நபிகள் நாயகத்தை ஸியாரத்து செய்ய அழைப்பு விடுக்கப்பட்டவர்

சூஃபிகளின் ஹஜ் : - 55
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

நபிகள் நாயகத்தின் கப்ரை 
ஜியாரத்து செய்ய 
அழைப்பு விடுக்கப்பட்டவர் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷÷÷=÷

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸ் சென்றிருந்த போது யூதர்களின் மிகப் பெரிய கல்விமானாக மதிக்கப்பட்ட கஃபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். 

ஹள்ரத் உமர் (ரலி)  அவர்களுக்கு கஃபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி மிக்க மகிழ்ச்சியை அளித்தது. 

கஃபுல் அஹ்பார் (ரஹ்)
அவர்களிடம், "என்னுடன் மதீனாவிற்கு வாருங்கள்; அங்கு சென்று நபி (ஸல்) அவர்களின் முபாரக்கான கப்ரு ஷரீபை தரிசிக்கலாம்" என்று கூறினார்கள். 

இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உமர் (ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸ் வெற்றியினை சுகித்த பிறகு மதினாவிற்கு திரும்பி வரும்போது உடன் வந்தார்கள்.

நபிகள் நாயகத்தின் கப்ரை ஜியாரத் செய்து பேரானந்தம் அடைந்தார். 

நூல்: தாரீஹ் மக்கா 

நபிகள் நாயகத்தின் ஜியாரத் நம் அனைவருக்கும் பேரானந்தத்தை தரக்கூடியது. ஸியாரத் செய்து பாருங்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்