நீ எகிப்தை ஆளுவாய்! தாத்தாரியர்களை விரட்டி அடிப்பாய்
நீ எகிப்தை ஆளுவாய்! தாத்தாரியர்களை விரட்டி அடிப்பாய் <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 13 தொடர்: 79 நபி {ஸல்} அவர்களை நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> •|• •|• •|• •|• •|• அமீர் அல் பர்தஜ்ஜானி அவர்கள் கூறுவதாவது; அல் முழஃப்பர் ஸைஃபுத்தீன் குத்ஸ் அவர்களிடம் எனது சிறு வயதில் நான் பணியாளனாக இருந்தேன். அப்போது அவருடைய தலையில் அதிகமான பேன்கள் இருந்தது; அவருடைய தலையை சீவி ஒவ்வொரு முறையும் ஒரு பேனை கொல்லும் போது ஒரு நாணயத்தையோ அல்லது அதைவிட குறைவாகவோ கேட்பேன்; எனக்கு அவர் வழங்கிக் கொண்டே இருப்பார். இவ்வாறு ஒரு நாள் அவருடைய தலையை நான் சீவிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு ஐம்பது வீரர்களின் (ஒரு பட்டாலியன் ) தளபதி பதவி வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். உடனே அவர், " உன் என்னபடி அல்லாஹ் நனவாக்கட்டும்! நிச்சயமாக உனக்கு ஐம்பது வீரர...