Posts

Showing posts from May, 2024

ஹஜ் எதற்கு செய்கிறார்கள்?

சூஃபிகளின் ஹஜ் : - 21 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ஹஜ் எதற்கு செய்கிறார்கள்? =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ "ஒரு மனிதன் செய்த பாவங்கள் அவன் செய்த  ஹஜ்ஜின்  காரணமாக அழிக்கப்படுகிறது"  என நாம் நம்புகிறோம். உண்மையில் ஒவ்வொரு மனிதனும் அவன் செய்த பாவங்கள்  அழிக்கப்படுவதற்கு தான் ஹஜ் மேற்கொள்ளப்படுகிறதா? என்றால் இங்கே சில கேள்விகள் எழுகிறது.  பாவங்கள் செய்த வசதியானவர்கள் ஹஜ் செய்து தம் பாவங்களை அழித்துக் கொள்வார்கள். வசதி இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள்? மேலும் ஒரு மனிதனின் பாவங்கள் அழிக்கப்படுவதற்கு ஒரு மனிதனின் நிதி நிலையும் காரணமாக இருக்கிறது என தெரிய வருகிறது. இது எப்படி சமத்துவமாக ஆகும்?  செல்வந்தர்கள் உடனே ஹஜ் செய்து தம் பாவங்களை அழித்து விடுவார்கள். ஏழைகள் தம் பாவங்களை சுமந்து கொண்டே சாக வேண்டுமா?  ஹஜ்ஜின் நோக்கம் பாவம் அழிக்கப்படுவது தான் என்றால் இதில் இறை நீதி எங்கே இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? உண்மையான ஹஜ்ஜி நோக்கம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போலும், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போலும், ஹாஜரா அம்மையாரை போலும் தன்னையே இறைவனுக்கு முழு...

ஹஜ் குறித்து சூஃபிகளின் கருத்து

சூஃபிகளின் ஹஜ் : -22 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~ ஹஜ் குறித்து  சூஃபிகளின் கருத்து : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ சூஃபி முஹம்மது பின் ஃபஸல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் ஏன் இறைவனை தேடி இறையில்லமாம் கஅபாவை நாடிச் செல்கிறார்கள்?   இருந்த இடத்தில் முறையாக இறைவழிபாடுகள் செய்வதின் மூலம் தமக்குள் இறைவனைக் கண்டு கொள்ள மாட்டார்களா?  அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஹஜ்ஜுடைய அமல்களை முறையாக செய்து விட்ட ஒவ்வொருவராலும் அரஃபாவில் அவனை எளிதாக அடைந்து கொள்ள முடியுமே!  எனவே ஹஜ்ஜுடைய அமலை முறையாக செய்ய எவரும் முன்வர மாட்டார்களா? ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். ஹஜருல் அஸ்வதும் கஅபாவும் கல்தான்!  அதனால் எப்பயனும் இல்லை.  அதனால் நான் கஅபாவை நாடிச் செல்வதில்லை. அதன் உரிமையாளனையே தேடிச் செல்கிறேன் ஒவ்வொரு வருடமும்.... அபுல்ஹஸன் ஷாதுலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். குர்ஆன், ஹதீஸ், நபி, ரசூல், ஷைஹு போன்ற வேதங்களும், மனிதர்களும் வழிகாட்டிய வழியில் தான் நாம் இறைவனைத் தேடி வருகிறோம்.  வேதங்களும், மனிதர்களும் வழிகாட்டிய வழியில் நாம் இறைவனை அடைந்து கொண்ட தலம் தான் ஹஜ்.  ஆனால்...

நீங்கள் எத்தனை முறை லப்பைக் சொன்னீரோ அத்தனை முறை ஹஜ் உம்ரா செய்யும் வாய்ப்பு உண்டு

சூஃபிகளின் ஹஜ் :- 20 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~ நீங்கள் எத்தனை முறை லப்பைக் சொன்னீரோ அத்தனை முறை உங்களுக்கு ஹஜ் உம்ரா செய்யும் வாய்ப்பு உண்டு : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ  "ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு நீர் அழைப்பு விடுப்பீராக! (உமது அழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தும், தொலைதூரப் பகுதிகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின்மீது (பயணித்தும்) வருவார்கள்" (என்று நாம் கூறினோம்.)  22:27 இறைவன் ஹஜ்ஜுக்கு அழைப்பு விடுக்கச் சொன்னதும் இப்ராஹிம் (அலை) அவர்கள், "இறைவா! எனது சப்தம் அனைத்து மக்களையும் எப்படி சென்றடையும்?" என்று கேட்டார்கள்.  அதற்கு இறைவன், "உமது அழைப்பை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பது என் கடமை" எனக் கூறினான்.  நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் அறிவிப்பு செய்ததும் அந்த அறிவிப்பை வானம் பூமியில் வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் இன்னும் பிற வஸ்துகளும் கூட கேட்டன.  இப்ராகிம் (அலை) அவர்களின் அழைப்பை செவியேற்ற அனைவரும் 'லப்பைக்' எனக் கூறினார்கள்.  யாருக்க...

அணுகுண்டு மௌலானா - அனல் பறக்கும் பேச்சாளர் மறைவு

அணுகுண்டு மௌலானா -  அனல் பறக்கும் பேச்சாளர் மறைவு :  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் அரபுக் கல்லூரியில் முதல் ஜும்ரா ஓதிக் கொண்டிருக்கும்போது அணுகுண்டு மௌலானா அவர்கள் வருகை தந்திருந்தார்கள். மர்ஹூம் சுல்தான் ஹள்ரத் அவர்கள், பிள்ளைகளுக்கு நசியத் செய்யும் படி கூறினார்கள். அன்று ஹள்ரத் அவர்கள் சொன்ன உபதேசம் இன்றும் நினைவில் இருக்கிறது. "குர்ஆனை திறந்து அதிகமாக ஓத வேண்டும். அதற்காக தான் அல்லாஹ் முதல் சூராவிற்கு ஃபாத்திஹா -  'திறக்குதல்' என பெயர் சூட்டியிருக்கிறான். நாம் ஜஹாலத் - அறியாமையில்  இருக்கின்றோம். அதனால்தான் இரண்டாவது சூராவிற்கு பகரா -  காளை கன்று என அல்லாஹ் பெயர் சூட்டி இருக்கின்றான்.  ஆடு மாடுகளைப் போன்று இருக்கின்ற நாம் திருக்குர்ஆனை தொடர்ந்து வாசித்து வந்தால், மிக உயர்ந்த நிலையை அடைந்து மனிதனாக ஆகிவிடலாம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக எல்லாம் வல்ல இறைவன் இறுதி சூராவிற்கு 'நாஸ்' - மனிதன் என பெயர் வைத்திருக்கின்றான். அறியாமையில் இருக்கும் மனிதன் அறிவாளியாக ஆகிவிடலாம் என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது எனவே அதிகமாக குர்ஆன் ஓ...

ஹாஜிகளே! நாவை அடக்கம் செய்து விடுங்கள்:

சூஃபிகளின் ஹஜ் : -19 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ஹாஜிகளே!  நாவை அடக்கம் செய்து விடுங்கள் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= இறைநேசர் துந்நூன் மிஸ்ரி [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள்:  நான் ஒரு முறை ஹஜ்ஜுக்கு செல்லும்போது ஒரு காட்டு வழியே பயணித்துக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது சந்திரனைப் போன்று  அழகான ஒர் இளைஞரை சந்தித்தேன்.  அவருக்கு அல்லாஹ்வின்  மீதுள்ள அன்பு , அவருடைய உடல் முழுவதும் பரவி இருந்ததால் அவர் துடிப்போடு இருந்ததைக் கண்டேன்.  அவரும் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டிருந்தார்.  நான் அவரை என்னுடன் அழைத்துக் கொண்டேன்.  அவரிடம் ஏதேனும் பேச வேண்டுமே என்பதற்காக "இந்த ஹஜ்ஜுடைய பயணம் மிக நீண்டதாக இருக்கிறது!" என்றேன்.  அதற்கு பதிலளிக்கும் முறையில் இம்ரவுல் கைஸுடைய ஒரு கவிதையை கூறினார்.   இறையன்பு இல்லாதவர்களுக்கும், சோம்பேறிகளுக்கும்   இந்தப் பயணம்  மிக நீண்டதாகத் தெரியும்.  ஆனால்  அல்லாஹ்வின் அன்பால்  நிறைந்தவர்களுக்கு  இது தூரமாகத் தெரியாது. நூல் : இஹ்யா உலூமிதீன், துர்ருல் மன்சூர்  ஹஜ்ஜுக்காக இஹ்...

உண்மையாக அழுவது யார் ?ஒப்புக்காக அழுவது யார்?

சூஃபிகளின் ஹஜ் : - 18 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• உண்மையாக யார் அழுவது?  ஒப்புக்காக யார் அழுவது?  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ இறைநேசர் ஷைஹு அபூ பக்ர் சித்தீக் ஷிப்லீ  (ரஹ்) அவர்கள் தாம் செய்த ஒரு ஹஜ்ஜில் அரஃபா பெருவெளிக்கு சென்றதிலிருந்து  பேசாமல் மௌனமாக இருந்தார்கள்.  அங்கிருந்து மினாவுக்கு புறப்பட்டு சென்று ஹரம் எல்லையைக் காட்டும் இரு அடையாளங்களைக் கடந்துச் செல்லும் போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.  அப்பொழுது அவர்கள் ஒரு கவிதை பாடினார்கள்:- இறைவா!  எனது இதயத்தில்  உன் மீதான அன்பை  நிரப்பியவனாக   நடந்துச் செல்கிறேன்.  அதனால்  எனது இதயத்தில்  உன்னைத் தவிர  வேறு யாருக்கும் இடமில்லை.   உனது தரிசனம்   கிடைக்கும் வரை  வேறு யாரையும்  பார்க்காமல் இருப்பதற்காக  எனது கண்களை  மூடிக்கொள்ள விரும்புகிறேன்.  நண்பர்களில் சிலர்  ஒருவரிடமே நட்பு வைத்திருக்கின்றனர்.  சிலர் பலருடன் நட்பை கொண்டிருக்கின்றனர்.  ஆனால்  கண்களிலிருந்து  கண்ணீர் வடிந...

அறிவார்ந்த நிலையில் நினைவலைகள் இல்லாத இதயம் :

சூஃபிகளின் ஹஜ்:- 17 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• அறிவார்ந்த நிலையில் நினைவலைகள் இல்லாத இதயம் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களின் மகன், இமாம் பாகிர் பின் அலீ (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்த போது கஅபாவின் மீது தம் பார்வை விழுந்ததும் அவர்கள் மிக சப்தமாக வீரிட்டு அழுதார்கள்; நினைவிழந்து கீழே விழுந்தார்கள். "இங்குள்ள அனைவரின்  பார்வையும், கவனமும் உங்கள் பக்கம் திரும்பி விட்டது; எனவே சப்தமாக அழவேண்டாம்" என்று அவர்களின் சீடர்களில் ஒருவர் கூறினார். ''அல்லாஹ், என் அழுகையின் காரணமாக என்மீது அருட் பார்வையை செலுத்தக் கூடும்; அதனால் நாளை மறுமையில் நான் வெற்றி பெற வாய்ப்புண்டு" என்று கூறினார்கள்.  பின்னர் தவாஃப் செய்தார்கள். தவாஃப்பிற்குப் பிறகு மகாமு இப்றாஹீம் அருகில் நின்று தவாஃபுடைய வாஜிபான இரண்டு ரக்அத்துகளைத் தொழுதார்கள். மேலும் நஃபில் தொழுகைகளில் ஈடுபட்டார்கள்.  நஃபில் தொழுகையின் போது ஸஜ்தாவில்  கண்ணீர் சிந்தியதால் அந்த இடமே நனைந்து ஈரமாகக் காணப்பட்டது.  அவர்கள் தமது சீடரிடம் கூறினார்கள். "எனக்கு அதிகமான மன வேதனையும், கவலையும் இ...

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்

சூஃபிகளின் ஹஜ் :-16 ~•~•~•~•~•~•~•~•~•~•~• அள்ள அள்ள குறையாத  அட்சய பாத்திரம்.. =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= அபூ அப்துர் ரஹ்மான் சுபீஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் ஹஜ் செய்வதற்காக சென்று கொண்டிருக்கும்போது வழியில் பாக்தாதை அடைந்தேன்.  அப்போது சூஃபித் தனத்தின் மதமதப்பு என் மண்டையில் ஏறி இருந்தது . அதாவது உறுதியான எகீன் -  நம்பிக்கையும், கடுமையான முயற்சி -  முஜாஹதாவும், அல்லாஹ் அல்லாதவற்றை முதுகுக்கு பின்னால் தூக்கி எறிவது போன்ற செயல்களை  அனாயசமாக செய்து சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பும் என்னில் உண்டாகி இருந்தது. நான் நாற்பது நாட்கள் வரை ஒன்றும் உண்ணவில்லை. பருகவில்லை. ஹள்ரத் ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்களின் சமூகத்திற்கு செல்லவுமில்லை. நான் எப்பொழுதும் உலூவுடனேயே இருப்பேன். இதே நிலையில் பக்தாதிலிருந்து புறப்பட்டு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தேன்.  அங்கே ஒரு கிணற்றில் ஒரு மான் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கும் கடுமையான தாகம் மேலிட்டது.  நான் கிணற்றடிக்குச் சென்றதும் மான் என்னைக் கண்டு ஓடியது. மான்  குடிக்கும்போது தரை...

ஹாஜிகள் அனைவரும் அல்லாஹ்வின் விருந்தினர் & தூதுக்குழுவினர் :

சூஃபிகளின் ஹஜ் : 15 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ஹாஜிகள் அனைவரும்  அல்லாஹ்வின் விருந்தினர் & தூதுக்குழுவினர் : =÷°÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍٍ” ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு நீர் அழைப்பு விடுப்பீராக! (உமது அழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தும், தொலைதூரப் பகுதிகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின்மீது (பயணித்தும்) வருவார்கள்" (என்று நாம் கூறினோம்.) 22 : 27 இந்த வசனத்தில்  இரண்டு முறை "அவர்கள் வருவார்கள்" என்று அல்லாஹ் சொல்கிறான்.  அப்படி வருகிறவர்கள் 'லப்பைக்' என தல்பியா சொல்லிக் கொண்டு ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ வருகிறார்கள். அவர்கள்  அனைவரும் லுயூஃபுர் ரஹ்மான் - அல்லாஹ்வின் விருந்தினர் ஆவர் ‌. அல்லாஹ் அழைத்ததால் பதில் சொல்லும் விதமாக லப்பைக் - வந்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு வருவதால் அவர்கள் அல்லாஹ்வின் விருந்தினர் என முதன் முதலில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.  பின்னர் இறை இல்லத்தை நாடி வருகிறவர்களுக்கு தண்ணீர் மற்றும் இயன்றதை வழங்கியவர்கள் ஹாஜிகளை பார...

சுவையான உணவு என எது தீர்மானிக்கிறது?உடலா? உணவா?

சூஃபிகளின் ஹஜ் :- 14 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• சுவையான உணவு என  எது தீர்மானிக்கிறது? உடலா? உணவா? =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ இறைநேசர் ஸயீத் பின் அபீ அருப்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்‌. ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் ஒருமுறை ஹஜ்ஜுக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் ஓர் இடத்தில் தங்கியிருந்த போது வேலையாட்களிடம், "காலை உணவை கொண்டு வாருங்கள்" என கூறினான்.   தனது மெய் காப்பாளரிடம் "இப் பகுதியில் வாழும் எவரேனும் ஒரு மனிதன் இருந்தால்  அழைத்து வந்து என்னுடன் சாப்பிடச்சொல்!  அவனிடம் இப்பகுதியின் நிலை குறித்து விசாரித்துக் கொள்வோம்" என கூறினான்.  உடனே மெய் காப்பாளன் மலைகள், காடுகள் என பல மைல் தூரம் சுற்றித்திரிந்து  பார்த்தபோது ஒரு கிராமப்புற மனிதர்  இரண்டு போர்வைகளைப் போர்த்தியவராக படுத்துறங்கிக் கொண்டிருந்தார்.  அவரைக் காலால் எட்டி உதைத்து தூக்கத்திலிருந்து எழுப்பி, "என்னுடன் வா! உன்னை அமீர் அழைத்து வரச் சொன்னார்" என்றான்.  கிராமப்புற மனிதர் வந்ததும் ஹஜ்ஜாஜ் அவரிடம் "கைகளைக் கழுவிக்கொண்டு வந்து என்னுடன் சாப்பிடு" என்றான். கிராமத்தார் :-   உன்னை வி...

அல்லாஹ்வின் கருணையினால் நம் ஹஜ் ஒப்புக் கொள்ளப்படுகிறது

சூஃபிகளின் ஹஜ் : - 13 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• அல்லாஹ்வின் கருணையினால்  நம் ஹஜ் ஒப்புக் கொள்ளப்படுகிறது  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ பொதுவாகவே அனைத்து முஸ்லிம்களும் செய்கிற அமல்களில் கலப்படமும் குறைபாடுகளும் இருக்கின்றது.  ஒரு சிலருடைய அமலில் மட்டுமே குறையும், கலப்படமும் இல்லாமல் இறைவனால் முழுமையாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. "மறுமை நாளில் சிலருடைய அமல், அழுக்கேறிய துணிகளை சுருட்டி நாம் மூளையில் வீசுவது போல் நமது முகங்களில் நமது அமல்களை இறைவன் வீசுவான்" என்று நபி (ஸல்) அவர்கள் ( புகாரி) சொல்லி இருப்பது தாங்கள் அறிந்ததே!  எனவே நமது அமல்கள் அங்கீகரிக்கப்படுவதும், அதற்கு ஏதேனும் சன்மானமாக நன்மைகள் வழங்கப்படுவதும் அல்லாஹ்வின் அன்பினாலும் கருமைநாளுமே தவிர நமது செயல்களால் அல்ல! இறைநேசர் அபூ அப்துல்லாஹ் ஜவ்ஹரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.  நான் ஒரு ஹஜ்ஜின் போது அரஃபாவில் தங்கியிருந்தேன். எனக்கு சிறிது தூக்க மேலிட்டு கண்களை மூடினேன்.  கனவில் இரண்டு மலக்குகள் வானிலிருந்து இறங்கி வருவதைக் கண்டேன். ஒருவர் மற்றவரைப் பார்த்து, "இவ்வருடம் எத்தனைபேர் ஹஜ்ஜுக்கு வந்திருக...

ஹாஜிகளுக்கான பரக்கத்

சூஃபிகளின் ஹஜ் :- 12 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•   ஹாஜிகளுக்கான பரக்கத் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ ஹஜ் மற்றும் உம்ரா செய்தவர்களை அல்லாஹ் ஏழையாக்குவதில்லை என நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  ஒருவர் ஒரு ரூபாய் வைத்துக் கொண்டு, பத்து லட்ச ரூபாய்காண பணிகளை தமக்காக செய்து கொண்டால் அது பரக்கத் ஆகும்.  ஒருவர் பத்து லட்சம் ரூபாய் வைத்துக் கொண்டு, ஒரு காரியத்தை செய்து இறுதியில் அதனால் எந்த பயனும் இல்லாமல் போனால் அதில் பரக்கத் இல்லை என்று பொருள் ஆகும். ஒருவரிடம் இருந்த ஒரு தீனாரின் பரக்கத்தைப் பாருங்கள். அல்லாமா அபூ அம்ரு துஜாஜி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;  நான் ஹஜ்ஜு செய்யும் எண்ணத்துடன் இருந்தபோது ஒரு சமயம் இறைநேசர் ஜுனைதுல் பக்தாதீ (ரஹ்) அவர்களிடம் சென்றிருந்தேன்.  என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொண்ட அவர்கள் எனக்கு ஒரு திர்ஹம் நாணயத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள்.  நான் அதை என் இடுப்பு பெல்டில்  பத்திரமாக வைத்துக் கொண்டேன்.  இதற்குப் பிறகு நான் ஹஜ்ஜுக்காக சென்ற வழிகளில் எல்லாம்  எனக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பிறர் தாமாகவே முன்வந்து மனமுவந்து செய்...

ஆசைகளை துறப்பதற்கு தான் ஹஜ்

ஆசைகளை  துறப்பதற்கு தான்  ஹஜ் பயணம் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ உமர் (ரலி) அவர்களின் அடிமை அஸ்லம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.  ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்திருந்த போது fresh - புதிய மீன் சாப்பிட ஆசைப்பட்டார்கள். இதனை அறிந்த நான் ஓர் ஒட்டகத்தின் மீதேறி fresh - புதிய மீன் விற்கப்படும் பிரத்தியேகமான கடைக்குச் சென்று வாங்கினேன்.  பின்னர் ஒட்டகத்தை வேகமாக ஓட்டி வந்தேன். அதன் காரணமாக ஒட்டகத்திற்கு அதிகமாக வேர்த்துக் கொட்டியது.  ஒட்டகத்திற்கு வேர்த்தது தெரியக்கூடாது என்பதற்காக, நான் திரும்பி வந்ததும் ஒட்டகத்தை நன்றாகக் கழுவி அதன் வியர்வை தெரியாத வகையில் செய்து விட்டேன் .  உமர் (ரலி) அவர்களிடம் fresh - நல்ல மீன் வாங்கி வரப்பட்டு இருக்கிறது என சொன்னேன். அதன் காரணமாக அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என எண்ணினேன்.  ஆனால் உமர் (ரலி) அவர்கள் "நடங்கள் உங்களுடைய  ஒட்டகத்தைப் பார்ப்போம்!" என்று சொல்லிக்கொண்டே ஒட்டகத்தை நோக்கி நடந்துச் சென்றார்கள்.   ஓட்டகத்தினுடைய காதுக்கு பின்னால் தடவிப் பார்த்தார்கள். அங்கு வியர்வை கழுவப்படாமல் இருந்தது.  அதைக் ...
 நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை ஹிஜ்ரி ஒன்பதாவது வருடம் முதல் ஹஜ்  கடமையாக்கப்பட்டது.  அந்த வருடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பல்வேறு அரசியல்  நெருக்கடிகள் இருந்ததால் அவ்வாண்டு அபூ பக்ர் (ரலி ) அவர்களை அமீருல் ஹஜ்ஜாக நியமித்து அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களின் முதல் ஹஜ்  : நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு ஹஜ் மட்டுமே செய்து இருக்கிறார்கள். அந்த ஹஜ்ஜின் முழு விபரங்களும் நாம் காணலாம். ஹிஜ்ரி 10 துல்கஅதா பிறை 25 சனிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பிறகு மதீனாவில் இருந்து  புறப்பட்டுச் சென்று துல் ஹுலைஃபாவில் அன்று இரவு தங்கினார்கள். அந்த இரவில் தமது அனைத்து மனைவியருடனும் உடலுறவு கொண்டார்கள். மறுநாள் பிறை 26 ஞாயிற்றுக்கிழமை லுஹருடைய நேரத்தில் இஹ்ராம் உடுத்துவதற்காக குளித்துவிட்டு இஹ்ராம் அணிந்தார்கள்.  ஜிப்ரயீல் (அலை) அவர்களின் உத்தரவுக்கிணங்க கிரான் (ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒரே இஹராமில் செய்யும் வகையில் ஆன) ஹஜ் செய்வதாக நிய்யத் செய்து கொண்டார்கள்.  அதேநேரம் தமது மற்ற தோழர்களை இஃப்ராத், தமத்துவு போன்ற தாம் விரும்புகிற  வகையிலான ஹஜ்ஜை மேற்கொள்ள...