இது அவருடைய ரத்தமும் அவருடைய தோழர்களின் ரத்தமும் :
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் 5
தொடர் 39
17. இது அவருடைய ரத்தமும்
அவருடைய தோழர்களின் ரத்தமும் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு நாள் தம் உறக்கத்திலிருந்து திடீரென விழித்து, 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று சொன்னார்கள்.
பின்னர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஹுஸைன் பின் அலீ (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள்" என்று கூறினார்கள்.
அவர்கள் கொலை செய்யப்பட்டத் தகவல் வருவதற்கு முன்னரே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். இதனை செவியேற்ற பல நபித்தோழர்கள் முகம் சுளித்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்; கனவில் நபி (ஸல்) அவர்களை நான் பார்த்தேன்; அவர்களிடம் ஒரு பாட்டில் இருந்தது; அந்த பாட்டில் முழுவதிலும் ரத்தம் இருந்தது; அதை நபி (ஸல்) அவர்கள் தம் கைகளில் பிடித்தபடி உயர்த்தி காட்டிய வண்ணம், "எனது உம்மத்தினர் எனக்கு பின்னால் என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? எனது மகன் ஹுஸைனை அவர்கள் கொலை செய்து விட்டார்கள்; இது அவருடைய ரத்தமும் அவருடைய தோழர்களின் ரத்தமும் ஆகும்; நான் அவரை வானத்திற்கு அழைத்துச் சென்று விட்டேன்" என கூறினார்கள்.
24 நாட்களுக்குப் பிறகு அவர்கள் கொலை செய்யப்பட்டச் செய்தி மதீனாவை வந்தடைந்தது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எந்த நாளில் தாம் கனவு கண்டதாக சொன்னார்களோ அதே நாளில் கொலை செய்யப்பட்டதாக செய்தி வந்தடைந்தது.
நூல் : இஹ்யா உலூமித்தீன், நிஹாயதுல் அரப் ஃபீ ஃபுனூனில் அதப்.
Comments
Post a Comment