காசாவில் செயற்கையான பஞ்சம்
காசாவில் செயற்கையான பஞ்சம்
==≠===============================
அமெரிக்கா வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் casa himanitarian foundation - காசா ஹிமானிடேரியன் பவுண்டேஷன் - காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்யும் நிறுவனம் எனும் பெயரில் ஒரு நிறுவனம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் உரிமையாளர் மைக்கேல் விகார் Michael vikar என்பவர். இவர் அமெரிக்க உளவு பிரிவுகளில் ஒன்றான சிஏஏ டைரக்டர்களில் ஒருவர்.
இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா செனட் சபை ஒரு மில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் மனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து பல மில்லியன் டாலர்கள் இந்த நிறுவனத்திற்கு வந்திருக்கின்றன.
மைக்கேல் விகார் என்பவருக்கு அமெரிக்க அரசு அதிகாரிகளிலும், செனட்சபை உறுப்பினர்களிலும் பலர் உதவி செய்ததால் அவர்களுக்கு இந்த நிறுவனத்தில் இருந்து லாபம் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையின் பேரிலேயே இவர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வந்திருக்கக் கூடிய மொத்த தொகையில் பத்து சதவீதம் கூட செலவழிக்காமல் அவ்வளவு பணத்தையும் அமெரிக்க அரசின் சில அதிகாரிகளும் எம்பிக்களும் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்று அந்த நாளிதழ் கூறுகின்றது.
காசாவில் பசியால் வாடும் மக்களின் பெயரைச் சொல்லி உலகம் முழுவதிலும் இருந்து வசூலித்து அதை சாப்பிடுகிற இவர்கள் அரக்கர்களா? விலங்குகளா?
அதுமட்டுமில்லாமல் இவர்கள் வசூலித்துள்ள தொகையிலிருந்து சிறிதளவு உணவு பொருட்களை வாங்கிச் சென்று வடக்கு காசாவில் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
காசா சுமார் 360 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. நமது சென்னையில் முக்கால்வாசி இருக்கும். காசாவில் 21 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் கூட்டம் கூட்டமாக பல்வேறு இடங்களில் இடிப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் கூட்டம் கூட்டமாக காசா முழுவதிலும் ஆங்காங்கே வாழ்வதால் இஸ்ரேல் அரசு அந்த நிலப்பரப்பை கையகப்படுத்த இயலவில்லை.
அதனால் இவர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் ஒன்று சேர்க்க பயன்படுவதுதான் இலவச உணவு திட்டம். இவர்களை ஒன்று சேர்ப்பதற்காகவே ஒரு வருடத்திற்கு முன்பு இந்த திட்டம் வகுக்கப்பட்டது. அதைப்போல் செயற்கையாக இந்த பசி சூழ்நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு காசாவில் உணவு தருகிறோம் என ஊர் முழுக்க சொல்லி மக்கள் அனைவரையும் ஒரு இடத்தில் ஒன்று சேர்த்த பிறகு அவர்கள் அந்த இடத்தில் வந்தபிறகு வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.
மேலும் இவர்கள் உணவு வாங்க வருகிற வழி நெடுகிலும் ஏற்கனவே இஸ்ரேல் போட்ட குண்டுகள் வெடிக்காமல் இருக்கின்றன; அவை வெடித்து பலர் அழிவார்கள் என்று இந்த CHF திட்டமிட்டுள்ளது; எதிர்பார்க்கின்றது.
பின்னர் உணவு கொடுக்கப்படுகிற இடத்தில் நெரிசலின் காரணமாக இறந்தார்கள் என சொல்லி சிலரை கொள்ளலாம் எனவும் திட்டமிட்டுள்ளனர்.
உணவு தருகிற இடத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் உணவு வாங்க திரண்டதால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்து விட்டார்கள் என்று சொல்லி பொதுமக்களில் பலரை கொன்று குவிக்கலாம் எனும் எண்ணத்தில் கான்டிராக்டர் கில்லர்ஸ் களில் சிலரையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறெல்லாம் கொலை செய்வதற்கு அமெரிக்க அரசும் இஸ்ரேலும் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் கடந்த மூன்று மாத காலமாக காசாவிற்குள் எந்த உணவும் வராமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது.
காசாவை சுற்றிலும், கடலிலும் பல லட்சம் டன் உணவுப் பொருட்கள் தேங்கி நிற்கின்றன. தரையில் இறங்குவதற்கு அமெரிக்கா கூட்டு படையும் இஸ்ரேல் படைகளும் தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றன.
காசா மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்!
Comments
Post a Comment