தலைமை காஜி அவர்களின் பிறப்பும் படிப்பும் :
தலைமை காஜி அவர்களின் பிறப்பும் படிப்பும் : ============================= தலைமை காஞ்சி அவர்களின் இன்னும் சில முன்னோர்கள் : ========================== ஷம்சுல் உலாமா, காஜி, உபைதுல்லாஹ் அவர்கள் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் 1880 - 1927 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முதல் காஜி ஆவார்கள். இவர்களின் அடக்கத்தளம் திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் இருக்கின்றது. காஜி முஹம்மது ஹபீபுல்லாஹ் அவர்கள் 1928 - 1978 வரை சுமார் 50 ஆண்டுகாலம் ஹாஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத் தளமும் திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வாலாஜா மஸ்ஜிதில் உள்ளது. காஜி ஸைய்யது ஷா முஹம்மது (1978 - 1981 ) அவர்கள் காஜியாக இருந்து செயல்பட்டார்கள். இவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும்போது அங்கேயே வஃபாத் ஆகிவிட்டார்கள். அவர்கள் அடக்கத்தளம் ஜன்னத்துல் முஅல்லாஹ்வில் அமைய பெற்றுள்ளது. காஜி முஹம்மது அஜீஸுத்தீன் அவர்கள் 1982 - 1986 வரை காஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத்தளம் சிட்டி சென்டர் அருகில் உள்ள தஸ்தகீர் ஸாஹிப் தர்கா அடக்கத்தளத்தில் உள்ளது. இன்றுள்ள டாக்டர், காஜி, முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது ...