கவிஞர் கண்ணதாசன் எழுதிய திருக்குர்ஆன் தர்ஜமா

கவிஞர் கண்ணதாசன் 
எழுதிய திருக்குர்ஆன் தர்ஜமா :
÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷÷×

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்றும் "இயேசு காவியம்' என்றும் மதம் சார்ந்த இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டு இருந்தார்; 

அது அந்தந்த சமூக மக்களால் பெரிதும் வரவேற்புக்கு உள்ளானது. இவ்விரு நூல் விற்பனையின் மூலம் மிகப் பெரிய அளவில் பொருள் ஈட்டினார்.

அதனைத் தொடர்ந்து திருக் குர்ஆனை கவிதை நடையில்  எழுதலாம் என்று முடிவு செய்து அதற்கான  அறிவிப்புகளை 'தென்றல்' சண்டமாருதம்", "திருமகள்", "திரை ஒலி", "தென்றல்திரை", "முல்லை", மற்றும் "கண்ணதாசன்"
போன்ற இதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டு இருந்தார். 

முஸ்லிமல்லாத அனேக மக்களால் அது வரவேற்கப்பட்டாலும் முஸ்லிம்களில் ஆலிம்கள் அதை கடுமையாக எதிர்த்தார்கள். சில தமிழ் அறிஞர்கள் அதை வரவேற்றார்கள்.

அதனால் தனது முஸ்லிம் நண்பர்களில் ஒருவரான 'அப்பாஸ் இப்ராஹிம்' எனும் தன் நண்பரின் பெயரில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை கவிதை நடையில்   "இனியத் தமிழில் இஸ்லாமியத் திருமறை" எனும் பெயரில் அவ்வப்பொழுது ஒரு ஜுஸு (ஒரு பாகம்) எனும் அளவில் ( அரபு மொழி திருக்குர்ஆன் 30 பாகங்கள் இருக்கின்றது) வெளியிடத் தொடங்கினார்.

ஏழு பாகங்கள் வெளிவந்தன. இதற்கிடையே ஏகப்பட்ட எதிர்ப்புகள் உருவானது. 

அவரின் மொழிபெயர்ப்பில், கல்லில் அரிசியை பொறுக்கியது போன்ற நிலையில் தவறுகள் நிறைந்து காணப்பட்டது.

ஒவ்வொரு பாகமும் தமிழகம் முழுவதும் குமுதம், கல்கண்டு விற்கப்பட்ட கடைகளில் குமுதம், கல்கண்டு தொங்குவது போல் குர்ஆன் மொழிபெயர்ப்பு பாகங்களும் "இனியத் தமிழில் இஸ்லாமியத் திருமுறை" எனும் பெயரில் தொங்கியது.

இந்த "இனியத் தமிழில் இஸ்லாமியத் திருமுறை" எனும் ஒவ்வொரு நூலின் தொடக்கத்திலும் 'உரத்த குரல்' எனும் பெயரில் வாசகர்களின் விமர்சனங்களை ஒளிவு மறைவின்றி வெளியிட்டு வந்தார்.

அப்படி வெளியான விமர்சனங்களில் எழுபது சதவீதத்திற்கும் மிகுதமாக கண்டனங்களும், திட்டுதல்களும், வசை மொழிகளும், கடுமையான விமர்சனங்களும், ஆபாசமான விமர்சனங்களுமே இருந்தது.

இது ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக் கொண்டு இருந்ததே தவிர குறையவில்லை.

இந்நிலையில்  திருச்சி அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரி மர்ஹூம் அப்துல் ஸலாம் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்களின் தலைமையில் மதரஸா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மர்ஹூம் கலீல் அஹமது மன்பயீ கீரனூரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, மர்ஹூம், B. முஹம்மது சுல்தான் ஹள்ரத் ஃபாஜில் மன்பயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அஷ்ரப் அலீ ஹள்ரத் (ரஹ்) அப்துல் ராஸுக் மௌலானா (ரஹ்) ஹுசைன் ஹள்ரத் (ரஹ்) போன்றவர்கள் ,  முஸ்லிம் பெயர் தாங்கிய ஓர் அமைப்பு நீண்ட நாட்களாக திருச்சியில் இயங்குவது போல் ஒரு லெட்டர் பேடை பிரிண்டிங் செய்து, 

அதன் வழியாக அன்றிருந்த முதல்வர் எம் ஜிஆர், துரை சார்ந்த அமைச்சர் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர் கெடுப்பதை தடுக்கும் இலாக்காக்கள் என அனைத்திற்கும் ஒரு கடிதம் எழுதினார்கள். 

அதில் கண்ணதாசன் உடைய திருக் குர்ஆன் மொழிபெயர்ப்பு மிகவும் தவறாகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் இருக்கிறது; அது எங்கள் மனங்களை புண்படுத்துகிறது; இதனால் கலவரம் ஏற்படும் சூழலும் உருவாகி வருகிறது; எனவே இதை தடை செய்ய வேண்டும்" என்பது போன்று கடிதங்கள் எழுதியிருந்தார்கள். 

இந்த கடிதங்களும், உரத்த குரல் பகுதியில் வெளிவரும் பெரும்பாலான விமர்சனங்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களே எழுதுகிறார்கள் என்பதும் தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது. ஆட்சியாளர்கள் அது குறித்து தீர்க்கமாக முடிவெடுக்க ஆலோசனை செய்தார்கள்.

தொடரும்.....

அவர் எழுதிய சூரத்துல் ஃபாத்திஹாவின் மொழிபெயர்ப்பை கீழே காணலாம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்