Preach what you practise !Practise what you preach!!
போதிப்பதை சாதி! சாதிப்பதை போதி!! =================== Preach what you practise ! Practise what you preach!! •••••••••••••••••••••••••••••••••••• ஹஸன் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தாபியீன்களில் ஒருவர்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியரில் ஒருவரிடம் பால்குடித்து வளர்ந்தவர். இவர்கள் தம் வாழ்நாளில் தாம் செய்கின்றவற்றை மட்டுமே பேசும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். இவர்களின் சொற்பொழிவை கேட்பதற்கு எப்பொழுதும் ஒரு கூட்டத்தினர் அவர்களின் அவையை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு ரமலானிலும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சிறிது நேரம் உபதேசம் செய்வார்கள்; அவர்களின் சபையில் தொழுவதற்கும், சொற்பொழிவை கேட்பதற்கும் தூரத் தொலைவுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். ஏழை எளியவர்களும், செல்வந்தர்களும், அடிமைகளும் என பலரும் அந்த சபையில் இருப்பார்கள். ஒரு அடிமை அன்னை ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து, "தாங்கள் என்ன சொன்னாலும் எனது எஜமானர் கேட்டு செயல்படுகிறார்; தாங்கள் ஒரு முறை அடிமைகளை உரிமை விடுவதின் சிறப்புகள் குறித்து பேசு...