சக மனிதனிடம் எதையும் எதிர்பார்க்காதே!

நபி ஸல் அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 


மாதம் 5 
தொடர் 38

16. சக மனிதனிடம் 
எதையும் எதிர்பார்க்காதே!
===========================

ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களுக்கு பண நெருக்கடி ஏற்பட்டிருந்தது. ஹள்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'ஒவ்வொரு ஆண்டும் சில லட்சம் பொற்காசுகள் கொடுக்க வேண்டும்' என ஒப்பந்தம் இருந்தது. ஆனால் அவர் அதனை உரிய நேரத்தில் கொடுக்க வில்லை. 

எனவே பயங்கரமான பண நெருக்கடியில் ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவருக்குக் கடிதம் எழுதி நினைவு படுத்தலாம் என எண்ணி மைக்கூட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள். பிறகு ஏதோ காரணத்தினால் எழுதவில்லை.

அன்றிரவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கனவில் காட்சியளித்தார்கள்.

நபி (ஸல்):
ஹஸனே! எப்படி இருக்கிறீர்?...

ஹஸன் (ரலி):
"நன்றாக இருக்கிறேன்... (மூஆவியாவிடமிருந்து) வரவேண்டிய பணம் இன்னும் எனக்கு வரவில்லை; அது பின் தங்கிக் கொண்டே இருக்கிறது" என்று முறையிட்டேன். 

நபி (ஸல்): இதற்காகத்தான் மைக் கூட்டை எடுத்து வைத்துக்கொண்டு  அவருக்குக் கடிதம் எழுதி நினைவுபடுத்திட நாடினீரோ!

ஹஸன்(ரலி): ஆம் யாரசூலல்லாஹ்!

நபி(ஸல்):

எப்படி நீர் அதனைச் செய்யலாம்... இதனைச் சொல்

اللَّهُمَّ اقْذِفَ فِي قَلْبِي رَجَاءَكَ وَاقْطَعْ رِجَائِي عَمَّنْ سِوَاكَ حَتَّى لَا أَرْجُو أَحَدًا غَيْرَكَ

اللَّهُمَّ وَمَا ضَعُفَتْ عَنْهُ قُوَّتِي وَقَصُرَ عَنْهُ عَمَلِي وَلَمْ تَنْتَهِ إِلَيْهِ رَغْبَتِي وَلَمْ تَبْلُغُهُ مَسْأَلَتِي وَلَمْ يَجْرٍ عَلَى لِسَانِي مِمَّا أَعْطَيْتَ أَحَدًا مِنَ الْأَوَّلِينَ وَالْآخَرِيْنَ مِنَ الْيَقِينِ فَخُصَّنِي بِهِ يَا رَبَّ الْعَالَمِينَ.

இறைவா!  உன்னிடமே  எதிர்பார்க்கும் நிலையை என் உள்ளத்தில் ஏற்படுத்து!  உன்னைத் தவிர வேறெவரிடமும் நான் எதிர்பார்க்கலாகாது.

இறைவா! முன்னோர் பின்னோரில் ஒருவருக்கு நீ அளித்த மனஉறுதியை அடைவதில் எனது வலிமை பலவீனமடைந்தாலோ, எனது செயல்பாடு குன்றினாலோ, அதைச் சென்றடைய விட்டாலோ, எனது நாவில் அதைப் பற்றிய கோரிக்கை எழாவிட்டாலோ, ( அதை உன்னிடம் நான் கேட்காவிட்டாலும்) அகிலத்தைப் படைத்தாள்பவனே! அதனை நீயே எனக்கு தந்துவிடு! அதை எனக்கு உரித்தாக்கிவிடு!

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த துஆவை நான் ஒரு வார காலம் ஓதிவந்தேன். எனக்குச் சேர வேண்டிய ஐந்து லட்சத்து ஓராயிரம் ரூபாயை முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எனக்கு அனுப்பி வைத்தார்கள். 

நான் அதனை பெற்றதும் "யார் எதற்காகத் துஆ செய்தார்களோ அதனை கிடப்பில் போடாமல், யார் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டிருந்தார்களோ அவரை மறக்கச் செய்திடாமல் அனுப்பித் தந்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்" எனக் கூறினேன். 

அன்றிரவும் நபிகளாரை நான் கனவில் கண்டேன். "எப்படி இருக்கிறாய்?" என நபிகளார் கேட்டதற்கு, நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறினேன்.

நூல் : இப்னு அஸாகிர், தாரீகுல் குலஃபா.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்