தமிழ்நாட்டில் தஃப்ஸீர் வகுப்புகள் :

தமிழ்நாட்டில் தஃப்ஸீர் வகுப்புகள் :
================================

தொடர்ச்சி....

தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசலில் மவ்லவீ, அப்துல் வஹ்ஹாப் Pth (ரஹ்) அவர்கள் தஃப்ஸீர் செய்தார்கள். அது ஒவ்வொரு வாரமும் காலை பத்தரை மணி முதல் லுஹர் வரை வரை நடைபெற்றது.

அன்றே மக்ரிபு தொழுகைக்கு பிறகு இஷா வரை மவ்லவீ, O.S.M. இல்யாஸ் காஸ்மி ஹள்ரத் ( இமாம்:  மஸ்ஜிதே மஃமூர் ) அவர்கள் பொதுவான தலைப்புகளில் உரையாற்றுவார்கள். 

ஜமாலியா அரபு கல்லூரி பேராசிரியர் அப்துர் ரஹ்மான் பாகவி ஹள்ரத் அவர்களும் இரண்டு வாரங்களுக்கு உரை நிகழ்த்துவார்கள். அது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பின்னர் அண்ணா சாலை மக்கா மஸ்ஜிதில் மவ்லவீ , முஹம்மது சுலைமான் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் நீண்ட நெடுங்காலமாக தஃப்ஸீர் நடத்தி வந்தார்கள்.

பின்னர் மவ்லவீ, K.A.  நிஜாமுத்தீன் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மாலை மக்ரிபுக்கு பிறகு இஷா வரை புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூதிலும்,  சனிக்கிழமை மேடவாக்கம் பள்ளிவாசலிலும், ஞாயிற்றுக்கிழமை புரசைவாக்கம் பள்ளிவாசலிலும் தொடர்ந்து இருபது வருடங்கள் தஃப்ஸீர் நடத்தி வந்தார்கள்.

இந்த இருபது வருடங்களில் எட்டாவது ஜுஸு வரை மட்டுமே தஃப்ஸீர் நடத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் பேசிய ஆடியோ இன்றும் ஹள்ரத் அவர்களுடைய அருமைத் தம்பி மவ்லவி கலீஃபத்துல்லாஹ் ஹள்ரத் அவர்களிடம் இருக்கின்றது.

இருபது வருடங்களுக்கு எட்டு ஜுஸு என்கிற வகையில் வாரம் ஒரு முறை தஃப்ஸீர் நடத்தி வந்தால் தஃப்ஸீர் முடிவதற்கு சுமார் 63 ஆண்டுகள் குறைவின்றி ஆகும் என தெரிய வருகிறது. 

இன்று தமிழகம் முழுவதிலும் சுமார் முப்பது இடங்களுக்கும் மேலாக தஃப்ஸீர் நடைபெற்று வருகிறது.

அது எங்கெங்கு நடைபெறுகிறது என்பது குறித்து அனைவரும் அறியும் வண்ணம் அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.

அதே நேரம் தமிழகத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல மாவட்டங்களில் தஃப்ஸீர் வகுப்புகள் இதுவரை ஒரு இடத்தில் கூட  நடைபெறவே இல்லை என்பதும் வேதனையான விஷயம்.

ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும், அனைவரும் வந்து சேர்வதற்கு தோதுவான ஒரு பள்ளிவாசலில் தஃப்ஸீர் வகுப்பு நடத்தப்பட வேண்டும். 

அது அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும்.

அதை ஜும்ஆவில் வாசிக்கச் செய்ய வேண்டும். அதைக் கேட்பவர்களில் விரும்புவோர் வந்து செல்ல தொடர்ந்து விளம்பரங்களும் செய்ய வேண்டும். அந்த விளம்பரம் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றடைய வேண்டும். 

படத்தில் இருப்பவர்கள் நிஜாமுதீன் ஹள்ரத் அவர்கள். மற்ற இருவரின் புகைப்படம் இருந்தால் அனுப்பி வையுங்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்