்கு பின்னர் அப்துர் ரஹீம் அல்புர்ஃகி (ரஹ்) என்பவர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீது தீராக் காதல் கொண்டவராக "ஆஷிகுர் ரஸூல்" ஆக வாழ்ந்து வந்தார். அவர் ஒருமுறை ஜியாரத்துக்காக மதீனா நோக்கி ஒட்டகத்தில் பயணமானார்.
மதீனா நகரத்தின் எல்லைப்புறக் காவலர் கனவில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றி "அப்துர் ரஹீம் அல்புர்ஃகி என்றொருவர் ஜியாரத் செய்ய வருவார். அவரை நகரத்தின் உள்ளே அனுமதிக்க வேண்டாம்" என்று கூறினார்கள். காவலரும் அவ்வாறே செய்தார். தனக்கு ஜியாரத் செய்ய அனுமதி கிடைக்காதது அப்துர் ரஹீம் அல்ஃபுர்கிக்கு மிகவும் கவலையளித்தது.
சிறிது நாட்களுக்குப் பிறகு காவலர் கனவில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் தோன்றி, "நான் முன்னால் சொல்லிய அப்துர் ரஹீம் அல்புர்ஃகி என்பவர் மீண்டும் மதீனா வருகிறார். இந்த முறை அவர் பிரயாணச் சாமான்களை ஏற்றி வரும் ஒட்டகத்தில் சாமான்களுக்கு மத்தியில் ஒளிந்து வருகிறார். அவரை அனுமதிக்க வேண்டாம்" என்று கூறினார்கள்.
"நான் எவ்வாறு அவரை அடையாளம் கண்டு கொள்வது?" என்று காவலர் விளக்கம் கேட்டார். "உரக்க சப்தமிட்டு நீங்கள் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். அவர் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ஸலவாத்துக் கூற ஆரம்பித்து விடுவார்” என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அண்ணலார் சொன்னதைப் போன்றே நிகழ்வும் நடந்தது.
அப்துர் ரஹீம் அல்புர்ஃகீ திருப்பி அனுப்பப்பட்டார். அப்போது அவர் மனம் மிகவும் வேதனையடைந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்கு மட்டும் அனுமதியளிக்காதது குறித்து மனச் சோர்வடைந்தார்.
அப்போது அவர் அடைந்த மனச் சோர்வை அவர் பாடிய கவி வெளிப்படுத்துகிறது.
لذ بالالاه ولاتلذ بسواه
من لاذ بالملك الجليل كفاه
அல்லாஹ்விடமே நீ சரணடைந்து விடு; அவனைத் தவிர வேறு எவரிடமும் சரணடையாதே!
கண்ணியமிக்க அரசனாகிய (அல்லாஹ்வைச்) சரணடைபவருக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருப்பான்.
அப்போது அவர் பாடிய முழுக் கவியும் சுப்ஹான மவ்லிது கிதாபில் கடைசிப்பக்கத்தில் காணக் கிடைக்கிறது.
தன் மீது தீராக் காதல் கொண்டு அதற்கு மேலுள்ள நிலைக்கு நகர்ந்து செல்லாமல் இருக்கும் அப்துர் ரஹீம் அல் புர்ஃகீயைத் திருத்துவதற்கு அண்ணலார் செய்த தந்திரம் இது.
இந்த வரலாற்று உண்மையை மனதில் இருத்தி அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்பவருக்கு அவர்களின் தன்னலமில்லா தியாகம் தெரியவரும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் :
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீது, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று மட்டுமில்லாமல் தன் அன்பு கணவர் என்ற வகையிலும் அவர்கள் மீது பேரன்பு கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கொண்டு திருப்தியடையவில்லை. "ஆஷிகுர் ரஸூலாக" இருக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் ஆரிஃபா பில்லாஹ்வாக மாற்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு தற்காப்பு யுத்தத்தின் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அண்ணலார் அவர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள். ஓரிடத்தில் இரவு தங்கி விட்டு அங்கிருந்து புறப்பட அண்ணலார் உத்தரவு பிறப்பித்தார்கள். அந்த இரவில் ஆயிஷா (ரலி) அவர்கள் சுய தேவைக்காக வெளியில் சென்றிருந்தார்கள். அந்த நேரத்தில் அவர்களின் ஒட்டகத்தை ஓட்டிச் செல்பவர் ஒட்டகத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் கூடாரத்தில் அவர்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஒட்டகத்தை ஓட்டிச் சென்று விட்டார்.
வெளியில் சென்றிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திரும்ப வந்து பார்க்கும்போது அந்த மைதானமே காலியாகியிருந்தது. கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தன்னை காணாதபோது தன்னைத் தேடி வருவார்கள் என்று எண்ணி ஹள்ரத் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தைரியமாக அவ்விடத்தில் தங்கியிருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்தால், மறுநாள் அந்த இடத்தின் வழியாக கடந்து வர ஒரு நபரை நியமித்திருப்பார்கள். ஏதாவது பொருள் விடப்பட்டடிருந்தால் அதைப் பொறுக்கி வருவதற்காகவும், அந்தப் பகுதியை கடந்த பிறகு அங்குள்ள அரசியல் மாற்றங்களை அறிந்து வருவதற்காகவும் அவ்வாறு செய்வார்கள்.
அவ்வாறு அந்த பகுதியைக் கடந்து வந்த ஹள்ரத் ஸஃப்வான் பின் முஅத்தல் (ரலி) என்ற நாயகத் தோழர் ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்களைக் கண்டு கொண்டார். உடனே அவர் "இன்னா லில்லாஹ்" கூறினார். ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் முன் ஒட்டகத்தை நிறுத்தினார். அவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். இருவருக்கிடையில் வேறு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அவர் ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்களை அண்ணலார் இருக்குமிடம் கொண்டு வந்து சேர்த்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது சிலர் இந்த சம்பவத்தை திட்டமிடப்பட்டதாக கூறி ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது பழி சுமத்தினார்கள். இந்த பழிச் சொல் பரவியது.
அப்போது நடந்ததை ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : "நான் இந்த பிரச்சனை கேள்விப்பட்டவுடன் அண்ணலார் அவர்களிடத்தில் உத்தரவு பெற்று என் தாய் வீட்டுக்குச் சென்று விட்டேன்.
இந்த பிரச்சனை தொடங்கியதிலிருந்து என் கணவர் என்னைக் கண்டு கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு என்னிடம் அவர்கள் வந்தார்கள். என் முன்னால் அமர்ந்து அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். பின்னர் "ஆயிஷா! உன்னைப் பற்றி வெளியில் இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். நீ நிரபராதியாக இருந்தால் நீ குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் எனக்கு காட்டித் தருவான்.
ஆனால் நீ தவறிழைத்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுகொள். ஒரு அடியான் பாவம் செய்து, அதிலிருந்து மீண்டு, பாவ மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அந்த அடியானை மன்னித்து விடுவான்" என்றார்கள்.
அவர்களிடம் நான் கூறினேன்: "நான் சின்ன வயதுப் பெண், குர் ஆனைப் பற்றி அதிகமாக அறியாதவள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் நினைக்கிறேன். இந்த அவதூறான செய்தியை தாங்கள் செவியேற்றிருக்கிறீர்கள். இச்செய்தி உங்கள் மனதில் நன்கு பதிந்து விட்டது. எனவே இந்தச் செய்தி உண்மையென நீங்கள் நம்புகிறீர்கள்.
இந்நேரத்தில் நான் நேர்மையானவள் என்று உங்களிடம் கூறினால் நீங்கள் என்னை உண்மைப்படுத்தப் போவதில்லை.
நீங்கள் சொல்வதற்காக நான் குற்றவாளிதான் என்று ஒப்புக் கொண்டாலும் அல்லாஹ் அதை நம்பமாட்டான். எனவே அவனே நான் உண்மையானவள் என்பதை உங்களுக்கு காட்டித் தருவான்.
என் நிலைமை ஹளரத் யூசுப் நபி (அலை) அவர்களின்
தந்தையின் நிலைமையை ஒத்திருக்கிறது.
"என் மக்களே! யூசுபை ஓநாய் கடித்து தின்று விட்டது என்று) நீங்கள் கூறும் செய்தியின் தரத்தை அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று அவர்கள் கூறினார்கள். அதைப் போன்றே நானும் கூறுகிறேன்" என்று சொல்லிவிட்டு எழுந்து வீட்டினுள் சென்று விட்டேன்.
என் கணவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். அவர்களுக்கு வஹி வருவதற்கான அறிகுறி தோன்றியது. வஹீ வந்த நிலை அகன்றதும் அவர்கள் என்னை அழைத்து "ஆயிஷா! நீ குற்றமற்றவள் என்று அல்லாஹ் கூறிவிட்டான்" என்று
கூறி அதுகுறித்து அருளப்பெற்ற (24:10-20) ஆகிய
வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
அப்போது என் தாயார் என்னிடம், "உனது கணவரிடம் எழுந்து செல்" என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் கணவரிடம் நான் எழுந்து செல்ல மாட்டேன். நான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் புகழவும் மாட்டேன்" என்று நான் கூறினேன்.
அறிவிப்பாளர் : ஹள்ரத் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்
(நூல்: புகாரி - 3992)
இந்த சம்பவத்தில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதம் தன் மீது தீராக் காதல் கொண்ட தனது மனைவியை அல்லாஹ்விடம் கொண்டு சேர்க்க வேண்டும். என்பதற்காகத்தான் என்பதை அறிய முடிகிறது.
தன் மனைவி பிரச்சனையின் உண்மை நிலை மாதக்கணக்காக பேரறிவாளரான பெருமானார் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் இருக்கப் போவதில்லை. அத்துடன் இவ்வளவு காலம் அல்லாஹ்வும் தன் நபிக்கு காட்டித் தராமல் இருக்கப் போவதில்லை.
ஹள்ரத் கதீஜா (ரலி) அவர்கள் :
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஹள்ரத் கதீஜா (ரலி) அவர்களுக்கு இருந்த அன்பு உலகில் எங்கும் காணக்கிடைக்காத பேரன்பாகும். அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திசை திருப்பி விட்டார்கள். அவர்களை அல்லாஹ்வின் மீது பேராவல் கொள்ளச் செய்தார்கள்.
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை மண முடிப்பதற்கு முன்னால் ஒரு அரசி போன்று வாழ்ந்து வந்தவர்கள். அண்ணலாரை மணந்து கொண்டதற்குப் பின்னால் அண்ணலாரின் அன்பில் நெகிழ்ந்து அவர்களுக்கு பணிவிடை செய்வதில் ஒரு அடிமையைப் போன்று நடந்து கொண்டார்கள்.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஹிரா மலையில் ஆறுமாத காலம் தவமிருந்தார்கள். அப்போது மூன்று நாளைக்கு ஒரு முறை ஹள்ரத் கதீஜா (ரலி) அவர்கள் இரவில் மலையேறிச் சென்று உணவு கொடுத்து வருவார்கள். அவ்வாறு ஒரு நாள் உணவு கொண்டு செல்லும்போது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹள்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை புரிந்து சொன்னார்கள் :
"யாரஸூலல்லாஹ்! இதோ கதீஜா வருகிறார். அவர் ஒரு சுமையை எடுத்து வருகிறார். அதில் உணவும், தண்ணீரும் இருக்கிறது. அவர் வந்தால் அவருக்கு அவரைப் படைத்தாள்பவன் ஸலாம் சொன்னதாகக் கூறுங்கள். நானும் அன்னாருக்கு ஸலாம் சொன்னதாக கூறுங்கள். முத்தாலான ஒரு மாளிகை அவர்களுக்கு சொர்கத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே அவர்கள் சோர்வடையத் தேவையில்லை. களைப்படையத் தேவையில்லை."
அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் (நூல்: புகாரி, முஸ்லிம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹள்ரத் கதீஜா (ரலி) அவர்களுக்கு இந்த செய்தியைக் கூறி அவர்களை தன்னைவிட அல்லாஹ்வின் மீது அதிக அன்பு கொள்ளச் செய்தார்கள்.
கண் தெரியாத தோழர் :
கண் தெரியாத தோழர் ஒருவர் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “யா ரஸூலல்லாஹ்! எனக்கு அரவே கண் தெரியாது. என்னை வழி நடத்திச் செல்ல உதவிக்கு யாருமில்லை. எனவே எனக்கு கண் பார்வை கிடைக்க துஆச் செய்யுங்கள்" என்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நண்பரே! நீர் இந்த சிரமத்தை
பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் உமக்கு கூலியாக சொர்க்கம் தருவான்" என்றார்கள். “இல்லை யா ரஸூலல்லாஹ்! எனக்கு சொர்க்கம் தேவைதான் என்றாலும் எனக்கு உதவிக்கு யாரும் இல்லாததால் மிகவும் சிரமமாக இருக்கிறது” என்று மீண்டும் அவர் கூறினார்.
"அப்படியானால் நீங்கள் உளூச் செய்யும் இடத்திற்குச் சென்று நன்கு உளூச் செய்து விட்டு பள்ளிவாசலுக்குள் சென்று இரண்டு ரக்அத்து நஃபில் தொழுது விட்டு இந்த துஆவை ஓதுங்கள் என்று அண்ணலார் கூறி ஒரு துஆவை அவருக்கு கற்றுத் தந்தார்கள்.
(யா அல்லாஹ்! நான் உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். அருட்கொடையான நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன்.
முஹம்மது (ஸல்)
அவர்களே!
நான் என்னைப் படைத்தாள்பவனிடத்தில் உங்களை முன்நிறுத்திக் கேட்கிறேன். அவன் எனது இந்த தேவையை எனக்கு நிறைவேற்றி தருவானாக!
யா அல்லாஹ்! முஹம்மது (ஸல்) அவர்கள் எனக்காகச் செய்யும்
சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக!)
உடனே அந்த கண் தெரியாத நண்பர் அவ்வாறே செய்தார். அவர் அவ்வாறு துஆ செய்து விட்டு வெளியில் வரும்போது கண் பார்வை பெற்றவராக வந்தார்.
அறிவிப்பாளர் : ஹள்ரத் உதுமான் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள்; நூல் : பைஹகீ
இந்த நபிமொழியில் இடம் பெற்ற கண் தெரியாத ஸஹாபி அண்ணலார் மீது பெரும் நம்பிக்கை வைத்துக் கேட்டார். ஆனால், நீங்களே அல்லாஹ்விடம் கேட்டுப் பெறுங்கள் என்று அண்ணலார் அவரை அல்லாஹ்விடம் திசை திருப்பி விட்டார்கள். மேலும் தன்னை முன்னிறுத்திக் கேட்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்கள்.
இதுபோன்று தன் மீது பேரன்பு கொள்ளும் எல்லா நண்பர்களையும் அண்ணலார் ஏதாவதொன்றைச் சொல்லி அவரை அல்லாஹ்விடம் திசை திருப்பி விட்டார்கள். ஏராளமான வரலாறுகள் சான்றாக உள்ளன. ஒருவரைக் கூட ஆஷிகுர் ரஸூலாக மட்டும் அண்ணலார் விட்டுச் செல்லவில்லை.
வஃபாத்தின்போது :
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் வஃபாத்தான போது நடந்த செய்தி ஒரு சிறந்த சான்றாகும்.
அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். அப்போது ஹள்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கிருக்கவில்லை. எனவே ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் தன் வாளை உருவினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. அவர்களுக்கு இறப்பு கிடையாது. அவர்கள் இறந்து விட்டதாக யாராவது சொன்னால் அவரின் தலையை நான் வெட்டி விடுவேன் என்று கூறிக் கொண்டு சுழன்று சுழன்று வந்தார்கள்.
அங்கிருந்த நண்பர்களுக்கு அண்ணலார் வஃபாத்தாகி 'விட்டதை நம்புவதா? வேண்டாமா? என்று குழப்பம் ஏற்பட்டது.
இந்நேரத்தில் செய்தி கேள்விப்பட்ட ஹள்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்து விட்டார்கள்.
உடனே ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஹள்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் “அபூபக்கரே! இங்கு கூடி இருப்பவர்களெல்லாம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் வஃபாத்தாகி விட்டதாக கூறுகிறார்கள். உண்மையை அவர்களுக்கு நீங்கள் எடுத்துக் கூறுங்கள்" என்றார்கள்.
"உமரே! அமைதியாக இருங்கள்" என்று அவரை அமைதிப்படுத்திய ஹள்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் திருகுர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து ஓதினார்கள்.
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ ۚ أَفَإِيْن مَّاتَ أَوْ قُتِلَ ٱنقَلَبْتُمْ عَلَىٰٓ أَعْقَٰبِكُمْ ۚ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيْـًٔا ۗ وَسَيَجْزِى ٱللَّهُ ٱلشَّٰكِرِينَ
"முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத் தூதரே தவிர (இறைவன் அல்ல!) அவர்களுக்கு முன்னாலும் பல இறைத்தூதர்கள் வஃபாத் ஆகி இரக்கிறார்கள்.
ஆகவே (இந்த முஹம்மது) இறந்து விட்டால், அல்லது புனிதப் போரில் கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் குதிங்கால்கள் பக்கமாக (பழைய மார்க்கத்துக்குத்] திரும்பி விடுவீர்களோ? அவ்வாறு எவர் தன் குதிங்கால் பக்கமாக திரும்பிச் சென்றாலும் அவரால் அல்லாஹ்வுக்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்த முடியாது. (ஆனால் அண்ணலார் வஃபாத்தான துக்கத்தை சகித்துக் கொண்டு) அல்லாஹ்வுக்கு நன்றியாக நடப்பவர்களுக்கு அல்லாஹ் விரைவில் நற்கூலி வழங்குவான்'
-அல்குர்ஆன் (3: 144)
இந்த வசனத்தை ஓதக் கேட்டதும் ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் அமைதியாகி விட்டார்கள். இப்படியொரு வசனம் அருளப் பெற்றிருப்பதையே நான் மறந்து விட்டேனே என்று கூறி அண்ணலார் வஃபாத்தாகி விட்டதை ஒப்புக் கொண்டார்கள்.
ஹள்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்க வேண்டும். அவர்கள் ஹள்ரத் உமர் (ரலி) அவர்களை விட அண்ணலாருடன் மிக நெருங்கிய ஆஷிகுர் ரஸூல் இருந்தாலும் அவர்களை அண்ணலார் ஏதோவொரு காரணத்தை முன் வைத்து அல்லாஹ்விடம் திருப்பி விட்டிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. ஆக அன்றுமட்டும் ஹள்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் குழப்பம் அடைந்திருப்பார்களானால் இன்று வரை இஸ்லாமியர் குழப்பமடைந்தவர்களாகவே இருந்திருப்பார்கள்.
ஹள்ரத் உமர் (ரளி) அவர்களும் இந்நிகழ்வினால்
அல்லாஹ்வின்பால் திசை திருப்பப்பட்டார்கள். இவ்வாறு கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கொண்டு சேர்க்கும் அடிமை என்ற பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
ஓ . எம் . அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 6
தமிழக ஆலிம்களால் அரபு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்
-------------------------------------------------
உலகப் பொதுமறை அல்குர்ஆன் கூறுகிறது. "பேசும் மொழிகளும், மனித நிறங்களும் வெவ்வேறாக இருப்பது அல்லாஹ்வுடைய ஆதாரங்களில் உள்ளவையாகும். ஆய்வாளர்களுக்கு இதில் பல ஆதாரங்கள் உள்ளன. 21:22
மனிதர்களிடையே பல்லாயிர பல்லாயிரம் மொழிகள் தோன்றுவது குறித்து அரபு இலக்கியங்களில் ஒரு வரலாறு கூறப்படுவ துண்டு.
நூஹ் (அலை) அவர்களும் அவர்களோடு முஸ்லிமான 83 நபர்களும் ஒரே மொழி பேசுவோராக இறந்தனர். வெள்ளப் பிரளயத்திற்குப் பிறகு பாதுகாப்பாக கப்பலில் இருந்து தரை இறங்கியது, அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியைப் பேசத் தொடங்கினார்கள். இது இறைவனின் ஏற்பாடு. அதனால் அவர்களால் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட தம்பதிகளை உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று குடியேறும்படி நூஹ் நபி (அலை) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
கனவன், மனைவியின் மொழியையும், மனைவி,கனவனின் மொழியையும் கற்று. பின்னர், பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்கு அவ்விரு மொழிகளையும் கற்பித்தார்கள்.
இளமைப்பருவம் அடைந்த தம் பிள்ளைகளுக்கு மற்றொரு பகுதியில் வாழ்ந்த இளமைப்பருவம் அடைந்தவர்களை திருமணம் செய்து வைத்தார்கள்.
நூல்: அல் பிதாயா வன்நிஹாயா
உலகம் முதன்முறையாக சீறமைக்கப்பட்ட போது முதலில் சீறமைக்கப்பட்டது மொழிகள்தாம்.
உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல்வேறு விஞ்ஞான தகவல்கள், மருத்துவ செய்திகள், தாவரவியல் தகவல்கள் போன்ற பலவற்றை ஒருவர் வேறுமொழிகளில் இருந்து தம் மொழி வழியாக தெரிந்துக் கொள்வதுதான் அறிவாளியின் அடையாளம் என்பார்கள்.
ஆனால் இஸ்லாம் "ஒவ்வொருவரும் பல்வேறு மொழிகளையே தெரிந்திருக்க வேண்டும், அதுதான் முதிர்ந்த அறிவின் அடையாளம்" என்கிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வசிப்போர் தாய்மொழியை மறந்துவிட்டு தனக்கு வாழ்வாதாரங்களை வழங்கும் மொழிகளை தூக்கி நிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
எல்லா மொழிகளும் எல்லோருக்கும் வாழ்வாதாரங்களை வழங்குவதுதான் இறைவன் கூறும் உண்மை.
தமிழில் அரபு மொழி நூல்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று ஒவ்வொரு மனிதரும் மற்ற மொழிகளை கற்பது குறைந்துவிட்டதால், பிறமொழிகளை அறிந்தவர்கள் அம்மொழியிலுள்ள நல்ல பல நூல்களைத் தம்மொழியில் மொழிபெயர்க்க துவங்கினார்கள். அப்படித்தான் தமிழிலும்.
அதிலும் தமிழில் முதன் முதலாக மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் மதம் சார்ந்த நூல்களாகும்.
அதிலும் இஸ்லாம் மார்க்க நூல்களே முதன்முதலில் அரபு மொழியிலிருந்து 'அர்வீ எனப்படும் அரபு தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதனை மொழி பெயர்த்தவர் ஷிஹாபுத்தின் வலியுல்லாஹ் நாயகம் (ரஹ்) அவர்கள் (காயல்பட்டினம்) இவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் மொழிபெயர்ப்பாகும்.
சதகத்துல்லாஹ் அப்பா அவர்களின் வழித்தோன்றலில் வந்த அல்லாமா நூஹ் லெப்பை ஆலிம் அவர்கள் சரியாக நூறு வருடங்களுக்கு முன்னர் அரபுத் தமிழில் முதன் முதலாக திருக் குர்ஆனை மொழிப் பெயர்த்தார்கள்.
இவர் ஹிஜ்ரி 1335 கி.பி.1914இல் காலமானார். முதல் தமிழ் தர்ஜுமாவை வெளியிட்ட ஆசிரியரின் நூறாவது நினைவு நாளில் இந்த கட்டுரை பிரசுரிக்கப்படுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
தமிழில் முதல் அரபு நூல்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரபுத் தமிழ் வழியாக ஆலிம்களால் இஸ்லாத்தை மக்கள் புரிந்துக் கொண்டிருந்த வேளையில் தமிழ் மொழி வழியிலான வார, மாத இதழ்கள் பெருகியதும் 'அர்வீ மொழி குன்றத் துவங்கியது.
அதே நேரத்தில் கி.பி. 1892க்குப் பிறகு நன்கு அரபு மொழியும் தமிழும் கற்றுத்தேரிய ஆலிம்கள் வேலூர் அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத்தில் பட்டம் பெற்று வெளிவரத் தொடங்கினார்கள். கண்டிப்பாக இவர்களில் ஒருவர்தான் அரபு மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு முதன் முதலில் நூலை வெளியிட்டிருக்க வேண்டும்.
ஏனென்றால் 900 ஆண்டுகளாக வளக்கில் இருந்து வந்த அர்வீ மொழி 1875களுக்குப் பிறகு அதாவது தமிழகத்தில் தமிழ் அச்சு எந்திரம் பிரபளமடைந்த பிறகு அர்வி மொழியை இஸ்லாமிய தமிழ் ஆசிரியர்கள் (எழுத்தாளர்கள்) விமர்ச்சித்ததின் காரணமாக முறையாக படித்து பட்டம் பெற்ற ஆலிம்கள் தமிழில்தான் எழுதி இருப்பார்கள் - அதாவது காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறேன்.
எனவே, முதலில் எந்த ஆலிம் என்ன நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார் என்பது ஆய்வுக்குரிய விஷயமாகும். நானும் ஆய்வு செய்கிறேன் நீங்களும் ஆய்வு செய்யுங்கள்.
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவீ (ரஹ்) 1876-1955:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சேலம் மாவட்டம் ஆத்தூரில் முஹையத்தின் ராவுத்தர் என்பவருக்கு 26-11-1876இல் பிறந்த மவ்லானா அவர்கள் ஆரம்பக் கல்வியை கற்றுத் தேரியப் பிறகு வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத்தில் ஏழாண்டுகள் பயின்று 1906ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்கள்.
சரியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 19.02.1926 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆன் தர்ஜுமா பனியை தொடங்கினார்கள். அது 24.10.1942 அன்று அதாவது 16 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்துப்பணி நிறைவுற்றது. பின்னர் இது முழுமையாக 01.05,1949ம் ஆண்டு (ரஜப் பிறை 2.1368இல்) வெளியிடப்பட்டது.
அரபு மொழியிலுள்ள குர்ஆனை தமிழில் இரண்டாவதாக வெளியிட்டவர் இவர் ஆவார். இவர் இன்னும் பல நூல்களை இயற்றியுள்ளார். ஆனால், அவையெல்லாம் ஒரே நூலின் மொழியாக்கமல்ல!
அல்லாமா அமானீ ஹள்ரத் (ரஹ்) 23.7.1893 - 9.8.1966:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மவ்லானா அப்துல் ரஹீம் அவர்களுக்கு மகனாக 23.7.1893 பள்ளிக் கொண்டாவில் அல்லாமா அமானீ ஹள்ரத் அவர்கள்
பிறந்தார்கள். ஆரம்பக் கல்வியை பயின்ற பின்னர் வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபு கல்லூரியில் மார்க்கம் பயின்று 1915ஆம் ஆண்டு மல்லவி பட்டமும், 1919களில் ஃபாஜில் பட்டமும் பெற்ற இவர்கள் 27க்கும் மேற்பட்ட நூல்களை அரபு, உருது, ஃபார்ஸி, தமிழ் ஆகிய மொழிகளில் இயற்றியுள்ளார்கள்.
இவர்கள். குல்ஜாரே ஃபாத்திமா என்ற 'பாத்திமா (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு' நூல் மட்டும் அரபு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டதாகும் என N.S.அப்துல் கனீ ஈரோடு அவர்கள் 'அமானீ ஹஜ்ரத் ஜீவிய சரித்திரம்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
இந்த நூல் 1925களுக்கு முன்னர் தமிழ், அரபுத்தமிழ், உருது, ஃபார்ஸீ ஆகிய நான்கு மொழிகளில் வேலூரில் இருந்து வெளியிடப் பட்டிருக்கிறது. பின்னர் மவ்லவி ஹாபிழ் முஹம்மது யூசுப் பாஜில் பாகவீ அவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது.
மேலும் இதே நூல் இரண்டு முறை அரபு தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. அல்லாமா அமானீ ஹள்ரத் அவர்கள் தமிழில் எழுதிய ஒரே நூல் இதுவே ஆகும். இன்று அவர்களின் பெயரால் காணப்படுவதெல்லாம் அவர்களின் சொற்பொழிவுகளாகும்.
மவ்லானா S.S.முஹம்மது அப்துல் காதிர் பாகவி (ரஹ்) 7.1.1901-4.6.1979 :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேனீ மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த S. சாஹிப் ராவுத்தர் ஹசீனா தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் நமது S.S.M. மவ்லானா அவர்கள். இவர்கள் 1923ஆம் ஆண்டு வேலூர் பாக்கியாத்தில் படித்து பட்டம் பெற்றார்கள்.
இவர் தமிழில் 115 நூல்களை இயற்றி யுள்ளார்கள். அவற்றில் 44 நூல்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இவர்களுடைய பெரும்பாலான நூல்கள் அரபு மொழியிலிருந்து அப்படியே தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டவைகளாகும்.
அல்லாமா ஷிப்லி நூஃமானி (ரஹ்) அவர்களின் 'அல்கஸ்ஸாலி' எனும் அரபு நூலை இமாம் கஸ்ஸாலி என 1928இல் முதன் முதலாக வெளியிட்டார்கள். பின்னர் அல்பாரூக் எனும் அரபு நூலை உமருல் பாருக் என 1929இல் வெளியிட்டார்கள். இதனை வெளியிட்டது இஸ்லாமிய நூற் பிரசுறச் சங்கம், திருச்சி,
3. இஸ்லாம் மதவிளக்கம் (வெளியிடப்பட்ட ஆண்டு 1938, 1946, 1957, 1978)
4. நாயக வாசகம் வெளியீடு 1960 (மூல நூல் லுபாபுல் அக்பார்)
5. அல்அன்வார் (1952 தஃலீமுல் இஸ்லாம் புக் டிப்போ சென்னை) இது முஹ்யித்தீன் பின் அரபீ (ரஹ்) அவர்கள் இயற்றியதாகும்.
6. ஞானி பாணூ (1931-1950 வெளியீடு முஹம்மது மீரான் ராவுத்தர் அவர்கள்.
7.ஜவாஹிருல் புகாரி (1950)
8. அகத்தூய்மை 1952
9. தஜ்ரீது ஜாமிவுல் புகாரி
10. கன்ஜுந் தக்காயிக் (இஸ்லாமியச் சட்ட விளக்க நூல்) முதல்பாகம் 1968 இரண்டாம்
பாகம் 1970 மூன்றாம் பாகம் 1975. இதன் மூல நூலாசிரியர்: அபுல் பரகாத் அப்துல்லாஹ் பின் அஹ்மது பின் மஹ்மூது அந்நஸபீ (ரஹ்).
11. இஸ்லாமியக் கொள்கைகள், (1969)
12. பிதாயத்துல் ஹிதாயா (1973)
13. ஸஹீஹ் முஸ்லிம் முதல்பாகம் 1978. இரண்டாம் பாகம் வெளியீடு 1979. (இந்த நூல் 1979இல் வெளிவந்தது. இந்த நூலில் 1979 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இதில் 79வது ஹதீஸின் அரபியை மட்டும் எழுதி வைத்துவிட்டு மொழிபெயர்க்கும் முன்னரே மவ்லானா S.S.M. அவர்கள் 4.9.1979இல் காலமாகி விட்டார்கள்.
15. தொழுகை விளக்கம் வெளியீடு 1962
(மூலநூல் பெயர் துஹ்ஃபதுல் முஸல்லீன்.)
16. ஹள்ரத் முஹம்மத் ரஸுலுல்லாஹ் (ஸல்) முதல் பாகம் 1962-1997, இரண்டாம் பாகம் 1964, மூன்றாம் பாகம் 1968, அதன் மூல நூலாசிரியர் முஹம்மது ரிழா (ரஹ்)
17. கவலையகற்றும் கருவூலம் வெளியீடு 1976 மூல நூலாசிரியரின் பெயர் கஜீனதுல் அஸ்ரார் ஜலிலதுல் அத்கார்.
18.15.4.1933இல் திருமறைத் தமிழுரை எனும் பெயரில் திருக்குர்ஆன் தமிழில் முதன்முதலாக மொழிபெயர்க்கப்பட்டது. இது 16 மாதங்களில் (ஏறத்தாழ 15.10.1934க்குள்) மொழிபெயர்க்கப்பட்டது. 1934இல் இதன் முதல் பாகம் வெளிவந்தது. பின்னர் மற்ற இரண்டு பாகங்கள் வெளிவந்தன.
19. தஃப்ஸீருல் ஹமித் ஃபீ தஃபீஸீரில் குர்ஆனில் மஜுத் எனும் நூல் தஃப்ஸீர் ருஹுல் பயானை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. இப்போது 2009இல் முழுமையாக வெளிவந்துள்ளது. இது ஏழு ஆயிரம் பக்கங்களை கொண்ட நூல். இந்த நூல் ஹிஜ்ரி 1.1.1364, (1943) ஞாயிற்றுக்கிழமை அன்று ராம்நாடு மாவட்டத்திலுள்ள சித்தார் கோட்டையில் எழுதி முடிக்கப்பட்டது. இது இப்பொழுதும் விற்பனையில் உள்ளது.
மல்லானா S.S.M. அவர்கள் அரபியிலிருந்து தமிழுக்கு நேரடியாக கொண்டு வந்தவைகள் மட்டும் இது. இது இல்லாமல் பல அரபு நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட பல தமிழ் நூல்களை இவர்கள் இயற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷைஹுல் முன்ஜித் B.முஹம்மது சுல்தான் (ரஹ்) அவர்கள் 1.5.1944 - 27.09.2003*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெரம்பலூர் மாவட்டம் பெரிய வடகரையில் திருச்சி மாகான கிலாஃபத் இயக்கத்தின்
செயல்வீரர் பீர் முஹம்மது - ஜெய்னப்பி தம்பதியருக்கு 1.5.1944 அன்று ஷைஹுல் முன்ஜித் அவர்கள் பிறந்தார்கள்.
கிளியனூரில் முதல்பட்டமும் லால்பேட்டை மன்பவுல் அன்வாரில் இரண்டாம் பட்டமும் பெற்று தேவ்பந்தில் உயர்வகுப்பு பயின்ற ஷைஹுல் முன்ஜித் அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்கள்.
1. அதில் 'ஷரீஅத்தும் தக்லீதும்' என்ற நூல் பிரபளியமானது. அதில் இஸ்லாமிய கொள்கை விளக்கம், நவீன குழப்பவாதிகளுக்கு தக்க பதில் என பல அம்சங்கள் உண்டு. இது நூருல் அன்வார், அகாயிதுந் நஸஃபி, அல்இன்ஸாப் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.
2. முஹம்மது ஃபுஆது அப்துல் பாகி அவர்களுக்குரிய அல் முஃப்ஹரிஸ் லி அல்ஃபாலில் குர்ஆனில் கரீம் எனும் நூலை 'அல்குர்ஆன் அகராதி' எனும் பெயரில் எழுதியுள்ளார். இது 1476 பக்கம் ஆகும்.
பொதுவாக மொழிபெயர்ப்பு நான்கு வகைகள் உண்டு 1.தழுவல் 2. சுருக்கம், 3.மொழியாக்கம். 4. நேர் மொழிபெயர்ப்பு.
இவற்றில் நேர் மொழிபெயர்ப்பு செய்வது சிறமமாகவும் இருக்கும், மூல நூலின் சுவையும் குறையும். ஆனால் திருக்குர்ஆன் அகராதி நேர்மொழி பெயர்ப்பாகவும் சுவை குறையாமலும் தமிழில் எழுதியுள்ளார் இந்நூலாசிரியர். ஆனால் இவர் தமிழ் படித்தது மூன்றாம் வகுப்புதான். ஓஹோ. இதைதான் 'இறைவனின் அனுகிரகம்' என்று சொல்வார்களோ?
கடைய நல்லூரைச் சேர்ந்த V.U.A. யூசுப் அன்சாரி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் (5.3.1931 26.2.1994) 1.சூரத்துல் ஹுஜராத் விளக்கம்
2.சூரத்துல் பாத்திஹா விளக்கம் (முதல் தரமான பத்து தஃப்ஸீர்களின் தொகுப்பு). 3. இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கிதாபுந் நிய்யத் - என்னக் குவியல் 4 கிதாபுத் தவ்ஹீத் வதவக்குல் ஆகிய நூல்கள் அரபு மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டனவாகும்.
ஷைஹுத் தஃப்ஸீர் K.A. நிஜாமுத்தீன் மன்பயீ (ரஹ்) 20.12.1941 - 1.1.2012
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திண்டுக்கல் பழனி அருகேயுள்ள கீரனூரில் அப்துல்கரீம் என்பவருக்கு மகனாக 20.12.1941இல் பிறந்த அவர்கள் லால்பேட்டையில் கல்வி பயின்று 1983 முதல் 2012 வரை சென்னை புரசைவாக்கம் ஜும்ஆ மஸ்ஜிதில் பணியாற்றினார்கள். இவர்கள் 46 நூல்கள் இயற்றியுள்ளார்கள். 30 வருடங்களுக்கும் அதிகமாக 12000 மணி நேரத்திற்கும் மேலாக திருக்குர்ஆன் விரிவுரை சொற்பொழி வாற்றியுள்ளார்கள்.
இவர்களுடைய மிகுதமான நூல்கள் அரபுமொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டவையாகும்.
1. அல்ஹிஸ்னுல் ஹஸீன், 2. ஹிஜ்ஜின் வழிகாட்டி 3. சாந்தித்தரும் ஸலவாத் 4. இர்ஃபானுல் ஹக் போன்ற நூல்கள் மட்டும் நேரடி மொழிபெயர்ப்பு நூலாகத் திகழ்கின்றன.
ஹள்ரத் அவர்கள் 'குர்ஆன் தர்ஜமா' எனும் பெயரில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார்கள். அதாவது M.அப்துல் வஹ்ஹாப் B.Th. (ரஹ்) R.K. அப்துல் காதிர் பாகவீ (ரஹ்) ஆகியோருடன் இணைந்து செய்திருக்கிறார்கள். இது திருக்குர்ஆன் தர்ஜமாக்கள் வரிசையில் மூன்றாவது நூலாகும். இதனை சென்னை திரியெம் பிரிண்டர்ஸ் வெளியீட்டுள்ளது. இப்பொழுதும் விற்பனையில் உள்ளது.
மவ்லானா A.கலீல் அஹமது மன்பயீ கீரனூரி 1944-16.12.2010
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திண்டுக்கல் பழனி அருகே உள்ள கீரனூரில் பிறந்த மவ்லானா அவர்கள் 22.12.1963இல் லால்பேட்டையில் பட்டம் பெற்று பின்னர் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வந்தார்கள். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டார்கள். இவர் நல்ல பேச்சாளர், நல்ல எழுத்தாளர் ஆவார்.
1. அழியும் உலகமும் அதன் இழிந்த நிலையும். இது இஹ்யாவிலுள்ள 'தம்மு துன்யா' என்ற பகுதியின் மொழிபெயர்ப்பாகும்.
2. 'தர்க்கம் செய்ய வாருங்கள்' (இது) ரஷீதிய்யா என்ற தர்க்கக்கலை நூலின் சுருக்கமாகும். மேலும் எட்டு நூல்களை இயற்றியுள்ளார்கள்.
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒரு நூல் மாற்றப்படுகிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் உண்டு.
1. எழுத்தாளன் தன் பொருளாதாரம், சமூக அந்தஸ்த்து ஆகியன உயரவே மொழி பெயர்க்கிறான்.
2. ஒரு வேற்றுமொழி நூலின் கருத்து, நடை, அழகாக இருக்கிறது, இதனை தம்மொழியில் வெளியிட்டால் மக்கள் பயனடைவார்கள் என்பதற்காக ஒரு எழுத்தாளன் மொழி பெயர்க்கிறான்.
இந்த கட்டுரையில் இடம் பெற்ற இன்னும் இதுபோன்ற ஆலிம்களுடைய மொழி பெயர்ப்புகள் யாவும் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்ததுதான்.
எனவே தம்மொழி போற்றப்பட பிறமொழி நூல்களை மொழியாக்கம் செய்யுங்கள். மக்களின் மனோ நிலைமாரும். அமைதி நிலவும். ஆனால் நம் கலாச்சாரம் மாறாமல் மொழியாக்கம் செய்ய வேண்டும்.
(இந்தக் கட்டுரை 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதற்குப் பிறகு மவ்லவி ஷாஹுல் ஹமீது பாகவி அவர்கள் இதே தலைப்பில் ஆய்வு நூல் எழுதி டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார். அதில் விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதை பார்க்க வேண்டுகிறேன்.)
======================================
கட்டுரை எண் :- 5
இஸ்லாத்தின்
அசுர வளர்ச்சியின் காரணங்கள்
===================================
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ, M. A., M. Phil.,
இமாம் : மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால், சாந்தோம், சென்னை.
=============================
மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பெண்கள் மதரஸாவில் வெளியிடப்படும் மலருக்கு எழுதப்பட்ட கட்டுரை.
ஒருமுறை சத்தியம் டிவி தொலைக்காட்சியில் நேர்காணல் எடுத்த நெறியாளர் இந்து முன்னணி அமைப்பின் முன்னாள் தலைவர் ராஜகோபாலன் அவர்களிடம், "உலகம் முழுவதும் இஸ்லாம் வளர்ந்து கொண்டே செல்கிறதே! அந்த மார்க்கத்தை விரும்பி ஏற்றுக் கொள்கிறவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றதே! அதற்காக இந்து முன்னணியினர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்தது போல் தெரியவில்லையே?" எனக் கேட்டார்.
அதற்கு ராஜகோபாலன் அவர்கள், "அது குறைகின்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றது" என்று கூறினார்.
"இஸ்லாம் வளர்ந்து கொண்டிருக்கிறது அது முழுமையாக அதன் வளர்ச்சி குறையவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?" என நெறியாளர் மீண்டும் கேட்டதற்கு, "ஆமாம்! அது முழுமையாக குறையவில்லை; ஆனால் குறைய வேண்டும் என்கிற விருப்பம் மக்களிடையே உருவாகி இருக்கிறது" என்று கூறினார்.
ஆதாரம் :
https://youtu.be/3K9PoO1Qq3w?si=06-zAo3XRF24tsUX
ஏழைகள் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போன்ற எளியவர்கள் மட்டுமே இஸ்லாம் அறிமுகமான ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.
மக்காவில் வாழ்ந்த குரைஷி, ஹாஷிமி போன்ற உயர் குடிமக்கள், தாயிஃபில் வாழ்ந்த மேட்டுக்குடி மக்கள் போன்றவர்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இஸ்லாம் அவர்களின் இதயங்களுக்குள் செல்லவில்லை.
முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு சென்ற பிறகு 10% சதவீதமும் பத்ரு யுத்தம் முடிந்த பிறகு 25% சதவீதமும் கைபர் யுத்தம் முடிந்த பிறகு 35% சதவீதமும் மக்கா வெற்றிக்குப் பிறகு 100% சதவீதமும் இஸ்லாம் பரவத் தொடங்கியதாக வரலாற்று ஆய்வாளர் இப்னு சீரின் கூறுகிறார்.
தூதரின் தூதர் :
==================
மக்காவிலிருந்து தொலைதூர நிலப்பரப்பான மதீனாவிற்கு முதன் முதலில் இஸ்லாத்தை கொண்டுச் சென்றத் தூதர் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
இவர்களின் முயற்சியும், ராஜதந்திரங்களும், வழிகாட்டுதலும் இஸ்லாம் அசுர வளர்ச்சி அடைவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
இவர் இஸ்லாம் ஆவதற்கு முன் செல்வ செழிப்போடு வாழ்த்தவர்; நேரத்திற்கு ஒரு உடையும் சூழ்நிலைக்கு ஏற்ற அத்தரையும் பயன்படுத்தி வந்த மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவர்.
இவர் இஸ்லாத்தில் இணைந்த பிறகு துறவர மனநிலையோடும், தூய்மையான மனநிலையிலும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
அதனால்தான் உஹது போர்க்களத்தில் ஹம்ஸா (ரலி) அவர்களைத் தேடி கொலை செய்தது போலவே இவரையும் தேடிச் சென்று எதிரிகள் கொலை செய்தார்கள்.
அதனால் இஸ்லாத்தை முதன் முதலில் வெளி நகரங்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் நபரின் மரணம் அந்த உஹதில் நடந்தது. அவரின் உடலைக் கண்ட அனைத்து நபி தோழர்களும் நபிகளாரும் அழுத அழுகையின் அளவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அளவிட முடியாது.
இஸ்லாம் அறிமுகமானதில் இருந்து 12வது வருடத்தில் இரண்டாவது அகபா உடன்படிக்கையின் போது மதீனாவில் இருந்து 70 முஸ்லிம்களோடு மக்காவிற்கு வந்து ஹஜ் செய்தார்.
பிறகு எழுபது முஸ்லிம்களையும் அழைத்துக் கொண்டு மினாவின் ஓர் பகுதியில் நபி (ஸல்) அவர்களை சந்திக்க வைத்த சாதனையாளர் இவர்.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்து மதீனாவிற்குள் நுழைவதற்கு முன் 20% சதவீத வீடுகளில் இஸ்லாம் நுழைந்து விட்டது. அதாவது சுமார் 2000 வீடுகளுக்குள் இஸ்லாம் நுழைந்துவிட்டது.
இரண்டு ஆயிரங்களுக்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். அவர்களில் 600 ஆண்களும், மற்றவர்கள் முதியவர்களும், பெண்களும், சிறுவர்களுமாக இருந்தார்கள். இந்த அரியப் பணியை செய்தவர் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
இஸ்லாம் வளர்ந்ததற்குக் காரணம் :
======================================
1. இஸ்லாத்தைப் பாதுகாக்கவும் அதை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்யவும், இஸ்லாத்தின் வளர்ச்சியை கொண்டு இஸ்லாமியர்கள் பயனடைவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கவும் அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டதால் இஸ்லாம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது.
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ. التوبة/33.
தனது தூதரை நேர்வழியுடனும், உண்மையான மார்க்கத்துடனும் அவன்தான் அனுப்பினான்; இணை வைப்பவர்கள் வெறுத்தாலும், அதை அனைத்து மார்க்கங்களுக்கும் மேலோங்கியதாக ஆக்குவதற்காகவே இந்தத் தூதரை அனுப்பினான். 9:33
அதாவது நபி (ஸல்) அவர்கள் வசம் இஸ்லாமிய வாழ்வின் நெறிமுறைகள் அனைத்தையும் வழங்கி, அதன் அடிப்படையில் மக்கள் வாழ வேண்டும் என்கிற சட்டத்தை வகுத்து அல்லாஹ்வே நபிகளாரை அனுப்பி வைத்தான்.
அதனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்தாலும் இஸ்லாம் சிறந்து விளங்கும்; அதற்கு நான் பொறுப்பு என இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ. المجادلة/21.
"நிச்சயமாக நானும் என் தூதர்களும்தான் வெற்றி பெறுவோம்" என்று அல்லாஹ் (விதியில்) எழுதி வைத்து விட்டான். 58:21
அல்லாஹ் வழங்கிய மார்க்கமும் அல்லாஹ் அனுப்பிய தூதர்களும் பூமியில் வெற்றி பெறுவர் என அல்லாஹுவே வாக்களித்து இருப்பதால் இஸ்லாம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது.
وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ. الأنبياء/105.
"நிச்சயமாக நற்செயல்கள் செய்யும் என் அடியார்கள் இந்த பூமிக்கு உரிமையாளர்கள் ஆவர்" என்று (தவ்ராத்துக்கு) பின்னர் ஸபூர் வேதத்திலும் நாம் குறிப்பிட்டு இருக்கிறோம். 21:105
"இறைவன் வழங்கிய நான்கு வேதங்களிலும் இஸ்லாம் வளர்ச்சியடையும் அதற்குக் காரணமாக இருக்கிற நன்மக்களுக்கு பூமி முழுவதையும் வழங்குவேன்" என அல்லாஹ் வாக்களித்து இருப்பதால் மக்கள் இஸ்லாத்தின் பால் சாரை சாரையாக வருகிறார்கள்.
2. இயற்கையோடு ஒத்துப்போகும் எளிய மார்க்கம் இஸ்லாம்.
இஸ்லாத்தின் ஒழுக்கங்கள் அதன் விழுமியங்கள் வாழ்வியல் வழிகாட்டுதல்கள் ஆகிய ஒவ்வொன்றையும் காண்கிற எவரும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட மதம் அல்ல! ஒரே இறைவனால் வடிவமைக்கப்பட்ட மார்க்கம் என விளங்கிக் கொள்வர்.
3. ஏற்கனவே வாழ்ந்த முஸ்லிம்கள் உலக பற்றற்ற நிலையில் வாழ்ந்தது, இஸ்லாம் மார்க்கத்தில் இருப்பதைப் பெருமையாக கருதாமல் இருந்தது, எந்த சூழ்நிலையிலும் பிற மதங்களை கண்ணியக் குறைவாக நடத்தாமல் இருந்தது ஆகியனவும் இன்று இஸ்லாமிய வளர்ச்சிக்குக் காரணமாகும்.
4. இஸ்லாத்தைப் பரப்புவதற்கு என்று பிரச்சாரகர்கள் தனியாக யாரும் இல்லை. ஏனென்றால் பிரச்சாரத்தின் வாயிலாகத்தான் இஸ்லாம் பரவுகிறது என்று பலரும் நினைத்து வைத்திருக்கிறார்கள்.
இஸ்லாத்தைப் பொருத்தமட்டில் இஸ்லாமியர்கள் அனைவருமே பிரச்சாரகர்கள் தாம்!
5. இஸ்லாம் ஓர் எளிமையான மார்க்கம். இஸ்லாத்தில் புரிந்து கொள்ள முடியாத கருத்துக்கள் என்பது அறவே இல்லை! எனவே இஸ்லாம் அனைத்து மக்களிடமும் எளிதாக சென்றடைந்து விட்டது.
6. இஸ்லாத்தின் கோட்பாடுகள் புரிவதற்கு மட்டும் எளிமையானது அல்ல! அவற்றைப் பின்பற்றுவதற்கும் எளிமையானது தான்!
துரவரம், நெருப்பில் நடக்குதல், அழகு குத்துதல் போன்ற தன்னை வருத்திக் கொள்ளும்படியான எந்த அம்சமும் இஸ்லாத்தில் இல்லை. அதனால் இஸ்லாம் அனைவரையும் சென்றடைகிறது.
அன்றாட வாழ்வில் மனிதனால் எதை பின்பற்றி நடக்க முடியுமோ அதை மட்டுமே இஸ்லாம் வகுத்துக் கொடுத்திருக்கிறது.
7. இஸ்லாத்திலும் இஸ்லாமியர்களிடத்திலும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்தவர்களிடத்திலும் சகிப்புத்தன்மை மிகுந்து காணப்பட்டது.
அதனால் தான் எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகளை முஸ்லிம்கள் ஆட்சி செய்தாலும் கிறிஸ்தவர்கள் நிம்மதியாகவும் எல்லா வகை கிறிஸ்தவர்களும் அவரவர் கோட்பாட்டின் அடிப்படையில் சுதந்திரமாகும் செயல்பட முடிகிறது .
அவரவர், அவரவர் மதத்தைப் பின்பற்றி வாழ்வதற்கு இஸ்லாமிய அரசர்கள் முழு சுதந்திரம் வழங்கியிருப்பதாலே இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு அதிகமாணவர்கள் இஸ்லாத்தில் நுழைகிறார்கள்.
ஏன் இந்தியாவிலும் கூட 800 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்தார்கள். இப்பொழுதும் இந்தியாவில் ஹிந்துக்கள் தான் பெருவாரியாக இருக்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையும் பெருந்தன்மையும் தான்!
8. இஸ்லாம் ஓர் விடுதலை மார்க்கம். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மதத்தினர் சிறுமைப்படுத்தப்பட்டும், ஒடுக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் இருந்த வேளையில் அவர்களுக்கு அவற்றிலிருந்து விடுதலையை தந்த மார்க்கம் இஸ்லாம். அவர்கள் இஸ்லாத்தில் இணைந்து விட்டதால் நிம்மதியாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாம் ஒரு வகையில் பரவியது.
இந்தியாவில் விடுதலையைத் தேடி இஸ்லாத்தில் இணைந்தவர்கள் 20% பேர் என விவேகானந்தர் கூறுகிறார்.
"ஒடுக்கப்பட்ட இந்து சமுதாய மக்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டு இருந்தது; வெளித்தோற்றத்தில் கூட அவர்களுக்கு சமத்துவம் வழங்கப்படவில்லை; இஸ்லாத்தின் சகோதரத்துவ கோட்பாடு அவர்களுக்கு கவர்ச்சியாக அமைந்ததால் அவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் இணைந்தார்கள்" என The Discovery of India எனும் நூலில் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் கூறுகிறார்கள்.
"இங்கிலாந்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் நேர்மையைப் பார்த்து, அதனால் கவரப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள்" என Thomas Walker Arnold அவர்கள் தனது நூலில் கூறுகிறார்கள்.
அரபு நாடுகளில் ரோமானிய, பாரசீக, பைசாந்திய பேரரசு களின் கொடுமைகளுக்கு எதிராக இஸ்லாம் அவர்களிடையே பரவியதாக வரலாறு சொல்கிறது.
இந்தியா மற்றும் உலக நாடுகளில் இஸ்லாம் அரசர்களால் பரப்பப்படவில்லை; சூஃபிகளாலும் வியாபாரிகளாலுமே இஸ்லாம் பரவியதாக வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.
10. இன்று பொதுவாகவே ஐரோப்பியர்களில் பலர், தாம் இருந்த மதத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, தம் பெற்றோரின் கடவுளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் மன அழுத்தத்தில் நீடித்திருக்கிறார்கள்.எதிலும் பற்று இல்லாத மனநிலையை அடைந்திருக்கிறார்கள். தன் தனிப்பட்ட வாழ்வில் பிடிப்பு இல்லாமலும், கவனம் இல்லாமலும், மன வெறுமையோடும் இருக்கிறார்கள். (இந்த மனநிலையை விவரிக்க ஒற்றை சொல் இருந்தால் சொல்லுங்கள்.)
இப்படிப்பட்டவர்களின் தேடலில் கவனம் பெற்றது இஸ்லாம் மார்க்கம். அதனால் இஸ்லாத்தில் இணைகிறார்கள்.
உலகத்தில் எத்தனை கடவுள்கள் உள்ளனர்? :
===================================
இந்து மதத்தினர் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற சொற்தொடரை பயன்படுத்துவார்கள். அதை நீங்கள் செவியேற்று இருக்கலாம். 33 கோடி தெய்வங்கள் இருப்பதாக இந்தச் சொல் கூறுகிறது.
கோடி எனும் சொல்லுக்கு வகை என்றும் கடைசி என்றும் பொருள் உண்டு. அந்த வகையில் இந்து மதத்தில் 33 வகை கடவுளர் அல்லது 33 கடவுளர் மட்டுமே உள்ளனர் என்றும் சிலர் விளக்கம் கூறுகிறார்கள்.
"இந்து மக்கள், வணங்காதவற்றை வரிசைப்படுத்தி விடலாம்; வணங்குகிறவற்றை வரையறுக்க இயலாது" என்று சொல்லுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் வணங்கும் தெய்வங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நாடு வாரியாக, மொழி வாரியாக, சாதி வாரியாக, இனம் வாரியாக, குடும்பம் வாரியாக இந்தியாவில் தனித்தனியாக கடவுளர் இருக்கின்றார்கள்.
இதுபோல் உலகம் முழுவதும் இனம், மொழி, சாதி, குடும்பம் வாரியாக பல கடவுள்கள் இருக்கின்றனர்.
உலகத்தில் 4200 மதங்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றது.
இந்தியாவில் முக்கிய சாதிகளாக 3,000 சாதிகளும், துணை சாதிகளாக 25,000 சாதிகளும் இருக்கின்றது.
எனவே சாதிக்கு ஒரு கடவுள், மதத்திற்கு ஒரு கடவுள் என வைத்துக் கொண்டாலும் பல்லாயிரக் கணக்கான கடவுளர்கள் உலகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் கடவுள் கொள்கை அறிவுப்பூர்வமானது. உலகில் எந்தப் பகுதியில் வாழும் முஸ்லிமுக்கும் இறைவன் ஒருவன் தான். அவன் பெயர் 'அல்லாஹ்' தான்
ஆதி கால தமிழ் கலாச்சாரம் கூட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சொல்லி வந்தது.
மனிதன் தேசம், மொழி, சாதி என பிரித்ததாலும், பிரிந்ததாலும் பல கடவுள்கள் தோன்றினர்.
காற்று, மழை, சூரியன், சந்திரன், நிலம், ஆகாயம், வானம் ஆகிய அனைத்தும் ஒன்றுதான்! அனைவருக்கும் ஒன்றுதான்! ஆனால் கடவுள் மட்டும் ஏன் இத்தனை?
ஒரு மனிதனுக்கு கீழ் பணியாற்றுகிறவன் நிம்மதியாக பணியாற்றுவான். பல முதலாளிகளுக்கு கீழ் ஒருவன் பணியாற்றும்போது நிம்மதி இழந்து காணப்படுவான்.
அது போல தான் ஒரு கடவுளை மட்டும் வணங்குகிறவனின் நிலையும் பல கடவுளரை வணங்குகிறவனின் நிலையும்.
மொழி கலப்பு திருமணம் செய்கிற தம்பதியரின் பிள்ளைகள் எந்த கடவுளை வணங்குவர்?
புலம் பெயர்ந்து பிழைப்பு நடத்தும் தொழிலாளி எந்த கடவுளை வணங்குவான்?
ஒவ்வொரு மனிதனும் தனக்கு இரண்டு அப்பாக்கள் இருப்பதை யாரும் விரும்புவதில்லை? அதைக் கேவலமாக கருதுகிறான். ஆனால் கடவுள் விஷயத்தில் மட்டும் அறிவீனமான வார்த்தைகளை உதிர்க்கிறான்.
எனவே இஸ்லாத்தின் பலமே ஒரே இறைவன் என்பதுதான்! இந்த கருத்தில் உள்ள உண்மைகளை உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும், ஆய்தறிந்து அறிந்த பிறகு தான் மக்கள் இஸ்லாத்தின் பால் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
இரட்டைக் கோபுரமும் இஸ்லாமியர்களின் பெருக்கமும் :
====================================
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட செப்டம்பர் 11. 2001 காலகட்டத்திற்கு பிறகு இஸ்லாம் மார்க்கம் உலகில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களாலும் பகிரங்கமாக எதிர்க்கப்பட்டது.
அந்த எதிர்ப்பை கண்கூடாகக் கண்ட இஸ்லாமிய ஆர்வலர்கள் இஸ்லாம் மார்க்கம் அழிவை நோக்கி செல்கிறதோ என்று எண்ணவும் தொடங்கினர்.
ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இஸ்லாம் மிகப் பெரிய அளவில் அசுர வளர்ச்சியை அடைந்திருப்பதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
1.8 பில்லியன் மக்கள் அதாவது உலக அளவில் உள்ள முஸ்லிம் மக்களின் மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் ஆண்டுதோறும் இஸ்லாத்தில் இணைந்து வருகிறார்கள் என்கிற புள்ளிவிபரத்தை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எதிர்வரும் முப்பது வருடங்களுக்குள் அதாவது 2050 க்குள் உலக முஸ்லிம் மக்கள் தொகையும் கிறிஸ்துவ மக்கள் தொகையும் சம அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்த்ததை விட , கணிப்புகளை விட இஸ்லாத்தின் வளர்ச்சி ஓர் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என நியூ ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் - New England Adolescent Research Institute (NEARI) அறிஞர்கள் கூறுகிறார்கள் .
2060 களில் உலகம் முழுவதும் 70% மனிதர்கள் இஸ்லாமியர்களாக இருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசியா, இந்தோனேசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா, வட ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் வேறு சில பகுதிகளில் இஸ்லாம் மேலாதிக்க மார்க்கமாக உள்ளது. மேலும் ஆசியா-பசிபிக் பகுதியில் அதிக முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது.
முஸ்லிம்களின் மக்கள் தொகை ஏன் அதிகரிக்கிறது என்கிற கேள்விக்கு The Guardian எனும் பிரிட்டிஷ் பத்திரிக்கையில் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒர் ஆய்வறிக்கை.
முஸ்லிம்களிடம் குழந்தைகள் பிறப்பு விகிதம் எப்பொழுதும் போல் சம அளவில் இருக்கின்றது. அதனால் அவர்களிடம் இளைஞர்களும் இளைஞிகளும் நிறைந்துக் காணப்படுகின்றார்கள்.
இவர்கள் படிப்பதற்காகவும் வேலைகளுக்காகவும் சொந்த ஊர், நாடு மற்றும் நகரங்களை விட்டுச் சாதாரணமாக இடம் பெயர்ந்துச் செல்கிறார்கள்.
சென்ற இடங்களில் இவர்களின் வாழ்க்கை முறையே இஸ்லாமிய பிரச்சாரமாக அமைகிறது. பிறகு அவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாத்தில் இணைகிறவர்களுக்கு அழைப்பு மையங்களை தனியாகக் கட்டி அதன் வழியாக சேவைகளை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளுக்கு முஸ்லிம்கள் கல்வியை கற்கச் சென்றார்கள். முஸ்லிம்களிடம் ஐரோப்பியர்கள் ஒழுக்கம், கூட்டுக் குடும்பம் போன்ற விலைமதிப்பற்ற வாழ்வியல் முறையை கற்றுக் கொண்டார்கள்.
அனைவரிடமும் இன்டர்நெட் வசதி இருந்த நேரத்தில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு உலக அரசாங்கங்கள் இஸ்லாத்தைக் குறித்துத் தவறாக செய்திகளை பரப்பியது. அது உண்மையா என அறிந்து கொள்ள ஆய்வு செய்த பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.
ஒரே நேரத்தில் உலகின் பல பாகங்களில் பலர் இஸ்லாத்தில் இணைந்ததால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
யூதர்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் இஸ்லாமியர்களை அழித்துவிட வேண்டும், இஸ்லாமிய நாடுகளை பிளவு படுத்தி பலவீனமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது போல் நாடுகள் பலவீனமடைந்தது; முஸ்லிம்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் அழிந்தார்கள்; ஆனால் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும், அகதிகளாகவும் குடி பெயர்ந்தார்கள். அதனாலேயே ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இந்த அதிகரிப்பு அவர்களின் ஆட்சியை ஆட்டம் காணச் செய்கிற அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுவே உனக்கும் நடக்கும் என்று பழமொழி சொல்வது போல் அவர்களின் நிலை உருவாகியுள்ளது.
ஃபிரான்ஸ் வளர்ச்சி
அடைய காரணம் இஸ்லாம்:
===========================
1801 ஆம் ஆண்டு எகிப்தில் இருந்து போரை முடித்துக் கொண்டு நெப்போலியன் போனாபர்ட் தனது நாட்டிற்கு திரும்பிய போது
شرح الدردير على متن خليل للإمام مالك رحمه الله
ஷரஹு அத்தர்தீர் அலா மதனி கலீலி லி இமாம் மலிக் ரஹிமஹுல்லாஹ் எனும் நூலை எடுத்து வந்தார்.
அதில் இஸ்லாமிய நீதித்துறை சார்ந்த அனைத்து சிவில் சட்டங்களும் மிகத் தெளிவாக எழுதப்பட்டு இருந்தது.
இந்த நூலை அடிப்படையாக வைத்து தனது நாட்டிற்குத் தேவையான நீதித்துறை சட்டங்களை நெப்போலியன் வகுத்தார். பிற்காலத்தில் இந்த நூல் 'Quotes of Napoleon - நெப்போலியன் கோர்ட்' என புகழ்பெற்றது.
நெப்போலியன் கோர்ட் எனும் நூலையும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் எழுதிய நூலையும் ஒப்பாய்வு செய்த அப்துல்லாஹ் அலி ஹுசைன் என்பவர் இந்தக் கருத்தைக் கூறுகிறார்.
ஆதார நூல் :
العقيدة الإسلامية في مواجهة التنصير، عبد الجليل إبراهيم حماد الفهداوي، صفحة 357.
உலக நாடுகளில்
எத்தனை மஸ்ஜிதுகள் உள்ளது? :
===============================
உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகமான மஸ்ஜித்கள் இருக்கின்றது.
முஸ்லிம்களே இல்லை என்று சொல்லப்பட்ட பல நாடுகளில் இன்று முஸ்லிம்களும் பள்ளிவாசல்களும் பெருகி இருக்கின்றன.
சீன அரசாங்கம் ஆயிரக்கணக்கான மஸ்ஜித்களை இடித்தது. ஆனால் சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது வெய்சூ பிராந்தியத்தில் மட்டும் 2400/ மஸ்ஜிகள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
ஃபிரான்ஸில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 20 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று 2260 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் உருவாகியுள்ளன.
ஜெர்மனியில் 1999 இல் 40 பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று 4000 மஸ்ஜித்கள் பெருகியுள்ளன.
இங்கிலாந்தில் 1890 இல் ஒரு பள்ளிவாசல் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று இங்கிலாந்து முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் உருவாகி இருக்கின்றது.
இதுபோன்று பெல்ஜியம், இத்தாலி, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் மஸ்ஜிதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
நேபாளத்தில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாக நேபாள் இஸ்லாமிக் சொஸைட்டியில் உள்ள குர்ஷித் ஆலம் என்பவர் குறிப்பிடுகிறார்.
"ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன" என்று பிரபல அமெரிக்கச் செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது. 2024 ஏப்ரல் மாதம் வரை 3000/ திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் இருப்பதாக ஒர் ஆய்வு கூறுகின்றது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் பல கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் மஸ்ஜித்களாக மாற்றப்பட்ட பல நூறு நிகழ்வுகள் அமெரிக்காவில் அரங்கேரி உள்ளது.
அமெரிக்காவில் வாஷ்வேகாஸ் நகரத்தை சூதாட்ட நகரம் என்று சொல்வார்கள். அங்கும் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் தொழுகையின் போது மக்கள் வெள்ளம் நிரம்புவதால் சாலைகளில் தொழும் காட்சிகளை சர்வசாதாரணமாகக் காணலாம்.
ஒருப்படி அரிசியில் ஆறு பேர் சாப்பிடலாம் என்றும், 60 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் பயணித்தால் எத்தனை மணி நேரத்தில் ஒரு ஊருக்கு சென்று விடலாம் என்றும் நாம் கணிப்பது போல,
பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை வைத்து அந்த நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள்.
மேலும் இஸ்லாம் அறிவார்ந்த மார்க்கம், அதன் கொள்கைகள், நபிகள் நாயகத்தின் வாழ்வியல் வழிகாட்டுதல்கள், நபி தோழர்களின் அறிவுரைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல் அனைத்தும் இன்று வாழும் முஸ்லிம்களுக்கு அறிவார்ந்த அழகிய முன்மாதிரியாகும்.
இஸ்லாம் அறிவார்ந்த மார்க்கம் என்பதற்கு ஒரு நபித்தோழரின் அறிவை உங்களுக்கு ஆதாரமாக முன் வைக்கின்றேன். இப்படித்தான் அன்று முதல் இன்று வரை இஸ்லாமியர்கள் அன்றாட வாழ்வில் தெளிவாக இருக்கிறார்கள்.
அந்தத் தெளிவை கண்டு தான் இன்றும் அநேகர் இஸ்லாத்தில் இணைகிறார்கள்.
ஒரு கேள்விக்கு பத்து பதில்கள்; அனைத்து பதில்களும் மிகச் சரியானதே! அது எப்படி?
=============================
நான் கல்வியின் பட்டணம் அலீ (ரலி) அவர்கள் அதன் தலை வாசல்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை செவியேற்ற கவாரிஜ் எனும் கூட்டத்தாருக்கு அலீ (ரலி) அவர்கள் மீது பொறாமை ஏற்பட்டது.
கவரிஜ் கூட்டத்தாரில் உள்ள பத்து அறிஞர்கள் ஒன்றுகூடி, "நாம் பத்துப் பேரும் அலீ (ரலி) அவர்களிடம் சென்று ஒரே கேள்வியை தனித்தனியாக கேட்போம். அந்த கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்கின்றார் என்பதைப் பொறுத்து அவரின் அறிவின் ஆழத்தை புரிந்து கொள்வோம்; மேலும் அவர் ஒரே கேள்விக்கு வெவ்வேறு சரியான பதில்களை கூறுவாரானால் அவர் உண்மையிலேயே அறிவின் தலைவாயில் என்ற கூற்றுக்கு பொருத்தமானவர் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்" என முடிவெடுத்தனர்.
அப்போது அவர்களில் ஒருவர் அலீ (ரலி) அவர்களிடம் சென்று, "கல்வி சிறந்ததா? செல்வம் சிறந்ததா?" என்று கேட்டார்.
அலீ (ரலி) அவர்கள், "செல்வத்தைவிட கல்வியே சிறந்தது" என்று பதில் கூறினார்கள்.
அதற்கு என்ன ஆதாரம் என்று மீண்டும் அவர் கேட்டதும் அலீ (ரலி) அவர்கள் "கல்வி என்பது நபிமார்களின் அனந்தரச் சொத்து ; செல்வம் என்பது காரூன், ஷத்தாத், ஃபிர்அவ்ன் போன்ற கொடியவர்களின் சொத்து" என்று கூறினார்கள். இந்த பதிலைக் கேட்டவுடன் அவர் போய்விட்டார்.
2. இரண்டாமவர் இதே கேள்வியை கேட்டதும், அலீ (ரலி) அவர்கள் "கல்விதான் சிறந்தது; ஏனென்றால் கல்வி உன்னை பாதுகாக்கும்; ஆனால் செல்வத்தை நீ பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார்கள்.
3. மூன்றாமவர் இதே கேள்வியை கேட்டதும், அலீ (ரலி) அவர்கள் "கல்விதான் சிறந்தது; ஏனென்றால் செல்வம் இருப்பவனுக்கு அதிகமான விரோதிகள் இருப்பார்கள்; ஆனால் கல்வி உள்ளவனுக்கு அதிகமான நண்பர்கள் தான் இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
4. நான்காமவர் இதே கேள்வியை கேட்டதும் அலீ (ரலி) அவர்கள், "கல்விதான் சிறந்தது; ஏனென்றால் செல்வத்தைச் செலவு செய்தால் குறைந்து விடும்; ஆனால் கல்வியை செலவு செய்தால் மென்மேலும் பெருகும்" என்று கூறினார்கள்.
5. ஐந்தாமவர் இதே கேள்வியை கேட்டதும் அலீ (ரலி) அவர்கள், "கல்விதான் சிறந்தது; ஏனென்றால் பொருள் உடையவனை கஞ்சன் என்று வர்ணிக்கப்படும்; ஆனால் கல்வி உடையவனை கண்ணியமானவன் என கௌரவிக்கப்படும்" என்று கூறினார்கள்.
6. ஆறாமவர் இதே கேள்வியை கேட்டதும் அலீ (ரலி) அவர்கள், "கல்விதான் சிறந்தது; ஏனென்றால் செல்வத்தைத் திருட முடியும்; ஆனால் கல்வியை திருட முடியாது" என்று கூறினார்கள்.
7. ஏழாமவர் இதே கேள்வியை கேட்டதும் அலீ (ரலி) அவர்கள், "கல்விதான் சிறந்தது; ஏனென்றால் செல்வந்தர்கள் மறுமை நாளில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள் ; ஆனால் கல்வியாளர்கள் மற்றவர்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள்" என்று கூறினார்கள்.
8. எட்டாமவர் இதே கேள்வியை கேட்டதும் அலீ (ரலி) அவர்கள், "கல்விதான் சிறந்தது; ஏனென்றால் பத்து வருடங்களுக்கு முன்பு உள்ள பணம் பத்து வருடங்களுக்கு பின்னால் செல்லாமல் போய்விடும்; ஆனால் கல்வி எவ்வளவு காலமானாலும் செல்லுபடியாகும்" என்று கூறினார்கள்.
9. ஒன்பதாமவர் இதே கேள்வியை கேட்டதும் அலீ (ரலி) அவர்கள், "கல்விதான் சிறந்தது; ஏனென்றால் செல்வம் இதயத்தை கல்லாக்கும்; இருள் படிய செய்யும் ; ஆனால் கல்வி இதயத்தை ஒளிரச் செய்யும்" என்று கூறினார்கள்.
10. பத்தாமவர் இதே கேள்வியை கேட்டதும் அலீ (ரலி) அவர்கள், "கல்விதான் சிறந்தது; ஏனென்றால் ஒரு செல்வந்தன் தன்னிடம் செல்வம் அதிகமாக இருப்பதின் காரணமாக தன்னை கடவுள் என்றும் சொல்ல துணிந்து விடுவான்; ஆனால் ஒரு கல்வியாளன் தன்னை இறை அடிமை என்று சொல்வதில் தான் ஆனந்தம் அடைவான்" என்று கூறினார்கள்.
"என் ஆயுள் உள்ளவரை இதே கேள்வியை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தாலும் நான் புதுப்புது பதில்களை சொல்லிக் கொண்டே இருப்பேன்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட பத்து நபர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
நூல் : அல் மவாயிழுல் உஸ்ஃபூரியா
இஸ்லாத்தின் அசுர வளர்ச்சிக்கு இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றது. அவற்றை தனி ஒரு ஆய்வு நூலாகவே எழுதலாம். அப்படி எழுதப்பட்டால் அந்த நூலையே தஃவா - அழைப்பு பணி செய்ய ஆதார நூலாக வைத்துக் கொள்ளலாம். இளம் ஆலிம்களும் பொதுமக்களில் உள்ள ஆர்வலர்களும் முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு என்னால் இயன்றவரை உதவிகளையும் செய்கின்றேன். என்னை தொடர்பு கொள்ளுங்கள். 84282 79249
பதிவேற்ற நாள் : 1/11/2025
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண்:- 4
விளக்கின் ஒளி
நபிமார்கள் வழி
======================
இறைவன், மனித இனத்தை, தன்னை வணங்குவதற்காகவே படைத்திருக்கின்றான். அந்த நோக்கத்திலிருந்து மனிதர்கள் திசை மாறி சென்று விடக்கூடாது என்பதற்காகவே நபிமார்களையும், வேதங்களையும் அல்லாஹ் வழங்கினான்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களிடம் குற்றங்கள் பெருகும் போது அல்லாஹ் புதிது புதிதாக நபிமார்களை அனுப்பி வைத்துக் கொண்டே இருந்தான்.
மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களில் இருந்தே ஒரு தூதுவரை இறைவன் தேர்வு செய்து அனுப்பி வைத்தான்.
மனிதன் நாகரிகமாகவும், பிறருக்கு அடிமையாகவும் இல்லாமல் சுதந்திரமாக வாழவும், சக்தி வாய்ந்த ஒரே இறைவனை முறையாக வணங்கவும் வழி காட்டவே நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள்.
ஒரு சமயம் இறைவனால் நபிமார்கள் அனுப்பப்படாமல் போயிருந்தால் இன்று மனித நாகரீகம் எப்படி இருந்திருக்கும்?
மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் சுயமாக வாழத் தேவையான அனைத்து அறிவுகளையும் அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.
ஆனால் மனிதனுக்கு ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவை வழங்கியதால் அவன் ஒன்றைப் பார்த்து அல்லது ஒருவரின் அறிவுரையை கேட்டுதான் ஒன்றை விளங்குவான். அதனால் அவனுக்கு சரியான சிறிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு விட்டால் அவன் சிறப்பாக வாழ்வான் என்பதை அறிந்திருந்த அல்லாஹ் அந்த வழிகாட்டுதலை வழங்குவதற்காக நபிமார்களை அனுப்பினான்.
நபிமார்களின் சேவை
சமூகத்திற்குத் தேவையா?
=====================================
உலகத்தில் மதம் மற்றும் மார்க்கம் என்பது ஒன்றுதான். அதை வலுப்படுத்தவும், அதில் மக்களை நெறிப்படுத்தவும் அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள்.
ஒருவர் ஒரு பொருளைத் தயார் செய்து வைத்து இருக்கின்றார். அதை விற்பனை செய்ய Dealers - விற்பனை முகவர்களை அழைத்துத் தன் பொருளின் தரம் மற்றும் அதன் ஏற்றத்தாழ்வுகள் குறித்துச் சொல்லிக் கொடுக்கின்றார்.
பின்னர் அந்த முகவர்கள் பொதுமக்களிடம் சென்று பொருட்களின் தரம் மற்றும் அதன் ஏற்றத்தாழ்வுகள் குறித்து சொல்லி அதை வாங்கும்படி செய்வார்.
அதுபோலத்தான் அல்லாஹ் இந்த உலகத்தைப் படைத்து உலகத்தில் உள்ளவற்றை பயன்படுத்தும் வரைமுறைகளை நபிமார்களிடம் எடுத்துச் சொன்னான்.
நபிமார்கள் மக்களிடம் சென்று " இந்த உலகத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நீங்கள் தொழ வேண்டும், நோன்பு நோற்க வேண்டும், பொய் பேசக்கூடாது, பொய் சத்தியங்கள் செய்யக்கூடாது" என்பது போன்ற வரையறைகளை பொது மக்களிடம் பிரகடனப்படுத்தினார்கள்.
அதாவது அல்லாஹ்விற்கும் பொது மக்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் ஓர் மத்தியஸ்தர்கலாக நபிமார்கள் இருக்கிறார்கள்.
பூமியை தவறாக பயன்படுத்தினால் என்ன நிலை ஏற்படும்? தொழுகவில்லை என்றால் என்ன ஏற்படும்? சில வகைத் தாவரங்களை பயன்படுத்தினால் என்னப் பிரச்சனை உண்டாகும் ? என்பதை அல்லாஹ்விடமிருந்து கேட்டு மக்களிடம் சொல்லும் manager's - முக்கியஸ்தர்களாக இருந்தார்கள்.
தீர்க்கதரிசிகள் அனைவரும் முஸ்லிம்களே!
======================================
{إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الإِسْلاَمُ}
மார்க்கம் என்பது அல்லாஹ்விடத்தில் இஸ்லாம் மட்டுமே மார்க்கமாகும். 3:19
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِيناً فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவர் (எதைக்) கருதினாலும், அவரிடமிருந்து அது ஏற்கப்படாது; அவர் மறு உலகத்தில் இழப்பை சந்தித்தவர்களில் இருப்பார். 3:95
இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருந்திருக்கிறார்கள் என திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகின்றது.
وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ } [يونس :72].
"அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிமாக ஆகி விடுமாறு நான் கட்டளை இடப்பட்டு இருக்கின்றேன்" என நூஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்.
{إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ *} [البقرة :131]
அவரைப் படைத்தாள்பவன் அவரிடம், "(முற்றிலும் கட்டுப்பட்டு) முஸ்லிமாகிவிடு" என்று கூறிய போது, "அகிலத்தாரைப் படைத்தாள்பவனுக்கு நான் முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிமாக ஆகிவிட்டேன்" என்று இப்ராஹிம் (அலை) அவர்கள் கூறினார்கள்.
يا قَوْمِ إِنْ كُنْتُمْ آمَنْتُمْ بِاللَّهِ فَعَلَيْهِ تَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُسْلِمِين [يونس :84]
"எனது சமுதாயத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் அவனிடமே பொறுப்பு சாட்டுவீர்களாக! நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால் (அவனிடமே பொறுப்பு சாட்டுவீர்களாக)" என்று மூஸா (அலை அவர்கள் சொல்லி நானும் முஸ்லிம்தான் என) கூறினார்கள். 10 : 84
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَانَ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ [النمل :44]
"சுலைமானுடன் சேர்ந்து அகிலத்தாரைப் படைத்தாள்பவனாகிய அல்லாஹ்வுக்காக இஸ்லாம் ஆகிவிட்டேன்" என்று பில்கீஸ் அம்மையார் கூறினார். 27:44
وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا واشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ } [المائدة :111]
நான் ஹவாரிய்யீன் (என்ற பிரிவினர்) களிடம் "என்னையும் (இந்த) என் தூதரையும் கொண்டு நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினேன்; "நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்களாகவே இருக்கின்றோம் என்பதற்கு நீ சாட்சியாளனாக இருப்பாயாக!" என்று அவர்கள் நம்மிடம் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறு ஈஸா (அலை) அவர்கள் கூறினார்கள். 5: 111
{يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا} [المائدة :44].
(இறைவனுக்குக்) கீழ்ப்படிந்த (இஸ்லாமான) நபிமார்கள் அந்த வேதத்தைக் கொண்டு யூதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கினார்கள். 5: 44
மேற்கண்ட வசனங்களில் நபிமார்கள் அனைவரும் இஸ்லாம் எனும் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகின்றது.
ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை வணங்க வேண்டும்; கடவுள் என்கிற அந்தஸ்தில் மற்றொன்றை எவரும் ஏற்படுத்தி விடக்கூடாது; அண்டத்தின் அதிபதி; அனைத்து ஆற்றலும் உள்ளவன்; அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன்; அனைத்தையும் அறிந்தவனாகிய,
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ [النحل:36]
"அல்லாஹ்வை வணங்குங்கள்; அட்டகாசம் செய்யும் ஷைத்தான்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்வதற்காக ஒவ்வொரு சமுதாயத்திலும் ஓர் இறைத்தூதரை நாம் அனுப்பி வைத்தோம்; 16:36
என்கிற தகவலை பொதுமக்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அனுப்பப்பட்டவர்கள் தான் நபிமார்கள்.
களமாடிய கனவான்கள்:
===========================
மனிதர்களின் மனதை சரி செய்யவும், அதை அழகுப்படுத்தவும், அதை தூய்மைப்படுத்தவும், அதை அனைத்து வகையான தீங்கிலிருந்தும் விடுவித்து தீமைகளுக்கு எதிராக களமாட கற்பிக்கவும் அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள்.
மேலும் நேரானப் பாதையில் மக்களை வழிநடத்தவும், நிலையான நல்வழிகளில் நிலைத்திருக்கச் செய்யவும், போற்றுதலுக்குரிய நல்லொழுக்கங்களின் பக்கம் மக்களை ஓர் முகப்படுத்தவும், விரும்பத்தகாதச் செயல்களை செய்வதிலிருந்து பாதுகாக்கவும் அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள்.
هُوَ الَّذِي بَعَثَ فِي الأُمِّيِّينَ رَسُولاً مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلالٍ مُبِينٍ﴾ (الجمعة،
அவன் தான் கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு அவர்களில் ஒருவரை தூதராக அனுப்பினான்; அவன் வசனங்களை அவர்களுக்கு அவர் படித்துக் காட்டுகிறார்; அவர்களை மனத்தூய்மைப்படுத்துகிறார்; வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுத் தருகிறார்; இதற்கு முன்னர் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தார்கள் 62:2
மக்களை எச்சரிக்காமலும், அச்சுறுத்தாமலும், கண்டு கொள்ளாமலும் விட்டுவிட்டால், அவர்கள் அறியாமையிலும், மூட பழக்கவழக்கங்களுக்குள்ளும், குருட்டுத்தனமான செயல்களிலும், தவறான செயல்களுக்குள்ளும், தீய குணங்களுக்குள்ளும் தள்ளப்பட்டு துன்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்வார்கள்.
மேலும் மனிதர்களில் உள்ள வலிமையானவர்கள் பலவீனமானவர்களை சுரண்டி வாழ்வார்கள்.
நல்ல மனிதர்களை நல்ல மனிதர்கள் போர்வையில் வாழ்வோர் அவமானப்படுத்தியும், தாழ்த்தப்பட்டவர்கள் என சொல்லியும் ஒதுக்கி வைப்பார்கள்.
இது போன்ற நிலைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைக்கின்றான்;
أَيَحْسَبُ الْأِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدىً﴾ (القيامة: 36).
மனிதன் வீணாக விடப்படுவான் என்று அவன் நினைத்துக் கொண்டானா? 75:36
அதாவது மனிதன் படைக்கப்பட்டு அவனுக்கு தேவையான வாழ்வியல் வழிகாட்டுதல்கள் வழங்காமல் அல்லாஹ் விட்டுவிடுவானா? என அல்லாஹ் கேட்கின்றான்.
இல்லை; அவன் விடப்பட மாட்டான் என்பதே உண்மை!
அண்டத்தை ஆண்ட அன்பியாக்கள்
=====================================
நபிமார்கள் அண்டத்தின் உயிராகவும், அதன் ஒளி விளக்காகவும், அதன் போக்கை நிர்ணயிக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
அண்டத்திற்கு உயிர் இல்லாமல், ஒளி இல்லாமல் அது செயல்பட வழிகாட்டி இல்லாமல் எப்படி இயங்கும்? அதாவது நபிமார்கள் இல்லாமல் உலகம் எப்படி இயங்க முடியும்?
நபிமார்கள் எனும் சூரியன் பூமியில் உதிக்காத போது, பூமி சபிக்கப்பட்டதாகவும் இருளில் மூழ்கியதாகவுமே இருந்தது.
அதைப்போலவே நபிமார்களின் போதனை ஒரு அடியானின் உள்ளத்திற்கு சென்றடையாமல் போனால் அவன் ஆன்மாவும் வாழ்க்கையும் வீணாகிவிடும். அர்த்தமற்றதாகவும் ஆகிவிடும்.
أَوَمَنْ كَانَ مَيْتاً فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُوراً يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا﴾ (الأنعام، 122)
உயிரற்ற ஒருவனுக்கு நாம் (நபிமார்கள் மூலம்) உயிர் தந்தோம்; மேலும் அவனுக்கு, மக்கள் முன் நடந்து செல்ல ஒளியையும் தந்தோம்; (இந்நிலையில் உள்ள) அவன் வெளியேற முடியாத இருள்களில் சிக்கித் தவிப்பவனை போன்று ஆவானா? 6:122
நபிமார்களையும் நபிமார்களின் வழிகாட்டுதல்களையும் பெற்றவன் இருளிலிலா சிக்கித் தவிப்பான்? இல்லை; நேர்வழி பெறுவான்.
நபிமார்களை கண்ணியப்படுத்துங்கள்
=============================
அனைத்து நபிமார்களும் ஒரே இறைவனை வணங்கும்படிச் சொல்லி ஒரே பணியை செய்து வந்தார்கள்.
அதைப்போல் திருக்குர்ஆனும் 'அல்லாஹ் ஒருவனே' என்கிற தத்துவத்தை பல்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டுகிறது.
நபிமார்களின் வரலாற்றை அல்லாஹ் திருக்குர்ஆனில் மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டுவதின் மூலம், நம்மை அவர்களைப் போல் வாழுங்கள் எனவும், அவர்கள் காலத்தில் வாழ்ந்த தீயவர்களைப் போல் வாழாதீர்கள் எனவும் சொல்லவே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.
ஒருவரின் மனதில் உள்ளதை மற்றொருவர் புரிந்து கொள்ள இயலாது. அப்படித்தான் அல்லாஹ் தன் மனதில் உள்ளதை நபிமார்களிடம் சொல்லி அவர்கள் நம்மிடம் சொன்ன வாழ்வியல் தான் இஸ்லாம்!
இஸ்லாமிய வாழ்வியல் இறைவனின் இதயத்தில் உள்ள ஆசைகள்!
அளவிட முடியாத அளவிற்கு சேவைகளை ஆற்றிய நபிமார்களை கவிஞர், பொய்யர், சூனியக்காரர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றெல்லாம் சொல்லி கேவலப்படுத்தினார்கள்.
இதை அல்லாஹ் கூறுகின்றான்;
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ (41)
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்துக் கொண்டது. (21:41)
நபிமார்களை கேவலப்படுத்தியவர்கள், உதாசீனப்படுத்தியவர்கள், புறந்தள்ளியவர்கள் எவரும் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
நபிமார்களை ஈர்ப்போம்; அவர்களை கண்ணியப்படுத்த வேண்டிய அளவிற்கு கண்ணியப்படுத்துவோம்.
பதிவேற்ற நாள் 8/1/2025
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 3
உமராக்களின் அவைகளில் உலமாக்கள்
======================================
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M.Phil
இமாம் : மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால், சாந்தோம், சென்னை. தொடர்புக்கு : 84282 79249
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ - الفاطر
தன் அடியார்களின் அல்லாஹ்வை அஞ்சுவோர் ஆலிம்களே!... அல் ஃபாத்திர் 28
ஆலிம்கள் என்றால் யார்? என்ற வினாவை எடுத்துக்கொண்டு திருக்குர்ஆனில் பதிலைத் தேடினால் மேற்கண்ட வசனம் முதலில் கிடைக்கும்.
மக்களிடம் இதே கேள்வியை கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு வகையில் பதில் சொல்வார்கள்.
1. மார்க்கம் படித்தவர்கள் ஆலிம்கள். 2. வெள்ளை சட்டை, வெள்ளைக் கைலி, தாடி, தொப்பி அணிந்த நிலையில் பள்ளிவாசலில் ஐந்து வேளை தொழ வைப்பவர்கள் ஆலிம்கள்.
3. ஏதேனும் ஒரு அரபி மதரஸாவில் ஏழு வருடம் ஓதி, திருக்குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவர்கள் ஆலிம்கள்.
யார் ஆலிம் - 1 ?
=================
ஆலிம் என்பவர் யார் என்ற கேள்வியை முற்காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்களில் ஒருவரான ஷவ்கானீ (ரஹ்) அவர்களிடம் கேட்டால் அவர்கள் இப்படி கூறுகிறார்கள்.
ஆலிமாக இருப்பவர் ஐந்து விஷயங்களை தெரிந்திருக்க வேண்டும்.
1. குர்ஆன், மற்றும் ஹதீஸ் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் குர்ஆன் வசனம் ஓதப்பட்டால் அதன் பொருளையும் விளக்கங்களையும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஹதீஸை சொல்லப்பட்டால் அது எந்த நூலில் வருகிறது என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும்.
2. அடிப்படையான மார்க்க விஷயங்களையும், இஜ்மா - ஒருமித்த கருத்துடைய மார்க்கச் சட்டங்கள் அனைத்தையும் அவர் அறிந்திருக்க வேண்டும்.
3. அரபு மொழியை வாசிக்கவும் எழுதவும் தெரிந்து இருப்பதோடு, அதனை வாசிக்கும் போதே அதன் கருத்துகளை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அரபு மொழியை பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அரபு மொழியின் இலக்கண இலக்கியங்களை முறையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
4. உஸூலுல் ஃபிக்ஹு, கியாஸ் இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை சட்டங்கள் எடுக்கும் முறையை சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். உஸூலுல் ஃபிக்ஹு - இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை சட்டங்களை பிரித்து எடுக்கும் முறையை சரியாகத் தெரிந்த ஒருவரால் மட்டுமே சமூகத்தை வழிநடத்த முடியும்.
5. நாசிக், மன்சூக் الناسخ والمنسوخ
திருக்குர்ஆனில் அல்லாஹ் ஒரு வசனத்தில் ஒரு சட்டத்தை வழங்கி பிறகு வேறு ஒரு வசனத்தை அருளி முன்பு வழங்கிய சட்டத்தை நீக்கி இருத்தல் என்பது நாசிக், மன்சூக் ஆகிய வார்த்தைகளின் பொருள்.
எனவே முதன் முதலில் அருளப்பட்ட சட்ட வசனம் எது? அந்த சட்ட வசனங்களை மாற்றிய வசனங்கள் எது? அந்த வசனங்கள் இப்பொழுது திருக்குர்ஆனில் இருக்கின்றதா? என்பது குறித்தெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
நூல் : இர்ஷாத் அல் ஃபுஹூல்
யார் ஆலிம்? - 2
==================
யார் ஆலிம் என்ற கேள்விக்கு ஷைஹ் முஹம்மத் பின் உஸைமைன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1. இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைச் சட்டங்களை உள்ளடக்கிய திருக்குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும்.
2. எது ஸஹீஹான ஹதீஸ்? எது பலவீனமான ஹதீஸ்? மற்றும் ஹதீஸின் ஸனது குறித்த தெளிவும், அந்த ஸனதில் உள்ள மனிதர்கள் குறித்தத் தெளிவும் இருக்க வேண்டும். மொத்தத்தில் உஸூலுல் ஹதீஸ் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
3. நாசிக், மன்சூக் குறித்து அறிந்திருப்பதோடு, இஜ்மா - அனைத்து சட்டத்துறை அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள பொதுவான மார்க்க சட்டங்கள் இன்னது என தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
மன்சூக் - அல்லாஹ் மற்றும் ரசூலினால் மாற்றப்பட்டுவிட்ட சட்டத்தை, மாற்றப்பட்டுவிட்டது என்று தெரியாமல் கருத்து சொல்லக்கூடாது. அதைப்போல் இஜ்மா - அனைத்து இமாம்களும் ஏற்றுக் கொண்டுள்ள பொதுவான சட்டத்திற்கு மாற்றமாகவும் கருத்து சொல்லக்கூடாது. இதை அவர் அறிந்திருக்க வேண்டும்.
4. கருத்து வேறுபாடுகள் உள்ள மார்க்கச் சட்டங்கள் எவை எவை என்பது குறித்து அவர் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். கருத்து வேறுபாடு உள்ள மார்க்கச் சட்டங்களில் மிகச்சரியான கருத்தை சொல்லும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. லுஙத் - அரபு மொழிச் சார்ந்த முழுமையான அறிவும், உஸூலுல் ஃபிக்ஹு - குர்ஆன் ஹதீஸிலிருந்து மார்க்கச் சட்டத்தை பிரித்து எடுக்கும் அறிவும், அல்ஃபால் - ( ஆம், காஸ், முத்லக், முகையத், முஜ்மல் , முபையன் ) போன்றவற்றின் சட்டங்களை நன்கு அறிந்திருக்கவும் வேண்டும். இவற்றையெல்லாம் அறிந்திருப்பவரால் மட்டுமே மார்க்கத்தின் சரியான சட்டங்களை சொல்ல முடியும்.
6. ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்களை கிரகிக்கும் ஆற்றலும் அறிவும் அவருக்கு அடிப்படையில் இருக்க வேண்டும்.
நூல் : அல் உஸூல் மின் இல்மில் உஸூல்
மேற்கண்ட நிபதனைகளுக்கு உட்பட்டவரை ஆலிம் என்று சொல்லலாம். அவ்வாறு இல்லாதவர்களை ஆலிம் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.
பள்ளிவாசலில் தொழ வைப்பவர்கள், மதரஸாக்களில் ஓதி கொடுப்பவர்கள், மதரஸாக்களில் படித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்கிறவர்கள் ஆகியோரை 'ஆலிம்கள்' என்று சொல்லும் வழக்கம் நம்மிடம் உள்ளது.
மேலும் யார் ஆலிம் என்பதற்கு நமது இஸ்லாமிய முன்னோர்கள் சில வரையறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த வரையறைக்கு உட்படாமல் இருப்பவர்கள் தம் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்; கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
எனவே தினம் தினம் புதியத் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்; அதிலும் குர்ஆன், ஹதீஸ் மற்றும் மார்க்கத்தோடு தொடர்புடைய செய்திகளை தெரிந்து கொள்வதில் பெரும் முனைப்பு காட்ட வேண்டும்.
அதற்கான வழி, நீங்கள் அதிகம் வாசிப்பது தான்! அல்லாஹ் முதன் முதலில் திருக்குர்ஆனை அருளிய போது திருக் குர்ஆனில் முதல் வார்த்தையாக பயன்படுத்தி இருப்பது இக்ரா - வாசி என்பதுதான். தொழுகை, நோன்பு போன்ற ஓரு கடமைதான் வாசித்தலும்; எனவே வாசியுங்கள்.
இமாம் எப்படி இருக்க வேண்டும்?
===============================
إِنِّى جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًۭا ۖ
وَإِنَّهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ لَمِنَ ٱلصَّـٰلِحِينَ ١٣٠
إِذْ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسْلِمْ ۖ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ ١٣١
وَوَصَّىٰ بِهَآ إِبْرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَـٰبَنِىَّ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ ١٣٢
(நபி இப்ராஹீம் அவர்களே!) நிச்சயமாக நாம் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகிறேன்; 2:25
நிச்சயமாக அவர் மறுமை நாளில் நல்லவர்களில் ஒருவராக இருப்பார். 2: 130
அவரைப் படைத்தாள்பவன் அவரிடம் "(முற்றிலும் கட்டுப்பட்டு) முஸ்லிமாகிவிடு" என்று கூறியபோது அகிலத்தாரைப் படைத்தாள்பவனுக்கு நான் (முற்றிலும் கட்டுப்பட்ட) முஸ்லிமாக ஆகிவிட்டேன்" என்று கூறினார்.
அதையே இப்ராஹீமும், (அவரின் பேரர்) யஅகூபும் தம் பிள்ளைகளுக்கு இறுதி உபதேசமாகக் கூறினார்கள் ; "என் பிள்ளைகளே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு இந்த மார்க்கத்தை தேர்ந்தெடுத்து இருக்கின்றான்; எனவே நீங்கள் முஸ்லிம்களாக இருக்கும் நிலையிலேயே மரணிக்க வேண்டும்" என்று கூறினார்கள்.2:132
இப்ராஹீம் (அலை) அவர்கள் குறித்து அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் பேசி இருக்கின்றான்; மக்களுக்கு இமாமாக இருப்பவர், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காக மட்டும் எதையும் செய்ய வேண்டும்; குர்ஆனிய கருத்துக்களை - அதாவது அல்லாஹ்வின் உத்தரவுகளை தன் வாழ்நாளில் ஏற்று நடக்க வேண்டும்.
மேலும் தான் ஏற்றுக் கொண்ட குர்ஆனியக் கொள்கைகளை தன் நடைமுறையில் வெளிப்படுத்துவதோடு, பொது மக்களையும் இந்த குர்ஆனின் பக்கம் அழைக்க வேண்டும்.
மேலும் தமது சந்ததிகளுக்கும் இஸ்லாத்தின் கொள்கைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்; தானும் ஒரு முஸ்லிமாக வாழ்ந்து, முஸ்லிமாகவே மரணிக்க வேண்டும்.
இதைத்தான் அல்லாஹ் மேற்சொன்ன வசனங்களில் இமாம்களின் தகுதிகள் என்பதாகக் கூறுகிறான்.
இரண்டு தன்மைகள் இருப்பவரை நாம் ஆலிம் என்று சொல்லுவோம்.1. அவர் கல்வியாளராக இருக்க வேண்டும்.2. அவர் அறிந்த கல்வியை தன்னில் பிரயோகிக்க வேண்டும் - அதாவது தாம் அறிந்ததைக் கொண்டு அமல் செய்ய வேண்டும்.
கல்வியை பெற்றுள்ள முதல் வகை மனிதரிடம் இரண்டாம் வகை இல்லை என்றால் முதல் வகை மனிதரான கல்வியாளரால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவர் போதிக்கும் கல்வி மக்கள் மனங்களில் சென்றடையாது.
ஆலிம்கள் வாசிக்க வேண்டிய அழகிய நூல்கள் :
===================================
ஆலிம்கள் தம்மை மேலும் ஆலிமாக அழகுப்படுத்திக் கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட நூல்களை வாசித்து தம்மை செம்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
(1. ت: 360هـ) في "أخلاق العلماء"، والحسين بن المنصور
(2. ت: 1050هـ)، في "آداب العلماء والمتعلمين"،
3.ابن عبدالبر (ت: 463هـ) "جامع بيان العلم وفضله وما ينبغي في روايته وحمله"؛
4.باب من يستحق أن يسمى فقيهًا أو عالمًا حقيقة لا مجازًا، ومن يجوز له الفُتيا عند العلماء"، وابن جماعة
(5.ت: 733هـ) في كتابه "تذكرة السامع والمتكلم في أدب العالم والمتعلم"،
1. கற்றதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
===============================
கற்றவர் அல்லாஹ் விதித்த சட்ட விதிகளை ஏற்று அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழ வேண்டும். பிற மனிதர்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
1. அறியாமையை அகற்றுவதற்காக அறிவைத் தேடிச் சென்ற பயணம் ஒரு கட்டத்தில் பெற்ற அறிவைக் கொண்டு உலக ஆதாயங்களில் எதைப் பெறலாம் என்கிற எண்ணம் பலருக்கும் மேலோங்குகிறது. அந்த எண்ணத்தின் முடிவாக செயல்படத் தொடங்கி பணம் கொழிக்கும் பணிகளில் பலர் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
சிலர் முற்றிலும் தவறான வழிகளில் பயன்படுத்தி பணத்தை அள்ளுகிறார்கள்; புகழை சேர்க்கிறார்கள். அறிவை நல்ல வழியில் பயன்படுத்துவோர் எல்லா காலத்திலும் குறைவானவர்களே இருக்கிறார்கள்; சிலர்தாம் அறிவை நல்வழியில் செலவழிக்கிறார்கள்; அறிவின் மூலம் அல்லாஹுவை அறிந்து அவனை அஞ்சுபவனே ஆலிம் - அறிஞன் என முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2. ஆலிம் என்பவர் தாம் கற்றது போல் செயல்படுபவர் தாம்; யார் தாம் கற்றது போல் செயல்படவில்லையோ அவர் கேட்பார் பேச்சு கேட்டு செயல்படும் சொந்த புத்தி இல்லாதவர் என ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
"மேலும் அறிஞர்களின் இல்மு - அறிவையும், ஞானிகளின் நுட்பமான அறிவுகள் அனைத்தையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை; நீ கற்றதைக் கொண்டு ஓர் முட்டாள் போல் செயல்பட்டாலே போதுமானது" எனவும் கூறுகிறார்கள்.
3. நாம் அறிய வேண்டியவைகள் அதிகம் இல்லை; தாம் அறிந்ததைக் கொண்டு செயல்படுகிறவர்தாம் ஆலிம்; சுன்னத்துகளை அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும்; எவ்வளவு குறைந்த ஞானம் இருக்கிறதோ அந்த அளவிற்கு செயல்பட வேண்டும் என இப்ராஹீம் அல் கவாஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
4. கெட்ட வழியில் தன் அறிவை பயன்படுத்துகிற ஒவ்வொருவரும், தீமையை வெறுக்காத ஒவ்வொருவரும் ஆலிம் - அறிஞரே அல்ல!
நல்ல அறிவைப் பெற்று இருந்தும் அதை நல்வழியில் பயன்படுத்தவில்லை என்றால் அவரும் ஆலிம்! அறிஞர் அல்ல! என சூஃபி தஸ்துரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் .
5. "ஆலிம் என்பவர் தாம் அறிந்ததை கொண்டு செயல்பட வேண்டும்; அப்படி செயல்படாதவரை முட்டாள் என்றே சொல்ல வேண்டும்" என இமாம் தபரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
6. ஆலிம்களிடம் மூன்று பண்பாடுகள் இருக்க வேண்டும்; தன்னைவிட அறிவில் குறைந்தவர்களை கண்டு பெருமை கொள்ளக் கூடாது; தன்னைவிட அறிவில் உயர்ந்தவர்களை கண்டு பொறாமை கொள்ளக்கூடாது; தாம் கற்பிப்பவைகளுக்கு பகரமாக தொகையை நிர்ணயித்துப் பெறக் கூடாது.
2. ஆலிம்கள் தனிமையிலும் பகிரங்கமாகவும் இருக்கும் போது அல்லாஹ்வை அஞ்சி வாழ வேண்டும்.
====================================
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அதிகம் அறிந்திருப்பவர் ஆலிம் அல்ல! அதிகம் அல்லாஹ்வை அஞ்சுவோர் தாம் ஆலிம்கள்! அதைத்தான் அல்லாஹ், "என் அடியார்களில் அதிகமாக அஞ்சுவோர் ஆலிம்களே!" என்று சொல்கிறான்.
ஒரு செய்தியை அறிந்த மனிதன் அதைக் கொண்டு அல்லாஹ்வை அஞ்சுவதற்கு போதுமானது.
ஒரு முட்டாள் மனிதனுக்கு தான் செய்த ஒரு நற்செயலை கண்டு ஆச்சரியப்பட போதுமானது என மஷ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
"இறைவா நீ தூயவன்; உன் அர்ஷை விட நீ உயர்ந்தவன்; வானம் பூமியில் இருப்பவற்றை விடவும் உன்னை நான் அஞ்சுகிறேன்; உன் படைப்புகளை விடவும் உனக்கு நெருக்கமானவன் நான்; மற்றவற்றை விட உன்னை நான் அதிகம் அஞ்சுகிறேன்! உன்னை யார் அஞ்சவில்லையோ அவருக்கு அறிவில்லை! உன் கட்டளைகளுக்கு யார் கட்டுப்படவில்லையோ அவருக்கு ஞானம் இல்லை" என தாவூத் (அலை) அவர்கள் கூறியதாக அல் அப்பாஸ் அல் அம்மி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
3. சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களில் இருந்து தெளிவு பெற்று இருக்க வேண்டும்.
===================================
கடல் அலையைப் போல் சந்தேகங்கள் ஏற்பட்டாலும் அவற்றைத் தாமே ஆய்ந்தறிந்து தெளிவு பெறும் அளவிற்கு அறிவை பெற்றவராக இருக்க வேண்டும். சந்தேகங்கள் அவருடைய உறுதியை குலைத்து விடக்கூடாது; அந்த அளவிற்கு தெளிவானவராகவும், உறுதியானவராகவும், தெளிவான அறிவு பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
ஆலிம் என்பவர் எது தெளிவானது எது சந்தேகத்திற்குரியது என்பதை அறிந்திருக்க வேண்டும். தெளிவானவற்றில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றவற்றையும், சந்தேகமானவற்றில் தெளிவை ஏற்படுத்துகின்றவற்றையும் அவர் அறிந்திருக்க வேண்டும்.
4. உள்ளது படி உண்மையை அறிந்திருக்க வேண்டும்.
======================================
அல்லாஹ்வும் ரசூலும் எதை மார்க்கமாக வடிவமைத்திருக்கிறார்களோ அத்துடன் நிறுத்திக் கொள்பவர் தாம் ஆலிம். மார்க்க விஷயத்தில் வேறு யாருடைய கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து விடக்கூடாது.
5. குர்ஆன் ஹதீஸை கண்ணியப்படுத்த வேண்டும்.
=====================================
குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் ஆலிம்கள் கண்ணியப்படுத்த வேண்டும். தன் அன்றாட வாழ்வில் இந்த இரண்டையும் பின்பற்றிட வேண்டும்; அவரே ஆலிம்!
6. பதில் சொல்லும்போது அச்சப்பட வேண்டும்.
====================================
ஒரு ஆலிமிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டால் அதற்கான பதிலை சொல்லும் போது மறுமை நாளில் என்ன சொல்லப்படுமோ என்று அச்சப்பட வேண்டும் என இமாம் அபுல் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் ஆலிம்கள் அடிப்படைகளை பின்பற்றி வாழ வேண்டும், தீமைகளை விட நன்மையானவற்றை அதிகம் செய்ய வேண்டும், மார்க்க விஷயங்கள் ஒவ்வொன்றின் அந்தரங்க ரகசியங்களையும் அறிந்திருக்க வேண்டும்;
وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا ﴾ [القصص: 80].
(காரூனுக்குத் தரப்பட்டுள்ள செல்வத்தைப் போன்று எங்களுக்கும் தரப்பட வேண்டும் என்று) சொன்னவர்களை பார்த்துக் கல்வி ஞானம் வழங்கப்பட்டவர்கள், "உங்களுக்கு கேடு விளையட்டும்! இறை நம்பிக்கை கொண்டு நற்காரியம் செய்தோருக்கு அல்லாஹுவின் நற்கூலி தான் சிறந்ததாக இருக்கும்" என்று உலக இன்பங்களை விட மறுமையை தேர்ந்தெடுப்பவராக ஆலிம்கள் இருக்க வேண்டும்.
ஆதாரம் :
https://www.alukah.net/sharia/0/159593/%D9%85%D9%86-%D9%87%D9%88-%D8%A7%D9%84%D8%B9%D8%A7%D9%84%D9%85%D8%9F/
ஆட்சியாளர்களை வழிநடத்திய ஆலிம்கள் :
================================
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் , அப்துல் அஸீஸ் பின் அல் பாஸ் (ரஹ்) போன்ற ஆலிம்களைப் பார்த்து," இவர்கள் மறுமையில் அரசர்களைப் போன்று இருப்பவர்கள்" என்று கூறுவார்கள்.
பக்தாதை ஆட்சி செய்த அப்பாஸியா கலீஃபாவான மஃமூன் அவர்களும், கலப்பை ஆட்சி செய்த ஸைஃபுத் தவ்லா அல் ஹம்தானீ அவர்களும், ஸ்பெயின் நிலப்பரப்பை ஆட்சி செய்த அப்துல் ரஹ்மான் அல் நாசிர், அல் முஃதமித் பின் அல் உப்பாத் போன்ற மன்னர்கள் தம் நிலப்பரப்பில் வாழ்ந்த ஆலிம்களை மிகவும் அதிகமாக கண்ணியப்படுத்தினார்கள். பாராட்டினார்கள். ஊக்கப்படுத்தினார்கள்.
ஆலிம்களுக்கு உயர்ந்த பதவிகளை வழங்கி அதன் மூலம் மக்களிடத்தில் உள்ள அறியாமையை விரட்ட பெரும் முனைப்பு காட்டினார்கள். அரசாங்கத்தின் அனைத்துத் துறை சார்ந்த சந்தேகங்களையும் ஆலிம்களிடம் கேட்டு தெளிவு பெற்று அதன்படி செயல்பட்டார்கள். ஆலிம்கள் உள்நாட்டு போர்களில் முதல் வரிசையில் நின்று போரிட்டார்கள். ஆலிம்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட்ட அரசுகள் அனைத்தும் வல்லரசுகளாக மாறின.
எகிப்தின் ஆட்சியை காப்பாற்றியவர் ஒரு ஆலிம் :
=====================================
அல் இஸ்ஸு பின் அப்துஸ் ஸலாம் (ரஹ்) அவர்கள் மிகப்பெரும் ஆலிம்களில் ஒருவராகவும், சூஃபிகளில் ஒருவராகவும் இருந்தார்கள். செல்வந்தர்களும் மன்னர்களும் அவர்களைக் காண காத்திருப்பார்கள். ஹிஜ்ரி 658 இல் மிஸ்ரில் ஓர் நெருக்கடி நிலை உண்டானது. எதிரிப் படையினர் போர் செய்ய வந்து கொண்டிருக்கும் தகவல் மன்னருக்குக் கிடைத்தது. அவர் என்ன செய்வதென்று தெரியாமல் அல் இஸ்ஸு பின் அப்துஸ் ஸலாம் (ரஹ்) அவர்களைத் தேடி வந்தார்கள்.
சூஃபி அல் இஸ்ஸு (ரஹ்) அவர்கள் மன்னரை வரவேற்று அமர வைத்து, "நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்; இந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளிவர வேண்டுமானால் உடனே நீங்கள் போருக்குத் தயாராக வேண்டும்; ஆனால் அதற்கான பொருளாதாரம் அரசிடம் இல்லை என்பதை நான் அறிவேன்.
எனவே நீங்கள் அரசின் வைப்பு நிதியாக உள்ள தங்கக் கட்டிகளை உடனே விற்றுவிடுங்கள்; அதனைக் கொண்டு போருக்குத் தேவையான தளவாடங்களும், வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் வாங்கிக் கொண்டு புறப்பட தயாராகுங்கள்; நானும் மக்களிடம் சொல்லி மக்களையும் தயார் செய்கிறேன்" என்று கூறினார்கள். மன்னர் அவ்வாறே தயாரானார்.
சூஃபி அல் இஸ்ஸு (ரஹ்) அவர்கள் மக்களிடம், " நம் நாட்டின் மீது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது; நாம் அனைவரும் இக்கட்டான நிலையில் சூழப்பட்டிருக்கிறோம்; நமது நாட்டை காப்பது நமது கடமை; எனவே உங்கள் வழிச் செலவுக்குத் தேவையான செல்வங்களை எடுத்துக் கொள்ளுங்கள்; அரசிடம் போதுமான பணம் இல்லை; உங்களிடம் உள்ள இரும்பு மற்றும் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்; அரசிடம் போதுமான ஆயுதங்கள் தற்போது இல்லை;
போர்க்களத்தில் யார் யார் என்னென்ன வகையான உதவிகளை செய்ய இயலுமோ அவர்கள் அனைவரும் புறப்படுங்கள்; ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி! நாமும் நமது பிள்ளைகளும் உயிரோடு இருந்தால் எதையும் சம்பாதித்துக் கொள்ளலாம்; போரிலிருந்து திரும்பிய பிறகு அரசு தம்மால் இயன்ற உதவிகளை உங்களுக்குச் செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன்" என கூறினார்கள்.
சூஃபி அல் இஸ்ஸு (ரஹ்) அவர்களின் போர் பிரகடன உரையை கேட்டதும் மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசு சார்ந்த ராணுவ வீரர்களோடு போர் பயிற்சி பெற்றிருந்த பொதுமக்களில் உள்ள ஆண்களும் , மருத்துவ சேவை செய்ய தெரிந்திருந்த ஆண்களும் பெண்களும், உணவகச் சாலையில் சேவையாற்ற அறிந்திருந்த ஆண்களும் பெண்களும், ஆயுதப் பட்டறைகளில் பணியாற்றவும், குதிரை லாயம் போன்றவற்றில் பணியாற்றவும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக முன்வந்து பெயர்களைப் பதிவு செய்தார்கள்.
போர்க்களத்தை எதிர்கொண்டார்கள்; எதிர்பார்த்ததை விட குறுகிய நாட்களில் யுத்தம் முஸ்லிம்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்தது.
அன்றைய சூழலில் பணம் இல்லாத எகிப்து, வெற்றி கொள்ளப்பட்டதற்குக் காரணம் ஒரு ஆலிமின் அறிவுரையும் வழிகாட்டளும்தான்.
இப்படி சமுதாயத்தை வழிநடத்திய ஆலிம்கள் இன்று எப்படி இருக்கிறார்கள். இந்த கட்டுரையை வாசிக்கும் ஆலிம்களே நீங்கள் உங்களை எண்ணிப் பாருங்கள். பொதுமக்களே! நீங்கள் ஆலிம்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
ஆலிமிற்காக அரசரிடம் பேசிய அண்ணல் நபி ஸல் :
======================================
ஈரான், தஜிகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சமர்கந்து, புகாரி, பாகிஸ்தான் போன்ற நிலப்பரப்புகளோடு இன்றைய ரஷ்யாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி கி.பி. 819 முதல் 999 வரை சாமானியா எனும் இஸ்லாமிய வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களில் முதலாமவர் இஸ்மாயில் சாமானி (ரஹ்) ஆவார்.
ஒருநாள் நபிமார்களின் வாரிசான ஆலிம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது பின் நஸ்ரு (ரஹ்) அவர்கள் அரசர் இஸ்மாயில் சாமானி (ரஹ்) அவர்களிடம் இரவு இஷா தொழுகைக்கு பிறகு வந்தார்கள். அரசர் அவர்கள் எழுந்துச் சென்று அந்த ஆலிமை முகமலர்ச்சியுடன் வரவேற்று கண்ணியப்படுத்தி, இரவு உணவளித்து உபசரித்தார்கள்.
ஆலிம் அவர்கள் தம் கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரி தரும்படி கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொண்டார்கள்.
பின்னர் ஆலிம் அவர்கள் அரசரிடம் இருந்து விடை பெற்று சென்ற பொழுது அரசர் சாமானி அவர்கள் ஏழு அடிகள் வரை அந்த ஆலிமுடன் வெளியே வந்து அவரை வழி அனுப்பி வைத்தார்கள்.
பின்னர் அரசர் தம் அலுவல்களை முடித்துக் கொண்டு இரவு படுக்கைக்குச் சென்றார்கள்.
அந்த இரவில் அரசர் இஸ்மாயில் சாமானி (ரஹ்) அவர்களின் கனவில் நபி (ஸல்) அவர்கள் தோன்றி, "இஸ்மாயிலே! எனது வாரிசான ஆலிமுக்கு நீங்கள் மரியாதை செய்ததற்காக உங்களை இரு உலகிலும் கௌரவப்படுத்த வேண்டுமென்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து இருக்கின்றேன்.
மேலும் நீங்கள் அந்த ஆலிமுடன் ஏழு அடி தூரம்வரை சென்று அவரை வழியனுப்பியதற்காக உங்கள் சந்ததியில் ஏழு நபர்கள் ஒருவர் பின் ஒருவராக அரசராக வேண்டுமென்றும் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன்" எனக் கூறி மறைந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துஆவை அல்லாஹ் ஏற்று கொண்டான் போலும். இஸ்மாயில் சாமானி (ரஹ்) அவர்களின் வாரிசுகளில் ஏழு பேர் ஒருவர் பின் ஒருவராக நீதியுடன் ஆட்சி செய்ததாக வரலாறு பதிவாகி இருக்கின்றது.
நூல் : ஹுல்யதுல் அவ்லியா
மக்கள் பிரச்சினைகளுக்காக ஆலிம்கள் முன் நின்றால் அந்த ஆலிமுக்கு பின்னால் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துஆவும் உடனிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆலிம்களை கண்டு அஞ்சிய அரசர்கள்:
===================================
ஆஃப்கானிஸ்தான், ஈரான் மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளை ஹிஜ்ரி 737 முதல் 807 ( கி.பி. 1336 - 1405) வரை ஆட்சி செய்த தைமூர்லங் - Tamerlane மன்னர் அவர்கள் இந்த வம்சத்தின் முதல் ஆட்சியாளர் ஆவார். இவரோடு தொடர்புடைய ஒரு ஆலிமின் வரலாறை பாருங்கள்.
தைமூர்லங் எனும் அரசர் தமது போர் வீரர்களில் ஒருவனை அழைத்து அவனது கையில் ஓர் இரகசிய கடிதத்தை கொடுத்து, "இதை பக்கத்து நாட்டு அரசரிடம் கொடுத்து விடு, மேலும் இந்த கடிதம் முக்கியமான விஷயத்தை தாங்கி இருப்பதால் வெகு விரைவாகச் செல்! ஊருக்குள் சென்று உன் கண்ணுக்குத் தெரிந்த வாகனங்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு அதன் மீது செல்ல உனக்கு அதிகாரம் வழங்குகிறேன்" என கூறினார்.
சேவகன் வேகமாக ஊருக்குள் சென்றதும் அங்கே மேய்ந்து கொண்டிருந்த ஒரு குதிரையைப் பிடித்தான்.
இதைப் பார்த்த குதிரையின் உரிமையாளர் சேவகனை அடித்து விரட்டினார். அடி உதைகளுக்கு நடுவில் அவன் அரசரின் ஆணையை எடுத்துச் சொன்னான். ஆனால் அவர் அதை காது கொடுத்து கேட்கவில்லை.
உடனே சேவகன் அரசரிடம் வந்து நடந்த விபரங்களை முறையிட்டான். உடனே அரசர் எரிமலைபோல் குமுறினார்! "யார் அந்த மனிதர்?" என்று ஆவேசமாக கேட்டார்.
"அது இமாம் தஃப்தாஜானி (ரஹ்) அவர்களின் குதிரை" என சேவகன் பதிலளித்தான்.
இவ்வார்த்தையை கேட்டதும் அரசர் பெட்டியில் அடங்கிய பாம்பைப்போல மௌனமானார்.
இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர்கள் அனைவரும், "அரசே! அந்த மனிதரைப் பிடித்து வந்து தண்டனை வழங்க வேண்டும்" என்று கோபமாகக் கூறினார்கள்.
அரசர் கூறினார்; "அமைச்சர்களே! பணத்தால் கொழுத்து திமிர் பிடித்து அலைபவனையும், படை பலத்தால் அகங்காரம் கொண்டு அலைபவனையும், நாட்டிலுள்ள அனைவரையும் அடக்கியாளும் வல்லமை எனக்கு உண்டு!
ஆனால் தஃப்தாஜானி எனும் ஆலிமை அடக்க எனக்கு வலிமை இல்லை; என்னால் அது முடியாது.
ஏனென்றால் எனது வாள் முனை ஆட்சி செய்யாத இடத்திலெல்லாம் இமாம் தஃப்தாஜானியின் பேனா முனை ஆட்சி செய்கிறது" என்று கூறினார்.
"அரசர்கள் பிறருடைய உடைமைகளை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தலாம்" என்கிற வழி வழியாக வந்த செயல்களின் அடிப்படையில் மன்னர் தைமூர்லங் ஆட்சியிலும் அவ்வாறான நடைமுறை இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, "உரியவரின் அனுமதி இல்லாமல் எவருடைய பொருளையும் அரசும், அரசு ஊழியர்களும் பயன்படுத்தக் கூடாது" எனும் சுற்றறிக்கையை மன்னர் அனுப்பி வைத்தார். நூல் : துர்ருல் மன்சூர்
அல்லாமா தஃப்தாஜானி (ரஹ்) அவர்கள் எழுதிய ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களில் பல நூல்கள் இன்றும் அரபு மதரஸாக்கள் அனைத்திலும் பாட நூல்களாக திகழ்கின்றன. அகாயிதுந் நஸஃபி அவர்கள் எழுதியது தான்.
மந்திரி சபையில் ஆலிம் இல்லையா ? அரசர், பணி நீக்கம் :
================================
மன்னர் அஹமது ஸன்ஜர்சுலுகி ( கி.பி. 1085- 1157 வாழ்ந்த ) இவர்கள் தம் கவர்னருக்கு இப்படி கடிதம் எழுதினார்கள். உன் சபையில் ஆலிம்கள் எவரும் மந்திரிகளாகவோ ஆலோசகர்களாகவோ இடம்பெறவில்லை; உன் அவையின் பணியாட்கள் கெட்ட குணம் உடையவர்களாகவும், காவலர்கள் மிகுந்த கோபத்துடனும் இருக்கிறார்கள்;
ஏழை எளியவர்கள் உன்னிடம் தம் உரிமைகளைக் கேட்டு நிராசை அடைந்து விட்டார்கள்; உன் செல்வம் உன் கஜானாவில் இருக்கிறது; உன்னை குறை கூறுவோர் சிறையில் இருக்கிறார்கள்; நீ திருந்தி விடுவாய் என நான் காத்திருந்தேன் ; நீ திருந்துவதாக இல்லை; உன்னை பதவியில் இருந்து நீக்குகிறேன்.
அரசவையில் ஒரு ஆலிம் இல்லை என்பதற்காக ஒரு அரசர் தன் சிற்றரசரை நீக்குகிறார் என்றால் ஆலிம்களின் சேவை எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
மவ்லவீ, ஹாஃபிழ் அவ்ரங்கசீப் ரஹ் :
===================================
முஹ்யித்தீன் அபுல் முளஃப்பர் முஹம்மது அவ்ரங்கசீப் (ரஹ்) எனும் இயற்பெயரை கொண்ட முஹம்மது அவ்ரங்கசீப் (ரஹ்) அவர்கள் 24/10/ 1618 ( 15 /11/1027 ) ஆம் வருடம் குஜராத் மாநிலம் Dahod தஹோத் எனும் ஊரில் மன்னர் ஷாஹ்ஜஹான், மும்தாஜ் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்கள்.
பல மார்க்க அறிஞர்களிடம் மார்க்க கல்வியை முறையாக கற்று ஆலிம், ஃபாஸிலாகவும் தேறிய பின்னர் ஹள்ரத் க்வாஜா முஹம்மது மஃஸும் ஸர்ஹிந்தி (ரஹ்) அவர்களிடம் பைஅத் பெற்றார்கள்.
எப்பொழுதும் இறை சிந்தனையில் திளைத்த ஆபிதாகவும், துறவு வாழ்வை மேற்கொள்பவராகவும், குர்ஆன் பிரதியை எழுதி விற்பது மூலமும், தொப்பி தைத்து விற்பனை செய்வதின் மூலமும் வரும் வருமானத்தில் எளிமையான வாழ்வை மேற்க்கொண்ட மன்னராகத் திகழ்ந்தார்கள்.
அவுரங்கசீப் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தம் மகனை சிறு வயதிலேயே ஹாஃபிளாகினார்கள். தன் மகனுக்கு தன் தந்தை ஷாஹ் ஜஹான் அவர்களின் துஆ வேண்டி அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள்.
ஹாஃபிழான தன் பேரக் குழந்தையை கண்டு ஷாஹ் ஜஹான் (ரஹ்) அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்.
"ஏன் அழுகிறீர்?" எனக் கேட்டதற்கு ஷாஹ்ஜஹான் (ரஹ்) அவர்கள் "ஹாஃபிழின் பெற்றொருக்கு மறுமை நாளில் சூரியனை விட பிரகாசமான கிரீடம் அணிவிக்கப்படும்.
உன் மகன் ஹாஃபிழ் என்பதால் உனக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். உன்னை ஹாஃபிழாக்கி இருந்தால் எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்குமே என நினைத்து அழுகிறேன்" என்றார்கள்.
இதனை கேட்டு கண் கலங்கிய ஹள்ரத் அவுரங்கசீப் அவர்கள் வெறும் ஆறே மாதத்தில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து ஹாஃபிளாகி வந்து தன் தந்தையிடம் உங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
இப்போது ஷாஹ்ஜஹான் அவர்கள் தம் மகனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.
49 வருடங்கள் அன்றைய அகன்ற இந்தியாவை அவுரங்கசீப் அவர்கள் ஆட்சி செய்தார்கள். அவருடைய ஆட்சியின் கீழ் 16 கோடி இந்தியர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 22.7 GTP growth இருந்தது. அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த நிலையை அடைந்ததில்லை. இன்று 2024 இல் 6.5 GTP growth உள்ளது.
ஒரு ஆலிம் இந்தியாவை எப்படி கட்டமைத்தார் என்பதற்கு அவுரங்கசீப் நிகழ்ச்சி ஓர் அழகிய முன்மாதிரி. ஆலிம்கள் அவுரங்கசீப் போல் எல்லாத் துறையிலும் திறன் பெற்றவர்களாகத் திகழ வேண்டும்.
அன்று முதல் இன்று வரை ஆலிம்களின் சம்பளம் :
பிராமணராகப் பிறந்து மன்னர் அக்பரின் அவையிலும் முஸ்லிம்களுடனும் நெருங்கி பழகி வந்த வேளையில் மன்னர் அக்பர் அவர்கள் தீனே இலாஹி - இறை மார்க்கம் எனும் பெயரில் தனி ஒரு மதத்தை உருவாக்கினார். அதை உருவாக்கியதில் பெரும் பங்காற்றியவரில் ஒருவர் பீர்பால்.
மன்னர் அக்பர் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அந்த மதம் கலைக்கப்பட்டது. அந்த தீனே இலாஹி மதத்திலிருந்து தன்னை முழுமையாக விடுவித்து, தவ்பா செய்து மன்னர் அக்பர் வாழ்ந்தார். மன்னர் அக்பர் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே அக்பரை போல் முழுமையான முஸ்லிமாக மாறினார் பீர்பால்.
மன்னர் அக்பரிடம் பணியாற்றிய அறிஞர் பீர்பால் அவர்கள் மன்னர் அக்பர் அரசராக இருக்கும் போது அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டுப் பிரிந்து வேறு வேலை தேடி அலைந்து கொண்டிருந்தார்.
பல நாட்கள் வறுமையில் வாடி வதங்கிய பின்னர் ஒரு ஜமீன்தாரின் மகனுக்கு கல்வி கற்பிக்க ஓர் ஆசிரியர் தேவை என்பதைக் கேள்விப்பட்டு அந்த ஜமீன்தாரிடம் சென்றார்.
அந்த ஜமீன்தார், “நான் என் மகனுக்கு கல்வி கற்பிக்க வருபவர்களுக்கு உணவும், ஒன்றரை ரூபாய் சம்பளமும் கொடுப்பது வழக்கம்; உமக்கு வேண்டுமானால் மாதம் இரண்டு ரூபாய் சம்பளம் தருகிறேன்" என்று கூறினார்.
இதைக் கேட்டதும் பீர்பாலுக்கு ஆத்திரமும், அடங்காத கோபமும் உண்டானது. எனினும் அடக்கிக்கொண்டு சுற்று முற்றும் பார்த்தார். அங்கே ஒரு குதிரைப் பாகன் நின்று கொண்டிருந்தான். அந்த குதிரைப் பாகனை சுட்டிக்காட்டி, ஜமீன்தாரை நோக்கி "நீங்கள் அந்தக் குதிரைப் பாகனுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறீர்கள்?" என வினவினார்.
ஜமீன்தார் "ஏதோ மாதம் பதினைந்து ரூபாய் கொடுக்கிறேன்" என்று கூறினான்.
பீர்பால் "ஜமீன்தாரே! நீங்கள் உங்கள் மகனுக்கு குதிரைப் பாகன் வேலையையே கற்றுக் கொடுங்கள்; ஏனெனில், பாவம் பத்து பதினைந்து வருடம் கல்வியைக் கஷ்டப்பட்டுப் படித்த பிறகு உம் மகனுக்கு மாதம் இரண்டு ரூபாய் சம்பளம்தான் கிடைக்கும்.
ஆனால் குதிரைப் பாகன் வேலையை அவனுக்கு கற்றுக் கொடுத்தால் மாதம் பதினைந்து ரூபாயாவது சம்பளம் கிடைக்கும்" என்று பதிலளித்தார்.
இந்த பதிலைக் கேட்டதும் ஜமீன்தார் தனது கஞ்சத்தனத்தை உணர்ந்து வெட்கப்பட்டான். அறிவை கற்பிக்கும் ஆசிரியருக்கு குறைந்த சம்பளம் வழங்குவதை எண்ணி வருத்தப்பட்டார்.
எனவே உலமாக்களுக்கு உயரிய மரியாதையை கொடுங்கள்; அவர்களை மதியுங்கள்; அவர்களின் முஹிப்புகளாக மாறுங்கள்; உலமாக்களின் உண்மை நண்பர்களாக ஆகுங்கள். அன்று முதல் இன்று வரை ஆலிம்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு ஆலிம் அவரிடம் உள்ள கல்விக்காக அவர் பாராட்டப்படுவதை விட அவர் ஆற்றும் மக்கள் சேவைக்காகவும், அவர் அதிகமாக அல்லாஹ்வை வணங்குகிறார் என்பதற்காகவும் போற்றப்படுகிற வரை சிறந்தவர்.
பதிவிட்ட நாள் : 6/1/2025
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 2
வாசிப்பது ஓர் வாழ்க்கை முறை
===============================
இறைவன் முதன் முதலில் படைத்தது பேனாவை தான். அந்தப் பேனாவிடம் இறைவன் கூறினான். என் எண்ணங்களை நீ எழுத்தாக்கு. அது எழுதி முடித்தவை தான் இன்றைய உலகம்.
பேனா எழுதியவைகளை கொண்டு மனிதனால் வாசிக்க மட்டுமே முடியும். எனவே இறைவன் மறைமுகமாக மனிதன் மீது முதன் முதலில் கடமையாக்கியது வாசிப்பை தான்! இந்தக் கருத்தை வலியுறுத்தும் நபி மொழியைப் பாருங்கள்.
عن عبادة بن الصامت ـ رضي الله عنه: أن رسول صلى الله عليه وسلم قال: إن أول ما خلق الله القلم. قال له: اكتب، فقال: يا رب وما أكتب؟ قال: اكتب مقادير كل شيء حتى تقوم الساعة : رواه الترمذي ، و الطبراني، و أبو داوود ، ومسند احمد .
உபாதத் பின் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் முதன் முதலில் படைத்தது பேனாவை தான். அந்தப் பேனாவிடம், "நீ எழுது!" எனக் கூறினான்.
அந்தப் பேனா, "என்னைப் படைத்தாள்பவனே! நான் எதை எழுதுவது?" என கேட்டது. அதற்கு அல்லாஹ் கூறினான்; "மறுமை நாள் ஏற்படுகிற வரை உள்ள அனைத்து வஸ்துக்களின் கதுர் - தலையெழுத்தையும் நீ எழுது! (பின்னர் அது எழுதி முடித்தது. )
நூல் : திர்மிதீ, அபூதாவூத், முஸ்னது அஹமத், தப்ரானீ.
இறைவன் முதன் முதலில் பேனாவை படைத்து, அது இறைவனின் சிந்தனைகளை எழுதி முடித்த பிறகு அதற்கு ஓய்வு கொடுக்கவில்லை.
பின்னர் நான்கு வேதங்களையும், 313 ஸுஹ்ஃபு - இடைநிலை சட்டங்களையும் எழுதச் செய்து அவற்றை அந்தந்த சமுதாயத்திற்கு வழங்கி வாசிக்கச் செய்தான்.
அதை வாசித்து தம் வாழ்வியலாக்கியவர்கள் வசந்தங்களை மட்டுமே அனுபவித்தார்கள். வாசிக்காதவர்கள் தூசிக்கப்பட்டார்கள்.
பொதுவாகவே எழுத்தாளர்கள் குறைவாகவே இருப்பார்கள். ஆனால் வாசிக்கும் வாசகர்கள் அதிகமாக இருப்பார்கள்.
இறைவன் முதன் முதலில் எழுத்தாளர்களை படைக்கவில்லை. வாசிப்பவர்களே சமூகத்தில் தேவை எனும் நிலைப்பாட்டில் முதல் எழுத்தாளனாக அல்லாஹ்வே இருந்திருக்கிறான்.
புத்தகம் படிப்பதும் இறைவனைத் தியானிக்கும் தியானம்தான். புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புற உலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை அடைய முடியும் என்பது உண்மை.
நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் போன்ற அனைவரும் நல்ல நூல்களை வாசித்ததால் தான் நம்மை திரும்பிப் பார்க்கவும் அவர்களைப் பற்றி யோசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
அண்ணன் அம்பேத்கர் அவர்கள் காலையில் நூலகம் இறந்ததும் முதல் ஆளாக உள்ளே செல்வார். நூலக நேரம் முடிந்ததுகூட தெரியாமல் தன் வாசிப்பில் மெய்மரந்து வாசித்துக் கொண்டிருப்பார்.
இவ்வளவு வாசித்த ஒருவரால்தான் உலகிலேயே சிறந்த அரசியலமைப்புச் சாசனத்தை வழங்கமுடிந்தது.
சிந்து நதியில் சிக்கிய நூல்கள் :
==============================
ஈரான் நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்த குலிஸ்தான், போஸ்தான் போன்ற தத்துவ நூல்களை எழுதிய அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ் ) அவர்கள் நமது நாட்டிற்கு வந்தது போலவே உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார்கள்.
ஆங்காங்கே கிடைக்கும் அனுபவங்களையும், அந்தந்த ஊர்களில் உள்ள உயர்ந்த தத்துவங்களையும், மத கோட்பாடு சார்ந்த ஞான விஷயங்களையும் அறிந்து கொண்டு அவற்றை இஸ்லாமிய மரபுகளோடு இணைத்து, அவற்றை ஒரு கதையாக உருவகப்படுத்தி சொன்ன கருத்துக்கள் இன்றும் உலக அளவில் பேசப்படுகிறது.
உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டும் காணப்படுகிறது ஏன் நானே கூட "அல்லாமா ஸஅதீ சிராஜி அவர்களின் ஞான கதைகள்* எனும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டு இருக்கிறேன்.
அவர்கள் இந்தியாவின் சிந்து சமவெளிப் பகுதியில் வருட கணக்கில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த பல்வேறு சமூக மக்களிடம் அவர்களின் மொழியில் உறவாடி, அவர்களிடம் இருந்து ஞானங்களையும் ஞான கருத்துக்கள் நிறைந்த நூல்களையும் சேகரித்துக் கொண்டு தாயகம் திரும்பிம்பினார்.
அவரின் இந்திய சீடர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சினர்.
அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ் ) அவர்கள் தாம் கற்றவையும், கொண்டு செல்லும் நூல்களும் பயனற்றதாகிவிடுமோ என்று முகம் வாடினார். அதனை கண்ட சீடர்கள் பாரம் குறைந்தால் படகு பாதுகாப்பாக செல்லக்கூடும் என நினைந்து அறிவுச்செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல எனவும் நினைத்து, "ஷைஹு அவர்களே! எங்களை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்; நாங்கள் எப்படியும் மறு கரைக்கு சென்று விடுவோம்; எங்களை விட உங்களையும் உங்களோடு இருக்கும் நூல்களையும் பாதுகாப்பது தான் எங்களின் கடமை" என சொல்லிவிட்டு அனைவரும் ஆற்றில் குதித்தனர்.
அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ் ) அவர்கள் தம் ஞான நூல்களோடும் இந்திய சீடர்களின் தியாக உணர்வுகளையும் சுமந்து கொண்டு கரைசேர்ந்தார்.
ஞானத்தை கொடுக்கும் புத்தகங்கள் வரலாற்றில் மகத்தான காரியங்களை செய்யும். அதைக் காக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்தனர் இந்தியச் சீடர்கள்.
தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் நன்னோக்கில் அந்தச் சீடர்கள், தம் உயிரையும் தியாகம் செய்து, பிறரை வாசிக்கச் செய்திட முனைந்த முனைப்பு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
பள்ளிவாசல் தோறும் வாசிப்பு நாள் :
===================================
ஒவ்வொரு பள்ளிவாசலிலும் வாரத்தில் ஒரு முறை வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும்.
அஸர் தொழுகைக்குப் பிறகு அல்லது மங்ரிப் தொழுகைக்குப் பிறகு பொதுமக்கள் அனைவரையும் அமர வைத்து, "அவரவர் கடந்த வாரங்களில் படித்து ரசித்த ஒரு செய்தியை இங்கு படித்துக் காட்ட வேண்டும்" என்கிற திட்டத்தின் அடிப்படையில் சிலரை சில நிமிடங்கள் வாசிக்கச் செய்யலாம்.
பின்னர் இஸ்லாமிய ஞானம் சார்ந்த, இஸ்லாத்தோடு தொடர்புடைய ஒரு நூலை ஒவ்வொருவரும் இரண்டு நிமிடங்கள் வாசிக்க வேண்டும் என்கிற திட்டத்தின் அடிப்படையில் வாசிக்கச் செய்யலாம் . இதனால் அந்தப் பகுதியில் வாசிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதை போல் பெண்கள் பயான் நடைபெறும் போதும் அவர்களுக்கும் இது போன்ற பழக்கத்தை உண்டாக்கலாம்.
ஒவ்வொரு பள்ளிவாசலிலும் காலை, மாலை மக்தப் மதரஸா நடைபெற்று வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை சில மணி நேரங்களை ஒதுக்கி அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். வாசிப்பை நேசிக்கும் விதமான நூல்களை கொடுத்து வாசிக்கச் செய்ய வேண்டும்.
தாய் மொழியில் சத்தமாக வாசிப்பதால் குழந்தைகளுக்கு படிக்க வேண்டும் என்கிற உணர்வை அது அதிகப்படுத்துகிறது என Hardward பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது.
பள்ளிவாசல்கள் தோறும் நூலகங்கள் அமைத்து வாசிக்கச் செய்ய வேண்டும் என முப்பது வருடங்களுக்கு முன்பு ஓர் கருத்து பெரும்பாலானவர்களால் முன்மொழியப்பட்டது. அதை ஏற்று ஒவ்வொரு பள்ளிவாசலிலும் இன்று நூலகம் உருவாகி விட்டது. ஆனால் அதை படிப்பவர்கள் தான் அறவே இல்லை.
எனவே நூலகம் உருவாக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒரு குழந்தைக்கு ஆவண்ணாவை கற்றுக் கொடுப்பது போல், தொழில் தெரியாத ஒருவருக்கு ஒரு தொழிலை கற்றுக் கொடுப்பது போல் வாசிப்பது எனும் பழக்கத்தை ஒவ்வொருவருக்கும் மீண்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். இதற்கு காரணம் நமது கைகளில் உள்ள தொலைபேசி தான். தொலைபேசி வந்த பிறகு வாசிக்கும் பழக்கம் ஒவ்வொருவரிடமும் அறவே இல்லை. எனவே வாசிப்பை மீட்டெடுக்க வேண்டும்.
குர்ஆனை வாசித்ததின் பலன் :
===============================
அரபு நாட்டில் ஒரு பெண் தினமும் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் குர்ஆன் ஓதும் வழக்கம் உடையவளாக இருந்தாள்.
அவள் குர்ஆன் ஓதத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்து. ஆனாலும் சிரமப்பட்டு சிறிது நேரம் குர்ஆன் ஓதுவாள்.
இந்த நிலை தொடர்ந்து சில வருடங்கள் இருந்ததால் ஒரு நாள் சவூதியில் உள்ள ஒரு முஃப்தி - மார்க்கத் தீர்ப்பு வழங்குகிறவரிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லி விபரவாக கடிதம் எழுதி பதிலை எதிர்பார்த்து இருந்தாள்.
முஃப்தி பதில் எழுதி இருந்தார். அனேகமாக உங்களுக்கு ஜின் பிடித்திருக்க வாய்ப்புண்டு. நீங்கள் குர்ஆன் ஓதுவது அதற்குப் பிடிக்கவில்லை. நீங்கள் ஓதுவதை நிறுத்தவே இவ்வாறு உங்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. எனவே உங்களிடமிருந்து ஜின்னை அப்புறப்படுத்துவதற்கு சில 'ருகையா' ஓத வேண்டும். அதை உரியவர்கள் ஓதினால் உடனே உங்களுக்கு பலன் கிடைக்கும். அப்படிப்பட்டவர்களை தேடிச் சென்று ஓதி பார்த்து பயனடையும்படி சகோதரியிடம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
வளமையாக குர்ஆன் ஓதி வரும் ஒருவரால் ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு ஓத முடியவில்லை மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்றால் நாமெல்லாம் குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விடுவோம். அந்தப் பெண்மணியும் கூட எதார்த்தமாகத் தான் எழுதி கேட்டாள்.
முஃப்தி அவர்கள் உண்மையைச் சொன்ன பிறகு அப்பெண் முறையாக ஓதி பார்த்து ஜின்னிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டதாக அந்த செய்தி முடிகிறது.
எனவே எதை நீங்கள் வாசித்தாலும் அது உங்களுக்கு பயன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. குர்ஆனையும் வாசியுங்கள். மற்ற நூல்களையும் வாசியுங்கள். எதை வாசிக்கிறீர்களோ அது உங்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படித்தான் இந்த பெண்ணுக்கு குர்ஆன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை வழங்கி இருக்கிறது.
பொதுவாகவே வாசிக்கும் பழக்கம் மன அழுத்தத்தை குறைத்து சந்தோஷத்தை வாரி வழங்கும்.
இக்ரா - வாசி :
=============
முதன் முதலில் பேனாவை படைத்த இறைவன் அந்தப் பேனா செய்யும் செயல்களை கடமையாக்கும் விதமாக அல்லாஹ், திருக்குர்ஆன் மூலமாக மனிதர்களுக்கு முதன் முதலில் கடமையாக்கியது இக்ரா - வாசி என்பதுதான்.
ஒருவர் ஒரு நாளைக்கு 10 பக்கங்கள் படிக்க முடியும். அதற்காக 20 நிமிடங்கள் ஒரு நாளைக்கு ஒதுக்க முடியும் என்றால் அவர் ஒரு வருடத்திற்குள் 20 புத்தகங்களை வாசிக்க முடியும்.
அதாவது அந்த புத்தகங்களின் மொத்த பக்க எண்ணிக்கை 3650. ஒரு புத்தகத்தின் பக்கம் எண்ணிக்கை 365. பத்து ஆண்டுகளில் அவர் இவ்வாறு 200 புத்தகங்களை படித்து முடித்து இருப்பார். இதன் காரணமாக அவர் மிக உயர்ந்த நிலைக்கு சென்றிருப்பார்.
புத்தகங்களை வாசிப்பது, அந்த நூலாசிரியரோடு உரையாடுவது போலத்தான்! திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புகளை வாசித்து பாருங்கள்; அல்லாஹ்வோடு உரையாடுவது போல் இருக்கும்.
நீங்கள் தொழும்போது, நீங்கள் அல்லாஹ்வை பார்க்க விட்டாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் என்கிற எண்ணத்தோடு தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.
இது போன்ற எண்ணத்தோடு திருக்குர்ஆனை வாசித்து பாருங்கள். இறைவன் உங்களோடு உரையாடுவது உணர்வுபூர்வமாக உள்ளதால் உணர முடியும்.
நபி இல்லாத போதும், ஒரு ஆலிம் இல்லாதபோதும் ஒருவர் வாசிப்பின் மூலமே இறைவனை அடையவும் உணரவும் முடியும். மேலும் நல்லது எது? கெட்டது எது என்பதை அறிந்து செயல்பட முடியும் என்பதால்தான் இறைவன் முதன் முதலில் எழுத்து முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்தினான். வாசி என கட்டளை பிறப்பித்தான்.
வாசிப்பில் என் அனுபவம் :
===========================
பொதுவாகவே அரபுக் கல்லூரிகள் அனைத்திலும் நூலகங்கள் இருக்கும். நான் படித்த முதல் அரபுக் கல்லூரியான பெரம்பலூர் இர்ஷாதுல் ஊலூமில் அன்று (1988) நூலகம் இல்லை. ஏனென்றால் அதற்கு முதல் வருடத்தில் தான் இந்த மதரஸாவே தொடங்கப்பட்டது.
ஆனாலும் மவ்லவி காதர் முகையித்தீன் காஸிமி ஹள்ரத் அவர்கள் திருக்குர்ஆன் கூறும் குகை வாசிகளின் வரலாறு, யூசுப் (அலை) அவர்களின் வரலாறு ஆகியவற்றை பாடங்களின் போது தொடராக சொல்லி வருவார்கள். அது பசுமரத்து ஆணி போல் இன்றும் இதயத்தில் பதிந்து இருக்கிறது.
அதுதான் நூல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், வரலாறுகளை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உண்டாக்கியது என்று சொன்னால் மிகையல்ல!
பின்னர் நான் கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள ஃபைஜுல் பாகியாத் மதரஸாவில் பயின்றேன். அங்கு சிறிய அளவிலான ஒரு நூலகம் இருந்தது.
வெள்ளி இரவு தோறும் லஜ்னா - சொற்பயிற்சி மன்றம் நடைபெறும். அதில் ஒவ்வொரு மாணவரும் கண்டிப்பாக பேசி பயிற்சி எடுக்க வேண்டும்.
மன்றத்தில் பேசுவதற்காக வரலாறு மற்றும் பல செய்திகள் தேவைப்பட்டது. அதற்காக அங்கு தான் நான் முதன் முதலில் நூல்களை வாசித்தேன்.
உத்தமபாளையம் அப்துல் காதர் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய, "பாத்திமா ரலி அவர்களின் வரலாறு" அடங்கிய நூலை அங்கு தான் முதன் முதலாக படித்து முடித்தேன்.
பின்னர் நான் கோட்டகுப்பம் ஜாமிஆ ரப்பானியா அரபுக் கல்லூரியில் இரண்டு வருடங்கள் படித்தேன். மதரஸாவிற்கு எதிரிலேயே ஓர் இஸ்லாமிய நூலகம் இருக்கிறது.
அங்கும் கூட மன்றத்தில் பேச வேண்டுமே என்பதற்காக உத்தமபாளையம் எஸ். எஸ். அப்துல் காதிர் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய தஃப்ஸீர் ஹமீத் நூல்களில் சில பாகங்களை முழுமையாக படித்து முடித்தேன்.
அதில் நான் படித்து ருசித்தவைகளையும் பல்வேறு வரலாற்று சம்பவங்களையும் ஒரு நோட் புத்தகத்தில் தனியாக எழுதி வைத்துக் கொண்டேன்.
எனது தங்கை ஃபரிதா அவர்களுக்கு பணம் கொடுத்து சில வரலாறுகளை எழுதச் சொல்லி இருந்தேன். அவரும் எழுதிக் கொடுத்தார். அந்த நோட் புத்தகங்கள் அனைத்தும் இன்றும் என்னிடம் இருக்கிறது. இன்றும் பயான் செய்வதற்கு முன் அவற்றையும் பார்வையிடுவது வழக்கம்.
இவ்வாறு இந்த நூலகத்திலிருந்து பல்வேறு நூல்களை எடுத்து வந்து வாசித்திருக்கிறேன். இங்குதான் முதன்முதலாக நூலகம் சென்றும் வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
இந்த மதரஸாவில் எனக்கு மிஷ்காத் பாடம் நடத்திய ஸர்தார் ஹஜ்ரத் அவர்கள் அவர். மிஷ்காத்தில் என்னைக் கவர்ந்த ஹதீஸ்களை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து ஒரு நோட் புத்தகத்தில் தனியாக வைத்திருந்தேன். இன்றும் அவை என்னிடம் இருக்கின்றது.
முத்தாரம், கல்கண்டு போன்ற வார பத்திரிகைகளையும் நூலகத்தில் வாசிப்பேன். அதில் பயானிற்கு பயன்படும்படியான செய்திகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் எழுதி வைத்துக் கொள்வேன்.
ஹஸன் அவர்கள் எழுதிய சிந்துநதிக் கரையினிலே! மேற்கு வானம் , மஹ்ஜபீன் போன்ற பல இஸ்லாமிய நாவல்களை படிக்கும் பழக்கம் இங்கு தான் ஏற்பட்டது. மவ்லவி, அப்துல் ஸமது நத்வி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய "நீங்கள் கேட்டவை" புத்தகம் முழுவதையும் வாசித்திருக்கிறேன்.
பின்னர் நான் நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா கல்லூரியில் ஒரு வருடம் பயின்றேன். இங்கு மதரசாவில் ஒரு நூலகம் இருந்தது. அதைப்போல் நெய்வாசலில் ஒரு நூலகம் இருந்தது.
இங்கு படிக்கும் போது தான் முஸ்லிம் அல்லாதவர்களால் எழுதப்பட்ட நாவல்கள் வரலாறுகள் கவிதைகள் அறிவியல் சார்ந்த நூல்கள் என படிக்கத் தொடங்கினேன்.
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் சாண்டில்யனின் இந்திரகுமாரி மோகினி வனம், ரா.கி.ரங்கராஜனின் படகு வீடு போன்ற 500க்கும் மேற்பட்ட பக்கங்கள் நிறைந்த நூல்களை சில நாட்களில் வாசித்து விடுவேன்.
மவ்லவீ முஹம்மது இஸ்மாயில் பாகவி ஹள்ரத் அவர்கள், "பிற மனிதர்கள் எழுதிய புத்தகங்களையும் வாசியுங்கள் அதிலும் பல்வேறு நல்ல கருத்துக்கள் இருக்கின்றது" என்று சொல்லி என்னைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தினார்கள். இங்குதான் பல்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களையும், பல மதத்தவர்களால் எழுதப்பட்ட நூல்களையும் வாசித்தேன்.
பின்னர் லால்பேட்டை மன்பவுல் அன்வாரில் பயின்றேன். அறிவுச்சுடர், முஹத்திஸ் அல்லாமா அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களின் புகாரி வாசிக்கும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது.
வாசிக்கப்படும் ஹதீஸ்களுக்கு பின்னணியில் உள்ள வரலாறுகளை விரிவாக எடுத்துச் சொல்லுவார்கள். அவற்றை மெய் மறந்து கேட்பேன் அனைத்தையும் எனது நோட் புத்தகத்தில் பதிவு செய்து கொள்வேன். அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறை சார்ந்த வரலாற்றில் அதிக கவனம் ஈர்க்கச் செய்தார்கள்.
அவர்களின் சொற்பொழிவில் நபிமார்கள், நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் ஆகிய மூவரின் வரலாற்றைத் தவிர வேறு எதுவும் இடம்பெற்று இருக்காது.
ஒன்றை விளக்க ஒரு செய்தி மற்றொன்றை விளக்க மற்றொரு செய்தி என சங்கிலித் தொடராக பல செய்திகளை சொல்லிவிட்டு மீண்டும் முதல் செய்திக்கு வந்து, அதை சொல்லி முடிக்கும் ஸ்டைலும் அவர்களின் முகதோரனையும் விவரித்து விட முடியாத அழகு. அருமை.
இங்கும் கூட மெயின் ரோடு அருகே ஒரு லைப்ரரி இருந்தது. இந்த லைபரரில் இருந்து டிராகுலா , சாண்டில்யனின் மூங்கில் கோட்டை போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எடுத்து வந்து வாசித்திருக்கிறேன்.
நான் சென்னைக்கு பணிபுரிய வந்ததும் நான் சேவையாற்றும் பள்ளிவாசலுக்கு அருகே ஆர். எ. புரம் கிளை நூலகத்தில் பணம் கட்டி சேர்ந்து தினம் பல மணி நேரம் படித்து வந்தேன்.
நாவல்கள் படிப்பதில் எனக்கு மிகுந்த பேராற்வம் இருந்தது. நாவல்களை விலை கொடுத்து வாங்கி படிப்பதற்கான வசதிகள் இல்லாததால் பழைய புத்தகக் கடைகளில் கிலோ கணக்கில் புத்தகங்களை வாங்கி வந்து படித்துவிட்டு மீண்டும் கொண்டுச் சென்று கொடுத்துவிட்டு வேறு புத்தகங்களை வாங்கி வந்து படிப்பேன்.
இப்படி தொடர்ந்து படித்து வருவதை கண்ட எனது நண்பர் ஜுபைர் மிஸ்பாகி அவர்கள் ஒருநாள் "நீ எழுதலாமே மாப்ள!" என்று சொன்னார்.
அதேநேரம் எனது மற்றொரு நண்பர் முஹம்மது இல்யாஸ் பாகவி அவர்கள் அவ்வப்பொழுது மாத இதழ்களுக்கு வாசகர் கடிதம் எழுதி வருவார். அதை என்னிடம் காட்டுவார். நானும் அந்த இதழ்களை படித்துவிட்டு அவரைப் போன்று எழுத தொடங்கினேன்.
இன்று 42 புத்தகங்களை எழுதி இருக்கிறேன். இவை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் இருக்கலாம்.
வாசிப்பு பொழுது போக்கா?
===========================
உங்களின் பொழுதுபோக்கு என்ன என்று சிலரிடம் கேட்டால் அவர்கள் சொல்லுகிறார்கள். "நான் லாங் டிரைவிங் செல்வேன்".
மற்றொருவர் "மீன்பிடிப்பேன்" என்று சொல்லுகிறார். மற்றொருவர் "புத்தகங்களை வாசிப்பேன்" என்கிறார்.
இவற்றில் புத்தகங்களை வாசிப்பது அவருக்கு பொழுது போக்காக இருந்தாலும் அது அவருக்கு எதிர்காலத்தில் எல்லா வகையிலும் பயன் மிக்கதாக இருக்கும்.
எனவே பயன்மிக்க ஒன்றை பொழுதுபோக்கான விஷயமாக கருதுவது நல்லதல்ல! ஏனென்றால் வாசிப்பு ஓர் வாழ்க்கை முறையாக மாற வேண்டும்.
23 ஆண்டு காலம் அருளப்பட்ட திருக் குர்ஆனில் 77000/ ஆயிரம் வார்த்தைகள் இருக்கின்றது. அந்த வார்த்தைகளில் முதல் வார்த்தையாக ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறியது இக்ரா - வாசிப்பீராக எனும் வார்த்தைதான்.
நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் "எனக்கு வாசிக்கத் தெரியாதே!" என்று கூறினார்கள். உடனே ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இறுக கட்டி அனணத்து விட்டு மீண்டும் "வாசிப்பீராக" என்று கூறினார்கள்.
அப்பொழுதும் நபி (ஸல்) அவர்கள் "எனக்கு வாசிக்கத் தெரியாதே!" என்று கூறினார்கள்.
மீண்டும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் "வாசிப்பீராக!" என்று கூறினார்கள். எனக்கு வாசிக்கத் தெரியாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கட்டி அணைத்துவிட்டு
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ (1) خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ (2) اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ (3) الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ (4) عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ (5)
1. நபியே! உம்மை படைத்தாள்பவனின் பெயரைச் சொல்லி வாசிப்பீராக!
2. ஒட்டும் தசையிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவன் தான்;
3. வாசிப்பீராக! உம்மை படைத்தாள்பவனாகிய கண்ணியத்திற்குரியவன் அவன்தான்
4. பேனாவைக் கொண்டு கல்வியை கற்பித்தவன் அவன்தான்.
5. மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு அல்லாஹ் கற்றுத் தந்தான். 96: 1-5
பின்னர் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே வாசித்துக் காட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் இறைவன் முதன் முதலில் பேசுகிறான். இஸ்லாம் மார்க்கத்தை தொடங்கப் போகிறேன் அதற்கு நீங்கள் தான் நபியாக இருக்க வேண்டும், சமூகப் பணியாற்ற வேண்டும் என்பது போன்றெல்லாம் பேசாமல் "வாசிப்பீராக!" என்று இறைவன் பேசியதை நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
அதாவது வாசிப்பு என்பது மதங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒர் அம்சம் என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.
இறைவனும், ஜிப்ரயீலும் பேசிய முதல் வார்த்தை ஓர் பொழுதுபோக்கு வார்த்தை என சொல்ல முடியுமா? ( அதாவது சிலர் சொல்கிறார்கள் அல்லவா? நான் பொழுதுபோக்கிற்காக வாசிப்பேன் என்று)
இறைவன் திருக்குர்ஆன் வாயிலாக தொழுங்கள், நோன்பு வையுங்கள், தான தர்மம் செய்யுங்கள், நல்லதை ஏவி தீயதை தடுங்கள் என்பது போன்ற பல்வேறு கட்டளைகளை சொல்லி இருக்கிறான். ஆனால் அவற்றுக்கு மத்தியில் முதல் கட்டளையாக இறைவன் சொன்னது "வாசிப்பீராக!" என்பதுதான்!
இதை பொழுதுபோக்கு வார்த்தை என்று சொல்ல முடியுமா?
முதன் முதலில் அருளப்பட்ட ஐந்து வசனங்களின் முதல் வார்த்தை இக்ரா - வாசி என்பதுதான். இதில் மூன்றாவது வசனத்தின் முதல் வார்த்தையும் இக்ரா - வாசி என்பதுதான்.
எனவே முதன்முதலாக அருளப்பட்ட ஐந்து வசனங்களில் இரண்டு வார்த்தைகள் 'வாசி' என அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும் முதலில் அருளப்பட்ட ஐந்து வசனங்களில் நான்காவது வசனம் " அவனே பேனாவைக் கொண்டு கற்பித்தவன்" என்று கூறுகிறது. அதாவது இறைவன் இந்த வசனத்தின் மூலம் சொல்ல வருவது இதைத்தான். பேனா மூலம் எழுதப்பட்டவற்றை வாசித்து விளங்கி வாழுங்கள்.
நான்காவது வசனத்திற்கு விளக்கமாக தான் ஐந்தாவது வசனம் இடம் பெற்றுள்ளது. அந்த வசனம்; "மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு அல்லாஹ் (பேனாவின் மூலம்) கற்றுத் தந்தான்" என்பதுதான்.
முதன் முதலில் அருளப்பட்ட முதல் வசனம், "குர்ஆனை கற்றுக்கொள்!" என்று இல்லாமல் "வாசிக்க கற்றுக்கொள்!" என்றுதான் உள்ளது.
கேட்பது, பார்ப்பது, அனுபவித்து அறிவது, ஆய்வு செய்து அறிவது என பல கற்றல் வழிமுறைகள் இருந்தாலும் அவற்றில் முதன்மையானது "வாசித்தலே!" என இறைவன் வலியுறுத்துகிறான்.
மேலும் இந்த ஐந்து வசனங்களில் வாசிப்பதற்கான வழிகாட்டுதல்கள் இரண்டு இடம் பெற்றுள்ளது.
ஒன்று: இறைவன் பெயரால் வாசிப்பது..... எனவே வாசிப்பு பழக்கம் அல்லாஹ் நேசிக்கும் வகையிலான வாசிப்புகளாக அவை இருக்க வேண்டும். ஆபாசமான, அற்பமான நூல்களை வாசிக்க கூடாது. இறை சாபத்திற்கும், கோபத்திற்கு உள்ளான நூல்களை வாசிக்க கூடாது.
இறைவன் விரும்புவது போல் வாசிக்க வேண்டும். திருக்குர்ஆனில் முதல் வார்த்தையாக 'வாசி' என வந்திருப்பதால், முதலில் திருக்குர்ஆனை வாசிப்பது தான் இறைவனுக்கு விருப்பமானது என அனைத்து அறிஞர்களும் ஒருமித்து கூறுகிறார்கள்.
மேலும் மனித இனத்திற்கும், வாழும் பூமிக்கும், அண்டத்திற்கும் நன்மை விளைவிக்கும் வகையிலான நூல்களை வாசிக்க வேண்டும். அதைத்தான் இறைவன், "உம்மை படைத்தாள்பவனின் பெயரைச் சொல்லி வாசிப்பீராக" என்று முதல் வசனத்தில் கூறுகிறான்.
வாசித்ததை கொண்டு நாம் பெற்ற ஞானங்களை நாம் பெருமையாகக் கருதக்கூடாது. நமக்கு கிடைத்த ஞானங்கள் அனைத்தும் இறைவனால் அருளப்பட்டது என்ற மனநிலை இருக்க வேண்டும். அது இல்லை என்றால் ஷைத்தானுடைய நிலையை அடைய நேரிடும்.
பத்ரு யுத்தம் முடிவுற்ற பிறகு நபி (ஸல்) அவர்கள், "பிணைத்தொகை வழங்க முடியாத ஒவ்வொருவரும் 10 முஸ்லிம்களுக்கு எழுதவும், வாசிக்கவும் கற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம்" என அறிவுறுத்தினார்கள்.
அன்றைய தினத்தில் கல்வி தேவையை விட நபி (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாமிய அரசாங்கத்திற்கும் பணத் தேவையும், குரைஷியருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கைதிகளை தம் வசம் வைத்திருப்பதுமே அவசியத் தேவையாக இருந்தது.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தேவையை விட , கல்வித் தேவை தான் அத்தியாவசியமானது என உணர்ந்து அதையே தேர்ந்தெடுத்தார்கள்.
ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சிரியாக் மற்றும் ஹிப்ரு மொழிகளை தம் 13 ஆம் வயதிலேயே கற்றுக் கொண்டார்கள், நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் கடிதங்கள் எழுதுவதாக இருந்தால் இவர்களை அழைத்து தான் எழுதச் சொல்லுவார்கள். அதைப்போல் நபிகளாருக்கு வரும் கடிதங்களை வாசிப்பதற்கும் இவர்களே நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.
அதனால் நபி (ஸல்) அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டானது.
நபிகளாரோடு நெருங்குவதற்கு காரணம் வாசிக்கத் தெரிந்ததுதான்!
உலகில் முதல்முறையாக கல்வி புரட்சியை ஏற்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று உலக அளவில் படித்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகக் காணப்படுகிறது.
பலர் உலகக் கல்வியை படித்திருந்தாலும் அவர்களுக்கு மார்க்க அறிவில் அறவே சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த முஸ்லிம் பேராசிரியரிடம் இரண்டாவது கலீஃபாவின் பெயர் என்ன என்று கேட்ட போது அவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவர் புவியியல், அறிவியல் சார்ந்த அனைத்து செய்திகளையும் தெளிவுபடுத்துகிறார். இப்படிப்பட்டவர்களால் என்ன பயன்?
வாசிப்பில் முன்னேறாத ஒரு தேசம் பொருளாதாரத்திலும் முன்னேறாது. யூதர்கள் கூறுகிறார்கள். நாங்கள் அரபு தேசத்தைப் பற்றி அஞ்சுவதே இல்லை ஏனென்றால் அவர்கள் படிக்காதவர்கள்.
யூதர்கள் பொய்யர்களாக இருந்தாலும் அவர்கள் சொன்ன செய்தி உண்மையானது.
எனவே உலகத்தரம் வாய்ந்த செய்திகளை அறிவதோடு, தான் சார்ந்துள்ள இஸ்லாம் மார்க்க சம்பந்தமான செய்திகளையும் அறிந்து வைத்திருப்பதே உண்மையான அறிவு! எனவே இஸ்லாம் குறித்த செய்திகளையும் வாசியுங்கள்.
வாசிப்பு பழக்கத்தை எப்படி ஏற்படுத்துவது?
==============================
வீட்டில் உள்ள பெரியவர்கள் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தால் அதைப் பார்க்கும் பிள்ளைகளும் ஃபோனை பார்ப்பார்கள். டீவியை பார்த்தால் குழந்தைகளும் டீவியை பார்ப்பார்கள்.
இதையெல்லாம் மாற்ற நினைக்கிற தாய் தந்தை இருவரும் பிள்ளைகளுக்கு முன் அமர்ந்து, நீண்ட நெடுநேரம் நல்ல நூல்களை எடுத்து வைத்து வாசிக்க வேண்டும். அதே நேரம் உங்கள் குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற நல்ல புத்தகங்களையும் முன்னாள் வைத்து விட வேண்டும். அவர்கள் உங்களைப் பார்த்து வாசிக்க முன் வருவார்கள்.
நாளிதழ்கள், இஸ்லாமிய மாத இதழ்கள் வாங்கி வாசியுங்கள். நீங்கள் ரசித்து வாசித்ததை உங்கள் பிள்ளைகளையும் வாசிக்கச் சொல்லுங்கள்.
அவர்களிடம் சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பழக்கங்களை வளர்க்க வேண்டும்.
வாசிப்பதற்காக ஒரு இலக்கை தீர்மானிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பக்கமோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகமே என்று ஒரு இலக்கை நிர்ணயித்து வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.
பூக்கள், பறவைகள், விலங்குகள், நிறைந்த புத்தகத்தை புரட்ட கற்றுக் கொடுங்கள்.
வாசிப்பின் ஆர்வம் தானாகவே ஆரம்பித்து விடும்.
குழந்தைகளுக்கு பிறந்தநாளா? வீட்டில் விசேஷமா? பொம்மை போன்ற விளையாட்டுச் சாதனங்கள் வாங்கி பரிசளிப்பதை விட நல்ல புத்தகங்களை வாங்கி பரிசளிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
கதைகள் சார்ந்த நல்ல புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கி வழங்குங்கள். அவர்கள் விரும்பி வாசிப்பார்கள்.
ஒரு கல்லை உளி செதுக்கிச் செதுக்கி அழகிய சிற்பமாக மாற்றுவதுப் போல். புத்தகம், வாசிக்க வாசிக்க நம் பிள்ளைகளை அறிவுள்ள, பண்புள்ள சிறார்களாக மாற்றுகின்றது.
ஈரோடு தமிழன்பன் கூறுவார். பத்து பறவைகளோடு பழகி பாருங்கள்; நீங்கள் ஒரு பறவையாகி விட முடியாது. பத்து நதிகளோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் ஒரு நதியாகிவிட முடியாது. பத்து புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் பதினோறாவது புத்தகம் ஆவீர்கள்!
உங்கள் பிள்ளைகள் புத்தகப் பிரியர்களாக ஆனால், அவர்கள் பிற்காலத்தில் எதுவாக விரும்புகிறார்களோ அதுவாகவே ஆகி விடுவார்கள்.
வாசி - படி - ஓது :
================
நம்மில் பெரும்பான்மையானவர்கள் வாசி - படி - ஓது என்ற மூன்று சொற்களையும் ஒரே அர்த்தத்துடன் பார்க்கிறார்கள். ஆனால் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருள் உடையவைகளாகும்.
வாசி:- கண்களால் பார்த்து, நாவினால் மொழிந்து சொற்களின் அர்த்தத்தை உணர்தல்.
படி:- கண்களால் பார்த்து, நாவினால் மொழிந்து, சொற்களின் பொருளை விளங்கி மனதால் கிரகித்தல்.
ஓது:- கண்களால் பார்த்து, நாவினால் மொழிந்து, சொற்களின் அர்த்தத்தை விளங்கி, மனதால் கிரகித்து செயலாக உருவமைப்பது , அல்லது நடைமுறைப்படுத்துவது.
பொதுவாகவே வாசிக்கும் பழக்கம் பரவலான பின்னரே மக்களிடம் அறிவு முன்னேற்றம் ஏற்பட்டது.
கேட்டவைகளையும், தான் பேசியவைகளையும், தம் அனுபவங்களையும் எழுத்து வடிவமாக ஆக்கிய போதுதான் மனிதன் அறிவாளியாக ஆனான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எழுத்தாளர்கள் கூறுகிறார்கள்:
=============================
1. நான் தாய்வான் நாட்டிற்குச் சென்றிருந்த பொழுது, அங்கிருந்த நூலகத்திற்குச் சென்றேன். அப்போது நேரம் இரவு பதினொரு மணி. அந்நேரத்திலும் பல இளைஞா்கள் ஆா்வமுடன் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்ததைக் கண்டு நான் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
என்னை அழைத்துச் சென்ற நண்பா் சொன்னாா், ‘உலகத்திலேயே இந்த நூலகம்தான் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும்’ என்றார்.
நாட்டின் வளத்திற்கு பொருளாதாரம் மட்டுமன்று, நூலாதாரமும் இன்றியமையாதது.
2. நீங்கள் எந்தத் துறையில் வெற்றி பெற விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் வெற்றியடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளையும் அதைக் கடந்து வர கடைப் பிடித்த அணுகு முறைகளையும் அறிந்து கொள்ளுங்கள் . அவை எப்பொழுதோ நிகழ்ந்ததாக இருந்தாலும் இப்பொழுதும் நம் வெற்றிக்கு வழிகாட்டும்.
3. அனைவராலும் அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ள இயலாது. ஒரு பயண நூல், பல நாடுகளைப் பற்றிய அரிய பல தகவல்களை நமக்கு அளிக்கும். பல காட்சிகளை நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும்.
4. புத்தக வாசிப்பு மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்கும். வாசிப்பு பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் எதிகாலத் தலைமுறைகும் ஒரு பாலமாக இருந்து அறிவைக் கடத்துகின்ற செயலைச் செய்கின்றது.
5. முகநூல், வாட்ஸ்-அப் போன்ற வலைத்தளங்களில் இளைய சமுதாயத்தினர் பெரும்பாலான நேரத்தை விரயம் செய்கின்றனர். இலவச இன்டெர்நெட் என்ற வலையில் வீழ்ந்து பெரும்பாலான நேரத்தை வீணடிக்கின்றனர். இதில் வயது வித்தியாசம் இல்லாமல் செல்ஃபோனுக்கு அடிமையாகிவிட்டனர்.
வீடு, பொதுவெளி என எனக்குப் பார்த்தாலும் அனைவரும் தம் செல்ஃபோனை பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
6. ஒரு மனிதனால் உலகில் உள்ள அனைத்தையும் பார்க்க முடியாது; ஒருவர் சொல்ல கேட்க முடியாது; பலவற்றை உணர முடியாது. ஆனால் வாசிப்பின் மூலம் இவை அனைத்தையும் பெற முடியும்.
வாசிப்பின் பயன்கள்:
=======================
நூல் வாசிப்பு மனிதனுக்கு நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.
வாசிப்பதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்ப்பது மூலமும் கேட்பது மூலமும் ஒரு விஷயத்தை நாம் அறிவதைவிட வாசிப்பதன் மூலம் அறியும் விஷயம் நீண்டகாலத்திற்கு நினைவிலிருக்கும்.
சந்தோசமான, ஒளிமயமான வாழ்க்கையை நூல்களை வாசிப்போருக்கு அது ஏற்படுத்தித் தருகிறது.
கற்பனை ஆற்றல், பொறுமை, படைப்பாற்றல் போன்ற பல்வேறு நன்மைகளை வாசிப்பு தருகின்றது.
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ , M.A., M.Phil,.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
கட்டுரை எண் :- 1
உலகின் முதல்
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான்.
(அல்குர்ஆன் 33:21)
உஸ்வத் - முன்மாதிரி என்றால், "ஒருவரது செயல்களையும், நடவடிக்கைகளையும் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பது" என்று பொருள்.
33:21 வது வசனம் "அதீஉல்லாஹ வ அதிஉ ரஸூல - அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள்" ( 3 : 32) எனும் வசனத்தின் மறு பிரதிபலிப்புதான் என்று சொன்னால் மிகையல்ல!
ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் இடத்தில், நீங்கள் பின்பற்றி நடக்க வேண்டிய பல அழகிய முன்மாதிரிமிக்க நற் செயல்கள் இருக்கின்றது நீங்கள் பின்பற்றுங்கள்" என்பதுதான் 33:21 வது வசனத்தின் பொருள்.
உஸ்வதுன் ஹஸனா என்பதின் பொருள், "நீர் மகத்தான நற் நற்குணத்தில் இருக்கின்றீர் ;68:4" என்பதைத் தான் குறிப்பிடுகிறது என அநேக விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
மனித இனத்தில் எவருக்கும் வாய்க்கப்படாத நற்குணம் நபி (ஸல்) அவர்களிடத்தில் இருந்தது; அந்த குணம் குடிகொண்டிருந்த கோமான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துதான் அல்லாஹ் "உஸ்வதுன் ஹஸனா " என சொல்கிறான்.
நபி (ஸல்) அவர்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதும், அவர்களுக்கு எந்த வகையிலும் மாற்றம் செய்யாமல் இருப்பதுமே இதன் பொருள் என திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
أُسْوَةٌ حَسَنَةٌ எனும் சொல் திருக்குர்ஆனில் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளது. 33 : 21 / 60 : 4,6/
33 : 21 ஆம் வசனம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பேசுகிறது. 60 : 4,6 ஆகிய இரண்டு வசனங்களும் இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவரோடு இருந்த முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் குறித்துப் பேசுகிறது.
இன்றைய, "21 ஆம் நூற்றாண்டில் வாழ்வோரும் நபி (ஸல்) அவர்கள் மற்றும் இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றும் இப்ராஹீம் (அலை) அவர்களோடு வாழ்ந்த முஸ்லிம்கள் ஆகிய மூவரை நீங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றி நடங்கள்; அவர்களின் வாழ்வியல் உங்களுக்கு அழகிய வழிகாட்டுதலை தரும்" என அல்லாஹ் சாட்சி அளிக்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களையும் இணைத்துக் கொண்டு, "என் தோழர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்" ( திர்மிதீ ) என்று சொல்லி அவர்களையும் உஸ்வத்துன் ஹசனா எனும் உயரிய சொல்லில் இணைத்திருக்கிறார்கள்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் மக்கமா நகரத்தை பாதுகாக்கப்பட்ட நகரமாகவும், அருள் வளம் நிறைந்த நகரமாகவும் ஆகுவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அவ்வாறே அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டான்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோய் நொடியில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாகவும், மக்காவை விட அதிக அருள் வளம் நிறைந்த நகரமாகவும் ஆகுவதற்கு பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அதனையும் ஏற்றுக் கொண்டான்.
அந்த வரிசையில் தான் இப்ராஹீம் நபியும் அவரோடு இருந்தவர்களும் அழகிய முன்மாதிரியாக இருப்பது போன்று நபி (ஸல்) அவர்களும் அவரோடு வாழ்ந்த தோழர்களும் அழகிய முன்மாதிரி என்னும் சொல்லாடலுக்குள் கட்டுப்படுவார்கள்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மற்றும் இவ்விருவரை பின்பற்றியவர்களின் வாழ்வியலை நாம் பின்பற்றி வாழ பொது அனுமதி இருக்கிறது .
ஆனால் நம்மிடையே நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவரைப் பின் துயர்ந்தவர்களின் ஆதாரப்பூர்வமான வரலாறு இல்லை.
எனவே ஆதாரப்பூர்வமான வரலாறு உள்ள நபி (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் நாம் பின்பற்றி நடக்க கடமைப்பட்டுள்ளோம்.
அதைப்போல் மற்றொரு கருத்தையும் நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.
ஸூரதுல் அஹ்ஸாப் அருளப்பட்ட வரிசையில் 90 வது சூராவாகும். இந்த சூராவில் தான் 33 : 21 வசனம் அமையப் பெற்றுள்ளது. ஸூரதுல் மும்தஹினா அருளப்பட்ட வரிசையில் 91 வது சூராவாகும். இந்த சூராவில் தான் 60 : 4 ,6 ஆகிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
இப்ராஹிம் (அலை) அவர்களையும் அவருடைய தோழர்களையும் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருந்தாலும் அல்லாஹ் திருக்குர்ஆன் வழியாக முதன் முதலில் நபி (ஸல்) அவர்களைத்தான் "உஸ்வத்துன் ஹசனா - அழகிய முன்மாதிரி இருக்கிறது அவரை நீங்கள் பின்பற்றுங்கள்" என்று சொல்லி இருக்கிறான்.
அதற்குப் பிறகுதான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குறித்தும் அவருடைய தோழர்கள் குறித்தும் சொல்லி இருக்கிறான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
எனவே இறைவனால் உஸ்வத்துன் ஹசனா என முதன் முதலில் முன்மொழியப் பட்டவர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். அவர்களை கண்மூடித்தனமாக நாம் பின்பற்றலாம்.
மேலும், "குர்ஆன் மட்டும் போதும் நபிகளாரின் வழிகாட்டுதல் தேவை இல்லை, நபி மொழிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று சிலர் சொல்லுகிறார்கள். அவர்கள் 33 : 21 வது வசனத்தை கவனிக்க வேண்டும்.
"நபியிடத்தில் அழகிய முன்மாதிரிகள் இருக்கின்றது எனவே இவறை நீங்கள் பின்பற்றி நடங்கள்" என்று இந்த வசனம் சொல்வதால், குர்ஆனை மட்டும் பின்பற்றுவோர் இந்த வசனத்தை புறக்கணித்தவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்க தவறி விட்டார்கள்.
மேலும், மறுமை நாளை நம்புவோருக்கும் அல்லாஹ்வை நினைவு கூருவோருக்கும் நபியின் வாழ்க்கையில் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்றும் இந்த வசனம் பேசுகிறது.
அப்படி என்றால் மறுமை நாளை நம்பாதவருக்கும், ஏக இறைவனான அல்லாஹ்வை நினைக்காதவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரி இல்லையா? என்ற ஒரு கேள்வியை இந்த வசனம் உருவாக்கித் தருகிறது.
ஆமாம்! உண்மைதான்!! அல்லாஹுவையும் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் தான் நபியின் வாழ்வை பின்பற்றுவார்கள். இஸ்லாத்தை ஏற்காதவர்கள், நபியை உளப்பூர்வமாக ஒப்புக் கொள்ளாதவர்கள் நபியின் வாழ்வை எப்படி உண்மைப்படுத்துவார்கள்?
அதைப்போல், ஒருவர் அல்லாஹ்வை அதிகமாக நினைக்கும் போது அவர் ரசூலின் பக்கம் தேவையாகுவார்.
ஏனென்றால் அல்லாஹ்வை எப்படி நினைவு கூருவது என்று ரசூல் தான் வழிகாட்டி இருக்கிறார்.
எனவே ரசூலின் வழிகாட்டுதலை பின்பற்றுவதற்காக ரசூல் குறித்து தொடர் ஆய்வில் ஈடுபடுவோர் தொடர்ந்து ரசூலின் வழியில் பயணிப்பார். ரசூலை நோக்கிய அவரது பயணத்தின் முடிவு மிக மிகச் சிறந்ததாகவே இருக்கும்.
'குர்ஆன்' எழுத்து வடிவிலும், புத்தக வடிவிலும் நம்மிடையே இருக்கின்றது. இதே குர்ஆன் நடமாடும் மனித வடிவில் காண வேண்டுமானால் யாரைக் காண்பது என்பதற்கு பதிலாகத் தான் அல்லாஹுத்தஆலா இந்த வசனத்தை அருளி, நபிகள் நாயகத்தை நமக்கு முன்னிலைப்படுத்தி இருக்கின்றான்.
நபி (ஸல்) அவர்களை நாம் எந்த அளவிற்கு பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு அல்லாஹ்வின் பொருத்தம் நம் மீது உண்டாகும்.
நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரிமிக்க நபராக இருப்பது போல் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒவ்வொரு இன மக்களும் அழகிய முன்மாதிரிமிக்க மனிதர்களாக வாழ வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் உண்மையான நோக்கம்.
இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் முன்மாதிரிமிக்க பலர் வாழும் போது அவர்களைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்பதற்கும் அவர்கள் அழகிய வாழ்வியலை தேர்ந்தெடுப்பதற்கும் இது காரணமாக அமையும்.
எனவே அத்தகைய முன்மாதிரிமிக்க மாமனிதரின் வாழ்வியலை வாழ்ந்து காட்ட வாருங்கள் என அல்லாஹ் வரவேற்கின்றான்.
அருளப்பட்ட பின்னணி :
======°°°°°°°°°°==========
அஹ்ஸாப் - அகல் யுத்தம் நடைபெற்ற நேரத்தில் இந்த வசனம் அருளப்பட்டது. பத்தாயிரத்திற்கும் அதிகமான எதிரிகள் மதீனாவைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோது முஸ்லிம்கள் கலக்கத்தோடும், நடுக்கத்தோடும், பதற்றத்தோடும் இருந்தார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் பொறுமையாகவும், விழிப்புணர்வோடும், எதிரிகளைக் கண்காணித்த வண்ணமும் அமைதியாக இருந்தார்கள்.
பதட்டத்தோடும் பரிதவிப்போடும் இருந்த முஸ்லிம்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அமைதியாக இருப்பது போன்று முஸ்லிம்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பிய அல்லாஹ், " நபிகளாரின் வாழ்வில் அழகிய முன்மாதிரி இருக்கிறது அவரைப் போன்று நீங்களும் இருங்கள்" என்று இந்த வசனத்தை அருளினான்.
உஹது யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களின் பல் உடைந்த போதும், தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்த போதும் மற்றும் சொல்ல முடியாத பல துன்பங்கள் நேர்ந்த போதும் நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டாமல் அதே இடத்தில் நின்று யுத்தத்தை எதிர் கொண்டார்கள்.
அதுபோலவே இப்பொழுது அல் அஹ்ஸாப் போரிலும் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அவ்வாறே ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் நபிகளாரை பின்பற்றி போரில் இருந்து பின் வாங்காமல் உறுதியாக நின்று நபிகள் நாயகத்தின் கைகளை வலுப்படுத்த வேண்டும் என அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் ஸஹாபாக்களிடம் கூறுகிறான்.
உலக வரலாற்றை புரட்டிப் போட்ட உத்தமரின் முன்மாதிரி :
================================
மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கித் திளைத்த அரபியர்கள், எவருடைய பேச்சையும் கேட்க முன்வராத மூடர்கள், தாம் வணங்கி வந்த வழிபாட்டு முறையை முற்றிலும் துறந்து, மற்றொருவரின் சொல்லை கேட்டு அவரைப் பின்பற்றி, அவர் கூறிய வழிபாட்டு முறையையும், வாழ்வியல் முறையையும் தமதாக்கி இருக்கிறார்கள் என்றால் அந்த உத்தம நபியின் வாழ்க்கை முறை எவ்வளவு முன்மாதிரியாக இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்களின் சிறு பருவம் முதல் நடந்து கொண்ட விதம் என்று சொல்லலாம்.
நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக ஆகுவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தில் அவர்கள் தங்களது உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும், நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் வசீகரித்தது என்றால் அது மிகையாகாது.
நபி (ஸல்) அவர்கள் சிறு வயதிலிருந்தே ‘அல் அமீன், அஸ்ஸாதிக்' என்ற சிறப்புப் பெயர்களால் நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று சமுகத்தினரால் அடையாளம் காணப்பட்டவர் ஆவார்.
மேலும் முன்மாதிரி என்றால் ஒருவர், தான் வாழும் காலத்தில் இருந்த கலை, இலக்கியம், தலைமைத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒருவரைப் பார்த்து தான், "முன்மாதிரி மிக்க மனிதர்" என சொல்ல இயலும்.
அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும், இனி உலகம் உள்ளளவும் நபி (ஸல்) அவர்களே அனைத்துத் துறையினருக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக முன்மாதிரி மிக்க மா மனிதராக அன்றே வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதே உண்மை!
இவ்வளவு காலம் கடந்த பின்பும் கூட அவர்களது முன்மாதிரியானது அதனை அறியும் மக்களிடையே பெரும் தாக்கத்தையும், வாழ்வியல் புரட்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது அதிசயத்திலும் அதிசயம்.
ஒட்டுமொத்த மனித இனத்திலும் தான் அனுப்பிய நபி குறித்து அல்லாஹ் அறிமுகப்படுத்தும் போது, "அவர் ஓர் அழகிய முன்மாதிரி" என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறான் என்றால் அல்லாஹுவின் நற்சான்றிதழை பெற்ற மாமனிதரின் மேன்மை குறித்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவு செய்யப்பட்டதில்லை.
மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது.
அவர் வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும், அவர் வீட்டுக்கு வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே இங்கு பதிவாகி இருக்கின்றது.
அவர் கூறிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள் , பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள் என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகி இருக்கின்றது.
புகழ்மிக்க மனிதர்கள் அனைவரும் பேரரசுகளை நிறுவினார்கள். ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். இவை, அவர்கள் வாழும் காலத்திலேயே சிதைந்து விழுந்ததை கண்கூடாகக் கண்டார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் அவர்கள், அன்று மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார்கள்.
வென்றெடுக்க முடியாத வழிப்பாட்டு தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், மனித மனங்களையும் ஈர்த்து, அவற்றில் தமது கருத்துகளைப் பதித்தார்கள்.
மக்காவில் இருக்கும் போது எவ்வித ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார்களோ, அதே போன்று மதீனாவிலும் தாங்கள் அரசராய், எல்லாவித பொருள் வசதி, பணியாள் வசதி, இருப்பிட வசதி போன்றன இருந்தும் எளிய வாழ்க்கை முறையை மேற்கொண்டார்கள்.
Is the role model super man? -
ரோல் மாடல் சூப்பர் மேனா?
=================================
நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் சரியாக வளர்ப்பதற்கு முன்னுதாரணமாக காட்டத் தகுதியானவர் நபிகள் நாயகம் அவர்கள் மட்டுமே!.
பொதுவாகவே ஒன்றைப் பார்த்து தான் மற்றொன்றை உருவாக்க முடியும். ஒன்றைக் காட்டி தான் இது போன்று எனக்கு வேண்டும் என சொல்ல முடியும்.
அந்த வகையில் தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தது போன்று நமது பிள்ளைகளும் வாழ வேண்டும் என நாம் ஆசைப்படுகிறோம்.
ஆனால் இன்று உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் சக்திமான், ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன், அக்வா மேன், பேட்மேன், அயன் மேன் , பிளாக் பேந்தர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தார், அவெஞ்சர்ஸ் டீம் போன்ற கார்ட்டூன் வழி கதாநாயகர்களை உருவாக்கி, "இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி அடைவீர்" என்பது போன்று தொலைக்காட்சித் தொடர்களையும், சினிமாக்களையும், பிளே ஸ்டோரில் லட்சக்கணக்கான கேம் விளையாட்டுகளையும் எடுத்து நமது இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
இதனால் நமது பிள்ளைகளும், இளைஞர்களும், இளைஞிகளும் நாம் எவ்வாறான வாழ்வை வாழ்வது என்பதில் பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்.
அதே நேரம் இந்த சூப்பர் மேன் உருவாக்கத்தில் மற்றொரு கருத்தும் மறைந்திருக்கிறது. மேற்சொல்லப்பட்ட அத்தனை 'மேன்'களும் மக்களை காப்பது போலவும், உலகத்தை காப்பது போலவும் வடிவமைத்திருக்கிறார்கள்.
இவர்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்றுதான் அந்த கதாபாத்திரங்களை உருவாக்கியவர்கள் சொல்ல வருகிறார்கள்.
சமூகம் மிகப்பெரிய அளவில் சீரழிந்து வரும் வேளையில் இவ்வாறான கதாபாத்திரங்களை மனிதர்கள் யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இவ்வாறான கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் .
ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து நற்குணங்களையும், நற்செயல்களையும் ஒருங்கே பெற்ற உண்மை நாயகரான அண்ணல் நபி (ஸல்) அவர்களை நமக்கு அல்லாஹ் வழங்கி இருக்கின்றான்.
எனவே உங்கள் வீட்டுப் பிள்ளைகள் நல்லவர்களாக, உலகம் போற்றும் உத்தமர்களாக வளர வேண்டுமானால் நபிகள் நாயகம் குறித்த நற்செய்திகளை, வரலாறுகளை, சம்பவங்களை உங்களின் எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்கள் பிள்ளைகளுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருங்கள்.
அவர்களின் காதுகளுக்கும், கண்களுக்கும் சென்றடையும் வகையில் புத்தகங்களாக, பென்டிரைவுகளாக, புகைப்படங்களாக, வீடியோ காட்சிகளாக கண்ணுக்கு முன்னால் வையுங்கள்.
நீங்களும் கூட அதாவது பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது நபிகள் நாயகம் குறித்தும், இஸ்லாம் குறித்தும் பேசுங்கள்; படியுங்கள்; காட்சி ஊடகங்களில் பாருங்கள்.
அதன் காரணமாக உங்கள் பிள்ளைகள் வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் நபிகள் நாயகத்தை பின்பற்றி வாழ்வதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்வார்கள்.
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாத வரை, உங்கள் பிள்ளைகளை எந்த வகையிலும் நீங்கள் மாற்றிட இயலாது.
அறிவு ஜீவிகள்
போர்வையில் மூடர்கள் :
============÷=÷=÷÷÷÷====
சிலுவைப் போர்கள் நடைபெற்று வந்த காலத்தில் வாழ்ந்த உலக அறிஞர்கள் அனைவரும் நபிகள் நாயகம் குறித்து தவறாகவே பேசியும் எழுதியும் வந்தார்கள். அந்த வரலாறு இன்று நம்மையும் வந்தடைந்து இருப்பதை நாம் கண்டிருப்போம்.
சிலுவை யுத்தங்கள் முடிவுற்ற பிறகு தோன்றிய அறிஞர்கள் அனைவரும் நபிகள் நாயகம் குறித்து தமது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் நல்லதையே சொல்லி வந்தார்கள். அதையும் இன்று நாம் அறிவோம்.
ஆனால் இந்த நிமிடம் வரை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அறிஞர் பெருமக்களில் யாரும் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லி வந்த உண்மையான இறை நம்பிக்கையையும், அவரின் வாழ்வியலையும் முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்திட எவரும் முன்வரவில்லை. அதாவது இஸ்லாத்தில் இணையவில்லை. இது அவர்களின் அறியாமை என்று சொல்வதா?
அல்லது நபிகள் நாயகத்தை புகழ்வதின் மூலம் தாமும் புகழை பெறலாம் என எண்ணியதா?
என்று நமக்குள் அனேக கேள்விக்குறிகள் இருந்தாலும் அதையும் அல்லாஹ் விபரமாகவே தன் திருமறையில் கூறுகிறான்.
இறுதி நாளை உறுதியாக நம்புவோருக்கு இறுதித் தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது என்று (33 : 21 ) இந்த வசனம் கூறுகிறது.
எனவே அறிஞர்கள் என்று தம்மை சொல்லிக் கொண்டும், ஒரு மதத்துக்குள் இருந்து கொண்டும் பேசுகிற இவர்கள் மறுமை நாளை நம்பாதவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் தமது கிறிஸ்தவ, அல்லது யூத மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றான மறுமையை கூட நம்பாமல் தம் மதத்திற்கு துரோகம் செய்திருகிறார்கள் என்பதே உண்மை.
உலக மக்களில் அந்தந்த காலத்தில் வாழ்ந்த அனைவருக்கும், நிகழ்காலத்தில் வாழ்கிற மக்களுக்கும், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கும், ஒரே மாதிரியான வழிகாட்டுதலை வகுத்துத் தந்த ஒரே மாமனிதர் நபிகள் நாயகம் அவர்கள், இறைவனின் இறுதி இறை தூதர் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது ஏனோ!
நாம் நபியை எவ்வளவு பின்பற்றி இருக்கின்றோம்? :
===========================
நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபியுல் அவ்வல் மாதம் ஒவ்வொரு வருடமும் நம்மை வந்தடைகிறது.
நபி (ஸல்) அவர்களை நபி தோழர்கள் 23 ஆண்டு காலங்களாக கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றியது போன்று நாமும் கூட நபி (ஸல்) அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றி வர வேண்டும்.
அந்த வகையில் நாம் இப்பொழுது இந்த ஆண்டு நபி (ஸல்) அவர்களை எந்த அளவிற்கு பின்பற்றி இருக்கிறோம் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
நபித் தோழர்கள் 23 ஆண்டுகளில் பின்பற்றியதை நாம் 70 ஆண்டுகளிலோ, 80 ஆண்டுகளிலோ நபிகளாரை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என்பதை நினைவூட்டவே ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் நம்மை வந்தடைகிறது.
இப்பொழுது உங்களுக்கு வயது என்ன? நீங்கள் நபி (ஸல்) அவர்களை எவ்வளவு தூரம் பின்பற்றி இருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
அல் ஹகீமுத் திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; நான் நிலத்தில் விழுந்த பெருமழை.
மழை நீர் செடி கொடிகளைச் செழித்து வளர வைக்கிறது.
நீரற்ற பூமி வறண்டு விடுகிறது.
தூதை ஏற்பது மழை பெறும் பூமியை போன்றது.
தூதை மறுப்பது மழையற்ற வறண்ட பூமியை போன்றது.
அழகிய தூதரில் உஸ்வத் (அழகிய முன் மாதிரி) இருக்கிறது என்பது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதும் அவர்களின் வழிகாட்டலில் இருந்து மாறாதிருப்பதும் என்பதே பொருள்.
எனவே மழையை ஏற்றுக்கொள்ளும் பூமியை போன்று நபியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உடையவராக நாம் ஆகிவிட வேண்டும்.
மழை நீரை பருகிய மண் மகசூலை தருகிறது.
மா நபியை உள்வாங்கிக் கொண்டவர், தானும் இன்புற்று பிறவையும் இன்புறச் செய்வார்.
இன்றைய உலகில் தவறான வழிகளில் சென்று பல தோல்விகளையும், மீள முடியாத பிரச்சனைகளையும் அனுபவித்த பிறகு தான் சிலர் தமக்கு ஒரு ரோல் மாடல் - முன்மாதிரிமிக்க ஒரு மனிதரின் அனுபவங்கள், அவர் வெற்றி பெற்ற ரகசியங்கள் தேவை என தேடுகிறார்கள்.
"எவருடைய பேச்சையும் நான் கேட்க மாட்டேன், எவருடைய Advice - அறிவுரையும் எனக்கு தேவையில்லை, எனக்கென யாரும் Role Model- முன்மாதிரி இல்லை, நானே பெரிய அறிவாளி தான், எனக்கும் சொந்த புத்தி இருக்கிறது" என்று சொன்ன பலர் நெருக்கடியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களில் சிலர் அன்றாட பொலப்பு ஓட்டுவதற்கும் சிரமப்படுகிறார்கள். நோய் நொடிகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி புகைப்பழக்கம், போதைப் பழக்கம் போன்ற தவறான பழக்கங்களுக்கு ஆளாகி தன்னையும் சிரமத்தில் ஆழ்த்தி, பிறரையும் சிரமத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
தீய பழக்க வழக்கங்கள், தீய பேச்சுகள், தீய சிந்தனைகள், தீய பார்வைகள், தீய நடத்தைகள் உள்ளவர்களை Role Model - முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட்ட அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால் சிறைச்சாலைக்குச் சென்று பார்க்கலாம்.
படித்து உயர் பதவியில் இருப்பவர்கள், பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பவர்கள், மக்களால் புகழப்படும் மாமனிதர்கள் போன்ற அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு Role Model - முன்மாதிரிமிக்க ஒரு மனிதர் இருந்திருப்பார்.
அந்த ரோல் மாடலையும், அவரைப் பார்த்து வாழ்வில் வெற்றி பெற்றவர்களையும் நாம் நம் அன்றாட வாழ்வில் ஆங்காங்கே ஏசி அறைகளில் காணலாம்.
ஒரு நல்ல அரசியல்வாதி, ஒரு நல்ல அரசு உயர் அதிகாரி போல் ஆக வேண்டும் என நினைக்கும் ஒருவர் அதற்கான வழிகளை பின்பற்றத் தொடங்கினால் அவர் அந்த அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ ஆகும் வரை தன் முயற்சியில் பின்வாங்க கூடாது.
பின்வாங்கும் மனநிலை உடையவர்களாக இருந்தால் அந்த காரியத்தில் இறங்கவே கூடாது.
அல்லது தன் திறமைக்கு எது செய்தால் சாத்தியமாகும் என தீர்க்கமாக ஆலோசித்து , அதில் ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அந்த துறை சார்ந்தவர்களில் யார் ரோல் மாடல் - முன்மாதிரி மிக்கவராக இருக்கிறாரோ அவரை பின்துயர்ந்து வாழ்வில் வெற்றி பெறுவது அவசியம்.












































Comments
Post a Comment