மீலாது சமய நல்லிணக்க விழா
மீலாது சமய நல்லிணக்க விழா ============================== அபூ உஸைத் (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டிலிருந்து முஸ்லிமல்லாத சில கைதிகளை மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அந்தக் கைதிகளை பார்வையிட்டார்கள். அப்பொழுது ஒரு கைதிப் பெண்மணி அழுது கொண்டிருந்தாள். 'நீ ஏன் அழுகிறாய்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண், 'என் மகன் கூஃபா நகரில் பனூ அப்ஸ் குலத்தாரிடம் விற்கப்பட்டு விட்டான்' என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள் அபூ உஸைத் (ரலி) அவர்களிடம் 'நீங்கள் பஹ்ரைன் சென்று பனூ அப்ஸ் கோத்திரத்தார் வசிக்கும் பகுதிக்குச் சென்று அந்தச் சிறுவனை அழைத்து வாருங்கள்' என்று கூறினார்கள். உடனே அபூ உஸைத் (ரலி) அவர்கள் அங்கே சென்று அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள். நூல் : ஹாகிம் நபி (ஸல்) அவர்கள் சகோதர சமயத்தைச் சேர்ந்த ஒரு பெண் கைதி மீது இரக்கப்பட்டு, அவரின் கண்ணீரைத் துடைப்பதற்காக அவரின் பிள்ளையை அழைத்துவர தூரமான நாட்டிற்கு தன் தோழரை அனுப்பி வைத்தார்கள். சகோதர சமயத்தைச் சேர்ந்த பெண் க...