Posts

Showing posts from June, 2024

ரவ்ளாவிற்குள் செல்லும்போது நம் மனநிலை

சூஃபிகளின் ஹஜ் : - 52 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ரவ்ளாவிற்குள்  செல்லும்போது நம் மனநிலை : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= இமாம் கஸ்ஸாலீ [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள்;   நபி (ஸல்)  அவர்களைக் காண ரவ்ளாவிற்குள் நாம் நுழையும்போது, இந்த இடத்தில் தானே  நபிகளாரைச் சுற்றி ஸஹாபாக்கள் கூட்டம் கூட்டமாக  அமர்ந்திருந்து  அன்னாரின் பரக்கத்துகளை பெற்றார்கள்.  இந்த இடத்தில் தானே அன்னாரின் இனிய உபதேசங்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும்  கேட்டுக்கொண்டிருந்தார்கள் என அந்த நாட்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.  எனக்கு நபி (ஸல்) அவர்களையும், ஸஹாபாக்களையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்பதை எண்ணி வருத்தமும், கவலையும், துக்கமும் கொண்டவர்களாக செல்ல வேண்டும்.  நபிகளாரும் நபித்தோழர்களும் வாழ்ந்த காலத்தில் இறைவன் என்னை பிறந்திருக்கச் செய்ய வேண்டுமே என எண்ணி வருத்தத்தோடு செல்ல வேண்டும். நபிகளாரை உலகில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது. ஆனால் மறுமை நாளில் என்  நிலை என்னவாகுமோ தெரியாது!  அன்னாரின் தரிசனம் மகிழ்வுடன் கிடைக்குமோ? அல்லது...

அன்சாரிகள் நம் அண்டை வீட்டினர்

சூஃபிகளின் ஹஜ் : - 51 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• அன்ஸாரிகள்  நம் அண்டை வீட்டினர்: =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=×=÷= இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் அமீருல் முஃமினீன் ஆட்சியாளர் மஹ்தீ அவர்களிடம் ஒரு பணி நிமித்தமாக சென்று இருந்தார்கள்.  அப்பொழுது மன்னர்,  "இமாம் அவர்களே! எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்" என வேண்டிக் கொண்டார்.  அதற்கு இமாம் மாலிக் [ரஹ்] அவர்கள் "எல்லாவற்றிற்கும் முதன்மையாக அல்லாஹ்வுடைய அச்சத்தையும், அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதில் பயபக்தியையும் மேற்கொள்வீராக!  அதன் பிறகு மதீனா வாசிகளின் மீது இரக்கம் காட்டுவீராக! ஏனெனில் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நகரத்தைச் சேர்ந்தவர்களும் அன்னாரின் அண்டை வீட்டாரும் ஆவார்கள் " என உபதேசித்தார்கள்.  நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வாக்காவது. மதீனா என் ஹிஜ்ரத்துடைய நகரம். அதில் என் கப்ரு ஷரீப் உண்டாகும். அங்கிருந்தே கியாமத் நாளன்று எழுப்பப்படுவேன்.  அதில் வசிப்பவர்கள் என் அண்டை வீட்டார்கள். அவர்களைப் பராமரிப்பது என் உம்மத்தினரின் மீது கடமையாகும்.  எவர் என் பொருட்டால் அவர்களைப் பராமரிப்பாரோ அவருக்காக நான் கியாமத் நாளன்...

நபிகள் நாயகத்தை கண்ணியப்படுத்துங்கள்

சூஃபிகளின் ஹஜ் : - 50 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நபிகள் நாயகத்தை கண்ணியப்படுத்துங்கள்: =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ அலீ [ரலி] அவர்களுக்கு தமது விட்டு சாளரத்தைச் செப்பனிடும் தேவை ஏற்பட்டது.  சாளரத்தைச் செய்யும் தச்சரிடம், மதீனாவிற்கு வெளியில் சென்று "பக்கீ"யில் அதனை செய்து வருமாறு பணித்தார்கள்.  அதனைச் செய்யும்போது ஏற்படும் சப்தம் நபி [ஸல்] அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் அன்னார் அவ்வாறு பணித்தார்கள். **** அல்லாமா கிஸ்தலானீ [ரஹ்] அவர்கள் மவாஹிபுல் லதுன்னியாவில், "அண்ணல் நபி [ஸல்] அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் எவ்வாறு மரியாதையும், கண்ணியமும் அளிக்கப்பட்டதோ அதுபோன்றே இப்பொழுதும் அளிக்கப் படவேண்டும்.  ஏனெனில் அன்னார் தமது கப்ரு ஷரீபில் இப்பொழுதும் உயிரோடு இருக்கிறார்கள்" என எழுதியுள்ளார்கள்.  நூல்: ஷரஹ் மவாஹிப் லதுன்னியா  ****** நபி (ஸல் ) அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை மிஃராஜ் அழைத்துச் செல்ல வந்தார்கள்.  அந்த இரவில் உறங்கிக் கொண்டிருந்த நம்பிகளாரை எழுப்ப மணம் இன்றி என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற...

மதீனா போல் தெரிகிறதே!

சூஃபிகளின் ஹஜ் : - 49 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• மதீனா போல் தெரிகிறதே! =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= இறைநேசர் இப்ராஹீம் பின் முஹம்மது அல் கவாஸ் ( 677-761 ) [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள்.  நான் மதீனாவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது கடும் தாகத்தினால் நிம்மதியற்று இருந்தேன்.  தாகத்தின் கடுமையால் நடந்து கொண்டிருக்கும் போது மயக்கமுற்று கீழே விழுந்து விட் டேன்.  சிறிது நேரத்திற்கு பிறகு யாரோ ஒருவர் என் முகத்தில் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பினார்.  நான் எழுந்து பார்த்தபோது மிக அழகான தோற்றத்தில் ஒருவர் வாட்டசாட்டமான  குதிரை மீது அமர்ந்திருந்தார்.  அவர் எனக்குக் குடிக்கத் தண்ணீர் அளித்தார் . பின்னர் "என்னுடன் குதிரை மீது அமர்ந்து கொள்!" என கேட்டுக்கொண்டார்.   சிறிது நேரத்தில் அவர் என்னிடம் ''இது எந்த ஊர் எனத் தெரிகிறதா?" எனக் கேட்டார்.  அதற்கு நான் "இது மதீனாவாயிற்றே!'' என்றேன்.  உடனே அவர் "இங்கு இறங்கிக் கொள்ளுங்கள்! நீங்கள் நபி (ஸல்) அவர்களின் ரவ்லாவிற்கு செல்லும்போது,  "உங்களின் சகோதரர் கிளுறு (அலை) அவர்களும் தங்களுக்கு ஸலாம் சொன்...

ஹம்ஜா (ரலி)

சூஃபிகளின் ஹஜ் : - 47 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ஹம்ஜா (ரலி) : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷ உஸைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹள்ரத் ஹம்ஜா [ரலி] அவர்கள் உஹது போர்க்களத்தில் ஷஹீதானார்கள்.  நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹள்ரத் ஹம்ஜா (ரலி) அவர்களுடைய கப்ரின் அருகிலிருந்தோம்.  அவர்களுக்கு கஃபனாக ஒரு சிறு துண்டுத் துணிதான் இருந்தது. அது உடல் முழுவதும் போர்த்த  போதுமானதாக இருக்குவில்லை;  அதனால் முகத்தை மூடினால் கால்கள் திறந்து விடுகின்றன; கால்களின் பக்கம் இழுத்தால் முகம் திறந்து கொள்கிறது.  அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "போர்வையால் முகத்தை மூடிவிடுங்கள்; கால்களுக்கு மரத்தின் இலைகளை வைத்து மறையுங்கள்" என்று கூறினார்கள்.  இந்த நிலையைக் கண்ட ஸஹாபாக்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "ஒரு காலம் வரும்; அப்பொழுது மனிதர்கள் செழிப்பான பிரதேசங்களை நோக்கிச் செல்வார் கள்.  அங்கு அவர்களுக்கு உண்ணுவதற்கும் உடுப்பதற்கும் நல்ல பொருட்கள் கிடைக்கும். அதிகமான வாகனங்களும் கிடைக்கும்.  அப்பொழுது அங்கிருந்து தங்களுடைய குடும்பத்தினர...

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களாலும் கருத்துகளாலும் இறைவனை ஈர்க்கும் வண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள் :

சூஃபிகளின் ஹஜ் : - 48 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• தேர்ந்தெடுக்கப்பட்ட  சொற்களாலும் கருத்துகளாலும் இறைவனை ஈர்க்கும் வண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள் :  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ அபூ ஸஈத்  அப்துல் மலிக் பின் கரீப் பின் அப்துல் மலிக் பின் அலீ பின் *அஸ்மயீ* அல் பாஹிலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:  ஒரு கிராமப்புற அரேபிய மனிதர், நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தளத்திற்கு முன்பு நின்று கொண்டு, "யா அல்லாஹ்! நபிகள் நாயகம் அவர்கள்  உன் அன்பராக இருக்கின்றார்கள்.  நானோ உன் அடிமை.  ஷைத்தானோ உன் விரோதி.  நீ என்னை மன்னித்து  விட்டால் உன் மஹ்பூப் (ஸல்) அவர்களின் உள்ளம் மகிழ்ச்சி அடையும்!  உன் அடிமையான நான் வெற்றி பெற்று விடுவேன்.  உன் விரோதியின் உள்ளம் துடிதுடித்து வெதும்பும்.  நீ என்னை மன்னிக்காவிட்டால் உன் மஹ்பூப் (ஸல்) அவர்களுக்கு வருத்தம் உண்டாகும்.  உன் விரோதி மகிழ்ச்சி அடைவான்.  மேலும் உன் அடிமையான நான் நாசமடைந்து விடுவேன்.  யா அல்லாஹ்! தயாள குணமுள்ள பெரிய தலைவர் எவரேனும் இறந்துவிட்டால் அவருடைய கப்ரின்மீது அடிமைகளை விடுதலை...

மஸ்ஜிதுந் நபவி மிம்பரின் வரலாறு

சூஃபிகளின் ஹஜ் : - 46 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• மஸ்ஜிதுன் நபவி  மிம்பரின் வரலாறு :  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ அமீருல் முஃமினீன் ஹள்ரத் முஆவியா (ரலி) அவர்கள் காலத்தில் மதீனாவின் அமீராக இருந்த மர்வான் அவர்கள், கலீஃபாவின் உத்திரவுப்படியோ அல்லது அவர்களின் உத்திரவின்றியோ, அல்லது அமீருல் முஃமினீன் முஆவியா (ரலி) அவர்களின் சந்தோ ஷத்தையும், நெருக்கத்தையும் பெறுவதற்காக மஸ்ஜிதுந் நபவியில் இருந்த நபி (ஸல்) அவர்களின் மிம்பர் ஷரீபை எடுத்து ஷாம் நாட்டிற்கு (திமிஷ்கு நகரத்திற்கு) அமீர் முஆவியாவிடம் அனுப்பிவிட எத்தனித்தார்.  அந்த எண்ணத்துடன் மிம்பரைத் தோண்டி எடுக்க உத்திரவிட்டார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென சூரிய கிரகணம் உண்டாகி மதீனா முனவ்வராவில் கடும் இருள் சூழ்ந்தது.  அப்போது வானில் நட்சத்திரங்களும் தெரிந்தது. உடனே மர்வான் மக்கள்  முன் தோன்றி உரை நிகழ்த்தினார். அதில் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், "மிம்பரை எடுத்து அனுப்பும் எவ்வித நோக்கமும் நமக்கு இல்லை; அமீர் முஆவியா [ரலி] அவர்கள்  அதனை திமிஷ்கு நகரத்திற்கு அனுப்பி வைக்குமாறு எனக்கு கடிதம் எதுவ...

நபிகள் நாயகத்தை ஜியாரத்து செய்யுங்கள்

சூஃபிகளின் ஹஜ் :- 45 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நபிகள் நாயகத்தை  ஜியாரத்து செய்யுங்கள் :  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ மக்கா முகர்ரமாவில் இப்னு ஸாபித் (ரஹ்) எனும் இறைநேசர் வாழ்ந்து வந்தார்கள்.  அறுபது வருட காலமாக ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜு செய்த பிறகு நபி (ஸல்) அவர்களின் ஜியாரத்திற்காக மதீனாவிற்கு வருவார்கள்.  சில நாட்கள் தங்கி இருந்து ஜியாரத் செய்து விட்டு மக்காவிற்கு திரும்பிச் செல்வார்கள்.  ஓரு வருடம் ஏதோ நிர்பந்தமான வேலைகளின் காரணமாக ஜியாரத்துச் செய்ய மதீனா செல்லவில்லை.  இந்நிலையில் இப்னு ஸாபித் (ரஹ்) அவர்கள் தமது அறையில் அமர்ந்திருக்கையில் சிறு தூக்கம் ஏற்பட்டு உறங்கினார்கள்.  அப்பொழுது கனவில் நபி [ஸல்] அவர்கள் காட்சியளித்தார்கள்.  நபி [ஸல்] அவர்கள் "இப்னு ஸாபித்! நீங்கள் என்னை சந்திக்க வராததால் நானே உங்களை சந்திக்க வந்து விட்டேன்" என்று கூறினார்கள். நூல்: அல் ஹாவில் கபீர் ஓர் அரிதான ஸியாரத்:  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ ஹள்ரத் சையித் அஹ்மத் ரிபாயீ [ரஹ்]  அவர்கள் ஹிஜ்ரீ 555-இல் ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு ஜியாரத்திற்காக மதீனா வந்தார்கள்.  நபி (ஸல...

அமல்களில் சிறந்தது

சூஃபிகளின் ஹஜ் : - 44 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• அமல்களில் சிறந்தது =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالاَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ،أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : حَجٌّ مَبْرُورٌ. “செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.  “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள்.  “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது.  “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள்.  “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்று கூறினார்கள்.  நூல்: புகாரி  அன்று பிறந்த பாலகர் :  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°° 1521- حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ قَالَ : س...

ருக்னுல் எயானியில் துஆ செய்யுங்கள்

சூஃபிகளின் ஹஜ் : - 43 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ருக்னுல் யமானீயில்  துஆ செய்யுங்கள்: =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ حدثنا سليمان بن أحمد ، ثنا أحمد بن زيد بن الحريش ، ثنا أبو حاتم السجستاني ، ثنا الأصمعي ، ثنا عبد الرحمن بن أبي الزناد ، عن أبيه ، قال : اجتمع في الحجر مصعب ، وعروة ، وعبد الله بنو الزبير ، وعبد الله بن عمر ، فقالوا : تمنوا . فقال عبد الله بن الزبير : أما أنا فأتمنى الخلافة ، وقال عروة : أما أنا فأتمنى أن يؤخذ عني العلم ، وقال مصعب : أما أنا فأتمنى إمرة العراق والجمع بين عائشة بنت طلحة وسكينة بنت الحسين ، وقال عبد الله بن عمر : أما أنا فأتمنى المغفرة ، قال : فنالوا كلهم ما تمنوا ، ولعل ابن عمر قد غفر له . அபூ ஸினாத் (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள்: “ஹிஜ்ர் - ருக்னுல் யமானி எனும் இடத்தில் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களின் மூன்று ஆண் மக்களான அப்துல்லாஹ் (ரலி) முஸ்அப் (ரலி) உர்வா (ரலி) ஆகியோரும், அவர்களுடன் உமர் (ரலி) அவர்களின் மகனாரான அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி ) ஆகிய நான்கு நபர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் மற்ற மூவரை நோக்கி “(ருக்னு...

,பேர் புகழுக்காக ஹஜ் செய்யாதீர்

சூஃபிகளின் ஹஜ் : - 42 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• பேர் புகழுக்காக ஹஜ் செய்யாதீர் :  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= عن أنس بن مالك رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وآله وسلم قال: "يأتي على الناس زمان يحج أغنياء أمتي للنزهة، وأوساطهم للتجارة، وقراؤهم للرياء والسمعة، وفقراؤهم للمسألة".  رواه:  الجامع الكبير ، والديلمي، و كنز العمال  عن ابن عباس رضي الله عنهما قال: حج النبي صلى الله عليه وآله وسلم حجة الوداع ثم أخذ بحلقة باب الكعبة فقال: "يا أيها الناس ألا أخبركم بأشراط الساعة؟" وقال في أواخر الحديث: "يحج الناس إلى هذا البيت الحرام تحج ملوكهم لهواً وتنزهاً، وأغنياؤهم للتجارة، ومساكينهم للمسألة، وقراؤهم رياء وسمعة". رواه:  ابن مردويه அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்பொழுது எனது உம்மத்தில் உள்ள செல்வந்தர்கள் உல்லாசப் பயணம் செல்வது போல் ஹஜ்ஜுக்குச் செல்வார்கள்.  அவர்களில் நடுத்தர குடும்பத்தினர் வியாபார நோக்கத்துடனும், அவர்களில் உள்ள படித்தவர்கள் பெருமைக்காகவும் பெயருக்காகவும் ஹஜ்ஜு செய்...

ஹஜருல் அஸ்வத் முல்தஜிம்

சூஃபிகளின் ஹஜ் : - 41 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ஹஜருல் அஸ்வத்: =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது அல்லாஹ்வின் கைகளை முத்தமிடுவதற்கு நிகராகும் என ஹதீஸ்களில் காணப்படுகிறது.  முல்தஜீம், ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத், கஅபா திரை போன்ற ஒவ்வொன்றையும் முத்தமிடுவது, இஷ்கு எனும் பேரின்பத்தின் வெளிப்பாடு என்பதே உண்மை. முல்தஜீம்: °°°°°°°°°°°°°°° முல்தஜிம் மற்றும் கஅபாவின் திரையைப் பிடித்து அழுவது, தன் எஜமானனுக்கு தவறிழைத்த ஒரு பணியாளன் தன் தவறை உணர்ந்து தன் எஜமானனின் ஆடைகளைப் பிடித்து கொண்டு தன்னை மன்னித்து விடும்படி அழுவதைப்போன்றும், அவர் மன்னிக்காமல் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு விட்டதால், அவருடைய வீட்டு வாசலையும் வீட்டின் சுற்றுப் பகுதிகளையும் சுற்றி சுற்றி வந்து கட்டி அணைத்து அழுது மன்னிப்பு கேட்பது போன்றும் இருக்கின்றது.  மேலும் மறுமை நாளில் இப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் அர்ஷையோ அல்லது அவனையோ பிடித்து அழும் நிலையை ஒத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும், அவர்களின் தோழர்களும் முல்தஜிம் வாசலை கட்டியணைத்து, முத்தமிட்டு, தம் கன்னங்களை மா...

காபா

சூஃபிகளின் ஹஜ் : - 40 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ கஅபா : =÷=÷=÷=÷= தூர்ஸினாய் மலையில் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை பார்த்து மூர்ச்சை அடைந்தது போல் ,  மக்கா நகரில் கஅபாவைப் பார்த்ததும் ஒவ்வொரு ஹாஜியும் தன்னிலை மறந்து, புத்தி பேதலித்தவரைப் போல் காணப்பட வேண்டும். மேலும் கஅபாவைப் பார்த்ததும் அதன் உரிமையாளனை தரிசித்தது போன்று உணர்வு ஏற்பட வேண்டும். மேலும் அச்சமயம் அல்லாஹ்வின் மீது மரியாதையும், கண்ணியமும், அச்சமும், நடுக்கமும் உண்டாக வேண்டும். கஅபாவின் மதிப்பு : °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° உமர் [ரலி] அவர்கள் குரைஷிகளை நோக்கி "உங்களுக்கு முன்பு அமாலிகா சமுதாயத்தினர் கஅபாவின்  நிர்வாகிகளாக இருந்தார்கள். அவகள் கஅபாவை முறையாக கண்ணியப்படுத்த வில்லை.  மேலும் எவ்வாறு இதனை மரியாதையாக நடத்த வேண்டுமோ  அவ்வாறு மரியாதையாக நடத்தவில்லை.  அல்லாஹ் அவர்களை அழித்து விட்டு ஜுர்ஹும் கூட்டத்தினரை கஅபாவிற்கு நிர்வாகிகளாக ஆக்கினான். பின்னர் அவர்களும் இதனை அவமதித்தனர்.  அவர்களையும் அல்லாஹ் நாசமாக்கி லிட்டான். இன்று நீங்கள் கஅபாவிற்கு நிர்வாகிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் இதனை கண்ணியப்பட...

தவாஃப்

சூஃபிகளின் ஹஜ் : - 39 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ தவாஃப் : =÷=÷=÷=÷=÷ கஅபாவை தவாஃப் செய்வது, அல்லாஹ்வின் அர்ஷை வானவர்கள் சுற்றி வருவதை நினைவுபடுத்துகிறது. அல்லாஹ் தன் அருளால் யாருக்கு அதிகமான தவாஃப் செய்யும் வாய்ப்பை வழங்கினானோ அவரே மிக்க மேலானவர்.  குர்ஜ் பின் விப்ராஹ் (ரஹ்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா சென்றிருந்த ஒவ்வொரு நாளின்  பகலில், எழுபது தவாஃப்களும் இரவில் எழுபது தவாஃப்களும் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.  இதன் தூரத்தைக் கணக்கிட்டால், ஏறத்தாழ முப்பது மைல் தினமும் நடந்தது போன்று ஆகும்.  மேலும் ஒவ்வொரு தவாஃபிற்குப் பிறகும் இரண்டு ரகஅத்  தவாஃபுடைய தொழுகை தொழுததால் 280 ரக்அத்துகள் ஆயிற்று.   நூல் : இஹ்யா உலூமிதீன்  இவர்களைப் போன்று  நாமும் மறுமையின் நிரந்தரமான வாழ்விற்காக அதிகமாக தவாஃப் மற்றும் இதர அமல்கள் செய்ய வேண்டும். ஸஃபா & மர்வா தொங்கோட்டம் : °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ஸஃபா & மர்வாவிற்கு இடையே ஓடுவது, மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் மனிதர்கள் இங்கும் அங்கும் ஓடும் காட்சியை ஒத்திருக்கிறது. ஸயீ எனும்...

குர்பானி

சூஃபிகளின் ஹஜ் : - 38 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ குர்பானீ : =÷=÷=÷=÷==÷ இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகனை அறுத்து பலியிடுவது போல் தொடர்ந்து மூன்று நாட்கள் கனவு கண்டதால், அதை நனவாக்கிட தம் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அழைத்துச் சென்று முயற்சித்தார்கள். அது முடியாமல் போனது. அல்லாஹ்விற்காக தன் உயிரைக் கொடுப்பதுதான் ஆக உயர்ந்த தியாகம்.  நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தம் மகனின் உயிரை அல்லாஹ்விற்காக அர்ப்பணித்திட நினைத்ததை நீங்கள் குறைவாக மதித்து விடாதீர். ஏனென்றால் இப்ராஹீம் (அலை) அவர்கள் பல குழந்தைகளுக்கு ஒரு தகப்பன் இல்லை. ஒரே குழந்தைக்கு, மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு தவமிருந்து பெற்ற குழந்தைக்கு தகப்பனாக விளங்கியவர்.  தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தையை அறுத்து பலியிட அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆணை வந்த போது இப்ராஹீம் (அலை) அவர்கள் அதை அல்லாஹ்விற்காக செய்திட முனைந்தார்கள்.  அச்சமயத்தில் அவர்கள் தம் மகனை அறுத்து பழியிட முனைந்த போது, தன் உயிரையும் தன் மகனின் உயிரையும் சேர்த்தே அல்லாஹ்விற்கு அர்ப்பணித்திட முனைந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.  ஒவ்வொரு மனிதனும் ஒரு உயிரைதா...

தல்பியா

சூஃபிகளின் ஹஜ் :-37 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~ தல்பியா : =÷=÷=÷=÷=÷= லப்பைக் - இறைவா நீ அழைத்ததற்காக நான் வந்து விட்டேன் என்று அழுது, புலம்பி சப்தமாக தல்பியாவை கூறுவது, தன் பேரன்பை சந்தோசமாக வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  இதே நிலையில் தல்பியாவை சொல்லிக் கொண்டு ஒவ்வொரு ஹாஜியும் மக்கா நகரை அடைகிறார். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி மூஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்த போது ஸஃபா மர்வாவிற்கு இடையில் லப்பைக் கூறியவாறு ஓடிக்கொண்டிருந்தார்கள்.  அச்சமயம் வானிலிருந்து "லபைக் அப்தீ அன மஅக - அடியானே! நானும் 'லப்பைக்' சொல்கிறேன்; நானும் உம்மோடுதான் இருக்கின்றேன்" என அசரீரி சத்தம் உண்டானது. இதை செவியேற்ற மூஸா (அலை) அவர்கள் ஸஜ்தாவில் விழுந்து நன்றி செலுத்தினார்கள்.  மற்றொரு அறிவிப்பில் மூஸா (அலை) அவர்கள் லப்பைக் என சொல்லும் பொழுதெல்லாம் அல்லாஹ் 'லப்பைக் யா மூஸா' - நானும் தான் உங்களோடு இருக்கின்றேன்' என மறுமொழி சொல்லிக்கொண்டே இருந்தான் என காணப்படுகிறது. நூல் : துருல் மன்சூர் ஹஜ்ரத் அலீ ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் க...

மினா முஸ்தலிஃபா

சூஃபிகளின் ஹஜ் : -36 ~•~•~•~•~•~•~•~•~•~•~• மினா & முஜ்தலிஃபா: =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ இந்த இரண்டு இடங்களிலும் மக்கள் ஒன்று கூடி இருப்பதைக் குறித்து இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் கூட்டம், அவர்களின் கூச்சல், சப்தம், பல்வேறு மொழிகளை பேசுதல், தம் இமாம்களை பின்பற்றி தம் கூடாரங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியன மறுமை நாளில் மக்கள் தம் நபிமார்களையும், ரசூல்மார்களையும் பின்பற்றி செயல்படுவதை நினைவுபடுத்துகிறது.  மேலும் மறுமை நாளின் திடுக்கத்தின் போது மக்கள் அங்கும் இங்கும் ஓடி அவதியுரும் காட்சிகளையும் மினா, முஸ்தலிஃபா ஆகியன நினைவுபடுத்துகிறது. மஜ்னூன் தன் காதலியான லைலாவை தேடி அங்குமிங்கும் அலைந்தது போல், ஹஜ்ஜின் போது ஹாஜிகள் ஸஃபா மர்வாவில் ஓடியும், பின்னர் மக்காவிலிருந்து மினாவிற்கு சென்றும், பின்னர் மினாவில் இருந்து அரஃபாவிற்கு சென்றும்,  பின்னர் அரஃபாவில் இருந்து இரவில் முஸ்தலிஃபாவிற்கு வந்தும், பின்னர் முஸ்தலிஃபாவில் இருந்து மினாவிற்கு வந்தும், பின்னர் மினாவிலிருந்து பெரிய ஷைத்தானுக்கு மட்டும் கல்லடிக்க சென்றும், கல்லடித்த பின்னர் தவாஃப் செய்வதற்காக ம...

அரஃபா நம்மை நாமே அறியும் இடம்

சூஃபிகளின் ஹஜ் :- 35 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~ அரஃபா -  நம்மை நாமே அறியும் இடம் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= அரஃபா பெருவெளியில் மக்கள் ஒன்று கூடி இருப்பது மஹ்ஷர் மைதானத்தை நினைவுபடுத்துகிறது. சூரிய வெப்பம், தண்ணீர் இல்லாத நிலை, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் மஹ்ஷரில் இருப்பது போன்றே அரஃபா மைதானத்திலும் மக்கள் இருக்கிறார்கள்.  அல்லாஹ் தன்னை மன்னித்து விட வேண்டுமே எனும் மனநிலையில் தம் பாவங்களை எண்ணி அஞ்சியவர்களாக அங்கே ஒன்று கூடி இருக்கிறார்கள்.  ஆலமுல் அர்வாஹில் அலஸ்த்து பிரப்பிகும் - நான் உங்கள் இறைவன் அல்லவா? என்று அல்லாஹ் ஏற்கனவே ஆன்மாக்களின் உலகில் அனைவர் முன்னிலையில் கேட்டபோது, அனைவரும், "ஆம்! நீ எங்களின் இறைவன்தான்" என பதில் அளித்தார்கள்.  அந்த பதிலை நினைவுறுத்தும் விதமாகவே அரஃபா மைதானத்தில் அனைவரும் ஒன்று கூடி, அதே இறைவனை நினைத்து உள்ளம் உருகி வேண்டுகிறார்கள். நீ மட்டுமே எங்கள் இறைவன் என்றும் கூறுகிறார்கள். இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் தம் இஹ்யாவில் ஒரு சூஃபியின் வரலாற்றை கூறுகிறார்கள்.   அரஃபா நாளன்று ஒரு சூஃபியின் கண்களுக்கு ஷைத்தான் தெரிந்தான். அவ...

இஹ்ராமில் பரதேசி கோலம்

சூஃபிகளின் ஹஜ் :-  34 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ இஹ்ராமில் பரதேசி கோலம் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= இஸ்லாத்தில் துறவறம் இல்லை. ஆனால் பிற மதங்களில் துறவறம் இருக்கின்றது. அது ஓர் உயர்ந்த அமலாகவும் போற்றப்படுகிறது.  அதனால் ஆயுளில் ஒரு முறை ஹஜ் செய்யும் போது ஐந்து நாட்கள் மட்டும் துறவர கோலம் மேற்கொள்ளலாம் எனும் வகையில் அல்லாஹ் ஹஜ்ஜை கடமையாக்கி இருக்கின்றான்.  இந்த ஹஜ்ஜில் கவர்ச்சிகரமான, வண்ணமயமான பொருட்களையோ, ஆடைகளையோ அணியக்கூடாது; இஹ்ராம் என்ற இரண்டு வெள்ளைத் துணியை மட்டுமே அணிய வேண்டும், மனைவியுடன் சேரக்கூடாது; சாடைமடையாக கூட ஆபாச வார்த்தைகளைப் பேசக்கூடாது என வரையறுத்து, துறவறத்தை வேறொரு வடிவில் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இஹ்ராம் எனும் ஆடை லிபாசுத் தக்வா - இறையச்சத்தில் நனைத்தெடுத்த ஓர் ஆடை. இஹ்ராம் அணிந்திருப்போரை பரதேசி கோலத்தில் இறைவன் பார்க்கும் போது அவன் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறான்.  அழுக்கேறிய ஆடைகளோடு தலைவிரி கோலமாக காணப்படும் ஹாஜிகளை பார்த்து இறைவன் தன் வானவர்களிடம், " என் வீட்டை தரிசிக்க நெருங்கி வரும் என் நேசர்களைப் பாருங்கள்; என்னை நோக்கி தலைவிரி கோலமா...

சூஃபிகள் கூறும் ஹஜ்ஜின் ரகசியங்கள்

சூஃபிகளின் ஹஜ் :- 33 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• சூஃபிகள் கூறும்  ஹஜ்ஜின் ரகசியங்கள்: =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= ஹஜ்ஜுடைய ஒவ்வொரு செயலிலும் பல நுட்பமான விஷயங்கள் மறைந்திருக்கின்றது. அவை அனைத்தையும் நாம் அறிய இயலாது.  ஆனால் சூஃபிகளும் ஞானிகளும் தாம் அறிந்த சில தகவல்களை நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்கள். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அல்லாஹ்விற்கும் அடியானுக்குமான தொடர்பை ஏற்படுத்தித் தருவது வணக்க வழிபாடுகள்தாம்.  அந்த வகையில் தொழுகை முதல் ஜகாத் வரை பல இறைவழிபாடுகள் மூலம் அவனை நெருங்க முயற்சிகளை மேற்கொண்டோம்.  அதன் தொடர்ச்சியாக தான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிய பிறகு நமக்கு விருப்பமான அனைத்தையும் விட்டுவிட்டோம்.  நமக்கு விருப்பமானவற்றை பார்ப்பதை விட்டும் நம் முகங்களை திருப்பிக் கொண்டும் இறைவனின் முகத்தை முன்னோக்கியும் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றோம்.  நாடு நகரம் இல்லாமல், ஒரு பற்றற்ற அலங்கோல நிலையில், சுற்றக்கூடிய தன் அடியானை காண அல்லாஹ் ஆசைப்பட்டான். அதற்காக ஹஜ் பயணத்தை ஏற்படுத்தினான்.  இந்தப் பாதை அன்று முதல் இன்று வரை பூக்கள் நிறைந்தது அல்ல! ம...

நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை -6

சூஃபிகளின் ஹஜ் :- 32 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ நபிகள் நாயகம் செய்த  ஹஜ்ஜின் செயல்முறை =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= தொடர்.....-6 முடிவுற்றது... அமீருல் ஹஜ் : °°°°°°°°°°°°°°°°°°°°°° நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் இருந்து திரும்பி வந்த பிறகு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ்வை சென்றடைந்தார்கள்.  பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்த கலீஃபா அபூ பக்ர் (ரலி) அவர்கள் முதலாம் வருடம் ஹஜ் செய்ய இயலவில்லை அதனால் 'அமீருல் ஹஜ்' ஆக உமர் (ரலி) அவர்களை நியமித்து அனுப்பி வைத்தார்கள். இரண்டாம் வருடம் அபூ பக்ர் (ரலி) அவர்களே ஹஜ்ஜுக்கு சென்று மக்களை வழி நடத்தினார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் மரணித்த பிறகு உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆனார்கள். அவ்வருடம் அவர்களால் ஹஜ் செய்ய இயலவில்லை. அதனால் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அமீருல் ஹஜ்ஜாக நியமித்து அனுப்பி வைத்தார்கள். பின்னர் தொடர்ந்து பத்து வருடங்கள் தாமே அமீருல் ஹஜ்ஜாக இருந்து உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய வைத்தார்கள்.  தமது இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் அன்றிருந்த அனைவரையும் அழைத்துச் சென்று ...

நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை -5

சூஃபிகளின் ஹஜ் :- 31 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நபிகள் நாயகம் செய்த  ஹஜ்ஜின் செயல்முறை  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= தொடர் ......5 தவாஃப் ஜியாரா : °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நபி (ஸல்) அவர்கள் லுஹர் உடைய நேரத்தில் தவாஃப் ஸியாரவை செய்வதற்காக மக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்கள். வழியிலோ அல்லது ஹரம் ஷரீஃபிலோ அல்லது மீண்டும் மினாவிற்கு வந்த பிறகோ லுஹரைத் தொழுதார்கள். மக்கா முகர்ரமாவில் தவாஃபே ஸியாரவை நபி (ஸல்) அவர்கள் முடித்துக் கொண்டு ஸஃபா மர்வாவிற்கு இடையே தொங்கோட்டம் ஓடினார்கள். பின்னர் மினாவிற்கு வந்து தமது கூடாரத்தில் தங்கி இருந்தார்கள். மூன்று நாட்களும் பல்வேறு சட்டங்களை பொதுமக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.  அந்த உபதேசத்தின் போது, "நான் இனி உங்களை சந்திக்காமல் போய்விடக்கூடும்" எனும் வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினார்கள்.  அந்த மூன்று நாட்களிலும் ஜவால் -  உச்சியில் இருந்து சூரியன் சாய்ந்த பிறகு மூன்று ஷைத்தான்களுக்கும் கல் அடித்தார்கள். துல்ஹஜ் பிறை 13 செவ்வாய்க்கிழமை அன்று ஜவாலுக்கு பிறகு ஷைத்தானுக்கு கல் அடித்து முடித்தார்கள். மக்கா முகர்ரமாவிற்கு செல்லும் வழ...

நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை - 4

சூஃபிகளின் ஹஜ் :- 30 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நபிகள் நாயகம் செய்த  ஹஜ்ஜின் செயல்முறை  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ தொடர் ....4 துல்ஹஜ் பிறை  : .....1 ஜமரத்துல் அகபா:  நபி (ஸல்) அவர்கள் மினாவை  சென்றடைந்ததும்  ஜவால் - சூரியன் உச்சியில் இருந்து சாய்ந்த பிறகு ஜமரத்துல் அகபா -  பெரிய ஷைத்தானிற்கு மட்டும் கல் அடித்தார்கள்.  இங்கே கல் அடிக்கும் வரை தல்பியாவை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கல்லடித்த பிறகு தல்பியாவை நிறுத்தி விட்டார்கள்.  பின்னர் மினாவில் தமது தங்கும் இடத்திற்கு வந்து நீண்ட நேரம் உபதேசம் செய்தார்கள். பின்னர் குர்பானீ கொடுக்கும் இடத்திற்குச் சென்று 63 ஒட்டகங்களை தமது கைகளால் அறுத்தார்கள்.  மீத ஒட்டகங்களில் 37 லை அலீ (ரலி) அவர்கள் அறுத்து பலியிட்டார்கள். அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் 100 ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள்.  தமக்கான ஒரு குர்பானி போக மீதமுள்ள 99 குருபானிகளும் முழு உம்மத்தினருக்கு வழங்கப்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு குர்பானீ ஒட்டகத்தில் இருந்தும் சிறிதளவு இறைச்சியை எடுத்து வந்து சமைத்து அத...

நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை -3

சூஃபிகளின் ஹஜ் : - 29 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ நபிகள் நாயகம் செய்த  ஹஜ்ஜின் செயல்முறை =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= தொடர் ......3 துல்ஹஜ் பிறை 8 : ------------------------------------- பிறை எட்டு, வியாழக்கிழமை லுஹா உடைய நேரத்தில் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் மினாவிற்குச் சென்றார்கள்.  ஏற்கனவே இஹ்ராமிலிருந்து வெளிவந்திருந்த அனைவரும் அன்றைய தினம் பகலில் இஹ்ராம் அணிந்து கொண்டு நபிகளாரோடு வினாவிற்குப் புறப்பட்டார்கள். மினாவில் லுஹரிலிருந்து மறுநாள் ஃபஜர் வரை ஐந்து நேர தொழுகை கஸர் செய்து  தொழுதார்கள்.  அரஃபா : °°°°°°°°°°°°°° பிறை 9 அன்று காலையில் சூரியன் உதயமான பிறகு மினாவில் இருந்து அரஃபாவிற்கு புறப்பட்டுச் சென்றார்கள்.  அங்கே அரஃபாவில் இன்று மஸ்ஜிதே நமிரா உள்ள இடத்தில் நபிகளாருக்கு கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்தார்கள்.  பின்னர் ஜவால் - சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு லுஹருடைய நேரத்தில் தமது 'கஸ்வா' எனும் ஒட்டகத்தில் ஏறிச் சென்று 'பத்னே உர்னா' எனும் இடத்தில் உலகப் பிரசித்தி பெற்ற குத்பா - பேருரை நிகழ்த்தினார்கள். பேருரைக்...

நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை -2

சூஃபிகளின் ஹஜ் :28 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நபிகள் நாயகம் செய்த  ஹஜ்ஜின் செயல்முறை  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ தொடர் : 2 ஹஜ் செயல்முறை பயான் : --------------------------------------------------- இந்நிலையில் பயணம் தொடர்ந்தது . மக்காவிற்கு அருகில் உள்ள 'வாதீ அஸ்பான்' எனும் இடத்தில் தங்கியிருந்தார்கள்.  அப்போது ஸுராகா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஓர் குழந்தைக்கு பாடம் நடத்துவது போல் எங்களுக்கு ஹஜ் சம்பந்தமான விளக்கங்களை சொல்லிக் கொடுத்து விடுங்கள்; எங்களுக்கு ஹஜ் செய்யத் தெரியும் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள்.  அதற்குப் பின்னர் நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் ஹஜ் சம்பந்தமான அனைத்து விபரங்களையும் முன்கூட்டியே சொல்லி கொடுத்தார்கள். மாதவிடாய் : ------------------------ மக்காவிற்கு அருகில் உள்ள 'ஸரஃப்' எனும் இடத்தை ஹஜ் குழுவினர் அடைந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது.  மிகவும் வருத்தத்தோடு நபிகளாரிடம் சொன்னபோது அண்ணலார், "இது அனைத்துப் பெண்களுக்கும் வளமையாக ஏற்படும் ஒன்றுதான்; கவலைப்பட வேண்டாம்" என...

நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை

சூஃபிகளின் ஹஜ் :-  27 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= தொடர் .......1 ஹிஜ்ரி ஒன்பதாவது வருடம் முதல் ஹஜ்  கடமையாக்கப்பட்டது.  அந்த வருடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பல்வேறு அரசியல்  நெருக்கடிகள் இருந்ததால் அவ்வாண்டு அபூ பக்ர் (ரலி ) அவர்களை அமீருல் ஹஜ்ஜாக நியமித்து ஹஜ்ஜு செய்ய அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களின் முதல் ஹஜ்  : நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு ஹஜ் மட்டுமே செய்து இருக்கிறார்கள். அந்த ஹஜ்ஜின் முழு விபரங்களும் நாம் காணலாம். ஹிஜ்ரி 10 துல்கஅதா பிறை 25 சனிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பிறகு மதீனாவில் இருந்து  புறப்பட்டுச் சென்று, துல் ஹுலைஃபாவில் அன்று இரவு தங்கினார்கள். அந்த இரவில் தமது அனைத்து மனைவியருடனும் உடலுறவு கொண்டார்கள். மறுநாள் பிறை 26 ஞாயிற்றுக்கிழமை லுஹருடைய நேரத்தில் இஹ்ராம் உடுத்துவதற்காக குளித்துவிட்டு இஹ்ராம் அணிந்தார்கள்.  ஜிப்ரயீல் (அலை) அவர்களின் உத்தரவுக்கிணங்க கிரான் (ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒரே இஹராமில் செய்யும் வகையில் ஆன) ஹஜ் செய்வதாக நிய்யத் செய்து கொண்டார்கள்....

ஹஜ் அமல்களின் அரசன் !

சூஃபிகளின் ஹஜ் : - 26 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ஹஜ் அமல்களின் அரசன் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= ஹள்ரத் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஹஜ் குறித்து கூறிய ஞான உபதேசம் . அல்லாஹ்வை அஞ்சி சிலர் வணங்குகிறார்கள். இது அடிமைகளின் வணக்கம். இவர்கள் இறைவனின் தண்டனைகளுக்கு அஞ்சியே அமல் செய்கிறார்கள்.  இன்னும் சிலர் அவன் அருட்கொடைகளை எதிர்பார்த்து வணங்குகிறார்கள். இவர்கள் வியாபாரிகள். (வியாபாரிகள் எந்த வேலை செய்தாலும் அதில் லாபத்தை எதிர்பார்த்தே செயல்படுவார்கள்.)  ஆனால் இறைநேசர்களோ அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே வணங்குவார்கள். இறுதிக்கடமையான ஹஜ்ஜை இறைநேசர்கள் போல் அல்லாஹ்வுக்காகவும், நன்றி உணர்வோடும் செய்ய முன்வர வேண்டும். ******* இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக  சுஃப்யானுஸ் ஸவ்ரீ  (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:  இக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது அரிதாகி வருகிறது. அது எங்கேனும்  கிடைப்பதாக இருந்தால் பிரபல்யமற்று மறைந்து இருப்பதில்தான் கிடைக்கும்.  பிரபல்யமற்று மறைந்திருந்தும், பாதுகாப்பும் அமைதியும் கிடைக்கவில்லை என்றால்  தனிமையில்தான் தேடிப் பார்க்க...

உலகத்தின் இறுதி ஹஜ்

சூஃபிகளின் ஹஜ் : - 25 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• உலகத்தின் இறுதி ஹஜ்  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ்ஜுக்குச் சென்ற சமயம் பெண்களிடம், “இதுவே நீங்கள் செய்யும் ஹஜ்ஜாகும். இதற்குப் பிறகு உங்கள் வீட்டு பாய்களின் மீது நீங்கள் இருக்க வேண்டும்." எனக் கூறினார்கள்.  நூல் : திர்மிதீ  இந்த ஹதீஸின் காரணமாக உம்மு ஹாத்துல் முஃமினீன்  ஜைனப் (ரலி) அவர்களும், சௌதா (ரலி) அவர்களும் இதற்குப் பிறகு ஒரு ஹஜ்ஜும் செய்யவில்லை.  "நபி (ஸல்) அவர்களின் இந்த அருள் மொழியை நாமே நேரில் கேட்டிருக்க, பிரயாணத்திற்காக வீட்டை விட்டு எப்படி வெளிக் கிளம்புவது?' ' என்று அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லவில்லை.  ஆனால் நபிகள் நாயகத்தின் மற்ற மனைவிமார்கள்  நபி (ஸல்) அவர்களின் மனைவியர் கீழ்காணும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ், உம்ரா செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வயதானவர், பலவீனர், பெண்கள் ஆகியவர்களின் ஜிஹாத் ஹஜ்ஜாகும்."  நூல் :  திர்மிதீ  சூஃபிகளில் சிலர் தம் வாழ்நாளில் ஒரு முறை மட்டும...

ஏன்? எதற்கு? என கேட்காதே!

சூஃபிகளின் ஹஜ் : - 24 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ஏன் எதற்கு என கேட்காதே! =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஈரானின் வடபகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து 2500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்காவிற்கு ஹஜ் செய்ய புறப்பட்டார்.  நகரங்கள், கிராமங்கள், ஆங்காங்கே அமைந்துள்ள தனி வீடுகள் என செல்லும் வழி நெடுகிலும்  தனக்கான ஷைஹை தேடிக்கொண்டே சென்றார்.  இறுதியில் ஓர் நகரத்தில் கண் தெரியாத, வயதான ஒரு ஷைஹை கண்டறிந்தார்.  அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் அந்த ஷைஹிடம் , "நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன்; அந்த அமல் சார்ந்த நுட்பமான தகவல்களை எனக்கு சொல்லித் தாருங்கள்" எனக் கேட்டார். ஷைஹு அவர்கள்,  "நீங்கள் என்னை ஏழு முறை தவாஃப் - சுற்றி வாருங்கள்; இது ஹஜ்ஜை விட சிறந்தது. உங்கள் கடமை நிறைவேறிவிட்டது. உங்கள் பயணத்தின் நோக்கம் முழுமை பெற்று விட்டது. நீங்கள் தூய்மை அடைந்து விட்டீர்கள்" என்று கூறினார்கள். அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ஏன் எதற்கு என்று கேட்காமல் அவர்களை சுற்றி வர தயாரானார்கள்.   ஷைஹு அவ...

காதலன் காதலியை சந்திப்பது போல் ஹஜ்

சூஃபிகளின் ஹஜ் : -23 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ ஹஜ் மற்றும் உம்ரா  செய்வோர் கவனத்திற்கு....... காதலன் காதலியை  சந்திப்பது போல் ஹஜ்......: =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا ஹஜ் செய்வதற்காக மக்களுக்கு அறிவியுங்கள்; அவர்கள் நடந்து வருவார்கள்.  22: 27 ஹஜ் பயணம் என்பது தன் முழு அன்பையும் வெளிப்படுத்தி காட்டும் ஓர் உன்னத, உயரிய பயணமாகும். ஒரு காதலன் தன் காதலியை சந்திப்பதற்கு எவ்வளவு ஆவலோடும், ஆர்வத்தோடும், ஆசையோடும் பயணிப்பானோ அது போன்று ஹஜ்ஜுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.  பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு தன் குடும்பத்தினரை பார்க்க வருகிற ஒருவனுடைய உள்ளத்தில் எவ்வளவு அன்பும், ஆசையும் இருக்குமோ அவ்வளவு அன்பும் ஆசையும் ஹஜ்ஜுடைய பயணத்தை மேற்கொள்வோரின் உள்ளத்தில்  இருக்க வேண்டும்.  வெளிநாட்டில் இருந்து குடும்பத்தினரை பார்க்க வருகிற ஒருவனுக்கு வழியில் ஏற்படுகிற துன்பங்கள், கஷ்டங்கள் அனைத்தையும் அவன் எந்த வகையிலும் பொருட்படுத்தாமல், குறை சொல்லாமல் பயணிப்பானோ அதுபோல் ஹஜ்ஜுடைய பயணத்தை அவன் மேற்கொள்ள வேண்டும். காழி...

ஹஜ் குறித்து சூஃபிகளின் கருத்து

சூஃபிகளின் ஹஜ் : -22 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~ ஹஜ் குறித்து  சூஃபிகளின் கருத்து : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ சூஃபி முஹம்மது பின் ஃபஸல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் ஏன் இறைவனை தேடி இறையில்லமாம் கஅபாவை நாடிச் செல்கிறார்கள்?   இருந்த இடத்தில் முறையாக இறைவழிபாடுகள் செய்வதின் மூலம் தமக்குள் இறைவனைக் கண்டு கொள்ள மாட்டார்களா?  அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஹஜ்ஜுடைய அமல்களை முறையாக செய்து விட்ட ஒவ்வொருவராலும் அரஃபாவில் அவனை எளிதாக அடைந்து கொள்ள முடியுமே!  எனவே ஹஜ்ஜுடைய அமலை முறையாக செய்ய எவரும் முன்வர மாட்டார்களா? ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். ஹஜருல் அஸ்வதும் கஅபாவும் கல்தான்!  அதனால் எப்பயனும் இல்லை.  அதனால் நான் கஅபாவை நாடிச் செல்வதில்லை. அதன் உரிமையாளனையே தேடிச் செல்கிறேன் ஒவ்வொரு வருடமும்.... அபுல்ஹஸன் ஷாதுலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். குர்ஆன், ஹதீஸ், நபி, ரசூல், ஷைஹு போன்ற வேதங்களும், மனிதர்களும் வழிகாட்டிய வழியில் தான் நாம் இறைவனைத் தேடி வருகிறோம்.  வேதங்களும், மனிதர்களும் வழிகாட்டிய வழியில் நாம் இறைவனை அடைந்து கொண்ட தலம் தான் ஹஜ்.  ஆனால்...