Posts

Showing posts from July, 2024

ஆகச் சிறந்த கவிதை

Image
ஆகச் சிறந்த கவிதை : وأجمل منك لم ترَ قط عيني  وأكمل منك لم تلد النساء خُلقت مبرّأً من كل عيب  كأنك قد خُلقت كما تشاء ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது ; நபியே! உங்களை விட அழகானவரை,  என் கண்கள் பார்த்ததில்லை!  உங்களை விட அழகானவரை,  எந்த பெண்ணும்   பெற்றெடுக்க வில்லை! நீங்கள் விரும்பியபடி  நீங்கள் உருவாக்கப்பட்டதைப் போல,  நீங்கள் எல்லா குறைகளிலிருந்தும்  நீங்கி உருவாக்கப்பட்டுள்ளீர்.

முதல் மனிதரும் நான்கு வகை மனிதர்களும்

Image
முதல் மனிதனும்  நான்கு வகை மனிதர்களும் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= மனித இனத்தின் தோற்றம் பற்றி மனிதனைப் படைத்தவன் சொல்வதை ஏற்பதுதான் சரியான தீர்வாகும்.  முதல் மனிதனின் வரலாறு நிச்சயமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்காது.  எனவே, வேத வழிகாட்டல் இல்லாவிட்டால் மனித இனத்தின் தோற்றம் குறித்து வெறும் யூகங்களை மட்டுமே செய்ய முடியும். முதல் மனிதன் குறித்து குர்ஆன் : =÷=÷=÷=÷=÷=÷÷÷=÷=÷=÷=÷=÷=÷=÷= மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்;  அவன் உங்கள் அனைவரையும் ஒரே மனிதரில் இருந்து படைத்தான்;  அந்த ஒரு மனிதரில் இருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;  பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;  ஆகவே, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;  உங்களுக்கிடையே நீங்கள் யார் பெயர் சொல்லி (உதவி) கேட்பீர்களோ அந்த அல்லாஹ்வையும், இரத்த பந்த உறவுகளை (முறிப்பதையும்) அஞ்சிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கின்றான்.  4 : 1 يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُن...
Image
இறைவா  நீயே என் தேடல்!  உன் பொருத்தமே  என் நோக்கம்!

நான் இறைவனின் தேர்வு :

Image
நான் இறைவனின் தேர்வு :  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= எனது சிறிய தந்தை மர்ஹூம் மௌலானா B. முஹம்மது சுல்தான் ஃபாஜில் தேவ்பந்தி  அவர்கள் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், அரபு தமிழ் அகராதி போன்ற ஆக சிறந்த ஆக்கங்களை அளித்த எனது ஆசிரியர்.  1994 இறுதியில் ஷரீஅத்தும் தக்லீதும் எனும் நூலை வெளியீட்டு இருந்தார். அந்த நூலின் விற்பனையாளனாக ஒரு ரமலான் மாதத்தில் திருச்சி நகர் முழுவதும் சுற்றி, அனைத்து பள்ளிவாசல்களிலும் கூவி கூவி விற்பனை செய்தேன்.  ஒரு ரமலான் மாதம் முழுவதும் திருச்சியில் தங்கியிருந்து இந்தப் பணியை செய்தேன். அன்று நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள், அவமானங்கள், நூல்கள் விற்பனையாகாததால் ஏற்பட்ட விரக்தி, பள்ளிகளில் தங்க அனுமதிக்காததால் உண்டான மன அழுத்தம் ஆகியன " நீ எழுத்தாளனாக மட்டும் ஆகிவிடாதே! " என என் மனமும், உடலும் ஒரு சட்டத்தை வகுத்துக் கொண்டது. நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா முதல்வர், எனது ஆசிரியர் மௌலவி முஹம்மது இஸ்மாயீல் பாகவி ஹள்ரத் அவர்கள்  மிஃராஜ் போன்ற சில நூல்களை எழுதி இருக்கிறார்கள். அவற்றையும் நான் விற்பனை செய்து இருக்கிறேன். அந்த நூல்களை விற்ற  அனு...

அன்பார்ந்த ஆலிம் பெருமக்களே!

Image
அன்பார்ந்த  ஆலிம் பெருமக்களே! \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ மவ்லானா, அல்லாமா, பேராசிரியர்,  P.S.P. ஜைய்னுல் ஆபிதீன் ஹள்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புதுப்பேட்டை மஸ்ஜிதில்  பேசிய ஆன்மிக உரை. எல்லாமே ஒன்று போலிருக்க; நாம் ஒன்றும் தொழிற் சாலையிலிருந்து வெளிவந்தவர்களல்ல. நாம் 'இன்ஸானியத்' - மனிதத் தொழிற்சாலை எனும் மதரஸாவிலிருந்து வெளிவந்தவர்கள். நம்மில் சிலர் அறிவில் கூடுதல் - குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும். அதுதானே மனித இயல்பும் கூட. ஆலிம்களான நமது 'ஸில்ஸிலா' தொடர், திண்ணைத் தோழர்களைச் சென்றடைகிறது. அவர்கள் அடைந்த துன்பம் நம்மையும் வந்தடைவதே இயல்பு. எனவே அவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டுதான் நாம் நமது மார்க்க - சமூக பணிகளைச் செய்ய வேண்டும். நாம் மதரஸாவிலிருந்து ஆலிமாக வெளிவரவில்லை. ஜாஹிலாக - படுமுட்டாளாகவே வெளிவந்தோம். என்னே! ஹள்ரத் இப்படியெல்லாம் சொல்றாங்க என்று நினைக்காதீர்கள். ஆனால், அதுதான் உண்மை!  ஏனென்றால், ஒன்றுமே தெரியாமல் மதரஸாவிற்குச் சென்று, முதல் ஜும்ராவில் சில நூல்களைப் படிக்கும் போது சில கல்வி கிடைக்கிறது. அப்போது இது சம்பந...

யார் சமூக சீர்திருத்தவாதி?

Image
யார் சமூக சீர்திருத்தவாதி?  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ மனிதர்களுக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக எத்தனையோ பெரிய மனிதர்கள், மகான்கள் பூமியில் தோன்றி இருக்கிறார்கள்.  எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது?  என்று தம் சொல்லாலும் செயலாலும் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.  அவர்கள் அனைவரும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. சாக்ரடீஸ் ஜீசஸ் (ஈஸா அலை) பிறப்பதற்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி.  அவரைப் பொய்யாகக் குற்றம் சாட்டி, சிறையிலடைத்து, விஷம் குடித்து உயிர் துறக்க வேண்டும் என்று தண்டனையும் அளித்தது அன்றைய அரசு.  சாக்ரடீஸ் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் சிறைக் காவலர்களுக்கு அவருடைய சீடர்கள் லஞ்சம் கொடுத்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து அவர் தப்பிக்கவும் அவர்கள் வழிசெய்தனர். ஆனால் சாக்ரடீஸ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. "மரணத்தைப் பற்றிய பயம் எனக்கில்லை" என்று சொன்னார்.  அதுமட்டுமா? விஷத்தை அவரே எந்தவித அச்சமும், சலனமும் இல்லாமல் எடுத்து குடித்தார்.  அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துக் கொண்டே வந்தது; கீ...

peace - மன அமைதி நிலவ மாணவர்களுக்கு வழிகாட்டு பயிலரங்கம்

Image
Today's session started with a prayer and personal introductions from students and teachers from 7-8 different schools and colleges. The dynamics of the seminar were explained by Rev. Dr. Cyril SJ, who urged for such a meeting to be conducted in Chennai. He contacted the Gandhi Peace Foundation in Chennai, and Dr. Kulandhaisamy from GPF immediately organized this seminar.  *Dr. Cyril SJ* explained the need for a human fraternity movement in India and asked the students, "What is peace?" and the need of peace to start from within. He then discussed the document regarding the Human Fraternity Movement.  *Ms. Jahanara from Hyderabad* explained how peace can be promoted through skill development and interaction/communication between the learners. After the break , *Father Joseph Kalathil SJ , peace activists from Jamshedpur*  on the topic 'Peace is possible'. His work revolves around school students in Jammu& Kashmir and Pakistan. He has made 3000 school students ...

ஈரோட்டு இஸ்லாமிய பெரியார் உமர் பாரூக் தாவூதி ரஹ்

Image
ஈரோட்டின் இஸ்லாமிய பெரியார், முதுபெரும் அறிஞர், சட்ட மேதை, மௌலானா, M.S. உமர் ஃபாரூக் தாவூதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இறைவன் மனிதர்களில் எவரையும் வீணாக படைக்கவில்லை. படைக்கப்பட்ட ஒவ்வொருவரைக் கொண்டும் சமூகத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் ஒருநேரத்தில் பலனளிப்பவராகவே இருப்பர்.  அதிலும் ஆலிம்கள் ஆலிமானதிலிருந்து அகிலத்தை பிரியும் வரை தனக்கு பிடித்தமான வழியில் நற்பணியாற்றி வருவார்கள். மவ்லானா உமர் ஃபாரூக் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் பெயருக்கு ஏற்ப இக்காலத்தில் உள்ள சிக்கலான பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உண்மை எது என்பதை பாரூக் - பிரித்து காட்ட கூடியவர்களாக இருந்தார்கள்.  ஹள்ரத் அவர்களின் முன்னோர்கள்: தமது முன்னோர்கள் பற்றி ஹள்ரத் அவர்கள் கூறுவதையே கேளுங்கள். எனது தந்தையின் தாதா (பாட்டனார்) அல்லது அவரின் தந்தை மைசூர் சமஸ்தானத்தில் மைசூர் புலி ஹைதர் அலியின் அவையில் ஓர் பிரதானியாக இருந்துள்ளார். ஈரோடுட்டுக்கு அருகாமையில் உள்ள அந்தியூர் என்னும் ஊர் அக்காலத்தில் முக்கிய கேந்திரமாக இருந்துள்ளது. அப்பகுதிக்கு இஸ்லாமிய காரியங்கள் நடத்தி வைக்கவும், இஸ்லாமிய மார்க்க ஞானம் போதிக்கவும் காஜியாக ...

மஸ்ஜிதுந் நபவி பச்சை குப்பாவின் வரலாறு

Image
சூஃபிகளின் ஹஜ் : - 68 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• மஸ்ஜிதுந் நபவி பச்சை குப்பாவின் வரலாறு : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= நபி (ஸல்) அவர்கள் தாம் வசித்து வந்த வீட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டதால் வீட்டின் மேல் கூரை  இருந்தது.  ஒருமுறை மதீனாவில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்பொழுது ஸஹாபாக்களும் தாபியீன்களும் அன்னை ஆயிஷா (ரலி) அவரிடம் வந்து வறட்சி நிலையை முறையிட்டார்கள்.  அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "வானத்திற்கும் நபி (ஸல்) அவர்களின் அடக்க தளத்திற்கும் இடையே கூரை இல்லாமல் செய்து விடுங்கள் மழை பொழியும்" என்று கூறினார்கள்.  அவ்வாறே செய்யப்பட்டது; மழை பொழிந்தது. நபிகளாரின் கப்ரில் கிடந்த தானியங்கள் சில நாட்களில் முளை விட்டது. மேலும் சில நாட்களில் செடி கொடிகளும் பயிர்களும் வெளிப்பட்டது. நபி (ஸல்) அவர்களுடைய கப்ரின் மீது ஹிஜ்ரி ஏழாவது நூற்றாண்டு வரை எந்த குப்பாவும் கட்டப்படவில்லை. சுல்தான் கலாவுன் அவர்கள் காலத்தில் ஏழாவது நூற்றாண்டில்தான் முதன்முதலாக கட்டப்பட்டது. இதன் வண்ணம் முதல் முதலில் மர கலரிலும், பின்னர் வெள்ளை நிறத்திலும், பின்னர் நீல நிறத்திலும் இருந்தது. அதற்கு பின்புதான் ப...

ஸலவாத்து சொல்ல மறந்து விட்டீர்:

Image
சூஃபிகளின் ஹஜ் : - 67 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ ஸலவாத்து சொல்ல மறந்து விட்டீர்: =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= முஹம்மது பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; அபூ பக்ர் பின் முஜாஹித் (ரஹ் ) அவர்களிடம் படிப்பதற்காக நான் பங்தாது சென்றிருந்தேன். அவர்களிடம் பெரும் கூட்டமாக நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது வயதான ஒருவர் எங்களிடம் வந்திருந்தார். அவருடைய தலைப்பாகை கந்தலாக இருந்தது. அவருடைய சட்டையும் அவருடைய மற்ற ஆடைகளும் கந்தலாக இருந்தது. அந்த வயதான மனிதருடைய பெயரும் அபூபக்ர் என்பதுதான்.  வந்திருந்த வயதானவர் ஓரிடத்தில் அமர்ந்தார். தன் நிலையையும் தன் குழந்தைகளின் நிலையையும் எடுத்துச் சொன்னார்.  அந்த சபையில் கலீஃபாவின் மந்திரிகளில் ஒருவரான அலீ பின் ஈஸா என்பவரும் அமர்ந்திருந்தார். அவரிடம்தான் தன் நிலையை எடுத்துச் சொன்னார். மேலும் கடந்த இரவில் எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதனால் எனக்குத் தேனும், வெண்ணையும் தேவைப்படுகிறது. ஆனால் அதை பெறுவதற்கான எந்த முகாந்திரமும் எனக்கு இல்லை. இந்நிலையில் கவலையோடு நேற்று இரவு படுத்து உறங்கினேன். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் என் கன...

மூன்று வானவர்கள்

Image
சூஃபிகளின் ஹஜ்: - 66 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• மூன்று வானவர்கள் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  "அல்லாஹ்விற்கென மூன்று வானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கஃபாவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட வானவர். என் மஸ்ஜிதிற்கென நிர்ணயிக்கப்பட்ட வானவர். மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட வானவர்கள் ஆவார். கஃபாவிற்கென நிர்ணயிக்கப்பட்ட வானவர் தினமும் கூறுவார். யார் அல்லாஹ்வின் கடமைகளை விட்டு விடுகிறாறோ அவர் அல்லாஹ்வின் பாதுகாவலிலிருந்து வெளியேறி விடுகிறார். என் மஸ்ஜிதுக்கு என நிர்ணயிக்கப்பட்ட வானவர் தினமும் கூறுகிறார்.  யார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துக்களை விட்டு விடுகிறாறோ அவர் மறுமை நாளில் ஹவ்லுல் கவ்ஸர் அருகே வரமுடியாது; அவருக்கு நபிகளாரின் ஷஃபாஅத்தும் கிடைக்காது. மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட வானவர் தினமும் கூறுகிறார். யார் ஹராமான உணவை உண்ணுகிறாறோ அவரது அமல்கள் மறுமை நாளில் அவரது முகத்தில் தூக்கி வீசப்படும்." நூல்: ஃபளாயிலு பைத்துல் முகத்த...

நீங்கள் அறிய வேண்டிய ஜன்னத்துல் பகீவு

Image
சூஃபிகளின் ஹஜ்: - 65 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நீங்கள் அறிய வேண்டிய  ஜன்னத்துல் பகீவு :  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  "முழுமதி நிலவைப் போன்ற அழகியத் தோற்றத்தில் எழுபது ஆயிரம் பேர் பகீவுவிலிருந்து எழுப்பப்படுவார்கள்.  அவர்கள் கேள்வி கணக்கு இல்லாமல் சொர்க்கம் செல்லுவார்கள்."   நூல்: அபூதாவூத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "யார் எங்கள் அடக்கத்தலமான பகீவுவில் அடக்கம் செய்யப்படுகிறாறோ அவர் நம் சாட்சிக்கும், ஷஃபாஅத்துக்கும் உரியவராவார்"  நூல்: திர்மிதீ, தாரீகுல் மதீனா,   தஹிதீபு வத்தஹிதீப் தாவூத் பின் காலித் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்.  முஸ்அப் பின் உமைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ அல்லது உம்ராவிற்காகவோ சென்றிருந்தார்.  அவருடன் இப்னு ரஃசுல் ஜாலூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இருந்தார்கள்.  (இருவரும்) ஜன்னத்துல் பகீவு இருக்கும் வழியாக மதீனாவினுள் நுழைந்தார்கள். அவர்கள் அந்த கப்ருகளின்...

ஒரு கிராமத்தாரின் சொல் ரவ்ளா வாசலில்.........

Image
சூஃபிகளின் ஹஜ் : - 64 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ஒரு கிராமத்தாரின் சொல்  ரவ்ளா வாசலில் ..............‌‌.......... =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= முஹம்மது பின் ஹர்புல் ஹுளாலீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.  நான் மதீனா மன்ஜிதிற்குள்  நுழைந்தேன். நபிகளாரை ஸியாரத் செய்வதற்காக அவர்களின் கப்ரு அருகே சென்றேன்.  அச்சமயம் ஒரு கிராமப்புற அரபி வந்து நபிகளாரை ஜியாரத் செய்தார்.  பிறகு அவர் “ரசூல்களில் சிறந்தவரே! நிச்சயமாக அல்லாஹ் உம்மீது  உண்மையான வேதத்தை  அருளியுள்ளான்.  அதில் "மனிதர்கள்  தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்டு (நபியே) அவர்கள் உம்மிடம் வந்து  அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகிறார்கள் ; பின்னர் அவர்களுக்காக (அல்லாஹ்வின்) ரசூலும் பாவமன்னிப்பு தேடினால் (அப்பொழுது) அல்லாஹ்வை தவ்பா - பாவ மன்னிப்பு  ஏற்றுக் கொள்கிறவனாகவும் மிகக் கிருபையுடையவனாகவும் அவர்கள் காண்பார்கள். 4:64 எனக் கூறியுள்ளான்.  எனவே என் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்பதற்காக (நபியே) நீங்கள் ஷஃபாஅத் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதற்காக உம்மிடம...

மரணித்த பிறகும் உணவளித்த உத்தம நபி

Image
சூஃபிகளின் ஹஜ் : - 63 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• மரணித்த பிறகும்  உணவளித்த உத்தம நபி  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ இப்னு ஹஜரில் ஹைத்தமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது;  அபுல்கைர் அக்தஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவில் ஐந்து நாட்களாக உணவு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்தார்கள்.  ( அகோரப் பசியுடன்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறைக்கு வந்து ஸலாம் கூறிய பின் ஓரமாக அமர்ந்து கண்ணயர்ந்து விட்டார்கள்.  கனவில் அபூபக்ர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வலப்புறத்திலும், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இடப்புறத்திலும், அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னிலும் சூழ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள்.  அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னை எழுப்பி, "இதோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்திருக்கிறார்கள்" என்று என்னிடம் கூறினார்கள்.  நான் அவர்களுக்காக எழுந்து நின்று ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்களின் நெற்றியில் முத்தமிட்டேன்.  அப்போது எனக்கு ஒரு ரொட்டியை வழங்கினார்கள்.  கனவில் அதன் பாதியை சாப்பிட்டு விட்டு விழித்துக் கொண்டேன்....

அலங்கோலமான ஆடை

சூஃபிகளின் ஹஜ் : - 62 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• அலங்கோலமான ஆடை  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ அபூ ஸயீத் கஹ்ஸாஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்;   நான் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் செல்லும்போது இரு கிழிந்த ஆடைகளை உடுத்தி மக்களிடம் யாசித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டேன்.  நான் என் மனதில், "இப்படிப்பட்டவர்களால்தான் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது; இவர்களெல்லாம் ஏன் இங்கு வருகிறார்கள்?" என நினைத்தேன்.  உடனே அவர் என்னைப் பார்த்து கீழ் வரும் வசனத்தை ஓதினார். وَٱعۡلَمُوۤا۟ أَنَّ ٱللَّهَ یَعۡلَمُ مَا فِیۤ أَنفُسِكُمۡ فَٱحۡذَرُوهُۚ அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்; (சில தவறான எண்ணங்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்;) எனவே அவனை அஞ்சி கொள்ளுங்கள். 2:  232 ஹள்ரத் அபூ ஸயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ; இதைக் கேட்டதும் நான் தவறாக நினைத்ததை  வருந்தி தவ்பா செய்தேன். அவர் என்னைப் பார்த்து வேறொரு வசனம் ஓதினார். وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُوا عَنِ السَّيِّئَاتِ அவன், தன் அடியார்களின் மன்...

மன்னிக்கப்பட்ட மாமனிதர்

சூஃபிகளின் ஹஜ் : - 61 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• மன்னிக்கப்பட்ட மாமனிதர் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ ஹள்ரத் துன்னூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; கஃபாவிற்கு அருகில் நான் ஒரு வாலிபரைப் பார்த்தேன். அவர் தொடர்ந்து முழு மூச்சாக ருகூவு, ஸுஜுது செய்து தொழுவதில் ஈடுபட்டிருந்தார்.  நான் அவரிடம், "எப்பொழுது பார்த்தாலும் தொழுது கொண்டே இருக்கின்றீரே!" என்று கேட்டேன்.  அதற்கு அவர் '"நான் ஹஜ் செய்ய வந்திருந்தேன்; அமல்கள் முடிவுற்று விட்டது; இப்பொழுது எனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் சில தினங்களாக அனுமதி கேட்டு வருகிறேன்!" என்று பதிலளித்தார்.  பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு காகிதத்துண்டு வானிலிருந்து அங்கு விழுந்ததை நான் பார்த்தேன்.  அதில், "இது மிக்க கண்ணியத்திற்கு உரியவனும், மிகவும் மன்னிக்கக்கூடியவனுமான அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனுடைய உண்மையான நன்றியுள்ள நல்லடியானுக்கு எழுதப்பட்டது; உன் முன் பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நிலையில் நீ திரும்பிச் செல்வாயாக!" என்று எழுதப்பட்டிருந்தது. நூல்:  ரவ்ழுர் ரைய்யாஹீன்

ரவ்ளாவிற்குள் அபூபக்ர் ரலி அவர்கள்

சூஃபிகளின் ஹஜ் :- 60 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ரவ்ளாவிற்குள்  அபூபக்ர் ரலி அவர்கள்: =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுவதாவது ;  ஹள்ரத் அபூ பக்ர் (ரலி) அவர்கள் தம் மரணப் படுக்கையில் இருக்கும்போது என்னை அழைத்து தன் தலைக்கு அருகில் அமரச் செய்து, " நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டிய உங்களுடைய இதே கரங்களினால் என்னையும் குளிப்பாட்ட வேண்டும்.  மேலும் நறுமணம் பூசவேண்டும். பிறகு நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய  ஹுஜ்ராவிற்கு அருகில் எனது ஜனாஸாவை கொண்டு சென்று நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கருகில் அடக்கமாவதற்கு அனுமதி கோர வேண்டும்.  அனுமதி கோரியதும் ஹுஜ்ராவின் கதவுகள் திறக்கப்பட்டால் என்னை அங்கு அடக்கம் செய்துவிட வேண்டும்.  இல்லை என்றால் பொதுவாக முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்படும்  'பகீவுவில் அடக்கிவிட வேண்டும்" என்று வஸிய்யத்துச் செய்தார் கள். ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ; ஜனாஸா தயாரான பிறகு (ரவ்ளாவை அடைந்து) எல்லோருக்கும் முதலாக நான் சென்று "யா ரசூலல்லாஹ் (ஸல்) அவர்களே! இதோ அபூபக்ர் (ரலி) அவர்கள் இங்கு அடக்கமாவதற்க...

மூத்த ஆலிம்களின் மரணம்

انا لله وانا اليه راجعون  அடுத்தடுத்து  இரண்டு ஆலிம்களின் மரணம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இல்யாஸ் ஹஜ்ரத் அவர்களின் மரணத்தின் அதிர்ச்சியிலிருந்தும் அதிர்வலையில் இருந்தும் உடலும் உள்ளமும் மீள்வதற்குள் தாங்க முடியாத பேரதிர்ச்சி ! தர்வேஷ் ரஷாதி ஹள்ரத் அவர்களின் மரணச் செய்தி! அல்லாஹ் இருவரையும் மன்னித்து தன் புவனப் பூஞ்சோலையில் புகுத்தி  இருவரையும் இளைப்பாற செய்வானாக! ஆமீன்!! اللَّهُمَّ إنَّ مولانا درويش رشادي والياس حضرت في ذِمَّتِكَ وحَلَّ بجوارك، فَقِهِ فِتْنَةَ القَبْر، وَعَذَابَ النَّارِ، وَأَنْتَ أَهْلُ الوَفاءِ والحَمْدِ،  اللَّهُمَّ فاغفِرْ لهُ وَارْحَمْهُ، إنكَ أَنْتَ الغَفُور الرَّحيمُُ. اللهم اغفر لميتنا، وارفع درجته في المهديين، واخلفه في عقبه في الغابرين، واغفر لنا وله يا رب العالمين ، وأفسح له في قبره ونور له فيه. اللهم اغفر واصفح عن ميتنا وباعد بينه وبين فتنة القبر واجعله روضة عليه مستبشرا بلقائك لا إله إلا أنت الغني عن التعذيب الغفور لمن ينيب. اللهم اغفر له وعافه واعف عنه، وأكرم نزله، ووسع مدخله، واغسله بالماء والثلج والبرد، ونقه من الذنوب كما ينقى ا...

நபிகள் நாயகம் ஜம்ஜம் தண்ணீரை பருகிய விதம்

சூஃபிகளின் ஹஜ் : - 59 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நபிகள் நாயகம்  ஜம்ஜம் தண்ணீரை பருகிய விதம் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வாளியில் ஜம்ஜம் தண்ணீரை இறைக்கும்படி உத்தரவிட்டார்கள். வாளியால் தண்ணீர் இறைக்கப்பட்டு கிணற்றின் கைப்பிடி சுவற்றின் மீது வைக்கப்பட்டது.  நபி [ஸல்] அவர்கள் அந்த வாளியைக் கையால் பிடித்து "பிஸ்மில்லாஹ்" எனச் சொல்லி வெகு நேரம் வரை பருகினார்கள். பிறகு "அல்ஹம்துலில்லாஹ்" எனக் கூறி நிறுத்தினார்கள்.  மீண்டும் "பிஸ்மில்லாஹ்" எனச் சொல்லி நீண்ட நேரம் குடித்தார்கள். பின்னர் "அல்ஹம்துலில்லாஹ்" எனக் கூறி நிறுத்தினார்கள்.  அதற்குப்பின், “நமக்கும் நயவஞ்சகர்களுக்கும்  உள்ள வித்தியாசம், அவர்கள் இதனை மிதமிஞ்சி வயிறு நிரம்பக் குடிக்கமாட்டார்கள் என்பதே" என்று கூறினார்கள். நூல் : இஹ்யா உலூமித்தீன் ஒரு ஹதீஸில் கூறப்படுவதாவது: நபி [ஸல்] அவர்கள், ஹள்ரத் அப்பாஸ் [ரலி] அவர்களிடம் ஜம்ஜம் தண்ணீரைக் கேட்டார்கள்.  அதற்கு அவர்கள், "இந்தத் தண்ணீரில் எல்லோரும் கைவிடுகிறார்கள் ; அதாவது ஜம்ஜம் தண்ணீர் ஹவுளு போன்ற ஒரு தொட்...

ஸலவாத்தும் ஜியாரத்தும் இரண்டு கண்கள் :

சூஃபிகளின் ஹஜ் : - 58 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• ஸலவாத்தும் ஜியாரத்தும்  இரண்டு கண்கள் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ ஹள்ரத் இப்னு அபூ பதிவூ (ரஹ்] அவர்கள் அறிவிப்பதாவது; எந்த ஒரு மனிதர்  நபி (ஸல்) அவர்களுடைய கப்ருக்கு அருகில் நின்று  إِنَّ اللهَ وَمَلَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ...... என்ற வசனத்தை முழுமையாக எழுபது முறை ஓதிய பின்னர்  صَلَّى اللهُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ "ஸல்லல்லாஹு அலைக்க  யா ரசூலுல்லாஹ் " என்று சொல்கிறாரோ அவருக்கு ஒரு வானவர், "மனிதனே! அல்லாஹ் உன்மீது ரஹ்மத்தை பொழிகின்றான்" என்று கூறுகின்றார்.  மேலும் அவருடைய அனைத்து தேவைகளும் முழுமையாக நிறைவேற்றித் தரப்படுகிறது. நூல்  : பைஹகீ, அஷ்ஷிபா இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;  "எவர் என்னை ஜியாரத் செய்வதற்கு என்றே நாடிவருவாரோ அவர் மறுமை நாளில் என் அருகில் இருப்பார். இன்னும் மதீனாவில் தங்கியிருந்து அங்குள்ள கஷ்டங்களையும், சிரமங்களையும் எவர் பொறுத்துக் கொள்வாரோ, அவருக்காக நான் இறுதித் தீர்ப்பு நாளில் சாட்சியாகவும், சிபாரிஷ் செய்யக் கூடியவனாகவும் ...

தன்னை ஜியாரத் செய்ய அழைத்த நபிகள் நாயகம் :

சூஃபிகளின் ஹஜ் : - 57 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ தன்னை ஜியாரத் செய்ய  அழைத்த நபிகள் நாயகம் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= அல்லாமா ஸுப்கீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; பைத்துல் முகத்தஸ் வெற்றிகொண்ட பிறகு ஹள்ரத் பிலால் (ரலி) அவர்கள், கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் தாம் இங்கேயே தங்கிவிடுவதாக அனுமதிக் கோரினார்கள்.  அவர்களின் கோரிக்கையை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  அதன் பிறகு அவர்கள் அங்கேயே தங்கி, நிக்காஹ்வும் செய்து கொண்டார்கள்.  பின்னர் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்கள்.  கனவில் நபி (ஸல்) அவர்கள், "பிலாலே! இது என்ன அநியாயம்! என்னை ஜியாரத் செய்யும் நேரம் இன்னும் வர வில்லையா?'' என்று கேட்டார்கள்.  இக்கனவை கண்டு விழித் தெழுந்ததும்  பிலால் (ரலி) அவர்கள் மிக்க வருத்தத்தோடும், பயத்தோடும் உடனே ஒட்டகையை அவிழ்த்துக் கொண்டு  மதீனாவை நோக்கி பயணமானார்கள்.   மதீனா சென்றடைந்ததும் அழுதவர்களாக கப்ரு ஷரீபின் முன்பு நின்றார்கள். நீண்ட நேரம் மௌனமாக முராக்கபாவில் நின்று இருந்தார்கள். அவர்களின் வரவை கேள்விப்பட்ட ஹள்ரத் ஹஸன் (ரலி), ஹள்ரத் ஹுசைன...

நாட்டங்கள் நிறைவேற ஜம்ஜம் தண்ணீரை குடியுங்கள்:

சூஃபிகளின் ஹஜ் : - 56 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நாட்டங்கள் நிறைவேற  ஜம்ஜம் தண்ணீரை குடியுங்கள் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ ஹள்ரத் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் புகழ்பெற்ற ஹதீஸ் கலை வல்லுநர் ஆவார்கள்.  இவர்களிடம் ஒரு மனிதர் வந்து "ஜம்ஜம் நீரை எந்த நோக்கத்திற்காகக் குடிக்கப்படுமோ அந்த நோக்கம் நிறைவேறும், என நபி [ஸல்] அவர்கள் அருளியதாக தாங்கள் கூறுகிறீர்களாமே?  இந்த ஹதீஸ் ஸஹீஹானதுதானா?" என்று கேட்டார்.  அதற்கு சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள், "ஆம்! இது உண்மையான ஹதீஸ்தான்!" என்றார்கள்.  உடனே அம்மனிதர் அப்படி யென்றால் தாங்கள் எனக்கு இருநூறு ஹதீஸ்களைக் கற்றுத் தர வேண்டும் என்பதற்காக நான் ஜம்ஜம் தண்ணீரைக் குடித்தேன்" என்றார்.  சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் அம்மனிதரை நோக்கி "உட்காருங்கள்! உங்களுக்கு நான் இருநூறு ஹதீஸ்களை அறிவித்துத் தருகிறேன்" என்றார்கள்.  இப்னு உயைனா [ரஹ்] அவர்கள் மேலும் அறிவிப்பதாவது:  ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஜம்ஜம் நீரைக் குடிக்கும்போது, "யா அல்லாஹ்! மறுமை நாளின் தாகத்தைத் தணிப்பதற்காக நான் இதனைக் குடிக்கின்ற...

நபிகள் நாயகத்தை ஸியாரத்து செய்ய அழைப்பு விடுக்கப்பட்டவர்

சூஃபிகளின் ஹஜ் : - 55 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நபிகள் நாயகத்தின் கப்ரை  ஜியாரத்து செய்ய  அழைப்பு விடுக்கப்பட்டவர் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷÷÷=÷ கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸ் சென்றிருந்த போது யூதர்களின் மிகப் பெரிய கல்விமானாக மதிக்கப்பட்ட கஃபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.  ஹள்ரத் உமர் (ரலி)  அவர்களுக்கு கஃபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி மிக்க மகிழ்ச்சியை அளித்தது.  கஃபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களிடம், "என்னுடன் மதீனாவிற்கு வாருங்கள்; அங்கு சென்று நபி (ஸல்) அவர்களின் முபாரக்கான கப்ரு ஷரீபை தரிசிக்கலாம்" என்று கூறினார்கள்.  இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உமர் (ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸ் வெற்றியினை சுகித்த பிறகு மதினாவிற்கு திரும்பி வரும்போது உடன் வந்தார்கள். நபிகள் நாயகத்தின் கப்ரை ஜியாரத் செய்து பேரானந்தம் அடைந்தார்.  நூல்: தாரீஹ் மக்கா  நபிகள் நாயகத்தின் ஜியாரத் நம் அனைவருக்கும் பேரானந்தத்தை தரக்கூடியது. ஸியாரத் செய்து பாருங்கள்.

நபிகளார் மீது உச்சகட்ட அன்பு

சூஃபிகளின் ஹஜ் : - 54 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• நபிகளார் மீது  உச்சகட்ட அன்பு  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷ உவைஸுல் கர்னீ (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜு செய்துவிட்டு மதீனா வந்து மஸ்ஜிதுந் நபவியில் நுழைந்தார்கள்.  அப்பொழுது ஒருவர் சைகையாக அதுதான்  நபி [ஸல்] அவர்களின் பரிசுத்த கப்ரு ஷரீப் என சுட்டி காட்டினார்.  உடனே உவைசுல் கர்னீ (ரஹ்) அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள்;  மூர்ச்சை தெளிந்ததும், "என்னை அழைத்துச் செல்லுங்கள்; நபி (ஸல்) அவர்கள் இல்லாத இந்த நகரில் நான்  இருப்பதற்கு  மனமில்லை" என்றார்கள். மேலும் கீழ்க்கண்டவாறு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அழைத்து செல்லப்பட்டார்கள்.    لوجِئْتُكُمْ فَاصِدًا أَسْعَى عَلَى بَصَرِي *  لَمْ أَقْضِ حَقَّادَ أَنَّ الْحَقِّ أَدَّيْتُ  நான் தங்களின் சமூகத்திற்கு கால்களுக்குப் பதிலாக கண்களால் நடந்து வந்தாலும், தங்களுக்கு நன்றிக் கடனைச் செலுத்தியவனாக  ஆகமாட்டேன்.  என் தலைவரே! தங்களுக்கு வேறு எந்த நன்றிக் கடனை நான் முறையாக நிறைவேற்றி இருக்கிறேன் ; இதனை (ஜியாரத்தை) மட்டும் நிறைவேற்றுவதற்கு? நபி (ஸல்) அவர...

ஈஸா அலை அவர்கள் கூறும் ஸலவாத் ,ஸலாம்

சூஃபிகளின் ஹஜ் : - 53 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ ஈஸா (அலை) அவர்கள்  கூறும்  ஸலவாத் , ஸலாம் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஈஸா பின் மரியம் (அலை) அவர்கள் நேர்மையான தலைவராகவும், சட்டத்தின்படி ஆட்சி செய்கிறவராகவும் கண்டிப்பாக வானத்திலிருந்து இறங்கி வருவார். உம்மத்தே முஹம்மதியாவின் வழிமுறையைப் பின்பற்றி  ஹஜ் அல்லது உம்ராவை செய்வார். ஒரு நேரத்தில் அவர் என் அடக்கத் தளத்திற்கு வந்து, எனக்கு ஸலாம், (ஸலவாத்து) சொல்வார். நான் அவருக்கு பதில் ஸலாம் சொல்வேன்.  நூல் : தைலமி, அபூ யஅலஆ. ஈஸா (அலை) அவர்கள் இறுதி காலத்தில் பூமிக்கு வருவார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தை பின்பற்றிய ஒரு முஸ்லிமாக நபிகளாரின் கப்ரையும் சந்திப்பார்கள். அவர்கள் வாழ வேண்டிய காலம் வாழ்ந்து முடித்த பிறகு மதீனாவில் இறந்துப் போவார்கள்.  பின்னர் நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய இடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்படுவார்கள். அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு நபிமொழி திர்மிதீ ஷரீஃபில் ...