உங்கள் தொகுதியில் யார் நல்லவர்? அவருக்குதானே உங்கள் ஓட்டு?
உங்கள் தொகுதியில் யார் நல்லவர்?
அவருக்குதானே உங்கள் ஓட்டு?
==================================
பாத்திமா பின்த் கைஸ் (ரலி) எனும் பெண்மணி மதீனாவில் வாழ்ந்து வந்தார். இவர் குரைஷி வம்சத்தில் 'பனூ ஃபிஹ்ர்' எனும் பிரிவைச் சேர்ந்தவர்.
பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் ஏற்கனவே அபூ அம்ரு பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்களை திருமணம் செய்து இருந்தார்கள்; அவர் தபூக் யுத்தத்திற்கு செல்லும் பொழுது ஏதோ காரணத்தை முன்னிட்டு தம் மனைவியை தலாக் விட்டு விட்டார்.
இந்த நிலையில்தான் பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் இத்தா காலம் முடிந்த பிறகு நபி (ஸல் ) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னை முஆவியா பின் அபூ சுஃப்யான் (ரலி) அவர்களும் அபூ ஜஹம் (ரலி) அவர்களும் பெண் கேட்கிறார்கள்; நான் யாரை திருமணம் செய்து கொள்வது?" எனக் கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அபூ ஜஹம் (ரலி ) அவர்கள் தம் தோளில் உள்ள ஆயுதங்களை கீழே இறக்கி வைக்கவே மாட்டார் ; அவர் அடிக்கடி போருக்கு சென்று விடுவார்; அவர் நீண்ட காலம் போரிலேயே கழிப்பதால் அவரைக் கொண்டு உமக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
அதுபோலவே முஆவியா பின் அபூ சுஃப்யான் ரலி அவர்கள் ஏழையாக இருக்கிறார்; அவரிடம் எந்த சொத்து சுகமும் கிடையாது;
எனவே விவாகரத்து பெற்று வந்திருக்கக் கூடிய உமக்கு இந்த இருவரை கொண்டு மிகப்பெரிய நன்மைகள் நடக்கப் போவதில்லை.
எனவே உஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களை நீ திருமணம் செய்து கொள்" என்று மூன்றாவது ஒரு நபரை பரிந்துரை செய்தார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் இருவரில் ஒருவரை கை காட்டுவார்கள் என்று எண்ணி பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் வந்திருந்த வேளையில் நபிகள் நாயகம் அவர்கள் மூன்றாவது ஒருவரை கைகாட்டியதும் உடனே அதை ஏற்றுக்கொள்ள இயலாமல், "நான் யோசித்து சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
பின்னர் அவருக்கு பலரும் அறிவுரை சொன்னதை கேட்டு, "நபிகள் நாயகம் அவர்களின் தேர்வு சரியாகத்தான் இருக்கும் என எண்ணி உசாமா பின் ஜைத் (ரலி) அவர்களையே திருமணம் செய்து வாழ்ந்தார்கள்.
இவர்கள் இருவரும் மரணிக்கும் வரை மற்றொருவரை திருமணம் செய்து கொள்ளவில்லை; இவர்கள் இருவரும் அதிகமான குழந்தை செல்வங்களைப் பெற்று, பொருளாதாரங்களை நிரம்ப பெற்று சிறப்பாக வாழ்ந்தார்கள்.
இந்த சம்பவத்தில் உள்ள உஸாமா பின் ஜைத் ரலி என்பவர் நபிகள் நாயகம் அவர்களின் வளர்ப்பு மகனுடைய மகன் ஆவார்.
இந்த ஹதீஸ் புகாரி முஸ்லிம் போன்ற பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் அவர்களிடம் ஆலோசனை கேட்டு வந்தபோது இருவரையும் விட்டுவிட்டு மூன்றாவது ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆலோசனை கூறினார்கள்; ஒரு நல்ல மனிதரை நபிகள் நாயகம் அவர்கள் தேர்ந்தெடுத்து கொடுத்தார்கள்.
அதுபோலவே இப்பொழுது வாக்காளர்களாக இருக்கக்கூடிய நாம் நமது தொகுதியில் நல்லவர் யார்? என்பதை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் என்பதை மேற்கண்ட வரலாறு நமக்கு வலியுறுத்தி கூறுகிறது.
அதுபோலவே அறியாமையில் இருப்பவர்களுக்கு நல்லவரை நீங்கள் இனம் காட்டிக் கொடுப்பதும் உங்களுடைய கடமையாகும்.
சுய லாபத்திற்காக, தற்காலிக பயன் கிடைக்கும் என்பதற்காக, உங்களுடைய அன்புக்கு பாத்திரமானவர் என்பதற்காக உங்களுடைய வாக்குகளை தவறானவருக்கு செலுத்தி விடாதீர்.
அதனால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும், இஸ்லாமிய மார்க்கமும், பொது சமூகமும் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் கவனத்தில் கொண்டு எவரும் பாதிக்கப்படாத வகையில் நல்லவருக்கு வாக்களியுங்கள்.
விஜய்கா உங்கள் ஓட்டு?
♥••••••••••••••••••♥••••••••••••••••••♥
25 வயதுக்கு உட்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் இளைஞிகளும் விஜய்க்கு வாக்களிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; அது ஒரு பேராபத்து!
ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுகள் பிரிந்து நீங்கள் வாக்களித்த விஜய் ஆதரவாளரும் வெற்றி பெறாமல், முஸ்லிம்களுக்கு அனுசரணையாக இருக்கக்கூடிய ஆதரவாளரும் வெற்றி பெறாமல் எல்லா மக்களுக்கும் கேடு விளைவிக்கும் மூன்றாவது வேட்பாளர் வெற்றி பெறுவார்.
மூன்றாவது ஒருவர் வெற்றிபெறும் போது தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்பட்ட இன மக்களும் முதலில் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.
பின்னர் பொதுவாகக் கிடைத்து வரும் நல்ல தார் சாலைகள் இல்லாமல், தரமான தண்ணீர் கிடைக்காமல், கரண்ட் சரியாக வராமல் என எல்லோருக்கும் பொதுவாக கிடைத்துக் கொண்டிருக்கும் எல்லாமும் கிடைக்காமல் எல்லா இன மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
நீங்கள் விஜய்க்கு வாக்களித்தால் மாற்றம் என்பது தரமான ரோடு இல்லாமல், தினமும் தண்ணீர் கிடைக்காமல், தினமும் உங்களுக்கு இதுவரை கிடைத்து வந்த அரசு சலுகைகள் எதுவும் கிடைக்காமல் போவது தான் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றமாக உங்களுக்கு கிடைக்கும்.
எனவே அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க, அதே சமயம் அனைத்து சமூக மக்களும் சுபிட்சமாகவும் சந்தோஷமாகவும் வாழ முஸ்லிம் இளைஞர்களும் இளம்பெண்களும் அல்லாஹ்விற்காக இந்த முறை முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் பெற்ற கட்சியினருக்கு வாக்களியுங்கள்.
அன்புடன்
உங்கள் ஹள்ரத்
BMK
Comments
Post a Comment