Posts

Showing posts from May, 2025

தலைமை காஞ்சி அவர்களின் அறிவும் அனுபவம் நிகரற்றது

Image
தலைமை காஞ்சி அவர்களின் அறிவும் அனுபவம் நிகரற்றது  ============================= ஒருவருடைய தங்கைக்கு நான் இரண்டாம் திருமணம் செய்து வைத்தேன்  அவர்கள் தாய்லாந்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அங்கேயே முறைப்படி அவர்கள் விவாகரத்து  பெற்றிருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவருடைய தங்கைக்கும் இங்குள்ள ஒருவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயத்து என்னை திருமணம் செய்து வைக்க அழைத்து இருந்தார்கள்.  அழைத்தவர் எங்களது மஹல்லா வாசி தான். தன்னிடம் எல்லா ஆவணங்களும் இருப்பதாக கூறினார். அதை நம்பி நான் திருமணம் செய்து வைத்து விட்டேன்.  அந்த ஆவணங்களை நான் முன்கூட்டியே பார்வையிடவும் இல்லை. என் பார்வைக்கு அவர் வழங்கவும் இல்லை.  திருமணத்திற்கு பின்னர் எனது தஃப்தரை எடுத்துச் சென்று காஜியிடம் வழங்கினேன். இரண்டாம் திருமணத்திற்கான ஆவணங்களையும் வழங்கினேன்.  அவர் அதை சரி பார்த்து விட்டு, "மௌலானா! எல்லாம் சரியாக இருக்கிறது; ஆனாலும் பெண் தரப்பினருடைய சொந்த ஊரின் அனுமதி கடிதம் வாங்கிக் கொண்டுதான் நீங்கள் இந்த திருமணத்தை செய்து வைத்திருக்க வேண்டும்;  இவர்களுட...

ஏழைகள் ஹஜ் செய்ய ஆசைப்படுவது பேராசையா?

Image
ஹாஜிகளின் சேவையில் ........20 ஏழைகள் ஹஜ் செய்ய  ஆசைப்படுவது பேராசையா?  ============================== ஆசை மனிதர்களின் இயற்கை குணங்களில் ஒன்று. ஆசை ஓர் ஆபத்தான நோய் என பெரியவர்கள் சொல்லுவார்கள்.  ஆனால் மனிதனின் அடிப்படையே ஆசைதான்! ஆசையை விட்டு விட வேண்டும் என சொல்வதும், அது இல்லாமல் வாழ வேண்டும் என எண்ணுவதும் ஒரு ஆசைதான்! மனிதன் ஆசைப்பட்டது நிறைவேறாமல் போகும்போதுதான் நிராசை அடைகிறான்; மனம் நொந்து கவலைக்குள்ளாகிறான்.  ஆசை மனிதனில் பாதிப்பு உள்ளாகாத வண்ணம் ஆசைப்படலாம். ஒன்றை அடைந்த பிறகு மற்றொன்றை நோக்கி பயணிப்பது தான் ஆசை.  பெரிய ஒன்றை அடைய நினைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அதை அடைந்த பிறகு அத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டால், அது உடலுக்கும் உள்ளத்திற்கும் நிரந்தர நன்மை தரும். நபி சுலைமான் அலை அவர்களின் ஆசையை பாருங்கள்.  قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ என் இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் வழங்கப்படாத ஆட்சி அதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! நிச்சயம...