தலைமை காஞ்சி அவர்களின் அறிவும் அனுபவம் நிகரற்றது

தலைமை காஞ்சி அவர்களின் அறிவும் அனுபவம் நிகரற்றது 
=============================

ஒருவருடைய தங்கைக்கு நான் இரண்டாம் திருமணம் செய்து வைத்தேன் 

அவர்கள் தாய்லாந்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அங்கேயே முறைப்படி அவர்கள் விவாகரத்து  பெற்றிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் அவருடைய தங்கைக்கும் இங்குள்ள ஒருவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயத்து என்னை திருமணம் செய்து வைக்க அழைத்து இருந்தார்கள். 

அழைத்தவர் எங்களது மஹல்லா வாசி தான். தன்னிடம் எல்லா ஆவணங்களும் இருப்பதாக கூறினார். அதை நம்பி நான் திருமணம் செய்து வைத்து விட்டேன். 

அந்த ஆவணங்களை நான் முன்கூட்டியே பார்வையிடவும் இல்லை. என் பார்வைக்கு அவர் வழங்கவும் இல்லை. 

திருமணத்திற்கு பின்னர் எனது தஃப்தரை எடுத்துச் சென்று காஜியிடம் வழங்கினேன். இரண்டாம் திருமணத்திற்கான ஆவணங்களையும் வழங்கினேன். 

அவர் அதை சரி பார்த்து விட்டு, "மௌலானா! எல்லாம் சரியாக இருக்கிறது; ஆனாலும் பெண் தரப்பினருடைய சொந்த ஊரின் அனுமதி கடிதம் வாங்கிக் கொண்டுதான் நீங்கள் இந்த திருமணத்தை செய்து வைத்திருக்க வேண்டும்; 

இவர்களுடைய முழுமையான தகவல்கள் அனைத்தும் ஊர்வாசிகளுக்கு மட்டுமே நன்கு தெரியும்; அதனால் இனி இப்படி செய்யாதீர்கள்" என்று சொல்லி அனுப்பினார்கள்.

இந்த அறிவுரை, மற்றொரு இரண்டாம் திருமணத்தின் போது என்னை ஏமாற்ற நினைத்துவரிடம் இருந்து என்னை நான் பாதுகாத்துக் கொண்டேன்.

காஜி அவர்களின் அனுபவம், மக்களை புரிந்து வைத்திருந்த விதமும் நிகரற்ற அறிவு.

காஜி அவர்களை  நடமாடும் இறைநேசராகவே இந்த இஸ்லாமிய சமூகம் பார்த்தது.

எளிமையின் அடையாளமாகவும் உருவமாகவும் அனைவராலும் பார்க்கப்பட்ட பண்பாளர். 

பெருமை இல்லாதவர்; அதை நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.

இஸ்லாத்தின் அடையாளமாகவும், இஸ்லாமியர்களின் அடையாளமாகவும் வாழ்ந்த முன்மாதிரி மிக்கவர்!

வருடத்தில் இரண்டு மாதம் இவரின் இறுதி வார்த்தையை எதிர்பார்த்தே இந்த சமூகம் காத்திருந்தது! 

இவ்வாண்டு பக்ரீத் பிறையை அறிவிக்க இவரில்லாமல், இவர் குறித்த மரண அறிவிப்பை சமூகம் அடைந்திருக்கிறது. 

24.5.2025 இரவு முன்னேறம் 9 மணி அளவில் காலமாகி விட்டார்கள். 

25.5.2025 அஸர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழுகை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலிலும், நல்லடக்கம் தஸ்தகீர் சாஹிப் தர்கா பள்ளிவாசலிலும் நடைபெறும்.

அல்லாஹ் அவர்களின் மண்ணரையை பிரகாசமாகவும், மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்சையும் நஸீபாக்குவானாக! ஆமீன் !!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்