முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு ஆசி வழங்கிய அண்ணல் நபி (ஸல்)

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு ஆசி வழங்கிய அண்ணல் நபி (ஸல்) :
=================================
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
==================================
மாதம்: 12

தொடர்: 78

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

இமாம் ஜிலானி (ரஹ்) அவர்களின் பேச்சு அனைவரையும் கவர்வதற்குக் காரணம் நபிகள் நாயகம் அவர்கள்தாம்!

ஆமாம்! இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் காடுகளில் கடும் தவம் செய்து வந்த வேளையில் கிலிர் (அலை) அவர்களை கண்ட பிறகு ஒரு நாள் கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தார்கள். 

அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் ஊருக்குள் சென்று அனைத்து  மக்களையும் நல்வழிப்படுத்துங்கள்; இஸ்லாத்தை மக்களிடையே பரப்புங்கள்; மக்களுக்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்; மக்களுக்கு அறிவுரை சொல்வதில் இருந்து பின்வாங்க வேண்டாம்" என்று கூறினார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "எனது தாய்மொழி ஃபார்ஸீ நன்கு தெரியும், அரபு மொழி சரளமாக பேச வராது; இந்நிலையில் அரபியர்களுக்கும், அரபு மொழி அறிந்த பாரசீகர்களுக்கும் நான் எப்படி உபதேசம் செய்வேன்" எனக் கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது உமிழ்நீரை எடுத்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாயில் ஏழு முறை வைத்தார்கள். 

பின்னர், "இப்பொழுதே எழுத்துச் செல்லுங்கள்; மக்களுக்கு அறிவுரை சொல்லி அல்லாஹ்வின்பால் அழையுங்கள் என்று ஆசீர்வதித்து கூறினார்கள். 

கைலூலா உறக்கத்திலிருந்து எழுந்த இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒருவித பரவச நிலையில் உள்ளம் இருப்பதைக் கண்டு மிகவும் சந்தோசம் அடைந்தார்கள்; அன்றே லுஹர் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் அரபு மொழியில் மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

அப்பொழுது முதல் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அரபு மொழி மட்டுமல்ல அவர்களை அணுகி எந்த மொழி உடையவர்கள்  பேசினாலும் அவரவர் மொழியில் உரையாடும் ஆற்றலை அல்லாஹ் வழங்கினான். 

நூல்: கலாயிதுல் ஜவாஹிர்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்