பண்பாடுகள் - 7 -
1. திருமணம்
----------------------------
திருமணம் ஆண் பெண் இருபாலருக்கும் கண்ணியத்தையும், சந்தோஷத்தையும் அளிக்கும் திரு-மணம்.
இரு மனமும் ஒன்றை ஒன்று முந்திக் கொள்ளாமல் ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக் கொடுக்கும் போது இருவரும் வெற்றி பெறுவர்.
ஒரு சமயம் நபிகள் நாயகமும், அவர்களின் தோழர்களும் போர்க்களத்திலிருந்து மதீனாவிற்கு வந்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது நபிகள் நாயகம் அவர்கள் மெதுவாக நடந்து வந்தார்கள்.
இதனை கவணித்துவிட்ட ஒரு தோழர், "நபிகள் நாயகமே! மெதுவாக நடக்கிறீர்களே! உங்கள் காலில் முள் தைத்து விட்டதா? அல்லது யுத்தத்தில் ஏதும் காயம் ஏற்பட்டுவிட்டதா?" என்று வினவினார்.
நபிகள் நாயகம் அவர்கள் தம் கண்களின் புருவத்தை உயர்த்தி காட்டி எதிரே நடந்துச் சென்ற தம் மனைவி சஃபியாவை சுட்டிக் காட்டினார்கள்.
நூல் : முஸ்னது அஹ்மத்
அதாவது; "என் மனைவி மெதுவாக நடந்துச் செல்கிறார்; அவரை விட்டுவிட்டு நான் வேகமாகச் செல்ல விரும்ப வில்லை; அதனால்தான் நான் மெதுவாகச் செல்கிறேன" என்று வார்த்தைகளால் கூட சொல்லவில்லை. வார்த்தைகள் வெளிப்பாட்டால் அதனை கேட்கும் அப்பெண்மணி நமக்காக நபிகள் நாயகம் மெதுவாக நடப்பதா? என எண்ணி வேகமாக நடப்பார்கள். அது அவர்களுக்கு சிறமமாக இருக்கும் என்றென்னியே நபிகள் நாயகம் கண்சாடை காட்டினார்கள்.
மனைவியோடு நடக்கும்போது கூட அவரை முந்திச் செல்லாமல் அவருக்காக மெதுவாகச் சென்று அவரின் அன்பையும் அவரிடம் நன்மதிப்பையும் பெற்ற நபிகள் நாயகம் போல் நாமும் நம் மனைவியரிடம் நளினமாக நடந்துக் கொள்ள வேண்டும்.
"திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்படுகிறது" என்று தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள். அது உண்மைதான். இறைவன் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை படைத்து சொர்க்கத்தில் சுகமாக வாழும்படித் சொல்லி பிரவேசிக்கச் செய்தான்.
வரையறுத்திட இயலாத விசாலமான சொர்க்கத்தில் ஒற்றை மனிதர் தன்னந்தனியாக சுற்றியதின் கலைப்பாலும் ஏதோ ஒன்றில்லை என்ற விரக்தியாலும் படுத்துறங்கி விழித்தால், அருகே அன்னை ஹவ்வா (அலை) என்னும் மங்கை அமர்ந்திருப்பதைக் கண்டு
ஆதம் : நீ என்ன?
ஹவ்வா : நான் பெண்.
ஆதம் : நீ ஏன் படைக்கப்பட்டாய்?
ஹவ்வா : நீங்கள் என்னிடம் நிம்மதி - அமைதி பெற வேண்டும் என்பதற்காக.... என்று சொன்னார்.
நூல்: பைஹகீ, இப்னுகஸீர்
ஆம்! இதற்குப் பிறகுதான் இருவரும் நிம்மதியாக இருந்தார்கள். சொர்க்கம் "சுகங்களால்” முழுமைப் பெற்றது.
சொர்க்கத்தில் ஆதம் (அலை) அவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றதாலே அவர் சுகமாக வாழ்ந்தார் என அருள்மறை திருக்குர்ஆன் 2:35, 30:21 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகிறது.
மனித குளத்திற்கு பூலோகமே சொர்க்க லோகம். இந்த சொர்க்கலோகம் சுகமாக அமைய வேண்டுமானால் ஒவ்வொரு ஆணும் பெண்ணையும், ஒவ்வொரு பெண்ணும் ஆணையுமே திருமணம் முடிக்க வேண்டும்.
மனித இன முன்னோடிகளான ஆதம் எனும் ஆணையும் ஹவ்வா எனும் பெண்னையும் திருமண உறவில் சங்கமிக்கச் செய்து இறைவன் திருமணத்தை வலியுறுத்துகிறான்.
இறைவன் வேதங்கள் மூலம் சட்டங்களை அருளும் முன்னரே சொர்க்கத்தில் வைத்தே கடமையாக்கிய ஒரு சட்டம் உண்டென்றால் அது திருமணம்தான். இறைவன் இஸ்லாமியருக்கு விதியாக்கிய முதல் சட்டமே திருமணம்தான். ஆம்! ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக திருமணம் முடித்தாக வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் சொல்லுவார்கள்.
திருமணம் என் வழிமுறை (நூல் : முஸ்லிம்) யார் அதனை புறக்கணிக்கிறாறோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல. நூல்: மிஷ்காத்.
மணம் பற்றி மாநபி:
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்னுமஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். "இளைஞர்களே! உங்களில் எவருக்கு உடல் உறவு கொள்ள சக்தி உள்ளதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனென்றால் அது பார்வையை தாழ்த்தும். அவையங்களை பாதுகாக்கும். எவருக்கு திருமணம் செய்ய சக்தியில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். ஏனென்றால் அவருக்கு நோன்பு கேடயமாகும்."
நூல் : புகாரி, முஸ்லிம்.
இப்னுஉமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;
"உலகம் முழுவதும் பொருள்கள் நிரம்பியுள்ளன. அவைகளில் சிறந்த பொருள் நல்ல பெண் (நல்ல மனைவி ஆவாள்). நூல் : முஸ்லிம்.
"எவர் தூய்மையான நிலையில் இறைவனை சந்திக்க நாடுகிறாரோ அவர் நல்ல பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும்.". நூல்: பைஹகீ
"இரு தரபினரும் நேசிக்கும் ஒரு செயல் இருக்கிறது என்றால் அது திருமணம்தான்." நூல்: பைஹகீ
"ஒருவர் திருமணம் செய்துவிட்டால் அவர் மார்க்கத்தில் பாதியை நிறைவுசெய்தவர் போலாவார். மீதப் பாதியில் அவர் இறைவனை அஞ்சி வாழட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்னது அஹ்மத்
மஹர் - மணக் கொடை :
அல்லாஹ் சொல்கிறான்; நீங்கள் (மணம் செய்துக் கொண்ட) பெண்களுக்கு அவர்களுக்குறிய மஹர்களை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். 4:4
ஒவ்வொரு இஸ்லாமிய மணமகனும் தான் திருமணம் செய்துக் கொள்ளும் மணமகளுக்கு மஹர் - எனும் மனக் கொடையை கொடுத்தாக வேண்டும். அவர்கள் அளிக்கும் மஹர் அவரின் செல்வ நிலைக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்யும் போது தம் மனையிருக்கு 12.5 ஊக்கியா (ஒரு ஊக்கியா 126.8 கிராம் வெள்ளி) 12.5 × 126.8 = 1.525 கிலோ கிராம். வெள்ளியை கொடுத்து மணந்தார்கள். 1.525 கிராம் வெள்ளி இன்றைய விலை (19.6.2022) ஒரு கிராம் 66.30 ரூபாய்) 101107.50 ரூபாய் ஆகும்.
எனவே, நபி (ஸல்) அவர்கள் தம் வசதிக்கு ஏற்ப மஹர் அளித்து மணந்தது போல் நபி வழி நடக்கும் ஒவ்வொருவரும் தம் வசதிக்கு ஏற்ப மஹர் அளித்தே மணம் புரிய வேண்டும்.
ஆதம் (அலை) அவர்கள் ஹவ்வா (அலை) அவர்களை மணம்புரியும்போது சொர்க்கத்திலிருந்ததால் அங்கு பணம் பெரிய செல்வமாக இல்லை. எனவே ஆதம் (அலை) அவர்கள் ஹவ்வா (அலை) அவர்களுக்கு நபிகளார் மீது சொல்லும் ஒரு ஸலவாத்தை கற்பித்து, ஒரு கல்வியை போதித்ததையே மஹராக கொடுத்தார்கள்.
தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களாலேயே சொர்க்கம் அலங்கரிக்கப்பட்டிருந்தததால் அங்கு தங்கத்தையோ வெள்ளியையோ கொடுப்பது பொருத்தமாக இராது என்பதாலேயே அல்லாஹ் அன்னார் மீது ஸலவாத் சொல்வதையே மஹராக்கினான்.
நூல்: இப்னுகஸீர், ஜாதுல்மஆத்
"குறைந்தபட்சம் இரும்பாலான ஒரு மோதிரத்தையாவது மணமகளுக்கு மணமகன் மஹராக கொடுத்தாலே திருமணம் செல்லு படியாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்.
முஸ்லிமான ஆண்கள்
மணமுடிக்கக் கூடாத பெண்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்னும் யார்யாரை திருமணம் செய்யலாம் திருமணம் செய்யக்கூடாது என் இஸ்லாம் வரையறுத்து வைத்துள்ளது. தெளிவான திருக்குர்ஆனில் விரிவாக பேசப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொருவருக்கும் மூன்று வகையான உறவு முறைகள் இருக்கிறது.
1.இறந்த உறவு
2. திருமண உறவு
3.பால்குடி உறவு
இரத்த உறவின்மூலம் திருமணம் செய்யக்கூடாத பெண்கள்
1.தாய்
1.1.இருவழி பாட்டிகள், 2. அப்படியே மேலுள்ள மூதாதைய பெண்கள்.
2.மகள்
2.1. மகனின் மகள் (பேத்தி, கொள்ளு பேத்தி என கீழே..)
2.2. மகளின் மகள் (பேத்தி, கொள்ளு பேத்தி என கீழே..)
2.3. விபச்சாரத்தின் மூலம் பிறந்த மகள்
2.4. முதல் கணவனின் மூலம் மனைவிக்கு பிறந்த மகள்
3. சகோதரி
3.1. தனது தாயை இரண்டாவதாக திருமணம் முடித்துக்கொண்ட தந்தையின் மகள்கள் சகோதரி ஆவர்.
3.2. தனது தந்தை இரண்டாவதாக திருமணம் முடித்துக் கொண்ட தாயின் மகள்கள் சகோதரி ஆவர்.
4. அத்தை (தந்தையின் சகோதரிகள்)
4.1.தந்தையின் தாய்வழி சகோதரிகள் (சின்ன, பெரிய பாட்டிகள்)
4.2. தந்தையின் தந்தைவழி சகோதரிகள் (சின்ன, பெரிய பாட்டிகள்)
4.3. தாயின் தந்தைவழி சகோதரிகள் (சின்ன, பெரிய பாட்டிகள்)
4. 4.தாயின் தாய்வழி சகோதரிகள் (சின்ன, பெரிய பாட்டிகள்)
4. 5.சித்தி (தாயின் சகோதரிகள்)
4. 6.சகோதரரின் மகள்
4.6.1. தந்தைவழி சகோதரியின் மகள்
4.6.2. தாய்வழி சகோதரரின் மகள்
7. சகோதரியின் மகள்
7.1. தந்தைவழி சகோதரி மகள்
2. தாய்வழி சகோதரி மகள்
திருமண உறவின் மூலம்
திருமணம் செய்யக்கூடாத பெண்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.மாமியார்
1.1.மாமியாரின் அம்மா, (அப்படியே மேல்...)
1.2.மாமியாருக்கு பால் கொடுத்த செவிலித்தாய் (அப்படியேமேல்)
2. மனைவியின் மகள் (மணைவிக்கு வேறு கணவன் மூலம் பிறந்த மகள்)
3.மருமகள்
3.1. பேரனின் மனைவி
3.2. பால் குடி மகனின் மனைவி
3.3. பால் குடி பேரனின் மனைவி (வளர்பு மகன் தலாக்விட்ட பெண்ணை மணக்கலாம்)
3. 4. ஒரேகாலத்தில் இரு சகோதரிகளை மணப்பது.
3. 5.மாற்றாந்தாய் (தந்தையின் இரண்டாவது மனைவி)
பால்குடி உறவின் மூலம்
திருமணம் செய்யக் கூடாத பெண்கள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.பாலூட்டிய தாய் (ஒரு முறை வயிறு நிரம்ப பாலருந்தினாலும் அவள் தாயே!)
2. இத்தாயின் மகள்கள்,
இத்தாயிடம் பாலருந்திய மற்ற (பெண்கள்) சகோதரிகள்.
இரண்டரை வயது (30 மாதம்)குட்பட்ட குழந்தைகள் ஒரு தாயிடமோ, பல தாயிடமோ ஒரு முறை வயிறு நிரம்ப பால் குடித்தாலே, அவள் பால் குடி தாயாவாள். அந்தவயதிற்கு பின்னர் பாலருந்தினால் அவள் தாயாக மாட்டாள். எனவே மணம் புரிவது கூடும்.
சில கிளை உறவுகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~
1. பாலூட்டிய அம்மா
2. பேத்தி (மகள், மகளின் பிள்ளைகள்)
3. பொதுவாக சகோதரனின் பேத்தி
4. சகோதரியின் பேத்தி
5. தந்தையின் அத்தை
6. தாயின் அத்தை
7. தாயின் சித்தி
8. தந்தையின் சித்தி
9. மனைவியின் பாட்டி
10.மனைவியின் முதல் கணவனின் வளர்ப்பு மகள் அல்லது மகனுடைய பேத்தி
11. மனைவியும், அவளுடைய அத்தையையும் ஒரே நேரத்தில் மனைவியாக்குவது.
12.மனைவியையும், அவளுடைய சித்தியையும் ஒரேநேரத்தில் மனைவியாக்கி கொள்வது.
13. மற்ற ஒருவனின் மனைவி
காண்க: 4:24, 2:222, 4:22, 2.4 தஃப்ஸீர் பைளாவி. இதர தஃப்ஸீர்கள்.
பதினான்கு வகையான பெண்களை மணக்கக் கூடாது என அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். அவர்கள் மூன்று வகையினர். அம்மூன்று வகையில் 49 வகை உறவு முறை பெண்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களையும், வேற்றுமத பெண்களையும் மொத்தத்தில் ஐம்பது வகையான பெண்களை ஒரு முஸ்லிம் ஆண் மகன் திருமணம் செய்யக் கூடாது. செய்திருந்தால் விலகி கொள்ள வேண்டும். இவ்வகை பெண்களை திருமணம் செய்வது முதல் குற்றம். இவர்களோடு உடல் உறவு கொள்வது விபச்சாரம் செய்ததற்கு சமமாகும். ஆகவே இது விபச்சாரம் செய்வது இறையிடம் இரட்டிப்பு தண்டனைக்குறிய குற்றமாகும். இவர்கள் அல்லாத மற்ற பெண்களை மணம் புரியவே இஸ்லாம் அனுமதிக்கிறது. பெண்கள் யார் முன்பெல்லாம் நிர்கலாம்?
1. தம் தந்தையர் முன்பாக.
2. தம் கணவர்.
3. தம் சகோதரர்கள்
4. தம் சகோதரர்களின் மகன்கள் முன்பாக
5. தம் சகோதரிகள் மகன்கள்
6. தம் மாமனார் முன்பாக
7. தம் மகன்கள் முன்பாக
8. தம் கணவனின் முதல் தாரத்து மகன்முன்பாக
9. பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலாத சிறுவர்கள் முன்பாக
10. அனைத்து பெண்கள்
ஆகிய இவர்கள் முன்பாக மட்டுமே ஒரு முஸ்லிம் பெண் பர்தா இல்லாமல் தன் வழக்கமான ஆடையுடன் முன் வரலாம். இவர்கள் அல்லாத மற்றவர்களிடம் புர்காவுடனே எதிரில் செல்ல வேண்டும். அல்குர்ஆன் கருத்து 33:55, 24:31

Comments
Post a Comment