மவ்லானா முஹம்மது அப்பாஸ் மன்பயீ (ரஹ்) அவர்கள்
மவ்லானா முஹம்மது அப்பாஸ் மன்பயீ (ரஹ்) அவர்கள்
=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~
கோட்டப்பாளையம் பட்டமளிப்பு விழா
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
ஒருமுறை துறையூர், கோட்டப்பாளையம், ரவ்ளதுல் ஜன்னா மதரஸாவிற்கு நான் சென்று இருந்தேன்.
அங்கிருந்த லைப்ரரியில் உள்ள புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்;
அங்கு இருந்த நூல்களில் ஓர் அரபு நூல் என்னை மிகவும் கவர்ந்தது; அதை முழுமையாக வாசிக்கவும், அதன் கருத்துக்களை தெறிந்துக் கொள்ளவும் ஆசைப்பட்டேன் ;
அந்த மதரஸாவின் நிறுவனரான மவ்லவீ, முஹம்மது அப்பாஸ் மன்பயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம், "இந்த நூல் நூலை நான் முழுமையாக வாசிக்க விரும்புகிறேன்; இந்த நூலை நானே எடுத்துச் செல்கிறேன்; எனக்கே கொடுத்து விடுங்கள்" என்றுக் கேட்டேன்.
அப்பொழுது ஹள்ரத் அவர்கள், "இந்த நூல் எனக்கு சொந்தமானதாக இருந்தது; சில மாதங்களுக்கு முன்புதான் மதரஸாவிற்கு என வக்ஃபு செய்து விட்டேன்; இப்பொழுது இந்த நூலை என்னால் உங்களுக்கே கொடுத்து விட இயலாது; நீங்கள் இங்கேயே இருந்து படியுங்கள்; புரிந்து கொள்ளுங்கள்;
என் உடமையாக இருக்கும் போதே நீங்கள் கேட்டிருந்தால் நான் கொடுத்திருப்பேன்; உங்களுக்கு கொடுத்ததை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்பட்டும் இருப்பேன்; மதரஸாவிற்கு வக்ஃபு செய்த நூலை உங்களுக்கு வழங்க இயலாது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்;
மேலும் இந்த நூலை என்னைத் தவிர இந்த ஊரில் வாசிப்பதற்கு வேறு யாரும் தகுதியானவர்களும் இல்லை என்பதும் எனக்குத் தெரியும்;
ஆனாலும் மதரஸாவிற்கு வக்ஃபு செய்ததை மற்றவருக்கு கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை; மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் .
ஹள்ரத் அவர்களுக்கு வக்ஃபு சொத்துகள் மீதும், அது சார்ந்த இறை நம்பிக்கைகள் மீதும் ஆழ்ந்த ஞானமும், தெளிவும் நிரம்ப பெற்று இருந்தார்கள்.
அதாவது வக்ஃபு சொத்துகளை முறை தவறி பயன்படுத்தினால் உலகிலும் மறுமையிலும் அனுபவிக்க வேண்டிய தண்டனைகள் குறித்த மார்க்க ஞானம் இருந்ததால் ஹள்ரத் அவர்கள் எனக்கு வழங்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.
இது ஒரு சின்ன விஷயம் தான்! ஆனால் ஹள்ரத் அவர்களிடம் இருந்த உண்மையையும், நேர்மையையும் நினைத்து பார்க்கும் பொழுது இப்பொழுதும் உடல் சிலிர்க்கிறது.
ஹள்ரத் அவர்களின் மண்ணறையை அல்லாஹ் ஒளிமயமாக ஆக்குவானாக! மறுமையில் கேள்வி கணக்கு இல்லாமல் உயர்தரமான சொர்க்கத்தை வழங்குவானாக!
இவ்வளவு சிறப்பிற்குரிய அப்பாஸ் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் நிறுவிய இந்த மதரஸாவின் நான்காவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த மதரஸா சிறப்பாக நடைபெற அனைவரும் துஆ செய்யுங்கள்.
Comments
Post a Comment