யாரும் யாரைவிடவும் சிறந்தவர்கள் கிடையாது !

யாரும் 
யாரைவிடவும் 
சிறந்தவர்கள் கிடையாது !
============================

அமெரிக்காவில் ஒரு கறுப்பினப் பெண் தன் கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்டு மேற்படிப்புக்காக அலபமா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தார். 

கறுப்பினம் என்பதற்காக அவளது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்டது. இது நியாயமற்றது என பர்மிங் ஹாம் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 

அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. இதனை அறிந்த வெள்ளை மாணவர்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு ஒத்துழைத்தனர். 

ஏழாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தக் கறுப்பியை கொன்று மரத்தில் தொங்க விடப்போவதாக அவர்கள் கோஷமெழுப்பினர். 

அப்பெண்ணைப் போன்று உருவத்தைச் செய்து அதனை கட்டி இழுத்துச்சென்று தீயிட்டுக் கொளுத்தினர். 

அத்துடன், ஒரு கூட்டத்தினர் அப்பெண் செல்லுமிடமெங்கும் சென்று கற்களால் அடித்தனர். அழுகிய முட்டைகளைக் கொண்டு அவரை அடித்தனர்.

தம்மோடு சமமாக படிக்க வந்தால் கொன்று விடுவதாகவும் பயமுறுத்தினர். இத்தனை நடந்தும் கூட அப்பல்கலைக்கழகங்கள் அம்மாணவர்களுக்கு அறிவுரைகளைக்கூட கூறவில்லை. 

மாறாக, இந்த நிகழ்வுகளால் அப்பெண் அப்பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடாது என அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. 

தனக்கு நீதியைக் கோரி இரண்டாவது தடவையாக வழக்கு தாக்கல் செய்த அப்பெண் தனது உயிரைக் காக்க நீதிமன்றம் அமைந்துள்ள பர்மிங்ஹாம் நகரில் தனது சகோதரி வீட்டில் முடங்கிக்கிடந்தார். 

அந்நகரிலும்கூட அவர் இம்சிக்கப்பட்டார். வீட்டுத்தெலைபேசி இரண்டு நிமிடத்துக்கொரு முறை அலரியது. தூக்கினால் வசை மொழிகளே கேட்டன. 

இவ்வாறு ஒரே இரவில் 7 மணிநேம் நடைபெற்றது. இத்தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக யாரும் கண்காணாத இடத்துக்கு தலைமறைவாகி வாழ வேண்டிய நிலை அப்பெண்ணுக்கு ஏற்பட்டது.

நீதி மன்றத் தீர்ப்பு மீண்டும் அப்பெண்ணுக்கு சாதகமாகவே அமைந்தது. அப்பொழுதும் அதனை மறுத்த பல்கலைக்கழக நிர்வாகி ஜோன் காடீல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். 

அவர்கூறிய பதில், "வெள்ளை மாணவர் அந்த கறுப்பு மாணவரைக்கொன்று எம்மையும் கொலை செய்யலாம் என்று அச்சப்படுகிறோம். 

இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகவே அந்த மாணவியை பல்கலைக்கழகம் வர விடாது தடுத்து விட்டோம்" என்று கூறினார்.

மற்றொரு முறை அமெரிக்காவில் ஒரு கறுப்பினப் பெண் பஸ் பிரயாணத்தின் போது வெள்ளையருக்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டாள். 

அதிலிருந்து எழுந்து சென்று கறுப்பினத்தாரின் ஆசனத்தில் அமருமாறு அறிவுறுத்தப்பட்டாள் அவள் அதனை மறுக்கவே, போலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாள். 

நீதிமன்றம் அவளுக்கு தூக்குத் தண்டனை வழங்கியது. இதனை ஆட்சேபித்த கறுப்பினத்தவர்கள் பஸ் பிரயானத்தைப் நிராகரித்தனர். இது சட்டவிரோதமானது என்று அலபாமா நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. 

இதனால் பஸ்ஸில் பிரயாணம் செய்ய மறுத்த நூற்றுக்கணக்கான கறுப்பின மக்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். 

இது நடைபெற்றது. ஆதி காலத்திலல்ல. ஐ.நா.சபையின் மனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்ட பின் 1956 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான்.

75 வருடங்களுக்கு முன்பு நீதிமன்றங்கள் பேசியதை 1500 வருடங்களுக்கு முன்பு நபி ஸல் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சமூக மக்கள் இன்றும் இதை  நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

வெள்ளையருக்கு வெள்ளை நீதிபதியே சொல்லியும் அவர்கள் கேட்க வில்லை.

பாலைவன மாமனிதர் சொன்ன சொல்லை சோலைவனமாக ஆக்கி வருகிறார்கள் உலக முஸ்லிம்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் உதிர்த்த முத்து இதுதான்!

حَدَّثَنِي مَنْ سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى أَبَلَّغْتُ» 

அனஸ் ரலி அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“மக்களே! 
உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். 

உங்களுடைய தந்தை ஒருவர்தான். 

ஓர் அரபியருக்கு, அரபியல்லாதவரை விடவும், 

ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், 

ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், 

ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!” 

நூல்: முஸ்னது அஹ்மத் 22391

உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என உளமாற ஏற்று ஒன்றுபட்டு வாழ்வோம்!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்