கனவு என்பது என்ன?

கனவு என்பது என்ன? 
====================

கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அதன் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். கனவுகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

அல்லாஹ் உயிர்களை அவை (அவை) மரணிக்கும் வேளையில் கைப்பற்றுகிறான்; 

மரணிக்காதவைகளை அவை உறங்கும் வேளையில் (கைப்பற்றுகிறான்;) 

எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றை அவன் பிடித்து வைத்துக்கொள்கிறான்; 

மற்றதை அதன் தவணை நிறைவு பெறுவதற்காகத் திருப்பி அனுப்புகிறான்; 

நிச்சயமாக இதில் சிந்தனை செய்யும் மக்களுக்கு இறைச்சான்றுகள் உள்ளன. 

அல்குர்ஆன் 39 : 42 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 
மேற்கண்ட வசனத்திற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்கள். 

‘ஒவ்வொரு மனிதனுக்கும் நஃப்ஸ் (ஆத்மா)-வும், ரூஹ் (உயிர்)-ம் உள்ளது. 

நஃப்ஸில் உணரும் தன்மையும் அறிவும் உள்ளது. 

ரூஹில் அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளது. 

மனிதன் தூங்கும் போது அல்லாஹ் நஃப்ஸை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை. 

ரூஹ் தனது அசையும் தன்மையால் அந்நேரத்தில் சுற்றித் திரிகிறது. 

அப்பொழுது அந்த ரூஹிற்கு மற்ற ரூஹ்களுடன் நடைபெறும் உரையாடல்களும்  நிகழ்ச்சிகளுமே  கனவுகளாகும்.

நூல் : தஃப்ஸீர் குர்துபீ

எனவே கனவுகளுக்கும் அர்த்தங்களும் விளக்கங்களும் உண்டு.  

அனைவருக்கும் கனவுகள் ஏற்படுவது  சகஜமான ஒன்றுதான்! 

எனவே  கனவை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

இஸ்லாத்தின் மிக முக்கிய அடையாளமான பாங்கு சொல்லும் முறை ஸஹாபாக்களுக்கு கனவின் மூலம்தான் அறிவிக்கப்பட்டது. 

இன்னும் பல முக்கிய நபர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கும் கனவுகள்தாம் காரணமாக அமைந்திருந்தது.

அப்துல் கலாம் கூறுவார் ; தூங்கும் போது ஏற்படுவது மட்டும் கனவல்ல! உன்னை தூங்க விடாமல் செய்வதும் கனவு தான்! 

கனவு கனவாகி மட்டுமே விடாது; கனவு நனவாகவும் செய்யும் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை!

படம் சொல்லும் கருத்து : சிறுமி மேகங்களுக்கு மேல் மெத்தை அமைத்து சுகமாக உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்