நான் ஒரு கனவை கண்டேன்; அதற்கு பிறகு சண்டை இடுவதில்லை!
நபி ஸல் அவர்களை
மாதம்: 5
தொடர் : 37
15. நான் ஒரு கனவை கண்டேன்; அதற்கு பிறகு சண்டை இடுவதில்லை!
=====÷÷÷÷÷÷÷÷÷÷÷÷================
ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறுவதாவது; நான் ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவை கண்டதற்கு பிறகு யாருடனும் சண்டை செய்வதில்லை;
நபி (ஸல்) அவர்கள் அர்ஷின் மீது தம் கையை வைத்திருப்பது போன்றும், அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மீது கையை வைத்திருப்பது போன்றும், உமர் (ரலி) அவர்கள், அபூ பக்ர் (ரலி) அவர்கள் மீது கையை வைத்திருப்பது போன்றும், உஸ்மான் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் மீது கையை வைத்திருப்பது போன்றும் கனவு கண்டேன்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் மேற்கண்டவர்களில் எவரையும் நான் காணவில்லை; அந்த இடத்தில் ரத்தம் கொட்டிக் கிடப்பதைப் பார்த்தேன். அப்பொழுது, "உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டதால் உண்டான ரத்தம் இது; அவரின் வருகையை அல்லாஹ் எதிர்பார்த்து இருக்கின்றான்" என்று கூறப்பட்டது.
நூல் : அத்தந்வீன் ஃபீ அக்பாரி கஸ்வீன், கிதாபுல் மனாமாத்.
அதாவது உஸ்மான் (ரலி ) அவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் ஆன்மா வானுலகத்திற்கு எடுத்துவரப்பட்ட போது ஹஸன் (ரலி) அவர்கள் உட்பட பெரும் கொண்ட கூட்டம் அல்லாஹ்வின் அர்ஷுக்கு அருகில் நின்று எதிர்பார்த்து இருந்தார்கள் என்றால் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை செய்யப்பட்டதை எப்படி சரி என்று சொல்ல முடியும்?
எனவே இனி நான் பிரச்சனைக்குரிய எந்த விஷயத்திலும் தலையிட மாட்டேன்; போர்க்களங்களிலும் கலந்து கொள்ள மாட்டேன் என ஹஸன் (ரலி) அவர்கள் கூறுவதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment