இப்லீஸுகாக ஷஃபாஅத் - பரிந்துரைசெய்த மூஸா (அலை) அவர்கள்
இப்லீஸுகாக ஷஃபாஅத் - பரிந்துரை
செய்த மூஸா (அலை) அவர்கள்
قال عبد الله بن محمد: حدثنا محمد بن عبد الأعلى الصنعاني حدثنا فرج بن فضالة عن عبد الرحمن بن زياد بن أنعم قال :
ولقي إبليس موسى فقال: يا موسى أنت الذي اصطفاك الله برسالته وكلمك تكليما وأنا من خلق الله أذنبت وأنا أريد أن أتوب فاشفع لي عند ربك عز وجل أن يتوب علي فدعا موسى ربه
فقيل يا موسى قد قضيت حاجتك فلقي موسى إبليس فقال: قد أمرت أن تسجد لقبر آدم ويتاب عليك فاستكبر وغضب وقال: لم أسجد له حيا أأسجد له ميتا؟ ثم قال إبليس: يا موسى إن لك علي حقا بما شفعت لي ربك فاذكرني عند ثلاث ولا هلاك إلا فيهن اذكرني
حين تغضب فإن وحيي في قلبك وعيني في عينك وأجري منك مجرى الدم
اذكرني حين تلقى الزحف فإني آتي ابن آدم حين يلقى الزحف فأذكره ولده وزوجته وأهله حتى يولي
وإياك أن تجالس امرأة ليست بذات محرم فإني رسولها إليك ورسولك إليها .
மூஸா (அலை) அவர்களை இப்லீஸ் சந்தித்தான்;
"மூஸாவே! அல்லாஹ் உங்களை ரசூலாக தேர்ந்தெடுத்து இருக்கின்றான்; உங்களிடம் பலமுறை பேசி இருக்கின்றான்;
நான் அல்லாஹ்வின் ஒரு படைப்பு; நான் ஒரு பாவம் செய்து விட்டேன்; நான் அந்தப் பாவத்திலிருந்து மீட்சி பெற விரும்புகிறேன்;
எனவே தாங்கள் அல்லாஹ்விடத்தில் சொல்லி என்னை மன்னிக்கும்படி ஷஃபாஅத் - பரிந்துரை செய்யுங்கள்" என்று வேண்டினான்.
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடத்தில் விபரத்தைச் சொன்னார்கள்; அல்லாஹ் ஒரு கருத்தைச் சொன்னான்;
மூஸா (அலை) அவர்கள் இப்லீஸை அழைத்து, "நான் அல்லாஹ்விடம் பேசினேன்; அவன் சொன்னான்.
"நீ ஆதம் (அலை) அவர்களின் அடக்கத் தளத்திற்குச் சென்று அவருடைய அடக்கத்தளத்தில் அவருக்கு நீ ஸஜிதா செய்! உடனே உனது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்" என்று கூறினார்.
அவன் கடுமையக கோபப்பட்டு, பெருமையோடும், ஆணவத்தோடும் "அவர் உயிரோடு இருக்கும் பொழுதே நான் ஸஜிதா செய்யவில்லை; அவர் இறந்த பிறகு நான் ஸஜிதா செய்வேனா?" என்று கேட்டான்.
இப்லீஸ் கூறினான்; "மூஸாவே! நான் சொன்னேன் என்பதற்காக நீங்கள் அல்லாஹ்விடத்தில் எனக்காக ஷஃபாத் - பரிந்துரை செய்தீர்கள்; அதற்காக உங்களுக்கு நான் ஏதாகிலும் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
உங்களுக்கு நேரும் மூன்று சந்தர்ப்பங்களில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்கு எந்த விதமான அழிவும் நஷ்டமும் ஏற்படாது.
1. நீங்கள் கோபப்படும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள்;
நிச்சயமாக எனது கருத்தை உமது இதயம் உள்வாங்கிக் கொள்ளும்; எனது கண்கள் உமது கண்கள் வழியாகப் பார்க்கும்; உமது ரத்த நாளங்களில் நான் ஓடிக்கொண்டு (உம்மை ஆக்கிரமித்து) இருக்கிறேன். (இந்த நிலை ஏற்படும் போது என்னை நினைத்து என்னிலிருந்து விலகி இருங்கள்.)
2. போர்க்களங்களில் நீங்கள் இருக்கும் பொழுது என்னை நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள்;
ஆதமுடைய சந்ததியினர் போர்க்களங்களில் இருக்கும்போது அவர்களுக்கு அவர்களின் பிள்ளைகள், மனைவி மற்றும் குடும்பத்தினரை நினைவுப்படுத்தி கொண்டே இருப்பேன்; எந்த அளவிற்கு என்றால் அவர் அந்த போர்க்களத்தில் இருந்து திரும்பி செல்கிற வரை.
( திரும்பி செல்ல வேண்டும் என்கிற நினைவை ஏற்படுத்தியது நான்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.)
3. மஹரம் அல்லாத பெண்களுடன் நீங்கள் இருக்க வேண்டாம்; ஏனென்றால் நான் உங்களுக்கு அவளுடைய தூதவாகவும், அவளுக்கு உங்களுடைய தூதுவாகவும் இருந்து செயல்படுவேன்.
நூல்: இப்னு அபீ துன்யா
Comments
Post a Comment