குர்ஆன் முழுவதிலும் எத்தனை வகையானச் செய்திகள் இடம் பெற்றுள்ளது?
=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^
காழி அபூ பக்ர் பின் அரபி (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள்.
1. தவ்ஹீத்: படைத்தவனின் பண்புகள், அவனைப் பற்றிய தாத் - உள்ளமைகள், அவனுடைய செயல்பாடுகள், மற்றும் படைப்பினங்களைப் பற்றிய புரிதல்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
உதாரணமாக ஒரு வசனம் ; உங்களுடைய இறைவன் ஒருவனே! 2 : 163
2. தந்கீர் : எச்சரிக்கைகள், உபதேசங்கள், சொர்க்கம், நரகம் , பகிரங்கமான மற்றும் மறைமுகமான பல்வேறு தகவல்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
நீர் (தொடர்ந்து) நல் உபதேசம் செய்து வருவீராக! நிச்சயமாக இறை நம்பிக்கையாளர்களுக்கு நல்லுபதேசம் பயனளிக்கவே செய்யும். 51: 55
3. அஹ்காம்: ஏவல், விலக்கல், ஆகுமானவைகள், நிர்பந்தத்தில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள், பல சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ் இறக்கிய குர்ஆனை கொண்டு அவர்களுக்கு இடையே நபியே நீர் தீர்ப்பு வழங்குவீராக! 5 : 49
குல்ஹுவல்லாஹு அஹது சூரா திருக்குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது. அவ்வாறே திருக்குர்ஆன் மூன்று வகைகளில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.
இவ்வாறு அல்ஹம்து சூராவிலும் கூட மூன்று வகையான செய்திகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment