ஆன்மிக மருத்துவம் 16




கண் சார்ந்த நோய்கள் குணமாக

<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>



அல் அக்பரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஒரு நாள் நான் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன்.

அப்போது நான் அவர்களிடம், “யா ரசூலுல்லாஹ்! என் கண்களில் வலி இருக்கின்றது; தயவுசெய்து தாங்கள் தங்களுடைய கைகளால் என் கண்களைத் தடவி விடுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நஸ்ர் பின் அல் அத்தார் (ரஹ்) அவர்களிடம் செல்லுங்கள்; அவர் உமது கண்களைத் தடவுவார்" என்று கூறினார்கள்.

அதை கேட்டதும் என் மனதில் “நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு, உலக மக்களில் ஒருவரிடம் செல்வத?” என்று எண்ணினேன்.

மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம், “யா ரசூலல்லாஹ்! நீங்கள்தான் என் கண்களைத் தடவி விடவேண்டும்” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீங்கள்  ஹதீஸை கேள்விப்பட்டதில்லையா?‘ ஒருவர் தர்மம் கொடுக்கும் போது, அது ஏழையின் கைகளில் சேரும் முன்பே அல்லாஹ்வின் கைகளில் சேர்ந்துவிடுகிறது’ என்று?”

“இந்த நஸ்ர் பின் அல் அத்தார் (ரஹ்)அவர்களுடைய கை, அல்லாஹ்வின் கையுடன் கைகுலுக்கிய கை, (தர்மம் கொடுத்ததின் மூலம் அல்லாஹ்வின் கைகளை அடிக்கடி தொட்ட கை ) எனவே அவரிடமே செல்லுங்கள்” என்று கூறினார்கள்.

அந்தக் கனவிலிருந்து நான் விழித்தேன்; அப்பொழுதே நஸ்ர் பின் அல் அத்தார் (ரஹ்) அவர்களிடம் சென்றேன்;

அவர்கள் என்னை கண்டவுடன் காலணியில்லாமல் எழுந்து வந்து,“நீங்கள் கனவில் என்ன கண்டீர்கள்?”என்று கேட்டார்கள்.

பின்னர் நான் விபரமாக சொன்னதும் அவர்கள் என் கண்களைத் தடவி விட்டார்கள். தடவி விடும்போது சூரத்துல் ஃபலக், சூரத்துந் நாஸ் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதினார்கள்; அதேநேரம் என் கண்களில் இருந்த வலி முழுவதும் நீங்கிவிட்டது.


நூல் : அல் முன்தழிம் 


இவர் ஈராக்கின் ஹரான் பகுதியில் பிறந்து வாழ்ந்த பாரம்பரிய மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகான் ஆவார். 

ஹிஜ்ரி 600 கி.பி. 1200 காலகட்டங்களில் வாழ்ந்திருக்கிறார்; இவர் எழுதிய பல நூல்களில் ஒன்றுதான் அல் முன்தழிம். இது பல பாகங்களைக் கொண்டது.

நல்லெண்ணத்தோடு அல்லாஹ்விற்காக வழங்கப்பட்ட தர்மம், மனிதனை அல்லாஹ்வின் அன்மைக்கு உயர்த்தும்; தர்மம் வழங்கிய  கை, மற்றவர்களுக்கு மருந்தாகவும் மாறும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

நஸ்ர் பின் அல் அத்தார் (ரஹ்) அவர்களின் கை மந்திரக் கை அல்ல!மருந்துத் தடவிய கையும் அல்ல!தர்மம் செய்யப் பழகிய கை.

அதனால் வலியை குணமாக்கும் அருள் வளம் பெற்ற கை! தர்மம் செய்யுங்கள் அது உங்களின் தரத்தை உயர்த்தும்!




=====================================


அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து

<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>



ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள் கடுமையாக நோயுற்றிருந்தார்கள். இந்நிலையில் ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டார்கள்.

ஹஸன் (ரஹ்) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “உன் நோயிலிருந்து நலமடைய விரும்பினால், ‘இல்லை’ என்பதைச் சாப்பிடு; ‘இல்லை’ என்பதைப் பருகு” என்று கூறினார்கள்.

கனவிலிருந்து விழித்த ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள், இமாம் சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்களிடம் பத்தாயிரம் திர்ஹங்களை கொடுத்தனுப்பி, “இதை ஏழைகளுக்குப் பகிர்ந்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்தக் கனவின் பொருள் என்ன என்று கேட்டு வரும்படி ஒருவரை அனுப்பி வைத்தார்கள்.

அவர் சென்று விபரங்களை சொன்னதும் இமாம் சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் சொன்ன ‘இல்லை… இல்லை…’ என்பதன் பொருள் ஜைதூன் / ஆலிவ் தான். ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் ‘கிழக்குமல்ல, மேற்குமல்லாத ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஆலிவ் மரம்’ என்று குறிப்பிடுகிறான்" 

يُوقَدُ مِن شَجَرَةٍ مُّبَارَكَةٍ زَيْتُونَةٍ لَّا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ ۚ 

(அந்நூர் : 35) என்று கூறினார்கள்.

ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; “அதற்கு பிறகு நான் ஆலிவ் பழத்தைச் சாப்பிட்டு வந்தேன்; ஆலிவ் எண்ணெயை  அருந்தினேன்;

நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்றியதாலும், அவர்களைக் கனவில் கண்டதை பாக்கியமாக கருதியதாலும்  அல்லாஹ் எனக்கு முழுமையான ஆரோக்கியத்தை அளித்தான்”.


நூல் : அல் பிதாயா வந்நிஹாயா


நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு பணிவுடன் இணங்கும் போது,அது உணவாக மட்டுமல்ல;அல்லாஹ்வின் அனுமதியால் மருந்தாகவும் மாறுகிறது.

ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் 140 - 210 காலகட்டத்தில் ஈராக் கூஃபா பகுதியில் வாழ்ந்த ஸாலிஹான நல்ல மனிதர் ஆவார்.

இமாம் சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி  97 – 161 கூஃபா, மக்கா, மதீனா, பஸ்ரா போன்ற பகுதியில் வாழ்ந்த பிரபலமான ஃபிக்ஹு மார்க்கச் சட்ட வல்லுநர் ஆவார்.



======================================


மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயிலிருந்து விடுபட ஓதும் துஆ 

======================================



أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

[سورة يونس، الآية: 57].


قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ﴾ 

[سورة فصلت، الآية: 44]


وَنُنَزِّلُ مِنَ القرآن مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

 [سورة الإسراء، الآية: 82]


يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

[سورة يونس، الآية: 57]

மேற்கண்ட வசனங்கள் திருக்குர்ஆன் உலக மக்களிடம் உள்ள அனைத்து வகையான நோய்களுக்கும் மருந்தாக அமைந்துள்ளது எனும் கருத்தை வலியுறுத்தி சொல்கிறது; 


இந்த வசனங்களை ஒரு முறை நீங்கள் தர்ஜுமாவை பார்த்து படித்து தெளியுங்கள்.


நபி ஸல் அவர்கள் கூறினார்கள்;

ورد عن النبي : «يا أيُّـها الناسُ تَداوَوا، فإنّ اللّهَ تعالى لم يَخلُقْ داءً إلَّا خَلَقَ لَهُ شِفاءً، إلَّا السّامَ، والسّامُ المَوتُ»


மக்களே! (உங்கள் உடலுக்கு நோய்கள் உண்டானால்)  நீங்கள் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்;

ஏனெனில், நிச்சயமாக ஆரோக்கியம் தராத எந்த மருந்தையும் அல்லாஹ் படைக்கவில்லை ; ஸாம் என்ற ஒன்றைத் தவிர; ‘ஸாம்’ என்பது மரணமாகும்.

நூல் : கன்ஜுல் உம்மால் 


ورد عن الإمام الصادق : «إِنَّ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ مَرِضَ فَقَالَ: لَا أَتَدَاوَى حَتَّى يَكُونَ الَّذِي أَمْرَضَنِي هُوَ الَّذِي يَشْفِينِي، فَأَوْحَى اللهُ إِلَيْهِ: لَا أَشْفِيكَ حَتَّى تَتَدَاوَى، فَإِنَّ الشِّفَاءَ مِنِّي»


“நபிமார்களில் ஒருவர் நோயுற்றபோது அவர், "எனக்கு நோயை ஏற்படுத்திய அல்லாஹ்வே என்னை நேரடியாக  குணமாக்கும்வரை, நானாக சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாட்டேன்" என்று கூறினார்.

அப்போது அல்லாஹ் அவருக்கு வஹீ மூலம் தெரிவித்தான்; ‘நீ சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவரை, நான் உன்னை குணப்படுத்த மாட்டேன்; ஏனெனில், ஆரோக்கியம் அளிப்பவன் நான் தான்.

நூல்: பிஹாருல் அன்வார் 


وجاء عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، قَالَ: جُرِحَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ  فَقَالَ: «ادْعُوا لَهُ الطَّبِيبَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ يُغْنِي عَنْهُ الطَّبِيبُ؟ قَالَ: «نَعَمْ، إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَمْ يُنْزِلْ دَاءً إِلَّا أَنْزَلَ مَعَهُ شِفَاءً»

ஹிலால் பின் யசாஃப் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

நபி ஸல் அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் காயமடைந்தார். அப்போது நபி ஸல் அவர்கள், "அவருக்காக ஒரு வைத்தியரை அழையுங்கள்" என்று கூறினார்கள்.

அதற்கு ஒரு தோழர்,"யா ரஸூலல்லாஹ்! வைத்தியர் அவருக்கு உண்மையில் பயன் தருவாரா?’ என்று கேட்டார்.

அதற்கு நபி ஸல் அவர்கள், "ஆம்! நிச்சயமாக அல்லாஹ்  எந்த நோயை இறக்கி வைத்தாலும் அதற்கான மருந்தையும் அவனே இறக்கி வைத்திருக்கிறான்" என்று கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் பின் அபீ ஷைபா 


மனநோய்  நீங்க ஓத வேண்டிய துஆ

=====================================

قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

[سورة التوبة، الآية: 51]


وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ ‎

 الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

 [سورة البقرة، الآيات: 155-156].

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

 [سورة الرعد، الآية: 28].

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

 [سورة الأنفال، الآية: 2].





வறுமை விலகி வளம் பெற : ===========================



இஷா தொழுகைக்குப்பின் அமர்ந்து மூன்று தடவை ஸலவாத்து ஓத  வேண்டும். 

பிறகு 'யா வஹ்ஹாபு ஹப்லீ மின் நிஃமத்தித் துன்யா வல் ஆகிரத்தி இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்'

يا وهاب هبلى من نعمت الدنيا والاخرة انك انت الوهاب 

என்று ஆயிரத்து நூற்றி பதிநான்கு (1114) முறை ஓத வேண்டும். 

பிறகு மூன்று முறை ஸலவாத்து ஓதிக் கொள்ள வேண்டும். 

பிறகு இறைவனிடம் தம் கஷ்டங்களைச் சொல்லி, அது நிவர்த்தி பெற துஆ செய்து கொள்ள வேண்டும்.  

மேலும் ஃபஜ்ரு தொழுகைக்குப்பின் 21 தடவையும், 

லுஹர் தொருகைக்குப்பின் 22 தடவையும், 

மங்ரிப் தொழுகைககுப்பின் 24 தடவையும், 

இஷா தொழுகைக்குப் பின் 25 தடவையும் முன், பின் ஸலவாத்து ஓதி இதா - ஜாஅ நஸ்ருல்லாஹ்' ஸூராவை ஓதிவர வேண்டும். இன்ஷாஅல்லாஹ் வறுமை விலகி செல்வம் பெருகும்.

ஆண்களாக இருந்தால் அவர்கள் ஜமாஅத் தொழுகையைப் பேண வேண்டும், மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றி வாருங்கள், திக்ரு செய்வதில் குறையேற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களது தேவைகள் நிறைவேறும் வரை இதைத் தொடர்ந்து ஓதி வாருங்கள். இன்ஷா அல்லாஹ்! விரைவில் உங்களது கஷ்டங்களை அல்லாஹ் நீக்கி அருள் செய்வான்.


••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

ஞானம் பெற :

==============

يا عجيب الصنائع فلا تنطق الألسن بكل آلائه وثنائه ونعمائه 

அதிசயங்களை நிகழ்த்துபவனே! உனது அனைத்து பேரருள்களுக்கும், புகழ்களுக்கும், நிஃமத்துளுக்கும் எந்த நாவும் நன்றி சொல்லி இருக்காது.

நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தவம் இருந்து வந்த நேரங்களில் இந்த தஹ்மீத் - புகழ் மொழியை தான் சொல்லி  திக்ரு செய்து வந்தார்கள். 

இதை 48 நாட்களுக்கு ஐந்து முறை மட்டும் ஒரு நாளில் சொல்லி வர வேண்டும். 

பின்னர் இதை ஒரு நாளில் 41 முறை 48 நாட்களுக்கு சொல்லி வர வேண்டும்.

பின்னர் இதை ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேளை தொழுகைக்குப் பின்னும் 41 முறை சொல்லி வர வேண்டும். 

அப்படி செய்து வந்தால் ஹிக்மத் - விரைவில் ஞானம் கிடைக்கும். 

وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا ۗ 

ஞானங்களை வழங்கப்பெற்றவர் அதிக நன்மைகளை வழங்க பெற்றவராவார். 2 : 269.  நூல் : மிஷ்காதுந் நுபுவா

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்