அன்சாரிகள் நம் அண்டை வீட்டினர்
சூஃபிகளின் ஹஜ் : - 51
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
அன்ஸாரிகள்
நம் அண்டை வீட்டினர்:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=×=÷=
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் அமீருல் முஃமினீன் ஆட்சியாளர் மஹ்தீ அவர்களிடம் ஒரு பணி நிமித்தமாக சென்று இருந்தார்கள்.
அப்பொழுது மன்னர், "இமாம் அவர்களே! எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்" என வேண்டிக் கொண்டார்.
அதற்கு இமாம் மாலிக் [ரஹ்] அவர்கள் "எல்லாவற்றிற்கும் முதன்மையாக அல்லாஹ்வுடைய அச்சத்தையும், அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதில் பயபக்தியையும் மேற்கொள்வீராக!
அதன் பிறகு மதீனா வாசிகளின் மீது இரக்கம் காட்டுவீராக! ஏனெனில் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நகரத்தைச் சேர்ந்தவர்களும் அன்னாரின் அண்டை வீட்டாரும் ஆவார்கள் " என உபதேசித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வாக்காவது. மதீனா என் ஹிஜ்ரத்துடைய நகரம். அதில் என் கப்ரு ஷரீப் உண்டாகும். அங்கிருந்தே கியாமத் நாளன்று எழுப்பப்படுவேன்.
அதில் வசிப்பவர்கள் என் அண்டை வீட்டார்கள். அவர்களைப் பராமரிப்பது என் உம்மத்தினரின் மீது கடமையாகும்.
எவர் என் பொருட்டால் அவர்களைப் பராமரிப்பாரோ அவருக்காக நான் கியாமத் நாளன்று ஷபாஅத் - சாட்சி கூறுவேன்.
மேலும் எவன் என் அண்டை வீட்டாருடன் என் வஸிய்யத்திற்குப் புறம்பாக நடப்பானோ அவனை அல்லாஹ் தனிய்யத்துல் கபால் - நரகத்தின் சீழை குடிக்க வைப்பான்."
மற்றொரு ஹதீஸில், "தனிய்யத்துல் கபால்" என்பது நரக
வாசிகளின் கழிவு நீர் ஆகும்'' என வந்துள்ளது. அதாவது அவர்களின்
வியர்வை, இரத்தம், சீழ் முதலியனவாகும்.
நூல் : ரவ்ழுர் ரைய்யாஹீன்
Comments
Post a Comment