நம்மை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் இவர்கள்தான்!

நம்மை நம்ப வைத்து 
ஏமாற்றியவர்கள் இவர்கள்தான்! 
=≠===============================

ஊடகவியலாளர்கள் என்று சிலர் இருக்கிறார்கள்; 

அவர்கள் எல்லா டிவி சேனல்களுக்கும் சென்று அவர்கள் கொடுக்கிற காசையும்,

அவருக்கு எந்த கட்சிக்காரர்கள் அதிகமாக காசு கொடுக்கிறார்களோ அந்த கட்சிக்காரர்கள் கொடுக்கும் காசையும் வாங்கிக் கொண்டு 

அந்த கட்சிக்காரர்களுக்கு சாதகமான கருத்துக்களை பொதுமக்களிடம் விதைத்து விளையாடி இருக்கிறார்கள்.

இவர்களே தனியார் youtube சேனல்கள் நடத்துவோரிடம் சென்று அவர்கள் கொடுக்கின்ற காசையும் வாங்கிக்கொண்டு 

இவர்கள் சார்ந்த கட்சியினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பொதுமக்களின் மண்டைகளை கழுவி இருக்கிறார்கள்.

அந்த youtube காரரும் ஒரு கட்சியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்சியினரை குளிர்விக்கும் கருத்துக்களை பரப்ப விட்டு இருக்கிறார்.

இதில் சொந்தமாக டிவி வைத்திருப்பவர்களும், 

சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களும், 

ஊடகவியலாளர்களும் மட்டுமே பெரும்  பணம் சம்பாதித்து லாபம் அடைந்திருக்கிறார்கள்.

இன்று யார் வெற்றி பெற்று இருந்தாலும் இவர்கள் கவலைப்பட போவதில்லை. 

ஆனால் டிவி சேனல்கள் youtube சேனல்கள் ஒளிபரப்பிய கருத்துக்களைக் கேட்டவர்கள் தான் இன்று புத்தி பேதலித்து காணப்படுகிறார்கள். 

ஏற்கனவே நாளேடுகளில் வெளிவரும் செய்திகளை பொதுமக்கள் பெரிதாக நம்புவதில்லை. 

அதுபோலவே இனி டிவி சேனல்களிலும் youtube சேனல்களிலும் வரும் செய்திகளையும் ஊடகவியலாளர்களின் கருத்துகளையும் இனி யாரும் நம்ப போவதில்லை என்கிற சூழல் இந்த தேர்தல் முடிவு அறிவித்திருக்கிறது. 

மற்றொருபுறம் டிவி சேனல்களையும் யூடியூப் சேனல்களையும் ஊடகவியலாளர்களையும் விலைக்கு வாங்கி தமக்கு சாதகமான கருத்துக்களை பரப்பி விடுவதால் மட்டுமே இனி ஆட்சியைப் பிடித்து விட முடியாது என்கிற ஆணித்ரமான கருத்தையும் இந்த தேர்தல் முடிவு தெரிவித்து இருக்கிறது. 

கட்சிக்காரர்கள் கருத்தாளர்களிடம் கருத்து கேட்பதை விட்டுவிட்டு களப்பணி ஆற்றுங்கள். 

கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களையும் அடிமட்ட தொண்டர்களையும், கசப்பாக இருந்தாலும் உண்மை பேசுவோரையும் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பலம் பெறுவீர்கள்.

இல்லையென்றால் இப்படித்தான் உங்களை கண்டு பிறர் சிரிப்பார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்