உண்மையான வலி / சூஃபி / இறைநேசர் யார்?

உண்மையான வலி / 
சூஃபி / இறைநேசர் யார்?

مَن هو الوليُّ الحق؟
مَن هو الصوفيُّ الصادق؟
مَن هو المحبُّ الحقيقيُّ لله؟
================================

நேற்றைய தொடர்ச்சி.....29

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
===================================

உண்மையை மட்டுமே பேசும் குணம் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் இயற்கை குணமாகும். உடைமைகளுக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்பட்ட போதே பொய்யை பேசாதவர்கள், எதிர்காலத்தில் எப்படி பேசி இருக்க முடியும்? 

ஒருவர், "மனிதத் தன்மையின் அடிப்படை எது?" என வினவியதற்கு, "உண்மை பேசுவதே அடிப்படை " எனக் கூறினார்கள்.

வலி - இறைநேசர் யார் என்று பொதுமக்களிடம் கேட்டால் அவர்கள், "அற்புதங்களை செய்கிறவர், உலக இன்பங்களை விட்டும் ஒதுங்கி வாழ்பவர், ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர், பிறரின் மனதில் இருப்பதை சொல்பவர்" என்றெல்லாம் கூறுவார்கள்.

ஷரீஅத் எனும் இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, குர்ஆன் மற்றும் ஹதீஸ் வலியுறுத்தும் வாழ்வியலை ஏற்று நடப்பவர்களே உண்மையான வலி -  சூஃபி ஆவார் என்பதே இஸ்லாத்தின் அளவுகோல் ஆகும். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இஸ்லாத்தின் விழுமியங்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, அதனையே வாழ்வியல் முறையாக வாழ்ந்து வந்ததால் அவர்களைப் பற்றிய நல்லெண்ணங்களை, நற் சிந்தனைகளை அனைத்து அடியார்களின் உள்ளத்திலும் அல்லாஹ் போட்டு விட்டான். 

அதனால் தான், இன்றும் அவர்கள் குறித்து பேசிக் கொண்டும், யோசித்துக் கொண்டும் இருக்கின்றோம்.

வலி மற்றும் சூஃபியாக விரும்புவோர் ஐந்து விஷயங்களை பின்பற்ற வேண்டும். 

1.  இஸ்லாம் மார்க்கம் ஹராம் என தடுத்தவற்றையும், சந்தேகத்திற்கு உரியவற்றையும் முற்றிலும் தவிர்த்து வாழ வேண்டும். 

2.  இஸ்லாம் மார்க்கம் அனுமதித்திருந்தாலும் மனம் ஆசைப்படுகிற அனைத்தை விட்டும் ஒதுங்கி வாழ வேண்டும். 

3.  இதயத்தில் இறைவனுடைய நினைவை தவிர வேறு எந்த நினைவும் வராமல் இதயத்தை பாதுகாக்க வேண்டும். 

4.  இறைவனின் அனுமதியில்லாமல் எந்த செயலையும் செய்யாமல் இருப்பதும் பேசாமல் இருப்பதும் ஆகும். 

மேற்கண்ட முதல் மூன்று நிபந்தனைகளையும் முறையாகப் பின்பற்றுகிறவர் ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்றாலோ, செய்ய வேண்டும் என்றாலோ அல்லாஹ் என் இதயத்தில் அந்த செயலை செய்யவோ பேசவோ உதிப்பை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்த்து இருப்பார். 

அவரின் உள்ளத்தில் மன உதிப்பு ஏற்பட்டால் அவர் பேசுவார் அல்லது அதை செயல்பட முனைவார். இல்லையென்றால் அவர் அமைதியாக இருந்து விடுவார். 

5.  அல்லாஹ்வின் நினைவை தவிர வேறு எந்த சிந்தனையும் உள்ளத்தில் உதித்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அதாவது அல்லாஹ்வுடைய நினைவில் மட்டுமே இருக்க வேண்டும். 

அல்லாஹ்வுடைய நினைவு என்பது அவனை திக்ரு செய்வது, தொழுவது போன்ற இஸ்லாமிய வழிபாடுகள் மற்றும் மனிதர்களுக்கு உதவிகள் செய்வது போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு இருப்பது.

இந்த ஐந்து நிலைகளை தொடர்ந்து செய்து வருகிறவர் தான் உண்மையான வலி - சூஃபி - இறைநேசர் ஆவார்.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்