Posts

Showing posts from September, 2024

ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கொண்டால்.....

Image
ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கொண்டால்..... மன அழுத்தத்தின் காரணமாகவோ மனநிலை சரியில்லாத நிலையில் இருந்தோ அல்லது எந்த காரணமும் இல்லாமல் வேண்டுமென்றே  ஒரு  முஸ்லிம் தற்கொலை செய்து கொள்வது மிகப் பெரும் பாவச் செயலாகும்.  وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا உங்களை நீங்களே (தர்) கொலை செய்து கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகப்பெரும் கருணையாளனாக இருக்கின்றான்  4: 29 இந்த வசனத்தின் அடிப்படையிலும் மற்றும் பல நபி மொழிகளின் அடிப்படையிலும் தற்கொலைச் செய்து கொள்ளவும், கருணைக் கொலை செய்யவும் மார்க்கத்தில் அனுமதி இல்லை. அது ஹராம் - ஆகாதச் செயலாகும். ஒரு முஸ்லிம் தற்கொலைச் செய்துகொண்டு இறந்து விட்டால், அவருக்கு ஜனாஸா தொழுகை மற்றும் ஈஸால் ஸவாப் -  நன்மையை எத்தி வைக்கும் அமல்கள் செய்வது கூடுமா? وقال الحسن والنخعي وقتادة ومالك وأبو حنيفة والشافعي وجماهير العلماء يصلى عليه،  தற்கொலை செய்து கொண்டவர் அவசரகதியில் தவறான முடிவு எடுத்து இறந்து போய்விட்டார். அவருக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுப்பானோ அதை வழங்குவான். அது கடுமையாகவும்...

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா?

Image
நபி (ஸல் ) அவர்களை  நான் கனவில் பார்த்தேன் ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ 2.  நபி (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? ========================== ஜின்களுக்கும் ஷைத்தான்களுக்கும் கெட்ட வடிவங்களையும், நல்ல வடிவங்களையும் எடுப்பதற்கான ஆற்றலை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியிருக்கின்றான். மனிதர்களின் கனவுகளில் மனிதர்கள் விரும்பும் கனவுகளை உருவாக்கிடும் ஆற்றல் பெற்றவர்களாகவும், மனிதர்கள் விரும்புகிற தோற்றம் மற்றும் வடிவங்களில் காட்சியளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் ஷைத்தான்களும் ஜின்களும் இருக்கின்றார்கள். அவர்கள் ஆதமுடைய சந்ததியினரின் ரத்த நாளங்களில் பயணிக்கிறார்கள். அதனால் மனிதன் தன்னைப் பற்றி அறியாததை எல்லாம் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவன் உள்ளத்தில் இருப்பவற்றையும் புரிந்து வைத்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; நிச்சயமாக ஷைத்தான் ஆதம் (அலை) அவர்களுடைய சந்ததியினரின் ரத்த நாளங்களில் ஓடிக்கொண்டு இருக்கின்றான்.  நூல் : புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ, முஸ்னது அஹ்மத். ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினரின் கனவுகளில் நபி (ஸல்) அவர்களின் தோற்றத்தில் காட்சியளி...

நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்

Image
நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்  ========================== எகிப்தில் உள்ள அலெக்சாண்டரியாவைச் சேர்ந்த அபூ அனஸ் அப்துல் அஸீஸ் அஹமது அப்துல் அஸீஸ் என்பவர், "ரஅய்துந் நபிய்ய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிஅது கிஸ்ஸதின் மின் ருஃயின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன் - நபி (ஸல்) அவர்களை கனவில் பார்த்ததாக சொல்லப்படும் நூறு நிகழ்ச்சிகள் " என்றொரு நூலை 2005 ஆம் ஆண்டு எழுதி இருக்கின்றார். அதை 'தாருல் ஆலமிய்யா' எனும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  அதை மொழிபெயர்க்க வேண்டும் என நீண்ட வருடங்களாக ஆசைப்பட்டேன். அதற்கான நேரம் அமையவில்லை. மன்னிக்கவும் அதற்கான நேரத்தை எனக்கு அல்லாஹ் அமைத்துத் தரவில்லை. இப்பொழுது தான் அதை எழுத வேண்டும் என இறைவன் எனக்கு நேரத்தை வழங்கி இருக்கின்றான்.  எனவே அந்த நூலை ஒவ்வொரு மாதமும் 'முஸ்லிம் இதய குரல்' மாத இதழில் தொடர்ந்து எழுதலாம் என நினைத்திருக்கின்றேன்.  இந்த நூல் முழுமையாக எழுதி வெளிவர தாங்கள் அனைவரும் எனக்காகவும், என் குடும்பத்தினருக்காகவும், முஸ்லிம் இதயக் குரல் ஆசிரியருக்காகவும் பிரார்த்...