இந்தியச் சுதந்திரம் - 4 -

இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள்

==



இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பலரது பங்களிப்புகள் போதிய அளவு வெளிச்சத்திற்கு வரவில்லை. பலர் தங்கள் உயிரையும், உடைமைகளையும் இந்த விடுதலைப் போராட்டத்தில் தியாகம் செய்தனர். 

பல முஸ்லிம் தலைவர்களும், வீரர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி, சிறை சென்று, இந்நுயிர் நீத்தனர். 

நமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது.


இந்திய சுதந்திரப் போரில்  முஸ்லிம்கள் ஏன் அதிகம் ஈடுபட்டார்கள்?

==


'வீக்லி ஆஃப் இந்தியா' எனும் பத்திரிக்கையில் குஷ்வந்த் சிங் என்பவர், "முஸ்லிம்கள் தமது சதவீதத்தை விட அதிகமாக இந்திய சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்" என்று கூறுகிறார்.

முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்திற்காக அதிகம் தம்மை அர்ப்பணித்துக் கொண்டது ஏன் தெரியுமா? இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. 

ஒன்று : 

பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் (எதிரிகளிடம் சிக்கி இருக்கிறார்கள்;) 

அவர்களோ "எங்களைப் படைத்தாள்பவனே! அநியாயக்காரர்கள் நிறைந்த இந்த ஊரிலிருந்து எங்களை வெளியிடுவாயாக! எங்கள் காரியத்திற்குப் பொறுப்பேற்பவரை! உன் சந்நிதானத்திலிருந்து ஏற்படுத்துவாயாக! உன் சந்நிதானத்திலிருந்து எங்களுக்கு உதவியாளரை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்; 

இத்தகைய எதிரிகளிடமிருந்து விடுவிப்பதற்காக அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் ஏன் யுத்தம் செய்யாமல் இருக்கிறீர்கள்? 4:75 (காண்க 9:13)

عَنْ سَعِيدِ بۡنِ زَيْدٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْهِ وَسَلَّمُ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ، و وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِنَدَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ»

நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்;

யார் தன் நிலத்தை (நாட்டை) பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீத் - தியாகி ஆவார்.

யார் தன்னை பாதுகாத்து கொள்வதில் போரிட்டு கொல்லப்படுகிறோரோ அவரும் ஷஹீத் - தியாகி ஆவார்.

யார் தனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீத் - தியாகி ஆவார். நூல் : திர்மிதீ 1421


حب الوطن من نصف الايمان 

" தாய் நாட்டை நேசிப்பது இறை நம்பிக்கையில் சரி பாதிக்கு நிகரானது" என்றொரு பழமொழி உண்டு.

"அநீதிக்கு எதிராக போர் செய்" என திருக்குர்ஆன் கட்டளை இடுவதாலும், நபிகள் நாயகம் அவர்கள், "தன்னையும், தன் குடும்பத்தினரையும், தான் வசிக்கும் நாட்டையும் பாதுகாக்கும் போது இறந்து விட்டால் அவர் தியாகி - சொர்க்கவாதி " என்று சொல்லி உற்சாகப்படுத்தினாலும் முஸ்லிம்கள் சுதந்திர போரில் வீறு கொண்டு எழுந்து செயல்பட்டார்கள்.

இரண்டு : 

800 வருடம் இந்தியாவை இஸ்லாமியர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்; இஸ்லாமியரிடமிருந்து ஆட்சி பறிக்கப்பட்டதால் அதை மீட்க முதலில் களமிறங்கியவர்கள் முஸ்லிம்கள். 

மூன்று : 

ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் தலைமையகமாக துருக்கி இருந்தது; உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு தலைவர் கலீஃபா - ஆட்சியாளர் இருந்து வந்தார். அதை இந்த ஆங்கிலேயர்கள் தகர்த்தார்கள். 

ஒற்றை தலைமையை தகர்த்த வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என்பதற்காகவும் சுதந்திரப் போரில் முஸ்லிம்கள் அதிகமாக பங்கு கொண்டார்கள்.


கப்பல் ஓட்ட வேண்டிய தமிழர் ஹாஜி முஹம்மது ராவுத்தர் :

==

இந்தியர்கள் தனியாகக் கப்பல் வைத்திருக்க வேண்டும்; அதன் மூலமாகவும் வெளிநாட்டு வணிகங்களை செய்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காகபொருளாதார தேசபக்தியை (பொருளாதார தேசியவாதம்) இந்தியர்கள் கையில் எடுத்தார்கள்.

அதே நேரம் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி (BISNC) என்ற கம்பெனியின் கடல் போக்குவரத்து ஆதிக்கத்தை அகற்ற வேண்டும் எனவும்சுதந்திரப் போராட்ட முன்னெடுப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. செய்தார்கள். 

அதற்காக 1906 ஆம் ஆண்டு சுதேசி ஸ்டீம் நெவிகேஷன் கம்பெனி (Swadeshi Steam Navigation Company - SSNC ) எனும் பெயரில் தூத்துக்குடியில் இந்த கம்பெனியை நிறுவினார்கள். இந்த கம்பெனியில் 15 பேர் கொண்ட நிர்வாக சபை இருந்தது. 

அதில் துணைச் செயலாளராக வ. உ. சிதம்பரனார் பிள்ளை இருந்தார். இதன் செயலாளராகவும் இரண்டு லட்சம் ரூபாய்களை நன்கொடையாகவும் கொடுத்தவர் ஹாஜி முஹம்மது ராவுத்தர் என்பவர் ஆவார்.

ஆறு மாத காலமாக இந்தியா என்னும் பத்திரிகை மூலம் பாரதியார் அவர்கள் சுதேசி கப்பல் வாங்குவதற்காக வசூலித்த தொகை சுமார் 5000 ரூபாய் மட்டுமே!( 215 ரூபாய் 13 ஆனா என்றும் ஒரு கூற்று உள்ளது)

இவ்வாறு கிடைத்த பணத்தில் ஒரு முன் தொகையை முதலில் செலுத்தி எஸ். எஸ். கலியா (SS Gallia ) என்ற கப்பலை Shawline Steamers Company எனும் ஃபிரான்ஸ் கம்பெனியிடமிருந்து வாங்கி தூத்துக்குடிக்கும் இலங்கைக்கு பயணிகள் கப்பலாக விட்டார்கள். பின்னர் எஸ். எஸ். லவோ (SS Lawoe) என்ற பெயரில் மற்றொரு கப்பலை வாங்கி இதே வழித்தடத்தில் விட்டார்கள்.

சுதேசி கப்பல் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் 1908 ஆம் ஆண்டு வ. உ. சிதம்பரனார் பிள்ளை அவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்கள்; அவரை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் முஹம்மது யாசின் எனும் இஸ்லாமியர் வெள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

செயலாளராக இருந்தவரை பெரிதாகப் பேசுவார்களா? அல்லது துணைச் செயலாளராக இருந்தவரை பெரிதாகப் பேசுவார்களா? நீங்களே சொல்லுங்கள்.

செயலாளராக இருந்தவரைதானே இந்த சமூகம் பெரிதுபடுத்தி கௌரவித்து கண்ணியப்படுத்தி இருக்க வேண்டும்? 

அதிகமாக காசு கொடுத்தவரை தானே இந்த சமூகம் வானளாவப் புகழ்ந்து பெரிது படித்திருக்க வேண்டும்? 

அப்படி என்றால் ஒரு முஸ்லிமின் பெயர் எந்த வகையிலும் பெரிதாகப் பேசப்படக்கூடாது என்பதில் ஆட்சியாளர்களும், மற்றவர்களும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் இஸ்லாமியரின் பெயரை மறைத்து இருக்கிறார்கள் பாருங்கள்.

வ. உ. சிதம்பரனார் பிள்ளை அவர்கள் மீது நமக்கு எந்த பொறாமையும் இல்லை; அவரும் புகழப்படுவதற்கும், மிகப்பெரிய அளவில் பேசுவதற்கும் தகுதியானவர் தான்; அதை நாம் குறை கூறவில்லை; ஆனால் ஒரு முஸ்லிமை மறைத்ததும் மறக்கடிக்கச் செய்தது தவறு தானே? 

ஏதேனும் ஒரு பாட நூலில் அல்லது வரலாறு போதிக்கப்படும் கல்லூரி நூல்களில் ஒரு முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி நீங்கள் கேள்வி எழுப்பப்பட்டுள்ளனர் இருக்கிறீர்களா? படித்திருக்கிறீர்களா?

டெல்லி இந்தியா கேட்டில் ஏறத்தாழ 95,300 சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் உள்ளன; அதில் 61,945 பெயர்கள் இஸ்லாமியர்களுடையது என அரசு ஆவணங்கள் சாட்சி சொல்கிறது; ஆனால் ஒரு முஸ்லிமுடைய பெயர் கூட எந்த ஆட்சியாளர்களாலும் சுதந்திர தினத்தன்று பேசப்படுவதில்லை; படங்கள் திறக்கப்படுவதில்லை ஏன்?

காசு கொடுப்பதற்கும் குண்டடிப்பட்டு சாவதற்கும் முஸ்லிம்கள் வேண்டும்; சுகங்களை மற்றவர்களை அனுபவிக்கா? 

இஸ்லாமியர்களின் தியாகங்களை மறைத்து வருவதும்; மறைத்து வரும் செயலை தொடர்ந்து செய்வோரையுமே நாம் உங்களை காட்டிக் கொடுக்க விரும்புகிறோம்.

"கப்பலோட்டிய தமிழர் ஹாஜி முஹம்மது ராவுத்தர்" என்ற வரலாற்றில் பதிவாகி இருக்க வேண்டிய பெயர் இல்லாமல் போனதில்தான் வருத்தம்!


கொடிப் போர் தியாகிகள் :

==


இந்தியாவில் சுதந்திரப் போர் பல வடிவங்களில் அரங்கேறிக் கொண்டிருந்த போது 1930க்கும் 1940க்கும் இடையே கொடிப்போர் - கொடி சத்தியாகிரகம் என்ற போராட்டம் நடைபெற்றது.

அதாவது பிரிட்டிஷ் இந்தியாவில் இந்திய சுதந்திரக் கொடியை தூக்கிச் செல்வது மாபெரும் குற்றமாக கருதப்பட்டது; அதற்காக அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் குறைந்தபட்சம் ஆறு மாத தண்டனையும், ஃபைன் தொகையும் கட்ட வேண்டி இருந்தது.

2/4/1932 அன்று திருப்பூரில் கொடிப்போர் நடைபெற்றது; அதில் குமரன் என்கிற இளைஞர் தன் சுதந்திரக் கொடியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இறந்தார். 

அவரை போலீசார் அடித்தே கொன்றார்கள்; அதனால் அவர் கொடிக்காத்த குமரன் எனும் அழகு பெயரில் அழைக்கப்படுகிறார்.

அதே நாளில் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் கொடிப் போர் நடந்தது. திண்டுக்கல்லில் நடந்த கொடிப் போரில் மைதீன் கான் என்பவர் கைது செய்யப்பட்டார்; சென்னையில் நடந்த கொடிப் போர் ஆர்ப்பாட்டத்தில் அப்துல் லத்தீஃப், அக்பர் அலீ ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

மீண்டும் மறு வருடம் சென்னையில் நடந்த கொடிப் போர் போராட்டத்தில் ஏற்கனவே சிறையில் இருந்து வெளிவந்த அப்துல் லத்தீஃப் என்பவரும் அப்துல் ரஹீம் என்பவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்தனர். 

மற்றொரு முறை நடந்த கொடிப்போர் ஆர்ப்பாட்டத்தில் மதுரையில் வாவு சாஹிப் என்பவரும், சென்னையில் ஷேக் பாவா சாஹிப் என்பவரும் பிடிபட்டு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவித்தார்கள்.

பதிவுகளின் அடிப்படையில் ஏழு முஸ்லிம்கள் கொடியை உயர்த்திப் பிடித்து கடும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் குறித்தெல்லாம் ஏதேனும் ஒரு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதா? இது போன்ற இஸ்லாமியர்களின் பெயர்களில் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்படுகிறதா?  

இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அன்றும் இன்றும் பாடுபட்டு வரும் அனைவரையும் நாம் சமமாக மதிக்க வேண்டும் சரியான நடவடிக்கையாகும்.


கல்லுக்கடை மறியலில் முஸ்லிம்கள் 

==


25/1/1922 அன்று மதுரை கோரிப்பாளையத்தில் கல்லுக்கடை மறியல் நடந்தது. 

இந்தக் கூட்டம் காந்தி அடிகளாரின் தலைமையில் நடக்கப் போவதாக சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் கல்லுக்கடை மறியல் தொடங்கியது; அன்று பல்வேறு வேலைகள் நிமித்தம் காரணமாக காந்தியடிகளார் கலந்து கொள்ளவில்லை. 

பொதுவாகவே அன்று கல்லுக்கடை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம், அகிம்சை போராட்டம் என்று மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள மாட்டார்கள். 

ஏனெனில் ஒவ்வொரு போராட்டத்திற்கும் மறியலுக்கும் குறிப்பிட்ட காலம் சிறை தண்டனை கட்டாயமாக வழங்கப்படுகிறது. 

எனவே கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டால் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என சட்டம் இருந்தது.

ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டும்; இருக்க முடிந்தவர்கள் மட்டுமே இது போன்ற மறியல்களில் ஈடுபடுவார்கள். 

இன்றெல்லாம் மறியலில் ஈடுபட்டால் நல்ல திருமண மண்டபத்தில் தங்க வைத்து பிரியாணி, தயிர் சோர் என மாலையில் அனுப்பி வைத்து விடுவார்கள். 

தடை செய்யப்பட்ட மரியால்களில், போராட்டங்களில் கலந்து கொள்வோருக்கு கடுங்காவல் தண்டனை எனும் பெயரில், எவருக்கும் வழங்கப்படாத கடுமையானது வேலைகளை வழங்குவார்கள்; அதனால் போதிய உணவும், ஓய்வும் இன்றி சிரமப்படுவார்கள்.

இதையெல்லாம் அறிந்த அன்றைய மாபெரும் நகரான மதுரையில் கல்லுக் கடை மரியலுக்கு வெறும் பத்தொன்பது நபர்கள் மட்டுமே வந்திருந்தார்கள்; அதில் பத்துப் பேர் முஸ்லிம்கள்.

அன்று மதுரையில் 5% சதவீத முஸ்லிம்கள் இருந்திருந்தால் ஒருவர் வந்திருந்தாலே போதுமானது;

அன்று இருந்த இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 25% சதவீதம் முஸ்லிம்கள் இருந்தனர்; அந்த அடிப்படையில் நான்கு பேர் வந்திருந்தால் போதுமானது; 

ஆனால் 55% சதவீத முஸ்லிம்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்; மற்ற எல்லா மதத்தினரும் சேர்ந்து 45% சதவீதம் மட்டுமே கலந்திருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் சுதந்திர தாகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறைக்கு செல்வதற்கும் சிரமங்களை அனுபவிப்பதற்கும் அந்த முஸ்லிம்கள் தேவைப்பட்டனர்; பதவிகள், பட்டங்கள் என வரும் பொழுது பவ்யமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள்.


முதல் சிப்பாய் கழகம் 1806 :

==


வெள்ளையர்கள் இந்தியா முழுவதையும் ஆக்கிரமித்த பிறகு இந்தியர்களின் மத உணர்வுகளில் தலையிட்டார்கள்.

அதாவது இந்தியாவை ஆக்கிரமித்த பிறகு ராணுவத்தை வலுப்படுத்துவதற்காக இந்தியர்களை காவல்துறையிலும், ராணுவத்திலும் பணிக்கு அமர்த்தினார்கள்.

ஏற்கனவே பல அரசர்களிடம் வேலை பார்த்த காவலர்கள், தமக்கு இதைத்தவிர வேறு வேலைகள் தெரியாது என்பதாலும், வறுமையின் காரணமாகவும் வெள்ளையர்களிடம் பணிக்குச் சேர்ந்தார்கள்.

தாடி வைக்கக் கூடாது, பொட்டு, பட்டை போன்ற மத அடையாளங்கள் எதுவும் சிப்பாய்களுக்கு இருக்கக் கூடாது; மத உணர்வுகளை பாதிக்கும் வகையில் ராணுவ உடையை உடுத்த வேண்டும், தலையில் குல்லா அணிய வேண்டும், கையில் ஒரு வகையான பட்டை அணிய வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்கள்; நிர்பந்தப்படுத்தினார்கள். 

இவை அனைத்தும் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்று வேலையை செய்வதுபோல் தோன்றியது.

மேலும் அந்த இடத்தில் என்ஃபீல்ட் ரைபிள் என்ற புதிய துப்பாக்கி வந்திருந்தது. அதன் தோட்டாக்கள் (கார்ட்ரிட்ஜ்கள்) பிளாஸ்டிக் காகிதத்தில் மடிக்கப்பட்டு இருக்கும். அந்த துப்பாக்கி தோட்டாக்களில் பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டுக் கொழுப்பு ஆகியன கலந்து தோட்டாக்கள் மற்றும் குண்டுகள் ஈரமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

இதை உபயோகப்படுத்தும் சிப்பாய்கள் பிளாஸ்டிக் பேப்பரை வாயில் கடித்து இழுப்பார்கள். அதனால் பன்றிக் கொழுப்பு முஸ்லிம்கள் நாக்கில் பட்டுவிடும்; பன்றியின் எந்த ஒரு பகுதியையும் முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடாது - ஹராம் என மார்க்கம் தடுக்கப்பட்டுள்ளது.  

மாடு இந்துக்களுக்கு புனிதமானது; அதன் கொழுப்பு இந்துக்களின் நாக்கில் பட்டுவிடும் நிலை இருந்தது; எனவே இரு சாரரும் இதை கடுமையாக எதிர்த்தார்கள்.

ஆனால் ஆங்கிலேயர்கள் நிர்பந்தப்படுத்தி தோட்டாக்களை உபயோகப்படுத்தினார்கள். 

அதனால் கனன்று கொண்டிருந்த நெருப்பு மிகப்பெரும் கிளர்ச்சியாக 10/07/1806 அன்று வேலூரில் (வேலூர் கிளர்ச்சி) வெடித்தது. இந்தக் கிளர்ச்சியை அடக்க ஆற்காடு படையினர் வந்து கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினார்கள். அதில் 350 பேர் இறந்து போனார்கள்; 350 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்; கிளர்ச்சி அடங்கிய பிறகு கிளர்ச்சிக்கு காரணமான நூறு பேரை தூக்கிலிட்டார்கள்; இவர்களில் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.

அதாவது 90 சதவீதம் என்றால் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் களத்தில் மரணித்தார்கள்; தூக்கிலிடப்பட்ட நூறு நபர்களில் 80க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள். 

கை, கால், கண் என மிகக் கடுமையாக அடிபட்டவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள்.

இந்தக் கிளர்ச்சியில் திப்பு சுல்தானின் மகன்கள் முழுமையாக ஈடுபட்டிருந்தனர்; அந்த கிளர்ச்சியின் போது வேலூர் கோட்டையில் புலி கொடியை ஏற்றி வைத்தனர்; மறுநாள் நிலவரம் மேற்சொன்னது போல் தலைகீழாக மாறி புலிக்கொடி இறக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் சுதந்திரப் போர் மிக வீரியமாக செயல்படத் தொடங்கியது.

இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்ட முஸ்லிம்கள் இந்தியா முழுவதிலும் கொத்துக் கொத்தாக விதைகளாக வீழ்ந்தார்கள்.

ஆனால் இந்த சிப்பாய் கழகத்தை, வேலூர் புரட்சியை இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் சுதந்திரப் போராகவே கருதுவதில்லை.

கௌரவ பட்டங்களை தூக்கி எறிந்த முஸ்லிம்கள் :

==============∞=


சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இஸ்லாமியர்களுக்கு மரியாதையும் அந்தஸ்தும் உடையவர்களை தன்வசப்படுத்திக் கொள்ளும் விதத்தில் பல்வேறு ஆங்கிலேயர்கள் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்கள். 

ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணமும் செயலும் முஸ்லிம்களிடையே வேரூன்றிய போது தமக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தார்கள். 

இந்தப் பட்டங்களில் ஒன்று இருப்பவருக்கு அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பெரும் மரியாதையும், அந்தஸ்தும், சலுகையும் கிடைக்கும். 

இவர்களுடைய பேச்சு அரசு அலுவலர்களால் ஏற்று செயல்படுவது; எதையும் சாதித்துக் கொள்ளலாம்; அந்த கண்ணியங்களை தூக்கி எறிந்து விட்டுதான் முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள்.

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களின் பெயர்கள்: 

==

1. ராய் பஹதூர் - ராய் பகதூர் சிறந்த அரசுப் பணிக்கு வழங்கப்பட்டது.

 2. ராய் சாஹிப் - ராய் சாஹிப் சிறந்த சேவைகளுக்கு வழங்கப்பட்டது, ஆனால் "பஹதூர்" க்கு கீழானது.

3. தீவான் பஹதூர் - திவான் பகதூர் உயர் நிலை அரசுப் பணிக்கு அல்லது நல்லாட்சி பணிகளுக்காக வழங்கப்பட்டது.

4. கான் பஹதூர் - கான் பகதூர் முஸ்லிம் சமுதாயத்தவர்களுக்கு உள்ள செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டது.

5. கான் சாஹிப் - கான் சாஹிப் "கான் பஹதூர்" க்கு கீழான பட்டம்.

6. சர்தார் பஹதூர் - சர்தார் பகதூர் சிலர் சாதனைகள் மற்றும் இராணுவத்தில் சாதித்ததற்காக வழங்கப்பட்ட சிறப்பு பட்டம்.

7. நவாப்/ நவாப் பஹாதுர் - நவாப் / நவாப் பகதூர் முஸ்லிம் அரச குடும்பங்களுக்கான பெயர் அல்லது விருதுப் பட்டம்.

8. சர் பட்டம் - சர் இங்கிலாந்து மன்னரால் நேரடியாக வழங்கப்பட்டது (நைட் இளங்கலை, கேசிஎஸ்ஐ, முதலியன)

1950 களில் இந்திய குடியரசு அமைந்த பிறகு இந்த பட்டங்கள் செல்லாதவையாக ஆகின.


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 

மந்திரி சபையில் ஐந்து முஸ்லிம்கள்

==


இந்தியாவில் சுதந்திர போர் பல்வேறு வகைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

ஜனநாயக முறைப்படி போராட்டம், உப்பு சத்தியாகிரகம், ரயில் மறியல், கல்லுக்கடை மறியல், ஒத்துழையாமை, கொடி போர், அஹிம்சை, சுதேசி என பல பெயர்களில் பல நபர்களால் அன்றைய இந்தியாவான மியான்மர், பங்களாதேஷ், பாகிஸ்தான், இன்றைய இந்தியா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் உட்பட இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் நடந்து கொண்டிருந்தது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஆயுத வழி போராட்டம் நடத்தினர்.

ஆயுத வழி போராட்டத்தை மேம்படுத்துவதற்காக 21/ அக்டோபர் / 1943 அன்று ஆசாத் ஹிந்த் அரசு Azad Hind Arasu எனும் பெயரில் ஒரு அரசாங்கத்தை நிறுவினார். 

இதற்குள் ஒரு அரசாங்கம் செயல்படுவதற்குத் தேவையான அனைத்து உட்பிரிவுகளையும் நிறுவினார்; அதில் தேசிய இராணுவம் (INA – Indian National Army) பிரிவையும் நிறுவினார்.

மேலும் 20 மந்திரிகளை கொண்ட ஒரு மந்திரி சபையை அமைத்தார். அவர்களில் ஐந்து பேர் முஸ்லிம்கள் அவர்கள். 

1. இஹ்ஸான் காதிரி 

2. ஷாநவாஸ்கான் 

3. அறிஞர் MZ கரீம் கனி இளையான்குடி 

4. அஜீஸ் அஹமது 

5. NS ஃபஹத்

அன்றைய இந்தியாவில் 25 % சதவீதம் பேர் முஸ்லிம்கள் இறந்தனர்; அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தமது மந்திரி சபையில் 25 % சதவீதம் அளவிற்கு 5 மந்திரிகளை இடம்பெறச் செய்தார்.

இந்த அரசாங்கத்தை வழி நடத்துவதற்காக சிங்கப்பூர் , மலேசியா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிதி திரட்டினார். ஆனால் போதிய நிதி கிடைக்கவில்லை. 

ராணுவத்தை வழி நடத்துவதற்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்கும் பல செலவினங்களுக்கும் போதிய பணம் எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மியான்மரில் உள்ள பர்மாவிற்கு சென்றார்கள்; அங்கே முஸ்லிம்களும் செட்டியார்களும்தான் அதிகம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு உதவி செய்வதாக தெரிந்தாலே அவர்களை கைது செய்து, அவர்களுடைய வியாபாரங்களை முடக்கும் பிரிட்டிஷ் அரசு வதம் செய்து கொண்டிருந்த நேரம் அது. எனவே எவரும் உதவி செய்ய முன்வரவில்லை. அவரிடம் முகம் கொடுத்து பேசவும் முன் வரவில்லை.

இந்நிலையில் வள்ளல் ஹபீப் முஹம்மது அவர்களிடம் சென்று நிலைமையை விளக்கினார். 

வள்ளல் ஹபீப் முஹம்மது அவர்கள், நீங்கள் எதிர்பார்த்து வந்திருக்கக் கூடிய தொகையில் இதுவரை எவ்வளவு கிடைத்திருக்கிறது என்று சொல்லுங்கள் மீதியை நான் தந்து விடுகிறேன்" என்று கூறினார்கள். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் நான் ஒரு கோடி ரூபாயை எதிர்பார்த்து வந்தேன்; ஆனால் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான தொகை கிடைக்கவில்லை" என்று கூறினார்.

வள்ளல் ஹபீப் முஹம்மது அவர்கள், "என்னிடம் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் உள்ளன; அவை அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன்; வைத்து நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை முழுமையாக செய்து முடிக்கவும்" என்று கூறினார். 

தமது சொத்துக்களை விற்றும், கையிருப்பு பணமாக இருந்ததை கொடுத்தும், நகைகளாக இருந்ததை வழங்கியும் தமது வாக்கை நிறைவேற்றினார். 

வெறும் கையோடு தமிழகத்திற்கு திரும்பிய இவருக்கு சொந்த வீடு இல்லை. இவர் இறந்து போகும்போது வாடகை வீட்டில் தான் இவரது ஜனாஸா இருந்தார். 

அன்று அவர் வழங்கிய ஒரு கோடி ரூபாய் என்பது இன்று பத்தாயிரம் கோடிகளுக்கு சமமானது என்று சொன்னால் மிகை அல்ல!

ஒரு போரின் போது நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் உதவி கோரினார்கள்; அவரவரும் அவரவருடைய வசதிக்கு ஏற்ப பொருக்கான நிதியை கொடுத்தார்கள்.

அந்த பொருக்கான நிதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் கொண்டு வந்து நபிகளாரின் காலடியில் சமர்பித்தார்கள். 

வள்ளல் ஹபீப் முஹம்மது அவர்களின் செயலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் செயலுக்கு ஒத்துழைக்கிறது.

இவ்வளவு உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கிய இஸ்லாமியர்களை இந்திய அரசு, ஒவ்வொரு மாநில அரசும் மாற்றான் தாய் பிள்ளையாகவே பார்த்து, நடத்தியும் வருகின்றது; இந்த வேதனை எப்பொழுது திருமோ?

(மியான்மர் 1937 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.)


இரத்தக் கலரியாக மாறிய ஒரு பள்ளிவாசல் :

==

உத்திரப்பிரதேசம் தேவ்பந்த் எனும் ஊரில் கூனி மஸ்ஜித் (இரத்தம் படிந்த ) எனும் பெயரில் ஒரு பள்ளிவாசல் உள்ளது.

இந்தப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது வெள்ளையர்கள் பள்ளிவாசலுக்கு வெளியே அணிவகுத்து நின்று கண்மூடித்தனமாக சுட்டார்கள். 

அதில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தார்கள். அதாவது தொழுது கொண்டிருந்தவர்களில் எவரும் உயிரோடு பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லவில்லை. 

இந்தப் பள்ளிவாசல் இப்பொழுதும் உள்ளது. சுவற்றில் குண்டு பதிந்த தடங்களும், சுவற்றில் இரத்தக் கறை படிந்த காட்சியும் இப்பொழுதும் சாட்சியாக இருக்கின்றது.

இன்று இந்தப் பள்ளிவாசல் தொல்லியல் - தொல்லியல் துறை டிபார்ட்மெண்ட் வசம் உள்ளது.

முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை அன்று பள்ளிவாசலில் ஒன்று கூடும்போது இமாம் - தலைவர் அரை மணி நேரம் இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமாக உரை நிகழ்த்துவது வழக்கம்; சுதந்திரப் போரின் போது இமாம்கள் சுதந்திரப் போரின் முக்கியத்துவம் குறித்துப் பேசி சுதந்திரத் தாகத்தை உண்டாக்கினார்கள். 

மேலும் வெள்ளையர்கள் பேசும் ஆங்கில மொழியை கற்பது ஹராம் - மாபெரும் தவறு என்றும், வெள்ளையர்களைப் போல் பேன்ட் - முழுக்கால் சட்டை அணிவது, தலை முடி - கிராப் வெட்டுவது ஹராம் - மாபெரும் தவறு என்றும் உரை நிகழ்த்தினார்கள். 

தொழுகை, நோன்பு, ஹஜ் கடமைகளைப் போன்றே சுதந்திரத்திற்காக போராடுவதும் கடமைகளில் ஒன்று என்று உரக்கச் சொன்னார்கள். அதை ஏற்று இஸ்லாமியர்கள் செயல்பட்டார்கள். 

வழிப்பாட்டுத்தளத்தை சுதந்திரப் போராட்டத் தளமாக மாற்றியவர்கள் முஸ்லிம்கள் மட்டுமே!

சீக்கியர்கள் குருத்வாராவில் சுதந்திரம் குறித்துப் பேசவில்லை; 

பாரசீகர்கள் (Zoroastrians - ஜொராஸ்டின்ஸ்) தமது அக்னி ஆலயங்களில் சுதந்திரம் குறித்துப் பேசவில்லை;

பௌத்தர்கள் தமது விகாரில் (விஹாரா) சுதந்திரம் குறித்துப் பேசவில்லை; 

கிறிஸ்தவர்கள் தமது ஆலயங்களில் சுதந்திரம் குறித்துப் பேசவில்லை; 

ஜெயினர் தமது தேர் - தேராசர் எனும் ஜெயின கோவிலில் சுதந்திரம் குறித்துப் பேசவில்லை;

இந்துக்கள் தமது கோவில்களில் சுதந்திரம் குறித்துப் பேசவில்லை; முஸ்லிம்கள்தான் பேசினார்கள்.

அதனால்தான் சும்மா இருக்கும் மக்களை தூண்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களை கொல்வதற்கு வெள்ளையர்கள் பள்ளிவாசலில் ஒன்று கூடினார்கள்; கொன்று குவித்தார்கள். 

ஒரே இடத்தில் ஒரே சமூகம் சார்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டால் அது முஸ்லிம்கள் மட்டும்தான்!

உயிரையும், உடைமைகளையும் கொடுக்க முஸ்லிம்கள் வேண்டும்; ஆனால் அவர்களுக்கு நல்ல பெயரை கொடுக்க மற்றவர்கள் முன்வர வேண்டாமா?

இந்திய வரலாற்றை மாற்றவும், நீக்கவும், திருத்தவும், திரிக்கவும் முனையும் அனைவரையும் வேரறுப்போம்.

இன்று இஸ்லாமியர்களின் வரலாற்றை மாற்றவும், திரிக்கவும் செய்வோர் நாளை மற்றவர்களின் வரலாற்றையும் மாற்றுவார்கள்; எச்சரிக்கையாக இருங்கள்.

இன்று ஒரு சமூகத்திற்கு நடப்பது, நாளை மற்றொரு சமூகத்திற்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?


இந்தியாவின் முதல் பிரதமர் 
ஒரு முஸ்லிம் & மவ்லவீ
==




1915 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியாவின் புரட்சியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆயுதம் தாங்கிய போராட்டங்களை முன்னெடுத்தனர். வேண்டும் என்பதற்காக ஒரு அரசை நிறுவினார்கள்; அதன் பெயர் Provisional Government of India (நாடுகடந்த இந்திய அரசு - government-in-exile) 

அதன் முதல் பிரதமராக மௌலானா பரக்கத்துல்லாஹ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கட்சித் தலைவராக ராஜா மகேந்திர பிரதாப் சிங் என்பவரும், உள்துறை அமைச்சராக உபைதுல்லா சிந்தி என்பவரும், வெளியுறவுத்துறை அமைச்சராக சைபுதீன் கிச்சலுவ் என்பவரும் தேர்வு செய்யப்பட்டு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது. 

பிரிட்டிஷ் அரசு இந்த அரசையும் அமைப்பையும் "அபாயகரமான சதி" என்று கருதி உளவுத்துறையை அனுப்பி அடக்க முயற்சி செய்தது. ஆனாலும் அதன் அமைப்பாளர்கள் வீரியமாக செயல்பட்டார்கள்.

மௌலானா பரக்கத்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் மத்திய பிரதேசம் போபாலில் 1854 இல் பிறந்து, அரபி, உருது, ஆங்கிலம், ஃபார்சி போன்ற பல்வேறு மொழிகளில் மார்க்கம் பயின்றார்கள். முறையாக மௌலவி ஆனார்கள்.

1880 களுக்குப் பிறகு ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்கள். 

ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவர்கள் அமெரிக்கா, லண்டன், ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு சுதந்திர தாகத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.

20 செப்டம்பர் 1927 அன்று அமெரிக்கா
சான் பிரான்சிஸ்கோவில் 
தங்கி இருந்தபோது உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார்கள்.

நாடு கடந்த ஒரு அரசை நிறுவி சுதந்திரத்திற்காக முன்னெடுத்த பங்கை முன்மாதிரியாக வைத்து பிற்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 1943 ஆம் ஆண்டு "ஆசாத் ஹிந்து அரசு" எனும் பெயரில் சிங்கப்பூரில் ஒரு அரசை நிறுவி செயல்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

இவர்களின் முழுமையான பெயர் மௌலானா அப்துல் ஹபீஸ் முஹம்மது பர்கத்துல்லாஹ் என்பதாகும் ஆனால் வரலாற்றில் "பர்கத்துல்லா போபாலி" என்ற மரியாதைக்குரியது அடைமொழியில் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் நடத்திய பத்திரிகைகள் :
==

இந்துஸ்தானி எனும் பெயரில் ஒரு பத்திரிக்கையை 
 1913–14 காலத்தில் அமெரிக்காவில் வெளியிட்டார். இந்திய சுதந்திர சிந்தனைகளை வெளிநாட்டு இந்தியர்களிடையே பரப்பினார்.

எல்கலிஃபாத் (அரபு: الخلافة)
கிலாஃபத் - எனும் பெயரில் அரபு மொழியில் மட்டும், கிலாஃபத் இயக்கத்திற்கும் இந்திய சுதந்திரத்திற்கும் ஆதரவாக வெளி வந்த ஒரு பத்திரிகை.

இஸ்லாமிய சகோதரத்துவம் எனும் பெயரில் ஒரு பத்திரிக்கையை நடத்தினார்; அது
முஸ்லிம் சகோதரத்துவத்தையும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒற்றுமையையும் வலியுறுத்தியது.

அவர்கள் எழுதிய நூல்கள் :
==

"இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி" –
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டல், பொருளாதார சிதைவுகள் குறித்து இந்த நூல் அமையப் பெற்றுள்ளது.

"ஆப்கானிஸ்தானின் துயரம்" –
ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலை மற்றும் பிரிட்டிஷ் - ரஷ்ய தாக்கம் பற்றி இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.

"இஸ்லாம் மற்றும் சோசலிசம்" –
இஸ்லாமிய சமுதாயக் கோட்பாடுகள் மற்றும் சமூகவாதத்தின் ஒற்றுமைகள் குறித்து இந்த நூல் அமைந்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்டுரைகள் – "The Islamic Review", "Comrade" போன்ற பத்திரிகைகளில் அதிகமதிகம் எழுதி இருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் குறித்து அறிய......

பர்கத்துல்லா போபாலி ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சாம்பியனாகவும் இறந்தார்: எம்.பி. ஆளுநர் – TwoCircles.net https://share.google/rM6xnlKjc3WpLFT2F




ஆங்கிலேயர் மீது முதல் தாக்குதல் 
23 ஜூன் 1757 பிளாசிசிப் போர் 
===================================

பங்களாதேஷ், பீகார், ஒரிசா, கல்கத்தா ஆகிய இன்றைய நகரங்களை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பரப்புக்கு பெயர் பெங்கால் என்று சொல்லுவார்கள்; 

இந்த நிலப்பரப்பின் ஆட்சியாளராக நவாப் சிராஜுத் தவ்லா அவர்கள் இறந்து போனார்கள்.

இந்த நிலப்பரப்பு மிகவும் வளமான, வருவாய்கள் நிறைந்த ஒரு பகுதி; மக்கள் செழிப்பாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த நிலப்பரப்பும் கூட.

மிர்ஸா முஹம்மது ஹைதர் ஜாங், ஆமினா பேகம் தம்பதியருக்கு மகனாக மிர்ஸா முஹம்மது சிராஜ் தவ்லா அவர்கள் 1733 ஆம் ஆண்டு பிறந்தார்கள். 

பிறந்தது முதலே தனது தாயின் தந்தையான / தாத்தா / நவாப் அலி வர்தி கான் அவர்களிடம் வளர்ந்தார்கள். 1756 ஆம் ஆண்டு தாத்தா அலி வர்தி கான் அவர்கள் இறந்ததும் பேரன் சிராஜுத் தவ்லா அவர்கள் அந்த நிலப்பரப்பின் அரசராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில் அரண்மனைக்குள் சதித்திட்டங்கள், ஈஸ்ட் இந்தியா கம்பெனி மற்றும் பிரஞ்சு வணிகர்களால் ஏற்பட்ட வணிகப் போட்டிகள், ஆளும் அரசிடம் அனுமதி பெறாமல் ஆங்கிலேயர்கள் கோட்டைகள் கட்டுவது, வசூலித்த வரியை கொண்டு வந்து கொடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு குழப்பங்களுக்கு இடையே சிராஜ் தவ்லா பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராபர்ட் கிளைவ்:
==

இங்கிலாந்தின் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ராபர்ட் கிளை வீட்டிற்கு அடங்காமலும், ஊருக்குள்ளும், பள்ளி, கல்லூரிகளிலும் ரவுடித்தனம் செய்து கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவரின் தந்தை 1744 இல் கிழக்கு இந்திய கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டார். 

அவர்கள் எழுத்தர் - கிளர்க் / எழுத்தராக நியமித்து சென்னைக்கு அழைப்பார்கள். 

1746 களில் ராணுவத்தில் சிப்பாயாக சேர்க்கப்பட்டார். இப்பொழுது இவருடைய ரவுடித்தனமும் அடாவடித்தனமும் இவருக்கு கை கொடுத்தது. 

1751 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்களோடு சிறிய யுத்தம் ஒன்று நிகழ்ந்தது; அதற்கு தளபதியாக இவர் சென்று அவர்களை வென்று வந்தார்.

1756 களில் கல்கத்தாவை சிராஜுத் தவ்லா அவர்களிடமிருந்து ராபர்ட் கிளைவ் மீட்டெடுத்தார். அதனால் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் மிகப்பெரும் பொறுப்புக்கு வந்தார்.

சிராஜுத் தவ்லா அவர்களிடம் எழுபது ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் உயிரிழந்துள்ளனர்; அதில் குதிரை படை (Cavalry) முப்பதாயிரம் பேரும், காலாட் படை (Infantry) 40000/ பேரும் பீரங்கிகள் (Artillery) 1000/ என அனைத்தும் அடங்கும்.

ராபர்ட் கிளைவிடம் ஐரோப்பிய வீரர்கள் 800 பேரும், இந்திய சிப்பாய்கள் 2200 பேரும், பத்து பீரங்கிகளும் மட்டுமே இருந்தனர்.

இந்நிலையில் ராபர்ட் கிளைவ் அவர்கள் சிராஜுத் தவ்லா அவர்களுடைய படையின் தளபதி மீர் ஜாபர் அவர்களை சந்தித்து, "நானும் உனது அரசனும் சண்டையிட்டுக் கொள்கிறோம்; நீ படைகளை அனுப்பாமல் பார்த்துக் கொள்! நான் ஒரே நாளில் அவரின் கதையை முடித்து விடுகிறேன்; அதற்கு பிறகு நீ தான் இந்த நிலப்பரப்புக்கு அரசன்" என்று ஆசைக் காட்டினான். 

அதில் மயங்கிய மீர் ஜாபர் ஒப்புக்கொண்டது போலவே தனது படையை அனுப்பவில்லை; அதனால் சிராஜுத் தவ்லா அவர்கள் நம்பிக்கைக்குரிய 5000 படை வீரர்களுடன் சென்று போரிட்டும் பயனில்லாமல் தப்பி ஓடி விட்டார்; யுத்தம் ஒரே நாளில் முடிவுக்கு வந்தது 

ராபர்ட் கிளைவ் அவர்கள் சொன்னது போலவே மீர் ஜாபர் அவர்களை பொறுப்பில் அமர்த்தி விட்டு தமக்கு தேவையான செல்வங்களை அள்ளிச் சென்றார்.

முர்ஷிதாபாத்திற்கு தப்பி ஓடிய சிராஜுத் தவ்லா அவர்கள் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; 

அவரைத் தேடி கண்டுபிடித்த மீர் ஜாபர் அவர்களுடைய மகன் மீரான் அவர்கள் பிடித்து வந்து 2/ ஜூலை 1757-இல் கொலை செய்து விட்டனர்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இந்த யுத்தத்திற்கு பிறகுதான் மிகவும் பலமாக கால் ஊன்றினார்கள். 

ஆங்கிலேயருக்கும் இந்தியர்க ளுக்கும் நடந்த முதல் போர் இதுதான். ஆங்கிலேயரை இந்தியாவில் கால் பதிக்க விடாமல் தடுத்த முதல் சுதந்திரப் போராட்ட முன்னோடி சிராஜுத் தவ்லா அவர்களே!

ராபர்ட் கிளைவிற்கு இந்த யுத்தத்தில் 2,34000/ பணம் கிடைத்தது. இந்தத் தொகையின் இன்றைய மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய் ஆகும். 

இந்தப் பணத்தோடு சிராஜுத் தவ்லா அவர்களின் அரண்மனையில் இருந்த ஆடம்பரப் பொருட்களைப் பெற வேண்டிய அளவிற்கு, மனைவியும் கிளையும் ஆசைப்பட்ட அனைத்தையும் அள்ளிக் கொண்டு இங்கிலாந்து சென்று விட்டார். 

லண்டனில் தற்காலிகமாக ஒரு மாளிகையை வாடகைக்கு எடுத்து குடியேறினார்; அதே நேரம் ஆடம்பரமான ஒரு பங்களாவை கட்டுவதற்கு ஊரின் நடுவே இடம் வாங்கி அதற்கான பணிகளையும் செய்து கொண்டே இருந்தார். 

இதற்கிடையே லண்டன் அரசியலில் தவிர்க்க முடியாத அடையாளமாகவும் சக்தியாகவும் ஆனார்.  

அதேநேரம் பெங்கால் நகரத்தின் ஆளுநராகவும் ஆறு வருட பதவி வகித்தார். வருடத்திற்கு 90000/ பணம் என பத்து வருடங்கள் பெற்றார். இதன் மூலம் சுமார் இன்றைய மதிப்பிற்கு 800 கோடிகளைப் பெற்றிருப்பார்.

இறுதியில் மன அழுத்தம் ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷத்தாத் பின் ஆத் கட்டிய சொர்க்கத்தைப் போன்று ராபர்ட் கிளைவ் லண்டனில் மிகப்பெரிய பங்களாவையும், அதில் கார்டனையும் பார்த்து பல வருடங்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்; ஆனால் அவரால் அந்த மாளிகையில் குடியேறவில்லை. 

அவர் இந்தியாவிலிருந்து அள்ளிச் சென்ற அழகு பொருட்களை ஆங்காங்கே வைத்து அழகு பார்த்து அனுபவிப்பதற்கு முன் அவரின் உடலை மண் தின்று விட்டது.

அதைப் போல் மீர் ஜாபர் அவர்கள் முதல் மூன்று வருடங்கள் அரசராக இருந்தார்; பின்னர் மூன்று வருடங்கள் கழித்து அடுத்த மூன்று வருடங்கள் அரசராக இருந்தார்; அந்த நேரத்தில் இருந்தே அவருக்கு வாத நோய் ஏற்பட்டு படுக்கையில் நீண்ட நாட்கள் இருந்து 70 வது வயதில் காலமானார்.

இந்திய சுதந்திரம் சும்மா கிடைத்துவிடவில்லை ; இந்தியாவில் விளைந்த செல்வங்களையும், உயிர்களையும் அளவின்றி அள்ளிக் கொடுத்தது தான் பெற்றிருக்கிறோம்.   

அதில் முஸ்லிம்கள் இழந்த இழப்பிற்கு ஈடு, இதுவரை கிடைக்கவில்லை. இனி கிடைக்கும் பயனில்லை. 

இழப்புகளை சந்தித்த சந்ததிகள் அதனைப் பெற்றிருந்தால் ஓரளவு நிகராக இருக்கும்.





இந்தியாவை எத்தனை நாட்டு ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள்? 
====================================

இந்தியாவை “ஆங்கிலேயர்கள்” (British) மட்டுமல்லாமல், பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்களும், வர்த்தகர்களும் வந்து ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல் வழியாகவே வந்தனர்.

1.  போர்த்துக்கீசியர் (Portuguese)

1498 மே 20 அன்று முதன் முதலில் வாஸ்கோட காமா கேரளாவின் கோழிக்கோட்டிற்கு (Calicut) வந்தார்.

மசாலா சாமான்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு  போன்றவற்றை ஐரோப்பியர்கள் அரபியர்களிடமிருந்து மட்டுமே வாங்க முடிந்தது. 

அதனால் அதன் விலை அதிகமாக இருந்தது; இந்த மசாலா சாமான்கள் விளையும் இடத்திலேயே கொள்முதல் செய்யலாம் என்று எண்ணி வாஸ்கோடா காமா இந்தியாவிற்கு வந்தார்; ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான முதல் கடல் வழி மார்க்கத்தை கண்டறிந்தவர் இவர்தான்.

முதன் முதலில் கி.பி. 1510-ல் கோவா (Goa) வை கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினர். 

பின்னர் தமன் & தியூ (Daman and Diu) , பாசைன் (Bassein / Vasai, தற்போது மும்பை அருகில்) , சால்செத், சோப்ரா, பாசைன் சுற்றியுள்ள தீவுகள் –
மும்பை தீவுகள் (Bombay Islands), மலபார் கரை (Kerala coast) , கோழிக்கோடு (Calicut), கொச்சி (Cochin), கன்னூர் (Kannur), கொல்லம் (Quilon), ஹூவிடா (Hooghly, West Bengal) என இந்தியாவின் பல்வேறு நகரங்களை பிடித்து ஆட்சி செய்தனர்.

இந்தியாவில் இருந்து கடைசியாக 1961 ஆம் ஆண்டு  விரட்டப்பட்டார்கள்.

2.  டச்சுக்காரர் (Dutch / Netherlands / Holland) 

டச்சு எனும் மொழி பேசும் நெதர்லாந்து மற்றும் ஹாலாந்து வாசிகள் 1605 இல் புலிகாட் (ஆந்திரா) அருகே முதன்முதலில் குடியேறினார்கள்.

பின்னர் கொரோமண்டல் கரை, மலபார் கரை, பெங்கால், சூரத்துக் கரை என பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்து வந்தார்கள்.

1759 பிளாசிப் போருக்குப் பிறகு செல்வாக்கை இழந்து 1825 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.

3.  டேனிஷ்காரர் (Danish / Denmark) 

டேனிஷ் என்பது அவர்கள் பேசும் மொழியாகும்; இவர்கள் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் முதன் முதலில் கால் பதித்தனர். மேற்கு வங்கத்தில் செராம்பூர் முதல் நிக்கோபார் தீவு வரை பல நிலப்பரப்புகளை ஆட்சி செய்தனர்; இறுதியாக 1869 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

4.  பிரெஞ்சுக்காரர் (French) 

ஃபிரன்ஞ் மொழி பேசும் பிரான்ஸ் காரர்கள் 1667  வணிகர் ஃப்ரான்சுவா காரோன் (François Caron) என்பவர் தலைமையில்  சூரத்தில் (Surat)  குஜராத் கடற்கரையில் வந்து இறங்கினார்கள்.

பின்னர் புதுச்சேரி, கரைக்கால், யானம், சந்தநகர், மாஹே போன்ற இடங்களை 1954 வரை ஆட்சி செய்தனர்.

5.  ஆங்கிலேயர்கள் (British / English) 

1608 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் முதல் கப்பல் இந்தியாவின் குஜராத் பகுதியில் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் (William Hawkins) தலைமையில் வியாபார குழுவினர் வந்து இறங்கினார்கள். 

இவர்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிய முகலாய மன்னர் ஜகாங்கீர் ஆவார். 

ஆங்கிலேயர்கள் East India Company  எனும் வியாபார கம்பெனி முன்வைத்து அகண்ட பாரதத்தை ஆக்கிரமித்து 1947 வரை ஆட்சி செய்தார்கள்.

பிற நாட்டு ஆங்கிலேயர்கள் அனைவரும் இந்தியாவின் குஜராத்தில் வந்து இறங்கியே இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். 

இப்பொழுதும் கூட இந்தியாவை குஜராத்திகளே ஆக்கிரமித்து இருக்கிறார்கள். 

ஒன்றுபடுவோம் !
இந்தியாவை காப்போம்!!

புகைப்படத்தில் இருப்பவர் ஜஹாங்கீர் மன்னர் ஆவார்.



படையெடுப்புகள் ஏன்? 
சுதந்திரப் போர் 
நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன? 
====================================

ஒரு நாட்டின் மீது  படை எடுப்பது பல்வேறு காரணங்களால் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. பொதுவாக அரசியல், பொருளாதாரம், மதம், அல்லது பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காகதான்  படையெடுப்புகள் நடந்துள்ளன. 

அரசியல் காரணங்களுக்காக : ஒரு நாட்டின் மன்னரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவது,

தன் நாட்டின் எல்லையை பெரிதாக்கி வலிமையான பேரரசை அமைப்பதற்காக படை எடுத்தல்,

அதிகாரப் போட்டி / அதாவது அடுத்தடுத்த நாடுகளுடன் தன் செல்வாக்கை நிரூபணம் செய்வதற்காக போர் தொடுத்தல் 

பொருளாதார காரணங்களை முன்னிட்டு துறைமுகங்கள், கடல் மார்க்கங்கள், வணிகப்பாதைகள் ஆகியவற்றை கைப்பற்றுவதற்காக போரிடுதல்,

ஒரு நாட்டில் உள்ள வளங்களான தங்கம், வெள்ளி, மசாலா, எண்ணெய் போன்ற வளங்களை அடைய போர் செய்தல்,

மதங்களைப் பரப்ப அல்லது மத அடக்குமுறைகளை ஏற்படுத்த அல்லது நாகரீகம் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்த போரிடுதல் போன்ற பல காரணங்களுக்காக யுத்தங்கள் நடந்திருக்கின்றன. 

நமது இந்தியாவிற்குள் நுழைந்த ஐந்து நாட்டு ஆங்கிலேயர்கள் மதங்களைப் பரப்பவும், வியாபாரம் செய்யவும், வளங்களை கொள்ளையடித்து செல்லவுமே யுத்தங்களை செய்தார்கள்.

********

நமது இந்திய சுதந்திரப் போர் நமக்குக் கற்றுத் தரும் பாடம் இதுதான்! 

கான்சாகிப், யூசுப் கான், மருதநாயகம் என்று சொல்லப்படும் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரனை காட்டிக் கொடுத்தது சீனிவாசன் என்பவன்.

1799 மே 4 அன்று சிப்பாய்களோடு சிப்பாயாக போர் புரிந்து வீர மரணம் அடைந்த திப்பு சுல்தானைக் காட்டிக் கொடுத்தது திவான் பூர்னைய்யா, கிருஷ்ணப்பா போன்றவர்கள் தான்!

வங்கத்து சிங்கம் சிராஜுத் தவ்லா அவர்களை காட்டி கொடுத்தது மீர் ஜாஃபர் என்பவன் தான்! 

எனவே நாம் சம்பாதிப்பது, உயர்த்தப் பதவிகளைப் பெறுவது போன்ற செயல்களில் கவனம் செலுத்துகிற அதே நேரம், 

நமக்கு அருகில் இருந்து கொண்டு நம்மை வீழ்த்த நினைப்போர் யார்? நம் மீது பொறாமை படுகிறவர்கள் யார்? நமக்கு அருகில் இருந்து கொண்டு நமது குழி பறிப்பவர்கள் யார்? என்பதையும் கவனிக்க வேண்டும்; கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று அவர்களுக்கான சரியான தீனியை  போட்டு / கொடுக்க வேண்டியதை கொடுத்து அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது அவர்களுக்கான செட்டில்மென்ட்டை செய்து வெளியேற்றி விட வேண்டும் 

இப்படி செய்வதால் மட்டுமே நாம் உயர்வதை வேறு யாராலும் தடுக்க இயலாது.

சுயநலத்திற்காக / சில பேர் வாழ்வதற்காக ஒரு நாட்டை அடிமைப்படுத்த நினைக்கும் அல்லது ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க நினைக்கும் சக்திகளை வேரறுப்போம்.




Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்