Posts

Showing posts from May, 2026

அன்றும் இன்றும் ஹஜ் கஷ்டமான பயணமே!

Image
அன்றும் இன்றும்  ஹஜ் கஷ்டமான பயணமே! =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= இந்த உலகம் நாற்பது ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் அகலம் கொண்டது. இவ்வளவு பெரிய பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்திற்கு ஒன்று சேர்ந்து ஹஜ் எனும் இறைவழிபாடு செய்ய வேண்டும் எனும் சட்டத்தை இறைவன் வகுத்திருக்கிறான். ஹஜ் எனும் அமலை செய்வதற்கு இன்று பயணங்கள் எளிதாக இருந்தாலும் கடந்த நூறு வருடங்களுக்கு முன்புவரை, உலகம் முழுவதும் வாழ்ந்த வலிமையான, வசதியான மனிதர்களுக்கும் கூட கஷ்டமான ஒரு அமல்தான்! அதே நேரம் இன்று நாம் சொகுசாகவே வாழ்ந்து பழகி விட்டதால், ஹஜ் எனும் அமலை கூட்டாக செய்யும் பொழுது அது மிகவும் கஷ்டமாகவே தெரியும்.  ஒவ்வொருவரும் பைக் வைத்திருப்பது போன்று ஒவ்வொருவரும் தனி விமானம் வைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கோ உம்ராவிற்க்கோ சென்றாலும் கூட அன்றும் இந்த அமல் சிரமமாகத்தான் இருக்கும்.  ஏனென்றால் நபிகள் நாயகம் அவர்கள் இந்த அமலை செய்வதற்கு நியத்தை இப்படி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். اللَّهُمَّ إِنِّي أُرِيدُ الْحَجَّ فَيَسّ...

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முதலில் யாரோடு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது தெரியுமா?

Image
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முதலில் யாரோடு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது தெரியுமா?  ••••••••••••••••••••••••••♥••••••••••••••••••••••••••••• இஸ்லாம் அறிமுகமாகுவதற்கு முன்பு அரபியர்களிடையே எவருக்கேனும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவரை யாருக்கு திருமணம் செய்து வைப்பது என சிறு பிராயத்திலேயே பேசி வைத்துக் கொள்வார்கள். அதன் அடிப்படையில் இஸ்லாம் மக்களிடையே பரவி வந்த வேளையில் குரைஷி வம்சத்தில் பனூ தைம் கிளையைச் சேர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.  அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பிறக்கும் பொழுதே அவர்களின் வீட்டு சூழலும் நாட்டு சூழலும் இஸ்லாமிய மரபில் அமைந்திருந்தது. இஸ்லாமிய சூழலிலேயே வளர்ந்தார்கள். இந்நிலையில் தம் நாட்டின் வழக்கப்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் குரைஷி வம்சத்தில்  பனூ நவ்ஃபல் கிளையைச் சேர்ந்த நெருங்கிய நண்பர் முத்இம் பின் அதீ அவர்களின் நான்கு மகன்களில் மூத்த  மகன் ஜுபைர் பின் முத்இம் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதாக நிச்சயம் செய்து கொண்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இறந...

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

Image
O.M. ஹள்ரத்  அவர்களின் திருமண உரை ========================== இன்று தென்காசி குற்றாலத்தில் O.M. ஹள்ரத் அவர்களின் பேரனும், மௌலவி தமீமுல் அன்சாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்களின் மகனும்மான முஹம்மது அனஸ் அவர்களுக்கு  திருமணம் நடைபெற்றது.  அந்தத் திருமணத்தில் எனது ஆன்மீக ஆசான் O.M. ஹள்ரத் கிப்லா அவர்கள் ஆற்றிய உரை : மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் ஒரு திருமணம் நடைபெற்றது; திருமணத்தின் முடிவில் பாதாம், அக்ரூட் ,காய்ந்த பேரித்தம் பழங்கள், கற்கண்டு ஆகியன விசிறி எறியப்பட்டது.  அந்தத் திருமணத்தை நடத்தி வைத்த நபிகள் நாயகம் அவர்கள், அருகில் அமர்ந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்களை தள்ளி விட்டுவிட்டு கீழே கிடந்த காய்ந்த பேரித்தம் பழத்தையும், பாதாம் கொட்டையையும் பொறுக்கி எடுத்து சாப்பிட்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள், "நாயகமே! இந்த கொட்டைக்காக என்னை தள்ளி விடுவதா! நீங்கள் சொல்லியிருந்தால் நானே எடுத்துக் கொடுத்திருப்பேனே?" என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள், "அபூபக்கரே! இன்று திருமணம் ந...

த.வெ.க.வின் வெற்றிக்கு காரணம் இரண்டுதான்

Image
த.வெ.க.வின்  வெற்றிக்கு காரணம் இரண்டுதான்  ================================= 1.  பத்து வயதிற்கு உட்பட்ட சிறார்களிடமும் குழந்தைகளிடமும் "குட்டீஸ்களே! சாக்லேட் கேட்பது போல் அடம்பிடித்து எனக்காக, இந்த மாமாவுக்காக ஓட்டு கேளுங்கள்" என்று பேசி குழந்தைகளை தூண்டிவிட்டு ஓட்டு போட வைத்தது முதல் காரணம். (தன் சுயலாபத்திற்காக தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் செயல் இது.) 2.  தனியார் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நன்கு படித்துவிட்டு உடனுக்குடன் லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலை கிடைக்கவில்லை என்கிற விரக்தியிலும் ஆதங்கத்திலும் இருந்த 40 வயதிற்கு உட்பட்டவர்களின் எதிர்ப்பும், திமுக, அதிமுக போன்ற சில கட்சியில் சேர்ந்த சிலர் 40 வயதுக்குள் பெரும் செல்வம் சேர்த்திருந்தவர்களை பார்த்து பொறாமைப்பட்ட அல்லது ஆவேசப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் ஆவேசத்தினால் தான் த.வெ.க. உருவெடுத்துள்ளது. இளைஞர்களும் இளைஞிகளும் ஒரு அரசியல்வாதியிடம் அநேக செல்வம் சேர்வது குறித்து ஆவேசப்பட்டும் பொறாமை பட்டும் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றால் த.வெ...

த.வெ.க.வின் வெற்றி திட்டமிடப்பட்டதே!

Image
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ 2:216) நீங்கள் வெறுக்கும் ஒன்று  உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் விரும்பும் ஒன்று உங்களுக்கு தீமையாக இருக்கலாம். அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். நாம் எதிர்பார்த்த கட்சி தோல்வி அடைந்தது  கஷ்டமாக தோன்றும். ஆனால், அது சமூகத்திற்கோ, இஸ்லாம் மார்க்கத்திற்கோ நீண்டகால நன்மையாக இருக்கலாம். உங்களின் உணர்ச்சிகளை விட அல்லாஹ்வின் திட்டத்தில் அதிகமாக நம்பிக்கை வையுங்கள். நாம் உணர்வுகளால் முடிவெடுக்கின்றோம் அல்லாஹ் அறிவால் முடிவெடுக்கின்றான். நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் இறைவனின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நமக்கு நிம்மதி கிடைப்பதோடு நாம் எதிர்பார்த்த நன்மை விரைவில் கிடைக்கும். பொறுமையாக இருக்க உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் தன் மகன் மூசாவை ஆற்றில் விட்டு விட்டு துஆ செய்தார்; அல்லாஹ் ஃபிர்அவ்னிடமே அனுப்பிவைத்து அவரை வளர...

நம்மை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் இவர்கள்தான்!

Image
நம்மை நம்ப வைத்து  ஏமாற்றியவர்கள் இவர்கள்தான்!  =≠=============================== ஊடகவியலாளர்கள் என்று சிலர் இருக்கிறார்கள்;  அவர்கள் எல்லா டிவி சேனல்களுக்கும் சென்று அவர்கள் கொடுக்கிற காசையும், அவருக்கு எந்த கட்சிக்காரர்கள் அதிகமாக காசு கொடுக்கிறார்களோ அந்த கட்சிக்காரர்கள் கொடுக்கும் காசையும் வாங்கிக் கொண்டு  அந்த கட்சிக்காரர்களுக்கு சாதகமான கருத்துக்களை பொதுமக்களிடம் விதைத்து விளையாடி இருக்கிறார்கள். இவர்களே தனியார் youtube சேனல்கள் நடத்துவோரிடம் சென்று அவர்கள் கொடுக்கின்ற காசையும் வாங்கிக்கொண்டு  இவர்கள் சார்ந்த கட்சியினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பொதுமக்களின் மண்டைகளை கழுவி இருக்கிறார்கள். அந்த youtube காரரும் ஒரு கட்சியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்சியினரை குளிர்விக்கும் கருத்துக்களை பரப்ப விட்டு இருக்கிறார். இதில் சொந்தமாக டிவி வைத்திருப்பவர்களும்,  சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களும்,  ஊடகவியலாளர்களும் மட்டுமே பெரும்  பணம் சம்பாதித்து லாபம் அடைந்திருக்கிறார்கள். இன்று யார் வெற்றி பெற்று இருந்தாலும் இவர்கள் கவலைப்...

சூஃபிகளின் நோன்பு

Image
கட்டுரை எண் :- 29 சூஃபிகளின் நோன்பு ====================== மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M. Phil   சூஃபியாக்கள் நோன்பை ஆன்மீகம் நிரம்பப் பெற்றுள்ள செயலாகவும், படைப்பினங்களுக்கு அத்தியாவசியமான வாழ்வியலாகவும் கருதுகிறார்கள். இந்த நோன்பை மூன்றாக வகைப்படுத்தி இருக்கிறார்கள். 1. பொதுவான நோன்பு : இச்சைகளை விட்டும் விலகி, உடலுறவு கொள்ளாமல், உண்ணாமல் இருப்பது. இது அனைவரும் நோற்கும் நோன்பின் அமைப்பு. 2. தனித்துவமான  நோன்பு: அருவருப்பானவற்றை கேட்பது, பார்ப்பது, பேசுவது, தவறான இடங்களுக்குச் செல்வது, தவறானவற்றை செய்ய கைகளை பயன்படுத்துவது  போன்ற அனைத்துப் பாவச் செயல்களில் ஈடுபடுவதை விட்டும் விலகி இருப்பது. அத்துடன் முதலில் சொல்லப்பட்டதையும் ஏற்று நடப்பது. இது அனைவரும் நோற்கும் நோன்பிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு இருக்கிறது. 3. மிகக் குறிப்பிடும்படியான நோன்பு: இதயமும் நோன்பு நோற்க வேண்டும். உலக காரியங்களை யோசிப்பதை விட்டும் விலகி, அது சார்ந்த சிந்தனைகளில் தொடர்ந்து மூழ்கி இருப்பதை விட்டும் விலகி இருப்பது.  இதுதான் சூஃபியாக்களின் நோன்பு. இதுதான் இறைவன...

நிரந்தர நல்லறங்கள்

Image
கட்டுரை எண் :- 28 நிரந்தர நல்லறங்கள் ====================== "எது நிரந்தர நற்செயல் என்று ஆய்வு செய்து பார்த்ததில், இஸ்லாம் கூறும் பத்து செய்திகளைத் தவிர வேறு எதையும் இன்றை உலகத்தில் முன்னிலைப்படுத்த முடியாது" என்று மேல்நாட்டு அறிஞர் மாரிஸ் புகைல் அவர்கள் கூறுகிறார்கள். இந்த அறிஞரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு திருக்குர்ஆன், ஹதீஸ் மற்றும் கடந்த கால வரலாறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த கட்டுரையை முழுமைப்படுத்தி இருக்கிறேன். "நிரந்தர நல்லறங்கள்" குறித்த முழுமையான தகவல்களை வழங்கி விட வேண்டும் என்கிற ஆசையில், நிதானமாக ஆய்வு செய்து உங்களுக்கு வழங்கி இருக்கிறேன். வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள். நிரந்தர நல்லறங்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய நான்கு ஹதீஸுகளை சமர்ப்பித்திருக்கிறேன்.  அவற்றில் கூறப்பட்டுள்ள பத்து நல்லறங்களை தனியாக குறிப்பிட்டு அதை விவரித்து எழுதி இருக்கிறேன். இதில் உள்ள கருத்துக்களை நம் அன்றாட வாழ்வில் பின்பற்றினால், மறுமை வாழ்வு ஒளிமயமாக இருக்கும். *நான்கு நபி மொழிகள் :* 1.  عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله تعالى عنه: أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ ق...