யார் அழைத்தால் வருவீர்களோ அவன் அழைத்திருக்கிறான்
யார் அழைத்தால் வருவீர்களோ
அவன் அழைத்திருக்கிறான் :
|
•
|
அலீ பின் மவ்பீக் (ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள் : நான் ஒரு முறை ஹரம் ஷரீஃபில் அமர்ந்திருந்தேன். அன்று வரை அறுபது ஹஜ்ஜுகளை நிறைவேற்றியிருந்தேன்.
என் மனதில், "இன்னும் எவ்வளவு காலத்திற்கு காடுகளைச் சுற்றி, அலைந்து இங்கு வந்து கொண்டிருப்பது? வயதாகி விட்டதே! இனி இந்த ஹஜ்ஜுடன் முடித்துக்கொள்ளலாம், இது வரை ஹஜ்ஜு செய்தது போதும்" என ஓர் சிந்தனை உண்டானது.
பின்னர் எதிர்பாராமல் எனக்கு தூக்கம் மேலிட்டு நான் தூங்கி விட்டேன். என் கனவில் ஒருவர் பேசும் குரல் மட்டும் ஒலித்தது.
' இப்னு மவ்பீக்! யார் வந்தால் , உங்கள் மனம் மகிழுமோ அவரையே நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு அழைப்பீர்!
அதுபோலவே நீங்களும் அழைக்கப்பட்டு இருக்கிறீர்.
யாரை விரும்பி கண்ணியமான இந்த இறை இல்லத்திற்கு அல்லாஹ் அழைக்கின்றானோ, அவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்!"
மேலும் ஓர் அரபு கவிதை வாசிக்கப்பட்டது.
என்மீது அன்பு
கொண்டவர்களைக் கண்டு மகிழவே
நான் அழைத்திருக்கின்றேன்!
எனக்கு
விருப்பமானவர்களைத் தவிர
வேறு யாரையும்
நான் அழைக்கவில்லை.!
அவர்கள்
என் வீட்டை நோக்கி
மிக கண்ணியத்துடன் வந்தனர்.
வந்தவர்களும்
அவர்களை அழைத்தவனும்
மிக கணணியத்திற்குரியவர்கள் அல்லவா!
நூல் : ரவ்ழுர் ரைய்யாஹீன்
https://youtube.com/@khaleelurrahman3248?si=v7hckM64B6CdwnHt
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Blogger: Posts https://share.google/Z22JfjuBUunvwFzSs
https://www.facebook.com/share/1LNXiCYz9R/
https://www.instagram.com/khaleelurrahmanbmk?igsh=MTFueDBzcmlyYjRyMw==
https://x.com/KhaleelurB?t=SWY0HT8PGqUWKHn7E8Y18Q&s=09
https://www.facebook.com/share/14DTGJiS26r/
Comments
Post a Comment