Posts

Showing posts from November, 2025

நான்' மறையும் புனித தருணம்

Image
'நான்' மறையும் புனித தருணம் ================================ நேற்றைய தொடர்ச்சி.....56 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; பகா - அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருக்கும் நிலை குறித்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.  அதற்கு அவர்கள் பகா - அல்லாஹ்வின்  நினைவில் நிலைத்திருக்கும் நிலை என்பது லிகா - அல்லாஹ்வை சந்திக்கும் நேரமாகும்.  லிகா-  அல்லாஹ்வை சந்திக்கும் நேரம் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடும்; அல்லது அதை விடவும் வேகமாக நிகழ்ந்து முடிந்து விடும்.  அந்த சந்திப்பை பெற்றவர்களுக்கு ஓர் அடையாளம் உண்டு. அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கும் போது அவர்கள் அங்கு இல்லாமல் போய்விடுவார்கள்.  அதாவது தான் யார்? தான் எங்கு இருக்கிறோம்? என்பது போன்ற எந்த உணர்வுகளும் இல்லாமல் அல்லாஹுவை சந்திக்கிறோம் என்கிற ஒரே மன நிலையில் மட்டுமே இருப்பார்கள்.  அல்லாஹ்வை நீங்கள் நினைத்தால் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவராக ஆகிறீர்.  அல்லாஹ் ...

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய ரவ்லாவின் ஆயிரம் வருட வரலாறு

Image
இமாம் ஜீலானி (ரஹ்)  அவர்களுடைய  ரவ்லாவின் ஆயிரம் வருட வரலாறு ===================================== நேற்றைய தொடர்ச்சி......55 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இறந்த பிறகு அன்றிருந்த அப்பாஸிய கலீஃபாவான அல் முஸ்தன்ஜிது பில்லாஹ் (ரஹ்) அவர்கள் ரவ்ழாவை சுற்றி எளிமையான முறையில் ஒரு குப்பாவையும், சுற்று சுவரையும் கி.பி. 1170 -1180 களில் கட்டி எழுப்பினார். கி.பி. 1258 மங்கோலியர் காலத்தில் ஹுலாக்கு கான் அவர்களின் தாக்குதலால் நாடே சிதைந்த போது இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் ரவ்ழா மட்டும் எந்த சேதமும் ஆகாமல் பாதுகாப்பாக இருந்தது. 1295 - 1304 களில் இல் கானித் ஆட்சியாளர்களில் ஒருவரான கஸான் கான் அவர்கள் ரௌலாவை சீரமைத்தார்.  மங்கோலிய ஆட்சியாளர்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர்; இவர் 1295 களில் இஸ்லாத்தை ஏற்றார்.  இவர்களின் வம்சத்தை الايلخانيون ilkhanid என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது. இல்கனித் பேரரசு வீழ்ச்சி அடைந்த பிறகு الجلائري - Jalayir...

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மரணித்த நாளில்

Image
இமாம் ஜீலானி (ரஹ்)  அவர்கள் மரணித்த நாளில்  ============================ நேற்றைய தொடர்ச்சி...54 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== பஹ்ஜதுல் அஸ்ரார், குல்லியாத் காதரிய்யா போன்ற நூல்களில் சில செய்திகள் காணப்படுகிறது.  இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அஸர் நேரத்தில் காலமானார்கள்; மறுநாள் லுஹருக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டார்கள்.  மரணிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அருகில் இருந்த மகன்களில் ஒருவரான அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் , "எனது தந்தை மரணிக்கும் பொழுது அல்லாஹ், அல்லாஹ் என திக்ரு செய்து கொண்டே இருந்தார்கள்.  அந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் முகம் பௌர்ணமி நிலவு போல் ஜொலித்தது. எங்களது வீட்டிற்குள்ளும் வெளிப்புறத்திலும் ஒரு நற்மணம் பரவி இருந்தது; அது ஜனாஸாவை எடுக்கும் வரை நீடித்திருந்தது.  என்னையும் என் சகோதரர்கள் சிலரையும் அழைத்து, كونوا مع الصالحين، واجتنبوا أهل السوء، وتمسَّكوا بالله عز وجل تمسُّكًا شديدًا. يا وَلَدِي، لا تَتَّكِلْ عَلَى غَيْرِ اللهِ، وَفَوِّضْ...

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மரணம்

Image
இமாம் ஜீலானி (ரஹ்)  அவர்களின் மரணம்  ======================= நேற்றைய தொடர்ச்சி....53 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== உலகத்தில் எத்தனையோ இறைநேசர்கள் தோன்றியிருக்கிறார்கள்; அவர்களெல்லாம் அவர்கள் வாழ்ந்த ஊர்களிலும், பகுதிகளிலும், குடும்பத்தாரிடையே மட்டுமே பிரசித்தி பெற்றிருந்தார்கள்.  ஆனால் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மட்டும்தான் உலக அளவில் பிரசித்தி பெற்று வாழ்ந்தார்கள். அதனால் அவர்களின் சீடர்களும் உலகம் முழுவதும் இப்பொழுதும் வாழ்ந்து வருகிறார்கள்; அவர்களை பின்பற்றி வருகிறார்கள். அனைவராலும் அறியப்பட்ட இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தம் குடும்பத்தினரை அழைத்து, "எனது மரணம் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது; சில மாதங்களில் மரணித்து விடுவேன்" என்று கூறினார்கள்.  இவ்வாறு சொன்ன சில நாட்களுக்குப் பிறகு நோயாளியாக ஆனார்கள்; இமாம் அவர்கள் உடல் நலக்குறைவால் இருந்த சந்தர்ப்பத்தில் அரசு அதிகாரிகள், ஆன்மீகத்தின் உச்ச நிலை அடைந்திருந்த இறைநேச செல்வர்கள்...

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மனைவியர் & பிள்ளைகளின் விபரம்

Image
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மனைவியர் & பிள்ளைகளின் விபரம் ===================================== நேற்றைய தொடர்ச்சி...52 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== நான்கு மனைவியர் : ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ 1.  ஃபாத்திமா பின்த் ஷைகு இப்ராஹீம்  (ரஹ் ஜீலான் நகரத்தில் பிறந்தவர்) 2.  ஆயிஷா பின்த் ஷைகு அப்துல்லாஹ் ஸவ்மயீ   (ரஹ் பக்தாத் நகரத்தை சேர்ந்தவர்) 3.  ஃபாத்திமா பின்த் முஹம்மது பின் அஹ்மத்,  (ரஹ்) இவர்களுக்கு உம்மு அப்துல்லாஹ் என்ற பட்டப் பெயரும் உண்டு; பக்தாத் நகரத்தை சேர்ந்தவர்) நான்காவது மனைவியின் பெயர் ஆதாரபூர்வமாக எந்த நூலிலும் சொல்லப்படவில்லை; ஆனால் சில உருது மற்றும் ஃபார்ஸீ, ஆங்கில மொழி நூல்களில் கீழ்க்கண்டவாறு நான்கு பெயர்கள் இடம் பெற்றுள்ளது. Sayyida Madina-  சையிதா மதினா Sayyida Sadiqa-  சையிதா சாதிகா Sayyida Mu’minah - சையிதா முஃமினா, Sayyida Mahboobah -  சையிதா மஹ்பூபா.  ஃபார்ஸீ மொழி நூல்களில் சையிதா ஸைனப்  (ரஹ்) எ...

உலகத்தை வென்ற இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் குடும்ப வாழ்க்கை

Image
உலகத்தை வென்ற இமாம் ஜீலானி  (ரஹ்) அவர்களின் குடும்ப வாழ்க்கை  ===================================== நேற்றைய தொடர்ச்சி....51 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== மனிதர்கள் உண்மையை விட கற்பனைகளையே அதிகம் விரும்பி கேட்கும் வளக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதனால் எது உண்மை? என தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாமலும் இருக்கிறார்கள்.  ஆர்வமின்மை, அறியாமை போன்ற காரணங்களால் முஸ்லிம்கள், என்றோ சொல்லப்பட்ட "உலகப்பற்றை ஒழித்து வாழுதல்" எனும் இஸ்லாமிய கோட்பாட்டை தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். "இஸ்லாம் மார்க்கம் அனுமதித்தவற்றையும் ஒதுக்கி வாழ்வதே உயர்ந்த வாழ்வு" என்பது போல்  எண்ணுகிறார்கள்; அது மிகவும் தவறானது.  இவ்வாறு எண்ணினால் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)  அவர்கள் வைத்திருந்த பல கோடி திர்ஹங்கள், நான்கு மனைவியர், வியாபாரத் தளங்கள், (ஷாப்பிங் மால்கள்,) பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்த இவர்களை  நாம் உலக பற்றை ஒழித்து வாழ்ந்தவர் என...

இமாம் ஜீலானி (ரஹ்) குறித்து உலக மொழிகளில் வெளிவந்துள்ள முதன்மையான நூல்கள்

Image
இமாம் ஜீலானி (ரஹ்) குறித்து  உலக மொழிகளில் வெளிவந்துள்ள முதன்மையான நூல்கள் ===================================== நேற்றைய தொடர்ச்சி....50 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; எழுதுவது உங்களின் வழக்கம் என்பதற்காக எழுதாதீர்; அல்லாஹ்வின் வழியில் மக்களை நேர்வழிப்படுத்துவதற்காகவே எழுதுகிறேன் என்று எண்ணி எழுதுங்கள். அது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; சதக்காவாகவும் மாறும். உங்களின் அறிவு உங்கள் இதயத்தில் பேரொளியாக பிரவாகம் எடுக்காமல்,  நீங்கள் எழுதினால் அது வெறும் மையாக மட்டுமே உங்கள் புத்தகம் இருக்கும்; அதில் எந்த நன்மையும் ஏற்படாது. நீங்கள் சொல்ல போகும் அறிவுரை, உங்கள் உள்ளத்தில் இறங்கி இருந்தால் மட்டுமே பிறரின் உள்ளத்திலும் இறங்கும். அறிவின் பெருமை அல்ல நூல்கள்! ஆன்மாவை உயிர்ப்பிக்கும் வரிகள் தான் உண்மை! நூல்களை எழுதி குவிப்பது மதிப்பல்ல! உங்களின் ஒரு வரி மனிதனின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால்தான் மதிப்பு. செயல்பாடு இல்லாமல் எழுதப்படும் நூல்கள், எழு...

ஞானத்தை தேடிய பயணத்தின் பதிவுகள்

Image
ஞானத்தை தேடிய  பயணத்தின் பதிவுகள்  ========================== நேற்றைய தொடர்ச்சி....49 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ============================== நேற்று வெளியிட்டிருந்த 48வது தொடர்ச்சி மிகவும் சிரமப்பட்டும் மிக நீண்ட தூரம் பயணங்கள் செய்தும் எழுதி முடித்தேன்.  இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்து தமிழில் வெளியிடப்பட்டிருந்த நூல்கள் சம்பந்தமாக எழுத வேண்டும் என ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்து அதற்கான தேடல்களில் ஈடுபட்டு வந்தேன்.  அதற்காக கன்னிமரா லைப்ரரி, முஹம்மதன் லைப்ரரி, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தரமணி, பழங்காசு சீனிவாசன் நூலகம் ஆவடி ஆகிய நான்கு இடங்களுக்கு  ஒவ்வொரு நாளும் ஓர் இடத்திற்குச் சென்று தேடியதில் கிடைத்த நூல்கள் தான் நீங்கள் நேற்று பார்த்தது.  பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இருந்து வரலாற்று துறை பேராசிரியர்களான ஷாகுல் ஹமீது, சைய்யது அலி, மௌலவி ஷாஹுல் ஹமீது பாகவி ஆகியவர்களோடு சென்றிருந்தேன். அவர்கள், அவர்கள் துறை சார்ந்த நூல்களை ஆய்வு செய்தார்கள்; நான் எனது தேவைகள் சார்...

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்து தமிழில் வெளிவந்துள்ள நூல்கள்:

Image
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்து தமிழில் வெளிவந்துள்ள நூல்கள்: ================================== நேற்றைய தொடர்ச்சி.......48 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் தூய்மையான வாழ்க்கை முறை எந்த அளவு மக்களிடம் சென்று சேர்ந்து இருக்கிறது என்பதற்கு கீழ்காணும் நூல்கள் ஓர் ஆதாரம்.  ஊடகங்கள் எதுவும் இல்லாத அந்த காலத்தில் அவர்கள் குறித்து, நூல்கள் எழுதப்படுகிற அளவிற்கு செய்தி நம்மை வந்தடைந்திருப்பதை காணும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. 1.  முகியித்தீன் புராணம் எனும் நூலை முதலில் செய்கு அப்துல் காதிறு நயினார் எனும் சேகனாப் புலவர் 1810 லும், வண்ணக்களஞ்சியப் புலவர் 1814 லும் பாடினர்.  அதன் தொடர்ச்சியாக இலங்கையைச் சேர்ந்த பத்றுத்தின் புலவர்...

மனிதர்களின் நான்கு பாதைகள் யாரை தொடர்வது? யாரை தவிர்ப்பது?

Image
மனிதர்களின் நான்கு பாதைகள்  யாரை தொடர்வது? யாரை தவிர்ப்பது? ===================================== நேற்றைய தொடர்ச்சி.....47 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== இமாம் ஜீலானி ரஹ் அவர்கள் கூறுவதாவது; நான்கு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்; 1.  மனதாலும் வாயினாலும் எந்த பயன்மிக்க வேலையும் செய்யாதவர்கள்.  இவர்கள் இறைவனுடைய வல்லமையை சிந்தித்திருக்கவே மாட்டார்கள்; அவர்கள் மனமும், மூளையும் எந்த நல்லறிவையும் பெற்றிருக்காது.  அதனால் இவர்களின் வாழ்க்கை முறை மதிக்கத்தக்கதாக இருக்காது.  இப்படிப்பட்டவர்களை இயன்றால் நாம் திருத்த வேண்டும்; ஆனால் அவர்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது. 2.  சிலர் இறைவன் குறித்து பேசுவார்கள்; ஆனால் உள்ளத்தில் இறைவன் குறித்த நல்லெண்ணம் இருக்காது.  மக்களுக்கு உபதேசிப்பார்கள்; ஆனால் சொந்த வாழ்வில் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். மக்களிடையே நல்லவர்களாகவும் தனிமையில் மிகக் கெட்டவர்களாகவும் நடந்து கொள்வார்கள். "எனது உம்மத்தில் அதிகம் அ...

ஆன்மீக ஒளியில் ஆலிம்களின் உயர்வு

Image
ஆன்மீக ஒளியில்  ஆலிம்களின் உயர்வு ==============================  நேற்றைய தொடர்ச்சி......46 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்  ===================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; ஆலிம்களும் மாணவர்களும் நிறைந்த ஒரு சபையில் ஆற்றிய உரை.  இந்த உபதேசம் ஆலிம்களுக்கானது மட்டுமல்ல! எல்லோருக்குமானது தான்! ஆலிம்களே! மரணத்திற்கு பிறகு உயர் பதவி கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? அதற்கு தகுதியானதாக உங்கள் அமல் - நடத்தை இருக்கின்றதா? யோசித்துப் பாருங்கள்.! ஆலிம்களே! உங்களுக்கு நான் புத்திமதி சொல்வது தவறாக தெரிவதால் நீங்கள் என்னை பகையோடு பார்க்கிறீர்கள்.  நான் உண்மையை சொல்ல அச்சப்படுவதில்லை; நான் பிறருடைய உபதேசத்தின் அடிப்படையிலேயே வளர்ந்திருக்கிறேன். அதனால்தான் என்னைப்போல் உங்களை உருவாக்க முனைகிறேன். ஆசைகளையும் சுயநலத்தையும் ஒழித்துவிட்டு எனது அறிவுரைகளை ஏற்று நடந்தால் உங்களுக்கு நன்மை உண்டு! இறைவன், நபிமார்களுக்கு தனது வேதத்தைக் கொண்டும், இறைநேசர்களுக்கு ஞான உபதேசத்தை கொண்டும் பய...

துன்பத்தைத் தரும் இன்பத் தொழில்

Image
துன்பத்தைத் தரும்  இன்பத் தொழில்  ===================== நேற்றைய தொடர்ச்சி...45 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ===================================== முஸ்லிம்கள் சுய தொழிலில் செய்ய வேண்டும்; அதிகம் சம்பாதிக்க வேண்டும்; தானும் அனுபவிப்பதோடு பிறருக்கும் தாராளமாக வழங்க வேண்டும்.  பொருள் தேடுவோர் 'சித்தீக்' எனும்  வாய்மையாளர்களில் உள்ளவராவர். சம்பாதித்ததில் பெரும்பகுதியை ஏழைகளுக்கு வழங்குவதின் மூலம் இன்பத்தைக் காண வேண்டும்.  ஆனால் அதில் பெருமை மற்றும் புகழைத் தேடுதல் ஆகியன கலந்து விடக்கூடாது. உலகப் பொருட்களை தேடித் திரிவோரின் செயல் இருளில் விறகு பொறுக்குபவனை போன்று இருக்கின்றது.  இருளில் விறகு பொறுக்குபவன்  விறகுதான் பொறுக்குகிறானா அல்லது பாம்பை பிடித்து விடுகிறானா என்று தெரியாது. அதுபோல சம்பாதிக்கும் ஆசையில் நல்வழியில் சம்பாதிப்பதை விட்டுவிட்டு தீய வழியில் சம்பாதித்து விடக்கூடாது விறகு பொறுக்குபவனின் கைகளில் பாம்பு அகப்படுவது எப்படி ஆபத்தானதோ அது போலவே தவறான வழியில் சம்பாதிக்கும் பணமமும் அவனுக்கு ஆபத்த...

சூரியனையும் தாண்டி பூமியில் ஒளிரும் புனிதர்கள்

Image
சூரியனையும் தாண்டி  உலகில் ஒளிரும் மனிதர்கள்  =============================== நேற்றைய தொடர்ச்சி.....44 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  =============================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நமக்கு மத்தியில் வாழும் மனிதர்களில் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதற்கு ஏற்றவர்கள் இறைநேசர்கள் மட்டுமே !.  அவர்கள் சுயநலம் இல்லாமல் வாழ்கிறார்கள்.  இறைநம்பிக்கை, சகிப்புத்தன்மை, நன்றி உணர்ச்சி, தியானம், சுயநலமின்மை, மன ஓர்மை முதலியவற்றால் அவர்களின் ஆன்மா ஒளிர்கிறது. அவர்களின் தியானம் நாவில் தொடங்கி மனதில் முடிகிறது.  அவர்களுக்கு மனவேதனைகள் கொடுக்கப்பட்டாலும் மக்களின் நலனையே விரும்பி செய்கிறார்கள்.  கவலைகள் இருந்தாலும் அவர்களின் முகம் களையுடன் காணப்படுகிறது. உலக ஆசைகள் இருப்பவர்கள் அவர்களுக்கு  பிணங்களைப் போலவும், பிணிகளைப் போலவும் காட்சியளிக்கிறார்கள். அவர்களுக்கு இறைவனை அடைவதில் மட்டுமே கவனம் இருப்பதால், சொர்க்கத்தை கண்டு கொள்வதில்லை.  அவர்களைப் பொருத்தமட்டில் சொர்க்கம் பாலடைந்த பங்களா, பயனற...

ஆலிம்களுக்கான பொறுப்பு

Image
ஆலிம்களுக்கான பொறுப்பு,  இமாம் ஜீலானி (ரஹ்) அறிவுரைகள் ================================== நேற்றைய தொடர்ச்சி....43 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ===================================== இமாம் ஜீலானி (ரஹ் ) அவர்கள் தமது மாணவர்களான ஆலிம்களுக்கும் தமது சீடர்களுக்கும் சொன்ன சில அறிவுரைகள்; நீங்கள் செல்வந்தராக ஆக வேண்டும் என்கிற ஆசையை விட்டு விடுங்கள்; ஏனென்றால் அதில் உங்களுக்கு அழிவும், ஆபத்தும் இருக்கலாம்.  உங்களின் வறுமை உங்களுக்கு நன்மையைத் தரலாம்;  அல்லாஹ்வின் நாட்டத்தை திருப்தியோடு ஏற்றுக் கொள்வது ஆகச் சிறந்தது.  அதற்காக நீங்கள் சும்மா இருந்துவிட வேண்டாம்; அல்லாஹ்விடத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை கெஞ்சி கேட்டுக் கொண்டே இருங்கள்;  ஏனென்றால் உங்களுக்கு ஒரு சமயம் செல்வத்தை வழங்கி, அதில் நன்மையை கூட இறைவன் ஏற்படுத்தி இருக்கக் கூடும். அதேசமயம் எதையும் இறைவனிடம் வற்புறுத்தி, நிர்பந்தப்படுத்தி கேட்க வேண்டாம்; அவ்வாறு கேட்கும் பொழுது அல்லாஹ்வின் அடிமையாக நீங்கள் இருக்கிறீர் என்கிற இறக்கையை நீங்களே முறித்துக் கொண்டத...

திக்ரு செய்யும் போது திறக்கும் தெய்வ வாசல்

Image
திக்ரு செய்யும் போது  திறக்கும் தெய்வ வாசல் ======================== நேற்றைய தொடர்ச்சி....42 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ===================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;  போதிய மார்க்க அறிவு இல்லாமல் எந்த வகையான திக்ருகளை செய்தாலும் அதில் சீர்குலைவு ஏற்பட வாய்ப்புண்டு.  ஷரீஅத் எனும் விளக்கின் வெளிச்சத்தில் திக்ருகளை செய்ய வேண்டும். மார்க்க அறிவு போதிய அளவு இருக்கும் நிலையில் அமல்களை செய்து வந்தால் அல்லாஹ் மேலும் அறிவில் விசாலத்தை ஏற்படுத்துவான். அதன் காரணமாக ஞானத்தை எளிதில் அடைய முடியும்.  உலக ஆசைகளை அகற்றினால் மனம் வலிமை பெறும்.  அதன் காரணமாக திக்ரு மற்றும் இறைநினைவில் நிலைத்திருக்க அல்லாஹ் ஏற்பாடுகளை செய்து தருவான்.  நம்பிக்கையோடும் நல்லெண்ணத்தோடும் அல்லாஹ்வை குறைந்தபட்சம் நாற்பது நாட்கள் தொடர்ந்து திக்ரு செய்து வந்தால் ஞான வாசல் திறக்கும். ஞானம் பிறக்க ஆசைப்படுகிறவர்கள் நபிகள் நாயகத்தின் சுன்னத் -  வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருவதோடு பித்அத் போன்ற தீய வழிகளை வ...

இறைவனின் ஆதரவு அறிவுக்கா? ஆத்மாவுக்கா?

Image
இறைவனின் ஆதரவு  அறிவுக்கா? ஆத்மாவுக்கா? ========================== நேற்றைய தொடர்ச்சி....41 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ====================================== இமாம் ஜீலானி (ரஹ் ) அவர்கள் கூறுவதாவது; மனிதனிடம் இரண்டு அரசர்கள் இருக்கிறார்கள்; ஒன்று கெட்ட ஆத்மா, மற்றொன்று அறிவு. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று எதிர்த்து எப்பொழுதும் சண்டையிட்டு  கொண்டே இருக்கும்.  தீய ஆத்மாவிற்கு தளபதி ஷைத்தான் ஆவான்.  அறிவுக்கு தளபதி நல்ல ஆன்மா ஆகும். தீய ஆத்மா மற்றும் அறிவு ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று வெற்றி கொள்ள வேண்டும் என்கிற வேட்கையில் தொடர்ந்து போரிடும் போது இறைவன், "நீங்கள் எவ்வளவு வீரத்துடன் போரிட்டாலும் எனது உதவி எந்த சேனைக்கு ஆதரவாக இருக்கிறதோ அவர்களே வெற்றி பெறுவார்கள்" என்று கூறுவான்.  அல்லாஹ்வின் ஆதரவு பெற்ற தரபு அறிவு ஆகும். நஃப்ஸ் எனும் ஆத்மாவை ஒதுக்கி, ஒதுங்கி வாழ வேண்டும்.  அல்லாஹ்வின் உதவி அறிவுக்கு இருப்பதால் அதை சார்ந்து வாழ வேண்டும். இறைவனுடைய திருநாமங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது 'அல்லாஹ்' எனும் சொல்லா...

இறைவன் ஓர் அறிமுகம்

Image
இறைவன் ஓர் அறிமுகம்  ======================== நேற்றைய தொடர்ச்சி.....40 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ===================================== கடவுளின் தகுதிகள் குறித்து இஸ்லாம் கூறுவது போல் உலகத்தில் வேறு எந்த மதங்களும், அறிஞர்களும் சொன்னதில்லை.  அல்லாஹ், தான் யார் தெரியுமா? என கேட்டுக்கொண்டு தன்னைப் பற்றி தான் அருளிய வேதமான திருக்குர்ஆனில் ஆங்காங்கே சொல்லிக் காட்டுகிறான்; அவற்றின் தொகுப்புதான் இந்த அவனுடைய அறிமுகம். இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இறைவன் குறித்து கூறுவதாவது;  இறைவன் மக்களுக்கு மிக அருகில் இருக்கின்றான்;  அனைத்தையும் படைத்தவன் அவனே!  இந்த உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து காரியங்களையும் ஏற்கனவே (கற்பித்து) புறகிராம் செய்து  முடித்துவிட்டவனும் அவனே! இந்த உலகத்தில் காணப்படும் படைப்புகள் மற்றும் செயல்கள் அனைத்திலும் அவனுடைய பேரறிவு சூழ்ந்துள்ளது. இந்த அண்டத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ; உலகப் படைப்புகளில் ஒன்றை இறைவனுக்கு இணையாக்குவோர் பொய் கூறுவோரும் கற்பனையாளருமே ஆவர்;...