உங்கள் தொகுதியில் யார் நல்லவர்? அவருக்குதானே உங்கள் ஓட்டு?
உங்கள் தொகுதியில் யார் நல்லவர்? அவருக்குதானே உங்கள் ஓட்டு? ================================== பாத்திமா பின்த் கைஸ் (ரலி) எனும் பெண்மணி மதீனாவில் வாழ்ந்து வந்தார். இவர் குரைஷி வம்சத்தில் 'பனூ ஃபிஹ்ர்' எனும் பிரிவைச் சேர்ந்தவர். பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் ஏற்கனவே அபூ அம்ரு பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்களை திருமணம் செய்து இருந்தார்கள்; அவர் தபூக் யுத்தத்திற்கு செல்லும் பொழுது ஏதோ காரணத்தை முன்னிட்டு தம் மனைவியை தலாக் விட்டு விட்டார். இந்த நிலையில்தான் பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் இத்தா காலம் முடிந்த பிறகு நபி (ஸல் ) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னை முஆவியா பின் அபூ சுஃப்யான் (ரலி) அவர்களும் அபூ ஜஹம் (ரலி) அவர்களும் பெண் கேட்கிறார்கள்; நான் யாரை திருமணம் செய்து கொள்வது?" எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அபூ ஜஹம் (ரலி ) அவர்கள் தம் தோளில் உள்ள ஆயுதங்களை கீழே இறக்கி வைக்கவே மாட்டார் ; அவர் அடிக்கடி போருக்கு சென்று விடுவார்; அவர் நீண்ட காலம் போரிலேயே கழிப்பதால் அவரைக் கொண்டு உமக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அதுபோலவே மு...