நபி (ஸல்) அவர்களின் புகழ் எவ்வளவு பரவி இருக்கிறது?
நபி (ஸல்) அவர்களின் புகழ் எவ்வளவு பரவி இருக்கிறது? =_==_==_==_==_==_==_==_= وقال محمد بن إسحاق : عن يزيد بن رومان قال : كان العاص بن وائل إذا ذكر رسول الله صلى الله عليه وسلم يقول : دعوه ، فإنه رجل أبتر لا عقب له ، فإذا هلك انقطع ذكره . நபி (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்ட போது ஆஸ் பின் வாயில் என்பவன் கூறினான். அவரை விடுங்கள்; அவர் சந்ததி அற்ற மனிதர்; அவருக்கு எதிர்காலமே இல்லை; அவர் இறந்து போனால் அவரைப் பற்றி பேச யாருமே இருக்க மாட்டார்கள். நூல்: தஃப்ஸீர் தப்ரீ இப்படி சொன்னவனுக்கு பதில் அளிக்கும் விதமாக சில வரிகள். வளர்ப்புத் தாய் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு பருவத்தையும் புகழ்ந்துப் பேசி வந்தார்கள். இளைஞராக இருந்தபோது குடும்பத்தினர் பேசிய புகழ் வார்த்தைகள் அனைத்தும் அவருக்கு உரியது தான் என அவரின் செய்கைகளை கண்டு ஊர் மக்கள் ஒப்பு கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தன் நடத்தையை மென்மேலும் அழகு படுத்திக் கொண்டே சென்றதால் அவர்களின் புகழும் ஓங்கியது. சிறுவராக, இளைஞராக, ஆடு மேய்ப்பாளராக, வியாபாரியாக, கணவனாக...