ஹாஜிகள் அனைவரும் அல்லாஹ்வின் விருந்தினர் & தூதுக்குழுவினர் :

சூஃபிகளின் ஹஜ் : 15
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ஹாஜிகள் அனைவரும் 
அல்லாஹ்வின் விருந்தினர் & தூதுக்குழுவினர் :
=÷°÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍٍ”

ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு நீர் அழைப்பு விடுப்பீராக! (உமது அழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தும், தொலைதூரப் பகுதிகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின்மீது (பயணித்தும்) வருவார்கள்" (என்று நாம் கூறினோம்.) 22 : 27

இந்த வசனத்தில்  இரண்டு முறை "அவர்கள் வருவார்கள்" என்று அல்லாஹ் சொல்கிறான். 

அப்படி வருகிறவர்கள் 'லப்பைக்' என தல்பியா சொல்லிக் கொண்டு ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ வருகிறார்கள்.

அவர்கள்  அனைவரும் லுயூஃபுர் ரஹ்மான் - அல்லாஹ்வின் விருந்தினர் ஆவர் ‌.

அல்லாஹ் அழைத்ததால் பதில் சொல்லும் விதமாக லப்பைக் - வந்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு வருவதால் அவர்கள் அல்லாஹ்வின் விருந்தினர் என முதன் முதலில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள். 

பின்னர் இறை இல்லத்தை நாடி வருகிறவர்களுக்கு தண்ணீர் மற்றும் இயன்றதை வழங்கியவர்கள் ஹாஜிகளை பார்த்து " ضيوف الرحمن - 
லுயூஃபுர் ரஹ்மான் அல்லாஹ்வின் விருந்தினர் என தொடர்ந்து சொல்லி வந்ததால் இன்றும் இந்த வார்த்தை அரபியர்களால் உச்சரிக்கப்பட்டு வருகிறது. 

எனவே ஹஜ் செய்கிறவர்களும், உம்ரா செய்கிறவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர் ஆவர்.

وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «الحجاج والعمار وفد الله، إن دعوه أجابهم، وإن استغفروه غفر لهم» رواه النسائي.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஹாஜிகளும், உம்ரா செய்வோரும் அல்லாஹ்வின் தூது குழுவினர் ஆவர். இவர்கள் பிரார்த்தனை செய்தால் இறைவனால் பதில் அளிக்கப்படுவார்கள். இவர்கள் எவருக்கேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள் 

நூல் : நஸாயீ, இப்னுமாஜா, 
இப்னு குஸைமா

மேற்கண்ட ஹதீஸில் ஹஜ் செய்வோரும், உம்ரா செய்வோரும் அல்லாஹ்வின் 'தூது குழுவினர்' என வர்ணிக்கப்பட்டு இருக்கிறது. 

அதாவது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இறை இல்லத்திற்கு வந்திருந்த அனைவரும் தாம் அறிந்த ஆன்மீக விஷயங்களை, ஆன்மீக அனுபவங்களை தத்தமது ஊர்களுக்கு திரும்பிய பிறகு அவற்றை சொல்லி பொதுமக்களை இஸ்லாத்தின் பாலும், இறைவன் பாலும், ஆன்மீகத்தின் பாலும் அழைக்க வேண்டும்  என்பதற்காகவே 'தூதுவர்கள்' எனும் வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பல்வேறு பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களை ஓரு இடத்திற்கு அழைத்து அவர்களில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் ஒருவகையான விஷயத்தை போடுகிறான். 

அவர்கள் தமது  ஊர்களுக்கு திருப்பியதும் இறைவன் அவரவர் உள்ளத்தில் இல்ஹாம் பதிவிட்ட  அனுபவங்களை, செய்திகளை  பிறரிடம் பகிருகிறார்கள்.  அது அவர்களின் இதயத்தை ஈர்க்கிறது. 

கேட்பவர்களுக்கு இஸ்லாத்தின்பால் நல்ல எண்ணமும் ஈடுபாடும் அதிகரிக்கிறது.

எனவே ஹஜ் செய்ய வருகிற ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் விருந்தினராகவும், அல்லாஹ்வின் தூதுவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் விருந்தாளி :
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

அபூ ஹஃப்ஸுல் ஹத்தாத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நான் ஒரு முறை மதீனாவிற்கு வந்திருந்தேன். ஏறத்தாழ பதினைந்து நாட்கள் எனக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் நான் நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தின் சுவற்றின் மீது என் வயிற்றை வைத்து கட்டி அணைத்து  படுத்து கொண்டு  நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லிக் கொண்டு இருந்தேன். 

அப்பொழுது நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! உங்களது விருந்தாளியாக நான் வந்திருக்கிறேன்; எனது வயிற்றை நிரம்பச் செய்யுங்கள்;" என்று எனது கடும் பசியின் நிலையை முறையிட்டேன். 

இப்படி (முராக்கபாவில்)  இருக்கும்போதே என்னை அறியாமல் நான் உறங்கி விட்டேன். அப்பொழுது என் கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஒரு ரொட்டியை கொடுத்தார்கள். அதில் பாதையை சாப்பிட்டு விட்டேன். எனக்கு வயிறு நிரம்பி விட்டது. 

பின்னர் விழித்துக் கொண்டேன். மிச்சம் பாதி ரொட்டி எனது கைகளில் இருந்தது. நான் வயிறு நிரம்ப சாப்பிட்டு இருப்பதையும் உணர்ந்தேன்.

நூல் : மிஸ்பாஹுல்  ழலாம்

அபூ ஹஃப்ஸுல் ஹத்தாத் (ரலி) அவர்களைப் போல் எண்ணற்ற இறைநேசர்கள் நபிகள் நாயகத்தின் விருந்தாளியாக மதீனாவில் பல நாட்கள் தங்கி இருந்திருக்கிறார்கள்.  

அவ்வாறு தங்கி இருந்த அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் உணவளிக்கும்  பொறுப்பை ஏற்றுக் கொண்டு முழுமையாக நிறைவேற்றி இருப்பதாக பல்வேறு வரலாறுகள் சொல்கிறது. இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு இருந்தால் பதிவிடுகிறேன்.

விருந்தளிப்பு சம்பந்தமான சில தகவல்களை கீழ்காணும் தளங்களில் பாருங்கள்.

https://www.elmogaz.com/621467

https://shopramalakan.yoo7.com/t86-topic

https://www.facebook.com/share/v/XChXZdcPFLm3ozo4/?mibextid=0VwfS7

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்