துன்பத்தைத் தரும் இன்பத் தொழில்
துன்பத்தைத் தரும்
இன்பத் தொழில்
நேற்றைய தொடர்ச்சி...45
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
=====================================
முஸ்லிம்கள் சுய தொழிலில் செய்ய வேண்டும்; அதிகம் சம்பாதிக்க வேண்டும்; தானும் அனுபவிப்பதோடு பிறருக்கும் தாராளமாக வழங்க வேண்டும்.
பொருள் தேடுவோர் 'சித்தீக்' எனும் வாய்மையாளர்களில் உள்ளவராவர்.
சம்பாதித்ததில் பெரும்பகுதியை ஏழைகளுக்கு வழங்குவதின் மூலம் இன்பத்தைக் காண வேண்டும்.
ஆனால் அதில் பெருமை மற்றும் புகழைத் தேடுதல் ஆகியன கலந்து விடக்கூடாது.
உலகப் பொருட்களை தேடித் திரிவோரின் செயல் இருளில் விறகு பொறுக்குபவனை போன்று இருக்கின்றது.
இருளில் விறகு பொறுக்குபவன் விறகுதான் பொறுக்குகிறானா அல்லது பாம்பை பிடித்து விடுகிறானா என்று தெரியாது.
அதுபோல சம்பாதிக்கும் ஆசையில் நல்வழியில் சம்பாதிப்பதை விட்டுவிட்டு தீய வழியில் சம்பாதித்து விடக்கூடாது
விறகு பொறுக்குபவனின் கைகளில் பாம்பு அகப்படுவது எப்படி ஆபத்தானதோ அது போலவே தவறான வழியில் சம்பாதிக்கும் பணமமும் அவனுக்கு ஆபத்தானது.
விறகு பொறுக்கிதான் ஆக வேண்டும் எனும் நிர்பந்தத்தில் இருப்பவர் வெளிச்சத்திலேயே பொறுக்கலாம்.
நீங்கள் செல்வத்தை சம்பாதிக்க வேண்டுமானால் தவ்ஹீதின் வெளிச்சத்தில் இஸ்லாத்திற்கு உட்பட்டு சம்பாதியுங்கள்!
அது அனைத்து வகையான ஆபத்துகளில் இருந்தும் உங்களை காப்பாற்றும்.
மறுமை வாழ்க்கை எப்படி இருந்தாலும் பரவாயில்லை; தற்போதைய உலக வாழ்க்கை மிக நன்றாக இருக்க வேண்டும்; கௌரவமாகவும், புகழப்படும் விதத்திலும், பகட்டாகவும் இருக்க வேண்டும் என்றே ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள்.
இது தெளிந்த அறிவீனம்!! இதைத்தான் இறைவன், "அதாபுன் அழீம் - கடுமையான வேதனை காத்திருக்கிறது" என்கிறான்.
எனவே உலக வாழ்வில் ஏற்படும் அசௌவ்கரியங்களை சகிப்புத்தன்மையோடும் பொறுமையோடும் ஏற்பவர்களுக்கு கணக்கில் அடங்காத கூலியை இறைவன் வழங்க காத்திருக்கின்றான்.
தவறான வழிகளில் சம்பாதித்து உலகத்தையும் மறுமையையும் இழந்து விடாதீர்!
தொடரும்....
Comments
Post a Comment