Posts

Showing posts from February, 2025

இது அவருடைய ரத்தமும் அவருடைய தோழர்களின் ரத்தமும் :

Image
நபி ஸல் அவர்களை  நான் கனவில் பார்த்தேன்  மாதம் 5  தொடர் 39 17. இது அவருடைய ரத்தமும்  அவருடைய தோழர்களின் ரத்தமும் : ================÷÷================ அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு நாள் தம் உறக்கத்திலிருந்து திடீரென விழித்து, 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று சொன்னார்கள். பின்னர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஹுஸைன் பின் அலீ (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள்" என்று கூறினார்கள்.  அவர்கள் கொலை செய்யப்பட்டத் தகவல் வருவதற்கு முன்னரே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். இதனை செவியேற்ற பல நபித்தோழர்கள் முகம் சுளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்;  கனவில் நபி (ஸல்) அவர்களை நான் பார்த்தேன்; அவர்களிடம் ஒரு பாட்டில் இருந்தது; அந்த பாட்டில் முழுவதிலும் ரத்தம் இருந்தது; அதை நபி (ஸல்) அவர்கள் தம் கைகளில் பிடித்தபடி உயர்த்தி காட்டிய வண்ணம், "எனது உம்மத்தினர் எனக்கு பின்னால் என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? எனது மகன் ஹுஸைனை அவர்கள் கொலை செய்து விட்டார்கள்; இது அவருடைய ரத்தமும் அவர...

மவ்லானா முஹம்மது அப்பாஸ் மன்பயீ (ரஹ்) அவர்கள்

Image
மவ்லானா முஹம்மது அப்பாஸ் மன்பயீ (ரஹ்) அவர்கள் =~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~ கோட்டப்பாளையம் பட்டமளிப்பு விழா  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ ஒருமுறை துறையூர், கோட்டப்பாளையம், ரவ்ளதுல் ஜன்னா மதரஸாவிற்கு நான் சென்று இருந்தேன்.  அங்கிருந்த லைப்ரரியில் உள்ள புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்;  அங்கு இருந்த நூல்களில் ஓர் அரபு நூல் என்னை மிகவும் கவர்ந்தது; அதை முழுமையாக வாசிக்கவும், அதன் கருத்துக்களை தெறிந்துக் கொள்ளவும் ஆசைப்பட்டேன் ; அந்த மதரஸாவின் நிறுவனரான மவ்லவீ, முஹம்மது அப்பாஸ் மன்பயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம், "இந்த நூல் நூலை நான் முழுமையாக வாசிக்க விரும்புகிறேன்; இந்த நூலை நானே எடுத்துச் செல்கிறேன்; எனக்கே கொடுத்து விடுங்கள்" என்றுக் கேட்டேன். அப்பொழுது ஹள்ரத் அவர்கள், "இந்த நூல் எனக்கு சொந்தமானதாக இருந்தது; சில மாதங்களுக்கு முன்புதான் மதரஸாவிற்கு என வக்ஃபு செய்து விட்டேன்; இப்பொழுது இந்த நூலை என்னால்  உங்களுக்கே கொடுத்து விட இயலாது; நீங்கள் இங்கேயே இருந்து படி...

மரணித்த பிறகும் உணவளித்த உத்தம நபி

Image
சூஃபிகளின் ஹஜ் : - 63 ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• மரணித்த பிறகும்  உணவளித்த உத்தம நபி  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ இப்னு ஹஜரில் ஹைத்தமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது;  அபுல்கைர் அக்தஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவில் ஐந்து நாட்களாக உணவு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்தார்கள்.  ( அகோரப் பசியுடன்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறைக்கு வந்து ஸலாம் கூறிய பின் ஓரமாக அமர்ந்து கண்ணயர்ந்து விட்டார்கள்.  கனவில் அபூபக்ர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வலப்புறத்திலும், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இடப்புறத்திலும், அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னிலும் சூழ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள்.  அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னை எழுப்பி, "இதோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்திருக்கிறார்கள்" என்று என்னிடம் கூறினார்கள்.  நான் அவர்களுக்காக எழுந்து நின்று ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்களின் நெற்றியில் முத்தமிட்டேன்.  அப்போது எனக்கு ஒரு ரொட்டியை வழங்கினார்கள்.  கனவில் அதன் பாதியை சாப்பிட்டு விட்டு விழித்து...

சக மனிதனிடம் எதையும் எதிர்பார்க்காதே!

Image
நபி ஸல் அவர்களை  நான் கனவில் பார்த்தேன்   மாதம் 5  தொடர் 38 16. சக மனிதனிடம்  எதையும் எதிர்பார்க்காதே! =========================== ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களுக்கு பண நெருக்கடி ஏற்பட்டிருந்தது. ஹள்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'ஒவ்வொரு ஆண்டும் சில லட்சம் பொற்காசுகள் கொடுக்க வேண்டும்' என ஒப்பந்தம் இருந்தது. ஆனால் அவர் அதனை உரிய நேரத்தில் கொடுக்க வில்லை.  எனவே பயங்கரமான பண நெருக்கடியில் ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவருக்குக் கடிதம் எழுதி நினைவு படுத்தலாம் என எண்ணி மைக்கூட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள். பிறகு ஏதோ காரணத்தினால் எழுதவில்லை. அன்றிரவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கனவில் காட்சியளித்தார்கள். நபி (ஸல்): ஹஸனே! எப்படி இருக்கிறீர்?... ஹஸன் (ரலி): "நன்றாக இருக்கிறேன்... (மூஆவியாவிடமிருந்து) வரவேண்டிய பணம் இன்னும் எனக்கு வரவில்லை; அது பின் தங்கிக் கொண்டே இருக்கிறது" என்று முறையிட்டேன்.  நபி (ஸல்): இதற்காகத்தான் மைக் கூட்டை எடுத்து வைத்துக்கொண்டு  அவ...

நான் ஒரு கனவை கண்டேன்; அதற்கு பிறகு சண்டை இடுவதில்லை!

Image
நபி ஸல் அவர்களை  நான் கனவில் பார்த்தேன்  மாதம்: 5 தொடர் : 37 15. நான் ஒரு கனவை கண்டேன்; அதற்கு பிறகு சண்டை இடுவதில்லை! =====÷÷÷÷÷÷÷÷÷÷÷÷================ ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறுவதாவது; நான் ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவை கண்டதற்கு பிறகு யாருடனும் சண்டை செய்வதில்லை;  நபி (ஸல்) அவர்கள் அர்ஷின் மீது தம் கையை வைத்திருப்பது போன்றும், அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மீது கையை வைத்திருப்பது போன்றும், உமர் (ரலி) அவர்கள், அபூ பக்ர் (ரலி) அவர்கள் மீது கையை வைத்திருப்பது போன்றும், உஸ்மான் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் மீது கையை வைத்திருப்பது போன்றும் கனவு கண்டேன். சிறிது நேரத்திற்குப் பின்னர் மேற்கண்டவர்களில் எவரையும் நான் காணவில்லை; அந்த இடத்தில் ரத்தம் கொட்டிக் கிடப்பதைப் பார்த்தேன். அப்பொழுது, "உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டதால் உண்டான ரத்தம் இது; அவரின் வருகையை அல்லாஹ் எதிர்பார்த்து இருக்கின்றான்" என்று கூறப்பட்டது.  நூல் : அத்தந்வீன் ஃபீ அக்பாரி கஸ்வீன், கிதாபுல் மனாமாத். அதாவது உஸ்மான் (ரலி ) அவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் ஆன்...

ஜுபைரே! இன்னொரு முறை அவ்வாறு நடக்காது; அவரை விட்டு விடுங்கள்

Image
நபி ஸல் அவர்களை  நான் கனவில் பார்த்தேன்  =========================== மாதம்  : 5  தொடர் : 36 14. ஜுபைரே! இன்னொரு முறை அவ்வாறு நடக்காது; அவரை விட்டு விடுங்கள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ முஹம்மது பின் ஸஹ்லுல் அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; என்னிடம் ஒரு ஷைஹு கூறினார்.  ஒரு நாள் நான் ஒரு கூட்டத்தினரோடு இருந்தேன்; அந்தக் கூட்டத்தில் அலீ,  தல்ஹா, ஸுபைர் (ரலி) ஆகியவர்கள் குறித்து நாங்கள் பேசிக் கொண்டோம்; அந்த உரையாடலினால் ஜுபைர் (ரலி) அவர்களை நான் மரியாதை குறைவாக நான் நினைத்ததை நான் உணர்ந்தேன்.  அன்றைய தின இரவில் நான் ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவில் பாலைவனத்தின் இறுதியில் விசாலமான ஓர் இடத்தில் நான் இருப்பது போலவும், நிர்வாணமாக பலர் இருப்பது போலவும் கண்டேன்.  அங்கே சில மனிதர்கள் இருந்தார்கள்; அவர்களின் தலை நாயின் தலையைப் போன்றும், அவர்களின் உடல் மனித உடல்களைப் போன்றும் இருந்தது;  வேறு சிலர் மாறுகால் மாறுகை வெட்டப்பட்ட நிலையிலும் இருந்தார்கள்; அவர்களில் சிலர் இரண்டு கைகளும், கால்களும் துண்டிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். இதற்கு முன் இ...

பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

Image
பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்  ============================= பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கோட்டப்பாளையம் ரவ்ளத்துல் ஜன்னா நிஸ்வான் மத்ரஸா நான்காம் பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் நாள் : 22-02-2025 சனிக்கிழமை நேரம் : காலை 9.00 மணி முதல் இடம் : ஜாமியா மஸ்ஜித், கோட்டப்பாளையம். அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், கோட்டப்பாளையம், ரவ்ளத்துல் ஜன்னா மதரஸாவின் "நான்காம் பட்டமளிப்பு விழா”  நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி நடைபெற உள்ளது. அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிப்பதோடு அனைவரும் மார்க்க விளக்கம் பெற அன்போடு அழைக்கின்றோம். அன்புடன்  ரவ்ளத்துல் ஜன்னா நிஸ்வான் மதரஸா & முஸ்லீம் ஜமாஅத்தார்கள் , இலாஹி இளைஞர் நற்பணி மன்றம். கோட்டப்பாளையம். பெண்களுக்கு தனி இடவசதி உண்டு. இரண்டாம் பக்கம்  நிகழ்ச்சி நிரல்: தலைமை : ஹாஜி, M.S.A. ஹாஜா மைதீன் பொருளாளர்: ரவ்ளதுல் ஜன்னா நிஸ்வான் மதரஸா கோட்டப்பாளையம் முன்னிலை : ஹாஜி,  A.  லியாகத் அலி தலைவர் : ரவ்ளதுல் ஜன்னா நிஸ்வான் மதரஸா கோட்டப்பாளைய...

சூஃபியாக்களின் சுவாசம் திக்ரு - தியானம்

Image
சூஃபியாக்களின் சுவாசம்  திக்ரு - தியானம் ~~~~~~~~~~~~~~~~~~~ திக்ரு எனும் அரபிச் சொல்லுக்கு தியானம், நாவில் எழும் பேச்சு; பிரபலம்; வணக்கம் ; துஆ; நினைவு; கூற்று; ஜெபம்; நினைத்தல்; ஞாபகபடுத்தல்; பேசுதல் ஆகியன பொருள்களாகும். மேலும் "தியானம்” என்ற வார்த்தைக்கு 'நமக்கு நாமே பழக்கப்படுத்துதல்' என்ற பொருளும் உண்டு. தியானம், மனதில் எண்ணங்கள் உருவாகாமல் இருக்க செய்யும் முயற்சி. எண்ணங்கள்  தோன்றுகிற போதே அதை புனிதப்படுத்தவும் செய்யும். தியானம், கண்மூடி அமர்ந்து செய்யும் ஒரு செயல் அல்ல. அது ஒரு நிலை. மனதை ஒருமுகப்படுத்தி அறிவால் அறிவை காண முயற்சிக்கும் முறைக்கு தியானம் என சொல்லப்படும். மேலும் தியானத்தின் மூலம் உலகை மனதில் காணலாம். தியானம் என்பது நமது மனதை மேம்படுத்தும் ஒரு செயல். நமது மனதை ஒரு முறையான செயற்பாட்டினுள் இயங்க வைப்பதனை தியானம் எனக்கூறலாம். இவ்வுலகத்தை நாம் ஐம்புலன்கள் மூலம் உணருகிறோம். இயல்பாகவே இந்த ஐம்புலன்கள் வெளிப்படையாக அமைந்துள்ளது.  இந்த ஐம்புலன்களையும் உள்முகமாகத் திருப்பி , இந்த ஐம்புலன்களை கடந்துச் சென்று, நமது நிதர்சனமான வடிவம் மற்றும் அதன் உண்மை...

இப்ராஹிம் நபி யாருக்கு நண்பராக இருக்கிறாரோ அவர் நல்லவர் :

Image
நபி ஸல் அவர்களை  நான் கனவில் பார்த்தேன்  ========================== மாதம் : 5 தொடர் :  35 13. இப்ராஹிம் நபி யாருக்கு நண்பராக இருக்கிறாரோ அவர் நல்லவர் : ================================== ஹுஸைன் பின் காரிஜா அல் அஷ்ஜயீ  (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; ஜமல், ஸிஃப்பின் போன்ற யுத்தங்களால் குழப்ப நிலை நீடித்த போது நான் என்ன முடிவு எடுப்பது! யார் பக்கம் சேர்ந்து செயல்படுவது? எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன்;  அப்பொழுது நான் அல்லாஹ்விடத்தில், "இறைவா! எது உண்மையோ அதை எனக்கு நீ காட்டிக் கொடு! அதை நான் பின்பற்றி நடந்து கொள்கிறேன்" என துஆ செய்து கொண்டே இருந்தேன். இந்நிலையில் ஒரு நாள் ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவில் நான் மறுமை நாளில் இருப்பது போன்றும், எனக்கும் நல்லவர்களுக்கும் இடையே ஒரு சுவர் இருப்பது போன்றும் கனவு கண்டேன். அப்பொழுது, "எனக்கு எதிரே இருந்த சுவர் போன்ற திரையை விலக்கினால் உள்ளிருக்கும் நல்லவர்களை சந்தித்து விடுவேன்" என நான் சொல்லிக் கொண்டு சுவர் போன்று இருந்த திரையைத் விலக்கினேன்.  அப்பொழுது அதற்குள் வெள்ளை ஆடை அணிந்த சிலர் இருந்தார்கள்; அவர...

இனிய திசைகள் நூல் விமர்சனம்

இனிய திசைகள் இதழில் வரலாற்று நூலில் பெரிய வடகரை நூல் குறித்த விமர்சனமும்,  சென்னை பட்டினப்பாக்கம் மதினா பள்ளிவாசலில் நடைபெற்ற வெளியீட்டு விழா நிகழ்வை குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன ‌.