ஆணவத்தோடு வாழ்ந்தஆத் மக்களின் அழிவு :
ஆணவத்தோடு வாழ்ந்த
ஆத் மக்களின் அழிவு :
=====================
فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ۚ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ ۖ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ﴾
[ الأحقاف: 24]
தங்கள் பள்ளத்தாக்குகளை நோக்கி மேகங்கள் திரண்டு வருவதை அவர்கள் கண்டபோது "இது எங்களுக்கு மழை தரும் மேகம்" என்று கூறினார்கள்; "இல்லை! நீங்கள் விரைவாக எதை தேடினீர்களோ அதுதான் இது! அது ஒரு சுழல் காற்று; அதில் வதைக்கும் வேதனை உள்ளது" (என்று ஹூது நபி அவர்கள் கூறினார்கள்.)
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ﴾
ஏழு இரவுகள் எட்டு பகல்கள் அக்காற்றை அவர்கள் மீது (அல்லாஹ்) தொடர்ந்து வீச செய்தான்; வேரோடு சாய்ந்து விட்ட பேரித்த மரங்களின் அடிபாகங்களைப் போன்று சடலங்கலாக அந்த சமூகத்தினர் வீழ்ந்து கிடப்பதை நபியை நீர் காண்பீர்! 69:7
ஆத் சமுதாய மக்கள் குறித்து அல்லாஹ் மேற்கொண்ட வசனங்களில் பேசியிருப்பதை கண்டீர்கள்.
அவர்கள் வசித்த வீடுகளும் அவர்களின் சடலங்களும் இன்றும் சாட்சியாக இருக்கின்றது.
அதைத்தான் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில், "அவர்கள் சடலங்கலாக வீழ்ந்து கிடப்பதை நபியே நீர் காண்பீர்" என்று குறிப்பிடுகிறான். இன்று அகல் ஆய்வுகள் மூலம் அவர்களின் உடல்களை தோண்டி எடுத்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆத் சமுதாயத்தை அழிப்பதற்காக அல்லாஹ் பயன் படுத்திய காற்று ஒரு மோதிரத்தில் கல் வைக்கின்ற இடத்தின் அளவுதான் இருந்தது. அதன் மூலமே அவர்கள் (அனைவரும்) அழிக்கப்பட்டனர்.
பிறகு அங்கிருந்த கிராமவாசிகள்மீது அது (முதலில்) ஏவப்பட்டு நகரவாசிகள்மீது போட்டது. அதை நகரவாசிகள் கண்டபோது, "இது நமக்கு மழையைப் பொழிவிக்கப்போகின்ற கார்மேகம்; இது நம்முடைய பள்ளத்தாக்குகளை முன்னோக்கி வருகின்றது" என்று கூறினர்.
அதனுள் கிராமவாசிகள் இருந்தனர். கிராமவாசிகளையும், அவர்களின் கால்நடைகளையும் கொண்டுபோய் நகரவாசிகள் மீது போட்டுவிட்டது. அதன் பின்னர் அவர்கள் அனைவரும் அழிந்து போனார்கள்.
நூல்: தப்ரானீ
மேலும் விவரங்களுக்கு.....
Comments
Post a Comment