ஜுபைரே! இன்னொரு முறை அவ்வாறு நடக்காது; அவரை விட்டு விடுங்கள்
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 5
தொடர் : 36
14. ஜுபைரே! இன்னொரு முறை அவ்வாறு நடக்காது; அவரை விட்டு விடுங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முஹம்மது பின் ஸஹ்லுல் அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; என்னிடம் ஒரு ஷைஹு கூறினார்.
ஒரு நாள் நான் ஒரு கூட்டத்தினரோடு இருந்தேன்; அந்தக் கூட்டத்தில் அலீ, தல்ஹா, ஸுபைர் (ரலி) ஆகியவர்கள் குறித்து நாங்கள் பேசிக் கொண்டோம்; அந்த உரையாடலினால் ஜுபைர் (ரலி) அவர்களை நான் மரியாதை குறைவாக நான் நினைத்ததை நான் உணர்ந்தேன்.
அன்றைய தின இரவில் நான் ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவில் பாலைவனத்தின் இறுதியில் விசாலமான ஓர் இடத்தில் நான் இருப்பது போலவும், நிர்வாணமாக பலர் இருப்பது போலவும் கண்டேன்.
அங்கே சில மனிதர்கள் இருந்தார்கள்; அவர்களின் தலை நாயின் தலையைப் போன்றும், அவர்களின் உடல் மனித உடல்களைப் போன்றும் இருந்தது;
வேறு சிலர் மாறுகால் மாறுகை வெட்டப்பட்ட நிலையிலும் இருந்தார்கள்; அவர்களில் சிலர் இரண்டு கைகளும், கால்களும் துண்டிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள்.
இதற்கு முன் இது போன்ற கோரமான காட்சியை (நேரடியாகவோ, கனவிலோ) நான் கண்டதில்லை.
இந்தக் கனவினால் அச்சத்தையும் திடுக்கத்தையும் நான் நிரம்பப் பெற்று இருந்தேன்.
அங்கே இருந்தவர்களிடம், "இரண்டு கைகளும், கால்களும் வெட்டப்பட்டு கிடக்கிறார்களே இவர்கள் ஏன் இந்த நிலையை அடைந்தார்கள்?" என்று கேட்டேன்.
"அலீ (ரலி) அவர்களை அந்த மக்கள் திட்டியதினாலோ, பேசியதினாலோ இந்த கோரமான தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது" என்று என்னிடம் சொல்லப்பட்டது.
இந்நிலையில் நான் அவர்களிடம் இருக்கும் போதே எனக்காக ஒரு வாசல் திறக்கப்பட்டது; நான் அதற்கு அருகில் வந்தேன்; அங்கே ஒரு படி இருந்தது; அதில் நான் ஏறிச் சென்றேன்.
அங்கே விசாலமான ஓர் இடம் இருந்தது; அந்த இடத்தில் ஒரு மனிதர் அமர்ந்திருந்தார்; அவரைச் சுற்றி பலரும் இருந்தார்கள்; அப்பொழுது "இவர்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்" என என்னிடம் சொல்லப்பட்டது;
நான் அவர்கள் அருகில் நெருங்கிச் சென்று அவர்களின் கரத்தை வலுவாக பிடித்துக் கொண்டேன்; சிறிது நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் என் கைகளில் இருந்து அவர்களின் கையை எடுத்துக்கொண்டார்கள். பிறகு எனது கையை அவர்களின் இரு கைகளால் அழுத்தமாக பிடித்துக் கொண்டார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறினார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம், "ஜுபைர் (ரலி) அவர்கள் குறித்து என் மனதில் தோன்றிய கருத்தை வார்த்தைகளாக சொன்னேன்; "அல்லாஹ்வின் தூதரே; அந்த எண்ணத்தின் அடிப்படையில் நான் எந்த தவறான செய்கைகளிலும் ஈடுபட்டு விடவில்லை" என்றும் கூறினேன்.
நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பின்னால் இருந்த ஒரு மனிதரை திரும்பிப் பார்த்து, "ஜுபைரே! அவர் இன்னொரு முறை இவ்வாறு சொல்ல மாட்டார் ; அவரை மன்னித்து விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அதை மன்னித்து விட்டீர்களா?" என்று நான் கேட்டேன்.
இவ்வாறு கேட்டுக் கொண்டே நபி (ஸல்) அவர்களின் கரத்தை பிடித்து முத்தமிட்டேன்; என்னிரு கரங்களால் நபி (ஸல்) அவர்களின் ஒரு கையைப் பிடித்து கொண்டு நான் அழுதேன்; அவர்களின் கையை என் இரு கரங்களுக்குள் இருக்கும் நிலையில் எனது நெஞ்சின் மீது வைத்துக் கொண்டேன்; தொடர்ந்து நான் அழுது கொண்டும் இருந்தேன்; இந்த நிலையிலும் நபி (ஸல்) அவர்களின் கையின் குளிர்ச்சியை எனது முதுகு வரை உணர்ந்தேன்.
நூல் : கிதாபுல் மனாமாத்
Comments
Post a Comment